17-07-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! இந்த பாரதபூமி
நிராகார தந்தையின் ஜென்ம பூமியாகும். இங்கு தான் தந்தை
உங்களுக்கு இராஜயோகம் கற்பித்து, இராஜ்யத்தை அளிக்க மற்றும்
உங்களுக்கு சேவை செய்ய வருகிறார்.
கேள்வி:
சிவபாபா தன்னுடைய ஒவ்வொரு
குழந்தையிடமும் என்ன ஒரு வாக்குறுதி எடுக்குமாறு செய்விக்கிறார்?
பதில்:
இனிமையான குழந்தைகளே, பாபா
நாங்கள் எந்த ஒரு விகர்மமும் செய்ய மாட்டோம் என்று உறுதி
எடுங்கள். 5 விகாரங்களை நாம் தானமாகக் கொடுக்கிறோம்.
உள்ளுக்குள் பயம் இருக்க வேண்டும். ஒரு வேளை நீங்கள் தானம்
கொடுத்து விட்டு, பிறகு திரும்பப் பெற்றுக் கொண்டீர்கள் என்றால்
மிகவுமே பாவம் ஏற்பட்டு விடும். அதற்குப் பிறகு கடுமையான தண்டனை
வாங்க வேண்டி வரும். ஹரிச்சந்திரரின் கதை கூட இது பற்றித் தான்
அமைக்கப் பட்டுள்ளது.
ஓம் சாந்தி.
இது குழந்தைகளுடைய இறை மாணவ வாழ்க்கையாகும். நாம் அவரிடம்
வந்துள்ளோம் என்பதை குழந்தைகள் அறிந்துள்ளார்கள். அவரே கல்ப
கல்பமாக பாரதவாசி குழந்தைகளுக்கு வந்து இராஜ்ய பாக்கியத்தை
அளிக்கிறார். பாரதத்தில் தான் வருகிறார் அல்லவா? இது பாரத
பூமியாகும். தங்களது பூமி மீது மிகுந்த அன்பு, மதிப்பு
இருக்கும். எப்படி யாராவது வெளிநாட்டின் பெரிய மனிதர் இங்கு
இறந்து விட்டார் என்றால் அந்த உடலை வெளிநாட்டிற்கு எடுத்துச்
செல்கிறார்கள் அல்லது இங்கு இருந்த யாராவது பெரிய மனிதர் வெளி
நாட்டில் இறந்து விட்டார் என்றால், அவரது உடலை இங்கு எடுத்து
வருகிறார்கள். தங்களது பூமி மீது மதிப்பு வைக்கிறார்கள்.
பாரதத்திற்கு பகவானினுடைய ஜென்ம பூமி என்று கூறப்படுகிறது. யாரை
பகவான் அல்லது அல்லா, பரமாத்மா என்று அழைக்கிறார்களோ அவருக்கு
முன்னால் இப்பொழுது நீங்கள் அமர்ந்துள்ளீர்கள் என்பதையும்
நீங்கள் அறிந்துள்ளீர் கள். பெயர் அவசியம் வேண்டும் அல்லவா?
அல்லா என்கிறார்கள். இருந்தாலும் லிங்கத்திற்குப் பூஜை
செய்கிறார்கள். இறைவன் அல்லது குதா என்று கூறுகிறார்கள் என்றால்,
நிச்சயம் அவருடைய அடையாளம் வேண்டும் அல்லவா? லிங்கத்தை எல்லா
புறங்களிலும் பூஜிக் கிறார்கள். படங்களில் கூட தற்காலத்தில்
தேவதைகளுக்கு முன்னால் பரமபிதா பரமாத்மா வின் சித்திரமாக
லிங்கத்தை காண்பிக்கிறார்கள். அவர் எல்லோரையும் விட உயர்ந்தவர்.
அவருக்கு தனக்கென்று சரீரம் கிடையாது. எனவே நிராகாரமானவர் என்று
கூறப்படுகிறது. சாகாரமானவர் கிடையாது. நாம் அவரிடமிருந்து
கல்வியைப் பெறுவதற்காக அவருக்கு முன்னால் கல்ப கல்பமாக
ஆஜராகிறோம் என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள்
அறிந்துள்ளீர்கள். பகவானுவாச் - பகவான் கூறுகிறார் என்றால்,
நிச்சயம் இராஜயோகம் கற்பித் திருக்கக் கூடும். மாணவர்களுக்கு
இராஜயோகம் கற்பித்திருந்தார் மற்றும் அவர்கள் ராஜா ராணி ஆகி
இருந்தார்கள். சண்டை ஆகியவற்றின் விஷயம் கிடையாது. இந்த
இலட்சுமி நாராயணர் ஆகியோர் யுத்தத்தின் மூலமாக அரசாட்சியை
அடைந்தார்களா என்ன? முற்றிலும் கிடையாது. இவர்கள் சத்யுகத்தில்
எப்படி இராஜ்யத்தை அடைந்தார்கள் என்பது உலகத்திற்கு முற்றிலும்
தெரியாது. நாம் தந்தையிடமிருந்து இராஜ்யத்தைப் பெற்றுக்
கொண்டிருக்கிறோம் என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள்
புரிந்துள்ளீர்கள். நாம் அவருக்கு முன்னால் அமர்ந்துள்ளோம்.
அவர் தான் பாபா ஆவார். கிருஷ்ணர் அல்ல. கிருஷ்ணரோ சிறிய குழந்தை
ஆவார். அவர் படைப்பு ஆவார். இப்பொழுது உண்மையில் கிருஷ்ணர் தனது
பதவியை அடைந்து கொண்டி ருக்கிறார். பின் வருங்காலத்தில்
கிருஷ்ணர் என்று அழைக்கப்படுவார். இவை எல்லாமே முழுமையாக
படிப்பின் விஷயமாகும்.
பாபா நமக்கு இராஜயோகம் கற்பிக்கிறார் என்பதை நீங்கள்
அறிந்துள்ளீர்கள். எப்படி மனிதர்கள் மனிதர்களை வழக்கறிஞர்களாக,
பொறியியல் வல்லுநராக ஆக்குகிறார்கள். அவர்களும் மனிதர் கள் தான்
இல்லையா? நாமும் மனிதர்கள் தான். ஆனால் நாம் பதீதமாக உள்ளோம்
என்பதை நீங்கள் புரிந்துள்ளீர்கள். இப்பொழுது தந்தை
தூய்மையாகவும் ஆக்குகிறார். மேலும் நமக்கு ஆஸ்தியும்
அளிக்கிறார். பாவன உலகம், புது உலகமாகத் தான் இருக்கும். புது
உலகத்தில் இருப்பதே இராஜ்யம். இப்பொழுது நீங்கள் தந்தைக்கு
முன்னால் அமர்ந்துள்ளீர்கள். எப்படி லௌகீக தந்தை குழந்தைகளுக்கு
அன்புடன் அமர்ந்து புரிய வைக்கிறார். இவர் பின் பரலௌகீக
விசித்திரமான (அசரீரி) தந்தை ஆவார். இவருக்காக த்வமேவ மாதாஸ்ச
பிதா.... (தந்தையும் நீயே தாயும் நீயே) என்று நீங்கள் பாடிக்
கொண்டே வந்துள்ளீர்கள். இச்சமயம் இவர் தனது பாகத்தை ஏற்று
நடிக்கிறார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். அதற்கு பக்தி
மார்க்கத்தில் நாம் பாடல் பாடுகிறோம். நாங்கள் சிவபாபாவிடம்
வந்துள்ளோம் என்று நீங்கள் கூறுகிறீர்கள். கடிதம் கூட சிவபாபா
ஸ்ரீ/ர் பிரம்மா என்று எழுதுகிறீர்கள். யாருக்காவது நீங்கள்
கடிதத்தைக் காண்பித்தீர்கள் என்றால், ஆச்சரியப்படுவார்கள்.
சிவபாபா C/o பிரம்மா என்று இது போல ஒரு பொழுதும் கேள்விப்படவே
இல்லையே! சிவபாபா பிரம்மாவிற்குள் வந்து விஷ்ணுபுரியை ஸ்தாபனை
செய்துக் கொண்டிருக்கிறார். எதிரிலேயே நிற்கிறார் மேலே
இருப்பவர் சிவபாபா. சிவபாபா பிரம்மா மூலமாக ஸ்தாபனை
செய்திருந்தார். இப்பொழுது மீண்டும் செய்துக் கொண்டிருக்கிறார்.
இது இல்லற மார்க்கம் ஆகும். உலகீய படிப்பில் கூட சட்டம்
படிப்பிக்கிறார் கள் என்றால், ஆண் பெண் இருவரும் படிக்கிறார்கள்.
பெண்கள் கூட நீதிபதி, வழக்கறிஞர், மருத்துவர்களாக ஆகிறார்கள்.
இது கூட இல்லற மார்க்கமாகும். சந்நியாசிகளினுடையது துறவற
மார்க்கமாகும். அது தனி ஆகும். ஒரு வேளை சங்காராச்சாரியார்
வராமல் இருந்திருந் தார் என்றால், தூய்மையினுடைய அணு அளவும்
கூட இருந்திருக்காது என்பதையும் பாபா புரிய வைத்திருந்தார்.
பாரதம் முற்றிலுமே எரிந்து போய் விட்டிருக்கும். பாரதத்தை
தாங்கு வதற்காக இவர்களுடைய பாகம் அமைந்துள்ளது. பாரதம் மிகவுமே
தூய்மையாக இருந்தது. இப்பொழுது தூய்மையற்றதாகி விட்டது.
இப்பொழுது பாரதம் எவ்வளவு ஏழையாகி உள்ளது. தங்க இலங்கை
கடலுக்குக் கீழே சென்று விட்டது என்று கூறுகிறார்கள். இப்பொழுது
தங்கத் தினுடைய இலங்கை ஒன்றும் இருக்க முடியாது. இவை எல்லாமே
கதைகளாக எழுதி உள்ளார்கள். இவற்றால் எந்த நன்மையும் கிடையாது.
உண்மையில் பாபா நம்மை முற்றிலுமே சுலபமான நினைவின் பலத்தினால்
எவ்வளவு உயர்ந்தவராக ஆக்குகிறார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள்
அறிந்துள்ளீர்கள். நிரந்தர நினைவில் இருப்பதற்கான முயற்சி
செய்தீர்கள் என்றால் பாவங்கள் அழிந்து போய் விடும் என்று தந்தை
வாக்குறுதி கொடுக்கிறார். பக்தி மார்க்கத்தில் கூட நினைவு
செய்வதற்கான முயற்சி செய்துள்ளீர்கள் அல்லவா? ஏன் நினைவு
செய்கிறார்கள்? சாட்சாத்காரம் (காட்சி தெரிதல்) ஆக வேண்டும்
என்பதற்காக ! கிருஷ்ணபுரியில் நமக்கு அரசாட்சி கிடைத்து விட
வேண்டும் அல்லது நாம் நரனிலிருந்து நாராயணர் ஆகி விட வேண்டும்
என்பதற்காக நினைவு செய்யவில்லை. நாம் மனிதனிலிருந்து தேவதை
ஆகலாம் என்ற இந்த விருப்பம் உங்களுக்குக் கூட இருக்கவில்லை.
மனிதனிலிருந்து தேவதையாக... என்று பாடவும் செய்கிறார்கள்.
உண்மையில் கலியுகத்திற்குப் பிறகு சத்யுகம் வரும் என்பதை
நீங்கள் பார்க்கிறீர்கள். கலி யுகத்தில் இத்தனை மனிதர்கள்
உள்ளார்கள். சத்யுகத்தில் ஒரு தர்மம் இருக்கும். இப்பொழுது
உங்களுக்கு ஆத்மா மற்றும் பரமாத்மா பற்றிய ஞானம் கூட
கிடைத்துள்ளது. உலகத்தில் ஒரு மனிதருக்குக் கூட ஆத்மா பற்றிய
ஞானம் இல்லை. ஆத்மாவில் 84 பிறவிகளின் பாகம் எப்படி பொருந்தி
உள்ளது என்பது யாருக்கும் தெரியாது. இந்த வார்த்தைகள் கூட ஒரு
பொழுதும் யாரிடமிருந்தும் கேட்டதே இல்லை. தந்தை ஞானக்கடல்
பதீதபாவனர், நிராகாரமானவர் ஆவார். நமது ஆத்மா இப்பொழுது பாவ
ஆத்மாவிலிருந்து புண்ணிய ஆத்மாவாக ஆகிக் கொண்டிருக் கிறது
என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். சத்யுகத்தில் எல்லோருமே
புண்ணிய ஆத்மாக்கள் ஆவார்கள். இங்கு இருப்பவர்கள் பாவ
ஆத்மாக்கள் ஆவார்கள். அப்படியின்றி நிறைய தான புண்ணியம்
செய்பவர்களுக்கு புண்ணிய ஆத்மா என்று கூறப்படுகிறது என்பதல்ல !
புண்ணிய ஆத்மாக்கள் இருப்பதே சத்யுகத்தில் தான் இங்கு எந்த
மனிதர்கள் தான புண்ணியம் செய்கிறார்களோ, அவர்களை புண்ணிய ஆத்மா
என்று நினைக்கிறார்கள். அங்கு உங்களுக்கு தான புண்ணியம் ஆகியவை
செய்ய வேண்டிய அவசியம் இருப்பதில்லை. அங்கு யாரும் ஏழை கள்
இருப்பதே இல்லை. நீங்கள் அங்கு எப்பொழுதுமே புண்ணிய ஆத்மாவாக
இருப்பீர்கள். நீங்கள் உடல், மனம், பொருள் அனைத்தையும் எல்லை
யில்லாத தந்தையின் பொருட்டு அளிக் கிறீர்கள். அதற்கு சமர்ப்பணம்
ஆவது என்று கூறப்படுகிறது. முதலில் நான் சமர்ப்பணம் ஆகிறேனா,
இல்லை நீங்களா என்று தந்தை கூறுகிறார். முதலில் நீங்கள் பலி
ஆகிறீர்கள். அப்பொழுது பிறகு 21 பிறவி களுக்கு சமர்ப்பணம்
கிடைக்கும் என்று பாபா கூறுகிறார். இந்த விஷயங்களை இப்பொழுது
நீங்கள் நல்ல முறையில் புரிந்துள்ளீர்கள். நேரடியாகக்
கேட்கிறீர் கள். வீட்டில் இருக்கிறீர்கள் என்றால், அங்கு முரளி
வருகிறது. தூரத்திலிருந்து கேட்கிறீர்கள். இப்பொழுது தந்தைக்கு
முன்னால் அமர்ந்துள்ளீர்கள். குழந்தைகளே! நான் உங்களுக்கு
தந்தையாகவும் இருக்கிறேன் என்று தந்தை கூறுகிறார். இங்கு
குருட்டு நம்பிக்கையின் எந்த விஷயமும் கிடையாது. தந்தையுமாக
இருக்கிறார். ஆசிரியராக வும் இருக்கிறார். தந்தை யினுடையவராக
ஆகும் பொழுது அவர் கல்வி அளிக்கிறார். உங்களுடைய புத்தியில்
இப்பொழுது முழு ஞானம் உள்ளது. 84 பிறவியின் சக்கரம் கூட
உங்களுக்கு புரிய வைக்கப் படுகிறது. யார் 84 பிறவிகள் எடுக்கக்
கூடியவர்களாக இல்லையோ, அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
உண்மையில் நாம் 84பிறவியின் சக்கரம் சுற்றி வந்து இப்பொழுது
திரும்பிச் செல்கிறோம் என்பதை நீங்கள் புரிந்துள்ளீர்கள்.
ஆத்மாவாகிய நீங்கள் அசரீரியாக வந்திருந்தீர் கள். பிறகு
அசரீரியாகி திரும்பிச் செல்ல வேண்டும் என்று தந்தை கூறுகிறார்.
நீங்கள் தூய்மையான ஆத்மாக்களாக ஆகிச் செல்கிறீர்கள். தூய்மையாக
ஆவதற்காக நீங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். யோக பலம்
அதாவது நினைவின் பலத்தினால் நீங்கள் தூய்மை யாக ஆகி விடுவீர்கள்.
யோகம் என்ற வார்த்தை சாஸ்திரங்களினுடையதாகும். சரியான வார்த்தை
நினைவு என்பதாகும். மனைவிக்கு கணவனின் அல்லது கணவனுக்கு
மனைவியின் நினைவு இருக்கிறது அல்லவா? யோகம் என்பதன் பொருளே
நினைவு தான். என் ஒருவனை நினைவு செய்யுங்கள் மற்ற
தொடர்புகளிலிருந்து புத்தி யோகத்தைத் துண்டித்து உங்களது
தந்தையாகிய என்னுடன் புத்தி யோகத்தை இணையுங்கள். நினைவு
செய்யுங்கள். எந்த அளவு நினைவு செய்வீர்களோ அந்த அளவு
உங்களுடைய விகர்மங்கள் விநாசம் ஆகும். உண்மையில் பாரதத்திற்கு
கல்ப கல்பமாக ஆஸ்தி கிடைக்கிறது. சிவஜெயந்தி கூட
பிரசித்தமானதாகும். எப்படி புத்தர், கிறிஸ்து ஆகியோருக்கு
ஜெயந்தி உள்ளது. அதே போல நிராகார சிவனுக்கு ஜெயந்தி உள்ளது.
அவர் உயர்ந்ததிலும் உயர்ந்தவர் ஆகிறார். கிருஷ்ண ஜெயந்தி கூட
பிரசித்த மானதாகும்.ஆனால் அவர் வந்து என்ன செய்கிறார் என்பது
யாருக்குமே தெரியாது. கிருஷ்ணர் சத்யுகத்தின் இளவரசராக
இருந்தார். அவசியம் அவருக்கு யாரோ அப்பேர்ப்பட்ட கர்மத்தினைக்
கற்பித்திருக்கக் கூடுமல்லவா! அதனால் சத்யுகத்தின் இளவரசர்
ஆனார். சிறிய குழந்தை தூய்மையாக இருக்கவே செய்யும். அங்கு
விகாரத்தின் விஷயம் இருப்பதில்லை. குழந்தை தூய்மையாக இருக்கும்.
பகவான் ஒரே ஒரு நிராகாரமானவர் ஆவார். இறைவன் ஒருவர் மற்றது
முழுவதுமே படைப்பு ஆகும். படைப்பிடமிருந்து ஒரு பொழுதும்
படைப்பிற்கு ஆஸ்தி கிடைக்க முடியாது. ஆஸ்தி தந்தையிடமிருந்து
கிடைக்கும். சகோதரனுக்கு சகோதரனிட மிருந்து ஆஸ்தி கிடைக்க
முடியாது. நீங்கள் அனைவரும் சகோதர சகோதரர்கள் ஆவீர்கள்.
சகோதரத்துவம் என்று கூறுகிறார்கள் அல்லவா? தந்தை ஒரே ஒருவர்
ஆவார். ஆஸ்தி தந்தையிடமிருந்து கிடைக்கும். அனைத்து
சகோதரர்களுக்கும் சத்கதி அளிக்கும் வள்ளல் ஒரு தந்தை ஆவார்.
அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தையிடமிருந்து ஆஸ்தி கிடைத்துக்
கொண்டி ருக்கிறது. நான் ஆத்மாக்களுக்கு வந்து கற்பிக்கிறேன்.
ஆத்மாக்களுக்கு சத்கதி அளிக்கிறேன் என்று தந்தை கூறுகிறார்.
தந்தை வந்து இராஜயோகம் கற்பிக்கிறார். இந்த படிப்பின் பதவியை
நீங்கள் இங்கு அடைவதில்லை. அவர்கள் வழக்கறிஞர்களாக இந்த
பிறவியில் ஆகிறார்கள். பிறகு மற்றொரு பிறவி எடுத்து மறுபடியும்
படிப்பார்கள்.
இந்த படிப்பினால் நாங்கள் 21 பிறவிகளுக்கு பிராப்தியை அடைகிறோம்
என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். அங்கு சத்யுகத்தில்
மருத்துவர் ஆகியோர் யாரும் இருப்பதில்லை. அங்கு நோய் நொடியே
இருக்காது. அங்கு நீங்கள் கர்ப்ப மாளிகையில் இருக்கிறீர்கள்.
இங்கு கர்ப்ப சிறையில் இருக்கிறீர்கள். இங்கு நிறைய தண்டனைகள்
கிடைக்கிறது. அதனால் தான் இந்த சிறையிலிருந்து வெளியே கொண்டு
வாருங்கள், நாங்கள் மீண்டும் எந்த தவறும் செய்ய மாட்டோம் என்று
முறையிடுகிறார்கள். தர்மராஜரிடம் வாக்குறுதி கொடுக்கிறார்கள்.
இங்கு நீங்கள் சிவபாபாவிடம் வாக்குறுதி கொடுக்க வேண்டும். பாபா
நாங்கள் ஒரு பொழுதும் விகர்மம் செய்ய மாட்டோம். 5 விகாரங்களை
நாங்கள் உங்களுக்கு கொடுத்து விடுகிறோம். விகாரங்கள் ஒன்றும்
அப்படியே சட்டென்று விடுபட்டு விடாது என்பதையும் தந்தை
அறிந்துள்ளார். உள்ளுக்குள் பயம் இருக்க வேண்டும். நாம்
விகாரங்களை தானம் கொடுத்த பிறகு, மீண்டும் எடுத்தோம் என்றால்,
பெரிய பாவமாகி விடும். எப்படி ராஜா ஹரிச்சந்திரனின் உதாரணம்
உள்ளது. அப்படியின்றி 5 விகாரங்கள் சட்டென்று விடுபட்டு விடும்
என்பதல்ல என்பதை தந்தை அறிந்துள்ளார். சிறிது காலமாகிறது.
உங்களது கர்மாதீத நிலை ஆகி விடும் பொழுது, சண்டை ஏற்படும்.
இந்த 5 விகாரங்கள் பெரிய எதிரி ஆகும். அதில் கூட முக்கியமான
ஒன்று தேக அபிமானம் ஆகும். அதை தானம் கொடுப்பது எவ்வளவு கடினம்
ஆகும். தன்னை ஆத்மா என்று உணர்ந்து, தந்தையாகிய என்னை நினைவு
செய்யுங்கள் என்று அடிக்கடி தந்தை கூறுகிறார். ஆனால் அது
ஆவதில்லை. தேக அபிமானி ஆவதால் பின்னர் காமத்தின் அடி
ஏற்படுகிறது. தேக அபிமானம் எல்லாவற்றையும் விட கூர்மையானது
ஆகும். தேஹீ அபிமானி (ஆத்ம உணர்வு) ஆவதில் மிகுந்த முயற்சி
தேவைப்படுகிறது. முக்கியமாக தேக அபிமானம் வருவதால் தான்
பாவங்கள் ஏற்பட்டுள்ளன. 5 விகாரங்களை தானமாக கொடுக்க வேண்டி
உள்ளது. இதில் நேரம் பிடிக்கிறது. மணமகனின்றி மணமகள்கள் போக
முடியாது. முதலில் மணமகன் போக வேண்டும் பிறகு மணமகள்கள். மணமகன்
வந்து அனைத்து ஆத்மாக் களையும் அழைத்துச் செல்ல வேண்டி உள்ளது.
கர்மாதீத் நிலை ஆகும் வரை முயற்சி செய்ய வேண்டும். தேக அபிமானம்
வருவதாலேயே பின்னர் தவறுகள் ஆகின்றன. பாபா தேக அபிமானத்தில்
வந்து விகாரத்தில் விழுந்தேன் என்பார்கள். புயல்களோ நிறைய வரும்.
விகாரத்தின் எண்ணம் வந்தாலும் கூட கர்ம இந்திரியங்களால் ஒரு
பொழுதும் எந்த பாவமும் செய்யாதீர்கள். மாயையை வெல்வதற்காக
எவ்வளவு உழைப்பு செய்ய வேண்டி உள்ளது. திருமணமாகி இருந்தது
என்றாலும் தூய்மையாக இருந்து காண்பியுங்கள். அப்பொழுது
சந்நியாசிகளும் பார்ப்பார்கள் என்று தந்தை கூறுகிறார்.
உங்களுக்கு எவ்வளவு பெரிய சம்பாத்தியம் உள்ளது பாருங்கள்.
தூய்மையாக இருந்து காண்பித்தீர்கள் என்றால் மிக உயர்ந்த பதவியை
அடைவீர்கள். உங்கள் மீது எல்லோருமே பலி ஆவார்கள். பாபா கூட
மகிமை செய்கிறார். தூய்மையாக இருந்தாலும் கூட பின்னர் தந்தையின்
நினைவும் வேண்டும். நினைவில் தான் அடிக்கடி தடைகள்
ஏற்படுகின்றன. தேக அபிமானம் வந்து விடுகிறது. தூய்மையாக
இருக்கிறார்கள். அது சரி தான் ! தூய்மையினால் தான் தூய்மையான
உலகத்தின் ஆஸ்தியைப் பெறுவீர்கள். ஆனால் பிறகு மாயை கூட
பலசாலியாக இருக்கும். மாயை நிறைய தாக்குகிறது. இவை எல்லாம்
ஆகும் என்று தந்தை புரிய வைக்கிறார். துணிவை
வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் கூடவே நிரந்தர நினைவும் இருக்க
வேண்டும். அப்பொழுது தான் விகர்மங்கள் விநாசம் ஆகும். யார்
சிறந்த வீரர் (ருஸ்தம்) ஆகிறார்களோ அவர்களை மாயை கூட நிறைய
தொல்லைப்படுத்துகிறது. நினைவில் இருப்பது அவர்களுக்கு கஷ்டமாக
உள்ளது. யாரால் இருக்க முடியுமோ அவர்களிடம் அனுபவம் பற்றி
கேட்க வேண்டும். என்ன நினைக்கிறார்கள்? எப்படி இருக்கிறார்கள்?
நினைவில் இருப்பதால் விகர்மங்கள் விநாசம் ஆகும். இந்த விஷயமே
முற்றிலுமே தனிப்பட்டது மற்றும் புதியதாகும். இங்கு
அமர்ந்திருக்கும் பொழுது போதை ஏறி இருக்கும். பகவான் ஒரே ஒருவர்
மட்டுமே நிராகாரமானவர், கிருஷ்ணர் அல்ல என்பதையும்
புரிந்துள்ளீர்கள். உண்மையில் கிருஷ்ணருக்காக உரலில் கட்டி
வைத்தார்கள். இப்படி செய்தார்கள் என்று சாஸ்திரங்களில்
எழுதப்பட்ட விஷயங்கள் எல்லாம் ஒன்றும் கிடையாது. இது கூட அவரை
நிந்திப்பதாகும். இழிவு படுத்துகிறார்கள். கிருஷ்ணரிடம்
எந்தவொரு அவகுணமும் இருக்கவில்லை. சஞ்சலப்படுவது - இது கூட ஒரு
அவகுணம் ஆகுமல்லவா? கிருஷ்ணரோ முற்றிலுமே மரியாதா புருஷோத்தமர்
ஆவார். அவருக்கு சர்வகுண சம்பன்ன.... என்று மகிமை பாடுகிறார்கள்.
குரு பிரம்மா, குரு விஷ்ணு... என்று பாடப் படுகிறது. எங்களுக்கு
இவர் குரு ஒன்றும் கிடையாது என்று கூறுங்கள். நாங்கள் இவரை குரு
என்றும் ஏற்றுக் கொள்வதில்லை, இறைவன் என்றும் ஏற்றுக்
கொள்வதில்லை. பதீத பாவனரோ ஒரே ஒரு நிராகாரமானவர் ஆவார் அல்லவா?
சாகார குரு யாருமே பதீத பாவனராக இருக்க முடியாது. இச்சமயம்
நீங்கள் பரமபிதா பரமாத்மாவின் முழு வாழ்க்கை சரித்திரத்தை
அறிந்துள்ளீர்கள். 5 ஆயிரம் வருடங்களில் சிவபாபாவின் என்ன பாகம்
நடக்கிறது என்பதை நீங்கள் தந்தை மூலமாக அறிந்துள்ளீர்கள். தந்தை
ஞானம் நிறைந்தவர் ஆவார் அல்லவா? சுகம், சாந்தி, ஆனந்தக் கடல்..
என்பது அவருடைய மகிமையாகும். தந்தையிடம் பொக்கிஷங்கள் உள்ளன
என்றால், அவசியம் குழந்தைகளுக்கு கூட கொடுத்திருக்கக் கூடும்
அல்லவா? நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து
கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும்
தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை
வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. கர்மாதீத நிலையை அடைய வேண்டும் என்றால், இந்த கர்ம
இந்திரியங்களால் எந்த ஒரு தவறும் செய்யக் கூடாது. தூய்மையாக
இருப்பதுடன் கூடவே நினைவிலும் உறுதி யானவராக வேண்டும்.
2. எப்பொழுதும் புண்ணிய ஆத்மாவாக ஆக வேண்டும் என்றால் உடல்,
மனம், பொருளால் தந்தை மீது சமர்ப்பணமாக வேண்டும். ஒரு முறை
சமர்ப்பணம் ஆவதால் 21 பிறவிகளுக்கு புண்ணிய ஆத்மா ஆகி
விடுவீர்கள்.
வரதானம்:
சகஜயோகத்தை குணமாக மற்றும் இயற்கையாக ஆக்கக் கூடிய
ஒவ்வொரு பாடத்திலும் பூரணமானவர் ஆகுக.
தந்தையின் குழந்தைகளாக இருக்கிறீர்கள் - இதில் எந்த சதவிகிதமும்
கிடையாது. அதே போன்று நிரந்தர சகஜயோகி அல்லது யோகி ஆவதில்
இப்பொழுது சதவிகிதம் அழிந்து விட வேண்டும். இயற்கையாக மற்றும்
குணமாக ஆகி விட வேண்டும். ஒருவருக்கு விசேˆ குணம் இருக்கிறது
எனில் அந்த குணத்தை விரும்பா விட்டாலும் அதன்படி நடந்து
கொண்டிருப்பார். அதே போன்று இதுவும் குணமாக ஆகிவிட வேண்டும்.
பூரணம் என்றால் விளைவு மற்றும் குறையிலிருந்து விடுபட்டு
இருப்பதாகும்.
சுலோகன்:
பொறுத்துக் கொள்வது குஷியாக பொறுத்துக் கொள்ளுங்கள்,
வலுக்கட்டாயமாக அல்ல.
அவ்யக்த சமிக்கை: ஜுவாலா (அக்னி) சொரூப நிலையில் இருந்து
சக்தி வாய்ந்த நினைவை அனுபவம் செய்யுங்கள்
சக்திசாலியாக யோகா என்றால் ஈடுபாடு என்ற நெருப்பாகும், ஜுவாலா
ரூப நினைவு தான் ஊழல், அட்டுழியம் என்ற நெருப்பை சமாப்தி
செய்யும். மேலும் அனைத்து ஆத்மாக்களுக்கும் சகயோகம் செய்யும்.
இதன் மூலம் தான் எல்லையற்ற வைராக்கிய விருத்தி பிரகாசமாகும்.
நினைவு என்ற அக்னி ஒருபுறம் அந்த நெருப்பை அழித்து விடும்,
மற்றொருபுறம் ஆத்மாக் களுக்கு பரமாத்ம செய்தி, குளிர்ந்த
சொரூபத்தின் அனுபவம் செய்விக்கும். இதன் மூலம் தான் ஆத்மாக்கள்
பாவ நெருப்பிலிருந்து முக்தி அடைய முடியும்.