17-03-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! படிப்பு தான்
வருமானமாகும். படிப்பு தான் வருமானத்திற்கு ஆதாரமாகும். இந்தப்
படிப்பின் மூலம் தான் நீங்கள் 21 பிறவிகளுக்கான பொக்கிஷங்களை
சேமிக்க வேண்டும்.
கேள்வி:
எந்தக் குழந்தைகளின் மீது
குருதிசை இருக்கிறதோ அவர்களிடம் என்ன அடையாளம் தென்படும்?
பதில்:
அவர்களது முழுமையிலும் முழுமையான
கவனம் ஸ்ரீமத் மீது இருக்கும். படிப்பு நன்றாக படிப்பார்கள்.
ஒருபொழுதும் தோல்வியடையமாட்டார்கள். ஸ்ரீமத்தை மீறுபவர்கள் தான்
படிப்பில் தோல்வியடைவர். பிறகு அவர்கள் மீது இராகுதிசை அமர்ந்து
விடுகிறது. இப்பொழுது குழந்தை களாகிய உங்கள் மீது
விருட்சபதியாகிய தந்தையின் மூலம் குருதிசை அமர்ந்திருக்கிறது.
பாடல்:
இந்த பாவமான உலகிலிருந்து
........
ஓம் சாந்தி.
இது பாவ ஆத்மாக்களின் கூக்குரல் ஆகும். நீங்கள் கூக்குரலிட
வேண்டியதில்லை. ஏனெனில் நீங்கள் பாவனமாகிக் கொண்டிருக்கிறீர்கள்.
இது தாரணை செய்ய வேண்டிய விசய மாகும். இது மிகப் பெரிய
பொக்கிஷமாகும். எவ்வாறு லௌகீக படிப்பும் பொக்கிஷம் அல்லவா!
படிப்பின் மூலம் சரீர நிர்வாகம் நடைபெறு கிறது. பகவான்
கற்பிக்கின்றார் என்பதை குழந்தைகள் அறிவீர்கள். இது மிகவும்
உயர்ந்த வருமானமாகும். ஏனெனில் இலட்சியம் குறிக்கோள் எதிரிலேயே
இருக்கிறது. உண்மையிலும் உண்மையான சத்சங்கம் இது ஒன்று தான்.
மற்ற அனைத்தும் பொய்யான சங்கங்களாகும். முழு கல்பத்திலும்
சத்சங்கம் ஒரே ஒரு முறை தான் ஏற்படுகிறது என்பதை நீங்கள்
அறிவீர்கள். அப்பொழுது தான் பதீத பாவனனே வாருங்கள் என்று
அழைக்கிறீர்கள். இப்பொழுது அவர்கள் அழைத்துக் கொண்டே
இருக்கின்றனர். இங்கு உங்கள் எதிரில் அமர்ந்திருக்கின்றார்.
நாம் புது உலகிற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் என்பதை
குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அங்கு துக்கத்தின் பெயர்,
அடையாளமே இருக்காது. சொர்க்கத்தில் உங்களுக்கு சுகம்
கிடைக்கிறது. நரகத்தில் சிறிதும் சுகம் கிடையாது. இது
விஷக்கடலாகும், கலியுகமல்லவா! அனைவரும் துக்கத்திலும் துக்கமாக
இருக்கின்றனர். விகாரத்தின் மூலம் தான் பிறப்பு எடுக்கின்றனர்,
அதனால் தான் ஆத்மா - பாபா, நாம் பதீதமாக ஆகிவிட்டோம் என்று
அழைக்கிறது. பாவனம் ஆவதற்காக கங்கையில் குளிக்கச் செல்கின்றனர்.
நல்லது, குளித்து விட்டீர்கள் எனில் பாவனம் ஆகிவிட வேண்டும்
அல்லவா! பிறகு ஏன் அடிக்கடி கீழே விழுகிறீர்கள்?
வீழ்ச்சியடைந்து, ஏணியில் கீழே இறங்கி இறங்கி பாவ ஆத்மா ஆகிவிடு
கிறீர்கள். 84 பிறவி இரகசியத்தை குழந்தைகளாகிய உங்களுக்குத்
தான் தந்தை வந்து புரிய வைக் கின்றார். மற்ற தர்மத்தினர்கள் 84
பிறவிகள் எடுப்பது கிடையாது. உங்களிடம் இந்த 84 பிறவியின்
சித்திரம் (ஏணி) மிக நல்ல முறையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
கீதையில் கல்ப விருட்சத்தின் சித்திரமும் இருக்கிறது. ஆனால்
பகவான் கீதையை எப்பொழுது கூறினார்? வந்து என்ன செய்தார்? என்று
எதுவும் அறியவில்லை. மற்ற தர்மத்தினர் அவரவர்களது சாஸ்திரங்களை
அறிந்திருக் கின்றனர். பாரதவாசிகள் முற்றிலும் அறியவில்லை. நான்
சங்கமயுகத்தில் தான் சொர்க்க ஸ்தாபனைக்காக வருகிறேன்.
நாடகத்தில் மாற்றம் ஏற்படவே முடியாது. எதுவெல்லாம் நாடகத்தில்
பதிவாகியிருக்கிறதோ அது அப்படியே நடந்தே ஆக வேண்டும். நடந்து
முடிந்த பின்பு மாறி விடும் என்பது கிடையாது. குழந்தைகளாகிய
உங்களது புத்தியில் நாடகத்தின் சக்கரம் முழுமையாக
பதிவாகியுள்ளது. இந்த 84 பிறவிச் சக்கரத்திலிருந்து நீங்கள்
ஒருபொழுதும் விடுபட முடியாது, அதாவது இந்த உலகம் ஒருபொழுதும்
அழிந்து விடாது. உலக சரித்திர பூகோளம் திரும்பத் திரும்ப
நடைபெற்றுக் கொண்டே இருக்கும். இந்த 84 பிறவிச் சக்கரம் (ஏணி)
மிகவும் அவசியமானது. திரிமூர்த்தி மற்றும் சக்கரம் முக்கிய
சித்திரங்களாகும். சக்கரத்தில் தெளிவாகக்
காண்பிக்கப்பட்டிருக்கிறது - ஒவ்வொரு யுகமும் 1250 ஆண்டுகளாகும்.
இது கண்ணில்லாத குருடர் களுக்கு ஒரு கண்ணாடியாக இருக்கிறது. 84
பிறவிகளுக்கான கண்ணாடியாகும். தந்தை குழந்தை களாகிய உங்களது
திசைகளை பற்றி வர்ணிக்கின்றார். தந்தை உங்களுக்கு எல்லையற்ற
திசை களைப் பற்றிக் கூறுகின்றார். இப்பொழுது குழந்தைகளாகிய
உங்களிடம் அழிவற்ற குருதிசை அமர்ந்திருக்கிறது. பிறகு படிப்பும்
ஆதாரமாக இருக்கிறது. சிலர் மீது குருதிசை, சிலரிடத்தில்
சுக்ரதிசை, சிலரிடத்தில் இராகுதிசை அமர்ந்திருக்கிறது. தோல்வி
யடைந்து விட்டால் இராகுதிசை என்று தான் கூறுவர். இங்கும்
அவ்வாறு தான் இருக்கிறது. ஸ்ரீமத் படி நடக்கவில்லையெனில்
அழிவற்ற ராகுதிசை அமர்ந்து விடுகிறது. அது அழிவற்ற குருதிசை,
இது இராகுதிசையாக ஆகிவிடுகிறது. குழந்தைகள் படிப்பின் மீது முழு
கவனம் கொடுக்க வேண்டும். இதில் எந்த சாக்குபோக்கும் கூறக்
கூடாது. சென்டர் தூரமாக இருக்கிறது, இப்படி இருக்கிறது .......
நடந்து செல்ல 6 மணி நேரம் ஆனாலும் சென்று விட வேண்டும்.
மனிதர்கள் யாத்திரைகளுக்குச் செல் கின்றனர், எவ்வளவு ஏமாற்றம்
அடைகின்றனர்! முன்பு பலர் நடைபயணமாகச் சென்றனர், மாட்டு
வண்டியிலும் சென்றனர். இதுவோ ஒரு ஊருக்கான விசயம். இது
தந்தையின் எவ்வளவு பெரிய பல்கலைக்கழகமாகும்! இதில் நீங்கள்
இலட்சுமி நாராயணனாக ஆகிறீர்கள். இப்படிப்பட்ட உயர்ந்த
படிப்பிற்கு தூரமாக இருக்கிறது அல்லது நேரம் இல்லை என்று
யாராவது கூறினால் தந்தை என்ன கூறுவார்? இந்தக் குழந்தை
தகுதியில்லாதது. தந்தை உயர்ந்த நிலை ஏற்படுத்துவதற்காக
வருகின்றார், இவர்கள் தன்னையே அழித்துக் கொள்கின்றனர்.
ஸ்ரீமத் கூறுகிறது - தூய்மை ஆகுங்கள், தெய்வீக குணங்களை தாரணை
செய்யுங்கள். சேர்ந்து இருந்தாலும் விகாரத்தில் செல்லக் கூடாது.
இடையில் ஞானம், யோகம் என்ற அம்பு இருக்க வேண்டும். நாம்
தூய்மையான உலகிற்கு எஜமானர்களாக ஆக வேண்டும். இப்பொழுது பதீத
உலகிற்கு எஜமானர்களாக இருக்கிறீர்கள் அல்லவா! அந்த தேவதைகள்
இரட்டை கிரீடதாரிகள் ஆவர், அரைக் கல்பத்திற்குப் பிறகு
ஒளிக்கிரீடம் மறைந்து விடுகிறது. இந்த நேரத்தில் ஒளிக் கிரீடம்
யாரிடத்திலும் கிடையாது. தர்ம ஸ்தாபகர்களிடத்தில் இருக்கலாம்,
ஏனெனில் அந்த தூய்மையான ஆத்மாக்கள் சரீத்தில் வந்து
பிரவேசிக்கிறது. இதே பாரதத்தில் தான் இரட்டை கிரீடம்
உடையவர்களும் இருந்தனர், ஒரு கிரீடம் உடையவர்களும் இருந்தனர்.
இதுவரையும் கூட ஒற்றை கிரீடமுடையவர்கள் இரட்டை
கிரீடமுடையவர்களின் முன் தலைவணங்குகின்றனர். ஏனெனில் அவர்கள்
தூய்மையான மகாராஜா, மகாராணி ஆவர். மகாராஜா என்றால் இராஜாக்களை
விட உயர்ந்தவர்கள் ஆவர். அவர்களிடத்தில் அதிகமான நிலங்களும்
இருந்தன. சபைகளிலும் மகாராஜாக்கள் முன் வரிசையிலும், இராஜாக்கள்
பின் வரிசையிலும் வரிசைக்கிரமமாக அமருவர். நியமப்பூர்வமாக
அவர்களது அரச சபை கூடும். இதுவும் ஈஸ்வரிய சபையாகும். இது
இந்திர சபை என்றும் பாடப்படுகிறது. நீங்கள் ஞானத்தின் மூலம்
பரிகளாக (பரிஸ்தாக்களாக) ஆகிறீர்கள். மிக அழகாக இருப்பவர்கள்
தேவதைகள் என்று கூறப்படுவர் அல்லவா! இராதை கிருஷ்ணர் இயற்கையான
அழகுடன் இருப்பர். அதனால் தான் அழகானவர்கள் என்று
கூறப்படுகின்றனர். பிறகு எப்பொழுது காமச் சிதையில்
அமர்கிறார்களோ அப்பொழுது விதவிதமான பெயர்களில் கருப்பாக
ஆகிவிடுகின்றனர். இந்த விசயங்கள் எந்த சாஸ்திரங்களிலும்
கிடையாது. ஞானம், பக்தி மற்றும் வைராக்கியம், மூன்று விசயங்கள்
உள்ளன. ஞானம் உயர்ந்ததிலும் உயர்ந்தது ஆகும். இப்பொழுது நீங்கள்
ஞானத்தை பிராப்தியாக அடைந்து கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு
பக்தியின் மீது வைராக்கியம் ஏற்பட்டிருக்கிறது. இந்த முழு தமோ
பிரதான உலகமும் இப்பொழுது அழிந்து போக இருக்கிறது, இதன் மீது
வைராக்கியம் ஏற்படுகிறது. எப்பொழுது புதுக் கட்டிடம்
கட்டப்படுகிறதோ அப்பொழுது பழையதின் மீது வைராக்கியம் ஏற்பட்டு
விடும் அல்லவா! அது எல்லைக்குட்பட்ட விசயம், இது எல்லையற்ற
விசயமாகும். இப்பொழுது புத்தி புது உலகின் பக்கம் இருக்கிறது.
இது பழைய உலகம் நரகம், சத்யுகம், திரேதா யுகம் சிவாலயம் என்று
கூறப்படுகிறது. சிவபாபாவினால் ஸ்தாபனை செய்யப்பட்டது அல்லவா!
இப்பொழுது இந்த வைஷ்யாலயத்தின் மீது உங்களுக்கு கோபம் வருகிறது.
சிலருக்கு கோபம் வருவது கிடையாது. திருமணத்தில் வீண் செலவு
செய்து பள்ளத்தில் தள்ள விரும்புகின்றனர். அனைத்து மனிதர்களும்
விகார நதியில் இருக்கின்றனர், அசுத்தத்தில் விழுந்து
கிடக்கின்றனர். ஒருவருக்கொருவர் துக்கம் கொடுக் கின்றனர்.
அமிர்தத்தை விடுத்து விஷம் ஏன் எடுத்துக் கொள்கிறீர்கள் என்றும்
பாடப்படுகிறது. எதுவெல்லாம் கூறுகிறார்களோ அதன் பொருள் புரிந்து
கொள்வது கிடையாது. குழந்தைகளாகிய உங்களிலும் வரிசைக்கிரமமாக
இருக்கிறீர்கள். புத்திசாலி ஆசிரியர் பார்த்தவுடனேயே புரிந்து
கொள்வார் - இவரது புத்தி எங்கு சுற்றிக் கொண்டிருக்கிறது?
வகுப்பின் இடையில் யாராவது கொட்டாவி விட்டால் அல்லது தூங்கி
வழிந்தால் இவரது புத்தியானது வீடு அல்லது தொழில் பக்கம் அலைந்து
கொண்டிருக்கிறது என்று புரிந்து கொள்ளுங்கள். கொட்டாவி என்பது
களைப்பின் அடையாளமாகவும் இருக்கிறது. தொழிலில் மனிதர்களுக்கு
வருமானம் ஏற்படுவதால் இரவு 1-2 மணி வரைக்கும் அமர்ந்து
கொண்டிருப்பர். ஒருபொழுதும் கொட்டாவி வராது. இங்கு தந்தை
எவ்வளவு பொக்கிஷங்களைக் கொடுக்கின்றார்! கொட்டாவி விடுவது
என்பது நஷ்டத்தின் அடையாளமாகும். திவால் ஆகக் கூடியவர்கள்
தூங்கி வழிவதுடன் அதிகம் கொட்டாவி விடுவார் கள். உங்களுக்கு
பொக்கிஷத்திற்குப் பின் பொக்கிஷம் கிடைத்துக் கொண்டிருக்கிறது
எனில் எவ்வளவு கவனத்துடன் இருக்க வேண்டும்! படிக்கின்ற
நேரத்தில் யாராவது கொட்டாவி விட்டால் புத்திசாலி ஆசிரியர்
புரிந்து கொள்வார் - இவரது புத்தியோகம் வேறு பக்கம் அலைந்து
கொண்டி ருக்கிறது. இங்கு அமர்ந்திருக்கும் பொழுது வீட்டின்
நினைவு வரும், குழந்தைகளின் நினைவு வரும். இங்கு நீங்கள்
பட்டியில் இருக்க வேண்டும், வேறு யாருடைய நினைவும் வரக் கூடாது.
சிலர் 6 நாட்கள் பட்டியில் இருக்கின்றனர் என்று வைத்துக்
கொள்ளுங்கள், கடைசி நேரத்தில் மற்றவரது நினைவு வந்து விட்டால்
தோல்வி என்று தான் கூறமுடியும், பிறகு மீண்டும் 7 நாட்கள்
ஆரம்பிக்க வேண்டும். 7 நாட்கள் பட்டியில் இருக்கும் பொழுது
அனைத்து நோய்களும் நீங்கிவிடும். நீங்கள் அரைக் கல்பத்திற்கு
மகான் நோயாளிகளாக இருக்கிறீர்கள். அமர்ந்திருக்கும் பொழுதே
அகால மரணம் ஏற்பட்டு விடுகிறது. சத்யுகத்தில் ஒருபொழுதும்
இவ்வாறு ஏற்படாது. இங்கு ஏதாவது வியாதிகள் அவசியம் ஏற்பட்டுக்
கொண்டே இருக்கிறது. இறக்கும் நேரத்தில் வியாதி யினால்
கதறுகின்றனர். சொர்க்கத்தில் சிறிதும் துக்கம் இருக்காது. அங்கு
சரியான நேரத்தில் இப்பொழுது நேரம் முடிவடைந்து விட்டது, நான்
இந்த சரீரத்தை விடுத்து குழந்தையாக ஆக வேண்டும் என்பதைப்
புரிந்து கொள்வர். இங்கும் உங்களுக்கு சாட்சாத்காரம் ஏற்படும்
- இவ்வாறு ஆவேன். இவ்வாறு பலருக்கு சாட்சாத்காரம் ஏற்படுகிறது.
ஞானத்தின் மூலமாகவும் அறிந்து கொள்கிறீர்கள் - நாம்
யாசிப்பவரிலிருந்து (பிச்சைக்காரனிலிருந்து) இளவரசராக (பிரின்ஸ்)
ஆகிக் கொண்டிருக்கிறோம். இந்த இராதை கிருஷ்ணர் ஆவது தான் நமது
இலட்சியம் மற்றும் குறிக் கோளாகும். இலட்சுமி நாராயணன் கிடையாது,
இராதை கிருஷ்ணர் ஆவதாகும். ஏனெனில் முழு 5 ஆயிரம் ஆண்டுகள்
என்று இவர்களைத் தான் கூற முடியும். இலட்சுமி நாராயணனையும்
20-25 ஆண்டுகள் குறைவு ஏற்பட்டு விடுகிறது. அதனால் தான்
கிருஷ்ணரின் மகிமை அதிகமாக இருக்கிறது. இராதை கிருஷ்ணர் தான்
இலட்சுமி நாராயணன் ஆகின்றனர் என்பது யாருக்கும் தெரியாது.
இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அறிந்து கொண்டே செல்கிறீர்கள்,
இது படிப்பாகும். ஒவ்வொரு ஊரிலும் சென்டர் திறந்து கொண்டே
செல்கிறது. இது உங்களுடைய பல்கலைக்கழகம் மற்றும்
மருத்துவமனையாகும். இதற்கு 3 அடி இருந்தால் போதுமானதாகும்.
ஆச்சரியமல்லவா! யாருக்கு அதிஷ்டம் இருக்கிறதோ அவர்கள் தங்களது
அறையிலும் கூட சத்சங்கம் திறந்து விடுவர். இங்கு யார் அதிக
செல்வமுடையவர்களாக இருக்கிறார்களோ அவர்களது செல்வம் அனைத்தும்
மண்ணோடு மண்ணாக ஆகிவிடும். நீங்கள் எதிர்கால 21 பிறவி களுக்காக
தந்தையிடமிருந்து ஆஸ்தியடைந்து கொண்டிருக்கிறீர்கள். தந்தை
சுயம் கூறுகின்றார் - நீங்கள் இந்தப் பழைய உலகைப் பார்த்தாலும்
புத்தியின் தொடர்பை அங்கு (பாபாவிடம்) செலுத்துங்கள்,
காரியங்கள் செய்தாலும் பயிற்சி செய்யுங்கள். ஒவ்வொரு
விசயத்தையும் பார்க்க வேண்டியிருக்கிறது அல்லவா! நீங்கள்
இப்பொழுது பயிற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். சதா தூய
காரியங்களை மட்டுமே செய்யுங்கள், அசுத்த காரியங்கள் எதுவும்
செய்யாதீர்கள் என்று தந்தை புரிய வைக்கின்றார். ஏதாவது நோய்
ஏற்பட்டால் சர்ஜன் அமர்ந்திருக்கின்றார், அவரிடத்தில் வழி
கேளுங்கள். ஒவ்வொருவரின் வியாதியும் தனிப்பட்டது,
சர்ஜனிடமிருந்து நல்ல வழி கிடைக்கும். இந்தச் சூழ்நிலையில்
என்ன செய்ய வேண்டும்? என்று கேளுங்கள். எந்த விகர்மமும்
ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
உணவு எப்படியோ அப்படித் தான் மனம் என்றும் பாடப்பட்டிருக்கிறது.
மாமிசம் வாங்குபவர்கள், விற்கக் கூடியவர்கள், பரிமாறக்
கூடியவர்களுக்கும் பாவம் ஏற்படுகிறது. பதீத பாவனம் தந்தையிடம்
எந்த விசயத்தையும் மறைக்கக் கூடாது. மருத்துவரிடம் மறைக்கிறோம்
எனில் நோய் அகலாது. இவர் எல்லையற்ற அழிவற்ற மருத்துவர் (சர்ஜன்)
ஆவார். இந்த விசயங்களை உலகத்தினர் யாரும் அறியவில்லை.
உங்களுக்கும் இப்பொழுது ஞானம் கிடைத்துக் கொண்டி ருக்கிறது,
இருப்பினும் யோகாவில் மிகவும் குறைவாக இருக்கிறீர்கள்.
முற்றிலும் நினைவு செய்வது கிடையாது. உடனேயே நினைவு நிலைத்து
விடாது என்பதை தந்தையும் அறிவார். வரிசைக்கிரமம் இருக்கிறது
அல்லவா! எப்பொழுது நினைவு யாத்திரை முடிவடையுமோ அப்பொழுது தான்
கர்மாதீத் நிலை ஏற்பட்டு விட்டது, பிறகு யுத்தமும் முழு
வீச்சில் நடைபெறும். அதுவரை ஏதாவது நடைபெற்றுக் கொண்டே
இருக்கும், பிறகு முடிவடையும். யுத்தம் எப்பொழுது
வேண்டுமென்றாலும் வெடித்து விடும். ஆனால் எதுவரை இராஜ்யம்
ஸ்தாபனை ஆகவில்லையோ அதுவரை பெரிய யுத்தம் நடைபெறாது என்று
விவேகம் கூறுகிறது. சிறிது சிறிது நடைபெற்று முடிவடைந்து விடும்.
இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது என்பதை யாரும் அறிய
வில்லை. சதோ பிரதானம், சதோ, ரஜோ, தமோ புத்தி இருக்கிறது அல்லவா!
உங்களிலும் சதோ பிரதான புத்தியுடையவர்கள் மிகவும் நல்ல முறையில்
நினைவு செய்து கொண்டே இருப்பர். இப்பொழுது பிராமணர்கள்
இலட்சக்கணக்கில் உருவாகின்றனர், ஆனால் அதிலும் நேரடிக்
குழந்தைகள் மற்றும் மாற்றாந்தாய் குழந்தைகள் இருக்கின்றனர்!
நேரடிக் குழந்தைகள் நன்றாக சேவை செய்வர், தாய் தந்தையின்
வழிப்படி நடப்பர். மாற்றாந்தாய் குழந்தைகள் இராவணனின் வழிப்படி
நடப்பர். சிலர் இராவணின் வழிப்படி, சிலர் இராமரின் வழிப்படி
நொண்டிக் கொண்டே நடப்பர். குழந்தைகள் பாட்டு கேட்டீர்கள் அல்லவா!
பாபா எங்கு சுகம் இருக்குமோ அப்படிப்பட்ட இடத்திற்கு அழைத்துச்
செல்லுங்கள் என்று கூறுகின்றனர். சொர்க்கத்தில் சுகமே சுகம்
தான் இருக்கும், துக்கத்தின் பெயரே கிடையாது. சொர்க்கம் என்று
கூறப்படுவது சத்யுகத்தைத் தான். இப்பொழுது இருப்பதோ கலியுகம்.
பிறகு இங்கு சொர்க்கம் எங்கிருந்து வந்தது? இப்பொழுது உங்களது
புத்தி தூய்மையானதாக ஆகிக் கொண்டே செல்கிறது. தூய புத்தி
உடையவர்களை அசுத்த புத்தியுடையவர்கள் நமஸ்கரிக்கின்றனர்.
தூய்மையாக இருப்பவர்களுக்கு மரியாதை இருக்கிறது. சந்நியாசிகள்
தூய்மையாக இருப்பதால் இல்லறத்தைச் சார்ந்தவர்கள் அவர்களுக்குத்
தலைவணங்குகின்றனர். சந்நியாசிகள் விகாரத்தின் மூலம் பிறப்பு
எடுத்து பிறகு சந்நியாசிகளாக ஆகின்றனர். தேவதைகள் சம்பூர்ண
நிர்விகாரிகள் என்று கூறப்படுகின்றனர். சந்நியாசிகளை ஒரு
பொழுதும் சம்பூர்ன நிர்விகாரிகள் என்று கூறுவது கிடையாது. ஆக
குழந்தைகளாகிய உங்களுக் குள் குஷியின் அளவு அதிகரிக்க வேண்டும்,
அதனால் தான் அதீந்திரிய சுகம் பற்றி கேட்க வேண்டு மெனில், கோப
கோபியர்களிடம் கேளுங்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. அவர்கள்
தந்தையிட மிருந்து ஆஸ்தி அடைந்து கொண்டிருக்கின்றனர், படித்துக்
கொண்டிருக்கின்றனர். இங்கு எதிரில் கேட்கும் பொழுது போதை
அதிகரிக்கிறது, பிறகு சிலருக்கு நிலைத்து இருக்கிறது, சிலருக்கு
உடனேயே மறைந்து விடுகிறது. கெட்ட சகவாசத்தின் காரணத்தினால் போதை
நிலையாக நிலைத்திருப்பது கிடையாது. உங்களது சென்டர்களில்
இவ்வாறு பலர் வருகின்றனர். சிறிது போதை அதிகரிக்கிறது, பிறகு
பார்ட்டிகளுக்குச் சென்று மதுபானம், சிகரெட் பீடி போன்றவைகள்
குடித்து விட்டால் முடிந்தது. கெட்ட சகவாசம் மிகவும்
கெட்டதாகும். அன்னமும் கொக்கும் ஒன்றாக சேர்ந்து இருக்க
முடியாது. கணவன் அன்னமாக ஆகின்றார் எனில், மனைவி கொக்காக
ஆகிவிடுகிறார். சில இடங்களில் மனைவி அன்னமாக ஆகிவிடுகிறார்,
கணவன் கொக்காக ஆகிவிடுகிறார். தூய்மையாக ஆக வேண்டுமென்று
கூறினால் அடி வாங்குகிறாள். சில வீடுகளில் அனைவரும் அன்னம்
போன்று இருக்கின்றனர், பிறகு நாளடைவில் அன்னத்திலிருந்து
கொக்காக ஆகிவிடுகின்றனர். தன்னை சுகமானவராக ஆக்கிக் கொள்ளுங்
கள், குழந்தைகளையும் சுகமானவர் களாக ஆக்குங்கள் என்று தந்தை
கூறுகின்றார். இங்கு துக்கம் இருக்கிறது அல்லவா! இப்பொழுது பல
ஆபத்துக்கள் வரயிருக்கின்றன. பிறகு பாருங்கள் - எவ்வளவு ஐயோ !
ஐயோ ! என்று கூறுவர்! அடே தந்தை வந்திருக்கின்றார், நாம்
தந்தையிடமிருந்து ஆஸ்தியடையவில்லையெனில் பிறகு மிகவும் தாமதம்
ஆகிவிடும். தந்தை சொர்க்க இராஜ்யம் கொடுக்க வந்திருக்கின்றார்,
அதை இழந்து அமர்ந்திருக்கின்றனர், அதனால் தான் தந்தை புரிய
வைக்கின்றார் - பாபாவிடத்தில் எப்பொழுதும் உறுதியாக
இருப்பவர்களை அழைத்து வாருங்கள். அவர்கள் தானும் புரிந்து
கொண்டு மற்றவர் களையும் புரிய வைக்கக் கூடியவர்களாக இருக்க
வேண்டும். மற்றபடி பாபா தரிசனம் செய்யக் கூடியவராக மட்டும்
கிடையாது. சிவபாபா எங்காவது தென்படுவாரா! தனது ஆத்மாவை
பார்த்திருக்கிறீர்களா என்ன? அறிந்து கொண்டிருக்கிறீர்கள்,
அவ்வளவு தான் ! அவ்வாறு பரமாத்மா வையும் அறிந்து கொள்ள வேண்டும்.
தெய்வீக திருஷ்டியின்றி அவரை யாரும் பார்க்க முடியாது. தெய்வீக
திருஷ்டியின் மூலம் இப்பொழுது நீங்கள் சத்யுகத்தைப்
பார்க்கிறீர்கள். பிறகு அங்கு நடைமுறையில் செல்ல வேண்டும்.
எப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் கர்மாதீத நிலை அடைவீர்களோ
அப்பொழுது தான் கலியுகம் விநாசம் ஆகும். நல்லது.
இனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு
நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) இந்தப் பழைய உலகைப் பார்த்தாலும் புத்தியோகம் தந்தை மற்றும்
புது உலகின் பக்கம் ஈடுபட்டிருக்க வேண்டும்.
கர்மேந்திரியங்களின் மூலம் எந்த பாவ காரியமும் ஏற்பட்டு விடக்
கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். எப்பொழுதும் நல்ல
காரியம் மட்டுமே செய்ய வேண்டும், உள்ளுக்குள் ஏதாவது நோய்
இருந்தால் மருத்துவரிடம் கூறி ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும்.
2) கெட்ட சகவாசம் மிகவும் கெட்டது, இதிலிருந்து தன்னை மிக மிக
பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். தன்னை மற்றும்
குடும்பத்தை சுகமானதாக ஆக்கிக் கொள்ள வேண்டும். படிப்பதற்கு
ஒருபொழுதும் சாக்குபோக்கு கூறக் கூடாது.
வரதானம்:
உயர்ந்த பாவனையின் ஆதாரத்தால் அனைவருக்கும் சாந்தி சக்தியின்
கதிர்களை வழங்கும் விஸ்வ கல்யாணகாரி ஆகுக,
தந்தையின் எண்ணம், சொல், பார்வை யாவிலும் எப்போதுமே நன்மை
செய்யும் பாவனையும் நல் விருப்பமுமே இருப்பது போலவே குழந்தைகள்
எண்ணத்திலும் உலக நன்மைக்கான பாவனையும் நல் விருப்பமுமே
நிரம்பியிருக்க வேண்டும். எந்த ஒரு செயல் செய்யும் பொழுதும்
உலக ஆத்மாக்கள் அனைவரும் கண்ணில் தென்பட வேண்டும், மாஸ்டர் ஞான
சூரியனாகி சுப பாவனை மற்றும் உயர்ந்த நல் விருப்பத்தின்
ஆதாரத்தால் சாந்தி, சக்தியின் கதிர்களை வழங்கிக் கொண்டே
யிருங்கள் அப்போதே விஸ்வ கல்யாணகாரி ஆவீர்கள். ஆனால் இதற்காக
அனைத்து பந்தனத் திலும் விடுபட்டு சுதந்திரமாகுங்கள்.
சுலோகன்:
நான் மற்றும் எனது இதுவே தேக அபிமானத்தின் வாசல் இப்போது இந்த
வாசலை மூடிவிடுங்கள்.
அவ்யக்த சமிக்ஞை: சத்யமும், நாகரீகமும் தனது பண்பாக்குங்கள்.
சத்தியத்தினை கண்டறிதல் எண்ணம், சொல், செயல் சம்மந்தம், உறவு
யாவிலும் தெய்வீகம் அனுபவம் செய்வதாகும். சிலர் சொல்வார்கள்
நான் எப்போதும் உண்மையே பேசுவேன். ஆனால் சொல்லிலும் செயலிலும்
தெய்வீகம் இல்லையெனில் பிறருக்கு உங்களது உண்மை உண்மை யாகாது,
எனவே சத்யத்தின் சக்தியுடன் தெய்வீகத்தை கையாளுங்கள். எதனை
பொறுத்துக் கொள்ள நேர்ந்தாலும் பயப்படாதீர்கள் உண்மை தக்க
சமயத்தில் தானே வெளிப்படும்.