17-10-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! எப்படி தந்தை
வருங்காலத்தின் 21 பிறவிகளுக்கான சுகம் தருகிறாரோ, அதுபோல்
குழந்தைகளாகிய நீங்களும் தந்தைக்கு உதவியாளராகுங்கள். அன்பான
புத்தி உள்ளவர் ஆகுங்கள். ஒருபோதும் துக்கம் கொடுப்பதற்கான
சிந்தனை கூட வரக் கூடாது.
கேள்வி:
ரூப் பஸந்த் (ஞானி-யோகி)
குழந்தைகளாகிய உங்கள் கடமை என்ன? உங்களுக்கு பாபாவின் எந்த
மாதிரி அறிவுரைகள் கிடைத்துள்ளன?
பதில்:
ரூப் பஸந்த் குழந்தைகளாகிய உங்கள்
கடமை, வாயிலிருந்து சதா இரத்தினங்களையே வெளிப்படுத்த வேண்டும்.
உங்கள் வாயிலிருந்து ஒரு போதும் கற்கள் வெளிவரக் கூடாது.
அனைத்துக் குழந்தைகளுக்கும் தந்தையின் அறிவுரையாவது -
குழந்தைகளே, 1. தங்களுக்குள் ஒருபோதும் ஒருவர் மற்றவரைத்
துன்புறுத்தக் கூடாது, கோபப்படக் கூடாது. இது அசுர மனிதர் களின்
வேலை. 2. மனதில் கூட யாருக்கும் துக்கம் தருவதற்கான சிந்தனை
வரக்கூடாது. 3. புகழ்ச்சி-இகழ்ச்சி, மானம்-அவமானம் அனைத்தையும்
சகித்துக் கொள்ள வேண்டும். யாராவது ஏதாவது பேசினால் சாந்தமாக
இருக்க வேண்டும். தன் கையில் சட்டத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.
பாடல்:
நீ அன்புக் கடலாக இருக்கிறாய்
............
ஓம் சாந்தி.
ஞானம் மற்றும் அஞ்ஞானம். குழந்தைகளாகிய உங்களுக்கு இப்போது
ஞானம் உள்ளது - பக்தர்கள் யாருக்கு மகிமை செய்கிறார்கள் மற்றும்
குழந்தைகள் நீங்கள் இங்கே அமர்ந் திருக்கிறீர்கள், நீங்கள்
யாருடைய மகிமையைக் கேட்கிறீர்கள்? இரவு-பகலுக்குள்ள வேறுபாடு!
அவர்களோ பெயரளவிற்கு மகிமை பாடிக் கொண்டிருக்கின்றனர். இவ்வளவு
அன்பு கிடையாது. ஏனென்றால் தந்தையின் அறிமுகம் இல்லை.
உங்களுக்கு பாபா அறிமுகம் தந்துள்ளார்-நான் அன்புக்கடலாக
இருக்கிறேன் மற்றும் உங்களை அன்புக்கடலாக ஆக்கிக்
கொண்டிருக்கிறேன். தந்தை அன்புக்கடலாக இருப்பவர், அனைவருக்கும்
எவ்வளவு அன்பானவராக இருக்கிறார்! அங்கே யும் அனைவரும் ஒருவர்
மற்றவர் மீது அன்பு செலுத்துகின்றனர். இதை நீங்கள் இங்கே
கற்றுக் கொள்கிறீர்கள். யாரோடும் விரோதம் இருக்கக் கூடாது.
அப்படிப்பட்டவர்களை பாபா உப்பு நீர் எனச் சொல்கிறார்.
உள்ளுக்குள் யார் மீதும் வெறுப்புக் கொள்ளக் கூடாது. வெறுப்புக்
கொள்பவர்கள் கலியுக நரகவாசிகள். என்பதை நீங்கள் அறிவீர்கள்,
நாம் அனைவரும் சகோதர- சகோதரிகள். சாந்தி தாமத்தில் உள்ளனர்
என்றால் சகோதர-சகோதரர்கள். இங்கே கர்ம சேத்திரத்தில் பார்ட்டை
நடிக்கும் போது சகோதர-சகோதரிகள். நாம் ஈஸ்வரியக் குழந்தைகள்.
ஈஸ்வரனுடைய மகிமை, அவர் ஞானக்கடல், அன்புக்கடல், அதாவது
அனைவருக்கும் சுகம் தருகிறார். நீங்கள் அனைவரும் உங்கள் மனதைக்
கேளுங்கள். எப்படி தந்தை வருங்காலத்தின் 21 பிறவிகளுக்கு சுகம்
கொடுக் கிறார், அதுபோல் நாமும் அந்தக் காரியம் செய்கிறோமா?
தந்தையின் உதவியாளர் ஆகவில்லை, அன்பு செலுத்தவில்லை, ஒருவர்
மற்றவரிடையே அன்பு இல்லை, விபரீத புத்தி உள்ளவராக இருக்கிறார்
என்றால் அழிந்து போகிறார்கள். விபரீத புத்தி உள்ளவராக ஆவது
அசுரர்களின் வேலை. தங்களை ஈஸ்வரிய சம்பிரதாயத்தினர் எனச்
சொல்லிக் கொண்டு பிறகு ஒருவர் மற்ற வருக்கு துக்கம் கொடுப்பவர்
அசுரர் எனச் சொல்லப் படுகிறார். குழந்தைகள் நீங்கள் யாருக்கும்
துக்கம் கொடுக்கக் கூடாது. நீங்கள் துக்கத்தைப் போக்கி சுகம்
தரும் தந்தையின் குழந்தைகள். ஆகவே துக்கம் தருவதற்கான சிந்தனையே
உங்களுக்கு வரக்கூடாது. அவர்களோ அசுர சம்பிர தாயத்தினர்,
ஈஸ்வரிய சம்பிரதாயத்தினர் அல்ல. ஏனென்றால் தேக அபிமானிகள்.
அவர்கள் ஒருபோதும் நினைவு யாத்திரையில் இருக்க முடியாது. நினைவு
யாத்திரை இல்லாமல் நன்மை ஏற்பட முடியாது. ஆஸ்தி தருகிற பாபாவையோ
அவசியம் நினைவு செய்ய வேண்டும். அப்போது தான் விகர்மங்கள்
விநாசமாகும். அரைக்கல்பமாகவோ ஒருவர் மற்றவருக்கு துக்கம்
கொடுத்தே வந்திருக்கிறீர்கள். ஒருவர் மற்றவரோடு சண்டையிட்டுக்
கொண்டு தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர். அவர்கள்
அசுர சம்பிர தாயத்தினர் என எண்ணப் படுவார்கள். புருஷார்த்திகள்
தான் என்ற போதிலும் எது வரை துக்கம் கொடுத்துக் கொண்டே
இருப்பார்கள்? அதனால் பாபா சொல்கிறார், தன்னுடைய சார்ட்
வையுங்கள். சார்ட் வைப்பதால் தெரிய வரும் - நமது ரிஜிஸ்டர்
சீர்திருத்தம் ஆகிக் அடைந்து கொண்டே செல்கிறதா அல்லது அதே அசுர
நடத்தை யாகவே உள்ளதா என்று. பாபா எப்போதுமே சொல்கிறார்,
ஒருபோதும் யாருக்கும் துக்கம் கொடுக் காதீர்கள். புகழ்ச்சி-
இகழ்ச்சி, மானம்-அவமானம், குளிர்ச்சி-வெப்பம் அனைத்தையும்
சகித்துக் கொள்ள வேண்டும். யாராவது ஏதாவது சொல்லி விட்டால்
சாந்தமாக இருந்துவிட வேண்டும். அதற்காக இன்னும் இரண்டு
வார்த்தைகள் பேசிவிட வேண்டும் என்று இருக்கக் கூடாது. யாரேனும்
யாருக்காவது துக்கம் தருகிறார் என்றால் அவருக்கு பாபா புரிய
வைப்பார் இல்லையா? ஒரு குழந்தை இன்னொரு குழந்தைக்குச் சொல்ல
முடியாது. சட்டத்தைத் தனது கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது.
ஏதேனும் பிரச்சினை என்றால் பாபாவிடம் வர வேண்டும்.
அரசாங்கத்தில் கூட விதிமுறை உள்ளது - யாரும் ஒருவர் மற்றவர்
மீது அடி-தடியில் ஈடுபடக் கூடாது. புகார் கொடுக்கலாம்.
சட்டத்தின்படி நடவடிக்கை எடுப்பது அரசாங்கத்தின் வேலையாகும்.
நீங்களும் (ஈஸ்வரிய) அரசாங்கத்திடம் வாருங்கள். சட்டத்தை
நீங்களே கையில் எடுக்காதீர்கள். இதுவோ தங்களுடைய வீடு. அதனால்
பாபா சொல்கிறார், தினந்தோறும் கச்சேரி நடத்துங்கள். இதையும்
புரிந்து கொள்வதில்லை - சிவபாபா கட்டளையிடுகிறார் என்பதை. பாபா
சொல்லி யிருக்கிறார், எப்போதுமே சிவபாபா சொல்கிறார் எனப்
புரிந்து கொள்ளுங்கள். பிரம்மா சொல்கிறார் எனப் புரிந்து
கொள்ளாதீர்கள். எப்போதுமே சிவபாபா என்றே புரிந்து
கொள்வீர்களானால் அப்போது சிவபாபா நினைவு இருக்கும். சிவபாபா
இந்த ரதத்தை எடுத்துக் கொண்டுள்ளார், உங்களுக்கு ஞானம்
சொல்வதற்காக. சதோபிரதானம் ஆவதற்கான வழியை பாபா புரிய வைத்துக்
கொண்டிருக்கிறார். அவர் குப்தமாக உள்ளார். நீங்கள்
பிரத்யட்சமாக (வெளிப்படையாக) இருக்கிறீர்கள். என்னென்ன
கட்டளைகள் இடப்படுகின்றனவோ, அவை சிவபாபாவினுடையவை எனப் புரிந்து
கொள்ளுங்கள். அப்போது பாதுகாப்பாக இருப்பீர்கள். நீங்கள்
பாபா-பாபா என்று சிவபாபாவைத் தான் சொல்கிறீர்கள். ஆஸ்தியும்
கூட அவரிடமிருந்து தான் கிடைக்கின்றது. அவரிடம் எவ்வளவு மதிப்பு,
ராயல்டியுடன் (மரியாதையோடு) நடந்து கொள்ள வேண்டும்! நீங்கள்
சொல்கிறீர்கள் இல்லையா -பாபா, நாங்களோ லட்சுமி-நாராயணராகத் தான்
ஆவோம். பிறகு இரண்டாவது, மூன்றாவதாக ஆகிறீர்கள், சூரியவம்சி
ஆகவில்லை என்றால் சந்திரவம்சி ஆக வேண்டும். நாங்கள் தாச-தாசி
ஆவோம் என்று இருக்கக் கூடாது பிரஜையாக ஆவதோ நல்லதல்ல. நீங்களோ,
இங்கே தெய்வீக குணங்களையே தாரணை செய்ய வேண்டும். அசுர நடத்தையோ
இருக்கக் கூடாது. நிச்சயம் இல்லை என்றால் பிறகு (முயற்சி
செய்யாமலே) அமர்ந்தவாறே இப்படிச் சொல்லி விடுகின்றனர் -
இவருக்குள் சிவபாபா வருகிறார் என்பதை நாங்களோ புரிந்து
கொள்ளவில்லை. மாயாவின் பூதம் வருவதால் இப்படிச் சொல்லி
விடுகின்றனர். அசுர சுபாவம் உள்ளவர்கள் தங்களுக்குள்
சந்திப்பார்களானால் இதுபோல் பேசத் தொடங்கி விடுகின்றனர். அசுர
வார்த்தைகள் தான் வாயிலிருந்து வெளிப்படுகின்றன. பாபா
சொல்கிறார், ஆத்மாக்களாகிய நீங்கள் ரூப்-பஸந்த் ஆகிறீர்கள்.
உங்களுடைய வாயிலிருந்து இரத்தினங்கள் தான் வெளிப்பட வேண்டும்.
கல் வெளிப்படுகிறது என்றால் அசுர புத்தியுள்ளவர் ஆகிறார்கள்.
பாடலையும் குழந்தைகள் கேட்டீர்கள். குழந்தைகள் சொல்கின்றனர் -
பாபா அன்புக் கடல், சுகத்தின் கடலாக உள்ளார். இதெல்லாம்
சிவபாபாவின் மகிமை தான். பாபா சொல்கிறார், நீங்கள் தங்களை ஆத்மா
என உணர்ந்து தந்தையை நினைவு செய்யுங்கள். இதில் மிக நல்ல-நல்ல
குழந்தைகள் ஃபெயிலாகி விடுகின்றனர். ஆத்ம அபிமானி ஸ்திதியில்
நிலைக்க முடிவதில்லை. ஆத்ம அபிமானி ஆனால் தான் இவ்வளவு உயர்ந்த
பதவி பெற முடியும். அநேகக் குழந்தைகள் தவறான விஷயங்களில் அதிக
நேரத்தை வீணடிக்கின்றனர். ஞானத்தின் விஷயங்களே கவனத்தில் வருவ
தில்லை. வீட்டில் உள்ள கங்கைக்கு மதிப்பு வைக்க மாட்டார்கள்
என்று பாடலும் உள்ளது. வீட்டின் பொருளுக்கு அவ்வளவு மதிப்பு
வைப்பதில்லை. அதனால் கிருஷ்ணர் முதலானவர்களின் சித்திரம்
வீட்டிலும் உள்ளது. பிறகு ஸ்ரீநாத் கோவில் முதலானவைகளுக்கு
எவ்வளவு தூர-தூரமெல்லாம் ஏன் செல்கிறீர்கள்? சிவனுடைய
கோவில்களிலும் கல்லால் ஆன லிங்கம் தான் உள்ளது. மலைகளில்
இருந்த கல்லைக் கொண்டு வருகின்றனர். அது தேய்ந்து-தேய்ந்து
லிங்கமாக ஆகி விடுகின்றது. அவற்றில் சில கல்லில் தங்கமும்
பதிந்துள்ளது. தங்கத்தாலான கைலாச பர்வதம் எனச்
சொல்லப்படுகின்றது. தங்கம் மலைகளில் இருந்து வெளிப்படுகின்றது
இல்லையா? கொஞ்சம்-கொஞ்சம் தங்கம் பதிந்துள்ள கல்லும் உள்ளது.
பிறகு அவை மிக நல்ல-நல்ல உருண்டைகளாக ஆகி விடுகின்றன. பிறகு
அவற்றை விற்கின்றனர். சலவைக் கல்லிலும் கூட முக்கியமாகச்
செய்கின்றனர். இப்போது பக்தி மார்க்கத்தவர்களுக்குச்
சொல்லுங்கள் - நீங்கள் வெளியில் இப்படி ஏன் அலைகிறீர்கள்
என்றால் கோபப்படுவார்கள். பாபா, தாமே சொல்கிறார்,
குழந்தைகளாகிய நீங்கள் அதிகப் பணத்தை வீணடித்திருக்கிறீர்கள்.
இதுவும் டிராமாவில் ஒரு பாகமாக உள்ளது. இதனால் நீங்கள் அடி
வாங்க வேண்டி உள்ளது. இது ஞானம் மற்றும் பக்தியின் விளை யாட்டு.
இப்போது குழந்தைகள் உங்களுக்கு முழு ஞானமும் கிடைக்கின்றது.
ஞானம் என்பது சுகத்திற்கான வழி. ஞானத்தினால் சத்யுகத்தின்
இராஜ்யம் கிடைக்கின்றது. இச்சமயம் இராஜா-ராணி மற்றும் பிரஜைகள்
அனைவரும் நரகத்தின் எஜமானர்களாக உள்ளனர். யாராவது இறந்து போனால்
சொர்க்கவாசி ஆகி விட்டதாகச் சொல்கின்றனர். இந்த விஷயங்களை
இப்போது தான் நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். இப்போது
நீங்கள் சொல்கிறீர்கள், நாங்கள் சொர்க்கவாசி ஆவதற்காக
சொர்க்கத்தைப் படைப்பவரான பாபாவின் அருகில் அமர்ந்துள்ளோம்.
ஞானத்தின் துளி கிடைக்கின்றது. கொஞ்சம் ஞானம் கேட்டாலும் கூட
சொர்க்கத்தில் அவசியம் வந்து விடுவார் கள். மற்றதெல்லாம்
புருஷார்த்தத்தின் மீது உள்ளது. கங்கை நீரில் ஒரே ஒரு குவளையை
அவர்களின் வாயில் ஊற்றினாலும் கூட அவர்கள் பதித்திலிருந்து
பாவனமாகி விடுவ தாக நினைக் கின்றனர். குவளை நிறைய கங்கை நீரைக்
கொண்டு செல் கின்றனர். பிறகு அதிலிருந்து துளித் துளியாக நீரில்
கலந்து குளிக்கின்றனர். அது கங்கா ஸ்நானம் ஆகி விட்டதாக
நினைக்கின்றனர். வெளிநாடுகளுக்கும்கங்கை நீரை நிரப்பிக் கொண்டு
செல்கின்றனர். இவையனைத்தும் பக்தியாகும்.
பாபா குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார் - குழந்தைகளே, மாயா
மிக வேகமாக அடி கொடுக் கிறது, விகர்மம் செய்ய வைக்கிறது. அதனால்
கச்சேரி (ஒருவருக்கொருவர் கருத்து பரிமாற்றம்) செய்யுங்கள்.
தாமே தனது கச்சேரியை நடத்துவது (சரியா, தவறா என்று வாதிப்பது)
நல்லது. உங்களுக்கு நீங்களே இராஜ திலகம் வைத்துக் கொள்கிறீர்கள்
என்றால் தன்னை சோதித்துப் பார்க்க வேண்டும். தமோபிரதானிலிருந்து
சதோபிரதான் ஆக வேண்டும். இப்படி-இப்படிச் செய்யுங் கள் தெய்வீக
குணங்களை தாரணை செய்யுங்கள் என்று பாபா ஸ்ரீமத் தருகிறார். யார்
செய்கிறார்களோ, அவர்கள் அடைவார்கள். உங்களுக்கோ குஷியில்
மெய்சிலிர்த்துப் போக வேண்டும். எல்லையற்ற தந்தை கிடைத்துள்ளார்.
அவருடைய சேவையில் உதவியாளர் ஆக வேண்டும். பார்வையற்றவர்களுக்கு
ஊன்றுகோல் ஆக வேண்டும். எந்த அளவுக்கு அதிகமாக (உதவியாளர்களாக)
ஆகிறார்களோ, அந்த அளவுக்குத் தனக்குத் தானே நன்மை செய்தவர்
ஆவார்கள். பாபாவையோ அடிக்கடி நினைவு செய்ய வேண்டும். நிஷ்டையில்
(தியானம்) ஓரிடத்தில் அமர்வதற்கான விசயம் கிடையாது. போகும்
போதும் சுற்றிவரும் போதும் நினைவு செய்ய வேண்டும். இரயிலிலும்
கூட நீங்கள் சேவை செய்ய முடியும். நீங்கள் யாருக்கு வேண்டு
மானாலும் புரிய வைக்க முடியும் - உயர்ந்தவரிலும் உயர்ந்தவர்
யார்? அவரை நினைவு செய்யுங்கள். ஆஸ்தி அவரிட மிருந்து தான்
கிடைக்கும். ஆத்மாவுக்கு பாபாவிடமிருந்து எல்லை யற்ற ஆஸ்தி
கிடைக்கின்றது. யாராவது தான-புண்ணியம் செய்வதால் இராஜாவிடம்
ஜென்மம் எடுக்கிறார்கள், அதுவும் அல்பகாலத்திற்கு. சதா
காலத்துக்கோ இராஜா ஆக முடியாது. ஆக, பாபா சொல்கிறார், இங்கோ 21
பிறவிகளுக்கான வாக்குறுதி உள்ளது. நாம் எல்லையற்ற தந்தை
யிடமிருந்து இந்த ஆஸ்தியைப் பெற்று வந்திருக்கிறோம் என்பது
அங்கே (சத்யுகத்தில்) தெரியாது. இந்த ஞானம் இச்சமயம்
உங்களுக்குக் கிடைக்கிறதென்றால் எவ்வளவு நன்றாகப் புருஷார்த்தம்
செய்ய வேண்டும்! புருஷார்த்தம் செய்யவில்லை என்றால் தனது
காலிலேயே கோடரியால் வெட்டிக் கொள்வதாக ஆகும். சார்ட் எழுதிக்
கொண்டே இருப்பீர்களானால் பயம் இருக்கும். ஒரு சிலர் எழுதவும்
செய்கின்றனர், பாபா பார்ப்பாரானால் என்ன சொல்வார்?
நடத்தை-நடவடிக்கை களில் மிகுந்த வேறுபாடு உள்ளது. ஆக, பாபா
சொல்கிறார், கவனக்குறைவை விட்டு விடுங்கள். இல்லையென்றால்
மிகவும் வருந்த நேரிடும். தனது புருஷார்த்தம் பற்றி கடைசியில்
சாட்சாத் காரம் கண்டிப்பாக ஆகும். பிறகு அதிகமாக அழ நேரிடும்.
கல்ப-கல்பமாக இதே ஆஸ்தி தான் கிடைக்குமா என்ன? போய் தாச-தாசி
ஆவார்கள். முன்போ தியானத்தில் போய் வந்து சொன்னார்கள் - இன்னார்
பணியாளர் ஆவார்கள், இப்படி ஆவார்கள் என்று. பிறகு பாபா அதை
நிறுத்தி விட்டார். கடைசியில் பிறகு குழந்தைகளாகிய உங்களுக்கு
சாட்சாத்காரம் ஆகும். சாட்சாத் காரம் இன்றி எப்படி தண்டனை
கிடைக்க முடியும்? அதற்குச் சட்டமே இல்லை.
குழந்தைகளுக்கு யுக்திகளும் கூட நிறைய சொல்லிப் புரிய வைக்கப்
படுகின்றது. நீங்கள் உங்கள் கணவருக்குச் சொல்லுங்கள் - பாபா
சொல்கிறார், காமம் மகா சத்ரு, இதன் மீது வெற்றி கொள்ளுங் கள்.
மாயாவை வென்று உலகை வென்றவராக ஆகுங்கள். இப்போது நான்
சொர்க்கத்தின் எஜமானராக ஆவதா, அல்லது உங்களால் அபவித்திரமாகி
நரகத்திற்குச் செல்வதா? மிகவும் அன்பாக, பணிவோடு சொல்லிப்
புரிய வையுங்கள். என்னை நரகத்தில் ஏன் தள்ளுகிறீர்கள்? இதுபோல்
அநேகப் பெண் குழந்தைகள் உள்ளனர் - புரிய வைத்துப் புரிய
வைத்துக் கடைசியில் கணவரை அழைத்து வந்து விடுகின்றனர். பிறகு
கணவர் சொல்கிறார் - இவர் (மனைவி) என்னுடைய குரு, இவர் எனக்கு
நல்ல வழியைச் சொன்னார். பாபாவுக்கு முன்னால் காலில் விழு
கின்றனர். இப்போது சில நேரம் வெற்றி, சில நேரம் தோல்வி
ஏற்படுகின்றது. ஆக, குழந்தைகள் மிக-மிக இனிமையானவர் களாக ஆக
வேண்டும். யார் சேவை செய்கிறார்களோ, அவர்கள் தான் அன்பான வராக
இருப்பார்கள். பகவான் தந்தை குழந்தைகளிடம் வந்துள்ளார். அவர்கள்
ஸ்ரீமத் படி நடக்க வேண்டும். ஸ்ரீமத் படி நடக்கவில்லை என்றால்
புயல் வரும்போது கீழே விழுந்து விடுவார்கள். இப்படியும்
இருக்கிறார்கள், அவர்கள் என்ன வேலைக்கு ஆவார்கள்? இந்தப்
படிப்பு ஒன்றும் சாதாரணமானதல்ல. மற்ற அனைத்து சத்சங்கங்கள்
முதலியவற்றில் உள்ளது - காதுக்கு இனிமை, அதன் மூலம் அல்பகால
சுகம் கிடைக்கிறது. இந்தத் தந்தை மூலமாகவோ 21 பிறவிகளுக்கான
சுகம் கிடைக்கிறது. பாபா சுகம்-சாந்தியின் கடலாக இருப்பவர்.
நமக்கும் கூட பாபாவிடமிருந்து ஆஸ்தி கிடைக்க வேண்டும். சேவை
செய்வோமானால் அப்போது கிடைக்கும். அதனால் பேட்ஜ் சதா
அணிந்திருக்க வேண்டும். நாம் இதுபோல் சர்வகுண சம்பன்னம் ஆக
வேண்டும். நாம் யாருக்கும் துக்கம் கொடுக்காமல் இருக்கிறோமா
என்று சோதித்துப் பார்க்க வேண்டும். அசுர நடத்தையோ இல்லாமல்
இருக்கிறதா? மாயா அப்படி காரியம் செய்ய வைத்து விடும், கேட்கவே
வேண்டாம். நல்ல-நல்ல வீட்டைச் சேர்ந்தவர்களும் கூட சொல்கின்றனர்,
மாயா இந்த விகர்மத்தைச் செய்ய வைத்து விட்டது. சிலர் உண்மை
சொல்கின்றனர், சிலர் உண்மையைச் சொல்லாமல் போவதால் நூறு மடங்கு
தண்டனை பெறுவார்கள். பிறகு இந்தப் பழக்கம் அதிகரித்துக் கொண்டே
போகும். பாபாவுக்குச் சொல்வீர்களானால் பாபா எச்சரிக்கை தருவார்.
பாபா சொல்கிறார், பாவம் செய்திருக்கிறீர்கள் என்றால்
ரிஜிஸ்டரில் எழுதி வையுங்கள். மற்றும் சொல்லி விட்டீர்களானால்
உங்கள் பாவத்தில் பாதி முடிந்து போகும். சொல்வதில்லை, மறைக்
கிறீர்கள் என்றால் பிறகு செய்து கொண்டே இருப்பீர்கள். பாபா
எவ்வளவு நல்ல அறிவுரை தருகிறார்! ஆனால் ஒரு சிலருக்குக் கொஞ்சம்
கூட அதன் பிரபாவம் (தாக்கம்) ஏற்படுவதில்லை. தனது அதிர்ஷ்டத்தை
எட்டி உதைத்துக் கொண்டே இருக்கின்றனர். மிக அதிகமான நஷ்டத்தை
ஏற்படுத்திக் கொள்கின்றனர். கடைசியில் அனைவருக்கும்
சாட்சாத்காரம் ஆகும். இப்படி-இப்படி ஆவோம், மேல் வகுப்பிற்கு
டிரான்ஸ்ஃபர் ஆகின்றனர் என்றால் மதிப்பெண்கள் வெளியாகும்
இல்லையா? வகுப்பு மாற்றத்துக்கு முன் முடிவு வெளியாகும்.
நீங்களும் கூட உங்கள் வகுப்புக்குச் செல்கிறீர்கள் என்றால்
மதிப்பெண்கள் தெரிய வரும். குறைவாக இருந்தால் பிறகு மிக
அதிகமாக அழுவீர்கள். பிறகு என்ன செய்ய முடியும்? முடிவோ
வெளியாகி விட்டதில்லையா? எது அதிர்ஷ்டத்தில் இருந்ததோ, அதைப்
பெற்றுக் கொண்டீர்கள். பாபா அனைத்துக் குழந்தைகளுக்கும்
கவனப்படுத்துகிறார். கர்மாதீத் அவஸ்தா இப்போது ஏற்பட முடியாது.
கர்மதீத் அவஸ்தா ஆகி விட்டால் பிறகு சரீரத்தை விட
வேண்டியதிருக்கும். இன்னும் ஒரு சில விகர்மங்கள் மிச்சம் உள்ளன.
கணக்கு-வழக்கு உள்ளது, அதனால் யோகம் முழுமையாக இல்லை. நான்
கர்மாதீத் அவஸ்தாவில் இருக்கிறேன் என்று இப்போது யாரும் சொல்ல
முடியாது. அருகில் செல்லும் போது அநேக அடையாளங்கள் காணப்படும்.
எல்லாமே உங்களுடைய அவஸ்தா மற்றும் விநாசத்தின் ஆதாரத்தில் தான்
உள்ளது. உங்களது படிப்பு முடிவடையுமானால் பிறகு யுத்தம் தலை
மீது உள்ளதென்பதைக் காண்பீர்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) மாயாவின் வசமாகி எந்த ஓர் அசுர நடத்தையும் நடந்துவிடக்
கூடாது. தனது நடத்தையின் ரிஜிஸ்டர் வைக்க வேண்டும். பின்னால்
வருத்தப் படுகிற மாதிரி எந்த ஒரு கர்மமும் செய்துவிடக் கூடாது.
2) மிக-மிக அன்போடும் பணிவோடும் சேவை செய்ய வேண்டும்.
இனிமையானவர் ஆக வேண்டும். வாயிலிருந்து அசுர வார்த்தை எதையும்
வெளிப்படுத்தக் கூடாது. சகவாசத்தில் (தொடர்பு வைப்பதில்) கவனம்
வேண்டும். ஸ்ரீமத் படி நடந்து கொண்டே இருக்க வேண்டும்.
வரதானம்:
குழு ரூபத்தில் ஏக்ரஸ் ஸ்திதிக்கான பயிற்சியின் மூலம்
வெற்றிக்கான முரசு கொட்டக் கூடிய எவரெடி ஆகுக.
உலகில் வெற்றி மூரசு கொட்டப்பட வேண்டுமென்றால் அனைவரின் அனைத்து
சங்கல்பங்களும் ஒரு சங்கல்பத்தில் கலந்து விட வேண்டும். குழு
ரூபத்தில் ஒரு விநாடியில் அனைவரும் ஏக்ரஸ் ஸ்திதியில் நிலைத்து
விடும் போது எவரெடி என்று கூற முடியும். ஒரு விநாடியில் ஒரே வழி,
ஏக்ரஸ் ஸ்திதில் மற்றும் ஒரே சங்கல்பத் தில் நிலைத்திருக்கும்
அடையாளமாகத் தான் விரல் காண்பிக்கப்பட்டுள்ளது. இந்த விரல்
மூலம் க-யுகம் என்ற மலை நீங்கி விடுகிறது. ஆகையால் குழு
ரூபத்தில் ஏக்ரஸ் ஸ்திதி உருவாக்கும் பயிற்சி செய்யுங்கள்.
அப்போது தான் உலகில் சக்தி சேனையின் பெயர் பிரபலமாகும்.
சுலோகன்:
சிரேஷ்ட முயற்சியில் களைப்பு ஏற்படுவது என்பது கூட
அலட்சியத்தின் அடையாளமாகும்.
அவ்யக்த சமிக்கை: தங்களுக்காகவும் மற்றும் அனைவருக்காகவும்
மனதின் மூலமாக யோகத்தின் சக்திகளை பயன்படுத்துங்கள்.
நீங்கள் தங்களது ஆன்மிக திருஷ்டியின் மூலம் தனது சங்கல்பங்களை
வெற்றியுடையதாக ஆக்க முடியும். அவர்களுடைய மாயாஜாலம் அல்ப
காலத்திற்கானது. ஆனால் நினைவு என்ற விதியின் மூலம் சங்கல்பம்
மற்றும் செய-ன் வெற்றி அழிவற்றதாகும். அவர்கள் மாயாஜாலம்
பயன்படுத்து கின்றனர். நீங்கள் நினைவு என்ற விதியின் மூலம்
சங்கல்பம் மற்றும் செய-ல் வெற்றி பிராப்தியாக அடையுங்கள்.