17-06-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! சூரிய வம்சத்தின்
இராஜ்ய பதவியை அடைவதற்காக அனைத்தையும் தந்தையிடம் ஸ்வாஹா (அர்ப்பணம்)
செய்யுங்கள், சூரிய வம்சத்தின் இராஜ்ய பதவி என்றால்
ஏர்-கண்டிஷன் டிக்கெட் ஆகும்.
கேள்வி:
இந்த உலகில் குழந்தைகளாகிய
உங்களைப் போன்ற குஷியின் கூடிவே அதிர்ஷ்டம் நிறைந்தவர் யாரும்
இல்லை - எப்படி?
பதில்:
குழந்தைகளாகிய உங்களின் முன்பாக
எல்லைக்கப்பாற்பட்ட தந்தை இருக்கிறார். அவரிட மிருந்து
எல்லைக்கப்பாற்பட்ட ஆஸ்தி கிடைத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள்
இந்த சமயம் எல்லைக்கப்பாற்பட்ட தந்தை, ஆசிரியர் மற்றும்
சத்குருவினுடையவர் ஆகி அவரிடமிருந்து எல்லைக்கப்பாற்பட்ட பலனை
அடைகிறீர்கள். உலகினருக்கு அவரைத் தெரியவே தெரியாது எனும்போது
உங்களைப் போன்ற குஷியின் கூடவே அதிர்ஷ்ட மிக்கவர் யாரும்
இருக்க முடியாது.
பாடல்:
உயர்ந்த குஷியின் அதிர்ஷ்டம்
நிறைந்தவர். . . .
ஓம் சாந்தி.
இப்போது நாம் பிராமண சம்பிரதாயத்தவராக இருக்கிறோம் பிறகு
தெய்வீக சம்பிர தாயத்தவர் ஆகப் போகிறோம் என பிராமண குல பூஷண
குழந்தைகள் அறிவீர்கள். குழந்தை களுக்கு தந்தை அமர்ந்து புரிய
வைக்கிறார் - இப்போது எல்லைக்கப்பாற்பட்ட தந்தை நம் முன்பாக
இருக்கிறார் மேலும் அவரிடமிருந்து எல்லைக்கப்பாற்பட்ட ஆஸ்தி
கிடைத்துக் கொண்டிருக்கிறது. எனும்போது வேறென்ன வேண்டும்? பக்தி
மார்க்கம் எப்போதிலிருந்து நடக்கிறது என்பது யாருக்கும்
தெரியாது. பக்தி மார்க்கத்தின் பக்தர்கள் பகவானை அதாவது
பிரியதர்ஷினிகள் பிரிய தர்ஷனை நினைவு செய்கின்றனர். ஆனால்
அவரைத் தெரியாது என்பதே அதிசயமான ஒன்று. பிரியதர்ஷினிக்கு
பிரியதர்ஷனை தெரியாது என எப்போதாவது பார்த்ததுண்டா?
இல்லாவிட்டால் எப்படி நினைவு செய்வது? பகவான் அனைவரின்
தந்தையாக இருப்பவர். குழந்தைகள் தந்தையை நினைவு செய் கின்றனர்.
ஆனால் அறிமுகம் இல்லாமல் நினைவு செய்வது அனைத்தும் வீணாகப்
போகிறது. ஆகையால் இவ்விதமாக நினைவு செய்வதால் எந்த லாபமும்
கிடைப்பதில்லை. நினைவு செய்து யாரும் அந்த இலட்சியத்தை
அடைவதில்லை. பகவான் யார்? அவரிட மிருந்து என்ன கிடைக்கும்? வேறு
யாரும் இதனைப் புரிந்து கொள்ளவில்லை. எவ்வளவு தர்மங்கள்,
கிறிஸ்து, புத்தர் முதலான போதகர்கள் அதாவது தர்ம ஸ்தாபகர்களை
பின்பற்று பவர்கள் நினைவு செய்கின்றனர், ஆனால் அவர்களை நினைவு
செய்வதால் நமக்கு என்ன கிடைக்கும் என்பதை அறியவில்லை. இதை விட
உலகாயத கல்வியேமேல். இலட்சியம், இலக்கு புத்தியில் இருக்கும்.
தந்தையிடமிருந்து என்ன கிடைக்கும், ஆசிரியரிடமிருந்து என்ன
கிடைக்கும், குருவிடமிருந்து என்ன கிடைக்கும்? இதை யாராலும்
புரிந்து கொள்ள முடியாது. நீங்கள் இங்கே தந்தை, ஆசிரியர்
மற்றும் சத்குருவினுடையவராக ஆகிறீர்கள். தந்தை மற்றும் ஆசிரியரை
விட குரு உயர்ந்தவராக ஆகிறார். நாம் தந்தையுடையவர்களாக ஆகி
யுள்ளோம் என இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு நிச்சயம்
ஏற்பட்டுள்ளது பாபா நம்மை 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு போல
சொர்க்கத்தின் எஜமான் ஆக்குகிறார் அல்லது சாந்தி தாமத்தின்
எஜமான் ஆக்குகிறார். தந்தை கேட்கிறார் - செல்லமான குழந்தைகளே,
நீங்கள் என்னிடமிருந்து உங்களின் ஆஸ்தியை எடுப்பீர்கள் அல்லவா?
ஆம் பாபா ஏன் எடுக்க மாட்டோம்? என அனைவரும் சொல்கின்றனர்.
நல்லது, சந்திர வம்சத்தின் ராமனின் பதவியை அடைவதில் திருப்தியா?
உங்களுக்கு என்ன வேண்டும்? தந்தை பரிசு கொண்டு வந்திருக்கிறார்.
நீங்கள் சூரிய வம்சத்தின் லட்சுமியை மணமுடிப்பீர்களா? அல்லது
சந்திர வம்சத்தின் சீதையையா? நீங்கள் உங்களின் முகத்தைப்
பாருங்கள். ஸ்ரீ நாராயணனை அல்லது ஸ்ரீ லட்சுமியை மணமுடிக்கத்
தகுதி வாய்ந்தவர்களா? தகுதி வாய்ந்தவராய் ஆகாமல் எப்படி
மணமுடிக்க முடியும்? இப்போது தந்தை அமர்ந்து புரிய வைக்கிறார்
- கல்பத்திற்கு முன்பு எப்படி புரிய வைத்தாரோ அதே போல மீண்டும்
இப்போதும் கூட புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். நீங்கள்
மீண்டும் வந்து ஆஸ்தியை எடுத்துக் கொண்டி ருக்கிறீர்கள். உங்கள்
இலட்சியமும் குறிக்கோளுமே எல்லைக்கப்பாற் பட்ட தந்தையிடமிருந்து
எல்லைக்கப்பாற்பட்ட ஆஸ்தியை எடுப்பதாகும். அது சூரிய வம்சத்தின்
இராஜ்ய பதவி, இரண்டாவது நிலை சந்திர வம்சத்தினுடையது ஆகும்.
ஏர்-கண்டிஷன் (குளிரூட்டப்பட்ட) வகுப்பு, முதல் வகுப்பு,
இரண்டாம் வகுப்பு என இருக்கிற தல்லவா. ஆக, சத்யுகத்தின் முழு
இராஜ்யம் ஏர்-கண்டிஷன் என புரிந்து கொள்ளுங்கள். ஏர்-கண்டிஷனை
விட உயர்ந்த வகுப்பு கிடையாது. பிறகு முதல் வகுப்பு. ஆக இப்போது
தந்தை கேட்கிறார் - நீங்கள் ஏர்-கண்டிஷன் எனப்படும் சூரிய
வம்சத்தின் இராஜ்யத்தை எடுப்பீர்களா அல்லது சந்திர வம்சம்
எனப்படும் முதல் வகுப்பா? அதனை விடவும் குறைவாக பிறகு இரண்டாம்
வகுப்பில் வரிசைக்கிரமமாக வாரிசுகளாக ஆகி பிறகு பிற்காலத்தில்
கடைசியில் வந்து இராஜ்யத்தை அடைவீர்கள். இல்லாவிட்டால் மூன்றாம்
வகுப்பு பிரஜைகள் பிறகு அதிலும் கூட முன் பதிவு செய்யப்படுகிறது.
முதல் வகுப்புக்கான முன் பதிவு, இரண்டாம் வகுப்பின் முன் பதிவு
என வரிசைக்கிரமமான வகுப்புகள் உள்ளன அல்லவா. மற்றபடி அங்கே
சுகம் இருக்கவே இருக்கும். தனித்தனி கம்பார்ட்மெண்ட் (பெட்டிகள்)
இருக்குமல்லவா. பணக்கார மனிதர்கள் ஏர்-கண்டிஷன் பெட்டியின்
டிக்கெட் எடுப்பார்கள். உங்களில் யார் செல்வந்தர் ஆவீர்கள்?
யார் அனைத்தையும் தந்தைக்குக் கொடுக்கின்றனரோ அவர்கள். பாபா இவை
யனைத்தும் உங்களுடையது. பாரதத்தில் தான் மகிமை பாடப்பட்டுள்ளது
- வியாபாரி, ரத்தின வியாபாரி, மந்திரவாதி - இந்த மகிமை
தந்தையுடையது ஆகும், கிருஷ்ணருடையது அல்ல. கிருஷ்ணரோ ஆஸ்தி
எடுத்தார், சத்யுகத்தில் பலனை அடைந்தார். அவரும் பாபா
வுடையவராக ஆனார். பலனை ஏதோ ஒரு விதத்தில் முயற்சி செய்து
அடைந்திருக்க வேண்டும் அல்லவா. லட்சுமி-நாராயணர் சத்யுகத்தில்
பலனை அனுபவிக்கின்றனர். இப்போது குழந்தைகளாகிய நீங்கள் நல்ல
விதமாக அறிவீர்கள், கண்டிப்பாக இவர்கள் கடந்த காலத்தில் பலனை
உருவாக்கி யிருப்பார் கள் அல்லவா. நேரு அடைந்த பலன் எவ்வளவு
நன்றாக இருந்தது. கண்டிப்பாக நல்ல கர்மங்களை செய்திருந்தார்.
பாரதத்தின் முடி சூடா மன்னராக இருந்தார். பாரதத்தின் மகிமை
நிறைய உள்ளது. பாரதத்தைப் போன்ற உயர்ந்த தேசம் வேறு இருக்க
முடியாது. பாரதம் பரமபிதா பரமாத்மாவின் பிறப்பிடம் ஆகும். இந்த
ரகசியம் யாருடைய புத்தியிலும் பதிவதில்லை. பரமாத்மாதான் அனை
வருக்கும் சுகம் அமைதியை அரைக் கல்ப காலத்திற்குத் தருகிறார்.
பாரதம்தான் முதல் நம்பர் தீர்த்த ஸ்தானமாகும். ஆனால்
நாடகத்தின்படி ஒரு தந்தையை மறந்ததன் மூலம் சிருஷ்டியின் நிலை
எப்படி ஆகி விட்டது, ஆகையால் சிவபாபா மீண்டும் வருகிறார்.
யாராவது நிமித்தமாக (கருவியாக) ஆகின்றனர் அல்லவா.
இப்போது தந்தை சொல்கிறார் - அசரீரி ஆகுங்கள், தன்னை ஆத்மா என
நிச்சயப்படுத்துங்கள். ஆத்மாவாகிய நான் யாருடைய குழந்தை என்பது
யாருக்கும் தெரியாது. அதிசயம் அல்லவா. ஓ இறைத் தந்தையே! இரக்கம்
காட்டுங்கள் என சொல்லவும் செய் கின்றனர். சிவ ஜெயந்தியும்
கொண்டாடுகின்றனர், ஆனால் அவர் எப்போது வந்திருந்தார் என்பது
யாருக்கும் தெரியாது. மேலும் இது 5 ஆயிரம் வருடங்களின் விசயம்.
தந்தைதான் வந்து சத்யுகத்தை ஸ்தாபனை செய்கிறார். சத்யுகத்தின்
ஆயுள் இலட்சக்கணக்கான வருடங்கள் அல்ல. எனவே அடர்ந்த காரிருளாக
உள்ளது அல்லவா. கீதையின் உபதேசத்தை எவ்வளவு பேர் வந்து
கேட்கின்றனர். ஆனால் படிப்பவர்களும், படிக்க வைப்பவர்களும்
எதுவும் புரிந்துக் கொள்ளவில்லை. தந்தை எவ்வளவு எளிதாக்கிக்
விளக்கமாக புரிய வைக்கிறார், தந்தையை மட்டும் நினைவு
செய்யுங்கள். இல்லற விஷயங்களில் இருந்தபடி தாமரை மலர் போல்
ஆகுங்கள். விஷ்ணுவுக்குத்தான் அனைத்து அலங்காரங்களும்
கொடுத்துள்ளனர். சங்கும் கொடுத்துள்ளனர், (தாமரை) மலரும்
கொடுத்துள்ளனர். உண்மை யில் தேவதைகளுக்கு கொடுக்கப் படுவதில்லை.
இவை எவ்வளவு ஆழமான புரிந்துக் கொள்ளக் கூடிய விஷயங்கள் ஆகும்.
இவை பிராமணர்களின் அலங்காரம் ஆகும். ஆனால் பிராமணர்களுக்கு
எப்படி கொடுப்பது? இன்று பிராமணர்களாக உள்ளனர், நாளை சூத்திரர்
களாகின்றனர். பிரம்மா குமாரர்களே சூத்திர குமாரர்கள் ஆகி
விட்டனர். மாயை தாமதிப்ப தில்லை. ஏதாவது தவறு செய்தாலோ,
தந்தையின் உயர்ந்த வழிப்படி நடக்காவிட்டாலோ, புத்தி கெட்டு
விட்டாலோ மாயை நன்றாக அடித்து முகத்தைத் (தன்பக்கம்) திருப்பி
விடுகிறது. அடித்து முகத்தைத் திருப்பி விடுவேன் என கோபம் வந்து
விட்டால் மனிதர்கள் சொல்கின்றனர் அல்லவா. ஆக மாயை கூட
அப்படித்தான். தந்தையை மறந்து விட்டால் மாயை ஒரு வினாடியில்
அடித்து முகத்தைத் திருப்பி விடுகிறது. ஒரு வினாடியில் ஜீவன்
முக்தியை அடைகின்றனர். மாயை ஒரு வினாடியில் ஜீவன்முக்தியை
அழித்து விடுகிறது. எவ்வளவு நல்ல நல்ல குழந்தைகளை மாயை
பிடித்துக் கொள்கிறது. எங்காவது தவறு செய்கிறார்களா என
பார்க்கிறது, உடன் அடித்து விடுகிறது. தந்தை வந்து பழைய
உலகத்திலிருந்து முகத்தைத் திருப்புகிறார். லௌகிக தந்தை ஏழையாக
இருப்பார், பழைய குடிசை யில் வசிப்பார், பிறகு புதிய வீடு
கட்டினால், இதோ புதிய வீடு தயாராகி விடும், நாம் சென்று
அமர்ந்து விடுவோம் என குழந்தைகளின் புத்தியில் வந்து விடுகிறது.
இந்த பழைய வீட்டை இடித்து விடுவோம். இப்போது தந்தை உங்களுக்காக
உள்ளங்கையில் மலர்த்தோட்டம் அல்லது வைகுண்டத்தைக் கொண்டு
வந்துள்ளார். செல்லமான குழந்தைகளே என சொல்கிறார், ஆத்மாக்
களுடன் பேசுகிறார். இந்த கண்களின் மூலம் குழந்தைகளாகிய உங்களைப்
பார்த்துக் கொண்டிருக் கிறார். நானும் கூட நாடகத்தின்
வசப்பட்டுள்ளேன் என தந்தை புரிய வைக்கிறார். நாடகத்தில் இல்லாத
எதுவும் செய்ய முடியும் என்பதல்ல. இல்லை, குழந்தைகளுக்கு நோய்
வந்தால் நான் சரிப்படுத்துவேன், அறுவைச் சிகிச்சையிலிருந்து
விடுவிப்பேன் என்பதல்ல. இல்லை, கர்ம போகத்தை அனைவரும்
அனுபவிக்கவே வேண்டும். உங்கள் மீது நிறைய சுமை உள்ளது, ஏனெனில்
நீங்கள் அனைவரையும் விட பழையவர்கள். சதோபிரதானத்திலிருந்து
ஒரேயடியாக தமோபிர தானமாக ஆகியுள்ளீர்கள். இப்போது
குழந்தைகளாகிய உங்களுக்கு தந்தை கிடைத்திருக் கிறார் எனும்போது
தந்தையிடமிருந்து ஆஸ்தியை எடுக்க வேண்டும். சூரிய வம்சத்தவர்,
சந்திர வம்சத்தவர்களாக இருப்பவர்கள் அவசியம் வருவார்கள்.
தேவதைகளாக இருந்தவர்கள், பிறகு சூத்திரர்களாக ஆனவர்கள், பிறகு
அவர்களே பிராமணர்களாக ஆகி தெய்வீக சம்பிரதாயத்தவர் களாக
ஆவார்கள். இந்த விஷயங்களை தந்தையைத் தவிர வேறு யாரும் புரிய
வைக்க முடியாது.
தந்தைக்கு, குழந்தைகளாகிய நீங்கள் எவ்வளவு இனிமையானவர்களாக
தெரிகிறீர்கள். நீங்கள் அதே கல்பத்திற்கு முந்தைய என்னுடைய
குழந்தைகள் என சொல்கிறார். நான் கல்பம் தோறும் வந்து உங்களைப்
படிப்பிக்கிறேன். எவ்வளவு அதிசயமான விஷயங்கள். நிராகார
பகவானுடைய மஹா வாக்கியங்கள். சரீரத்தின் மூலம் வாக்கியங்கள்
கூறுவார் அல்லவா. சரீரத்திலிருந்து பிரிந்து விட்டால் ஆத்மா
பேச முடியாது. ஆத்மா சரீரத்தி-ருந்து பிரிந்து சென்று விடுகிறது.
இப்போது தந்தை சொல்கிறார் - அசரீரி பவ. பிராணாயாமம் முதலிய
வற்றை செய்ய வேண்டும் என்பதல்ல. அல்ல, நான் ஆத்மா அழிவற்றவன்
என புரிந்து கொள்ள வேண்டும். என்னுடைய ஆத்மாவில் 84 பிறவிகளின்
நடிப்பு நிரம்பி யுள்ளது. தந்தை தானும் சொல்கிறார் - நான்
நடிக்கக் கூடிய அனைத்து நடிப்பின் பாகமும் என்னுடைய ஆத்மாவில்
நிரப்பப்பட்டுள்ளது. பக்தி மார்க்கத்தில் அங்கே அதற்கான நடிப்பு
நடக்கிறது, ஞான மார்க்கத்தில் இங்கே வந்து ஞானத்தைக்
கொடுக்கிறேன். பக்தி மார்க்கத் தவர்களுக்கு ஞானமே தெரியாது.
யாராயினும் சாராயத்தை குடிக்காவிட்டால் சுவை எப்படி தெரியும்.
ஞானமும் கூட அடைந்து புரிந்து கொள்ளும் போது தெரிய வரும்.
ஞானத்தால் சத்கதி உண்டாகும் எனும்போது ஞானக் கடல்தான் சத்கதியை
வழங்க முடியும். நான் அனைவருக்கும் சத்கதி வழங்கும் வள்ளல்
ஆவேன் என தந்தை சொல்கிறார். சர்வோதயா தலைவர்கள் உள்ளனர் அல்லவா.
எவ்வளவு விதவிதமானவர்கள் உள்ளனர். உண்மையில் அனைவரின் மீதும்
தயை (இரக்கம்) காட்டக் கூடியவர் தந்தை ஆவார். ஓ பகவானே !
இரக்கம் காட்டுங்கள் என தந்தையிடம் சொல்கின்றனர். ஆக அனைவரின்
மீதும் அவர் இரக்கம் காட்டு கிறார், மற்ற அனைவரும்
எல்லைக்குட்பட்ட இரக்கம் காட்டுபவர்கள். தந்தை முழு உலகையும்
சதோபிர தானமாக ஆக்குகிறார். அதில் தத்துவங்களும் கூட
சதோபிரதானமாகி விடுகின்றன. இந்த வேலையே பரமாத்மாவினுடையதாகும்.
ஆக, சர்வோதயாவின் அர்த்தம் எவ்வளவு பெரியது. ஒரேயடியாக அனைவரின்
மீதும் இரக்கம் காட்டிவிடுகிறார். சொர்க்கத்தின் ஸ்தாபனை யில்
யாரும் துக்கமுள்ளவர்களாக ஆவதில்லை. அங்கே முதல் நம்பர்
இருக்கைகள், வசதிகள் கிடைக்கும். துக்கம் கொடுக்கக் கூடிய
விலங்குகள், பூச்சிகள் முதலானவைகள் இருப்பதில்லை. அங்கும் கூட
பெரிய மனிதர்களின் வீடு எவ்வளவு சுத்தமாக இருக்கும். ஒருபோதும்
நீங்கள் பூச்சிகளைப் பார்க்க முடியாது. கொசுக்கள் எதுவும்
நுழைய முடியாது. சொர்க்கத்தில் வருவதற்கு எதற்கும் சக்தி
கிடையாது. அழுக்காக்கக் கூடிய எந்த பொருளும் இருக்காது. மலர்கள்
முதலானவற்றில் இயற்கையான நறுமணம் நிறைந் திருக்கும். சூட்சும
வதனத்தில் உங்களுக்கு பாபா சோம ரசம் குடிக்க வைக்கிறார்.
இப்போது சூட்சும வதனத்தில் எதுவும் கிடையாது. இவை யனைத்தும்
காட்சிகள் ஆகும். இங்கே அமர்ந்தபடி நீங்கள் காட்சிகள்
பார்க்கிறீர்கள்.
பாடலும் மிகவும் முதல் தரமானது. நமக்கு தந்தை கிடைத்துள்ளார்,
வேறு என்ன வேண்டும் என நீங்கள் அறிவீர்கள். எல்லைக்கப்பாற்பட்ட
தந்தையிடமிருந்து எல்லைக்கப்பாற்பட்ட ஆஸ்தி எடுக்கிறோம்
எனும்போது தந்தையை நினைவு செய்ய வேண்டும். தந்தையின் வழி புகழ்
வாய்ந்தது. ஸ்ரீமத் படி நாம் உயர்ந்தவரிலும் உயர்ந்தவர் ஆகிறோம்.
மற்ற அனைவருடையதும் அசுர வழி, ஆகையால் சத்யுகத்தில் எப்போதும்
சுகம் இருந்தது, லட்சுமி நாராயணரின் இராஜ்யம் இருந்தது என
அவர்கள் அறிவதில்லை. சிறுவயதில் அவர்கள் தான் ராதா கிருஷ்ணராக
இருந்தனர், அவர்களின் சரித்திரம் முதலானது எதுவும் இல்லை.
சொர்க்கத்தில் எல்லா குழந்தைகளுமே மிகவும் முதல் தரமாக
இருப்பார்கள். குறும்பு (சிறுபிள்ளைத் தனம்) முதலான எந்த
விஷயமும் இருக்காது. நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு
நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. பழைய உலகத்திலிருந்து முகத்தைத் திருப்பிக் கொண்ட பின், மாயை
தன் பக்கமாக முகத்தைத் திருப்பிக் கொள்ளுமாறு எந்த தவறும்
செய்யக் கூடாது. ஸ்ரீமத்-ஐ மீறக் (அலட்சியப்படுத்தக்) கூடாது.
தந்தையிடமிருந்து முழுமையாக ஆஸ்தி எடுக்க வேண்டும்.
2. தந்தையிடம் தன்னுடைய அனைத்தையும் ஸ்வாஹா (அர்ப்பணம்) செய்து
உறுதியான (நிலையான) வாரிசு ஆகி சத்யுகத்தின் ஏர்-கண்டிஷன்
டிக்கெட் எடுக்க வேண்டும். இலட்சியம் குறிக்கோளை புத்தியில்
வைத்து முயற்சி செய்ய வேண்டும்.
வரதானம்:
சுய ஸ்திதி மூலம் சர்வ பரிஸ்திதிகளையும்
எதிர்கொள்ளக் கூடிய அவ்யக்த ஸ்திதியின் அப்பியாசி ஆகுக.
எப்போது அவ்யக்த ஸ்திதியின் அப்பியாசம் பழக்கமாகி விடுமோ,
அப்போது சுய ஸ்திதி மூலம் ஒவ்வொரு பரிஸ்திதியையும் எதிர்கொள்ள
முடியும். மேலும் இந்தப் பழக்கம் நீதி மன்றத்திற்குச்
செல்வதிலிருந்து காப்பாற்றி விடும். எனவே இந்த அப்பியாசத்தை
எப்போது இயற்கையானதாக, இயல்பானதாக ஆக்குகிறீர்களோ, அப்போது
இயற்கை சேதங்கள் வரும். ஏனென்றால் எதிர்கொள் பவர் சுயஸ்திதி
மூலம் ஒவ்வொரு பரிஸ்திதியையும் கடந்து செல்வதற்கான சக்தியை
தாரணை செய்து விடுகிறார் என்றால், அப்போது திரை விலகும்.
இதற்காக, பழைய பழக்கங்களின் மீது, பழைய சம்ஸ்காரங்களின் மீது,
பழைய விˆயங்கள் மீது….. முழுமையான வைராக்கியம் வேண்டும்.
சுலோகன்:
தன்னை நிமித்தம், செய்பவர் எனப் புரிந்து கொள்வீர்களானால்
எந்த ஒரு காரியத்திலும் களைப்பு வர முடியாது.
மாதேஷ்வரிஜியின் விலைமதிப்பற்ற மகாவாக்கியங்கள்:
மனித லோகம், தேவ லோகம், பூத-பிரேதங்களின் உலகத்தின் விஸ்தாரம்
மனிதர்கள் பலர் கேள்வி கேட்கிறார்கள் - பூதங்கள் என்று
சொல்லப்படும் அசுத்த ஜீவாத்மாக்கள் இருப்பதாகச் சொல்லப்படுவது
உண்மையா, கற்பனையா? அல்லது சந்தேகத்திற்குரியதா? அதைப் பற்றி
இன்று தெளிவாகப் புரிய வைக்கப் படுகிறது. மனித ஆத்மா விகர்மம்
செய்யும் போது அவர் அநேக விதமான தண்டனைகளை அனுபவிக்க வேண்டிய
அவசியம் நேரிடுகிறது. மேலும் மனிதப் பிறவியில் தான்
அனுபவித்தாக வேண்டுமே அல்லாமல் மிருகங்கள், பறவைகளாகப் பிறந்து
அல்ல. சுகம்-துக்கம் அனுபவிப்பதற்கான உணர்வு மனிதரிடம் அதிகமாக
உள்ளது. மிருகங்களிடம் அல்ல. இந்த சிருஷ்டி விளையாட்டில்
முக்கிய பார்ட் மனிதர் களுடையது. இந்த மிருகங்கள், பறவைகள்
முதலானவையோ சிருஷ்டி டிராமாவின் அழகாக உள்ளன. முழுக்
கல்பத்திலும் சத்யுக ஆரம்பத்திலிருந்து கலியுகக் கடைசி வரை
மனித ஆத்மாவுக்கு 84 பிறவிகள். மற்றப்படி இந்த 84 லட்சமோ
மிருகங்கள், பறவைகள் முதலானவற்றின் பல வகை இருக்கலாம். இப்போது
இந்த அனைத்து ரகசியங்களையும் பரமாத்மாவைத் தவிர வேறு யாராலும்
புரிய வைக்க முடியாது. ஆத்மாக்களின் வசிப்பிடம் பிரம்ம தத்துவம்,
அதாவது நிராகாரி உலகம். மற்றப்படி இந்த மிருகங்களின் ஆத்மாக்கள்
பிரம்ம தத்துவத்திற்குச் செல்ல முடியாது. அவை இந்த ஆகாய
தத்துவத்திற்குள்ளேயே பார்ட் நடிக்கின்றன. அவற்றுக்கும் கூட
மர்ஜ், இமர்ஜ் ஆவதுடன், சதோ, ரஜோ, தமோவில் வரக்கூடிய பார்ட்
உள்ளது. எனவே இயற்கையின் அநேக விஸ்தாரத்தில் செல்லாமல், முதலில்
நாம் நம் ஆத்மாக்களுக்கு நன்மை செய்ய வேண்டும். அதாவது
மன்மனாபவ. இப்போது மனித ஆத்மா பற்றிய விˆயத்துக்கு வருவோம்.
எந்த ஆத்மாக்கள் அசுத்த கர்மம் செய்வதால் விகர்மங்களை
உருவாக்குகிறார்களோ, அவர்கள் தங்கள் அசுத்த சம்ஸ்காரங்களின்
அனுசாரம் பிறப்பு-இறப்பின் சக்கரத்தில் வந்து, ஆதி மத்ய அந்தம்,
அதாவது இறக்கும் தறுவாயில் தாங்கள் செய்துள்ள விகர்மங்களின்
சாட்சாத்காரம் பெற்று, சூட்சுமத்தில் தண்டனை அனுபவிக்கிறார்கள்.
இந்தக் குறுகிய காலத்தில் அநேக ஜென்மங்களின் துக்கத்தின்
அனுபவம் ஏற்படும். பிறகு சரீரத்தை விட்டுப் போய் கர்ப்ப
ஜெயிலில் தண்டனை அனுபவிக்கிறார்கள். பிறகு சம்ஸ்காரங்களின்
அனுசாரம் அத்தகைய தாய்-தந்தையிடம் போய்ப் பிறவி எடுத்து,
அங்கேயும் தங்கள் வாழ்க்கையில் சுகம்-துக்கத்தை
அனுபவிக்கின்றனர். இது தான் ஆதி-மத்ய- அந்தம் எனப்படுவது. ஆனால்
ஆத்மாக்கள் சிலருக்கு சீக்கிரமாக சரீரம் கிடைப்பதில்லை. அவர்கள்
ஆகாரி ரூபத்தில் (ஒளி சரீரத்தில்) இந்த ஆகாய தத்துவத்தினுள்
பூதம் ஆகி, அலைந்து கொண்டே இருக்கின்றனர். இதுவும் கூட ஒரு
தண்டனை தான். அதாவது வினைப்பயனை அனுபவிப்பது. அந்த அசுத்த
ஜீவாத்மாக்களோடு யாருக்காவது கணக்கு-வழக்கு இருக்குமானால்,
இவர்கள் அவர்களுக்குள் பிரவேசமாகி, துக்கம் கொடுக்கின்றனர்.
அதாவது கணக்கு-வழக்கை முடித்துப் பிறகு போய்த் தங்கள் சரீரத்தை
தாரணை செய்கின்றனர். இன்னும் சில ஜீவாத்மாக்களோ, யாருக்குள்
பிரவேசமாகிறார்களோ, அவர்களை அதிகமாக அடித்துத் துன்புறுத்தவும்
செய் கின்றனர். மிகுந்த கஷ்டங்களைக் கொடுப்பார்கள். ஆனால் இந்த
அனைத்துக் கணக்கு-வழக்குகளுக்கு உள்ளும் அனுபவிப்பதற்கான விதம்
உள்ளது - அனைவருக்கும் மனித சரீரத்தில் தான் சுகம்-துக்கம்
அனுபவமாகிறது. இதுவோ உங்களுக்குப் புரிய வைக்கப்பட்டுள்ளது -
அதாவது ஆத்மா முக்தி தாமத்திலிருந்து இந்த சாகாரி விளையாட்டில்
வரக்கூடிய ஆத்மா, இடையில் முக்திதாமத்திற்குத் திரும்பிச்
செல்ல முடியாது. ஆனால் தாங்கள் செய்துள்ள அசுத்த, சுத்த
கர்மங்களின் அனுசாரம் சம்ஸ்காரங்களை எடுத்துக் கொண்டு,
சுகம்-துக்கத்தின் சக்கரத்தில் வருகின்றனர். அனைத்து
ஆத்மாக்களுக்கும் புனர்ஜென்மம் நடைபெறுகின்றது. ஒரு
பரமாத்மாவுக்கு மட்டும் இல்லை. நல்லது.
அவ்யக்த சமிக்ஞை: சதா மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால்
தங்களது சுபாவத்தை சரளமானதாக ஆக்கிக் கொள்ளுங்கள்,
சகிப்புத்தன்மை உடையவர் ஆகுங்கள்.
பாப்தாதாவுக்கு அனைவரைக் காட்டிலும் பிரியமானவர்கள், தூய்மையான
உள்ளம் கொண்ட குழந்தைகள் மட்டுமே, தூய உள்ளம் கொண்டவர்கள் சதா
பாப்தாதாவின் மன சிம்மாசனத்தில் அமர்ந்துள்ளனர். அவர்கள்
உள்ளுணர்வில், திருஷ்டியில், பேச்சில், சம்பந்தம்-தொடர்பில்
சரளமாக வும், தெளிவாகவும் ஒரே சமமாகக் காணப் படுகின்றனர்.
சரளத்தன்மையின் அடையாளம் - மனம், புத்தி, வார்த்தை ஒரே சமமாக
இருப்பதாகும். உள்ளத்தில் ஒன்று, வார்த்தையில் வேறொன்று என
இருப்பது சரளத் தன்மையின் அடையாளம் ஆகாது. சரள சுபாவம்
உள்ளவர்கள் சதா பணிவுள்ளவராக, நிரகங்காரியாக, சுயநலமற்றவராக
இருப்பார்கள். அவர்கள் எளிய உள்ளம், எளிய வார்த்தை, எளிய
உள்ளுணர்வு, எளிய பார்வை உள்ளவராக இருப்பார்கள்.