16.11.25 காலை முரளி
ஓம் சாந்தி 15.12.2007 பாப்தாதா,
மதுபன்
நேரத்தின் மகத்துவத்தை அறிந்து கர்மத்தின் இரகசியத்தில் கவனம்
செலுத்துங்கள், பற்றறற்றவர், எவரெடி ஆகுங்கள்
இன்று அனைத்து பொக்கிஷங்களின் வள்ளல், ஞானப் பொக்கிஷம்,
சக்திகளின் பொக்கிஷம், அனைத்து குணங்களின் பொக்கிஷம், சிரேஷ்ட
சங்கல்பங்களின் பொக்கிஷம் கொடுக்கக் கூடிய பாப்தாதா தனது
நாலாப்புறங்களிலும் உள்ள பொக்கிஷங்களுக்கு குழந்தை மற்றும்
எஜமானர், அதிகாரி குழந்தைகளை பார்த்துக் கொண்டிருக்கின்றார்.
அகண்ட பொக்கிஷங்களுக்கு எஜமான ரான தந்தை அனைத்து குழந்தைகளையும்
அனைத்து பொக்கிஷங்களிலும் நிறைந்தவர்களாக ஆக்கிக்
கொண்டிருக்கின்றார். ஒவ்வொருவருக்கும் அனைத்து பொக்கிஷங்களையும்
கொடுக் கின்றார், சிலருக்கு குறைவாக, சிலருக்கு அதிகமாக
கொடுப்பது கிடையாது. ஏனெனில் அகண்ட பொக்கிஷமாகும்.
நாலாப்புறங்களிலும் உள்ள குழந்தைகளும் பாப்தாதாவின் கண்களில்
கலந்திருக் கின்றனர். அனைத்து பொக்கிஷங்களிலும் நிறைந்து
மகிழ்ச்சியடைந்து கொண்டிருக்கின்றனர்.
இன்றைய கால கட்டத்தின்படி அனைத்தையும் விட விலைமதிப்பற்ற
சிரேஷ்ட பொக்கிஷம் - புருஷோத்தம சங்கமயுகத்தின் நேரமாகும்.
ஏனெனில் இந்த சங்கமத்தில் தான் முழு கல்பத்தின் பலனை உருவாக்க
முடியும். இந்த சிறிய யுகத்தின் பலன் மற்றும் பலன்படி ஒரு
விநாடிக்கான மதிப்பு ஒரு ஆண்டிற்குச் சமம் ஆகும். அந்த அளவிற்கு
இந்த நேரம் விலை மதிப்பற்றதாகும். இந்த நேரத்திற்காகத் தான்
பாடப்பட்டிருக்கிறது - இப்பொழுது இல்லையேல் எப்பொழுதும் இல்லை.
ஏனெனில் இந்த நேரத்தில் தான் பரமாத்மாவின் பாகம் இருக்கிறது.
ஆகையால் இந்த நேரத்தை வைரத்திற்கு சமமானது என்று கூறப்படுகிறது.
சத்யுகம் தங்கயுகம் என்று கூறப்படு கிறது. ஆனால் இந்த நேரம்,
நேரமும் வைரத்திற்கு சமமானது. மேலும் குழந்தைகளாகிய நீங்கள்
அனைவரும் வைர வாழ்க்கையின் அனுபவி ஆத்மாக்களாக இருக்கிறீர்கள்.
இந்த நேரத்தில் தான் நீண்ட காலம் காணாமல் போயிருந்த ஆத்மாக்கள்
பரமாத்ம சந்திப்பு, பரமாத்ம அன்பு, பரமாத்ம ஞானம், பரமாத்ம
பொக்கிஷங்களின் பிராப்திகளுக்கு அதிகாரிகளாக ஆகிறீர்கள். முழு
கல்பத் திலும் தேவ ஆத்மாக்கள், மகான் ஆத்மாக்கள் இருக்கின்றனர்,
ஆனால் இந்த நேரத்தில் பரமாத்ம ஈஸ்வரிய குடும்பத்தினர்களாக
இருக்கிறீர் கள். ஆகையால் எந்த அளவிற்கு இந்த நிகழ்கால
நேரத்தின் மதிப்பு இருக்கிறதோ, இந்த மதிப்பை அறிந்து தன்னை
எவ்வளவு சிரேஷ்டம் ஆக்கிக் கொள்ள விரும்புகிறீர்களோ அவ்வளவு
ஆக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் அனைவரும் கூட இந்த மகான்
யுகத்தில் பரமாத்ம பாக்கியத்தை பலனாக அடையக் கூடிய பத்மாபதம்
பாக்கியவான்கள் அல்லவா! இவ்வாறு தனது சிரேஷ்ட பாக்கியத்தின்
ஆன்மிக போதை மற்றும் பாக்கியத்தை அறிந்து, அனுபவம் செய்து
கொண்டிருக்கிறீர்கள் தானே! குஷி ஏற்படுகிறது அல்லவா! உள்ளத்தில்
என்ன பாடல் பாடுகிறீர்கள்? ஆஹா எனது பாக்கியம் ஆஹா. ஏனெனில்
இந்த நேரத்தின் சிரேஷ்ட பாக்கியத்தின் முன் வேறு எந்த
யுகத்திலும் இப்படிப்பட்ட சிரேஷ்ட பாக்கியம் பலனாக அடைய
முடியாது.
எனவே கூறுங்கள் - சதா தனது பாக்கியத்தை நினைவில் வைத்துக்
கொண்டு மகிழ்ச்சி அடை கிறீர்கள் அல்லவா! அடைகிறீர்களா? சதா
மகிழ்ச்சி அடைகிறோம் என்று நினைப்பவர்கள், அவ்வப் பொழுது
அடைபவர்கள் அல்ல, சதா மகிழ்ச்சி அடைபவர்கள் கை உயர்த்துங்கள்.
சதா, சதா சதா என்ற வார்த்தையை கோடிட்டுக் கொள்ளுங்கள்.
இப்பொழுது டி.வி யில் உங்களது போட்டோ வந்து கொண்டிருக்கிறது.
சதா என்று கூறுபவர்களின் போட்டோ வந்து கொண்டிருக்கிறது.
வாழ்த்துக்கள். தாய்மார்கள் கை உயர்த்துங்கள், சக்திகள்
உயர்த்துங்கள், இரட்டை அயல்நாட்டினர் எந்த வார்த்தை நினைவில்
வைத்துக் கொள்வீர்கள்? சதா. அவ்வப்பொழுது என்பவர்கள் தாமதமாக
வரக் கூடியவர்கள் ஆவர்.
பாப்தாதா முன்பே கூறியிருக்கின்றார் - நேரம் மிக தீவிர
வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக் கிறது. நேரத்தின் வேகத்தை
அறிந்து கொண்டவர்கள் தன்னையும் சோதனை செய்யுங்கள் மாஸ்டர்
சர்வசக்திவானாகிய எனது வேகம் எப்படி இருக்கிறது? அனைவரும்
முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறோம், ஆனால் பாப்தாதா எதை
பார்க்க விரும்புகின்றார்? ஒவ்வொரு குழந்தையும் தீவிர
முயற்சியாளர், ஒவ்வொரு பாடத்திலும் நேர்மையுடன் தேர்ச்சி
பெறுபவர்களா? அல்லது வெறும் தேர்ச்சி பெறுபவர்களா? தீவிர
முயற்சியாளர்களின் விசேஷ இலட்சணம் இரண்டாகும் - ஒன்று பற்றற்றறு
(நஷ்டமோகா) இருப்பது, இரண்டாவது எவரெடி.
முதலில் பற்றறற்று இருப்பது. இந்த தேக உணர்வு, தேக அபிமானத்தில்
பற்றற்று இருக்க வேண்டும். மற்ற விசயங்களில் பற்றறற்று இருப்பது
எந்த கடினமும் இல்லை. தேக உணர்வின் அடையாளம் வீண் சங்கல்பம்,
நேரத்தை வீணாக்குதல் - சுயம் இந்த சோதனை செய்ய முடியும்.
சாதாரண நேரமும் நஷ்டமோகாவாக இருக்க விடாது. எனவே சோதனை
செய்யுங்கள் - ஒவ்வொரு விநாடி, ஒவ்வொரு சங்கல்பம், ஒவ்வொரு
காரியம் வெற்றியுடையதாக இருந்ததா? ஏனெனில் சங்கம யுகத்தில்
தந்தையின் விசேஷ வரதானம் இருக்கிறது - வெற்றி உங்களது
பிறப்புரிமையாகும். ஆக அதிகாரம் எளிதாக அனுபவம் ஏற்படுத்தும்.
பிறகு எவரெடி, எவரெடி என்றால் - எண்ணம்-சொல்-செயல்,
சம்பந்தம்-தொடர்பில் நேரத்தின் கட்டளை திடீரென்று நடந்தால்
எவரெடியாக இருக்க வேண்டும், திடீரென்று நடந்தே தீரும். உங்கள்
தாதீயைப் பார்த்தீர்கள் தீடிரென்று எவரெடி. ஒவ்வொரு சுபாவத்தில்,
ஒவ்வொரு காரியத்திலும் ஈசியாக இருந்தார், சம்பந்தங்களில் ஈசி,
சுபாவத்தில் ஈசி, சேவையில் ஈசி, திருப்திப்படுத்துவதில் ஈசி,
திருப்தியாக இருப்பதில் ஈசி. அதனால் தான் பாப்தாதா நேரத்தின்
அருகாமையை அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றார். சுய
முயற்சிக்கான நேரம் மிகக் குறைவாக இருக்கிறது. ஆகையால் தனது
சேமிப்புக் கணக்கை சோதியுங்கள். பொக்கிஷங்களை சேமிப்பதற்கு
மூன்று விதிகள் முன்பே கூறியிருக்கிறேன். மீண்டும் கூறிக்
கொண்டிருக்கின்றேன். அந்த மூன்று விதிகளை தனக்குள் சோதியுங்கள்.
ஒன்று - சுய முயற்சியின் மூலம் பொக்கிஷங்களை பலனாக அடைவது,
பிராப்திகளை சேமிப்பது. இரண்டாவது - திருப்தியாக இருப்பது.
இதிலும் சதா என்ற வார்த்தை சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும்
அனைவரையும் திருப்திப்படுத்த வேண்டும், இதில் புண்ணியக் கணக்கு
சேமிப்பாகும். மேலும் இந்த புண்ணிய கணக்கு அநேக பிறவியின்
பலனுக்கு ஆதாரமாக இருக்கிறது. மூன்றாவது - சதா சேவையில்
களைப்பற்று, சுயநலமன்றி மற்றும் பரந்த உள்ளத்துடன் சேவை
செய்வதாகும். இதில் யாருக்கு சேவை செய்கிறீர்களோ,
அவர்களிடமிருந்து தானாகவே ஆசிர்வாதங்கள் கிடைக்கிறது. இந்த
மூன்று விதிகள் - சுய முயற்சி, புண்ணியம் மற்றும் ஆசிர்வாதம்.
இந்த மூன்று கணக்கு சேமிப்பாகி இருக்கிறதா? திடீரென்று ஏதாவது
சோதனை வந்தால் மதிப்புடன் தேர்ச்சி பெற முடியுமா? என்று சோதனை
செய்யுங்கள். ஏனெனில் இன்றைய கால கட்டத்தின் படி இயற்கையின்
சிறிய சிறிய பிரச்சனைகளும் எப்பொழுது வேண்டுமென்றாலும்
வரக்கூடும். ஆகையால் கர்மத்தின் இரகசியத்தின் மீது விசேஷ கவனம்
செலுத்துங்கள். கர்மத்தின் இரகசியம் மிகவும் ஆழமானது. எவ்வாறு
நாடகத்தின் மீது கவனம் இருக்கிறதோ, ஆன்மிக சொரூபத்தின் மீது
கவனம் இருக்கிறதோ, தாரணையின் மீது கவனம் இருக் கிறதோ, அதே
போன்று கர்மத்தின் இரகசியத்தின் மீதும் கவனம் செலுத்துவதும்
அவசியமாகும். சாதாரண காரியம், சாதாரண நேரம், சாதாரண சங்கல்பம்
இவைகளின் மூலம் பிராப்திகளில் வித்தியாசம் ஏற்பட்டு விடுகிறது.
இந்த நேரத்தில் நீங்கள் அனைவரும் முயற்சியாளர்களாக
இருக்கிறீர்கள், சிரேஷ்டமான விசேஷ ஆத்மாக்களாக இருக்கிறீர்கள்,
சாதாரண ஆத்மாக்கள் அல்ல. உலக நன்மைக்கு நிமித்தமாக, உலக
மாற்றத்திற்கு நிமித்த ஆத்மாக்களாக இருக்கிறீர்கள். தன்னை
மட்டுமே மாற்றிக் கொள்பவர்கள் அல்ல, உலக மாற்றத்திற்கான
பொறுப்பு இருக்கிறது. ஆகையால் தனது சிரேஷ்ட சுவமானத்தின் நினைவு
சொரூபமாக ஆகியே தீர வேண்டும்.
அனைவருக்கும் பாப்தாதா மற்றும் சேவையின் மீது அதிக அன்பு
இருப்பதை பாப்தாதா பார்த்தார். சேவைக்கான சூழ்நிலை
நாலாப்புறங்களிலும் ஏதாவது ஒரு திட்டத்தின் படி நடைபெற்றுக்
கொண்டிருக்கிறது. கூடவே இப்பொழுது நேரத்தின் அநுசாரம்
துக்கத்திலிருக்கும், அசாந்தியிலிருக்கும் உலக ஆத்மாக்களுக்கு
துக்கத்திலிருந்து, அசாந்தியிலிருந்து விடுவிப்பதற்கு தனது
சக்திகளின் மூலம் சகாஷ் கொடுங்கள். எவ்வாறு இயற்கையின் சூரியன்
சகாஷ் கொடுத்து இருளை தூரமாக்கி வெளிச்சத்தில் கொண்டு வருகிறதோ,
தனது கிரணங்களின் மூலம் ஏதாவது பொருட்களை மாற்றி விடுகிறதோ, அதே
போன்று மாஸ்டர் ஞான சூரியனாகி பிராப்தியாக அடைந்த சுகம்,
சாந்தியின் கிரணங்களின் மூலம் சகாஷ் மூலம் துக்கம்,
அசாந்தியிலிருந்து முக்கி ஆக்குங்கள். மன சேவையின் மூலம்,
சக்திசாலியான விருத்தியின் மூலம் வாயுமண்டலத்தை மாற்றுங்கள்.
எனவே இப்போது மனசா சேவை செய்யுங்கள். எவ்வாறு வார்த்தைகளின்
சேவையை விரிவாக செய்தீர்களோ, அதே போன்று மனதின் சக்தியின் மூலம்
ஆத்மாக்களுக்குள் மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையின் அலை களை
பரப்புங்கள். இந்த ஆண்டு மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கை என்ற
தலைப்பு வைத்திருக்கிறீர்கள், அதன்படி தைரியம் ஏற்படுத்துங்கள்,
ஆர்வம்-உற்சாகம் ஏற்படுத்துங்கள், தந்தையின் ஆஸ்தி மூலம்
துக்கம், அசாந்தியிலிருந்து முக்தி கொடுங்கள். இப்பொழுது
அவசியமானது அதிகம் சகாஷ் கொடுப் பதாகும். இந்த சேவையின் மனதை
பிசியாக வைத்துக் கொண்டால் மாயாஜீத் வெற்றி ஆத்மாவாக தானாகவே
ஆகிவிடுவீர்கள். மற்றபடி சிறிய சிறிய விசயங்கள் சாலை ஓரக்
காட்சிகளாகும். சாலை ஓரக் காட்சிகளில் சில நல்ல காட்சிகளும்
வரும், சில கெட்ட காட்சிகளும் வரும். எனவே சாலை ஓர காட்சிகளை
கடந்து சென்று இலட்சியத்தை அடைய வேண்டும். சாலை ஓரக் காட்சி
களைப் பார்ப்பதற்கு பார்வையாளர் (சாட்சி) என்ற இருக்கையில் செட்
ஆகிவிடுங்கள் போதும். பிறகு சாலை ஓரக் காட்சிகள் விளையாட்டாக
ஆகிவிடும். ஆக எவரெடி தானே? நாளையே ஏதாவது நடந்து விட்டால்
எவரெடியாக இருக்கிறீர்களா? முதல் வரிசையில் உள்ளவர்கள் எவரெடி
யாக இருக்கிறீர்களா? நாளையே ஏதாவது ஆகிவிட்டால்? ஆசிரியர்கள்
தயாராக இருந்தால் நல்லது. இந்த வர்க்கத்தினர் தயாராக
இருக்கின்றனர். எத்தனை வர்க்கத்தினர் வந்திருக்கிறீர்களோ எவரெடி.
யோசியுங்கள். தாதிகளே பாருங்கள், அனைவரும் கை அசைத்துக்
கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? நல்லது,
வாழ்த்துக்கள். ஒருவேளை இல்லையென்றாலும் இன்று இரவிற் குள்
ஆகிவிடுங்கள். ஏனெனில் நேரம் உங்களை எதிர்பார்த்துக்
கொண்டிருக்கிறது. பாப்தாதா முக்திக்கான கதவு திறப்பதற்காக
எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார். அட்வான்ஸ் பார்டி உங்களை
வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள். என்ன செய்ய முடியாது மாஸ்டர்
சர்வசக்திவான் களாக இருக்கிறீர்கள். இது செய்ய வேண்டும், இது
செய்யக் கூடாது என்று திட சங்கல்பம் செய்தால் போதும். செய்யக்
கூடாது எனில் திட சங்கல்பம் செய்யக் கூடாது என்பதை செய்யாமல்
இருந்து காட்டுங்கள். மாஸ்டர்களாக இருக்கவே இருக்கிறீர்கள் தானே!
நல்லது.
இப்பொழுது முதல் முறையாக யார் வந்திருக்கிறீர்கள்? முதல் முறை
வந்தவர்கள் கை உயர்த்துங்கள். உயர்வாக கை உயர்த்துங்கள்,
அசையுங்கள். இவ்வளவு பேர் வந்திருக்கிறீர்கள். நல்லது.
யாரெல்லாம் முதல் முறை வந்திருக்கிறீர்களோ, அவர்களுக்கு பல கோடி
மடங்கு வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள். பாப்தாதா குஷியடை
கின்றார் - கல்பத்திற்கு முந்தைய குழந்தை மீண்டும் தனது
குடும்பத்தில் வந்து சேர்ந்து விட்டது. ஆகையால் இப்பொழுது
கடைசியில் வந்தவர்கள் அதிசயம் செய்து காட்டுங்கள். கடைசியில்
இருந்து விடக்கூடாது, கடைசியில் வந்திருக்கிறீர்கள், ஆனால்
கடைசியில் இருந்து விடக்கூடாது. முன்நோக்கி செல்ல வேண்டும்.
இதற்கு தீவிர முயற்சி செய்ய வேண்டியிருக்கும். தைரியம்
இருக்கிறது தானே? தைரியம் இருக் கிறதா? நல்லது. தைரியமான
குழந்தைகளுக்கு பாப்தாதா மற்றும் குடும்பத்தின் உதவி கிடைக்கும்.
நன்றாக இருக்கிறது. ஏனெனில் குழந்தைகள் வீட்டின் அலங்காரம்
ஆகும். எனவே யாரெல்லாம் வந்திருக்கிறீர்களோ அவர்கள் மதுவனத்தின்
அலங்காரமாகும். நல்லது.
சேவைக்கான பொறுப்பு போபால் மண்டலமாகும்:-
நல்லது, பலர் வந்திருக்கிறீர்கள். (கொடி அசைத்துக்
கொண்டிருக்கிறார்கள்) நன்றாக இருக்கிறது. பொன்னான வாய்ப்பு
கிடைத்திருக்கிறது அல்லவா! சேவையின் பொருட்டு யாரெல்லாம்
வந்திருக்கிறீர்களோ அவர்கள் அனைவரிடத்திலும் சேவையின் பலம்,
பலன் - அதீந்திரிய சுகத்தின் அனுபவம் செய்தீர்களா? செய்தீர்களா?
ஆம் என்பதற்கு இப்பொழுது கொடி அசையுங்கள். நல்லது, இப்பொழுது
அதீந்திரிய சுகத்தின் அனுபவம் செய்தீர்கள், இது சதா காலமும்
இருக்குமா? இல்லது சிறிது காலத்திற்கு மட்டுமே இருக்குமா? யார்
மனதார உறுதிமொழி செய்கிறார்களோ, பிறரைப் பார்த்து கை உயர்த்து
பவர்களாக இருக்கக் கூடாது, நான் இந்த பிராப்தியை சதா காலமும்
வைத்திருப்பேன், விக்ன விநாசக் ஆவேன் என்று மனதார நினைப்பவர்கள்
கொடி அசையுங்கள். நல்லது. பாருங்கள், நீங்கள் டி.வி யில் வந்து
கொண்டிருக்கிறீர்கள். பிறகு டி.வி யின் போட்டோ அனுப்புவோம்.
நல்லது. இவ்வாறு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதும் மிக
நன்றாக இருக்கிறது. வாய்ப்புகளையும் மிகக் குஷியாக எடுத்துக்
கொள்கிறீர்கள். மேலும் மண்டல வாரியாக அனைவருக்கும் திறந்த
மனதுடன் வருவதற்கான அழைப்பு கிடைத்து விடுகிறது. நன்றாக
இருக்கிறது. இப்பொழுது என்ன அதிசயம் செய்வீர்கள்? (2008-ல்
உங்களை வெளிப்படுத்திக் காட்டுவோம்). நல்லது, ஒருவருக்கொருவர்
உதவி செய்து இந்த உறுதிமொழியை நிறைவேற்றுங்கள். கண்டிப்பாக
செய்வீர்கள். மாஸ்டர் சர்வசக்திவான்களுக்கு எந்த ஒரு
உறுதிமொழியையும் கடைபிடிப்பது ஒரு பெரிய விசயம் கிடையாது.
திடத்தாவை கூடவே வைத்துக் கொண்டால் போதும். திடத்தாவை விட்டு
விடக்கூடாது. ஏனெனில் திடத்தா வெற்றிக்கான சாவியாகும். எங்கு
திடதா இருக்கிறதோ, அங்கு வெற்றி கண்டிப்பாக இருக்கும். இவ்வாறு
இருக்கிறீர்கள் தானே! செய்து காட்டுங்கள். பாப்தாதாவிற்கும்
குஷி இருக்கிறது, நன்றாக இருக்கிறது. பாருங்கள் எத்தனை பேருக்கு
வாய்ப்பு கிடைக்கிறது! பாதி வகுப்பு சேவை செய்பவர் களாக
இருக்கின்றனர். நன்றாக இருக்கிறது. பாருங்கள், சாகார பாபா
இருந்த நேரத்தில் இவர் (மகேந்திரன் சகோதரர்) மிக நல்ல பாகம்
நடித்தார் - முதன் முதல் அருங்காட்சியகம் தயார் செய்தார்.
பாருங்கள், சாகார தந்தையின் ஆசிர்வாதம் முழு மண்டலத்திற்கும்
இருக்கிறது. இப்பொழுது ஏதாவது புதியது செய்து காட்டுவீர்கள்.
இப்பொழுது அதிக நேரம் ஆகிவிட்டது, எந்த புது கண்டுபிடிப்பும்
உருவாக்கப்படவில்லை. வர்க (துறை) சேவையும் இப்பொழுது பழையதாக
ஆகிவிட்டது. கண்காட்சி, மேளா, மாநாடு, அன்பு சந்திப்பு போன்ற
அனைத்தும் செய்து விட்டீர்கள். இப்பொழுது வேறு ஏதாவது புதிதாக
உருவாக்குங்கள். சுருக்கமாக மற்றும் இனிமையாக, செலவு குறைவாக
மற்றும் அதிக சேவை. ராய் பகதூர் அல்லவா! எனவே ராய் பகதூர் புது
வழிகளை உருவாக்குங்கள். எவ்வாறு கண்காட்சிகளை உருவாக்கினீர்கள்,
பிறகு மேளா உருவாக்கினீர்கள், பிறகு வர்க்க (துறை) சேவை
உருவாக்கினீர்கள், இவ்வாறு ஏதாவது புது கண்டுபிடிப்பு
உருவாக்குங் கள். யார் நிமித்தம் ஆகிறார்கள் என்பதை
பார்க்கிறோம்! நன்றாக இருக்கிறது. தைரியமுடையவர் களாக
இருக்கிறீர்கள். ஆகையால் தைரியத்துடன் இருப்பவர்களுக்கு
பாப்தாதா முன்கூட்டியே சதா உதவி செய்வற்கான வாழ்த்துக்கள்
கொடுத்துக் கொண்டிருக்கின்றார். நல்லது.
இப்பொழுது ஒரு விநாடியில் அனைத்து மிக இனிமையிலும் இனிமையான
அமைதி நிலையின் அனுபவத்தில் மூழ்கி விடுங்கள். (பாப்தாதா டிரில்
செய்வித்தார்). நல்லது.
நாலாப்புறங்களிலும் உள்ள அனைத்து தீவிர முயற்சியாளர்கள், சதா
திட சங்கல்பத்தின் மூலம் வெற்றியை பிராப்தியாக அடையக் கூடிய,
சதா வெற்றியின் திலகதாரிகள், பாப்தாதாவின் இதய
சிம்மாசனதாரிகளுக்கு, இரட்டை கிரீடதாரிகளுக்கு, விஷ்வ
கல்யாணகாரி, சதா இலட்சியம் மற்றும் இலட்சணத்தை சமம் ஆக்கக்
கூடிய பரமாத்ம அன்பில் வளரக் கூடிய அப்படிப்பட்ட சர்வ சிரேஷ்ட
மான குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள்,
உள்ளப்பூர்வமான ஆசிர்வாதங்கள் மற்றும் நமஸ்தே.
தாதிகளுடன்:-
குழந்தை ஆஜராகி இருக்கிறது எனில் தந்தையும் ஆஜராகத் தான்
இருக்கின்றார். தந்தை குழந்தைகளிடமிருந்து தூர விலக முடியாது,
குழந்தைகளும் தந்தையிடமிருந்து தூர விலக முடியாது. கூடவே
இருப்பேன், கூடவே செல்வேன், அரை கல்பம் பிரம்மா பாபாவின் கூடவே
இருப்பேன் என்ற உறுதிமொழி இருக்கிறது. (தாதி ஜானகி
கூறினார்-அவரும் எனக்குள் கலந்திருந்து கூடவே இருக்கின்றார்)
உங்களுடைய இந்த அனுபவம் சரி தான். இப்பொழுது உத்திரவாதம்
இருக்கிறது. ஆனால் எப்போது இராஜ்யம் செய்வீர்களோ, அப்போது
வரமாட்டோம். பார்ப்பதற்கும் யாராவது வேண்டும் அல்லவா! (மனம்
மேலே எப்படி செலுத்துவது) நாடகத்தில் பாகம் இருக்கிறது. பிரம்மா
பாபா கூட இருப்பார் அல்லவா! பாருங்கள், நாடகம் என்ன செய்கிறது?
ஆசீர்வாதம்:
சத்தியத்தின் மூலம் ஒவ்வொரு காரியம் அல்லது வார்த்தையில்
ராயல்டி காண்பிக்கக் கூடிய முதல் டிவிசனுக்கு அதிகாரி ஆகுக.
சத்தியம் என்றால் சதா தனது உண்மையான சொரூபத்தின் நினைவு, இதன்
மூலம் ஸ்தூல முகத்திலும் ராயல்டி வந்து விடும். ராயல் என்றால்
ஒரு தந்தையைத் தவிர வேறு யாருமில்லை. இந்த நினைவின் மூலம்
ஒவ்வொரு காரியம் அல்லது வார்த்தையில் ராயல்டி தென்படும்.
யாரெல்லாம் சம்பந்தத்தில் வருவார்களோ அவர்களுக்கு ஒவ்வொரு
காரியத்தில் தந்தைக்குச் சமம் சரித்திரத்தின் அனுபவம் ஏற்படும்,
ஒவ்வொரு வார்த்தையில் தந்தைக்குச் சமம் அதாரிட்டி மற்றும்
பிராப்தியின் அனுபவம் ஏற்படும். அவர்களது சகவாசம் சத்தியமானதாக
இருக்கின்ற காரணத்தினால் தங்கம் போன்று வேலை செய்யும். இவ்வாறு
சத்தியமான ராயல் ஆத்மாக்கள் தான் முதல் டிவிசனுக்கு
அதிகாரிகளாக ஆகிறார்கள்.
சுலோகன்:
சிரேஷ்ட காரியத்தின் சேமிப்பை அதிகப்படுத்தும் பொழுது
விகர்மத்தில் கணக்கு அழிந்து விடும்.
அவியக்த சமிக்ஞை : அசரீரி அல்லது விதேகி நிலையின் பயிற்சியை
அதிகரியுங்கள்.
நாலாப்புறங்களிலும் குழப்பம் இருக்கும். மனிதர்களின்,
இயற்கையின் குழப்பம் அதிகரிக்கவே செய்யும். அப்படிப்பட்ட
நேரத்தில் பாதுகாப்பிற்கான சாதனம் விநாடியில் தன்னை விதேஹி,
அசரீரி அல்லது ஆத்ம அபிமானியாக ஆக்கிக் கொள்ளுங்கள்.
இடையிடையில் விநாடியில் மனம்-புத்தியை எங்கு விரும்புகிறேனோ
அங்கு நிலைக்கச் செய்ய முடிகிறதா? என்று சோதனை செய்யுங் கள்.
இதைத் தான் சாதனை என்று கூறப்படுகிறது.
குறிப்பு:- இன்று மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை.
அனைத்து இராஜயோகி தபஸ்வி சகோதர, சகோதரிகள் மலை 6.30 மணி முதல்
7.30 மணி வரை விசேஷ யோக பயிற்சியின் போது தனது சுப பாவணை யின்
சிரேஷ்ட விருத்தியின் மூலம் மனதில் மகாதானி ஆகி அனைவருக்கும்
பயமற்று இருப்பதற்கான வரதானம் கொடுக்கும் சேவை செய்யவும்.