17-10-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! நினைவின்
யாத்திரையின் மீது முழு கவனம் கொடுங்கள், இதன் மூலம் தான்
சதோபிரதானம் ஆவீர்கள்.
கேள்வி:
தந்தை தமது குழந்தைகளின் மீது
எவ்வகையில் இரக்கத்தைக் காட்டுகிறார்?
பதில்:
தந்தை குழந்தைகளின் நன்மைக்காக
கொடுக்கும் வழிகள் தான் குழந்தைகள் மீது காட்டும் இரக்கம் ஆகும்.
தந்தையின் முதல் வழி - இனிமையான குழந்தைகளே, ஆத்மா அபிமானி
ஆகுங்கள். ஆத்ம அபிமானிகள் மிகவும் அமைதியாக இருப்பார்கள்.
அவர்களின் சிந்தனை ஒரு போதும் தலைகீழாக இருக்காது.
கேள்வி:
குழந்தைகள் தமக்குள் எந்த மாதிரி
கருத்தரங்கம் நடத்த வேண்டும்?
பதில்:
எப்போது நடைப் பயிற்சிக்குச் சென்றாலும் நினைவின் யாத்திரை
செய்யுங்கள் மற்றும் பிறகு அமர்ந்து தங்களுக்குள் யார் எவ்வளவு
சமயம் தந்தையை நினைவு செய்தீர்கள் என்று கலந்தாலோசனை
செய்யுங்கள் - இங்கே (மதுபன்) நினைவு செய்வதற்காக மிகவும் நல்ல
ஏகாந்தம் (தனிமை) கூட கிடைக்கிறது.
ஓம் சாந்தி.
நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று ஆன்மீகத் தந்தை
ஆன்மீகக் குழந்தைகளிடம் கேட்கிறார். ஆன்மீகக் குழந்தைகள்
சொல்வார்கள் - பாபா, சதோபிரதானமாக இருந்த நாங்கள் தமோபிரதானம்
ஆகிவிட்டோம், பிறகு பாபா உங்கள் ஸ்ரீமத்படி நடந்து மீண்டும்
நாங்கள் கண்டிப்பாக சதோபிரதானம் ஆக வேண்டும். இப்போது பாபா தனது
வழி முறையைக் கூறியிருக்கிறார். இது ஏதும் புதிய விஷயம் அல்ல.
பழையதிலும் பழைய விஷயம் ஆகும். அனைத்திலும் பழைய விஷயம்
நினைவின் யாத்திரையாகும், இதில் வெளியில் காட்டிக் கொள்ளக்
கூடியது எதுவும் இல்லை. நாம் எதுவரை தந்தையை நினைவு செய்கிறோம்,
எதுவரை சதோபிரதானம் ஆகியுள்ளோம், என்ன முயற்சி செய்து
கொண்டிருக்கிறோம் என்று ஒவ்வொருவரும் தமக்குள் கேட்க வேண்டும்.
கடைசி நேரம் வரும்போது சதோபிரதானம் ஆகப் போகிறோம். அதன்
காட்சியும் கூட தெரியக்கூடியதாக இருக்கும். யார் எது செய்தாலும்
தமக்காகத்தான் செய்கின்றனர். தந்தையும் கூட கிருபை எதுவும்
காட்டுவதில்லை. குழந்தை களுக்கு அவர்களின் நன்மைக்காகவே வழி
கொடுக்கக்கூடிய இரக்கத்தைக் காட்டுகிறார். தந்தை நன்மை
செய்யக்கூடியவர். பல குழந்தைகள் தலைகீழ் ஞானத்தில் வந்து
விடுகின்றனர். தந்தை உணர்கிறார் - தேக அபிமானிகள்
கர்வமிக்கவர்களாக இருக்கின்றனர். ஆத்ம அபிமானி கள் மிகவும்
அமைதியாக இருப்பார்கள். அவர்களுக்கு ஒருபோதும் தலைகீழான
சிந்தனைகள் வருவதில்லை. தந்தை எல்லா விதத்திலும் முயற்சி
செய்வித்தபடி இருக்கிறார். மாயையும் கூட மிகவும் பலசாலியாக
இருக்கிறது, நல்ல நல்ல குழந்தைகள் மீதும் போர் தொடுக்கிறது,
ஆகையால் பிராமணர்களின் மாலை உருவாக்க முடியவில்லை. இன்று
மிகவும் நல்ல விதமாக நினைவு செய்கின்றனர், நாளை பச்சோந்தி போல
தேக அகங்காரத்தில் வந்து விடுகின்றனர். இதில் ஒரு பழமொழியும்
உள்ளது - தேவலோகத்தின் தெய்வீகத்தன்மை குறித்து தேகாபிமானமிக்க
பச்சோந்திக்கு என்ன தெரியும்? தேகாபிமானம் மிகவும் கெட்டது.
மிகவும் முயற்சி செய்ய வேண்டியுள்ளது. நான் ஒரு கீழ்ப்படிந்த
சேவகன் என்று சிவபாபா கூறுகிறார். தன்னை சேவகன் என சொல்வது,
பிறகு அதிகாரம் செலுத்துவது என்பதல்ல. இனிமையிலும் இனிமையான
குழந்தைகளே, கண்டிப்பாக சதோபிரதானம் ஆக வேண்டும். இது மிகவும்
சகஜமானது, இதில் வார்த்தைகள் உச்சரிப்பதற்கு எதுவும் இல்லை.
வாய் மூலம் பேசுவது எதுவுமில்லை. எங்கு வேண்டுமானாலும்
செல்லுங்கள், உள்ளுக்குள் நினைவு இருக்க வேண்டும். இங்கே
அமர்ந்திருக்கும் போது பாபா உதவி செய்வார் என்பதல்ல. தந்தை உதவி
செய்யத்தான் வந்திருக்கிறார். குழந்தைகள் எங்காவது தப்பு செய்து
விடுவார்களோ என்ற சிந்தனை பாபாவுக்கு உள்ளது. மாயை இங்கேதான்
குத்து (அடி) கொடுத்து விடுகிறது. தேகா பிமானம் மிக மிக கெட்டது.
தேகாபிமானத்தில் வருவதன் மூலம் முழுக்க குப்புற விழுந்து
விட்டார்கள். இங்கே வந்து அமர்கிறீர்கள் என்றாலும் மிக மிக
அன்பான தந்தையை நினைவு செய்யுங்கள் என்று பாபா சொல்கிறார்.
நான்தான் தூய்மையற்றவர்களை தூய்மையாக்கு கிறேன், என்னை நினைவு
செய்வதன் மூலம் இந்த யோக அக்னியினால் உங்களுடைய பிறவி
பிறவிகளின் பாவங்கள் பஸ்பமாகும். யாருக்கும் நல்ல விதமாகப்
புரிய வைக்கக் கூடிய நிலை இன்னும் வரவில்லை. ஞான வாளில் கூட
யோகத்தின் கூர்மை தேவை. இல்லாவிட்டால் வாள் எதற்கும் உதவாது.
முக்கியமான விஷயமே நினைவின் யாத்திரை. பல குழந்தைகள் தலை கீழான
வேலை, தொழில்களில் ஈடுபட்டிருக்கின்றனர். நினைவின் யாத்திரை
செய்வ தில்லை மற்றும் படிப்பு படிப்பதில்லை, ஆகையால் இதில்
நேரம் கிடைப்பதில்லை. வேலை, தொழில்களுக்கு பின்னால் சென்று தனது
பதவியை இழக்கும்படியான முயற்சியை செய்யாதீர்கள் என்று தந்தை
கூறுகிறார். தனது எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் அல்லவா! ஆனால்
சதோபிரதானமாக ஆக வேண்டும். இதில்தான் மிகவும் உழைப்பு தேவைப்
படுகிறது. பெரிய பெரிய மியூசியம் (அருங்காட்சியகம்) கவனித்துக்
கொள்பவர்களாக இருக் கின்றனர், ஆனால் நினைவின் யாத்திரையில்
இருப்பதில்லை. நினைவின் யாத்திரையில் ஏழை கள், பந்தனத்தில்
இருப்பவர்கள் அதிகமாக இருக்கின்றனர். அடிக்கடி சிவபாபாவை நினைவு
செய்தபடி இருக்கின்றனர். சிவபாபா எங்களுடைய இந்த பந்தனத்தை
நீக்குங்கள் என்றபடி இருக்கின்றனர். அபலைகள் மீது கொடுமைகள்
இழைக்கப்படுகின்றன… இந்த பாடலும் உள்ளது.
குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் இனிமையானவர்களாக ஆக வேண்டும்.
உண்மையிலும் உண்மையான மாணவர்கள் ஆக வேண்டும். நல்ல மாணவர்களாக
இருப்பவர்கள் தனிமையில் தோட்டத்தில் சென்று படிப்பார்கள்.
உங்களுக்கும் கூட தந்தை சொல்கிறார் - எங்கு வேண்டு மானாலும்
சுற்றுவதற்காக செல்லுங்கள், தன்னை ஆத்மா எனப்புரிந்து கொண்டு
பாபாவை நினைவு செய்யுங்கள். நினைவு யாத்திரையின் மீது ஆர்வம்
வையுங்கள். அந்த செல்வத்தை சம்பாதிப்பதுடன் ஒப்பிடும்போது இந்த
அழிவற்ற செல்வம் மிக மிக உயர்வானதாகும். அந்த அழியக்கூடிய
செல்வம் பிறகு மண்ணாகப் போகிறது. பாபாவுக்குத் தெரியும் -
குழந்தைகள் முழுமையாக சேவை செய்வதில்லை, நினைவில் இருப்பதே
கஷ்டமாக உள்ளது. செய்ய வேண்டிய உண்மையான சேவையை அவர்கள்
செய்வதில்லை. மற்றபடி ஸ்தூல சேவையில் கவனம் சென்று விடுகிறது.
நாடகத்தின்படி நடக்கிறது, ஆனாலும் கூட தந்தை முயற்சி
செய்விப்பார் அல்லவா! தந்தை சொல்கிறார்- எந்த காரியம்
செய்தாலும், துணி தைத்துக் கொண்டிருந்தாலும், தந்தையை நினைவு
செய்யுங்கள். நினைவில் தான் மாயை தடைகளைப் போடுகிறது.
பலசாலியுடன் மாயையும் பலசாலியாகி சண்டையிடும் என்று பாபா புரிய
வைத்திருக்கிறார். பாபா (பிரம்மா) தன்னைக் குறித்தும்
கூறுகிறார் - நான் பலசாலியாக இருக்கிறேன், நான்
பிச்சைக்காரனிலிருந்து இளவரசன் ஆகக் கூடியவன் என்பதை அறிவேன்,
என்றாலும் கூட மாயை என்னை எதிர்க்கிறது. மாயை யாரையும்
விடுவதில்லை. பயில்வான் களிடம் இன்னும் கூட சண்டையிடுகிறது. பல
குழந்தைகள் தனது தேக அகங்காரத்தில் மிகவும் இருக்கிறார்கள்,
தந்தை எவ்வளவு நிரகங்காரியாக இருக்கிறார்! நான் கூட
குழந்தைகளாகிய உங்களுக்கு நமஸ்காரம் செய்யக்கூடிய சேவகனாக
இருக்கிறேன் என்று கூறுகிறார். அவர்களோ தம்மை மிகவும்
உயர்ந்தவர்களாகப் புரிந்து கொள்கின்றனர். இந்த தேக அகங்காரத்தை
எல்லாம் நீக்க வேண்டும். பலருக்குள் அகங்காரத்தின் பூதம்
அமர்ந்திருக்கிறது. தன்னை ஆத்மா என்று புரிந்து கொண்டு தந்தையை
நினைவு செய்தபடி இருங்கள் என்று தந்தை சொல்கிறார். இங்கேயோ
மிகவும் நல்ல வாய்ப்புகள் இருக்கின்றன. சுற்றித் திரிவதற்கும்
கூட நன்றாக உள்ளது. நேரமும் இருக்கிறது. சுற்றித் திரியுங்கள்,
பிறகு ஒருவர் மற்றவரை கேளுங்கள் - எவ்வளவு நேரம் நினைவில்
இருந்தீர்கள்? வேறு எந்தப் பக்கமும் புத்தி செல்ல வில்லையல்லவா?
இதனை தமக்குள் கலந்தாலோசனை செய்ய வேண்டும். ஆண்கள் தனியாக,
பெண்கள் தனியாக இருக்கலாம். பெண்கள் முன்னால், ஆண்கள் பின்னால்
என்று அமருங்கள். ஏனென்றால் மாதர்களை கவனித்துக் கொள்ள வேண்டும்.
அதற்காகத்தான் மாதர்கள் முன்னால் வைக்கப்பட்டனர். ஏகாந்தம்
மிகவும் நன்றாக உள்ளது. சன்னியாசிகளும் கூட ஏகாந்தத்தில் (தனிமை)
சென்று அமர்கின்றனர். சதோபிரதான சன்னியாசிகளாக இருந்தவர்கள்
பயமற்றவர் களாக இருந்தனர். மிருகங்கள் முதலானவைகளைக் கண்டு
பயப்படாமல் இருந்தனர். அந்த போதையில் இருந்தனர். இப்போது
தமோபிரதானமாகி இருக்கின்றனர். ஒவ்வொரு தர்மமுமே ஸ்தாபனை யாகும்
போது முதலில் சதோபிரதானமாக இருக்கின்றன, பிறகு ரஜோ, தமோவில்
வருகின்றன. சதோபிரதானமாக இருந்த சன்னியாசிகள் பிரம்ம
தத்துவத்தின் போதையில் மூழ்கி இருந்தனர். அவர்களிடம் மிகவும்
ஈர்ப்பு இருந்தது. காட்டில் உணவு கிடைத்துக் கொண்டிருந்தது.
நாளுக்கு நாள் தமோபிரதானம் ஆவதால் சக்தி குறைந்து விடுகின்றது.
ஆக, பாபா வழி கூறுகிறார் - இங்கே குழந்தைகளுக்கு தமது
முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் மிகவும் நன்றாக உள்ளன. நீங்கள்
இங்கே வருவதே வருமானத்தை சம்பாதிப்பதற்காக. வெறுமனே பாபாவுடன்
சந்திப்பதால் வருமானம் கிடைக்காது. தந்தையை நினைவு செய்தால்
வருமானம் கிடைக்கும். பாபா ஆசீர்வாதம் கொடுப்பார் என்று
புரிந்து கொள்ள வேண்டாம், அப்படி எதுவுமில்லை. அந்த சாதுக்கள்
முதலானவர்கள் ஆசீர்வாதம் கொடுக்கின்றனர், ஆனால் நீங்கள் கீழே
விழத்தான் வேண்டும். இப்போது தந்தை சொல்கிறார் - ஜின் பூதமாகி
தனது புத்தியின் தொடர்பை மேலே ஈடுபடுத்துங்கள். ஜின் பூதத்தின்
கதை உள்ளதல்லவா! எனக்கு வேலை கொடு என்று கூறியது. தந்தையும்
கூறுகிறார் - உங்களுக்கு வழி கூறுகிறேன், நினைவில் இருந்தீர்கள்
என்றால் படகு கரை சேர்ந்து விடும். நீங்கள் கண்டிப்பாக சதோபிர
தானம் ஆக வேண்டும். மாயா எவ்வளவு தான் மண்டையை உடைக்கட்டும்
மூளையை குழப் பட்டும். நாம் உயர்ந்த தந்தையை கண்டிப்பாக நினைவு
செய்வோம். இப்படியாக உள்ளுக்குள் தந்தையின் மகிமையைப் பாடியபடி
தந்தையை நினைவு செய்தபடி இருங்கள். எந்த மனிதரையும் நினைவு
செய்யாதீர்கள். பக்தி மார்க்கத்தில் இருக்கும் பழக்க வழக்கங்கள்
எதுவும் ஞான மார்க்கத்தில் இருக்க முடியாது. நினைவின்
யாத்திரையில் வேகமாக செல்ல வேண்டும் என்று தந்தை அறிவுரை
கொடுக்கிறார். முக்கியமான விஷயம் இதுவாகும். சதோபிர தானம் ஆக
வேண்டும். தந்தையின் வழிகள் கிடைக்கின்றன- சுற்றித்திரிவதற்கு
சென்றாலும் கூட நினைவில் இருங்கள். அப்போது வீடும் நினைவில்
இருக்கும், இராஜ்யமும் நினைவில் இருக்கும். நினைவில் அமர்ந்து
அமர்ந்து விழுந்து (மூழ்கி) விடக் கூடாது. அது பிறகு ஹட யோகமாகி
விடும். இது நேரடியான விஷயம் - தன்னை ஆத்மா எனப் புரிந்து
கொண்டு தந்தையை நினைவு செய்ய வேண்டும். பல குழந்தைகள்
அமர்ந்தபடியே நிலை மறந்து விடுகின்றனர், ஆகையால் தந்தை
சொல்கிறார் - நடந்து சுற்றியபடி, உண்டு அருந்தியபடி நினைவில்
இருங்கள். அப்படி அல்ல - அமர்ந்தபடியே சுய நினைவில்லாமல் போவது.
இதன் மூலம் உங்கள் பாவங்கள் ஏதும் நீங்காது. மாயையின் இந்த
தடைகளும் கூட ஏற்படுகின்றன. இந்த போக் (பிரசாதம்) முதலானவை கூட
ஒரு பழக்க வழக்கம்தான், மற்றபடி இதில் எதுவுமில்லை. இதில்
மாயையின் பல தடைகள் ஏற்படுகின்றன. இது ஞானமும் அல்ல, இது
யோகமும் அல்ல. சாட்சாத்காரம் (காட்சி தெரிவது) தேவையில்லை.
பலருக்கு காட்சிகள் தெரிந்தது, அவர்கள் இன்று இல்லாமல்
போய்விட்டார்கள். மாயை மிகவும் பலம் வாய்ந்தது.
சாட்சாத்காரத்தின் ஆசை ஒருபோதும் வைக்கக் கூடாது. இதில்
சதோபிரதானம் ஆவதற்காக தந்தையை நினைவு செய்ய வேண்டும்.
நாடகத்தைப் பற்றியும் கூட தெரிந்திருக்கிறீர்கள். இது அனாதியாக
உருவாகியுள்ள நாடகம். இது மீண்டும் மீண்டும் நடந்தபடி
இருக்கிறது. இதையும் புரிந்து கொள்ள வேண்டும், தந்தை கொடுக்கக்
கூடிய வழிகள்படியும் நடக்க வேண்டும். நாம் மீண்டும் இராஜயோகம்
கற்பதற்காக வந்துள்ளோம் என்பதைக் குழந்தைகளும் அறிவார்கள்.
விஷயம் பாரதத்தினுடையதுதான். இதுவே தமோபிரதானமாகி இருக்கிறது,
பிறகு இதுவே சதோபிரதானமாக வேண்டும். தந்தையும் கூட
பாரதத்தில்தான் வந்து அனைவருக்கும் சத்கதியை வழங்குகிறார். இது
மிகப் பெரிய அதிசயமான விளையாட்டாகும். இப்போது தந்தை சொல்கிறார்
- இனிமையினும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளே, தன்னை ஆத்மா எனப்
புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் 84 பிறவிகளின் சக்கரத்தை சுற்றி
முடித்து 5000 வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது மீண்டும் வீடு
திரும்ப வேண்டும். இந்த விஷயங்களை வேறு யாரும் சொல்ல முடியாது.
குழந்தைகளாகிய உங்களுக்குள்ளும் வரிசைக்கிரமமான முயற்சிக்குத்
தகுந்தாற்போல நிச்சயபுத்தி உள்ளவராக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள்.
இது எல்லைக்கப் பாற்பட்ட பாடசாலை ஆகும். குழந்தைகள் அறிவார்கள்
- எல்லைக்கப்பாற்பட்ட தந்தை நம்மைப் படிப்பிக்கிறார், அவர்
திறமையான ஆசிரியர், மிகவும் அன்போடு புரிய வைக்கிறார். எத்தனை
நல்ல நல்ல குழந்தைகள் மிகவும் ஓய்வாக (சுகமாக) 6 மணி வரை
தூங்கியபடி இருக்கின்றனர். மாயை ஒரேயடியாக மூக்கை பிடித்துக்
கொண்டு விடுகிறது. அதிகாரத்தைக் காட்டியபடி இருக்கின்றனர்.
ஆரம்பத்தில் நீங்கள் பட்டியில் இருந்த போது மம்மா பாபாவும் கூட
அனைத்து சேவைகளும் செய்து கொண்டிருந்தனர். பல குழந்தைகள்
மிகவும் ஓய்வாக இருக்கின்றனர். உள்ளே உறங்கியபடி இருக்கின்றனர்.
வெளியில் இருந்து யாராவது இவர் எங்கே? என்று கேட்டால் இல்லை
என்று சொல்வார்கள். ஆனால் உள்ளே தூங்கிக் கொண்டிருப்பார்கள். .
என்னென்னவெல்லாம் நடக்கிறது என்பதை பாபா புரிய வைக்கிறார்.
யாரும் முழுமையாக ஆகவில்லை, எவ்வளவு சேவைக்குப் புறம்பானவற்றை
(டிஸ் சர்வீஸ்) செய்து விடுகின்றனர். இல்லாவிட்டால் தந்தைக்கான
பாடல் உள்ளது - அடித்தாலும் அன்பு செலுத்தினாலும் நான் உங்கள்
வாசலை விட்டு நீங்க மாட்டேன். இங்கேயோ சின்ன விஷயத்திற்காக
கோபித்துக் கொள்கிறார்கள். நினைவு செய்வது மிகவும் குறைவாக
உள்ளது. பாபா எவ்வளவு குழந்தை களுக்கு புரிய வைத்தபடி
இருக்கிறார்! ஆனால் யாருக்கும் எழுதுவதற்கு சக்தி இல்லை. யோகம்
இருந்தது என்றால் எழுதுவதிலும் சக்தி நிரம்பும். தந்தை
சொல்கிறார் - கீதையின் பகவான் சிவன், ஸ்ரீகிருஷ்ணர் அல்ல என்பதை
நல்ல விதமாக நிரூபியுங்கள்.
தந்தை வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு அனைத்து விஷயங்களுக்கும்
அர்த்தத்தை புரிய வைக்கிறார். குழந்தைகளுக்கு இங்கே போதை
ஏறுகிறது, ஆனால் வெளியில் சென்றால் இறங்கி விடுகிறது. நிறைய
நேரத்தை வீணாக்குகின்றனர். நாம் சம்பாதித்து யக்ஞத்திற்கு
கொடுக்கலாம் என்ற சிந்தனையில் நேரத்தை வீணாக்கக் கூடாது. நான்
குழந்தைகளாகிய உங்கள் நன்மையை செய்வதற்காக வந்துள்ளேன், நீங்களோ
தனக்கு நஷ்டத்தை ஏற்படுத்திக் கொள்கிறீர்கள். யக்ஞத்தில்
கல்பத்திற்கு முன்பு யார் உதவி செய்தார்களோ, அவர்கள் செய்தபடி
இருக்கிறார்கள், செய்து கொண்டே இருப்பார்கள். இவர் செய்வாரா?
அவர் செய்வாரா? என்று நீங்கள் ஏன் மண்டையை உடைத்துக்
கொள்கிறீர்கள்? யார் விதையை விதைத்தார்களோ, அவர்கள் இப்போதும்
கூட விதைப்பார்கள் - இது நாடகத்தில் பதிவாகியுள்ளது. யக்ஞத்தைப்
பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். தனக்கு நன்மையை செய்து
கொள்ளுங்கள். தனக்கு உதவி செய்து கொள்ளுங்கள். பகவானுக்கு
நீங்கள் உதவி செய்கிறீர்களா என்ன? பகவானிடமிருந்து நீங்கள்
எடுக்கிறீர்களா அல்லது கொடுக்கிறீர்களா? இந்த சிந்தனை கூட
வரக்கூடாது. பாபா சொல்கிறார் - செல்லக் குழந்தைகளே! தன்னை ஆத்மா
எனப்புரிந்து கொண்டு தந்தையை நினைவு செய்தீர்கள் என்றால் பாவ
கர்மங்கள் அழியும். இப்போது நீங்கள் சங்கம யுகத்தில்
நிற்கிறீர்கள். சங்கமத்தில் தான் நீங்கள் இரு பக்கங்களையும்
பார்க்க முடியும். இங்கே எவ்வளவு அளவற்ற மனிதர்கள்
இருக்கின்றனர். சத்யுகத்தில் எவ்வளவு குறைந்த மனிதர்கள்
இருப்பார்கள். முழு நாளும் சங்கமத்தில் இருக்க (நிற்க) வேண்டும்.
பாபா என்னவாக இருந்த நம்மை என்னவாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்.
தந்தையின் நடிப்பு எவ்வளவு அதிசயமானது! சுற்றுங்கள்,
திரியுங்கள், தந்தையின் நினைவு யாத்திரையில் இருங்கள். பல
குழந்தைகள் நேரத்தை வீணாக்கிக் கொள்கின்றனர். நினைவின்
யாத்திரையின் மூலம்தான் படகு கரை சேரும். கல்பத்திற்கு முன்பும்
கூட குழந்தைகளுக்கு இப்படி புரிய வைத்திருந்தார். நாடகம்
மீண்டும் மீண்டும் நடந்தபடி இருக்கிறது. அமர்ந்தாலும்,
எழுந்தாலும் கல்ப விருட்சம் நினைவில் இருக்க வேண்டும், இது
படிப்பு ஆகும். மற்றபடி வேலை, தொழில் முதலானவற்றை செய்யுங்கள்.
படிப்பிற்காக நேரத்தை ஒதுக்க வேண்டும். ஸ்வீட் பாபா மற்றும்
சொர்க்கத்தை நினைவு செய்யுங்கள். எந்த அளவு நினைவு செய்வீர்களோ,
அந்த அளவு இறுதி நிலையின் கதி (நிலை) அமையும். அவ்வளவு தான்
பாபா, இப்போது உங்களிடம் வந்தே வந்து விட்டோம். தந்தையின்
நினைவில் பிறகு சுவாசமும் கூட சுகம் மிக்கதாக ஆகி விடும்.
பிரம்ம ஞானிகளின் சுவாசம் கூட சுகமானதாகி விடுகிறது.
பிரம்மத்தைத்தான் நினைக்கிறார்கள், ஆனால் பிரம்ம லோகத்திற்கு
யாரும் செல்வதில்லை. தானாக சரீரம் விட வேண்டும் என்பது நடக்கக்
கூடியதுதான். பலர் உண்ணாமல் இருந்து சரீரத்தை விட்டு
விடுகின்றனர், அவர்கள் துக்கமிக்க வர்களாகி இறக்கின்றனர்.
உண்ணுங்கள், குடியுங்கள், தந்தையை நினைவு செய்தீர்கள் என்றால்
இறுதி நினைவுக்கேற்ற கதி கிடைக்கும் என்று தந்தை கூறுகிறார்.
இறக்கத்தான் வேண்டி யுள்ளது அல்லவா! நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுத்த குழந்தைகளுக்கு
தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை
வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின்
நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. என்ன கர்மங்கள் நாம் செய்கிறோமோ, நம்மைக் கண்டு
மற்றவர்களும் செய்வார்கள் . . . இது எப்போதும் நினைவில் இருக்க
வேண்டும். சேவைக்குப் புறம்பானதை (டிஸ்-சர்வீஸ்) செய்து
விடக்கூடிய ஓய்வு விரும்பியாகி விடக் கூடாது. மிக மிக
அகங்காரமற்றவராக ஆக வேண்டும். தனக்குத் தானே உதவி செய்து நன்மை
செய்து கொள்ள வேண்டும்.
2. நினைவின் யாத்திரை மற்றும் படிப்புக்காக நேரமே இல்லாத
அளவிற்கு வேலை தொழிலில் மும்முரமாக மூழ்கி விடக் கூடாது. தேக
அபிமானம் மிகவும் போலியானது மற்றும் கெட்டது, இதனை விட்டு ஆத்ம
அபிமானி ஆகி இருக்கும் முயற்சி செய்ய வேண்டும்.
வரதானம்:
நீங்கள் எந்த ஒரு விசயத்தையும் நன்மைக்கான பாவனையோடு பார்க்கவோ
கேட்கவோ செய்யும் பரதர்ஷனத்தில் (மற்ற சிந்தனை) இருந்து
முக்தியடைந்தவர் ஆகுங்கள்.
எவ்வளவு குழு பெரியதாகிக் கொண்டு செல்கின்றதோ, அவ்வளவு
விஷயங்களும் பெரிதாக இருக்கும். ஆனால் பார்த்து பார்க்காத,
கேட்டும் கேட்காத நிலையில் இருக்கும் போது தான் உங்களுக்குப்
பாதுகாப்பு. தனது சுயச்சிந்தைனயில் இருங்கள். சுயச் சிந்தனை
செய்யும் ஆத்மாக் கள் பரச்சிந்தனையிலிருந்து விடுபட்டு
விடுவார்கள். சில காரணங்களால் நீங்கள் கேட்க வேண்டியிருந்தால்,
உங்களை நீங்களே பொறுப்பாகக் கருதினால், முதலில் உங்கள் பிரேக்கை
சக்தி வாய்ந்ததாக ஆக்குங்கள். பார்த்தேன் கேட்டேன், முடிந்தவரை
நன்மை செய்தேன் மற்றும் முற்றுப்புள்ளி.
சுலோகன்:
ஒவ்வொரு அடியிலும் தனது திருப்தி, மகிழ்ச்சியான வாழ்வினால் சேவை
செய்பவர்கள் தான் உண்மையான சேவாதாரிகள்.