17.05.26    காலை முரளி            ஓம் சாந்தி 11.02.2010      பாப்தாதா,   மதுபன்


சிவனுடைய ஜென்ம தினத்தில் (பிறந்தநாளில்), கோபம் என்னும் எருக்கஞ்செடியின் மலரை பாப்தாதாவிற்கு அர்ப்பணம் செய்து, தர்ப்பண் (நிலைக்கண்ணாடியாக) ஆகுங்கள், தூய்மையான இல்லற வாழ்வின் நேரடி உதாரணத்தின் மூலமாக பிரத்யக்ஷ்தாவை அருகாமையில் கொண்டு வாருங்கள்.

இன்று, பாப்தாதாவிற்கு முன்னால் அமர்ந்திருக்கும் அனைத்து குழந்தைகளும் மேலும் உள்நாடு- வெளிநாடுகளில் அமர்ந்திருக்கும் நாலா புறங்களிலும் உள்ள குழந்தைகளும் - மிகுந்த குஷியுடன் தந்தையினுடைய மேலும் தங்களுடைய ஜென்ம தினத்தை கொண்டாடுவதற்கான - பலமடங்கு வாழ்த்துக்களையும், ஆசிர்வாதங்களையும் கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள். நீங்கள் இங்கே நேரில் அமர்ந்திருக்கிறீர்கள் மேலும் மிகவும் தூரத்தில் இருந்து அறிவியல் சாதனங்கள் (தொழில் நுட்பம்) மூலம் அனைத்து குழந்தைகளும் மிகுந்த குஷியுடன், இதயப்பூர்வமான வாழ்த்துக்களை கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள். இங்கு வந்திருக்கும் நீங்கள் அனைவரும் தந்தையின் பிறந்தநாளைக் கொண்டாட வந்துள்ளீர்களா? அல்லது உங்களுடைய பிறந்த நாளையும் கொண்டாட வந்துள்ளீர்களா? ஏனெனில் இந்த ஜெயந்தி ஒரு விசித்திரமான ஜெயந்தி (பிறந்தநாள்). இது ஏன் விசித்திரமானது? ஏனெனில் இது தந்தை மேலும் குழந்தைகளுக்கான ஒருமித்த பிறந்த நாள் ஆகும். முழு கல்பத்திலும் இது போன்ற ஒரு ஜெயந்தி நடப்பதே இல்லை. முழு கல்பத்தின் சக்கரத்தை சுற்றி வந்து பாருங்கள். இது விசித்திரமான ஜெயந்தியாக இருக்கின்றது. எனவே பாப்தாதா அனைத்து குழந்தைகளிடமும் கேட்டுக் கொண்டு இருக்கின்றார்: அதாவது நீங்கள் தந்தைக்கு வாழ்த்துச் சொல்ல வந்தீர்களா அல்லது தந்தை யிடமிருந்து வாழ்த்துக்களை பெற வந்தீர்களா? பாப்தாதா எதையும் தனியாகச் செய்வதில்லை ஏனெனில் அவர் அவதரித்த உடனேயே யக்ஞத்தை படைத்தார்; யக்ஞம் என்றால் பிராமணர்கள் (குழந்தைகள்) வேண்டும். எனவே, தந்தையின் கூடவே உங்களுடைய பிறப்பும் நிகழ்ந்தது. இதனுடைய ஞாபகார்த்தமாகவே பக்தியில் சிவராத்திரியை கொண்டாடும்போது, சிவலிங்கத்துடன் சேர்த்து 'சாலிக்கிராமங்களுக்கும்' பூஜை செய்யப்படுகின்றது. எண்ணற்ற சாலிகிராம்களை பூஜிக்கின்றார்கள். எனவே இந்த ஜெயந்தி அற்புதமான ஜெயந்தி, அதனால் தான் இது வைரத்திற்கு சமமான ஜெயந்தியாக சொல்லப்படு கின்றது. எனவே பாப்தாதா தனக்கு துணையாக இருக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தனது கோடான கோடி கரங்களாலான மாலையின் நடுவே பலகோடி மடங்கு ஆசிர்வாதங்களை கொடுத்துக்கொண்டு இருக்கின்றார். இது கூட தந்தை மற்றும் குழந்தைகளுக்கு இடையிலான ஆழமான அன்பிற்கான அடையாளமாகும். பாப்தாதா, குழந்தைகளுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளார் - அதாவது, கூடவே இருப்பேன், கூடவே அழைத்துச் செல்வேன் என்று. எனவே, சொல்லுங்கள் - குழந்தைகள் நீங்களும் தந்தைக்கு வாக்குறுதி கொடுத்துள்ளீர்கள் தானே! சங்கமயுகத்தில் ஒன்றாக இருக்கின்றோம், ஒன்றாக இருக்கவும் வேண்டும், விஷ்வ சேவையும் கூடவே இருக்கின்றது. இருப்பது என்றாலும் (அவர்) கூடவே, பறப்பது என்றாலும் கூட (அவர்) கூடவே. எனவே சொல்லுங் கள், நீங்களும் வாக்குறுதி கொடுத்துள்ளீர்கள் தானே அதாவது கூடவே இருப்போம், கூடவே செல்வோம் மேலும் பிரம்மா பாபாவின் கூடவே விஷ்வத்தில் இராஜ்ஜியம் செய்வோம். வாக்குறுதி கொடுத்துள்ளீர்களா? பக்காவான (உறுதியான) வாக்குறுதியா? இது தான் (கூடவே இருப்பேன் என்ற வாக்குறுதி தான்) சிவ ஜெயந்திக்கான சிறப்பு.

அமிர்தவேளையிலிருந்தே பல்வேறு இடங்களைச் சேர்ந்த குழந்தைகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் - வாழ்த்துக்களையும், ஆசிகளையும் அனுப்புவதை பாப்தாதா பார்த்தார். நீங்களோ இப்போது நேரில் வாழ்த்துகளைக் கொடுத்துக் கொண்டும் இருக்கின்றீர்கள், பெற்றுக் கொண்டும் இருக்கின்றீர்கள். வாழ்த்துக்களைக் கொடுப்பதும் பெறுவதும் ஒரே நேரத்தில் நடக்கின்றது. முன்னால் அமர்ந்து, பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் பகவானின் குழந்தைகள் எவ்வளவு பாக்கிய சாலிகள்! அனைவருடைய முகங்களும் மலர்ந்து, குஷியில் பறந்து கொண்டு இருப்பதை பார்க்க முடிகின்றது. ஒருபுறம் பாப்தாதா குழந்தைகளின் பாக்கியத்தை பார்த்துக் கொண்டு இருக்கின்றார், மறுபுறம் பக்தர்களையும் பார்த்துக் கொண்டு இருக்கின்றார். பக்தர்கள் இன்னும் இறைவனை "வாருங்கள்" என்று அழைத்துக் கொண்டு இருக்கின்றார்கள், ஆனால் நீங்களோ அவருடன் கூடவே இருந்து கொண்டாடிக் கொண்டு இருக்கின்றீர்கள். பக்தர்களின் அறிவாற்றலும் குறைவானது அல்ல என்பதை பாப்தாதா பார்த்தார். நீங்கள் எதை இப்பொழுது நடைமுறையில் செய்து கொண்டு இருக்கின்றீர்களோ அதனுடைய நியாபகார்த்த ரூபத்தில் - எத்தனை நல்ல விதியின் மூலமாக நியாபகார்த்தத்தை உருவாக்கி இருக்கின்றார்கள். நீங்கள் விரதம் இருந்தீர்கள் எனில் அவர்களும் கூட விரதத்தின் நியாபகார்த்தத்தை உருவாக்கி இருக்கின்றார்கள், அவர்கள் ஒரு நாளிற்கான அல்லது குறிப்பிட்ட காலத்திற்கான விரதத்தில் இருக்கின்றார்கள். ஆனால் நீங்கள் எப்படிப்பட்ட விரதம் இருக்கின்றீர்கள்? அனைவரும் தந்தைக்கு முன்னால் விரதம் இருப்பதற்கான உறுதி மொழியை எடுத்துள்ளீர்கள் தானே! நீங்கள் தந்தையிடத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடன் விரதம் எடுத்தீர்கள் - அதாவது பாபா, நாங்கள் இந்த முழு ஜென்மத்திற்காக, பிராமண ஜென்மத்திற்காக விரதத்தை தாரணை செய்வோம். விரதத்தை தாரணை செய்தீர்கள் தானே? எதற்கான விரதம்? பவித்ரதாவிற்கான விரதம்.

நீங்கள் ஒரு பிறவிக்கான விரதத்தை எடுத்துள்ளீர்கள் ஆனால் ஒரு பிறவிக்கான பவித்ரதாவின் விரதம் என்பது 21 பிறவிகள் வரை நீடிக்கும். அவர்கள் (பக்தர்கள்) ஒரு குறுகிய நேரத்திற்காக உணவுக் கட்டுப்பாட்டுடன் விரதம் இருந்து, இரவு கண் விழிக்கும் காரியத்தை செய்கின்றார்கள். ஆனால், நீங்கள் ஒரு பிறவிக்கான கண் விழித்தல் (விழிப்புணர்வு) மூலமாக அனைத்து விதமான இருளிலிருந்தும் வெளியேறி வெளிச்சத்திற்கு வந்து விட்டீர்கள் மேலும் இந்த விழிப்புணர்வு உங்களுக்கு 21 பிறவிகள் வரை நீடிக்கும். நீங்கள் இன்று அந்தஅளவிற்கு விழிப்புணர்வு அடைந்துள்ளீர்கள் அதாவது உங்களுடைய விழிப்புணர்வின் மூலமாக முழு உலகத்திலும் விழிப்புணர்வின் ஜோதி ஏற்றப்படும். எந்தவிதமான துக்கம், அசாந்தி என்ற இருள் இருக்காது. எனவே சொல்லுங்கள், முழு உலகையும் இருளிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக் கிறீர்கள் - இந்த எல்லையற்ற விரதம்(பவித்திரதா) உங்களுக்குப் பிடித்திருக்கின்றதா? இதில் (பவித்திரதாவின் தாரணையில்) சிரமம் ஏதும் இல்லையே? இது எளிதா அல்லது கடினமா? எளிதாகத் தோன்றுகின்றது! யாருக்கெல்லாம் இது எளிதாகத் தோன்றுகின்றதோ அவர்கள் கைகளை உயர்த்துங்கள். எப்போதாவது கடினமாகத் தோன்றுகிறதா? சில நேரங்களில் (கடினமாகத் தோன்றுகிறதா)? இல்லை, ஏனெனில் பவித்திரதா (தூய்மை) என்பது நமது பிறப்புரிமை என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே, தூய்மை என்பது வெறும் பிரம்மச்சரியம் மட்டுமல்ல, எண்ணம், சொல், செயல், உறவு மற்றும் தொடர்பு என அனைத்திலும் தூய்மையாக இருப்பதாகும். நீங்கள் தூய்மையின் சமஸ்காரங்களை மிக எளிதாக தாரணை செய்யக்கூடியவர்கள். நீங்கள் தூய்மைக் கான உறுதிமொழியை எடுத்துவிட்டீர்கள், ஆனால் தற்போதைய காலத்திற்கு ஏற்ப பாப்தாதா நேரத்தினுடைய எச்சரிக்கையை கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்: அதாவது எப்படி தூய்மைக்கான விரதத்தை தைரியம் கொண்டு தன்னுடைய சுவ தர்மமாக புரிந்து தாரணை செய்தீர்களோ அப்படி இன்னொரு பூதமாக இருப்பது கோபம்; எனவே இன்று பாப்பதாதா இதைக் கேட்கின்றார் - அதாவது ஒரு மகா பூதத்தை (காமம்) விரதம் இருந்து விருத்தியை (உள்ளுணர்வுவை) மாற்றினீர்கள் ஆனால் இரண்டாவது பூதமாக இருப்பது இந்த கோபம், என்ன இந்த கோபம் என்ற பூதத்தின் மீது வெற்றி பெற வேண்டுமா, இதற்கான சங்கல்பம் செய்துள்ளீர் களா அல்லது இரண்டாவது விகாரம் தானே என்று விட்டு விட்டீர்களா? ஏனெனில், கோபம் என்பது அனைவருடனான தொடர்பில் வருகின்றது. பொதுவாக பிறந்தநாள் கொண்டாடும்போது ஒருவர் மற்றவருக்கு பரிசையும் கொடுக்கின்றீர்கள், எனவே இன்று பாப்தாதா விரும்புவது என்னவெனில் - எப்படி துணிவு மற்றும் தந்தையின் உதவியுடன் உங்களில் பெரும்பாலானோர் ஏற்கனவே பல வெற்றிகளை அடைந்து முன்னேறிச் சென்று கொண்டு இருக்கின்றீர்களோ, அதேபோல் கோபத்தின் மீதும் உங்களால் வெற்றி பெற முடியுமா? ஏனெனில், எந்தவொரு பூதமும்(விகாரமும்) மன உளைச்சலையே தரும், குறிப்பாக கோபம் என்ற பூதம் மற்றவர்களுடனான சம்பந்தம், தொடர்பில் வருகின்றது. உங்களுடைய மனதில் கோபம் வரும்போது, நீங்களே கோபத்திற்கு கட்டாயப்படுத்தப் பட்டவராக (அடிமையாக) ஆகி விடுகின்றீர்கள். நீங்கள் தந்தையின் பிறந்தநாளைக் கொண்டாட வந்திருக்கிறீர்கள்; எனவே இன்று பாரதம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள அனைத்துக் குழந்தைகளிடமிருந்தும் 'கோபத்தை' பரிசாகப் பெற பாப்தாதா விரும்புகிறார். இது முடியுமா? முடியுமா? இன்றைய நாளில் தந்தைக்கு இந்தப் பரிசை வழங்க முடியும் என்று யாரெல்லாம் புரிந்துள்ளீர்கள், மனதளவில் கூட (கோபம்) கூடாது, கனவிலும் கூட (கோபம்) கூடாது, அப்படி தங்களுக்காக சங்கல்பம் வைத்து, தைரியத்துடன் முன்னேறிச் செல்வதற்கு சக்தி இருக்கின்றதா? எனவே தந்தைக்கு முன்னால் தைரியத்துடன் சங்கல்பம் செய்ய முடியுமா? செய்வீர்களா மேலும் தந்தையிடமிருந்து பரிசை பெறுவீர்களா? பரிசாக (கோபத்தை) கொடுங்கள் மேலும் பரிசை பெறுங்கள். ஒருவேளை கோபத்தின் மீது வெற்றி பெற்று விட்டீர்கள் என்றால் மற்றவற்றின் மீது (மற்ற விகாரங்களின் மீது) வெற்றி பெறுவதற்கான தைரியம் வரும். எனவே, நாம் இந்த பரிசை கொடுத்து, பாபாவிடம் பரிசை பெற வேண்டும் என்று யார் புரிந்துள்ளீர்கள்? அவர்கள் கைகளை உயர்த்துங்கள். நல்லது, கொடிகளையும் அசைக்கின்றீர்கள். குமாரிகளும் கூட இருக்கின்றீர்கள்! பாருங்கள்!

குழந்தைகளின் துணிச்சலைப் பார்த்து பாப்தாதா மிகவும் மகிழ்ச்சி அடைகிறார். நீங்கள் இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றீர்கள் தானே! புகைப்படம் (போட்டோ) எடுங்கள், மீண்டும் கைகளை உயர்த்துங்கள். ஆம், அனைவரையும் புகைப்படம் எடுங்கள். இந்தத் துணிச்சலுக் காக, ஒவ்வொரு நாளும் அமிர்தவேளையில் நீங்கள் சந்திப்பை கொண்டாடும் போது, உங்களுக்கு விசேஷமாக சகஜமாக "அனுபவி ஆத்மா" ஆகுவதற்கான வாழ்த்துக்களை பாப்தாதா கொடுப்பார் ஏனெனில், நீங்கள் அனைவரும் அவரவர் இடங்களில் வாழ்ந்துகொண்டே, இல்லறத்தைச் கவனித்துக்கொண்டே, வீட்டை விட்டு வெளியேறாமல் தூய்மையான இல்லற வாழ்வை (பவித்ர பிரவிருத்தி) நடத்துவதை மக்கள் பார்க்கும்போது என்னவாகும்? ஆத்மாக்கள் வரிசையில் நிற்க வேண்டும் என்ற உங்கள் அனைவருடைய சுப பாவனையானது நிறைவேறி, வரிசையில் நிற்கக் கூடிய காட்சி உங்களுக்கு தென்படும். ஏனெனில் கோபம் வெளிப்படையாக தென்படுகின்றது. நடைமுறையில் தூய்மையாக நீங்கள் வாழ்வதை பார்க்கும்போது, இவர்கள் தூய்மையை பற்றிப் பேசுவது மட்டுமன்றி, தூய்மையாக வாழ்ந்து காட்டு கின்றார்கள் என்பார்கள். பிரத்யக்ஷ்தாவை (பாபாவை வெளிப்டுத்துதல் என்பதை) விரும்புகின்றீர்கள் எனில் இது அத்தாட்சியாக (தூய்மை யான இல்லற வாழ்வு சாட்சியாக) இருக்க வேண்டும்; இதன் மூலம் ஈர்க்கப்பட்டு அனைவரும் தானாகவே வருவார்கள்.

ஆனால் சொல்லட்டுமா? மேலும் சொல்லட்டுமா? பெரும்பாலும் கோபம் வருவதற்கான முக்கியமான காரணம் என்னவென்று பார்க்கும் போது, எங்காவது ஒரு மூலையில் பொறாமை இருப்பதும், மற்றவர்களிடம் குறைகளைக் காண்பதும் 'தேவையற்ற எண்ணங்கள்' எனும் விதையை உருவாக்குகிறது. இந்த விதையிலிருந்தும் கூட கோபம் ஏற்படுகின்றது ஏனெனில் வீணான எண்ணங்கள் என்பது விதை, இந்த விதையிலிருந்து கோபமும் உற்பத்தி ஆகின்றது மேலும் அதற்கு ஒரு வார்த்தை காரணமாக இருக்கின்றது; அந்த ஒரு வார்த்தையினுடைய விதையை அழித்து விட்டால் (கோபத்தை வெல்வது) எளிமையாகிவிடும். அந்த ஒரு வார்த்தை: 'ஏன்?'. இது ஏன் இப்படி?, இது ஏன் நடந்தது?, இதை ஏன் செய்தார்கள்?, இதை ஏன் செய்கின்றீர்கள்? இந்த 'ஏன்' என்ற வார்த்தையின் வரிசை மிகவும் நீளமாக இருக்கின்றது.

ஆங்கிலத்தில் 'க்யூ' (க்வொச்டின்-கேள்வி) என்ற எழுத்தை எழுதுவது கடினம், ஆனால் 'ஏ' (ஆன்ஸர்-பதில்) என்று எழுதுங்கள், எவ்வளவு எளிது! எனவே, பாப்தாதா இன்று இதையே விரும்புகின்றார் அதாவது இந்த "ஏன்" என்ற சப்தத்தின் வரிசையை முடித்தல் வேண்டும். மிக விரைவில் தந்தை பிரத்யக்ஷ்ம் ஏற்படட்டும், ஒவ்வொருவரின் உள்ளத்திலும் தந்தையினுடைய அன்பின் கொடி பறக்கட்டும் மேலும் உள்ளம் பாடல் பாடட்டும், உள்ளத்தில் நம்முடைய பாபா வந்துவிட்டார், இனிமையான பாபா வந்து விட்டார் என்ற பாடல்

ஒ-க்கட்டும் என்பது உங்கள் அனைவரின் ஆசையாக இருக்கின்றது. இதைத் தானே விரும்பு கின்றீர்கள்! விரைவிலும் விரைவாக பிரத்யக்ஷ்தாவின் கொடி எல்லோர் உள்ளத்திலும் பறக்கட்டும். இதற்காக - இந்த "ஏன், என்ன, எப்படி நடக்கும்" போன்ற 'ஏ-ஏ' (ஹிந்தியில் கே, கே) என்ற கேள்விகளின் மொழியை முடித்துவிட்டு, ஏதாவது பேச வேண்டும் என்றால் 'அதிசயம்' (கமால்) பற்றி பேசுங்கள்; 'ஏன் ஏன்' என்று கேட்காதீர்கள். (யக்ஞத்தின்) ஆரம்ப காலத்தில் - பாகிஸ்தான் பிரிவினையின் போது பாப்தாதா எப்பொழுது போர்டிங் (தங்குவதற் கான விடுதி) ஆரம்பித்தாரோ, அப்பொழுது ஜகதம்பா (மம்மா) அவர்கள் குழந்தைகளிடம் இதையே தான் கூறுவார் - 'ஏன் ஏன்' (கே, கே) என்ற மொழியை பேசாதீர்கள். கே, கே என்ற சப்தத்தை அதிகமாக எழுப்புவது யார்? அது நன்றாக இருக்கின்றதா? எனவே இப்பொழுது ஏன், என்ன என்ற கேள்விகளை எழுப்பாதீர்கள். சரி பாபா, நல்லது, மிகவும் சிறப்பு, நாம் இணைந்து செய்வோம், நாம் உயரப் பறப்போம் - இப்படிப்பட்ட வார்த்தைகளை பேசுங்கள். உங்கள் மொழியை மாற்ற முடியுமா? கே-கே என்பது கூடாது, இந்த ஏன் என்ற க்யூவை விட்டுவிட்டால், ஆத்மாக்களின் க்யூ (வரிசை) என்பது ஏற்படும்.

பாருங்கள், சிவபெருமானுக்கு எருக்கஞ்செடி மலர்களைத்தான் அர்ப்பணம் செய்கின்றார்கள்; எனவே சிவராத்திரியை கொண்டாடிக் கொண்டிருக்கும் இன்று, சிவனுடைய ஜென்ம தினத்தை கொண்டாடிக் கொண்டு இருக்கின்றீர்கள் எனில் அனைவரும் இந்த 'கோபம்' என்னும் எருக்கஞ்செடி மலரை பாப்தாதாவிற்கு அர்ப்பணம் செய்துவிடுங்கள், அப்போது நீங்கள் ஒரு கண்ணாடியாக (தரிசனம் தருபவராக) ஆகி விடுவீர்கள். பிடித்திருக் கின்றதா? பிடித்திருக்கின்றது தானே? நல்லது. இனி ஹோலி பண்டிகையின் போது பாப்தாதா வரும்போது, இதற்கான முடிவை (ரிசல்ட்) சரிபார்ப்பார். சோர்வடைந்து விடாதீர்கள். முடியவில்லை என்று நினைக்காமல், நிச்சயமாக முடியும் என்ற உறுதியான புத்தியுடன் (நிச்சய புத்தி) செய்யுங்கள், செய்து தான் தீர வேண்டும். கைகளை உயர்த்துங்கள்; கைகளை உயர்த்துவது என்றால் தந்தையிடம் (கோபத்தை) கொடுத்து விட்டீர்கள் என்று அர்த்தம். கொடுத்துவிட்டீர்கள் தானே? மீண்டும் கைகளை உயர்த்துங்கள். இதோ, தாதிமார்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், பார்க்கின்றீர்கள் தானே? கைகளை தட்டுங்கள். ஒருபோதும் தைரியத்தை விட்டு விடாதீர்கள். ஒருவேளை ஏதேனும் கொஞ்சம் குறைவாக இருந்தாலும் கூட, முன்னேறிச் செல்வதற்கான தைரியத்தை வையுங்கள், விட்டு விடாதீர்கள். முன்னேறிக் கொண்டே இருங்கள். பாப்தாதா இணைந்தே இருக்கின்றார், துணையாக இருக்கின்றார் என்று சொல்கின்றீர்கள் தானே; இணைந்து இருக்கின்றார். எனவே அப்படிப்பட்ட நேரத்தில் (இறைவனே துணையாக இருக்கக்கூடிய நேரத்தில்) ஒருவேளை என்ன நடந்தாலும் கூட பாப்தாதா இணைந்து இருப்பதால், அவரை முன்னால் கொண்டு வந்து - பிறகு அர்ப்பணம் செய்து விடுங்கள். ஆனால், பாப்தாதா தனது குழந்தைகள் அனைவரும் முதலிடம் பெற வேண்டும் என்று விரும்புகிறார்; ஒருமுறை கொடுத்துவிட்ட பொருள் பிறருக்குச் சொந்தமாக ஆகிவிடும். கைகளை உயர்த்தினீர்கள் என்றால் (கோபத்தை) கொடுத்துவிட்டீர்கள் என்று அர்த்தம், அது இனி உங்களுடையது அல்ல. அது ஒப்படைக்கபட்டதாகும். எனவே, சங்கல்பத்தில் கூட கோபம் வந்தால், ஒப்படைத்த பொருள் மீது உரிமை கொள்தல் என்பது நேர்மையற்றதாகும் என்பதை உணருங்கள்; அது தவறான காரியமாக சொல்லப்படுகின்றது. ஒருமுறை கொடுத்த பொருளைத் திரும்பப் பெற முடியாது, ஏனெனில் அது இனி என்னுடையது அல்ல.

இன்று நாலா புறங்களிலிருந்தும் - திரையின் வழியாக பார்த்துக்கொண்டு இருப்பவர்கள், எங்கோ அமர்ந்திருந் தாலும் குஷி குஷியாக பார்த்துக் கொண்டு இருக்கும் அனைவரும் - சங்கல்பமும் (கோபத்தை அர்ப்பணம் செய்வதற்கு) செய்து கொண்டு இருக்கின்றார்கள் என்பதை பாப்தாதா பார்க்கின்றார்; எனவே (கோபத்தை அர்ப்பணம் செய்து விட்டால்) மதுபன் மேலும் அனைத்து சேவை மையங்கள் (சென்டர்ஸ்) என்னவாக ஆகி விடும்? என்னவாக ஆகி விடும்? அனைத்து சேவை மையங்களும் "நிர்விக்ன பவ" (தடையற்றவர்களாக ஆகுக) என்ற வரதானத்திற்கு உரியதாக ஆகிவிடும். பிடித்திருக்கின்றது தானே? ஏனெனில், இப்பொழுது திடீரென சூழ்நிலை யானது துக்கம் மற்றும் அசாந்தியின் காரணமாக அப்படிப்பட்ட ஒன்றாக மாறும் அதாவது உங்களுக்கு அனைத்து ஆத்மாக்களின் மீது கருணை வரும் ஏனெனில் நீங்கள் பூர்வஜ் (மூதாதை யராக இருக்கக்கூடிய) ஆத்மாக்கள், பூஜைக்குரியவராகவும், பூர்வஜ்-ஆகவும் இருக்கின்றீர்கள். எனவே பூர்வஜ் ஆத்மாக் கள், எந்தவொரு ஆத்மாவின் துக்கத்தையும், அவர்கள் அடையும் தொந்தரவுகளையும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது; ஒருவரிடத்தில் நமக்கு அன்பும், கருணையும் இருக்கும் போது அவர்கள் படும் துக்கத்தை நம்மால் பார்க்க முடியாது. எனவே, பாப்தாதா நினைப்பது என்னவெனில் காலம் உங்களை மாற்றம் செய்வதற்கு முன்பே நீங்கள் உங்களுடைய முயற்சிக்கான பலனை பெறும் அனுபவத்தை இப்பொழுதிலிருந்தே செய்ய வேண்டும் ஏனெனில் உங்களுக்கு கற்றுத் தருபவர் காலம் கிடையாது, காலம் உங்களுடைய ஆசிரியர் அல்ல (ஆசிரியர்-பாபா). எனவே பாப்தாதா விரும்புகின்றார். அதாவது ஹோலி அன்று ஒவ்வொருவரும் தங்களுடைய முடிவை (ரிசல்ட்) எழுத வேண்டும். மிக நீளமாக எழுத வேண்டாம், அதைப் படிப்பதற்கு கூட நேரம் கிடையாது. எனவே, பாப்தாதா ஏற்கனவே கூறியது போல், உங்களுக்குக் கிடைக்கும் வரதானச் சீட்டு (ப்ளசிங் கார்ட்) எவ்வளவு சிறியதாக இருக்குமோ, அதைப் போல சிறியதான சீட்டில் "ஓ.கே" என எழுதுங்கள். "ஓ.கே" சப்தத்தை எழுதுங்கள். ஒருவேளை, உங்கள் முயற்சியில் (புருஷார்த்தத்தில்) ஏதேனும் தவறு ஏற்படுகின்றது என்றால், அந்த ஓ.கே. என்ற வார்த்தையின் நடுவே ஒரு கோடு போடுங்கள். எளிது தானே! அதிக காகிதங்களை வீணாக்க வேண்டாம். ஒருவேளை புருஷார்த்தத்தில் பலமுறை தவறு நடக்கின்றது என்றால், ஒரு முறை, இரண்டு முறை, மூன்று முறை என்றால் அத்தனை கோடுகளை போட்டுக் கொண்டே செல்லுங்கள் மேலும் ஹோலி பண்டிகைக்கு முன்பாக மதுபனுக்கு அனுப்பி விடுங்கள். அனைவருடையதையும் ஒன்றாக சேர்த்து அனுப்புங்கள், டீச்சர் அனுப்பட்டும். அப்போது பாப்தாதாவிடம் உங்களுடைய முடிவுகள்(ரிசல்ட்) வந்து சேரும், அதில் யார் முதலிடம் என்று தெரிந்து விடும். பிறகு பாப்தாதா உங்களுக்குப் பல மடங்கு உள்ளத்தின் அன்பைப் பரிசாக வழங்குவார். நல்லது.

இங்கே 'டபுள் ஃபாரினர்ஸ்' (இரட்டை வெளிநாட்டினர்) இருக்கின்றீர்கள் தானே! கைகளை உயர்த்துங்கள். நீங்களும் முதலிடம் பிடிப்பீர்கள் தானே? வெளிநாட்டினர் முதலிடம் எடுக்கின்றார் களா அல்லது பாரதவாசிகள் எடுக்கின்றார்களா என்று பார்ப்போம். நல்லது. பாப்தாதாவோ அனைவரையும் வெறும் ((ஓர் உத்வேகம் கொண்ட)) போட்டியாளராக மட்டும் பார்க்கவில்லை; மாறாக தந்தையின் ஆசைகளை பூர்த்தி செய்யக்கூடிய தீபங்களின் ரூபமாக பார்க்க விரும்புகிறார். நல்லது - மதுபன்வாசிகள் என்ன செய்வீர்கள்? மதுபனில் இருப்பவர்கள் கைகளை உயர்த்துங்கள். கீழே மற்றும் மேலே (பாண்டவ பவன்) இருக்கக்கூடிய மதுபன் நிவாசிகள். மேலே இருப்பவர்களும் கைகளை நன்றாக உயர்த்தி அசைத்திடுங்கள். நல்லது. மதுபன் நிவாசிகளோ முதலிடம் பெற வேண்டும். பெற வேண்டும் தானே! பெற வேண்டும் - ஏனெனில் மதுபனைத் தான் மற்ற அனைவரும் மிக விரைவாகப் பின்பற்றுவார்கள். நல்லது.

நாலா புறங்களிலும் இணைந்து இருக்கக்கூடியவர்களை பாப்தாதா பார்த்துக் கொண்டும் இருக்கின்றார், கேட்டுக்கொண்டும் இருக்கின்றார். ஆனால் யாரெல்லாம் இப்போது (நேரடியாக பாப்தாதாவின் மகாவாக்கியத்தை) கேட்க முடியவில்லையோ, அவர்கள் முரளி மூலமாகப் பிறகு நிச்சயம் கேட்பார்கள். எனவே, நாலா புறங்களிலும் உள்ள தந்தையின் அன்பான, உதவிகரமாக இருக்கக்கூடிய இனிமையிலும் இனிமையான, அன்பிலும் அன்பான குழந்தைகளுக்கு, பாப்தாதா பல மடங்கு வாழ்த்துகளை கொடுத்துக் கொண்டு இருக்கின்றார், ஆசிர்வாதங்களையும் கொடுத்துக் கொண்டு இருக்கின்றார் மேலும் இதன் கூடவே பிரத்யக்ஷதாவின் (பாபாவை வெளிப்படுத்தும்) கொடியை விரைவில் ஏற்றுவதற்கான சங்கல்பத்தையும் கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்.

காலத்திற்காகக் காத்திருக்காதீர்கள், காலத்தை உங்கள் ஆசிரியராக ஆக்காதீர்கள். தந்தை உங்களுக்குத் தந்தையாகவும், ஆசிரியராகவும், சத்குருவாகவும் இருக்கும்போது, எப்படி உங்களுடைய ஜகதம்பா (மம்மா) - செய்தார்களோ, அப்படியே அவரை பின்பற்றுங்கள்; அதாவது இரண்டே சப்தங்களின் (தாரணையில்) மம்மா நம்பரை பெற்று விட்டார். தந்தை சொன்னார் மேலும் ஜகதம்பா செய்தார் (சொன்னார், செய்தார் - இரண்டு வார்த்தைகள்) - அப்படிப்பட்ட தீவிர புருஷார்த்தம் செய்தார் மேலும் நம்பரை பெற்றார். நீங்கள் அனைவரும் கூட ஏற்றுக்கொள் கின்றீர்கள் தானே, அப்படியெனில் தாங்களும் கூட தாய்-ஜகதம்பாவை பின்பற்றுங்கள். நல்லது. அனைவருக்கும் அன்பு நினைவுகள் மேலும் உள்ளத்தின் மிகுந்த ஆசிர்வாதங்களை சுவிகாரம் செய்யுங்கள் (ஏற்றுக்கொள்ளுங்கள்). கூடவே தந்தை குழந்தைகளை எஜமானர்களாகப் பார்த்து வணங்கிக் கொண்டு இருக்கின்றார்.

பாப்தாதா அனைத்து மண்டலங்களுக்கும் சொல்லியிருக்கின்றார் - அதாவது வாரிசுதாரர்கள் மற்றும் மைக் (செல்வாக்கு மிக்கவர்களை) உருவாக்குங்கள். செல்வாக்கு மிக்கவர்களின் அனுபவத்தை கேட்கும் போது - நாமும் ஆக வேண்டும் என்ற எண்ணம் மற்றவர்களுக்கு வரும், எவருக்கு வேண்டுமானாலும் உறுதிபட அவர்கள் கூற முடியும். எனவே, அனைத்து மண்டலங் களிலிருந்தும் அத்தகையவர்களின் பட்டியலை (லிஸ்ட்) அனுப்புங்கள். இன்று டெல்லி மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் பட்டியல் அனுப்பியுள்ளதை பாப்தாதா பார்த்தார்; பாப்தாதா அவர்களுக்கு வாழ்த்துகளை கொடுத்துக் கொண்டு இருக்கின்றார். எனவே, அனைத்து மண்டலங் களிலிருந்தும் நீங்கள் பட்டியலை (லிஸ்ட்) அனுப்பிய பிறகு, எத்தனை வாரிசு தயாராகி உள்ளார்கள் என்ற முடிவு (ரிசல்ட்) சொல்லப்படும். (நீங்கள் அனுப்பும் லிஸ்ட்) சோதிக்கப்படும், நீங்கள் பட்டியல் கொடுத்து விட்டீர்கள் என்பதால் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படாது. மறை முகமாக சோதிக்கப்படும் (செக்கிங்). நல்லது, ஆதியில் (மகாவாக்கியத்தை தொடங்கும் போது) வாழ்த்துக்களும், ஆசிர்வாதங்களும் கிடைத்தது, இப்பொழுது மீண்டும் பாப்தாதா ஒவ்வொரு குழந்தைக்கும், உளமாற பெயர் சகிதமாக (ஒவ்வொரு குழந்தையின் பெயரையும் மனதில் நினைவு கூர்ந்து) பல கோடி மடங்கு வாழ்த்துக்களை கொடுத்துக் கொண்டு இருக்கின்றார். தந்தையிடத்தில் அனைத்து குழந்தைகளின் சித்திரமும் வதனத்தில் வெளிப்பட்டது. எனவே, பாப்தாதா – குழந்தை களின் பிறந்த நாளை கொண்டாடினார் மேலும் குழந்தைகள் - தந்தையின் பிறந்தநாளை கொண்டாடினார்கள், இருவருக்கும் நல்லாசிகள். நல்லது!

ஆசீர்வாதம்:
அனைவருக்கும் மரியாதை கொடுப்பதன் மூலமாக, தனது பதிவை சரியானதாக வைத்துக்கொள்ளக்கூடிய 'அனைவருக்கும் அன்பானவர்' ஆகுக.

மற்றவர்களுக்கு யார் எந்த அளவிற்கு மரியாதை கொடுக்கின்றார்களோ, அந்த அளவிற்கு மட்டும் தான் அவர்கள் தங்களது பதிவை சரியாக வைத்துக்கொள்ள முடியும். மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பது என்பது உண்மையில் தனது பதிவைச் சிறப்பாக உருவாக்குவதாகும். எப்படி யக்ஞத்திற்கு உதவியாளராக ஆகுவது தான் உதவியை பெறுவது என்பதாகுமோ; அதே போல், மரியாதை கொடுப்பது தான் மரியாதையைப் பெறுவதாகும். ஒரு முறை மரியாதை கொடுங்கள் மேலும் பல முறை பெறுவதற்கான அதிகாரியாக ஆகுங்கள். பொதுவாக சிறியவர்களுக்கு அன்பையும், பெரியவர்களுக்கு மரியாதையையும் கொடுக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால், யார் அனைவரையும் பெரியவர்களாகக் கருதி மரியாதை கொடுக்கின்றார்களோ, அவர்கள் அனைவரின் அன்பிற்கும் பாத்திரமானவர்களாக ஆகி விடுகின்றார்கள். இதற்காக ஒவ்வொரு விஷயத்திலும் "முதலில் நீங்கள்" என்ற பாடத்தை பக்கா (உறுதி) செய்யுங்கள்.

சுலோகன்:
பாப்தாதா வழங்கிய படிப்பினைகள் சரியான நேரத்தில்

நினைவுக்கு வருவதே 'தீவிர புருஷார்த்தம்' (தீவிர முயற்சி) செய்வதாகும்.


அவ்யக்த சமிக்கை: சதா ஆடாத-அசையாத (உறுதியான), ஒரே சீரான

மனோநிலையை அனுபவம் செய்யுங்கள்.

யார் 'ஆல்-ரவுண்ட்' சேவை செய்யக்கூடியவர்களோ, அவர்கள் எத்தகைய சூழ்நிலையிலும் தனது மனோநிலை ஏகரஸ்-ஆக (ஒரே சீராக) இருக்கின்றதா என்பதில் விசேஷமாக கவனம் செலுத்த வேண்டும், அப்பொழுது தான் வெற்றி என்பது கிடைக்கும். எப்பொழுது ஸ்ரீமத்தில் - மன்மத் (மனதின் வழி), தேக அபிமானத்தின் வழி, சூத்திர தன்மையின் வழி கலக்கப்படுகின்றதோ அப்பொழுது மனம் ஏக்ரஸ்-ஆக (ஒரே சீராக) இருக்காது. மனம் வெவ்வேறு ரசனையில் இருந்தால் மனதின் நிலையும் வெவ்வேறு விதமாகத்தான் இருக்கும். ஒருவருடைய ரசனையில மட்டும் இருந்தால் மனோநிலை ஏக்ரஸ்-ஆக இருக்கும்.

விசேஷ அறிவிப்பு - மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை யோக பயிற்சி:

இன்று மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை. இன்று மாலை 6.30 முதல் 7.30 மணி வரை, அனைத்து சகோதர சகோதரிகளும் ஒருங்கிணைந்து, தங்களுடைய - பூர்வஜ் (மூதாதையர்) மற்றும் 'பூஜ்ய' சொரூபத்தின் சுவமானத்தின் மூலமாக, முழு கல்ப விருட்சத்திற்கும் (உலகம் முழுவதற் கும்) தங்களுடைய சுப உணர்வு (சுப பாவனா) மற்றும் சுப விருப்பத்தினுடைய (சுப காம்னா) சக்திசாலியான கிரணங்களைப் கொடுக்கக்கூடிய சேவையைச் செய்யுங்கள்.