17-12-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! நீங்கள் மனம், சொல்,
செயலில் மிக மிக குஷியாக இருக்க வேண்டும். அனைவரையும்
குஷிப்படுத்த வேண்டும். யாருக்குமே துக்கம் கொடுக்கக் கூடாது.
கேள்வி:
டபுள் அஹிம்சகராக ஆகக் கூடிய
குழந்தைகள் எந்த ஒரு கவனம் வைக்க வேண்டும்?
பதில்:
(1) யாருக்குமே துக்கம் ஏற்படும்
வகையில் அப்பேர்ப்பட்ட எந்த ஒரு வார்த்தையும் வாயிலிருந்து
வெளிப்படக் கூடாது என்று கவனம் வைக்க வேண்டும். ஏனெனில்,
வார்த்தை களினால் துக்கம் கொடுப்பது கூட இம்சை ஆகும். (2) நாம்
தேவதை ஆகப் போகிறவர்கள்! எனவே நடத்தை மிகவும் ராயலாக இருக்க
வேண்டும். உணவு பழக்கங்கள் மிகவும் உயர்ந்ததாகவும் இருக்கக்
கூடாது. மிகவும் தாழ்ந்ததாகவும் இருக்கக் கூடாது.
பாடல்:
பலவீனமானவருடன் பலசாலியின் சண்டை
.. .. .. ..
ஓம் சாந்தி.
தன்னை ஆத்மா என்று உணர்ந்து அமருங்கள். மேலும் தந்தையை நினைவு
செய்யுங்கள் என்று இனிமையிலும் இனிமையான அருமையான
குழந்தைகளுக்கு, தந்தை ஒவ்வொரு நாளும் முதலில் புரிய வைக்கிறார்.
அட்டென்ஷன் ப்ளீஸ் என்று கூறுகிறார்கள் அல்லவா? எனவே ஒன்று
தந்தையின் பக்கம் கவனம் கொடுங்கள் என்று தந்தை கூறுகிறார்.
தந்தை எவ்வளவு இனிமையானவர்! அவருக்கு அன்பின் கடல், ஞானக்கடல்
என்று கூறப்படுகிறது. எனவே நீங்கள் கூட அன்பானவர் ஆக வேண்டும்.
மனம், சொல், செயலில் ஒவ்வொரு விஷயத் திலும் நீங்கள்
மகிழச்சியாக இருக்க வேண்டும். யாருக்குமே துக்கம் கொடுக்கக்
கூடாது. தந்தை கூட யாரையுமே துக்கப்படுத்துவது இல்லை. தந்தை
வந்திருப்பதே சுகம் நிறைந்தவர்களாக ஆக்குவதற்கு. நீங்கள் கூட
யாருக்குமே எந்த விதத்திலும் துக்கம் கொடுக்கக் கூடாது.
அப்பேர்ப்பட்ட எந்த ஒரு செயலும் செய்யக் கூடாது. மனதின் அளவில்
கூட வரக்கூடாது. ஆனால் அந்த நிலை கடைசியில் இருக்கும். கொஞ்ச
நஞ்சம் கர்ம இந்திரியங்கள் மூலம் ஏதாவது தவறு ஏற்படுகிறது.
தன்னை ஆத்மா என்று உணர்ந்து இருந்தீர்கள் மற்றவர்களையும் சகோதர
ஆத்மா என்று பார்த்தீர்கள் என்றால் பின் யாருக்குமே துக்கம்
கொடுக்க மாட்டீர்கள். சரீரத்தையே பார்க்கவில்லை என்றால் எப்படி
துக்கம் கொடுப்பீர்கள். இதில் மறைமுகமான உழைப்பு உள்ளது. இது
முழுவதுமே புத்தியின் வேலை ஆகும். இப்பொழுது நீங்கள் தங்கம்
போன்ற புத்தி உடையவராக ஆகிக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் தங்க
புத்தியுடனிருக்கும் பொழுது நீங்கள் நிறைய சுகத்தைப்
பார்த்தீர்கள். நீங்கள் தான் சுகதாமத்திற்கு அதிபதியாக
இருந்தீர்கள் அல்லவா? இது துக்கதாமம் ஆகும். இதுவோ மிகவும்
எளிதானது. அந்த சாந்திதாமம் நமது இனிமையான இல்லம் ஆகும். பிறகு
அங்கிருந்து பாகம் ஏற்று நடிக்க வந்துள்ளோம். துக்கத்தினுடைய
பாகம் வெகுகாலமாக நடித்தீர்கள். இப்பொழுது சுக தாமத்திற்குச்
செல்ல வேண்டும். எனவே ஒருவரை யொருவர் சகோதர சகோதரர் என்று உணர
வேண்டும். ஆத்மா ஆத்மாவிற்கு துக்கம் கொடுக்க முடியாது. தன்னை
ஆத்மா என்று உணர்ந்து ஆத்மாவிடம் உரையாடிக் கொண்டிருக்கிறோம்.
ஆத்மா தான் பீடத்தில் வீற்றிருக்கிறது. இது கூட சிவபாபாவின்
ரதம் ஆகும் அல்லவா? பெண் குழந்தைகள் கூறுகிறார்கள் - நாங்கள்
சிவபாபாவின் ரதத்தை அலங்கரிக்கிறோம். சிவபாபாவின் ரதத்திற்கு
உணவூட்டு கிறோம். எனவே சிவபாபா தான் நினைவிலிருப்பார். அவர்
இருப்பதே கல்யாணகாரி தந்தையாக! கூறுகிறார், நான் 5
தத்துவங்களுக்கும் நன்மை செய்கிறேன். அங்கு எந்த ஒரு பொருளும்
கஷ்டம் கொடுப்ப தில்லை. இங்கோ சில சமயம் புயல், சில சமயம்
குளிர், சில சமயம் ஏதாவது ஆகிக் கொண்டே இருக்கிறது. அங்கோ
எப்பொழுதுமே வசந்த காலமாக இருக்கும். துக்கத்தின் பெயரே
இருக்காது. அது இருப்பதே சொர்க்கமாக. தந்தை உங்களை
சொர்க்கத்திற்கு அதிபதியாக ஆக்க வந்துள்ளார். உயர்ந்ததிலும்
உயர்ந்த பகவான் அவரே! உயர்ந்த திலும் உயர்ந்த தந்தை,
உயர்ந்ததிலும் உயர்ந்த சுப்ரீம் ஆசிரியர் கூட ஆவார். எனவே
அவசியம் உயர்ந்ததிலும் உயர்ந்தவராகத் தான் ஆக்குவார் அல்லவா?
நீங்கள் இந்த இலட்சுமி நாராயணராக இருந்தீர்கள் அல்லவா? இந்த
எல்லா விஷயங் களையும் மறந்து விட்டுள்ளீர்கள். இந்த தந்தை தான்
வந்து புரிய வைக்கிறார். ரிஷி முனிவர்கள் ஆகியோரிடம் நீங்கள்
படைப்பு கர்த்தா மற்றும் படைப்பை பற்றி அறிந்துள்ளீர் களா என்று
கேட்கும் பொழுது, தெரியாது, தெரியாது என்று கூறிக்
கொண்டிருந்தார்கள். அவர்களிடமே ஞானம் இல்லாமலிருக்கும் பொழுது
பின் பரம்பரையாக எப்படி நடக்க முடியும். இந்த ஞானத்தை நான்
இப்பொழுது தான் கொடுக்கிறேன் என்று தந்தை கூறுகிறார்.
உங்களுக்கு சத்கதி ஆகி விட்டது என்றால், பின் ஞானத்தின் அவசியம்
இருக்காது. துர்க்கதி ஆவதே இல்லை. சத்யுகத்திற்கு சத்கதி என்று
கூறப்படுகிறது. இங்கு இருப்பது துர்க்கதி. ஆனால் நாம்
துர்க்கதியில் இருக்கிறோம் என்பது கூட யாருக்குமே தெரியாது.
தந்தைக்கு லிபரேட்டர், கைடு, படகோட்டி என்று பாடப்படுகிறது.
விகாரக் கடலிலிருந்து எல்லோருடைய படகையும் கரையேற்றுகிறார்.
அதற்கு பாற்கடல் என்று கூறுகிறார்கள். விஷ்ணுவை பாற்கடலில்
காண்பிக்கிறார்கள். இவை எல்லாமே பக்தி மார்க்கத்தின் பாடலாகும்.
பெரிய பெரிய குளங்கள் உள்ளன. அதில் விஷ்ணுவின் பெரிய சிலைகளைக்
காண்பிக்கிறார்கள். நீங்கள் தான் முழு உலகத்தின் மீது ஆட்சி
புரிந்துள்ளீர்கள் என்று தந்தை புரிய வைக்கிறார். அநேக முறை
தோல்வி அடைந்துள்ளீர்கள் மற்றும் வெற்றி அடைந்துள்ளீர்கள்.
காமம் மகா எதிரி ஆகும். அதன் மீது வெற்றி அடைவதால் நீங்கள்
உலகத்தை வென்றவர் ஆகிறீர்கள் என்று தந்தை கூறுகிறார். எனவே குஷி
நிறைந்தோர் ஆக வேண்டும் அல்லவா? குடும்ப காரியங்களில் இல்லற
மார்க்கத்தில் தாராளமாக இருங்கள். ஆனால் தாமரை மலரைப் போல
தூய்மையாக இருங்கள். இப்பொழுது நீங்கள் முட்களிலிருந்து மலராக
ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். இது ஃபாரஸ்ட் ஆஃப் தார்ன்ஸ் (முட்களின்
காடு) என்று தெரிய வருகிறது. ஒருவருக்கொருவர் எவ்வளவு துன்பம்
கொடுக் கிறார்கள், கொன்று கூட விடுகிறார்கள். எனவே உங்கள்
அனைவருக்கும் இப்பொழுது வானப் பிரஸ்த நிலை ஆகும் என்று தந்தை
இனிமையிலும் இனிமையான குழந்தைகளுக்குக் கூறுகிறார். சிறியவர்கள்,
பெரியவர்கள் அனைவருக்கும் வானப்பிரஸ்த நிலை ஆகும். நீங்கள்
சப்தத்திற்கு அப்பாற்பட்டு செல்வதற்காக படிக்கிறீர்கள் அல்லவா?
உங்களுக்கு இப்பொழுது சத்குரு கிடைத்துள்ளார். அவரோ உங்களை
வானப்பிரஸ்தத்தில் அழைத்தே செல்வார். இது யுனிவர்சிட்டி ஆகும்.
பகவான் கூறுகிறார் (பகவானுவாக்கு) அல்லவா? நான் உங்களுக்கு
இராஜயோகத்தைக் கற்பித்து ராஜாக்களுக்கெல்லாம் ராஜாவாக
ஆக்குகிறேன். யார் பூஜைக்குரிய ராஜாக்காளாக இருந்தார்களோ
அவர்களே பிறகு பூசாரி ராஜாக்களாக ஆகிறார்கள். எனவே குழந்தைகளே
நல்ல முறையில் முயற்சி செய்யுங்கள் என்று தந்தை கூறுகிறார்.
தெய்வீக குணங்களை தாரணை செய்யுங்கள். தாராளமாக உண்ணுங்கள்,
அருந்துங்கள். ஸ்ரீநாத் துவாரகைக்குச் செல்லுங்கள். அங்கு
நெய்யால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் ஏராளமாக கிடைக்கின்றன.
நெய்க்கிணறுகளே அமைக்கப் பட்டுள்ளன. சாப்பிடுவது பின்பு யார்?
பூசாரி! ஸ்ரீநாத் மற்றும் ஜகந்நாத் - இருவரையுமே கருப்பாக ஆக்கி
விட்டுள்ளார்கள். ஜகந்நாதரின் கோவிலில் தேவதைகளின் ஆபாசமான
சிலைகளை சித்தரித்துள்ளனர். .அங்கு சாதத்தினை அண்டாங்களில்
சமைக்கிறார்கள். அது வெந்து விடும் பொழுது 4 பாகங்களாக ஆகி
விடுகின்றது. சாதத்தை மட்டுமே படைக்கிறார்கள். ஏனெனில்
இப்பொழுது சாதாரணமாக இருக்கிறார் அல்லவா? இந்த பக்கம் ஏழைகள்.
மேலும் அந்த பக்கம் செல்வந்தர்கள். இப்பொழுது பாருங்கள் எவ்வளவு
ஏழையாக உள்ளார் கள்? சாப்பிடுவதற்கும் குடிப்பதற்கும் எதுவுமே
கிடைப்பதில்லை. சத்யுகத்திலோ எல்லாமே இருக்கும். எனவே தந்தை
ஆத்மாக்களுக்காக வந்து புரிய வைக்கிறார். சிவபாபா மிகவும்
இனிமையானவர்! அவரோ நிராகார மானவர். ஆத்மாவைத் தான் அன்பு
செய்யப்படுகிறது அல்லவா? ஆத்மா தான் அழைக்கப்படுகிறது. உடலோ
எரிந்து விட்டது. அவரது ஆத்மாவை அழைக்கிறார்கள். ஜோதியை
ஏற்றுகிறார்கள். இதிலிருந்து ஆத்மாவிற்கு இருள் ஏற்படுகிறது
என்று நிரூபணமாகிறது. ஆத்மா இருப்பதே சரீரம் இல்லாமல். பின்
இருள் ஆகியவற்றின் விஷயம் எப்படி இருக்க முடியும்? அங்கு இந்த
விஷயங் கள் இருப்பதில்லை. இவை எல்லாமே பக்தி மார்க்கம் ஆகும்.
தந்தை எவ்வளவு நல்ல முறையில் புரிய வைக்கிறார். ஞானம் மிகவும்
இனிமையாக உள்ளது. இதில் கண்களைத் திறந்து கேட்க வேண்டி உள்ளது.
தந்தையை பார்ப்பீர்கள் அல்லவா? முன்பெல்லாம் பெண் குழந்தைகள்
பாபாவைப் பார்த்த உடனேயே தியானத்தில் சென்று விடுவார்கள்.
தங்களும் குழுவாக அமர்ந்திருக் கும் போது கூட தியானத்தில்
சென்று விடுவார்கள். கண்கள் மூடி இருக்க ஓடிக் கொண்டே
இருப்பார்கள். அதிசயமாகவோ இருந்தது அல்லவா? தந்தை புரிய வைத்து
கொண்டே இருக்கிறார். ஒருவரையொருவர் பார்க்கும் பொழுது நான்
சகோதர ஆத்மாவிடம் பேசுகிறேன், சகோதரனுக்குப் புரிய வைக்கிறேன்
என்று உணர்ந்திருங்கள். நீங்கள் எல்லையில்லாத தந்தையின்
ஆலோசனையை ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா? நீங்கள் இந்த கடைசி
பிறவியில் தூய்மையாக ஆனீர்கள் என்றால் தூய்மையான உலகிற்கு
அதிபதி ஆகிடுவீர்கள். பாபா நிறைய பேருக்கு புரிய வைக்கிறார்.
ஒரு சிலரோ நாங்கள் அவசியம் தூய்மையாக ஆகி விடுவோம் என்று
சட்டென்று கூறி விடுகிறார்கள். தூய்மையாக இருப்பது நல்லது தான்.
குமாரி தூய்மையாக இருக்கும் பொழுது எல்லோரும் அவருக்கு தலை
வணங்குகிறார்கள். திருமணம் செய்து கொண்டார் என்றால் பூசாரி ஆகி
விடுகிறார். எல்லோருக்கும் தலை வணங்க வேண்டி வருகிறது. எனவே
தூய்மை நல்லது தானே! தூய்மை இருக்கிறது என்றால் சுகம் சாந்தி
இருக்கிறது. எல்லாமே தூய்மையைப் பொருத் தாகும். ஹே பதீத பாவனரே!
வாருங்கள் என்று அழைக்கவும் செய்கிறார்கள். பாவன உலகத்தில்
இராவணன் இருப்பதே இல்லை. அது இருப்பதே இராம இராஜ்யமாக!
எல்லோரும் பால் பாயாசம் போல இனிமையாக இருப்பார்கள்.
தர்மத்தினுடைய இராஜ்யம் இருக்கும். பிறகு இராவணன் எங்கிருந்து
வந்தான். இராமாயணம் ஆகியவற்றை எவ்வளவு அன்புடம் அமர்ந்து
கூறுகிறார்கள். இவை எல்லாமே பக்தி ஆகும். எனவே பெண் குழந்தைகள்
சாட்சாத்காரத் தில் (காட்சி தெரிதல்) நடனமாட முற்படுகிறார்கள்.
உண்மை என்ற படகிற்கோ பாடல் உள்ளது - ஆடும் அசையும் ஆனால்
மூழ்கிப் போகாது. வேறு எந்த சத்சங்கத்திற்குச் செல்வதற்கும் தடை
விதிப்பதில்லை. இங்கு எவ்வளவு தடுக்கிறார்கள். தந்தை உங்களுக்கு
ஞானம் அளிக்கிறார். நீங்கள் பி.கே. ஆகிறீர்கள். பிராமணர்களாக
அவசியம் ஆக வேண்டும். தந்தை இருப்பதே சொர்க்கத்தின் ஸ்தாபனை
செய்பவராக. எனவே அவசியம் நாம் கூட சொர்க்கத்தின் அதிபதியாக ஆக
வேண்டும். நாம் இங்கு நரகத்தில் ஏன் விழுந்திருக்கிறோம். இதற்கு
முன்பு நாமும் பூசாரியாக இருந்தோம் என்பது இப்பொழுது புரிய
வருகிறது. இப்பொழுது மீண்டும் 21 பிறவிகளுக்கு பூஜைக்குரியவர்
களாக ஆகிறோம்.63 பிறவிகள் பூசாரியாக ஆனோம். இப்பொழுது மீண்டும்
நாம் பூஜைக்குரியவர் களாக சொர்க்கத்தின் அதிபதியாக ஆவோம். இது
நரனிலிருந்து நாராயணராக ஆவதற்கான ஞானம் ஆகும். நான் உங்களை
ராஜாக் களுக்கெல்லாம் ராஜாவாக ஆக்குகிறேன் என்று பகவான்
கூறுகிறார். பதீதமான ராஜாக்கள் பாவன ராஜாக்களை வணங்குகிறார்கள்.
ஒவ்வொரு மகாராஜாவின் அரண்மனைகளிலும் அவசியம் கோவில் இருக்கும்.
அது கூட இராதை கிருஷ்ணர் அல்லது லட்சுமி நாராயணர் அல்லது இராமர்
சீதையினுடையதாகத் தான் இருக்கும். தற்சமயத் திலோ கணேசர்,
ஹனுமார் ஆகியோருக்கும் கூட கோவில் கட்டிக் கொண்டே
இருக்கிறார்கள். பக்தி மார்க்கத்தில் எவ்வளவு குருட்டு
நம்பிக்கை உள்ளது. உண்மையில் நாம் ஆட்சி புரிந்தோம். பிறகு வாம
மார்க்கத்தில் விழுகிறோம் என்பதை இப்பொழுது நீங்கள்
அறிந்துள்ளீர்கள். இது உங்களுடைய கடைசி பிறவி என்பதை தந்தை
புரிய வைக்கிறார். இனிமையிலும் இனிமையான குழந்தைகளே! முதலில்
நீங்கள் சொர்க்கத்தில் இருந்தீர்கள். பிறகு இறங்கி இறங்கி தரை
மட்டத்தில் வந்து விழுந்துள்ளீர்கள். நாம் மிகவும் உயர்ந்தவர்
களாக இருந்தோம். மீண்டும் தந்தை நம்மை உயர ஏற்றுகிறார் என்று
நீங்கள் கூறுவீர்கள். நாம் ஒவ்வொரு 5 ஆயிரம் வருடங்களுக்குப்
பிறகும் படித்துக் கொண்டே வருகிறோம். இதற்கு உலக சரித்திரம்
பூகோளம் திரும்ப நடை பெறுகிறது என்று கூறப்படுகிறது. நான்
குழந்தைகளாகிய உங்களை உலகிற்கு அதிபதி ஆக்குகிறேன் என்று பாபா
கூறுகிறார். முழு உலகத்தில் உங்கள் ராஜ்யம் இருக்கும். பாபா
நீங்கள் எப்பேர்ப்பட்ட ராஜ்யத்தை அளிக்கிறீர்கள் என்றால், அதை
யாருமே பறிக்க முடியாது என்று பாடலில் கூட உள்ளது அல்லவா?
இப்பொழுதோ எவ்வளவு பிரிவுகள் உள்ளன. தண்ணீருக்காக, பூமிக்காக
சண்டை நடந்து கொண்டே இருக்கிறது. அவரவர் களுடைய மாநிலங்களை
பராமரித்து கொண்டே இருக்கிறார்கள். செய்யவில்லை என்றால்
சிறுவர்கள் கல்லால் அடிக்க ஆரம்பித்து விடுவார்கள். இந்த நவயுக
இளைஞர்கள் பயில்வான்களாகி பாரதத்தைக் காப்பார்கள் என்று அவர்கள்
நினைக்கிறார்கள். ஆக அந்த பயில்வான் தன்மையை இப்பொழுது
காண்பித்துக் கொண்டே இருக் கிறார்கள். உலகத்தின் நிலைமையைப்
பாருங்கள் எப்படி இருக்கிறது. இராவண இராஜ்யம் ஆகும் அல்லவா?
இது இருப்பதே அசுர சம்பிரதாயமாக என்று தந்தை கூறுகிறார்.
நீங்கள் இப்பொழுது தெய்வீக சம்பிரதாயத்தினராக ஆகிக்
கொண்டிருக்கிறீர்கள். தேவதைகள் மற்றும் அசுரர் களுக்கிடையே
பிறகு யுத்தம் எப்படி நடக்கும். நீங்களோ டபுள் அஹிம்சகர்
ஆகிறீர்கள். அவர்கள் டபுள் அஹிம்சகர் ஆவார்கள். தேவி
தேவதைகளுக்கு டபுள் அஹிம்சகர் என்று கூறப்படுகிறது. ஒருவருக்கு
வார்த்தைகள் மூலமாக துக்கம் கொடுப்பது கூட இம்சை ஆகும் என்று
பாபா புரிய வைத்தார். நீங்கள் தேவதை ஆகிறீர்கள். எனவே ஒவ்வொரு
விஷயத்திலும் (ராயல்டி) கம்பீரத் தன்மை இருக்க வேண்டும். உணவு
பழக்கம் மிகவும் உயர்ந்ததாகவும் இருக்கக் கூடாது. மிகவும்
தாழ்ந்ததாகவும் இருக்கக் கூடாது. ஒரே சீரானதாக இருக்க வேண்டும்.
ராஜாக்கள் ஆகியோர் பேசுவது மிகவும் குறைவாக இருக்கும்.
பிரஜைகளுக்குக் கூட ராஜாவிடம் மிகவும் அன்பு இருக்கும். இங்கோ
பாருங்கள் என்ன ஆகி விட்டுள்ளது. எவ்வளவு புரட்சிகள் உள்ளன.
இப்பேர்ப் பட்ட நிலைமை ஆகி விடும் பொழுது நான் வந்து உலகத்தை
அமைதிப்படுத்துகிறேன் என்று தந்தை கூறுகிறார். எல்லோரும்
ஒற்றுமையாக ஆகி ஒன்றாகி விட வேண்டும் என்று அரசாங்கம்
விரும்புகிறது. எல்லோரும் சகோதரர்களாகவோ இருக்கிறார்கள். ஆனால்
இதுவோ விளையாட்டு ஆகும் அல்லவா? நீங்கள் எந்த ஒரு கவலையும்
படாதீர்கள் என்று குழந்தை களுக்கு தந்தை கூறுகிறார். தானியங்கள்
கிடைப்பதில் இப்பொழுது கஷ்டம் உள்ளது. அங்கோ எவ்வளவு தானியங்கள்
ஆகி விடும் என்றால் பைசா கொடுக்காமலேயே எவ்வளவு வேண்டுமோ
அவ்வளவு கிடைத்துக் கொண்டே இருக்கும். இப்பொழுது அந்த தெய்வீக
ராஜதானியை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறார். நான்
எப்பேர்ப்பட்ட ஆரோக்கியத்தை அமைத்துக் கொடுக்கிறேன் என்றால்
அங்கு ஒரு பொழுதும் நோய் ஏற்படவே ஏற்படாது. உத்தரவாதம் உள்ளது.
நடத்தையைக் கூட நாம் இந்த தேவதைகளைப் போல ஆக்குகிறோம். எப்படி
எப்படி மந்திரி இருப்பாரோ அவ்வாறு அவருக்கு புரிய வைக்கலாம்.
யுக்தியுடன் புரிய வைக்க வேண்டும். கருத்துக்கள் எழுதும் பொழுது
மிகவும் நன்றாக எழுதுகிறார்கள். ஆனால் அட! நீங்களும் தான்
புரிந்து கொள்ளுங்களேன். பின்பு கூறுவார்கள், நேரமில்லை என்று
நீங்கள் பெரியவர்கள் கொஞ்சம் சப்தம் போட்டீர்கள் என்றால்,
ஏழைகளுக்குக் கூட நன்மை ஆகும்.
இப்பொழுது எல்லோருடைய தலை மீதும் காலன் நின்றுள்ளான் என்று
தந்தை புரிய வைக்கிறார். இன்றைக்கு நாளைக்கு என்று செய்து
செய்து காலன் சாப்பிட்டு விடுவான். நீங்கள் கும்ப கரணனைப் போல
ஆகி உள்ளீர்கள். குழந்தைகளுக்கு புரிய வைப்பத்தில் மிகவும்
ஆனந்தம் கூட ஏற்படுகிறது. பாபா தான் இந்த படங்கள் ஆகியவற்றைத்
தயாரித்துள்ளார். தாதாவிற்கு இந்த ஞானம் இருந்ததா என்ன?
உங்களுக்கு ஆஸ்தி லௌகீக தந்தை மற்றும் பரலௌகீக தந்தையிடமிருந்து
கிடைக்கிறது. அலௌகீக தந்தையிடமிருந்து ஆஸ்தி கிடைப்பதில்லை.
இவரோ தரகர் ஆவார். இவருடைய ஆஸ்தி கிடையாது. பிரஜாபிதா பிரம்மாவை
நினைவு செய்ய வேண்டியதில்லை. என்னிடமிருந்து உங்களுக்கு எதுவும்
கிடைக்காது. நான் கூட படிக்கிறேன். ஆஸ்தி இருப்பதே ஒன்று
எல்லைக்குட்பட்டது. மற்றொன்று எல்லையில்லாத தந்தை யினுடையது.
பிரஜாபிதா பிரம்மா என்ன ஆஸ்தி அளிப்பார்? என் ஒருவனை நினைவு
செய்யுங்கள் என்று தந்தை கூறுகிறார். இவரோ ரதம் ஆவார் அல்லவா?
ரதத்தை ஒன்றும் நினைவு செய்ய வேண்டியதில்லை அல்லவா?
உயர்ந்ததிலும் உயர்ந்த பகவான் என்று கூறப்படுகிறது. தந்தை
ஆத்மாக்களுக்கு வந்து புரிய வைக்கிறார். ஆத்மா தான் எல்லாமே
செய்கிறது இல்லையா? ஒரு சட்டையை விட்டு மற்றொன்றை எடுக்கிறது.
எப்படி பாம்பினுடைய உதாரணம் உள்ளது. வண்டுகள் கூட நீங்கள் தான்
ஆவீர்கள். ஞானத்தை பூம் பூம் என்று ஊதுங்கள். ஞானத்தைக் கூறிக்
கூறி நீங்கள் எவரொருவரையும் உலகத்திற்கு அதிபதியாக ஆக்க
முடியும். உங்களை உலகிற்கு அதிபதியாக ஆக்கக் கூடிய
அப்பேர்ப்பட்ட தந்தையை ஏன் நினைவு செய்ய மாட்டீர்கள்? இப்பொழுது
தந்தை வந்து விட்டுள்ளார். பின் ஆஸ்தி ஏன் எடுக்கக் கூடாது.
நேரம் கிடைப்ப தில்லை என்று இது போல ஏன் கூறுகிறீர்கள்? நல்ல
நல்ல குழந்தைகளோ ஒரு நொடியில் புரிந்து கொண்டு விடுகிறார்கள்.
பாபா புரிய வைத்துள்ளார் - மனிதர்கள் லட்சுமியை பூஜை
செய்கிறார்கள். இப்பொழுது லட்சுமியிடமிருந்து என்ன கிடைக்கிறது.
மேலும் அம்பாவிடமிருந்து என்ன கிடைக்கிறது? லட்சுமியோ
சொர்க்கத்தின் தேவி ஆவார். அவரிடமிருந்து பணப் பிச்சை
கேட்கிறார்கள். அம்பாவோ உலகிற்கு அதிபதியாக ஆக்குகிறார். எல்லா
விருப்பங்களையும் பூர்த்தி செய்து வருகிறார். ஸ்ரீமத் மூலமாக
எல்லா விருப்பங்களும் பூர்த்தி ஆகி விடுகிறது. நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து
கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, தாய் தந்தை பாப்தாதாவின்
அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. இந்த கர்ம இந்திரியங்கள் மூலமாக எந்த ஒரு தவறு கூட ஏற்படக்
கூடாது என்பதற்காக நான் ஆத்மா! என்ற நினைவை உறுதிப்படுத்த
வேண்டும். சரீரத்தைப் பார்க்கக் கூடாது. ஒரு தந்தையின் பக்கம்
கவனம் செலுத்த வேண்டும்.
2. இப்பொழுது வானப்பிரஸ்த நிலை ஆகும். எனவே சப்தத்திற்கு
அப்பாற்பட்டு செல்வதற்கான முயற்சி செய்ய வேண்டும். அவசியம்
தூய்மை ஆக வேண்டும். உண்மை என்ற படகு ஆடும் அசையும் ஆனால்
மூழ்கி விடாது என்பது புத்தியில் இருக்க வேண்டும். எனவே
தடைகளைக் கண்டு பயப்படக் கூடாது.
வரதானம்:
டிராமாவின் ஞானத்தின் மூலம் அசையாத ஸ்திதியை அமைத்துக்
கொள்ளக்கூடிய, இயற்கையை வென்ற, மாயாவை வென்றவர் ஆகுக.
இயற்கை அல்லது மாயாவின் மூலம் எத்தகைய சோதனைத்தாள் வந்தாலும்
சிறிதும் குழம்பக் கூடாது. இது என்ன, இது ஏன் - இந்தக்
கேள்வியும் எழுந்தது, சிறிதாவது எந்த ஒரு பிரச்சினையும் போராடக்
கூடியதாக ஆகி விட்டது என்றால் ஃபெயிலாகி விடுவீர்கள். எனவே எது
நடந்தாலும், உள்ளிருந்து இந்த சப்தம் வெளிப்பட வேண்டும் - ஆஹா!
இனிமையான டிராமா ஆஹா! அப்படி இல்லாமல் ஐயோ, என்ன வாயிற்று? -
இந்த சங்கல்பம் கூட வரக்கூடாது. அந்த மாதிரி ஸ்திதி இருக்க
வேண்டும் - எந்த ஒரு சங்கல்பத்திலும் குழப்பம் இருக்கக் கூடாது.
சதா ஆடாத, அசையாத ஸ்திதி இருக்க வேண்டும். அப்போது தான்
இயற்கையை வென்றவர், மாயாவை வென்றவர் என்ற வரதானம் கிடைக்கும்.
சுலோகன்:
மகிழ்ச்சி தரும் செய்தியைச் சொல்லி மகிழ்ச்சியுறச் செய்வது தான்
உயர்ந்த காரியமாகும்.
அவ்யக்த சமிக்ஞை: இப்பொழுது சம்பன்னம் மற்றும் கர்மாதீத்
ஆவதற்காக தீவிர ஆர்வத்துடன் செயல்படுங்கள்.
மகாரதிகளின் புருஷார்த்தம் இப்போது விசேஷமாக இந்த
அப்பியாசத்தினுடையது தான். அவ்வப்போது கர்மாதீத் ஸ்டேஜ், பழைய
உலகில் பழைய கடைசி சரீரத்தில் எந்த விதமான நோயும் தனது சிரேஷ்ட
ஸ்திதியைக் குழப்பத்தில் கொண்டுவரக் கூடாது. சுய சிந்தனை, ஞான
சிந்தனை, சுப சிந்தனையாளர் ஆவதற்கான சிந்தனை மட்டுமே நடைபெற
வேண்டும். அப்போது தான் கர்மாதீத் ஸ்திதி எனச் சொல்வார்கள்.