16-12-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே ! பாவனமாக ஆவதற்கான இந்த படிப்பு எல்லா படிப்புக்களைவிடவும் சுலபமானது. இதை குழந்தைகள், வாலிபர்கள், முதியவர்கள் அனைவரும் படிக்கமுடியும். 84 பிறவிகள் பற்றி மட்டும் அறிந்து கொள்ள வேண்டும் அவ்வளவே.

கேள்வி:
ஒவ்வொருவரும் சிறியவரோ பெரியவரோ எந்த ஒரு பயிற்சியை அவசியம் செய்ய வேண்டும்?

பதில்:
ஒவ்வொருவரும் முரளியை நடத்துவதற்கான அப்பியாசம் அவசியம் செய்ய வேண்டும். ஏனெனில் நீங்கள் முரளிதரனின் குழந்தைகள் ஆவீர்கள். முரளி நடத்துவதில்லை என்றால் உயர்ந்த பதவியை அடைய முடியாது. யாருக்காவது கூறிக் கொண்டே இருந்தீர்கள் என்றால் வாய் திறந்து விடும்" நீங்கள் ஒவ்வொருவரும் தந்தைக்குச் சமானமாக அவசியம் ஆசிரியர் ஆக வேண்டும். என்ன படிக்கிறீர்களோ அதை பிறருக்கும் கற்பிக்க வேண்டும். சிறிய குழந்தைகளுக்கும் இந்த கல்வியைக் கற்பிப்பதற்கான உரிமை உள்ளது. அவர்கள் கூட எல்லையில்லாத தந்தையின் ஆஸ்தியைப் பெறுவதற்கான உரிமை பெறுவார்கள்.

ஓம் சாந்தி.
இப்பொழுது சிவபாபாவின் ஜெயந்தி வருகிறது. அது பற்றி எப்படிப் புரிய வைக்க வேண்டும். தந்தை உங்களுக்குப் புரிய வைத்துள்ளார். அதே போல நீங்கள் பின் மற்றவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். அப்படியின்றி பாபா எப்படி உங்களுக்கு கற்பிக்கிறாரோ அதே போல பாபாவே அனைவருக்கும் கற்பிக்க வேண்டும் என்பதல்ல. சிவபாபா உங்களுக்கு கற்பித்துள்ளார். இந்த சரீரம் மூலமாக கற்பித்துள்ளார் என்பதை அறிந்துள்ளீர்கள். உண்மையில் நாம் சிவபாபாவின் ஜெயந்தி கொண்டாடுகிறோம். நாம் பெயர் கூட சிவனினுடையதைத் தான் எடுக்கிறோம். அவரோ இருப்பதே நிராகாரமானவராக. அவர் சிவன் என்று அழைக்கப் படுகிறார். ஆனால் அவர்களோ சிவனோ பிறப்பு இறப்பற்றவர், அவருக்கு பிறகு ஜெயந்தி (பிறப்பு) எப்படி ஆகும்? என்பார்கள். எப்படி வரிசைக்கிரமமாக கொண்டாடிக் கொண்டே வருகிறார்கள். கொண்டாடிக் கொண்டே இருப்பார்கள் என்பதை நீங்களே அறிவீர்கள். எனவே அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். தந்தை வந்து இந்த உடலை ஆதாரமாக எடுக்கிறார். வாயோ அவசியம் வேண்டும். எனவே கவுமுக்- பசு வாய்க்கு மகிமை உள்ளது. இந்த இரகசியம் சிறிது கடினமானது.... சிவபாபாவின் தொழில் பற்றி புரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய எல்லையில்லாத தந்தை வந்து விட்டார். அவரிடமிருந்து தான் நமக்கு எல்லையில்லாத ஆஸ்தி கிடைக்கிறது. உண்மையில் பாரதத்திற்குத் தான் எல்லையில்லாத ஆஸ்தி இருக்கிறது. வேறு யாருக்கும் இருப்பதில்லை. பாரதத்திற்குத் தான் உண்மையான கண்டம் என்று கூறப்படுகிறது. மேலும் தந்தையைக் கூட சத்தியம்" (ட்ரூத்) என்று கூறப்படுகிறது. எனவே இந்த விஷயங்களைப் புரிய வைக்க வேண்டி வருகிறது. ஒரு சிலருக்கு சீக்கிரம் புரிவதில்லை. ஒரு சிலர் சட்டென்று புரிந்து கொண்டு விடுகிறார்கள். இந்த யோகம் மற்றும் கல்வி இரண்டுமே நழுவி விடக் கூடிய விஷயங்கள் ஆகும். அதில் கூட யோகம் அதிகமாக நழுவி விடுகிறது. (நாலேஜ்) ஞானமோ புத்தியில் இருக்கவே இருக்கிறது. மற்றபடி நினைவைத்தான் அடிக்கடி மறக்கிறீர்கள். நாம் எப்படி 84 பிறவிகள் எடுக்கிறோம் என்ற ஞானமோ உங்களுடைய புத்தியில் இருக்கவே இருக்கிறது. முதல் நம்பரில் வருபவர்கள் தான் 84 பிறவிகள் எடுப்பார்கள் என்பதை யாருக்கு இந்த ஞானம் இருக்கிறதோ அவர்களே புத்தி மூலமாக புரிந்து கொள்ள கூடியவர்களாக இருப்பார்கள். முதலில் உயர்ந்ததிலும் உயர்ந்தவர்கள் என்று இலட்சுமி நாராயணரைக் கூறுவார்கள். நரனிலிருந்து நாராயணர் ஆவதற்கான கதை கூட பிரசித்தமானது. பௌர்ணமியன்று நிறைய இடங்களில் சத்திய நாராயணரின் கதை நடக்கிறது. நாம் உண்மையில் பாபா மூலமாக நரனிலிருந்து நாராயணர் ஆவதற்கான கல்வியைக் கற்கிறோம். என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்துள்ளீர்கள். இது பாவன மாக (தூய்மையாக) ஆவதற்கான படிப்பு ஆகும். மேலும் மற்ற எல்லா படிப்புக் களையும் விட முற்றிலும் சுலபமானது ஆகும். 84 பிறவிகளின் சக்கரத்தை அறிந்து கொள்ள வேண்டும். மேலும் இந்தப் படிப்பு அனைவருக்காகவும் ஒன்றே ஒன்று தான். முதியவர்கள், குழந்தைகள் மற்றும் வாலிபர்கள் யாராக இருந்தாலும் அனைவருக்கும் ஒரே கல்வி தான் ஆகும். சிறிய குழந்தை களுக்கும் உரிமை உள்ளது. தாய் தந்தையர் இவர்களுக்கு சிறிது சிறதாக கற்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். நேரமோ நிறைய இருக்கிறது. சிவபாபாவை நினைவு செய்யுங்கள் என்று குழந்தைகளுக்குக் கூட கற்பிக்கப்படுகிறது. ஆத்மா மற்றும் சரீரம் இரண்டினுடைய தந்தைகளும் தனித் தனி ஆவார்கள். ஆத்மா என்ற குழந்தையும் நிராகாரமானவர். பின் தந்தையும் நிராகார மானவர் ஆவார். அந்த நிராகாரமான சிவபாபா நம்முடைய தந்தை ஆவார் என்பதும் குழந்தை களாகிய உங்களுடைய புத்தியில் உள்ளது. எவ்வளவு சிறியதாக இருக்கிறார். இதை நல்ல முறையில் நினைவு கொள்ள வேண்டும். மறக்கக் கூடாது. ஆத்மாவாகிய நாம் கூட புள்ளி வடிவமாக சிறியதாக உள்ளோம். அப்படியின்றி மேலே சென்றீர்கள் என்றால் பெரியதாகத் தென்படும், கீழே சிறியதாக ஆகி விடும் என்பதல்ல. அதுவோ பிந்து சொரூபமாகும். மேலே சென்றீர் கள் என்றால் உங்களுக்கு பார்ப்பதற்குக் கூட தெரியாது. பிந்து ஆவார் அல்லவா? பிந்து (புள்ளி) எப்படித் தெரிய வரும்? இந்த விஷயங்கள் பற்றி குழந்தைகள் நல்ல முறையில் சிந்தனையும் செய்ய வேண்டும். ஆத்மாவாகிய நாம் சரீரத்தின் மூலமாக பாகத்தை ஏற்று நடிப்பதற்காக மேலிருந்து வந்துள்ளோம். ஆத்மா தேய்வதோ வளருவதோ கிடையாது. உறுப்புக்கள் முதலில் சிறியதாகவும் பின்னால் பெரியதாகவும் ஆகிறது.

இப்பொழுது எப்படி நீங்கள் புரிந்துள்ளீர்களோ அதே போல பின் மற்றவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். வரிசைக்கிரமமாக யார் எவ்வளவு படித்துள்ளார்களோ அவ்வளவே அவசியம் படிக்கிறார்கள். அனைவரும் கற்பிப்பதற்காக அவசியம் ஆசிரியர் ஆக வேண்டும். தந்தையிடமோ நாலேஜ் (ஞானம்) உள்ளது. அவர் இவ்வளவு சிறியதாக இருக்கும் பரம ஆத்மா ஆவார். எப்பொழுதும் பரந்தாமத்தில் இருக்கிறார். இங்கு ஒரே ஒரு முறை சங்கமத்தில் வருகிறார். மிகவுமே துக்கமுடையவராக ஆகும் பொழுது தான் தந்தையை அழைக்கவும் செய்கிறார்கள். வந்து எங்களை சுகமுடையவர்களாக ஆக்குங்கள் என்று கூறுகிறார். பாபா வந்து எங்களை பதீதமான (தூய்மை யற்ற) உலகத்திலிருந்து புதிய சத்யுகமான சுகமுடைய பாவன உலகத்திற்கு அழைத்துச் செல்லுங் கள் அல்லது அங்கு செல்வதற்கான வழியைக் கூறுங்கள் என்று நாம் அழைத்துக் கொண்டே இருக்கிறோம் என்பதைக் குழந்தைகள் இப்பொழுது அறிந்துள்ளார்கள். அதுவும் அவரே வரும் பொழுது தான் வழியைக் கூற முடியும். எப்பொழுது உலகம் மாற வேண்டி உள்ளதோ அப்பொழுது தான் அவர் வருவார். இது மிகவுமே எளிய விஷயங்கள். குறித்துக் கொள்ள வேண்டும். பாபா இன்று இதைப் புரிய வைத்துள்ளார். நாம் கூட இவ்வாறு புரிய வைக்கிறோம். இவ்வாறு பயிற்சி செய்து "வாய் திறந்து விடும்" (புரிய வைக்கும் பழக்கம் ஏற்பட்டு விடும்) .நீங்கள் முரளிதரனின் குழந்தைகள் ஆவீர்கள். நீங்கள் அவசியம் முரளிதரன் ஆக வேண்டும். மற்றவர்களுக்கு நன்மை செய்தீர்கள் என்றால் அப்பொழுது தான் புது உலகத்தில் உயர்ந்த பதவியை அடைவீர்கள். அந்த படிப்பு இருப்பதோ இந்த உலகத்திற்காக. இது வருங்கால புது உலகத்திற்கான படிப்பு ஆகும். அங்கோ எப்பொழுதுமே சுகமே சுகமாக இருக்கும். அங்கோ துன்புறுத்தக் கூடிய 5 விகாரங்கள் இருப்பதே இல்லை. இங்கு இராவண இராஜ்யம் அதாவது அந்நிய இராஜ்யத்தில் நாம் இருக்கிறோம். நீங்கள் தான் முதலில் உங்களுடைய இராஜ்யத்தில் இருந்தீர்கள். நீங்கள் புது உலகம் என்பீர்கள். பிறகு பாரதத்திற்குத் தான் பழைய உலகம் என்று கூறப்படுகிறது. புது உலகத்தில் பாரதம்.. . என்ற பாடலும் உள்ளது. அப்படியின்றி புது உலகத்தில் இஸ்லாமியர், பௌத்தியர்.... என்று கூறுவார்கள் என்பதல்ல. இல்லை. தந்தை வந்து குழந்தைகளாகிய நம்மை எழுப்புகிறார் என்பது இப்பொழுது உங்கள் புத்தியில் உள்ளது. நாடகத்தில் பாகமே அவருடையது இது போல உள்ளது. பாரதத்தைத் தான் வந்து சொர்க்கமாக ஆக்குகிறார். பாரதம் தான் முதல் தேசம் ஆகும். முதலிலிருந்த பாரத தேசத்திற்கு தான் சொர்க்கம் என்று கூறப்படுகிறது. பாரதத்தின் ஆயுள் கூட அளவுக்குட்பட்டது (லிமிடெட்). இலட்சக்கணக்கான வருடங்கள் என்று கூறுவதோ (அன்லிமிடெட்) எல்லையில்லாத தாக ஆகி விடுகிறது. இலட்சக்கணக்கான வருடங்களின் எந்த ஒரு விஷயம் கூட நினைவில் வரவே முடியாது. புதிய பாரதமாக இருந்தது. இப்பொழுது பழைய பாரதம் என்றே கூறுவார்கள். பாரதம் தான் புதிய உலகமாக ஆகி விடும். நாம் இப்பொழுது புது உலகத்தின் அதிபதி ஆகிக் கொண்டி ருக்கிறோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். என்னை நினைவு செய்தீர்கள் என்றால் உங்களது ஆத்மா புதியதாக தூய்மையாக ஆகி விடும் என்று தந்தை ஆலோசனை கூறி உள்ளார். பிறகு சரீரம் கூட புதியதாகக் கிடைக்கும். ஆத்மா மற்றும் சரீரம் இரண்டுமே சதோபிரதானமாக ஆகிறது. உங்களுக்கு இராஜ்யம் கிடைப்பதே சுகத்திற்காக. இதுவும் நாடகம். அனாதி அமைக்கப் பட்டுள்ளது. புது உலகத்தில் சுகம் மற்றும் சாந்தி இருக்கும். அங்கு எந்த ஒரு புயல் ஆகியவை இருக்காது. எல்லையில்லாத அமைதியில் எல்லோரும் அமைதியாக ஆகி விடுவார்கள். இங்கு இருப்பது அசாந்தி. எனவே எல்லோரும் அசாந்தமாக உள்ளார்கள். சத்யுகத்தில் எல்லோரும் சாந்தமாக இருப்பார்கள். அதிசயமான விஷயங்கள் ஆகும் அல்லவா? இது அனாதி அமைந்த அமைக்கப்பட்ட நாடகம் ஆகும். இவை எல்லையில்லாத விஷயங்கள் ஆகும். அவர்கள் எல்லைக்குட்பட்ட சட்ட வியல், பொறியியல் (பேரிஸ்டரி, இஞ்சினியரிங்) ஆகியவை படிக்கிறார்கள். இப்பொழுது உங்களுடைய புத்தியில் எல்லையில்லாத ஞானம் உள்ளது. ஒரே ஒரு முறை தந்தை வந்து எல்லையில்லாத நாடகத்தின் இரகசியத்தைப் புரிய வைக்கிறார். இதற்கு முன்பு எல்லையில்லாத நாடகம் எப்படி நடக்கிறது என்ற இந்தப் பெயர் கூட கேள்விப்படவில்லை. இப்பொழுது சத்யுகம் திரேதா அவசியம். அது கடந்து விட்டது. அதில் இவர்களுடைய இராஜ்யம் இருந்தது என்பதைப் புரிந்துள்ளீர்கள். திரேதாவில் இராம ராஜ்யம் இருந்தது. பின்னால் மதங்கள் வந்தன. இஸ்லாமிய மதம், புத்த மதம், கிறித்துவ மதம்.. அனைத்து தர்மங்களைப் பற்றியும் முழுமையாகத் தெரியும். இவை அனைத்தும் 2500 வருடங்களுக்குள் வந்துள்ளன. அதில் 1250 வருடம் கலியுகம் ஆகும். எல்லா கணக்கும் உள்ளது அல்லவா? அப்படியின்றி சிருஷ்டியின் ஆயுளே 2500 வருடங்கள் ஆகும் என்பதல்ல. இல்லை.நல்லது. பிறகு வேறு யார் இருந்தார்கள். சிந்தனை செய்யப்படுகிறது. இவர் களுக்கு முன்னால் உண்மையில் தேவி தேவதை.. அவர்களும் மனிதர்களாகத் தான் இருந்தார்கள். ஆனால் தெய்வீக குணங்கள் உடையவர்களாக இருந்தார்கள். சூரிய வம்சம், சந்திர வம்சம் 2500 வருடங்களில். மற்ற பாதியில் அவை எல்லாமே இருந்தன. இதை விட அதிகமான கணக்கு வழக்கோ வேறு யாரும் எடுக்க முடியாது. முழு பங்கு, முக்கால், பாதி மற்றும் கால் என்ற 4 பகுதிகள் உள்ளன. முறைப்படி துண்டு துண்டாக ஆக்குவார்கள் அல்லவா? பாதியிலோ இவை உள்ளன. சத்யுகத்தில் சூரிய வம்ச இராஜ்யம், திரேதாவில் சந்திர வம்ச இராம இராஜ்யம் என்று கூறவும் செய்கிறார்கள் - இதை நீங்கள் நிரூபித்துக் கூறுகிறீர்கள். எனவே யார் முதன் முதலில் சத்யுகத்தில் வருகிறார்களோ அவர்களுக்கு அவசியம் எல்லோரையும் விட நீண்ட ஆயுள் இருக்கும். கல்பமே 5 ஆயிரம் வருடங்களினுடையது ஆகும். அவர்கள் 84 இலட்சம் ஜீவராசிகள் என்று கூறி விடுகிறார்கள். எனவே கல்பத்தின் ஆயுள் கூட இலட்சக்கணக்கான வருடங்கள் என்று கூறி விடுகிறார்கள். யாரும் இதை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். இவ்வளவு பெரிய உலகம் இருக்கவும் முடியாது. எனவே அவை எல்லாமே அஞ்ஞானம் மற்றும் இது ஞானம் ஆகும் என்று தந்தை வந்து புரிய வைக்கிறார். ஞானம் எங்கிருந்து வந்தது என்பது கூட யாருக்குமே தெரியாது. ஞானக் கடலோ ஒரே ஒரு தந்தை ஆவார். அவரே தான் வாய் மூலமாக ஞானம் அளிக்கிறார். கவு முக் (பசுவின் வாய்) என்று கூறுகிறார்கள். இந்த பசு தாய் (கவுமாதா-பிரம்மா) மூலமாக உங்கள் அனைவரையும் தத்து எடுக்கிறார். இந்த கொஞ்ச விஷயங்களைப் புரிய வைப்பதோ மிகவும் சுலபமானது. ஒரு நாள் புரிய வைத்து பின் விட்டு விட்டீர்கள் என்றால் புத்தி பின் வெவ்வேறு விஷயங்களில் ஈடுபட்டு விடும். பள்ளிக் கூடத்தில் ஒரு நாள் கற்பிக்கப்படுகிறதா? இல்லை ரெகுலர்" முறைப்படி தினமும் படிக்க வேண்டி இருக்கும். நாலேஜ் (ஞானம்) ஒரு நாளில் புரிய வைக்கப்படுவது இல்லை. எல்லையில்லாத தந்தை நமக்குக் கற்பிக்கிறார். எனவே அவசியம் எல்லையில்லாத படிப்பாக இருக்கும். எல்லை யில்லாத இராஜ்யம் அளிக்கிறார். பாரதத்தில் எல்லையில்லாத இராஜ்யம் இருந்தது அல்லவா? இந்த இலட்சுமி நாராயணர் எல்லையில்லாத ஆட்சி புரிந்து கொண்டிருந்தார்கள். இவர்கள் இந்த ஆட்சியை எப்படி பெற்றார்கள் என்று கேட்கும் அளவிற்கு இந்த விஷயங்கள் யாருடைய கனவிலும் கூட கிடையாது. அவர்களிடம் ப்யூரிட்டி - தூய்மை அதிகமாக இருந்தது. யோகி ஆவார்கள் அல்லவா? எனவே ஆயுள் கூட நீண்டதாக இருக்கும். நாம் தான் யோகியாக இருந்தோம். பிறகு 84 பிறவிகள் எடுத்து "போகி" கூட அவசியம் ஆக வேண்டி உள்ளது. இவர்கள் கூட அவசியம் புனர் ஜென்மத்தில் வந்திருக்கக் கூடும் என்பதை மனிதர்கள் அறியாமல் உள்ளார்கள். இவர்களுக்கு பகவான் பகவதி என்று கூறப்படுவதில்லை. இவர்களுக்கு முன்னால் 84 பிறவிகள் எடுத்திருக்கக் கூடியவர்கள் யாருமே இல்லை. முதன் முதலில் யார் சத்யுகத்தில் ஆட்சி புரிகிறார்களோ அவர்கள் தான் 84 பிறவிகள் எடுக்கிறார்கள். பிறகு வரிசைக்கிரமமாக கீழே வருகிறார்கள். ஆத்மாக்களாகிய நாமே தான் தேவதை ஆகி விடுவோம். பிறகு நாமே தான் க்ஷத்திரியர். டிகிரி குறைந்து விடும். பூஜிக்கத்தக்க நிலையிலிருந்து பூசாரி என்றும் பாடப்படுகிறது. சதோபிரதான நிலையிலிருந்து பின் தமோபிரதானமாக ஆகிறீர்கள். இது போல புனர் ஜென்மம் எடுத்து எடுத்து கீழே சென்று விடுவீர்கள். இது எவ்வளவு சுலபமானது! ஆனால் மாயை எப்பேர்ப்பட்டது என்றால் எல்லா விஷயங்களையும் மறக்க வைத்து விடுகிறது. இந்த எல்லா (பாயிண்ட்ஸ்) குறிப்புக்களையும் ஒன்று சேர்த்து புத்தகம் ஆகியவை தயாரிக்கலாம். ஆனால் அவையோ ஒன்றும் இருக்காது. இது தற்காலிகமானதாகும். தந்தை ஒன்றும் கீதையை கூறி இருக்கவில்லை. தந்தையோ எப்படி இப்பொழுது புரிய வைத்து கொண்டிருக்கிறாரோ அவ்வாறே புரிய வைத்திருந்தார். இந்த வேத சாஸ்திரங்கள் ஆகியவை எல்லாம் பின்னால் அமைக்கப்படுகின்றன. விநாசம் ஆகி விடும் பொழுது இவை எல்லாம் (ஹோல் லாட்) ஒட்டு மொத்தமாக எரிந்து போய் விடும். சத்யுக திரேதாவில் எந்த ஒரு புத்தகம் ஆகியவை இருக்காது. பிறகு பக்தி மார்க்கத்தில் உருவாகிறது. எவ்வளவு பொருட்கள் செய்கிறார்கள்! இராவணனையும் (பொம்மை) உருவாக்குகிறார்கள். ஆனால் அறிவு (ஞானம்) இல்லாமல் ஒன்றுமே கூற முடியாமல் உள்ளார்கள். இதை ஒவ்வொரு வருடமும் அமைக்கிறார்கள் மற்றும் எரிக்கிறார்கள். எனவே அவசியம் இவர் பெரிய எதிரி ஆவார் என்று தந்தை புரிய வைக்கிறார். ஆனால் எதிரி எப்படி என்பது யாருக்கும் தெரியாது. அவர்கள் சீதையை கடத்திக் கொண்டு போய் விட்டான், எனவே ஒரு வேளை எதிரி போலும் என்று நினைக்கிறார்கள். இராமருடைய சீதையைத் கடத்திக் கொண்டு போகிறார் என்றால் பெரிய கொள்ளைக்காரன் ஆகிறான் அல்லவா? எப்பொழுது கடத்தினார்? திரேதா என்று கூற வேண்டுமா? இல்லை திரேதா கடைசியிலா? இந்த விஷயங்கள் பற்றி சிந்திக்கப்படுகிறது. எப்பொழுது கடத்தி இருக்க வேண்டும்?. எந்த இராமரின் சீதை கடத்தப்பட்டார். இராமர் சீதையினுடையதும் இராஜதானி நடந்ததா என்ன? ஒரே ஒரு இராமர் சீதை தான் வந்து கொண்டு இருந்திருப்பார்களா என்ன? இதனை சாஸ்திரங்களில் ஒரு கதை போல எழுதி விட்டுள்ளார்கள். எந்த சீதை என்று சிந்திக்கப்படுகிறது. இராமர் - சீதையின் 12 நம்பர்கள் இருப்பார்கள் அல்லவா? எனவே எந்த சீதையை கடத்தினார்? அவசியம் பின்னால் இருப்பவராக இருந்திருக்க கூடும். இவர்கள் இராமரின் சீதை கடத்தப்படமாட்டார் என்று கூறுகிறார்களே. இப்பொழுது இராமருடைய இராஜ்யத் தில் முழு காலமும் ஒரே ஒருவருடைய இராஜ்யமோ இருக்காது. அவசியம் பரம்பரை இருந்தி ருக்கும். எனவே எந்த நம்பரின் சீதை கடத்தப்பட்டார்? இவை அனைத்தும் மிகவுமே புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும். குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் குளிர்ந்த தன்மையுடன் எவரொருவருக்கும் இந்த அனைத்து இரகசியங்களையும் புரிய வைக்கலாம்.

பக்தி மார்க்கத்தில் மனிதர்கள் எவ்வளவு அடி வாங்கி வாங்கி துக்கமுடையவர்களாக ஆகி விட்டுள்ளார்கள் என்று தந்தை புரிய வைக்கிறார். மிகவுமே துக்கமடையும் பொழுது பாபா இந்த துக்கத்திலிருந்து விடுவியுங்கள்"" என்று புலம்புகிறார்கள். அடித்துக் கொள்கிறார்கள். இராவணனோ ஏதோ பொருள் கிடையாது அல்லவா? அப்படி இருந்திருந்தால் பிறகு தங்களுடைய இராஜாவை ஒவ்வொரு வருடமும் ஏன் கொல்கிறார்கள்? இராவணனுக்கு அவசியம் மனைவி கூட இருக்கக் கூடும். மண்டோதரி என்று காண்பிக்கிறார்கள். மண்டோதரிக்கு கொடும்பாவி செய்து எரித்ததாக ஒரு பொழுதும் எங்கும் பார்க்கவே இல்லை. எனவே இது இருப்பதே பொய்யான மாயை பொய்யான சரீரம்.... என்று தந்தை வந்து புரிய வைக்கிறார். இப்பொழுது நீங்கள் பொய்யான மனிதரிலிருந்து உண்மையான தேவதையாக ஆவதற்காக அமர்ந்துள்ளீர்கள். வித்தியாசம் உள்ளது அல்லவா? அங்கோ எப்பொழுதும் உண்மையே பேசுவார்கள். அது உண்மையான கண்டம் ஆகும். இது பொய்யான கண்டம் ஆகும். எனவே பொய்யே பேசிக் கொண்டு இருக்கிறார்கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்துக் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீக தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. ஞானக் கடலான தந்தை தினமும் படிப்பிக்கும் எல்லையில்லாத படிப்பின் மீது ஞான மனனம் செய்ய வேண்டும். தாங்கள் படித்ததை மற்றவர்களுக்கும் அவசியம் படிப்பிக்க வேண்டும்.

2. இந்த எல்லையில்லாத நாடகம் எப்படி நடந்து கொண்டிருக்கிறது. இது அனாதி அமைந்த அமைக்கப்பட்ட அதிசயமான நாடகம் ஆகும் என்ற இந்த இரகசியத்தை நல்ல முறையில் புரிந்து கொண்டு பிறகு புரிய வைக்க வேண்டும்.

வரதானம்:
தூய்மையெனும் உயர் தாரணை மூலம் ஒரு தர்மத்தின் சம்ஸ்காரம் உள்ள இராஜ்ய அதிகாரி ஆகுக

உங்களுடைய சுயராஜ்ய தர்மத்தின் தாரணையே தூய்மை. ஒரு தர்மம் என்பது ஒரு தாரணை. கனவிலும் நினைவிலும் தூய்மைக்கு புறம்பான வேறு தர்மம் கிடையாது. எனெனில் தூய்மை உள்ள இடத்தில் தூய்மைக்கு மாறான வீண் விகல்பங்களின் அடையாளமும் இராது. அத்தகைய முழுத் தூய்மையான சம்ஸ்காரத்தை தன்னுள் நிரப்புபவரே சக்தி வாய்ந்த இராஜா ஆவார். இப்போதைய உயர் சம்ஸ்காரங்களின் ஆதாரத்தாலேயே நாளைய உலகம் அமைகிறது. இன்றைய சம்ஸ்காரமே நாளைய உலகின் ஆஸ்தி வரமாகும்.

சுலோகன்:
எவருடைய உண்மையான அன்பு ஒரு பரமாத்மாவிடம் இருக்குமோ அவரே வெற்றி ரத்தினமாகின்றார்.