17-02-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! தந்தை உங்களது
விருந்தாளியாகி வந்திருக்கின்றார் ஆகவே நீங்கள் அவருக்கு
மரியாதை செலுத்த வேண்டும், எவ்வாறு அன்பாக அழைத்தீர்களோ அவ்வாறு
மரியாதையும் செலுத்த வேண்டும், அவமரியாதை ஆகிவிடக் கூடாது.
கேள்வி:
எந்த போதை குழந்தைகளாகிய
உங்களுக்கு சதா இருந்து கொண்டே இருக்க வேண்டும்? ஒருவேளை போதை
அதிகரிக்கவில்லையெனில் என்னவென்று கூறலாம்?
பதில்:
உயர்ந்ததிலும் உயர்ந்த ஆசாமி (நபர்)
இந்த பதீத உலகில் நமது விருந்தாளியாக வந்திருக் கின்றார். இந்த
போதையில் சதா இருக்க வேண்டும். ஆனால் வரிசைக்கிரமமாக இந்த போதை
இருக்கிறது. சிலர் தந்தையினுடையவர்களாக ஆகியும் சந்தேக
புத்தியுடையவர்களாகி கை விட்டு சென்று விடுகின்றனர் எனில்
அவர்களது அதிர்ஷ்டம் அவ்வளவு தான் என்று கூறலாம்.
ஓம் சாந்தி.
ஓம்சாந்தி என்று இரண்டு முறை கூற வேண்டியிருக்கிறது என்பதை
குழந்தைகள் அறிவீர்கள், ஒன்று பாபா, மற்றொன்று தாதா. இருவரும்
சேர்ந்து இருக்கின்றனர் அல்லவா! பகவானின் மகிமையையும் எவ்வளவு
உயர்வாக செய்கின்றனர்! ஆனால் எவ்வளவு எளிய வார்த்தையாக
இருக்கிறது - இறை தந்தை. வெறும் தந்தை என்று மட்டும் கூறுவது
கிடையாது, இறை தந்தை, அவர் உயர்ந்ததிலும் உயர்ந்தவர் ஆவார்.
அவரது மகிமையும் மிகவும் உயர்ந்தது. அவரை பதீத உலகில் தான்
அழைக்கிறோம். என்னை பதீத உலகில் தான் அழைக்கிறீர்கள் என்று அவர்
சுயம் வந்து கூறுகின்றார், ஆனால் அவர் எவ்வாறு பதீத பாவனராக
ஆகின்றார்? எப்பொழுது வருகின்றார்? என்பது யாருக்கும் தெரியாது.
அரைக் கல்பம் சத்யுகம், திரேதாவில் யாருடைய இராஜ்யம் இருந்தது?
எப்படி ஏற்பட்டது? என்பது யாருக்கும் தெரியாது. பதீத பாவனர்
தந்தை அவசியம் வருகின்றார், அவரை சிலர் பதீத பாவனர் என்று
கூறுகின்றனர், சிலர் விடுவிப்பவர் (முக்தி கொடுப்பவர்) என்று
கூறுகின்றனர். சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று
அழைக்கின்றனர். அனைவரையும் விட உயர்ந்ததிலும் உயர்ந்தவர் அல்லவா!
அவரை பதீத உலகிற்கு அழைக்கின்றனர், வந்து பாரதவாசிகளாகிய எங்களை
சிரேஷ்டமானவர்களாக ஆக்குங் கள் என்று வேண்டுகின்றனர். அவரது
பதவி எவ்வளவு உயர்ந்தது! உயர்ந்த அதிகார முடையவர் ஆவார்.
எப்பொழுது இராவண இராஜ்யம் ஏற்படுகிறதோ அப்பொழுது அவரை
அழைக்கின்றனர். இல்லையெனில் இந்த இராவண இராஜ்யத்திலிருந்து யார்
விடுவிப்பது? இது போன்ற அனைத்து விசயங்களை குழந்தைகளாகிய
நீங்கள் கேட்கின்ற பொழுது போதை அதிகரித்துக் கொண்டே இருக்க
வேண்டும். ஆனால் அந்த அளவிற்கு போதை அதிகரிப்பது கிடையாது.
சாராயத்தின் போதை அனைவருக்கும் அதிகரித்து விடுகிறது, இது
அதிகரிப்பது கிடையாது. இதில் தாரணைக் கான விசயம் இருக்கிறது,
அதிர்ஷ்டத்திற்கான விசயமாகும். ஆக தந்தை மிகப் பெரிய ஆசாமியாக
இருக்கின்றார். உங்களிலும் சிலருக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.
ஒருவேளை அனைவருக்கும் நம்பிக்கை இருக்கிறது எனில் சந்தேகப்பட்டு
ஏன் ஓடி விடுகின்றனர்? தந்தையை மறந்து விடுகின்றனர்.
தந்தையினுடையவர்களாக ஆன பின்பு பிறகு ஒருபொழுதும் சந்தேக
புத்தியுடைய வர்களாக ஆக முடியாது. ஆனால் இந்த தந்தை அதிசயமானவர்.
ஆச்சரியமாக பாபாவை அறிகின்றனர், பாபாவினுடையவர்களாக ஆகின்றனர்,
ஞானம் கேட்கின்றனர், கூறுகின்றனர், இருப்பினும் பிறகு ஆஹா !
மாயை சந்தேக புத்தியுடையவர்களாக ஆக்கிவிடுகிறது தந்தை புரிய
வைக்கின்றார் - இந்த பக்தி மார்க்கத்தின் சாஸ்திரங்களில் எந்த
சாரமும் கிடையாது. என்னை யாரும் அறியவில்லை என்று தந்தை
கூறுகின்றார். குழந்தைகளாகிய உங்களிலும் சிலர் தான் நிலைத்து
நிற்கின்றனர். நினைவு நிலையாக நிலைத்திருப்பது கிடையாது என்பதை
நீங்களும் உணர்கிறீர்கள். நான் ஆத்மா, பிந்துவாக இருக்கிறேன்,
பாபாவும் பிந்துவாக இருக்கின்றார், அவர் நமது தந்தை ஆவார்,
அவருக்கென்று தனியான சரீரம் கிடையாது. நான் இந்த சரீரத்தை ஆதார
மாக எடுக்கிறேன் என்று கூறுகின்றார். எனது பெயர் சிவன். எனது
ஆத்மாவிற்கு ஒருபொழுதும் பெயர் மாறுவது கிடையாது. உங்களது
சரீரத்தின் பெயர் மாறுகிறது. சரீரத்திற்குத் தான் பெயர்
வைக்கின்றனர். திருமணம் நடைபெறுகிறது எனில் பெயர் மாறி
விடுகிறது. பிறகு அந்த பெயரை உறுதியாக்கிக் கொள்கின்றனர். ஆக
இப்பொழுது தந்தை கூறுகின்றார் - நான் ஆத்மா என்பதை நீங்கள்
உறுதியாக்கிக் கொள்ளுங்கள். எப்பொழு தெல்லாம் அதர்மம் மற்றும்
நிந்தனை ஏற்படு கிறதோ அப்பொழுது நான் வருவேன் என்று தந்தை தான்
அறிமுகம் கொடுத்திருக்கின்றார். எந்த வார்த்தைகளையும் (சுலோகம்)
உச்சரிக்க வேண்டியதில்லை. பிடித்துக் கொள்ளக் கூடாது. என்னை கல்,
முள்ளுக்குள் இருப்பதாகக் கூறி எவ்வளவு நிந்தனை செய்து
விட்டீர்கள் என்று தந்தை தானே கூறுகின்றார். இதுவும் புதிய
விசயம் அல்ல. கல்ப கல்பத்திற்கும் இவ்வாறு பதீதமாக ஆகி நிந்தனை
செய்கிறீர்கள், அதனால் தான் நான் வருகிறேன். கல்ப
கல்பத்திற்கும் எனது பாகம் இருக்கிறது. இதில் எந்த மாற்றமும்
செய்ய முடியாது. நாடகத்தில் பதிவாகியிருக்கிறது அல்லவா!
பாரதத்தில் தான் வருகிறாரா என்ன? என்று உங்களிடம் சிலர்
கேட்கின்றனர். பாரதம் மட்டுமே சொர்க்கம் ஆகுமா என்ன? ஆம், இது
அழிவற்ற, அநாதி பாகமாக ஆகிவிட்டது அல்லவா! தந்தை எவ்வளவு
உயர்ந்ததிலும் உயர்ந்தவராக இருக்கின்றார்! பதீதமானவர்களை
பாவனமாக்கும் தந்தை கூறுகின்றார் - என்னை இந்த பதீத உலகில் தான்
அழைக்கிறீர்கள். நான் சதா பாவனமாக இருக்கிறேன். என்னை பாவன
உலகில் அழைக்க வேண்டும் அல்லவா! ஆனால் கிடையாது, பாவன உலகில்
அழைக்க வேண்டிய அவசியம் இல்லை. வந்து பாவனம் ஆக்குங்கள் என்று
பதீத உலகில் தான் அழைக்கிறீர்கள். நான் எவ்வளவு உயர்ந்த
விருந்தாளியாக இருக்கிறேன்! அரைக் கல்பமாக என்னை நினைவு செய்து
வந்தீர்கள். இங்கு எந்த பெரிய மனிதரையும் அழைக்கிறீர்கள்
என்றால் ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் அழைப்பீர்கள். இன்னார்
இந்த ஆண்டு வர முடியவில்லையெனில் அடுத்த வருடம் வருவார். இவரை
அரைக் கல்பமாக நினைவு செய்து வந்தீர்கள். இவர் வரக் கூடிய
பாகமும் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இது யாருக்கும் தெரியாது.
மிகவும் உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை ஆவார். மனிதர்கள் தந்தையை
ஒருபுறம் அன்பாக அழைக்கின்றனர், மற்றொரு புறம் மகிமை செய்வதில்
களங்கம் ஏற்படுத்தி விட்டனர். உண்மை யில் இவர் உயர்ந்ததிலும்
உயர்ந்த மகிமைக்குரிய விருந்தாளி ஆவார். அவரது மகிமையில்
களங்கம் ஏற்படுத்தி விட்டீர்கள். அவர் கல், முள் அனைத்திலும்
இருப்பதாகக் கூறி விட்டீர்கள். எவ்வளவு உயர்ந்த அதிகாரமுடையவர்!
அழைப்பதும் மிக அன்பாக அழைக்கிறீர்கள், ஆனால் முற்றிலும்
புத்தியற்றவர்களாக இருக்கிறீர்கள். நான் வந்து தான் உங்களுக்கு
எனது அறிமுகம் கொடுக்கிறேன் - நான் உங்களது தந்தையாக
இருக்கிறேன். என்னை இறை தந்தை (பரம்பிதா) என்று கூறுகிறீர்கள்.
எப்பொழுது அனைவரும் இராவணனின் கைதிகளாக ஆகிவிடுகிறீர்களோ
அப்பொழுது தான் தந்தை வர வேண்டியிருக்கிறது. ஏனெனில் அனைவரும்
பக்தைகளாக அதாவது நாயகிகளாக, சீதைகளாக இருக்கிறீர்கள். தந்தை
நாயகனாக, இராமராக இருக்கின்றார். ஒரு சீதைக்கான விசயம் கிடையாது.
அனைத்து சீதைகளையும் இராவணனின் சிறையிலிருந்து விடுவிக்
கின்றார். இது எல்லையற்ற விசயமாகும். இது பழைய பதீத உலகமாகும்.
இது பழையதாக ஆவது, பிறகு புதியதாக ஆவது மிகச் சரியாகவே
நடைபெறுகிறது. இந்த சரீரம் சிலருக்கு மிகவும் விரைவாக பழையதாக
ஆகிவிடுகிறது, சிலருக்கு அதிக காலம் ஏற்படுகிறது. இது
நாடகத்தில் மிகச் சரியாக பதிவாகியிருக்கிறது. முழு 5 ஆயிரம்
ஆண்டிற்குப் பிறகு மீண்டும் நான் வர வேண்டியிருக்கிறது. நான்
வந்து தான் எனது அறிமுகம் கொடுக்கிறேன் மற்றும் சிருஷ்டி
சக்கரத்தின் இரகசியத்தைப் புரிய வைக்கிறேன். யாரிடத்திலும் எனது
அறிமுகம் கிடையாது, பிரம்மா, விஷ்ணு, சங்கரின், இலட்சுமி
நாராயணனின், சீதை இராமரின் அறிமுகமும் கிடையாது. நாடகத்தில்
உயர்ந்ததிலும் உயர்ந்த நடிகர்கள் இவர்கள் தான். மனிதர்களைப்
பற்றிய விசயம் தான் இது. யாரும் 8-10 கைகள் உடையவர்கள் கிடையாது.
விஷ்ணுவிற்கு ஏன் 4 கைகள் காண்பிக் கின்றனர்? இராவணனுக்கு ஏன்
10 தலைகள் உள்ளன? என்பது யாருக்கும் தெரியாது. தந்தை வந்து தான்
முழு உலகின் முதல், இடை, கடையின் ஞானம் கொடுக்கின்றார். நான்
உயர்ந்ததிலும் உயர்ந்த விருந்தாளியாக, ஆனால் குப்தமாக
இருக்கிறேன் என்று கூறுகின்றார். இதையும் நீங்கள் மட்டுமே
அறிவீர்கள். ஆனால் அறிந்திருந்தாலும் கூட மறந்து விடுகிறீர்கள்.
அவர் மீது எவ்வளவு மரியாதை வைத்திருக்க வேண்டும்! அவரை மட்டுமே
நினைவு செய்ய வேண்டும். ஆத்மாவும் நிராகாராக இருக்கிறது,
பரமாத்மாவும் நிராகாராக இருக்கின்றார். இதில் ஃபோட்டோவிற்கான
விசயம் கிடையாது. நீங்கள் ஆத்மா என்று நிச்சயம் செய்து தந்தையை
நினைவு செய்ய வேண்டும், தேக அபிமானத்தை விட வேண்டும். நீங்கள்
எப்பொழுது அழிவற்ற பொருளைத் தான் பார்க்க வேண்டும். அழியக்
கூடிய தேகத்தை நீங்கள் ஏன் பார்க்கிறீர்கள்? ஆத்ம அபிமானியாக
ஆகுங்கள், இதில் தான் உழைப்பு இருக்கிறது. எந்த அளவு நினைவில்
இருப்பீர்களோ அந்த அளவிற்கு கர்மாதீத நிலையடைந்து உயர்ந்த பதவி
அடைவீர்கள். தந்தை மிக எளிய யோகா அதாவது நினைவு கற்றுக்
கொடுக்கின்றார். பல வகையான யோகா உள்ளன. நினைவு என்ற வார்த்தை
தான் யதார்த்தமானது. பரமாத்ம தந்தையை நினைவு செய்வதில் தான்
உழைப்பு இருக்கிறது. நான் இவ்வளவு நேரம் நினைவில் இருந்தேன்
என்று மிகச் சிலர் மட்டுமே உண்மையைக் கூறுகின்றனர். நினைவு
செய்யவேயில்லையெனில் கூறுவதற்கு வெட்கம் ஏற்படுகிறது. முழு
நாளும் ஒரு மணி நேரம் நினைவில் இருந்தேன் என்று எழுதும் பொழுது
வெட்கம் ஏற்பட வேண்டும் அல்லவா! எந்த தந்தையை இரவு பகல் நினைவு
செய்ய வேண்டுமோ அவரை நான் ஒரு மணி நேரம் மட்டுமே நினைவு
செய்கிறேன். இதில் தான் குப்த (மறைமுக) உழைப்பு இருக்கிறது.
தந்தையை அழைக்கிறீர்கள் எனில் தூரத்திலிருந்து வருபவர்
விருந்தாளியாக ஆகிவிடுகிறார் அல்லவா! நான் புது உலகின்
விருந்தாளியாக ஆவது கிடையாது என்று தந்தை கூறுகின்றார். வருவதே
பழைய உலகில். வந்து புது உலகை ஸ்தாபனை செய்கிறேன். இது பழைய
உலகமாகும், இதையும் யாரும் யதார்த்தமாக புரிந்து கொள்ளவில்லை.
புது உலகின் ஆயுளையும் அறியவில்லை. தந்தை கூறுகின்றார் - இந்த
ஞானத்தை நான் வந்து தான் கொடுக்கிறேன், பிறகு நாடகப்படி இந்த
ஞானம் மறைந்து விடுகிறது. மீண்டும் கல்பத்திற்குப் பிறகு இந்த
பாகம் திரும்பவும் நடைபெறும். என்னை அழைக்கிறீர்கள், ஆண்டு
தோறும் சிவஜெயந்தி கொண்டாடு கிறீர்கள். யார் இருந்து விட்டு
சென்றிருக்கிறார்களோ அவர்களுக்குத் தான் ஆண்டு தோறும்
கொண்டாடுவர். சிவபாபாவிற்கும் 12 மாதங்களுக்குப் பிறகு ஜெயந்தி
கொண்டாடுகிறீர்கள். ஆனால் எப்பொழுதிலிருந்து கொண்டாடி வருகிறோம்?
என்பது யாருக்கும் தெரியாது. இலட்சம் ஆண்டுகள் என்று கூறி
விடுகின்றனர். கலியுகத்தின் ஆயுள் இலட்சம் ஆண்டுகள் என்று எழுதி
விட்டனர். தந்தை கூறுகின்றார் - இது 5 ஆயிரம் ஆண்டிற்கான
விசயமாகும். உண்மையில் இந்த தேவதை களின் இராஜ்யம் பாரதத்தில்
இருந்தது அல்லவா! ஆக தந்தை கூறுகின்றார் - நான் பாரதத்தின்
மிகப் பெரிய விருந்தாளி. என்னை அரைக் கல்பமாக அதிகம் அழைத்துக்
கொண்டே வந்தீர்கள். எப்பொழுது அதிகம் துக்கமானவர்களாக
ஆகிறீர்களோ, அப்பொழுது பதீத பாவனனே வாருங்கள் என்று கூறினீர்கள்.
நான் பதீத உலகில் வந்திருக்கிறேன். எனக்கு இரதம் வேண்டும்
அல்லவா! ஆத்மா அழிவற்ற மூர்த்தியாகும், அதன் சிம்மாசனம்
இதுவாகும். தந்தையும் அழிவற்ற மூர்த்தி ஆவார். இந்த
சிம்மாசனத்தில் வந்து அமர்கின்றார். இது மிகுந்த இரமணீகரமான (மனதிற்குப்
பிடித்த) விசயமாகும். வேறு யாராவது கேட்டால் குழப்பமடைந்து
விடுவர். இப்பொழுது தந்தை கூறுகின்றார் - குழந்தைகளே! எனது
வழிப்படி நடந்து செல்லுங்கள். சிவபாபா வழி கூறுகின்றார்,
சிவபாபா முரளி நடத்துகின்றார் என்று நினையுங்கள். நானும் இவரது
முரளி கேட்டு வாசிப்பேன். சொல்லக் கூடியவர் அவர் அல்லவா! இவர்
நம்பர் ஒன் பூஜ்ய நிலையிலிருந்து பிறகு நம்பர் ஒன் பூஜாரியாக
ஆகின்றார். இப்பொழுது இவர் முயற்சியாளராக இருக்கின்றார். நமக்கு
சிவபாபாவின் ஸ்ரீமத் கிடைத்திருக்கிறது என்பதை குழந்தைகள்
எப்பொழுதும் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவேளை ஏதாவது தலைகீழான
விசயம் நடந்தாலும் அதை இவர் சரிசெய்து விடுவார். இந்த உறுதியான
நம்பிக்கை இருந்தால் சிவபாபா பொறுப்பாளி ஆகிவிடுவார். இது
நாடகத்தில் பதிவாகியிருக்கிறது. தடைகள் வந்தே ஆக வேண்டும்,
மிகப் பெரிய பெரிய தடைகள் ஏற்படு கின்றன. தனது குழந்தைகளுக்கும்
தடைகள் ஏற்படுகின்றன. ஆக சிவபாபா தான் புரிய வைக் கின்றார்
என்று எப்பொழுதும் நினையுங்கள், அப்பொழுது தான் அவர் நினைவு
இருக்கும். பிரம்மா பாபா தான் கட்டளை யிடுகிறார் என்று சில
குழந்தைகள் நினைக்கின்றனர். ஆனால் கிடையாது. சிவபாபா தான்
பொறுப்பாளியாவார். ஆனால் தேக அபிமானம் இருக்கும் பொழுது
அடிக்கடி இவரைத் தான் பார்த்துக் கொண்டே இருக்கின்றனர். சிவபாபா
எவ்வளவு உயர்ந்த விருந்தாளியாக இருக்கின்றார்! எனினும்
இரயில்வேயில் (வாழ்க்கைப் பயண ஓட்டத்தில்) உள்ளவர்களும்
அறியாமல் இருக்கின்றனர். நிராகாரமானவரை எப்படி அறிந்து கொள்ள
அல்லது புரிந்து கொள்ள முடியும்? அவர் நோயாளியாக ஆக முடியாது.
ஆக நோய்க்கான காரணம் என்னவென்று அவர்கள் கூறுகின்றனர். ஆனால்
இவரிடத்தில் உள்ளவர் யார்? என்பது அவர்களுக்குத் தெரியாது.
குழந்தை களாகிய நீங்களும் வரிசைக்கிரமமாக அறிவீர்கள். அவர்
அனைத்து ஆத்மாக்களுக்குத் தந்தை யாவார், பிறகு இவர் பிரஜாபிதா,
மனிதர்களின் தந்தையாவார். ஆக இந்த இருவரும் (பாப்தாதா) எவ்வளவு
பெரிய விருந்தாளிகளாக ஆகிவிடுகின்றனர்!
தந்தை கூறுகின்றார் - எதுவெல்லாம் நடைபெறுகிறதோ நாடகத்தில்
பதிவாகியிருக்கிறது. நானும் நாடகத்தின் பந்தனத்தில்
கட்டுப்பட்டு இருக்கிறேன். நாடகத்தில் பதிவு இல்லாமல் எதுவும்
செய்ய முடியாது. மாயையும் மிக மோசமானது. இராமர் மற்றும் இராவணன்
இருவரின் பாகமும் இருக்கிறது. நாடகப்படி இராவணன் ஒருவேளை
சைத்தன்யமாக (ஞான உணர்வு) இருந்தால் நானும் நாடகப்படி தான்
வருகிறேன் என்று கூறும். இது துக்கம் மற்றும் சுகத்தின்
விளையாட்டு ஆகும். சுகம் புது உலகில் இருக்கிறது, துக்கம் பழைய
உலகில் இருக்கிறது. புது உலகில் குறைந்த மனிதர்கள், பழைய உலகில்
எவ்வளவு மனிதர்கள் இருக்கின்றனர்! பதீத பாவனர் தந்தையைத் தான்
அழைக்கின்றனர் - வந்து பாவன உலகை உருவாக்குங்கள். ஏனெனில் பாவன
உலகில் அதிக சுகம் இருந்தது. அதனால் தான் கல்ப கல்பத்திற்கும்
அழைக்கின்றனர். தந்தை அனைவருக்கும் சுகம் கொடுத்து விட்டு
செல்கிறார். இப்பொழுது அவரது பாகம் மீண்டும் நடைபெறுகிறது.
உலகம் ஒருபொழுதும் அழிவது கிடையாது. அழிவது என்பது நடக்காத
காரியமாகும். சமுத்திரமும் உலகில் இருக்கிறது அல்லவா! இது
மூன்றாவது மாடி அல்லவா! எங்கும் தண்ணீர் மயமாகவே ஆகிவிடும்
என்று கூறுகின்றனர், இருப்பினும் பூமி இருக்கும் அல்லவா!
தண்ணீரும் இருக்கும். பூமி என்ற மாடி ஒருபொழுதும் விநாசம்
ஆகிவிடாது. இந்த மாடியில் தான் தண்ணீரும் இருக்கும். இரண்டாம்
மற்றும் முதல் மாடி அதாவது சூட்சுமவதனம் மற்றும் மூலவதனத்தில்
தண்ணீர் இருக்காது. இந்த எல்லையற்ற சிருஷ்டியில் மூன்று மாடிகள்
உள்ளன. இதனை குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு யாரும்
அறியவில்லை. இந்த குஷியான விசயத்தை அனைவருக்கும் குஷியாகக் கூற
வேண்டும். யார் முழுமையான தேர்ச்சி பெறுகிறார்களோ அவர்களுக்குத்
தான் அதீந்திரிய சுகம் என்று பாடப்பட்டிருக்கிறது. யார் இரவு
பகல் சேவையில் தயாராக இருக்கிறார் களோ, சேவை செய்து கொண்டே
இருக்கிறார்களோ அவர்களுக்கு அதிக குஷி இருக்கும். சில
நேரங்களில் அப்படிப்பட்ட நாட்களும் வந்து விடுகிறது அதாவது
மனிதர்கள் இரவும் முழித்துக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் ஆத்மா
களைப்படைந்து விடும் பொழுது தூங்க வேண்டியிருக் கிறது. ஆத்மா
தூங்கும் பொழுது சரீரமும் தூங்கி விடுகிறது. ஆத்மா
தூங்கவில்லையெனில் சரீரமும் தூங்காது. ஆத்மா தான் களைப்படைகிறது.
இன்று நான் களைப்பாக இருக்கிறேன் என்று கூறியது யார்? ஆத்மா.
குழந்தைகளாகிய நீங்கள் ஆத்மா அபிமானிகளாக இருக்க வேண்டும்,
இதில் தான் உழைப்பு இருக்கிறது. தந்தையை நினைவு செய்வது
கிடையாது, ஆத்மா அபிமானியாக இருப்பது கிடையாது எனில் தேக
சம்மந்தங்களின் நினைவு வந்து விடுகிறது. தந்தை கூறுகின்றார் -
நீங்கள் தனியாக வந்தீர்கள், பிறகு தனியாகச் (சரீரமின்றி) செல்ல
வேண்டும். இந்த தேகத்தின் சம்மந்தங்களை மறந்து விடுங்கள். இந்த
சரீரத்தில் இருந்து கொண்டே என்னை நினைவு செய்தால் சதோ பிரதானம்
ஆகிவிடுவீர்கள். தந்தை எவ்வளவு உயர்ந்த அதிகாரத்துடன் இருக்
கின்றார். குழந்தைகளைத் தவிர வேறு யாரும் அறியவில்லை. தந்தை
கூறுகின்றார் - நான் ஏழைப் பங்காளன். அனைவரும் சாதாரணமாக
இருக்கின்றார். பதீத பாவனர் தந்தை வந்திருக்கின்றார் என்பதை
அறிந்து கொண்டால் எவ்வளவு கூட்டம் வந்து விடும்! பெரிய பெரிய
மனிதர்கள் வருகின்றனர் எனில் எவ்வளவு கூட்டம் ஏற்பட்டு
விடுகிறது! ஆக நாடகத்தில் இவரது பாகமே குப்தமாக இருப்பதாகும்.
நாளடைவில் சிறிது சிறிதாக பிரபாவம் ஏற்படும் மற்றும் விநாசம்
ஆகிவிடும். அனைவரும் சந்திக்க முடியாது. நினைவு செய்கிறார்கள்
அல்லவா! அப்படிப் பட்டவர்களுக்கு தந்தையின் அறிமுகம் கிடைத்து
விடும். மற்றவர்களால் வந்து சேர முடியாது. எவ்வாறு பந்தனமுள்ள
குழந்தைகள் சந்திப்பது கிடையாது, எவ்வளவு தொந்தரவுகளை சகித்துக்
கொள்கின்றனர்! விகாரங்களை விட முடிவதில்லை. உலகம் எப்படி
இயங்கும்? என்று கேட்கின்றனர். அடே, உலகின் சுமை தந்தையின் மீது
இருக்கிறதா? அல்லது உங்கள் மீதா? தந்தையை அறிந்து கொண்டால்
பிறகு இப்படிப்பட்ட கேள்விகள் கேட்கமாட்டீர்கள். முதலில்
தந்தையை அறிந்து கொள்ளுங்கள், பிறகு நீங்கள் அனைத்தையும்
அறிந்து கொள்வீர்கள். புரிய வைப்பதற்கும் யுக்தி தேவை. நல்லது.
இனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாய் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள்
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) சதா உயர்ந்த அதிகாரமுடைய தந்தையின் நினைவில் இருக்க வேண்டும்.
அழியும் தேகத்தைப் பார்க்காமல் ஆத்ம அபிமானியாக ஆவதற்கான
முயற்சி செய்ய வேண்டும். நினைவிற்கான உண்மையிலும் உண்மையான
சார்ட் வைக்க வேண்டும்.
2) இரவு பகல் சேவையில் ஆர்வமாக இருந்து அளவற்ற குஷியுடன்
இருக்க வேண்டும். மூன்று உலகங்களின் இரகசியங்களை நீங்கள்
குஷியாக புரிய வைக்க வேண்டும். சிவபாபா என்ன ஸ்ரீமத்
கொடுக்கின்றாரோ அதில் உறுதியான நம்பிக்கை வைத்து நடக்க வேண்டும்.
எந்த தடைகள் வந்தாலும் பயப்படக் கூடாது. பொறுப்பாளி சிவபாபா,
ஆகையால் சந்தேகம் வரக் கூடாது.
வரதானம்:
மிக உயர்ந்த நேரத்தின் ஆதாரத்தால் அனைத்து பிராப்திகளின்
அதிகாரத்தை அனுபவம் செய்யும் பத்மாபதம் பாக்கியசாலி ஆகுக
உயர்ந்த நேரத்தில் பிறக்கும் பாக்கிய சாலி குழந்தைகள் முந்தைய
கல்பத்தின் டச்சிங் (தூண்டுதல்) ஆதாரத்தால் பிறந்த அக்கனவே
நம்மவர் எனும் அனுபவம் செய்வார். அவர்கள் பிறந்த உடனேயே அனைத்து
சொத்திற்கும் அதிகாரியாகின்றார்கள். ஒரு விதையினுள் முழு
மரத்தின் சாரமும் அடங்கியிருப்பதைப் போன்று நம்பர் ஒன்
நேரத்தில் பிறந்த ஆத்மாக்களும் அனைத்து சொரூபங்களின்
பிராப்திகளெனும் பொக்கிசங்களை வந்தவுடனேயே அனுபவம் செய்வார்கள்.
அவர்கள் சுகம் அனுபவமாகிறது, சாந்தியில்லை, சாந்தி அனுபவம்
ஆகிறது சுகமில்லை, சக்தி யில்லையென ஒருபோதும் சொல்ல மாட்டார்கள்.
அனைத்து அனுபவங்களிலும் முழுமை பெற்றிருப்பார்கள்.
சுலோகன்:
தனது மலர் முகமெனும் நிழலால் குளிர்ந்த தன்மையை அனுபவம்
செய்விப்பவராக அப்பழுக்கற்றவராக (நிர்மல்) பணிவுத்தன்மை (நிர்மான்)
உடையவராக இருப்பார்கள்.
அவ்யக்த சமிக்ஞை - ஏகாந்தப்பிரியர் ஆகுங்கள், ஒற்றுமை மற்றும்
ஏகாக்ரதாவை தனதாக்குங்கள்
அனைத்து சம்பந்தமும், அனைத்து ரசனைகளையம் ஒருவரிடமிருந்து
பெறுபவரே ஏகாந்தபிரியர் ஆக முடியும். ஒருவரிடமிருந்தே அனைத்து
ரசனைகளும் கிடைக்கும்பொழுது அனேக இடங் களுக்கு செல்ல வேண்டிய
அவசியம் எங்கே உள்ளது? ஒரு சொல்லை மட்டும் நினைவில் வைத்தால்
போதும் அதனுள்ளே அனைத்து ஞானமும் அடங்கும், நினைவும் வந்து
விடும். சம்பந்தமும் வந்து விடும், நல்ல மனோ நிலையும் அமைந்து
விடும். அதோடு மட்டுமின்றி கிடைக்கும் அனைத்து பிராப்திகளும்
அந்த ஒரு சொல்லில் தெளிவாகும். ஒருவரின் நினைவு, மனோ நிலை (ஏக்ரஸ்)
ஒரே ரசனை, ஞானமும் ஒருவர் நினைவிற்காகவே கிடைக்கிறது.
கிடைக்கும் பிராப்திகளும் ஒரே சீரான (ஏக்ரஸ்) நிலையில் உள்ளது.
.
|
|
|