17.11.24    காலை முரளி            ஓம் சாந்தி  30.11.2002      பாப்தாதா,   மதுபன்


கைமாறு (Return) என்ற வார்த்தையின் நினைவின் மூலம் சமம் ஆகுங்கள் மற்றும் திரும்பும் பயணத்தின் (Return Jpurney) நினைவு சொரூபமாக ஆகுங்கள்.

இன்று பாப்தாதா தனது நாலாபுறங்களிலும் உள்ள இதய சிம்மாசனதாரி, பிருகுட்டி சிம்மாசன தாரி, உலக இராஜ்ய சிம்மாசனதாரி, சுய இராஜ்ய அதிகாரி குழந்தைகளைப் பார்த்து மகிழ்ச்சி யடைந்து கொண்டிருக்கிறார். பரமாத்மாவின் இதய சிம்மாசனம் முழு கல்பத்திலும் செல்லக் குழந்தைகளாகிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது பிராப்தியாக கிடைக்கிறது. பிருகுட்டி என்ற சிம்மாசனம் அனைத்து ஆத்மாக்களுக்கும் இருக்கிறது. ஆனால் பரமாத்மாவின் இதய சிம்மாசனம் பிராமண ஆத்மாக்களுக்குத் தவிர வேறு யாருக்கும் பிராப்தியாக கிடைக்காது. இந்த இதய சிம்மாசனம் தான் உலக சிம்மாசனம் கொடுக்கிறது. நிகழ்காலத்தில் சுய இராஜ்ய அதிகாரியாக இருக்கிறீர்கள். ஒவ்வொரு பிராமண ஆத்மாவின் சுய இராஜ்யம் கழுத்து மாலையாக இருக்கிறது. சுய இராஜ்யம் உங்களது பிறப் புரிமையாகும். இவ்வாறு தன்னை சுய இராஜ்ய அதிகாரி என்று அனுபவம் செய்கிறீர்களா? எனது இந்த பிறப்புரிமையை ஒருவராலும் அபகரிக்க முடியாது என்ற திட சங்கல்பம் இதயத்தில் இருக்கிறது. கூடவே நான் பரமாத்மாவின் இதய சிம்மாசனதாரி என்ற ஒரு ஆன்மிக போதையும் இருக்கிறது. மனித வாழ்க்கையில், உடலில் விசேஷமானது இதயம் என்று கூறப்பட்டிருக்கிறது. இதயம் இயங்குவது நின்று விட்டால் வாழ்க்கை முடிவடைந்து விடும். ஆக ஆன்மிக வாழ்க்கையிலும் கூட இதய சிம்மாசனத்திற்கு அதிக மகத்துவம் இருக்கிறது. யார் இதய சிம்மாசனதாரிகளாக இருக்கிறார்களோ அந்த ஆத்மாக்கள் தான் உலகில் விசேஷ ஆத்மாக்கள் என்று கூறப்படுகின்றனர். அந்த ஆத்மாக்கள் தான் பக்தர்களுக்கு மாலையின் மணி ரூபத்தில் நினைவு செய்யப்படுகின்றனர். அந்த ஆத்மாக்கள் தான் கோடி யில் சிலர், சிலரிலும் சிலர் என்று பாடப்படுகின்றனர். அவர்களெல்லாம் யார்? நீங்கள் தானே? பாண்டவர்களும் இருக்கிறீர்களா? தாய்மார்களும் இருக்கிறீர்களா? (கை அசைத்துக் கொண்டிருக் கிறீர்கள்). எனவே தந்தை கூறுகின்றார் - ஹே செல்லக் குழந்தைகளே! அவ்வப்போது இதய சிம்மாசனத்தை விட்டு விட்டு தேகம் என்ற மண் மீது இதயம் ஏன் செலுத்துகிறீர்கள்? தேகம் மண் அல்லவா! செல்லமான குழந்தைகள் ஒருபோதும் மண்ணில் கால் வைக்க மாட்டார்கள், சதா சிம்மாசனத்தில், மடியில் அல்லது அதீந்திரிய சுகம் என்ற ஊஞ்சலில் ஆடுவார்கள். உங்களுக்கு பாப்தாதா விதவிதமான ஊஞ்சல் கொடுத்திருக்கின்றார், சில நேரம் சுகம் என்ற ஊஞ்சலில் ஆடுங்கள், சில நேரம் குஷி என்ற ஊஞ்சலில் ஆடுங்கள், சில நேரம் ஆனந்தம் என்ற ஊஞ்சலில் ஆடுங்கள்.

ஆக இவ்வாறு போதை என்ற ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருக்கும் சிரேஷ்ட குழந்தைகளை பாப்தாதா இன்று பார்த்துக் கொண்டிருக்கின்றார். ஆடிக் கொண்டிருக்கிறீர்களா? ஆடுகிறீர்களா? மண்ணில் ஆடுவதில்லை தானே! மண்ணில் கால் வைக்க வேண்டுமென்று எப்பொழுதாவது இதயம் விரும்புகிறதா? ஏனெனில் 63 பிறவிகளாக மண்ணில் கால் வைத்திருந்தீர்கள், மண்ணில் விளையாடினீர்கள். எனவே இப்போது மண்ணில் விளையாடுவதில்லை தானே? அவ்வப்பொழுது மண்ணில் வைத்து விடுகிறீர்களா, இல்லையா? அவ்வப்பொழுது சென்று விடுகிறது. தேக உணர்வு என்ற மண்ணில் கால் வைத்து விடுகிறீர்கள். தேக அபிமானம் என்பது மிக ஆழமான மண்ணில் வைப்பதாகும். ஆனால் தேக உணர்வு என்றால் அதுவும் மண் ஆகும். சங்கமத்தின் நேரத்தில் எந்த அளவிற்கு அதிகமாக சிம்மாசனதாரியாக இருப்பீர் களோ, அந்த அளவிற்கு அரை கல்பம் சூரியவம்சி இராஜ்யத்தில் மற்றும் சந்திர வம்சத்திலும் இராஜ்ய வம்சத்தில் வருவீர்கள். ஒருவேளை இப்போது சங்கமயுகத்தில் அவ்வப் பொழுது சிம்மாசனதாரியாக இருந்தீர்கள் எனில் சூரியவம்ச ராயல் குடும்பத்திலும் அவ்வளவு காலம் தான் இருப்பீர்கள். வரிசைப்படியாக சிம்மாசனதாரியாக வந்தாலும் ராயல் குடும்பத் தில், இராஜ்ய வம்ச ஆத்மாக்களின் சம்பந்தத்தில் சதா இருப்பீர்கள். எனவே சங்கமயுகத்தின் ஆரம்பத்திலிருந்து இன்று வரை 10 ஆண்டுகள் ஆகியிருந்தாலும், 50 ஆண்டுகள் ஆகியிருந் தாலும், 66 ஆண்டுகள் ஆகியிருந்தாலும், எப்போதிலிருந்து பிராமணன் ஆனீர்களோ அப்பொழு திலிருந்து இன்று வரை எவ்வளவு காலம் இதய சிம்மாசனதாரி, சுய இராஜ்ய சிம்மாசனத்தில் இருந்தேன்? என்று சோதியுங்கள். நீண்ட காலம் இருந்தீர்களா? நிரந்தரமாக இருந்தீர்களா? அல்லது அவ்வபோது இருந்தீர்களா? யார் பரமாத்ம சிம்மாசனதாரியாக இருப்பார்களோ, அவர்களது அடையாளம் - நடைமுறை நடத்தைகள் மற்றும் முகத்தின் மூலம் சதா கவலை யற்ற சக்கரவர்த்திகளாக இருப்பார்கள். தனது மனதில், ஸ்தூல சுமைகளானது தலை மீது இருக்கும், ஆனால் சூட்சும சுமைகள் மனதில் இருக்கும். எந்த சுமையும் மனதில் இருக்காது. சுமை தான் கவலை, டபுள் லைட் என்றால் கவலையற்ற நிலை. சேவை அல்லது சம்பந்தம்-தொடர்பு, ஸ்தூல சேவை, ஆன்மீக சேவையின் சுமையும் இருக்கக் கூடாது. என்ன ஆகும், எப்படி நடைபெறும் வெற்றி கிடைக்குமா? கிடைக்காதா? சிந்திப்பது, திட்டம் தீட்டுவது என்பது வேறு, சுமை என்பது வேறு. சுமை உள்ளவர்களின் அடையாளம் முகத்தில் சதா சிறிது அல்லது அதிக களைப்பின் அடையாளம் இருக்கும். களைப்படைவது என்பது வேறு, களைப் பின் அடையாளம் இருப்பதும் சுமையின் அடையாளமாகும். கவலையற்ற சக்கரவர்த்தி யாக இருப்பது என்றால் சோம்பலுடன் இருக்க வேண்டும் என்பது பொருள் அல்ல. இருப்பது சோம்பலுடன், ஆனால் நான் கவலையற்று இருக்கிறேன் என்று கூறுவர். சோம்பல் மிகவும் ஏமாற்றக் கூடியது. தீவிர முயற்சி செய்பவர்களுக்கும் அதே வார்த்தை தான் மற்றும் சோம்ப லுடன் இருப்பவர்களுக்கும் அதே வார்த்தை தான். தீவிர முயற்சியாளர்கள் சதா திடமான நிச்சயத்தின் காரணத்தினால் ஒவ்வொரு காரியத்திலும் தைரியம் மற்றும் தந்தையின் உதவியினால் வெற்றி கிடைத்தே விட்டது என்று நினைப்பர். சோம்பலுடன் இருப்பவர்களும் ஆகிவிடும், நடந்து விடும், நடந்தே விட்டது. ஏதாவது காரியம் பாக்கி இருக்கிறதா என்ன? நடந்து விடும் என்ற அதே வார்த்தை கூறுவர். ஆக வார்த்தை ஒன்று தான். ஆனால் ரூபம் தனித்தனியானது.

நிகழ்காலத்தில் மாயை விசேஷமாக இரண்டு ரூபத்தில் குழந்தைகளிடம் சோதனை செய்கிறது. ஒன்று வீண் எண்ணங்கள், விகார எண்ணங்கள் அல்ல, வீண் எண்ணங்கள். இரண்டாவது நான் தான் சரியானவன். என்ன செய்தேன், என்ன கூறினேன், என்ன நினைக் கிறேன் நான் குறைந்தவன் அல்ல, சரியானவன். நேரத்தின் அநுசாரமாக பாப்தாதா இப்போது இதையே விரும்புகின்றார் - தந்தையிடமிருந்து அடைந்த அனைத்து பிராப்திகள், அன்பு, உதவிக்கு கைமாறு (ரிடர்ன்) செய்ய வேண்டும் என்ற ஒரு வார்த்தை மட்டும் சதா நினைவில் வையுங்கள். கைமாறு செய்வது என்றால் சமம் ஆவதாகும். இரண்டாவது இப்பொழுது திரும்பிச் செல்லும் பயணத்தில் (ரிடர்ன் ஜேர்னி) இருக்கிறோம். ஒரே ஒரு வார்த்தை ரிடர்ன் என்பதை சதா நினைவில் கொள்ளுங்கள். இதற்கு எளிய சாதனம் - ஒவ்வொரு சங்கல்பம், வார்த்தை மற்றும் செயலை பிரம்மா பாபாவிற்கு சமன் செய்யுங்கள். தந்தையின் சங்கல்பம் என்ன? தந்தையின் வார்த்தைகள் என்ன? தந்தையின் செயல்கள் என்ன? இதைத் தான் தந்தையை பின்பற்றுதல் என்று கூறப்படுகிறது. பின்பற்றுவது எளிதாக இருக்கும் அல்லவா! புதிதாக சிந்திப்பது, புதிதாக செய்வது அவசியமே இல்லை. தந்தை என்ன செய்தாரோ அதை பின்பற்றுங்கள். எளிது தானே!

ஆசிரியர்கள் கை உயர்த்துங்கள். பின்பற்றுவது எளிதா? அல்லது கடினமா? எளிது தானே! தந்தையை பின்பற்றினால் போதும். முதலில் சோதனை செய்யுங்கள், முதலில் சிந்தியுங்கள் பிறகு செய்யுங்கள் என்று கூறப்படுகிறது அல்லவா! அதே போன்று முதலில் சோதனை செய்யுங்கள், பிறகு பேசுங்கள். எனவே அனைத்து ஆசிரியர்களும் இந்த ஆண்டின் கடைசி மாதம், பழையது சென்று விடும், புதியது வந்து விடும். புதியது வருவதற்கு முன் என்ன செய்ய வேண்டும், அதற்கான ஏற்பாடு செய்யுங்கள். தந்தையின் அடியைத் தவிர வேறு யாருடைய அடி மீதும் அடி வைக்கமாட்டேன் என்ற சங்கல்பம் செய்யுங்கள். அடி மீது அடி வைத்தால் போதும். அடி மீது அடி வைப்பது எளிது தானே! ஆக புது ஆண்டிற்காக இப்பொழுதிலிருந்தே திட்டம் உருவாக்குங்கள், பிரம்மா பாபா சதா நிமித்தமாக மற்றும் பணிவாக இருந்தது போன்று நிமித்த உணர்வு மற்றும் பணிவுடன் இருக்க வேண்டும். வெறும் நிமித்த உணர்வு மட்டுமல்ல, நிமித்த உணர்வின் கூடவே பணிவு உணர்வு இரண்டும் அவசியமாகும். ஏனெனில் ஆசிரியர் கள் தான் நிமித்தமாக இருக்கின்றீர்கள் அல்லவா! எனவே சங்கல்பத்திலும், வார்த்தைகளிலும் மற்றும் சம்பந்தம், தொடர்புகளிலும், செயல்களிலும், ஒவ்வொரு வார்த்தையிலும் பணிவு. யார் பணிவாக இருக்கிறார்களோ அவர்களே நிமித்த உணர்வுடன் இருக்கிறார்கள். யார் பணிவாக இல்லையோ அவர்களிடம் மிக சூட்சுமத்தில், மகான் ரூபத்தில் அபிமானம் இல்லாவிட்டாலும் அதன் தாக்கம் இருக்கும். தாக்கம் என்பதும் அபிமானத்தின் அம்சமாகும். மேலும் வார்த்தை களில் சதா நிர்மலமான வார்த்தை, இனிய வார்த்தை வேண்டும். சம்பந்தம்-தொடர்பில் ஆத்ம ரூபத்தின் நினைவு இருக்கிறது எனில் சதா நிராகாரி மற்றும் அகங்காரமற்ற வர்களாக இருக்கிறீர்கள். பிரம்மா பாபாவின் கடைசி நாளின் வார்த்தை நினைவில் இருக்கிறதா? நிராகாரி, நிர்அகங்காரி அவர்களே நிர்விகாரி. நல்லது. தந்தையை பின்பற்றுங்கள். உறுதியாக இருக்கிறீர்கள் தானே!

அடுத்த ஆண்டின் முக்கிய இலட்சியத்தியத்தின் நினைவு - மூன்று வார்த்தைகள், நிராகாரி, நிர் அகங்காரி, நிர்விகாரி. அம்சமும் கூடாது. மேலோட்டமான ரூபங்கள் சரியாகி விட்டது. ஆனால் அம்சமும் இருக்கக் கூடாது. ஏனெனில் அம்சமும் ஏமாற்றி விடுகிறது. தந்தையை பின்பற்றுவது என்றால் இந்த மூன்று வார்த்தைகளை சதா நினைவில் வைத்துக் கொள்வ தாகும். நல்லது.

இரட்டை அயல்நாட்டினர் எழுந்து கொள்ளுங்கள்: நல்ல குழு வந்திருக்கிறீர்கள். இரட்டை அயல்நாட்டினரின் ஒரு விசயத்தைப் பார்க்கும் போது பாப்தாதாவிற்கு குஷி ஏற்படுகிறது. அது என்ன என்பதை அறிவீர்களா? தூர தேசத்திலிருந்து வருகிறீர்கள். இந்த மாதம் செல்ல வேண்டும் என்று கட்டளை கிடைத்ததும் வந்து சேர்ந்து விட்டீர்கள். எப்படியாவது முயற்சி செய்து மிகப் பெரிய குழு வந்து சேர்ந்து விட்டீர்கள். தாதியின் கட்டளையை சரியாக ஏற்றுக் கொண்டீர்கள் அல்லவா! அதற்கு வாழ்த்துக்கள். பாப்தாதா ஒவ்வொருவரையும் பார்த்துக் கொண்டிருக்கின்றார், திருஷ்டி கொடுத்துக் கொண்டிருக்கின்றார். மேடைக்குச் சென்றால் தான் திருஷ்டி கிடைக்கும் என்பது கிடையாது. தொலைவில் இருந்தாலும் மிக நன்றாக தென்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இரட்டை அயல்நாட்டினர் சரி பாபா என்ற பாடத்தை நன்றாக படித்திருக் கின்றனர். பாப்தாதாவிற்கு இரட்டை அயல்நாட்டினர்கள் மீது அன்பு இருக்கவே செய்கிறது. ஆனால் பெருமையும் இருக்கிறது. ஏனெனில் உலகின் மூலை முடுக்குகளில் செய்தி கொண்டு செல்வதற்கு இரட்டை அயல்நாட்டினர் நிமித்தமாக இருக்கிறார்கள். அயல்நாட்டில் இப்பொழுது வேறு ஏதாவது இடம் அல்லது ஊர் பாக்கி இருக்கிறதா? ஊர், மூலை முடுக்கு ஏதாவது பாக்கி இருக்கிறதா? விசேஷ இடம் பாக்கி இருக்கிறதா? எந்த இடம் பாக்கி இருக்கிறது? (மத்திய கிழக்கு பாக்கி இருக்கிறது). இருப்பினும் வந்திருக்கும் குழு எத்தனை தேசத்திலிருந்து வந்திருக்கிறீர்கள்? உலகில் விதவிதமான அநேக தேசங்களுக்கு ஆத்மாக் களாகிய நீங்கள் நிமித்தமாக இருக்கிறீர்கள் என்பதை பாப்தாதா அறிவார். தந்தையின் விஷ்வ கல்யாணகாரி என்ற பட்டம் இரட்டை அயல்நாட்டினர்கள் தான் பிரத்யட்சம் செய்திருக் கிறீர்கள் என்று பாப்தாதா அடிக்கடி கூறவே செய்கின்றார். நன்றாக இருக்கிறது. ஒவ்வொரு வரும் அவரவர்களது இடத்தில் தனது முயற்சியில் மற்றும் சேவையில் முன்னேறிக் கொண்டிருக்கிறீர்கள். மேலும் சதா முன்னேறிக் கொண்டே இருப்பீர்கள். வெற்றியின் நட்சத்திரமாகவே இருக்கிறீர்கள். மிக்க நன்று.

குமாரர்களிடம்: மதுவனத்தின் குமாரர்களும் இருக்கின்றனர். குமாரர்களின் எண்ணிக்கை பாருங்கள் எவ்வளவு இருக்கிறது? பாதி வகுப்பு குமாரர்கள் நிறைந்திருக்கின்றனர். குமாரர்கள் இப்பொழுது சாதாரண குமாரர்கள் அல்ல. எப்படிப்பட்ட குமாரர்கள்? பிரம்மா குமாரர்களாக இருக்கவே செய்கிறீர்கள். ஆனால் பிரம்மா குமாரர்களின் விசேஷதா என்ன? எங்கெல்லாம் அசாந்தி ஏற்படுகிறதோ அங்கு அமைதி பரப்பக் கூடிய அமைதித் தூதுவர்கள் - இது தான் குமாரர்களின் விசேஷதா ஆகும். மன அசாந்தி கிடையாது, வெளியிலும் அசாந்தி கிடையாது. குமாரர்களின் விசேஷதாவே கடினமாக காரியம் செய்வதாகும். கடின வேலையாட்கள் இருக்கின்றனர் அல்லவா! இன்றைய நாட்களில் மிகவும் கடின வேலை - அசாந்தியை அழித்து அமைதி தூதுவர் ஆகி அமைதி பரப்புவதாகும். இப்படிப்பட்ட குமாரர்களாக இருக்கிறீர்களா? அசாந்தியின் பெயர், அடையாளம் இருக்கக் கூடாது - உலகிலும் சரி, தனது சம்பந்தம்-தொடர்பிலும் சரி. இப்படிப்பட்ட அமைதி தூதுவர்களாக இருக்கிறீர்களா? தீயணைப்புப் படை யினர் எங்கிருந்தாலும் தீயை அணைப்பார்கள் அல்லவா! அதே போன்று அமைதி தூதுவர் களின் காரியமே அசாந்தியாக இருப்பவர்களை அமைதிப்படுத்துவதாகும். அமைதி தூதுவர்கள் அல்லவா! பக்காவா? பக்காவா? பக்காவா? மிக நன்றாக இருக்கிறது. பாப்தாதா இவ்வளவு குமாரர்களைப் பார்த்து குஷியடைகின்றார். முன்பே பாப்தாதா திட்டம் கூறியிருக்கின்றார் - டெல்லியில் குமாரர்கள் அதிகபட்சம் சேர வேண்டும், குமாரர்கள் என்றால் சண்டையிடு பவர்கள் என்று அரசாங்கம் நினைக்கிறது. அதனால் குமாரர்களைப் பார்த்து பயப்படுகிறது. இவ்வாறு பயப்படக் கூடிய அரசாங்கம் ஒவ்வொரு பிரம்மா குமாரரையும் அமைதி தூதுவர் என்ற பட்டத்துடன் வரவேற்பு கொடுக்க வேண்டும். அது தான் குமாரர்களின் அதிசயமாகும். பிரம்மா குமாரர்கள் அமைதி தூதுவர்கள் என்பது முழு உலகிற்கும் முத்திரை பதித்திட வேண்டும். முடியும் தானே? டெல்லியில் செய்ய வேண்டும். செய்ய வேண்டும் தானே? அல்லது தாதிகள் செய்வார்களா? ஒரு குழுவில் இவ்வளவு குமாரர்கள் இருக்கின்றனர் எனில் அனைத்து குழுவிலும் எத்தனை குமாரர்கள் இருப்பர்? (ஏறத்தாழ 1 இலட்சம்). ஆக குமாரர்கள் அதிசயம் செய்யுங்கள். அரசாங்கம் குமாரர்களைப் பற்றி தலைகீழாக நினைப்பதை மாற்றி காட்டுங்கள். ஆனால் மனதிலும் அசாந்தி கூடாது, கூட இருப்பவர்களிடத்திலும் அசாந்தி கூடாது மற்றும் தான் இருக்கும் இடத்திலும் அசாந்தி கூடாது. தனது ஊரிலும் அசாந்தி கூடாது. குமாரர்களின் முகத்தில் பலகை வைக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் நெற்றியில் தானாகவே இவர்கள் அமைதி தூதுவர்கள் என்ற அனுபவம் ஏற்பட வேண்டும். சரி தானே!

குமாரிகளிடம்: குமாரிகளும் அதிகம் இருக்கின்றனர். அனைத்து குமாரிகளின் இலட்சியம் என்ன? வேலை செய்ய வேண்டுமா அல்லது உலக சேவை செய்ய வேண்டுமா? தலையில் கிரீடம் அணிந்து கொள்ள வேண்டுமா? அல்லது கூடை வைத்துக் கொள்ள வேண்டுமா? என்ன வைத்துக் கொள்ள வேண்டும்? அனைத்து குமாரிகளும் கருணை உள்ளம் உடையவர்களாக ஆக வேண்டும். உலக ஆத்மாக்களுக்கு நன்மை ஏற்பட வேண்டும். 21 குலத்தை முன்னேற்றக் கூடியவர் என்று குமாரிகளுக்கு மகிமை பாடப்பட்டிருக்கிறது. ஆக அரை கல்பம் 21 குலம் ஆகிவிடும். அப்படிப்பட்ட குமாரிகளாக இருக்கிறீர்களா? 21 குலத்திற்கு நன்மை செய்பவர்கள் கைகளை உயர்த்துங்கள். ஒரு குடும்பத்தினருக்கு அல்ல, 21 குடும்பங்களுக்கு. செய்வீர்களா? உங்களது பெயர்கள் குறிக்கப்படும், பிறகு நீங்கள் கருணையுள்ளத்துடன் இருக்கிறீர்களா? அல்லது ஏதாவது கணக்கு-வழக்குடன் இருக்கிறீர்களா? என்று பார்க்கப்படும். இப்பொழுது நேரத்திற்கு முன்பாகவே தயாராகி விடுங்கள் என்று நேரம் எச்சிரித்துக் கொண்டிருக்கிறது. நேரத்தை பார்த்துக் கொண்டே இருந்தீர்கள் எனில் நேரம் கடந்துவிடும். ஆகையால் நாம் அனைவரும் விஷ்வ கல்யாணி, கருணையுள்ளம் உடைய தந்தையின் குழந்தைகள் கருணை யுள்ளம் உடையவர்கள் என்ற இலட்சியம் வையுங்கள். சரிதானே? கருணையுள்ளம் உடையவர் கள் தானே! இன்னும் கருணையுள்ளம் உடையவர்களாக ஆகுங்கள். இன்னும் தீவிர வேக முடையவர்களாக ஆகுங்கள். குமாரிகளுக்கு எளிதாகவே தந்தையின் சிம்மாசனம் கிடைக்கிறது. புது ஆண்டில் என்ன அதிசயம் செய்து காட்டுவீர்கள் என்பதை பார்க்கலாம். நல்லது.

ஊடகத்தினர் 108 இரத்தினங்கள் வந்திருக்கின்றனர்: நன்றாக இருக்கிறது. ஊடகத்தினர் அதிசயம் செய்து காட்ட வேண்டும். தந்தையிடமிருந்து ஆஸ்தி அடைந்தே ஆக வேண்டும் என்று அனைவரின் புத்தியிலும் வர வேண்டும். யாரும் வஞ்சிக்கப்பட்டு விடக் கூடாது. ஊடகத்தின் வேலையே ஓசை பரப்புவதாகும். எனவே தந்தையிடமிருந்து ஆஸ்தி அடையுங் கள் என்ற ஓசையை பரப்புங்கள். யாரும் வஞ்சிக்கப்பட்டு விடக் கூடாது. இப்பொழுது அயல்நாடுகளிலும் ஊடகத்தின் நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அல்லவா! நன்றாக இருக்கிறது. விதவிதமான முறையில் என்ன நிகழ்ச்சி ஏற்பாடு செய்கிறீர்களோ அதில் நன்றாக ஆர்வம் இருக்கிறது. நன்றாக செய்து கொண்டிருக்கிறீர்கள், செய்து கொண்டிருப்பீர்கள் மற்றும் வெற்றி கிடைத்தே விட்டது. அனைத்து வர்க்கத்தினரும் என்ன சேவை செய்கிறீர்களோ அந்த செய்தி பாப்தாதாவிடம் வந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு வர்க்கமும் அவரவர்களுக்கான சேவைக்கான சாதனம் மற்றும் சேவைக்கான விதங்கள் இருக்கின்றன. ஆனால் தனித்தனியாக வர்க்கம் இருப்பதால் ஒவ்வொரு வர்க்கமும் ஒன்றுக் கொன்று போட்டி போடுகின்றனர், நன்றாக இருக்கிறது. பொறாமை கிடையாது, போட்டி நன்றாக செய்யுங்கள். ஒவ்வொரு வர்க்கத்தின் பலன், வர்க்க சேவைக்குப் பிறகு வந்த ஐ.பி மற்றும் வி.ஐ.பி க்கள் அதிகம் தொடர்பில் வந்திருக்கின்றனர். இப்பொழுது மைக் அழைத்து வரவில்லை. ஆனால் சம்பந்தம்-தொடர்பில் வந்திருக்கின்றனர். நல்லது.

பாப்தாதாவின் பயிற்சி நினைவில் இருக்கிறதா? சில நேரம் நிராகாரி, சில நேரம் பரிஸ்தா நடந்தாலும், சுற்றினாலும் இது தான் தந்தை மற்றும் தாதாவின் அன்பிற்கு செய்யும் கைமாறாகும். இப்பொழுது இந்த ஆன்மீக பயிற்சி செய்யுங்கள். விநாடியில் நிராகாரி, விநாடியில் பரிஸ்தா. (பாப்தாதா டிரில் செய்வித்தார்). நல்லது. முழு நாளும் நடந்தாலும், சுற்றினாலும் தந்தையின் இந்த பயிற்சி எளிதாக நினைவு ஏற்படுத்தும்.

நாலாபுறங்களிலும் உள்ள குழந்தைகளின் நினைவு பாப்தாதாவிடம் வந்து சேருகிறது. என்னுடைய நினைவு கொடுங்கள், என்னுடைய நினைவு கொடுங்கள் என்று ஒவ்வொரு குழந்தையும் நினைக்கின்றனர். சிலர் கடிதம் மூலம் அனுப்புகின்றனர், சிலர் அட்டை (கார்ட்) மூலம், சிலர் வாயின் மூலம். ஆனால் பாப்தாதா நாலாபுறங்களிலும் உள்ள குழந்தைகளின், ஒவ்வொருவரையும் கண்களில் வைத்துக் கொண்டு நினைவிற்கான பதில் பலமடங்கு அன்பு நினைவுகள் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். இப்பொழுது நேரம் எவ்வளவு ஆகியிருந்தாலும் அனைவரின் மனதிலும் மதுவனம் மற்றும் மதுவனத்தின் பாப்தாதா தான் இருக்கின்றார்.

நாலாபுறங்களிலும் உள்ள மூன்று சிம்மாசனதாரிகள், சுய இராஜ்ய அதிகாரி குழந்தைகள், சதா பாப்தாதாவிற்கு கைமாறு தந்தைக்கு சமம் ஆகக் கூடிய குழந்தைகளுக்கு, சதா திரும்பும் பயணத்தின் நினைவு சொரூபமான குழந்தைகளுக்கு, சதா சங்கல்பம், வார்த்தை மற்றும் செயலில் தந்தையை பின்பற்றக் கூடிய ஒவ்வொரு குழந்தைக்கும் பாப்தாதாவின் மிக மிக அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

வரதானம்:
அனைத்து ஆத்மாக்களிடத்திலும் தனது சுப பாவனை என்ற விதையை தெளிக்கக் கூடிய மாஸ்டர் வள்ளல் ஆகுக.

பலனை எதிர்பார்க்காமல் நீங்கள் தனது சுபபாவனை என்ற விதையை ஒவ்வொரு ஆத்மாவின் மீதும் தெளித்துக் கொண்டே செல்லுங்கள். சரியான நேரத்தில் அனைத்து ஆத்மாக்களும் விழிப்படைந்தே ஆக வேண்டும். ஒருவர் எதிர்ப்பு செய்தாலும் கூட நீங்கள் கருணை உணர்வை விட்டு விடக் கூடாது. இந்த எதிர்ப்பு, அவமதிப்பு உரம் போன்று வேலை செய்யும், நல்ல பலனை உருவாக்கும். எவ்வளவு அவமதிப்பார்களோ அந்த அளவிற்கு மகிமை பாடுவார்கள். ஆகையால் ஒவ்வொரு ஆத்மாவிற்கும் தனது விருத்தி மூலம், அதிர்வலைகள் மூலம், வார்த்தைகளின் மூலம் மாஸ்டர் வள்ளலாகி கொடுத்துக் கொண்டே செல்லுங்கள்.

சுலோகன்:
சதா அன்பு, சுகம், அமைதி மற்றும் ஆனந்தத்தின் கடலில் மூழ்கியிருக்கும் குழந்தைகள் தான் உண்மையான தபஸ்விகள்.

குறிப்பு: இன்று மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை, அகில உலக யோகா தினமாகும். அனைத்து பிராமணர்களும் குழுவாக சேர்ந்து மாலை 6.30 மணியிலிருந்து 7.30 மணி வரை விசேஷமாக வரதாதா, பாக்கிய விதாதா பாப்தாதாவுடன் இணைந்த சொரூபத்தில் நிலைத் திருந்து, அவ்யக்த வதனத்திலிருந்து அனைத்து ஆத்மாக்களுக்கும் சுகம், சாந்திக்கான வரதானம் கொடுக்கும் சேவை செய்யுங்கள்.