16-07-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


"இனிமையான குழந்தைகளே! டிராமாவின் யதார்த்த (உண்மையான) ஞானத்தின் மூலம் தான் நீங்கள் ஆடாத, அசையாத, உறுதியான ஒரே நிலையில் இருக்க முடியும். மாயாவின் புயல் உங்களை அசைக்க முடியாது.

கேள்வி:
தேவதைகளின் எந்த ஒரு முக்கியமான குணம் குழந்தைகளாகிய உங்களிடம் எப்போதும் காணப்பட வேண்டும்?

பதில்:
புன்சிரிப்புடன் இருப்பது. தேவதைகளை சதா புன்சிரித்த நிலையில் மகிழ்ச்சியுடன் இருப்பதாகக் காட்டுகின்றனர். அதுபோல் குழந்தைகளாகிய நீங்களும் கூட சதா மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். எந்த ஒரு பிரச்சினையானாலும் சரி, புன்சிரிப்புடனேயே இருங்கள். ஒருபோதும் வருத்தம் அல்லது கோபம் வர கூடாது. எப்படி பாபா உங்களுக்கு சரி எது, தவறு எது என்ற புரிந்து கொள்ளும் உணர்வை கொடுத்திருக்கிறாரோ, பாபா எப்படி ஒருபோதும் கோபப்படுவதில்லையோ, வருத்தப்படுவதில்லையோ, அதுபோல் குழந்தைகளாகிய நீங்களும் கூட வருத்தம் கொள்ளக் கூடாது.

ஓம் சாந்தி.
எல்லையற்ற குழந்தைகளுக்கு எல்லையற்ற தந்தை சொல்லிப் புரிய வைக்கிறார். லௌகீகத் தந்தை இதுபோல் சொல்ல மாட்டார். அவருக்கோ 5-7 குழந்தைகள் இருக்கலாம். இங்கோ ஆத்மாக்கள் அனைவருமே தங்களுக்குள் சகோதரர்கள். அவர்கள் அனைவருக்கும் நிச்சய மாகத் தந்தை இருப்பார். நாம் அனைவரும் சகோதர-சகோதரர்கள் என்று சொல்கிறார்கள். அனைவருக்காகவும் சொல்கிறார்கள். யார் வந்தாலும் நாமெல்லாம் சகோதர-சகோதரர்கள் என்று அவர்களுக்குச் சொல்வார்கள். டிராமாவிலோ அனைவருமே கட்டுண்டிருக்கிறார்கள். இதை யாரும் அறிய மாட்டார்கள். இதுபோல் அறியாதிருப்பதும் டிராமாவில் விதிக்கப்பட்டுள்ளது என்று எப்போது தந்தை வந்து சொல்கிறார், கதைகள் முதலிவற்றைக் கூறும்போது சொல்கிறார்கள் -- பரமபிதா பரமாத்மா நமஹ! இப்போது அவர் யார் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. சொல்கிறார்கள், பிரம்மா தேவதா, விஷ்ணு தேவதா, சங்கர் தேவதா என்று, ஆனால் எதையும் புரிந்து கொண்டு சொல்வதில்லை. பிரம்மாவை உண்மையில் தேவதா என சொல்ல மாட்டார்கள். விஷ்ணு தேவதா என சொல்லப்படுகிறார். பிரம்மாவைப் பற்றி யாருக்குமே தெரியவில்லை. விஷ்ணு தேவதா என்பது சரி தான். சங்கருக்கோ எந்த ஒரு பாகமும் இந்நாடகத்தில் கிடையாது. அவருக்கு வாழ்க்கை வரலாறு இல்லை. சிவபாபாவிற்கு வாழ்க்கை வரலாறு உள்ளது. அவர் வருவதே தூய்மை இழந்தவர்களை மீண்டும் தூய்மை யாக்குவதற்காக, புதிய உலகத்தை ஸ்தாபனை செய்வதற்காக. இப்போது ஒரு ஆதி சனாதன தேவி-தேவதா தர்மத்தின் ஸ்தாபனை மற்றும் அனைத்து தர்மங்களின் வினாசம் நடைபெறுகின்றது. புதிய உலகத்தில் இருக்கப் போவது நீங்கள் மட்டுமே. என்னென்ன முக்கிய தர்மங்கள் உள்ளனவோ அவற்றை நீங்கள் அறிவீர்கள். எல்லாருடைய பெயர்களையும் இங்கே எடுத்துரைக்க இயலாது. சின்னச் சின்னக் கிளைகள் நிறையவே உள்ளன. முதல்-முதலில் தேவதா தர்மம், பிறகு இஸ்லாம். இவ்விஷயங்கள் குழந்தைகளாகிய உங்களையன்றி வேறு யாருடைய புத்தியிலும் இல்லை. இப்போது அந்த ஆதி சனாதன தேவி-தேவதா தர்மம் மறைந்து விட்டுள்ளது. அதனால் ஆலமரத்தின் உதாரணம் சொல்லப்படுகின்றது. மரம் முழுவதும் நிற்கின்றது. அஸ்திவாரம் இல்லை. அனைத்தையும் விட அதிகமான ஆயுள் இந்த ஆலமரத்திற்கு உள்ளது. ஆக, இதில் எல்லாவற்றைக் காட்டிலும் அதிகமான ஆயுள் ஆதி சனாதன தேவி-தேவதா தர்மத்திற்கு உள்ளது. அது எப்போது மறைந்து விடுகிறதோ அப்போது பாபா வந்து சொல்கிறார், இப்போது ஒரு தர்மத்தின் ஸ்தாபனை மற்றும் அநேக தர்மங்களின் வினாசம் நடந்தாக வேண்டும். அதனால் திரிமூர்த்தி உருவாக்கி உள்ளனர். ஆனால் அர்த்தத்தை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், உயர்ந்தவரிலும் உயர்ந்தவர் பகவான், பிறகு பிரம்மா-விஷ்ணு-சங்கர், பிறகு சிருஷ்டியில் வருகிறார்கள் தேவி-தேவதைகள் என்றால் அவர்களுடையதை விட உயர்ந்த தர்மம் வேறு இல்லை. பக்தி மார்க்கமும் டிராமாவில் விதிக்கப் பட்டுள்ளது. முதலில் சிவனை வணங்கி பக்தி செய்கிறார்கள், பிறகு தேவதைகளுக்கு பக்தி செய்கிறார்கள். இது பாரதத்தின் விஷயம் தான். மற்றவர்கள் தங்களுடைய தர்மம், வழிமுறை எப்போது தொடங்குகின்றது என்பதைப் புரிந்து கொண்டிருக் கிறார்கள். எப்படி ஆரியர்கள் சொல்கிறார்கள், நாங்கள் மிகவும் பழையவர்கள் உண்மையில் ஆதி சனாதன தேவி-தேவதா தர்மம் தான் அனைத்தையும் விடப் பழைமையானது. நீங்கள் விருட்சத்தைப் பற்றிச் சொல்லிப் புரிய வைக்கும் போது தாங்களாகவே புரிந்து கொள்வார்கள், நமது தர்மம் இன்ன சமயத்தில் வரும் அனைவருக்கும் கிடைத்துள்ள அனாதி அவினாசி பாகத்தை நடித்தாக வேண்டும். இதில் யார் மீதும் குற்றமோ தவறோ சொல்ல முடியாது. பாவாத்மாவாக ஏன் ஆகியிருக்கிறார்கள் என்று மட்டும் சொல்லிப் புரிய வைக்கப் படுகின்றது. மனிதர்கள் சொல்வார்கள், நாம் அனைவரும் எல்லையற்ற தந்தையின் குழந்தைகள் பிறகு சகோதரர்கள் அனைவரும் ஏன் சத்யுகத்தில் இல்லை? ஆனால் டிராமாவில் அதுபோல் பாகம் இல்லை. இந்த அனாதி டிராமா உருவாக்கப்பட்டதாகும். இதில் நிச்சயம் வையுங்கள். வேறு எந்த விஷயமும் பேச வேண்டாம். சக்கரமும் காட்டப்பட்டுள்ளது, எப்படி இது சுற்றுகிறது என்று. கல்ப விருட்சத்தின் சித்திரமும் உள்ளது. ஆனால் இதன் ஆயுள் எவ்வளவு என்று யாருக்கும் தெரியாது. பாபா யாரையும் நிந்தனை செய்வதில்லை. இதுவும் புரிய வைக்கப் படுகின்றது, உங்களுக்கும் கூட புரிய வைக்கின்றார் -- நீங்கள் எவ்வளவு தூய்மையாக இருந்தீர்கள், இப்போது தூய்மையற்ற வர்களாகிவிட்டிருக்கிறீர்கள், அதனால் அழைக்கின்றீர்கள் -- ஹே பதித பாவனா வா! என்று. முதலிலோ நீங்கள் அனைவரும் தூய்மையாக வேண்டும். பிறகு நம்பர்வார் பாகத்தை நடிப்பதற் காக வர வேண்டும். ஆத்மாக்கள் அனைவரும் மேலே இருக்கின்றனர். பாபாவும் மேலே இருக்கிறார். பிறகு அவரை அழைக்கின்றனர், வாருங்கள் என்று. அவர் கூப்பிட்டதுமே வந்து விடுவ தில்லை. பாபா சொல்கிறார், என்னுடைய பாகமும் டிராமாவில் விதிக்கப்பட்டுள்ளது. எப்படி எல்லைக்குட்பட்ட டிராமாவிலும் கூட பெரிய-பெரிய முக்கிய நடிகர்களுக்கு பாகம் உள்ளது, இது பிறகு எல்லையற்ற டிராமா. அனைவரும் டிராமாவின் பந்தனத்தில் கட்டுப்பட்டுள்ளனர். இதனுடைய அர்த்தம் கயிற்றில் கட்டப்பட்டிருக்கிறீர்கள் என்பதல்ல. இதை பாபா சொல்லிப் புரிய வைக்கிறார். அது ஜட மரம். விதை சைதன்யமாக இருந்தால் அதற்குத் தெரிந்திருக்கும், மரம் எப்படிப் பெரிதாகிப் பிறகு பலன் தருகிறதென்று. இவர் (பாபா) இந்த மனித சிருஷ்டி ரூப மரத்தின் சைதன்ய விதையாக இருக்கிறார். இது தலைகீழான மரம் எனப்படுகின்றது. பாபாவோ ஞானம் நிறைந்தவராக இருக்கிறார், அவரிடம் முழு மரத்தின் ஞானம் உள்ளது. இது ஒன்றும் புதிய விஷயமல்ல. இங்கே பாபா சுலோகன் எதையும் உச்சரிப்பதில்லை. அவர்கள் கிரந்தத்தைப் படித்துப் பிறகு அர்த்தத்தை அமர்ந்து சொல்லிப் புரிய வைக்கிறார்கள். இது படிப்பு என்பதை பாபா சொல்லிப் புரிய வைக்கிறார். இதில் சுலோகன் முதலியவற்றிற்கு அவசியம் இல்லை. அந்த சாஸ்திரங்களின் படிப்பில் எந்த ஒரு நோக்கமோ குறிக்கோளோ கிடையாது. ஞானம், பக்தி, வைராக்கியம் என்று சொல்லவும் செய்கிறார்கள். இந்தப் பழைய உலகம் வினாசமாகின்றது. சந்நியாசிகளினுடையது எல்லைக்குட்பட்ட வைராக்கியம். உங்களுடையது எல்லையற்ற வைராக்கியம். சங்கராச்சாரியார் வருகிறார், அப்போது கற்பிக்கிறார், வீடு வாசல் மீது வைராக்கியம் வைப்பது பற்றி. அவரும் ஆரம்பத்தில் சாஸ்திரங்கள் முதலியவற்றைக் கற்பிப்பதில்லை. எப்போது அதிக பெருக்கம் ஏற்படுகின்றதோ அப்போது சாஸ்திரங்களை உருவாக்கத் தொடங்குகின்றார். முதன்-முதலிலோ தர்ம ஸ்தாபனை செய்பவர் ஒருவர் தான் இருக்கிறார், பிறகு கொஞ்சம்-கொஞ்சமாக அதிமாகின்றார்கள். இதையும் புரிந்து கொள்ள வேண்டும். சிருஷ்டியில் முதல்-முதலில் எந்த தர்மம் இருந்தது? இப்போதோ அநேக தர்மங்கள் உள்ளன. ஆதி சனாதன தேவி-தேவதா தர்மம் இருந்தது, அது சொர்க்கம் - ஹெவன் என சொல்லப்பட்டது. குழந்தை களாகிய நீங்கள் படைப்பவர் மற்றும் படைப்பு பற்றி அறிவதன் மூலம் ஆஸ்திகர் ஆகி விடுகிறீர்கள். நாஸ்திகத் தன்மையில் எவ்வளவு துக்கம் உள்ளது! அனாதைகளாக ஆகிவிடுகின்றனர், தங்களுக் குள் சண்டையிட்டுக் கொண்டே இருக்கின்றனர். சொல்கிறார்கள் இல்லையா - உங்களுக்குள் அடித்துக் கொள்கிறீர்கள், உங்களுக்கென்று பெற்றோர்-உற்றார் யாரும் இல்லையா என்று. இச்சமயம் அனைவரும் அனாதைகளாக ஆகிவிட்டுள்ளனர். புதிய உலகத்தில் தூய்மை, சுகம், சாந்தி அனைத்தும் இருந்தது. அளவற்ற சுகம் இருந்தது. அது சத்யுகத்தினுடையது, இது கலியுகத் தினுடையது. இப்போது உங்களுடையது சங்கமயுகம். இந்தப் புருஷோத்தம சங்கமயுகம் ஒன்று தான் உள்ளது. சத்யுக-திரேதாவின் சங்கமத்தைப் புருஷார்த்தம் எனச் சொல்ல மாட்டார்கள். இங்கே இருப்பவர்கள் அசுரர்கள். அங்கே இருப்பவர்கள் தேவதைகள். நீங்கள் அறிவீர்கள் இது இராவண இராஜ்யம். இராவணனுக்கு மேலே கழுதையின் தலையைக் காட்டுகின்றனர். கழுதையை எவ்வளவு தான் சுத்தப் படுத்தி அதன் மீது துணியை வைத்தாலும் கழுதை பிறகு மண்ணில் புரண்டு துணியை அழுக்காக்கி விடும். பாபா உங்கள் துணியை அழகாகத் தூய்மைப் படுத்துகிறார். பிறகு இராவண இராஜ்யத்தில் புரண்டு அழுக்காகி விடுகிறீர்கள். ஆத்மா, சரீரம் இரண்டும் தூய்மை இழந்து விடுகின்றன. பாபா சொல்கிறார், நீங்கள் அலங்காரம் முழுவதையும் வீணாக்கி விட்டீர்கள். பாபாவைப் பதீத பாவனர் என்கிறார்கள். நீங்கள் மக்கள் கூட்டம் நிறைந்த சபையில் சொல்ல முடியும் -- நாம் பொற்கால யுகத்தில் எவ்வளவு அலங்கரிக்கப் பட்டவர்களாக இருந்தோம், எவ்வளவு முதல் தரமான இராஜ்ய பாக்கியம் இருந்தது! பிறகு மாயா ரூப தூசியில் புரண்டு அழுக்காகி விட்டோம்.

பாபா சொல்கிறார், இது இருள் நிறைந்த நகரம். பகவானை சர்வவியாபி என்று சொல்லி விட்டார்கள். என்னென்ன நடந்ததோ அது அப்படியே திரும்பவும் நடைபெறப் போகிறது. இதில் குழம்பிப் போகத் தேவை இல்லை. 5000 ஆண்டுகளில் எத்தனை நிமிடம், மணி, வினாடிகள் உள்ளன என்பதையும் அனைத்து தர்மங்களைச் சேர்ந்தவர்களின் கணக்கையும் எடுத்து ஒரு குழந்தை அனுப்பியிருந்தார். இதில் புத்தி வீணாகிறது. பாபா உலகம் எப்படி நடைபெறுகின்றது என்பதை அப்படியே சொல்லிப் புரிய வைக்கிறார்.

பிரஜாபிதா பிரம்மா கிரேட்-கிரேட் கிராண்ட் ஃபாதர். அவருடைய செயல்கள் பற்றி யாருக்கும் தெரியாது. விராட ரூபத்தை அமைத்திருக்கிறார்கள் என்றால் பிரஜாபிதா பிரம்மாவையே அதிலிருந்து எடுத்து விட்டனர். பாபாவையும் பிராமணர்களையும் பற்றி சரியான முறையில் புரிந்து கொள்ளவே இல்லை. அவரை ஆதிதேவ் என்று சொல்கிறார்கள். பாபா சொல்லிப் புரிய வைக்கிறார், நான் இந்த மரத்தின் விதை வடிவமாக இருக்கிறேன். இது தலைகீழான மரம். பாபா சத்தியமாக, சைதன்யமாக, ஞானக்கடலாக இருக்கிறார், அவருக்குத் தான் மகிமை செய்யப் படுகின்றது. ஆத்மா இல்லையென்றால் நடக்கவும் முடியாது. கர்ப்பத்திலும் கூட 5-6 மாதங் களுக்குப் பிறகு ஆத்மா பிரவேசமாகின்றது. இதுவும் டிராமாவில் விதிக்கப்பட்டுள்ளது. பிறகு ஆத்மா வெளியேறி விட்டால் முடிந்தது. ஆத்மா அழியாதது, அது உலக நாடகத்தின் பாகத்தை நடிக்கின்றது. இதை பாபா வந்து உணர வைக்கின்றார். ஆத்மா இவ்வளவு சிறிய புள்ளியாக இருக்கிறது, அதில் முடிவே இல்லாத பாகம் நிறைந்துள்ளது. பரமபிதாவும் ஆத்மா தான், அவர் ஞானக்கடல் என சொல்லப்படுகின்றார். அவர் தான் ஆத்மாவை உணர வைக்கின்றார். அவர்களோ, பரமாத்மா சர்வ சக்திவான், ஆயிரம் சூரியனை விட பிரகாசமானவர் என்று மட்டும் சொல்லி விடுகிறார்கள். ஆனால் எதையும் புரிந்து கொள்ளவில்லை. பாபா சொல்கிறார், இவையனைத்தும் பக்தி மார்க்கத்தில் வர்ணனை செய்யப்பட்டுள்ளது. மேலும் சாஸ்திரங்களில் எழுதப்பட்டுள்ளது. அர்ஜுனனுக்கு சாட்சாத்காரம் ஆயிற்று என்றால் இவ்வளவு பிரகாசத்தை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை என்று சொல்லப்பட்டுள்ளது. ஆக, அந்த விஷயம் மனிதர்களின் புத்தியில் பதிந்து விட்டது. இவ்வளவு தேஜோமயம் யாருக்குள்ளாவது பிரவேசமானால் வெடித்து விடும். ஞானம் இல்லை தானே! அதனால் பரமாத்மா ஆயிரம் சூரியனை விடப் பிரகாசமானவர், அவரது சாட்சாத்காரம் நமக்கு வேண்டுமென நினைக்கிறார்கள். பக்தியின் பாவனை இருக்கும்போது அவர்களுக்கு அந்த சாட்சாத்காரமும் ஆகின்றது. ஆரம்பத்தில் நீங்கள் கூட அதிகமாக சாட்சாத் காரம் பார்த்தீர்கள், கண்கள் சிவப்பாக ஆகிவிட்டன. சாட்சாத்காரம் பார்த்தார்கள், பிறகு இன்று அவர்கள் எங்கே? அவை அனைத்தும் பக்தி மார்க்கத்தின் விஷயங்கள். ஆக. இந்த அனைத்து விஷயங்களையும் புரிய வைக்கிறார். இதில் நிந்தனையின் விஷயம் எதுவுமில்லை. குழந்தைகள் சதா மகிழ்ந்திருக்க வேண்டும். இந்த டிராமாவோ உருவாக்கப்பட்டதாகும். என்னை எவ்வளவு நிந்தனைகள் செய்கின்றனர். பிறகு நான் என்ன செய்கிறேன்? கோபம் வருகிறதா என்ன? டிராமாவின் அனுசாரம் இவர்கள் அனைவரும் பக்தியில் மூழ்கியிருக் கிறார்கள் என்பதை நான் அறிவேன். கோபமடைவதற்கான விஷயமே இல்லை. டிராமா அதுபோல் உருவாக்கப் பட்டுள்ளது. அன்போடு புரிய வைக்க வேண்டியுள்ளது. பாவம், அஞ்ஞான இருளில் உள்ளனர். புரிந்து கொள்ள வில்லை என்றால் அவர்கள் மீது இரக்கமும் வருகின்றது. சதா புன்சிரிப்புடன் இருக்க வேண்டும். இவர்கள் பாவம், சொர்க்கத்தின் வாசலுக்கு வரமுடியாது. இவர்கள் அனைவரும் சாந்திதாம் செல்ல இருப்பவர்கள். சாந்தி வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புகிறார்கள். ஆக, பாபா தான் உண்மையைச் சொல்லிப் புரிய வைக்கிறார். இப்போது நீங்கள் புரிந்து கொண்டீர்கள், இந்த விளையாட்டு உருவாக்கப்பட்டது. டிராமாவில் ஒவ்வொருவருக்கும் பாகம் கிடைத்துள்ளது. இதில் மிகவும் அசையாத, நிலையான புத்தி வேண்டும். எதுவரை ஆடாத, அசையாத, ஒரு நிலைப்பட்ட மனநிலை இல்லையோ அதுவரை புருஷார்த்தம் எப்படிச் செய்வார்கள்? என்ன நடந்தாலும் சரி, புயல் வந்தாலும் கூட ஸ்திரமாக (நிலையாக) இருக்க வேண்டும். மாயாவின் புயலோ நிறைய வரும், மேலும் கடைசி வரை வரும். மனநிலை உறுதியாக இருக்க வேண்டும். இது குப்தமான (ரகசியமான) முயற்சியாகும். அநேகக் குழந்தைகள் புருஷார்த்தம் செய்து புயலை விரட்டிக் கோண்டே இருக்கிறார்கள். யார் எவ்வளவு தேர்ச்சி பெறுகிறார்களோ, அந்த அளவுக்கு உயர்ந்த பதவி பெறுவார்கள். இராஜதானியில் பதவிகளோ அநேகம் உள்ளன இல்லையா?

அனைத்தையும் விட நல்ல சித்திரங்கள் திரிமூர்த்தி, சிருஷ்டி சக்கரம் மற்றும் கல்பவிருட்சம். இவை ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டவை. வெளிநாடுகளில் சேவை செய்வதற்கும் கூட இந்த இரண்டு சித்திரங்களையும் எடுத்துச் செல்ல வேண்டும். இவற்றில் தான் அவர்கள் நல்லபடியாகப் புரிந்து கொள்ள முடியும். இன்னும் போகப் போக பாபா எதை விரும்புகிறார் - அதாவது துணிகளில் இந்தச் சித்திரங்கள் இருக்க வேண்டுமென்று, அதுவும் உருவாகிக் கொண்டே போகும். நீங்கள் சொல்லிப் புரிய வைப்பீர்கள் -- இது எப்படி ஸ்தாபனையாகிறது என்பதை நீங்களும் புரிந்து கொள்வீர்களானால் உங்கள் தர்மத்தில் உயர்ந்த பதவி பெறுவீர்கள். கிறிஸ்தவ தர்மத்தில் நீங்கள் உயர்ந்த பதவி பெற விரும்பினால் இதை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. நீங்கள் புருஷோத்தம சங்கமயுகத்தில் தூய்மையாகித் தன்னை அலங்கரித்துக் கொள்ள வேண்டும். ஒருபோதும் மாயாவின் தூசியில் புரண்டு அலங்காரத்தைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது.

2. இந்த டிராமாவை சரியான முறையில் புரிந்து கொண்டு தனது மன நிலையை ஆடாத, அசையாத, உறுதியானதாக ஆக்கிக் கொள்ள வேண்டும். ஒருபோதும் குழப்பமடையக் கூடாது. சதா மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்.

வரதானம்:
யோசித்துப் புரிந்து கொண்டு ஒவ்வொரு கர்மத்தையும் செய்யக்கூடியவராகி பச்சாத்தாபத்திலிருந்து விடுபட்ட, ஞானம் நிறைந்த ஆத்மா ஆகுக.

உலகத்திலும் சொல்கிறார்கள் -- முதலில் யோசியுங்கள், பிறகு செய்யுங்கள். யார் யோசித்துச் செய்யவில்லையோ, செய்து விட்டுப் பிறகு யோசிக்கிறார்களோ, அப்போது பச்சாத்தாபத்தின் ரூபம் வெளிப்பட்டு விடுகிறது. பின்னால் யோசிப்பது என்பது பச்சாத்தாபத்தின் ரூபம் மற்றும் முதலில் யோசிப்பது -- ஞானம் நிறைந்த ஆத்மாவின் குணமாகும். துவாபர-கலியுகத்திலோ அநேக விதமான பச்சாத்தாபங்கள் அடைந்து கொண்டே இருப்பார்கள். ஆனால் இப்போது சங்கமயுகத்தில் இது போல் யோசித்துப் புரிந்து கொண்டு சங்கல்பம் அல்லது கர்மம் செய்யுங்கள். ஒரு போதும் மனதிலும் கூட, ஒரு விநாடி கூட பச்சாத்தாபம் இல்லாமல் இருக்கிறதோ, அப்போது தான் ஞானம் நிறைந்த ஆத்மா என்பார்கள்.

சுலோகன்:
இரக்க மனம் உள்ளவராகி, சர்வ குணங்கள், சக்திகளை தானம் செய்பவர்கள் தாம் மாஸ்டர் வள்ளல் ஆவார்கள்.