17-04-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! இந்த ஆன்மீக ஆஸ்பத்திரி உங்களை அரை கல்ப காலத்திற்கு எப்போதும் ஆரோக்கியம் மிக்கவராக ஆக்கக் கூடியது, இங்கே நீங்கள் ஆத்ம அபிமானி ஆகி அமருங்கள்.

கேள்வி:
வேலை தொழில் முதலானவைகளை செய்து கொண்டிருந்தாலும் (தந்தையின்) எந்த வழி புத்தியில் நினைவு இருக்க வேண்டும்?

பதில்:
நீங்கள் எந்த சாகார ரூபத்தில் அல்லது ஆகார ரூபத்தில் இருப்பவரையும் நினைவு செய்யா தீர்கள் என்பது தந்தையின் வழியாகும். ஒரு தந்தையின் நினைவில் இருந்தால் பாவ கர்மங்கள் அழியும். இதில் நேர மில்லை என யாரும் சொல்ல முடியாது. அனைத்தையும் செய்தபடி இருந்தாலும் கூட (தந்தையின்) நினைவில் இருக்க முடியும்.

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளுக்கு தந்தையின் காலை வணக்கம். காலை வணக்கத்திற்குப் பிறகு குழந்தைகளுக்கு சொல்லப்படுகிறது - தந்தையை நினைவு செய்யுங்கள். ஓ பதீத பாவனா வாருங்கள் என அழைக்கவும் செய்கின்றனர் எனும்போது தந்தை முதன் முதலிலேயே ஆன்மீகத் தந்தையை நினைவு செய்யுங்கள் என்று சொல்கிறார். ஆன்மீகத் தந்தை அனைவருக்கும் ஒருவரே ஆவார். தந்தை ஒரு போதும் எங்கும் நிறைந்தவர் என ஒப்புக் கொள்ளப்படுவதில்லை. ஆக, எவ்வளவு முடியுமோ, குழந்தைகளே, அவ்வளவு முதன் முதலில் தந்தையை நினைவு செய்யுங்கள். ஒரு தந்தையைத் தவிர எந்த சாகாரத்தில் (ஸ்தூலத்தில்) இருப்பவரையோ, ஆகாரத்தில் (சூட்சும உடலில்) இருப்பவரையோ நினைவு செய்யா தீர்கள், இது முற்றிலும் சகஜமானதுதானே. மனிதர்கள் நாங்கள் மிகவும் பிஸியாக (வேலைகளில் மும்முரமாக) இருக்கிறோம், நேரமே இல்லை என்று சொல்கின்றனர். ஆனால் இதில் நேரம் எப்போதும் இருக்கவே செய்கிறது. தந்தை யுக்தியை சொல்கிறார், தந்தையை நினைவு செய்வதன் மூலம்தான் நம்முடைய பாவங்கள் பஸ்பம் ஆகும் என்பதையும் அறிவீர்கள். இது முக்கியமான விசயமாகும். வேலை, தொழில் முதலானவைகளுக்கு தடையேதும் இல்லை. அவையனைத்தும் செய்தபடியே தந்தையை நினைவு செய்வதன் மூலமே பாவ கர்மங்கள் அழியும். நாம் பதீதர்களாக இருக்கிறோம் என்பதை புரிந்து கொள்கின்றனர், சாது சன்னியாசி, ரிஷி முனிவர் முதலான அனைவரும் சாதனையில் ஈடுபட்டுள்ளனர். பகவானை சந்திப்பதற்காக சாதனை செய்யப்படுகிறது. அதுவும் எதுவரை அவருடைய அறிமுகமே இல்லையோ அதுவரை அவரை சந்திக்க முடியாது. தந்தையின் அறிமுகம் உலகில் ஒருவருக்கும் கிடையாது என நீங்கள் அறிவீர்கள். தேகத்தின் அறிமுகம் அனைவருக்கும் உள்ளது. பெரிய பொருளின் அறிமுகம் சட்டென்று ஆகி விடுகிறது. ஆத்மாவின் அறிமுகத்தை தந்தை வரும்போது தான் புரிய வைக்கிறார். ஆத்மா மற்றும் சரீரம் என இரண்டு பொருட்கள் உள்ளன. ஆத்மா ஒரு நட்சத்திரம் போன்றது, மேலும் மிகவும் சூட்சுமமானது. அதனை யாரும் பார்க்க முடியாது. ஆக, இங்கே வந்து அமரும் போது ஆத்ம அபிமானி ஆகி அமர வேண்டும். இதுவும் கூட ஒரு மருத்துவமனை அல்லவா - அரைக் கல்ப காலம் எப்போதும் ஆரோக்கியம் மிக்கவராக ஆவதற்கானது. ஆத்மா அழிவற்றது, ஒரு போதும் அழியாதது. அனைத்து நடிப்புமே ஆத்மாவுடையதே ஆகும். நான் ஒருபோதும் அழிவ தில்லை என்று ஆத்மா சொல்கிறது. இவ்வளவு ஆத்மாக்கள் அனைவருமே அழிவற்றவர்கள். சரீரம் அழியக்கூடியது. ஆத்மாக்களாகிய நாம் அழிவற்றவர்கள் என்பது இப்போது உங்கள் புத்தியில் பதிந்திருக்கிறது. நாம் 84 பிறவிகள் எடுக்கிறோம், இது நாடகம். இதில் தர்ம ஸ்தாபகர்கள் யார் யார் எப்போது வருகின்றனர், எத்தனை பிறவிகள் எடுப்பார்கள் என்பதை அறிவீர்கள். 84 பிறவிகள் எனப் பாடப்படுபவர்கள் கண்டிப்பாக ஒரு தர்மத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பர். அனைத்து தர்மங்களுமே ஒரே சமயத்தில் ஒன்றாக வருவதில்லை. நாம் மற்றவர் களுடைய கணக்கை ஏன் எடுக்க வேண்டும்? இன்ன இன்ன சமயத்தில் தர்ம ஸ்தாபனை செய்வதற் காக வருகின்றனர். பிறகு அவர்களின் வளர்ச்சி ஏற்படுகிறது. அனைவரும் சதோபிரதானத் திலிருந்து தமோபிரதானம் ஆகத்தான் வேண்டும். உலகம் தமோபிரதானமாக ஆகும்போது தந்தை வந்து சதோபிரதானமான சத்யுகத்தை உருவாக்குகிறார். பாரதவாசிகளாகிய நாம்தான் பிறகு புதிய உலகில் வந்து இராஜ்யத்தை ஆள்வோம். வேறு எந்த தர்மமும் இருக்காது. குழந்தைகளாகிய உங்களுக்குள்ளும் யாருக்கு உயர்ந்த பதவி பெற வேண்டியுள்ளதோ அவர்கள் அதிகமாக நினைவில் இருப்பதற்கான முயற்சி செய்வார்கள். மேலும் பாபா, நான் இவ்வளவு நேரம் நினைவில் இருந்தேன் என்ற செய்தியும் எழுதுகின்றனர். பலர் வெட்கத்தின் காரணமாக முழு செய்தியும் எழுதுவதில்லை. பாபா என்ன சொல்வாரோ என நினைக்கின்றனர். ஆனால் தெரிந்து விடுகிறது அல்லவா! ஒருவேளை நீங்கள் படிக்காவிட்டால் ஃபெயில் ஆகி விடுவீர்கள் என பள்ளி யில் ஆசிரியர் மாணவர்களிடம் சொல்கிறார் அல்லவா! லௌகீக தாய் தந்தையும் கூட குழந்தை யின் படிப்பிலிருந்து இது மிகவும் பெரிய பள்ளி எனப் புரிந்து கொள்கின்றனர். இங்கே வரிசைக் கிரமமாக அமர வைக்கப்படுவதில்லை. புத்தியின் மூலம் புரிந்து கொள்ளப் படுகிறது, வரிசைக் கிரமமாக உள்ளனர் அல்லவா! இப்போது பாபா நல்ல நல்ல குழந்தைகளை எங்காவது அனுப்பி வைக்கிறார், அவர்கள் அங்கே செல்கின்றனர், அப்போது இன்னொருவர் எங்களுக்கு மகாரதி தேவைப் படுகிறார் என எழுதுகின்றனர் எனும்போது அவர் நம்மை விட புத்திசாலி, பெயர் புகழ் வாய்ந்தவர் என புரிந்து கொள்கின்றனர். வரிசைக்கிரமமாக இருக்கவே செய்கின்றனர் அல்லவா! கண்காட்சிகளிலும் பலவித மானவர்கள் வருகின்றனர், அப்போது சோதனை செய்வதற்காக வழிகாட்டிகளும் தயாராக இருக்க வேண்டும். வரவேற்பவர்கள் இவர் எவ்விதமான மனிதர் என அறிவார்கள். அப்போது இவருக்கு புரிய வையுங்கள் என சைகை காட்ட வேண்டும். முதல் தரம், இரண்டாம் தரம், மூன்றாம் தரம் என அனைவரும் உள்ளனர் என நீங்களும் புரிந்து கொள்ள முடியும். யாராவது பெரிய மனிதர் இருக்கிறார் என்றால் கண்டிப்பாக பெரிய மனிதர்களுக்கு உபசரிப்பை அனைவருமே செய்கின்றனர். இது சட்டமாகும். தந்தை அல்லது ஆசிரியர் வகுப்பில் குழந்தைகளின் மகிமையை செய்கின்றார், இதுவும் அனைத்திலும் பெரிய மதிப்பளிப்பாகும். பெயரை வெளிப்படுத்தும் குழந்தைகளின் மகிமை அல்லது மதிப்பளிக்கப்படுகிறது. இவர் இன்ன செல்வந்தர், தார்மீக சிந்தனை மிக்கவர் - இதுவும் கூட மகிமை அல்லது உபசரிப்பு அல்லவா! உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பகவான் என்பதை இப்போது நீங்கள் அறிந்துள்ளீர்கள். சரிதான், உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பகவான் என்று சொல்லவும் செய்கின்றனர் சரிதான், ஆனால் அவருடைய வாழ்க்கை வரலாறு பற்றி சொல்லுங்கள் என்று கேட்டீர்கள் என்றால் அவர் எங்கும் நிறைந்தவர் என்று சொல்லி விடுவார்கள். அவ்வளவுதான், ஒரேயடியாக கீழே இறக்கி விடு வார்கள். அனைவரையும் விட உயர்ந்தவரிலும் உயர்ந்தவர் பகவான், அவர் மூலவதனவாசி என நீங்கள் இப்போது புரிய வைக்க முடியும். சூட்சும வதனத்தில் தேவதைகள் இருக்கின்றனர். இங்கே வசிப்பவர்கள் மனிதர்கள். ஆக உயர்ந்தவரிலும் உயந்தவர் பகவான், அவர் நிராகாரராக உள்ளார்.

நாம் வைரத்திற்குச் சமமாக இருந்தோம், பிறகு சோழி போல் ஆகி விட்டோம் என்று குழந்தை களாகிய நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள், பிறகு பகவானை தன்னை விட மிகவும் கீழாக அவமரியாதை செய்து விட்டனர். புரிந்து கொள்வதே இல்லை. பாரதவாசிகளாகிய உங்களுக்குத் தான் அறிமுகம் கிடைக்கிறது, பிறகு பரிச்சயம் (அறிமுகம்) குறைந்து விடுகிறது. இப்போது நீங்கள் தந்தையின் அறிமுகத்தை அனைவருக்கும் கொடுத்தபடி இருக்கிறீர்கள். அநேகருக்கு தந்தையின் அறிமுகம் கிடைக்கும். உங்களுடைய முக்கியமான படமே திரிமூர்த்தி, சிருஷ்டி சக்கரம், மரம். இவற்றில் எவ்வளவு பிரகாசம் உள்ளது! இந்த இலட்சுமி நாராயணர் சத்யுகத்தில் எஜமானர்களாக இருந்தனர். நல்லது, சத்யுகத்திற்கும் முன்பு என்ன இருந்தது? இதனையும் இப்போது நீங்கள் அறிவீர்கள். இப்போது கலியுகத்தின் முடிவு, மேலும் பிரஜைகளின் மீது பிரஜைகளின் இராஜ்ய மாகவும் இருக்கிறது. இப்போது இராஜ்யம் இல்லவே இல்லை. எவ்வளவு வித்தியாசம் உள்ளது! சத்யுகத்தின் ஆரம்பத்தில் இராஜாக்கள் இருந்தனர் மற்றும் இப்போது கலியுகத்திலும் கூட இராஜாக்கள் இருக்கின்றனர். அவர்கள் தூய்மையாக இல்லாதிருக் கலாம், ஆனால் ஏதாவது பணம் கொடுத்தாவது பட்டத்தைப் பெற்றுக் கொள்கின்றனர். மஹாராஜா யாரும் இல்லை. பட்டத்தை வாங்கிக் கொள்கின்றனர். பாட்டியாலாவின் மஹாராஜா, ஜோத்பூர், பிகானேர் மஹாராஜா . . . பெயர் எடுத்துக் கொள்கின்றனர் அல்லவா. இந்த பெயர் அழிவற்றதாக நடந்து வருகிறது. முதலில் தூய்மையான மஹாராஜாக்கள் இருந்தனர், இப்போது தூய்மையற்றவர்களாக உள்ளனர். இராஜா, மஹாராஜா என்பது போன்ற பெயர்கள் முறைப்படி வருகின்றன. இந்த இலட்சுமி நாராயணர் குறித்து சொல்கின்றனர் - இவர்கள் சத்யுகத்தின் எஜமானர்களாக இருந்தனர், யார் இராஜ்யத்தை பெற்றது? இராஜ்யத்தின் ஸ்தாபனை எப்படி ஏற்படுகிறது என்பதை இப்போது நீங்கள் அறிவீர்கள். நான் உங்களை 21 பிறவிகளுக்காக இப்போதுதான் படிப்பிக்கிறேன். அவர்கள் படித்து இந்த பிறவியிலேயே வக்கீல் முதலானவர்களாக ஆகின்றனர். நீங்கள் இப்போதுதான் படித்து எதிர் காலத்தில் மஹாராஜா, மஹாராணி ஆகிறீர்கள். நாடகத்தின் திட்டப்படி புதிய உலகின் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. இப்போது பழைய உலகமாக உள்ளது. எவ்வளவுதான் நல்ல நல்ல பெரிய மாளிகைகள் இருக்கலாம், ஆனால் வைர-வைடூரியங்களால் ஆன மாளிகையைக் கட்டக் கூடிய சக்தி யாருக்கும் இல்லை. சத்யுகத்தில் இந்த வைர-வைடூரியங்களால் ஆன மாளிகைகள் அனைத்தும் கட்டுகின்றனர் அல்லவா! கட்டுவதற்கு நேரமே எடுப்பதில்லை. இங்கும் கூட நில நடுக்கம் முதலானவைகள் ஏற்படும்போது அதிக அளவில் தொழிலாளர்களை ஈடுபடுத்துகின்றனர். ஒன்றிரண்டு வருடங்களில் முழு நகரத்தையும் உருவாக்கி விடுகின்றனர். புது டெல்லியை உருவாக்குவதில் 8-10 வருடங்கள் பிடித்தன, ஆனால் இங்குள்ள மற்றும் அங்குள்ள தொழிலாளர் களுக்கிடையே வித்தியாசம் உண்டல்லவா. இன்றைய நாட்களில் புதிய புதிய கண்டு பிடிப்புகளை உருவாக்கியபடி இருக்கின்றனர். வீடு கட்டுவதில் அறிவியலின் திறமையும் உள்ளது, அனைத்தும் தயாராக கிடைத்து விடுகின்றன, உடனடியாக ஃப்ளாட் தயார்! மிகவும் வேக வேகமாக உருவா கின்றன எனும் போது இவையனைத்தும் அங்கே பயன்படுகின்றன அல்லவா! இவையனைத்தும் (திறமைகள்) உடன் வரக் கூடியவை ஆகும். சம்ஸ்காரங்கள் இருக்கின்றன அல்லவா! இந்த அறிவியலின் சம்ஸ்காரங்கள் கூட அங்கே செயல்படும். ஆக இப்போது தந்தை குழந்தைகளுக்குப் புரிய வைத்தபடி இருக்கிறார், தூய்மையடைய வேண்டும் என்றால் தந்தையை நினைவு செய்யுங்கள். தந்தையும் கூட காலை வணக்கம் (குட் மார்னிங்) கூறி பிறகு அறிவுரைகள் கொடுக்கிறார். குழந்தைகளே, தந்தையின் நினைவில் அமர்ந்திருக்கிறீர்களா? நடந்து சுற்றியபடி தந்தையை நினைவு செய்யுங்கள், ஏனெனில், பல பிறவிகளின் சுமை தலை மீது இருக்கிறது. ஏணியில் இறங்கி இறங்கி 84 பிறவிகள் எடுக்கிறீர்கள். இப்போது பிறகு ஒரே பிறவியில் ஏறும் கலை ஏற்படுகிறது. எந்த அளவு தந்தையை நினைவு செய்தபடி இருப்பீர்களோ, அந்த அளவு குஷியும் இருக்கும், சக்தி கிடைக்கும். பல குழந்தைகள் இருக்கின்றனர், அவர்கள் முன் வரிசையில் வைக்கப்படுகின்றனர், ஆனால் நினைவில் அறவே இருப்பதில்லை. ஞானத்தில் கூர்மை மிக்கவர் களாக இருக்கலாம், ஆனால் நினைவின் யாத்திரையில் இருப்பதில்லை. தந்தை குழந்தைகளின் மகிமை பாடுகிறார். இவரும் (பிரம்மா) கூட முதல் நம்பரில் இருக்கிறார் எனும்போது முயற்சியும் கூட கண்டிப்பாக செய்தபடி இருப்பார் அல்லவா! சிவபாபா புரிய வைகிறார் என்று நீங்கள் எப்போதும் புரிந்து கொள்ளுங்கள். அப்போது புத்தியின் தொடர்பும் அங்கே ஈடுபட்டிருக்கும். இவர் (பிரம்மா) கூட கற்றுக் கொண்டிருப்பார் அல்லவா! என்றாலும் பாபாவை நினைவு செய்யுங்கள் என்றுதான் சொல்கிறார். யாருக்கு புரிய வைக்க வேண்டும் என்றாலும் படங்கள் உள்ளன. பகவான் என நிராகாரர்தான் (உடலற்றவர்) சொல்லப்படுகிறார். அவர் வந்து சரீரத்தை தாரணை செய்கிறார். ஒரு பகவானின் குழந்தைகள் அனைத்து ஆத்மாக்களும் சகோதர-சகோதரர்கள். இப்போது இந்த சரீரத்தில் வீற்றிருக்கிறார். அனைவருமே அகால மூர்த்திகள் ஆவர். இது அகால மூர்த்தியின் (ஆத்மா) சிம்மாசனம் ஆகும். அகால சிம்மாசனம் (அழிவற்ற) என குறிப்பாக வேறு எதுவும் இல்லை. இந்த சிம்மாசனம் (சரீரம்) அகால மூர்த்தியுடையது. புருவ மத்தியில் ஆத்மா வீற்றிருக்கிறது, இது அகால சிம்மாசனம் என சொல்லப்படுகிறது. அகால சிம்மாசனம், அகால மூர்த்தியுடையது. ஆத்மாக்கள் அனைவரும் அழிவற்றவர்கள் ஆவார்கள், எவ்வளவு சூட்சுமமாக இருக்கின்றனர். தந்தை நிராகாரராக இருக்கிறார். அவர் தனது சிம்மாசனத்தை எங்கிருந்து கொண்டு வருவார்? இந்த சிம்மாசனம் (பிரம்மாவின் உடல்) என்னுடையதும் கூட என தந்தை கூறுகிறார். நான் வந்து இந்த சிம்மாசனத்தை கடனாகப் பெறுகிறேன். பிரம்மாவின் சாதாரண வயோதிக சரீரத்தில் அகால சிம்மாசனத்தில் வந்து அமருகின்றேன். ஆத்மாக்கள் அனைவரின் சிம்மாசனம் இது என இப்போது நீங்கள் தெரிந்து கொண்டுள்ளீர்கள். மனிதர்களின் விசயம்தான் பேசப்படுகிறது. விலங்குகளின் விசயம் அல்ல. மனிதர்கள் விலங்குகளை விடவும் மோசமாக ஆகி விட்டனர், முதலில் அவர்கள் தேறட்டுமே. யாராவது விலங்குகள் குறித்து கேட்டால், முதலில் தன்னை முன்னேற்றிக் கொள்ளுங்கள் என்று கூறுங்கள். சத்யுகத்தில் விலங்குகள் கூட மிகவும் நன்றாக முதல் தரமானவையாக இருக்கும். குப்பை போன்ற எதுவும் இருக்காது. அரசர்களின் மாளிகையில் புறாக்கள் முதலானவைகளின் அசுத்தம் இருந்தால் தண்டனை கொடுத்து விடுவார்கள். கொஞ்சமும் குப்பை இருக்காது. அங்கே மிகவும் கவனம் இருக்கும். பாதுகாவலுடன் இருப்பார்கள். ஒருபோதும் விலங்குகள் முதலானவை எதுவும் உள்ளே நுழைய முடியாது. மிகவும் சுத்தமாக இருக்கும். இலட்சுமி நாராயணரின் கோவிலில் கூட எவ்வளவு சுத்தமாக இருக்கிறது! சங்கர் பார்வதி கோவிலில் புறாக்களை கூட காட்டுகின்றனர். ஆகவே அவை கோவிலைக் கூட அசுத்தம் செய்யக் கூடும். சாஸ்திரங்களில் நிறைய கட்டுக் கதைகளை எழுதி விட்டனர்.

இப்போது தந்தை குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார், அவர்களிலும் கூட சிலர்தான் தாரணை செய்யத் தக்கவர்கள். மற்றவர்கள் கொஞ்சமும் புரிந்து கொள்வதில்லை. தந்தை குழந்தைகளுக்கு எவ்வளவு அன்போடு புரிய வைக்கிறார் - குழந்தைகளே, மிக மிக இனிமையானவராக ஆகுங்கள். வாயிலிருந்து எப்போதும் இரத்தினங் கள் வெளிப்பட்டபடி இருக்க வேண்டும். நீங்கள் ஞான யோகத்தில் நிறைந்தவர்கள். உங்களின் வாயில் இருந்து கற்கள் வெளி வரக் கூடாது. ஆத்மாவுக்குத்தான் மகிமை ஏற்படுகிறது. ஆத்மா சொல்கிறது -நான் பிரதம மந்திரி, நான் இன்னார். . . என்னுடைய சரீரத்தின் பெயர் இன்னது. . . நல்லது, ஆத்மாக்கள் யாருடைய குழந்தைகள்? ஒரு பரமாத்மாவுடைய குழந்தைகள். எனவே கண்டிப்பாக அவரிடமிருந்து ஆஸ்தி கிடைக்கும். அவர் பிறகு எங்கும் நிறைந்தவராக (சர்வ வியாபியாக) எப்படி இருக்க முடியும்? நாம் கூட முன்னர் எதுவும் அறியாதவர்களாகத்தான் இருந்தோம் என நீங்கள் புரிந்துள்ளீர்கள். இப்போது எவ்வளவு புத்தி திறந்திருக்கிறது! நீங்கள் எந்த கோவிலுக்குச் சென்றாலும் இவையெல்லாம் பொய்யான சித்திரங்கள் எனப் புரிந்து கொள்வீர்கள். 10 புஜங்களை உடையவர், யானையின் தும்பிக்கை உடையவர் இப்படி ஏதாவது சித்திரம் இருக்க முடியுமா? இவையனைத்தும் பக்தி மார்க்கத்தின் பொருட்கள். உண்மையில் பக்தி ஒரு சிவபாபாவுடையதாக இருக்க வேண்டும். அவர்தான் அனை வருக்கும் சத்கதி வழங்கும் வள்ளல். இந்த இலட்சுமி நாராயணரும் கூட 84 பிறவிகளே எடுக் கின்றனர் என்பது உங்கள் புத்தியில் உள்ளது. பிறகு உயந்தவரிலும் உயர்ந்த தந்தைதான் வந்து அனைவருக்கும் சத்கதி வழங்குகிறார். அவரை விட உயர்ந்தவர் யாருமில்லை. இந்த ஞானத்தின் விசயங்கள் உங்களுக்குள்ளும் கூட வரிசைக்கிரமமாக தாரணை செய்ய முடிகிறது. தாரணை செய்ய முடியாவிட்டால் வேறு என்ன பயன்? பலர் குருடருக்கு கைத்தடி ஆவதற்கு பதிலாக குருடர்களாக ஆகி விடுகின்றனர்! பால் கறக்காத பசுமாடு இருந்தது என்றால் தனியான ஒரு இடத்தில் வைத்து விடுகின்றனர். இவர்களும் கூட ஞானத்தின் பால் கொடுக்க முடிவதில்லை. கொஞ்சம் கூட முயற்சி செய்யாதவர்களும் பலர் உள்ளனர். நாம் பிறருக்கு சற்றேனும் நன்மை செய்யலாமே எனப் புரிந்து கொள்வதில்லை. தனது அதிர்ஷ்டம் குறித்த சிந்தனையே இருப்பதில்லை. போதும், எது கிடைத்ததோ அது வரை நல்லது. ஆக தந்தை சொல்கிறார் - இவருடைய அதிர்ஷ்டத்தில் இல்லை. தனக்கு சத்கதி ஏற்படுத்திக் கொள்ள முயற்சி செய்யத்தான் வேண்டும். ஆத்ம அபிமானி ஆகவேண்டும். தந்தை எவ்வளவு உயர்ந்தவரிலும் உயர்ந்தவர் மற்றும் அவர் வருவதும் பாருங்கள் பதித (தூய்மையற்ற) உலகத்தில் பதீத சரீரத்தில். அவரை அழைப்பதும் பதீத உலகத்தில்தான். இராவணன் முற்றிலும் கீழானவராக ஆக்கி விடும்போது தந்தை வந்து உயர்ந்தவர்களாக ஆக்குகிறார். முயற்சி செய்பவர்கள் இராஜா, இராணி ஆகின்றனர், முயற்சி செய்யாதவர்கள் ஏழைகளாகி விடுகின்றனர். அதிர்ஷ்டத்தில் இல்லை என்றால் முயற்சி செய்ய முடியாது. சிலர் மிக நல்ல அதிர்ஷ்டத்தை உருவாக்கிக் கொள்கின்றனர். ஒவ்வொருவரும் தான் என்ன சேவை செய்கிறோம் என்று தன்னைப் பார்க்க முடியும். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. ஞானம், யோகத்தில் சிறந்தவராகி எப்போதும் இரத்தினங்களை வெளிப்படுத்த வேண்டும், மிக மிக இனிமையானவர் ஆக வேண்டும். ஒருபோதும் கற்களை (கடுமையான வார்த்தைகள்) வெளிப்படுத்தக் கூடாது.

2. ஞானம் மற்றும் யோகத்தில் கூர்மை மிக்கவராகி தனது மற்றும் பிறருடைய நன்மையை செய்ய வேண்டும். தனது உயர்ந்த அதிர்ஷ்டத்தை உருவாக்கிக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். குருடருக்கு ஊன்று கோலாக வேண்டும்.

வரதானம்:
மூன்று நினைவு சொரூபத்தினுடைய திலகத்தை தாரணை செய்யக்கூடிய சம்பூர்ண வெற்றியாளர் (விஜயன்) ஆகுக!

சுயத்தின் நினைவு தந்தையின் நினைவு மற்றும் டிராமா ஞானத்தின் நினைவு இதுவே மூன்று நினைவுகளாகும். இதில் முழு ஞானத்திற்கான விஸ்தாரம் நிறைந்து இருக்கிறது. ஞானத் தினுடைய மரத்திற்கான இந்த மூன்று நினைவுகள். எப்படி மரத்திற்கு முதலில் விதை என்பது இருக்கிறது, அந்த விதை மூலமாக இரண்டு இலை வெளிப்படுகிறது. பிறகு, விருட்சத்துக்கான விஸ்தாரம் ஏற்படுகிறது. ஆனால் முக்கியமானது விதை, தந்தையின் நினைவு, பிறகு இரண்டு இலை அதாவது ஆத்மா மற்றும் டிராமாவின் முழு ஞானம். இந்த மூன்று நினைவுகளை தாரணை செய்யக்கூடியவர்களே ஸ்மிருதி பவ மற்றும் சம்பூர்ண விஜயிபவ என்ற வரதானியாக ஆகிவிடுகிறார்கள்.

சுலோகன்:
பிராப்திகளை சதா எதிரிலேயே வையுங்கள் அப்பொழுது பலவீனங்கள் சகஜமாக முடிவுற்று விடும்.

அவ்யக்த பிரேரணை : கம்பயிண்ட் ரூபத்தின் நினைவின் மூலம் சதா வெற்றியாளர் ஆகுங்கள்.

சங்கமயுகத்தில் பிரம்மா குமார் பிரம்மா குமாரிகள் தனியாக இருக்க முடியாது. பாபாவின் துணையின் அனுபவம், இணைந்த நிலையின் அனுபவத்தை வெளிக் (எமர்ஜ்) கொணருங்கள். பாபாவே என்னுடையவராகத்தானே உள்ளார் என்று அல்ல, துணையின் நடைமுறை அனுபவத்தை வெளிக்கொணருங்கள். அப்பொழுது மாயையின் போர், போராக இருக்காது, மாயா உங்களிடம் தோற்றுவிடும். என்ன ஆகிவிடுமோ, என்ற பயம் மட்டும் கொள்ள வேண்டாம், தைரியம் வையுங் கள். பாபாவுடன் ஆன நினைவு செய்யுங்கள். அப்பொழுது வெற்றி உங்களுடைய பிறப்பு உரிமையாக ஆகிவிடும்.