18.01.25 காலை முரளி
ஓம் சாந்தி பாப்தாதா,
மதுபன்
பிதாஸ்ரீ அவர்களுடைய புண்ணிய நினைவு தினத்தில் காலை வகுப்பில்
கூறுவதற்கான பாப்தாதாவினுடைய இனிமையான விலைமதிப்பற்ற
மகாவாக்கியம்
ஓம்சாந்தி. ஆன்மிக தந்தை இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுடன்
உரையாடல் செய்து கொண்டிருக்கின்றார், படிப்பினை கொடுத்துக்
கொண்டிருக்கின்றார். படிப்பினை கொடுப்பது ஆசிரியரின் வேலை
மற்றும் இலக்கைக் கூறுவது குருவின் வேலை. முக்தி ஜீவன் முக்தியே
இலக்கு ஆகும். முக்திக்காக நினைவு யாத்திரை மிகவும் அவசியமானது
மற்றும் ஜீவன் முக்திக் காக படைப்பின் ஆதி, மத்திமம்,
அந்திமத்தை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இப்பொழுது 84
பிறவிகளின் சக்கரம் நிறைவுற்றது, இப்பொழுது வீட்டிற்கு
திரும்பிச் செல்ல வேண்டும். தன்னுடன் இப்படியெல்லாம்
உரையாடுவதன் மூலம் மிகுந்த மகிழ்ச்சி ஏற்படும் மற்றும் பிறகு,
பிறருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவீர்கள். வழியைச்
சொல்வதற்கான, தமோபிரதானத்தில் இருந்து சதோபிரதானம்
ஆக்குவதற்கான கருணையை பிறர் மீதும் காட்ட வேண்டும்.
குழந்தைகளாகிய உங்களுக்கு புண்ணியம் மற்றும் பாவத்தின் ஆழ்ந்த
நிலையைப் பற்றி பாபா புரியவைத்திருக்கின்றார். புண்ணியம் எது
மற்றும் பாவம் எது! தந்தையை நினைவு செய்வது மற்றும் பிறருக்கும்
நினைவை ஏற்படுத்துவது - இதுவே அனைத்தையும் விட பெரிய புண்ணியம்
ஆகும். சென்டர் திறப்பது, உடல், மனம், பணத்தை பிறருடைய சேவையில்
ஈடுபடுத்துவது, இது புண்ணியம் ஆகும். தீயசகவாசத்தில் வந்து
வீணான சிந்தனை, பரசிந்தனையில் தன்னுடைய நேரத்தை வீணாக்குவது,
இது பாவம் ஆகும். ஒருவேளை, யாராவது புண்ணியம் செய்து
கொண்டிருக்கும்போதே பாவம் செய்துவிடுகின்றார்கள் என்றால் செய்த
வருமானம் முழுவதும் அழிந்துவிடுகிறது. என்னவெல்லாம் புண்ணியம்
செய்திருக்கின்றார்களோ, அது அனைத்தும் அழிந்துவிடுகிறது, பிறகு,
சேமிப்பிற்கு பதிலாக ஒன்றுமில்லாமல் போய்விடு கிறது. ஞான சொரூப
ஆத்ம குழந்தைகளுக்காக பாவ கர்மத்திற்கான தண்டனை கூட 100 மடங்கு
ஆகும். ஏனெனில், சத்குருவிற்கு நிந்தனை செய்பவர்கள்
ஆகிவிடுகிறார்கள். ஆகையினால், இனிமையான குழந்தை களே,
ஒருபொழுதும் பாவ கர்மம் செய்ய வேண்டாம், விகாரங்களிடம்
அடிவாங்குவதில் இருந்து தப்பித்து இருக்க வேண்டும் என்று தந்தை
படிப்பினை கொடுக்கின்றார்.
தந்தைக்கு குழந்தைகள் மீது அன்பு உள்ளதால் கருணையும்
ஏற்படுகிறது. தந்தை அனுபவத்தை சொல்கின்றார் - எப்பொழுது
ஏகாந்தத்தில் அமர்கின்றோமோ, அப்பொழுது முதலில் ஒப்பற்ற
குழந்தைகளுடைய நினைவு வருகின்றது, அவர்கள் வெளிநாட்டில்
இருக்கின்றார்களோ அல்லது எங்கிருக்கின்றார்களோ. சில நல்ல
சேவாதாரி குழந்தைகள் சரீரத்தை விட்டுவிடுகின்றார்கள் என்றால்
அவர்களுடைய ஆத்மாவையும் நினைவு செய்து சர்ச் லைட்
கொடுக்கின்றோம். இங்கே இரண்டு ஒளிகள் இருக்கின்றனர், இரண்டு
ஒளிகளும் இணைந்து இருக்கின்றனர் என்பதை குழந்தைகளாகிய நீங்கள்
அறிந்துள்ளீர்கள். இவர்கள் இருவரும் சக்திவாய்ந்த ஒளிகள்
ஆவார்கள். அதிகாலை நேரம் நன்றாக உள்ளது, ஸ்நானம் செய்துவிட்டு
ஏகாந்தத்தில் சென்று விடவேண்டும். உள்ளத்தில் மகிழ்ச்சியும்
மிகுதியாக இருக்க வேண்டும்.
எல்லையற்ற தந்தை அமர்ந்து குழந்தைகளுக்குப் புரியவைக்கின்றார்
- இனிமையான குழந்தை களே, தன்னை ஆத்மா என புரிந்துகொண்டு
தந்தையாகிய என்னை மற்றும் தன்னுடைய வீட்டை நினைவு செய்யுங்கள்.
குழந்தை களே, இந்த நினைவினுடைய யாத்திரையை ஒருபொழுதும் மறக்க
வேண்டாம். நினைவின் மூலமாகத் தான் நீங்கள் பாவனம் ஆகுவீர்கள்.
பாவனம் ஆகாமல் நீங்கள் வீட்டிற்கு திரும்பிச் செல்ல முடியாது.
ஞானம் மற்றும் யோகமே முக்கியமானது ஆகும். தந்தையிடம் இந்த மிகப்
பெரிய பொக்கிஷங்கள் உள்ளன, அவற்றை குழந்தை களுக்குக்
கொடுக்கின்றார், இதில் யோகா என்ற மிகப் பெரிய பாடம் உள்ளது.
குழந்தைகள் நல்ல முறையில் நினைவு செய்கின்றீர்கள் என்றால்,
அந்த நினைவின் மூலம் தந்தையின் நினைவு கிடைக்கின்றது. நினைவின்
மூலம் குழந்தைகள் தந்தையை கவர்ந்து ஈர்க்கின்றார்கள்.
பின்னாளில் வரக்கூடிய வர்கள் யார் உயர்ந்த பதவி அடைவார்களோ,
அதற்கான ஆதாரம் கூட நினைவு ஆகும். அவர்கள் ஈர்க்கின்றார்கள்.
பாபா இரக்கம் காட்டுங்கள், கிருபை காட்டுங்கள் என்று
கூறுகின்றார்கள் அல்லவா, இதில் கூட நினைவு முக்கியமாகத் தேவை.
நினைவின் மூலமாகத் தான் கரண்ட் கிடைத்துக் கொண்டேயிருக்கும்,
இதனால் ஆத்மா ஆரோக்கியமானதாக ஆகிவிடுகிறது, நிறைந்து விடுகிறது.
சில நேரம் தந்தை எந்த குழந்தைக்காவது கரண்ட் கொடுக்க வேண்டும்
என்றால் தூக்கமும் கூட கலைந்துவிடுகிறது. இன்னாருக்கு கரண்ட்
கொடுக்க வேண்டும் என்ற அக்கறை இருந்து கொண்டே இருக்கின்றது.
கரண்ட் கிடைப்பதனால் ஆயுள் அதிகரிக்கின்றது, சதா ஆரோக்கி
யமானவர் ஆகின்றோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். ஒரு
இடத்தில் அமர்ந்துகொண்டு நினைவு செய்ய வேண்டும் என்பதுவும்
கிடையாது. நடக்கும் பொழுதும், சுற்றித்திரியும் பொழுதும், உணவு
சாப்பிடும்பொழுதும், காரியம் செய்யும்பொழுதும் தந்தையை நினைவு
செய்யுங்கள் என்று தந்தை புரியவைக்கின்றார். பிறருக்கு கரண்ட்
கொடுக்க வேண்டும் என்றால் இரவு கூட கண் விழித்திடுங்கள்.
அதிகாலை எழுந்து எந்தளவு தந்தையை நினைவு செய்வீர்களோ, அந்தளவு
ஈர்ப்பு இருக்கும் என்பது குழந்தைகளுக்குப்
புரியவைக்கப்பட்டுள்ளது. தந்தையும் சர்ச் லைட் கொடுப்பார்.
ஆத்மாவை நினைவு செய்வது என்றால் சர்ச் லைட் கொடுப்பது, பிறகு
இதை கிருபை என்றும் சொல்லலாம், ஆசீர்வாதம் என்றும் சொல்லலாம்.
இது அனாதியான உருவான, உருவாக்கப்பட்ட நாடகம் ஆகும் என்பதை
குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். இது வெற்றி
தோல்விக்கான விளையாட்டு ஆகும். எது நடக்கிறதோ அது சரியானதே.
படைப்பாளருக்கு நாடகம் கண்டிப்பாக பிடித்திருக்கும் இல்லையா.
எனில், படைப் பாளரின் குழந்தைகளுக்கும் பிடித்திருக்கும். இந்த
நாடகத்தில் தந்தை ஒரே ஒரு முறை குழந்தை களுக்கு உள்ளப்பூர்வமாக
அன்போடு சேவை செய்வதற்கு வருகின்றார். தந்தைக்கோ அனைத்து
குழந்தைகளும் அன்பிற்குரியவர்கள் ஆவார்கள். சத்யுகத்தில் கூட
அனைவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த அன்பு செலுத்துவார்கள்,
விலங்குகளும் அன்பாக இருக்கின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள்.
அன்பில்லாமல் எந்த விலங்கும் இருக்காது. குழந்தைகளாகிய நீங்கள்
இங்கே மாஸ்டர் அன்புக்கடல் ஆகவேண்டும். இங்கே ஆனீர்கள் என்றால்
அந்த சமஸ்காரம் அழிவற்ற தாகிவிடும். கல்பத்திற்கு முன்பு போலவே,
அப்படியே, மீண்டும் அன்பானவர் ஆக்குவதற்காக வந்திருக்கின்றேன்
என்று தந்தை கூறுகின்றார். எப்பொழுதாவது யாராவதொரு குழந்தையின்
கோபமான சப்தத்தைக் கேட்டால், குழந்தாய் கோபப்படுவது சரியல்ல,
இதனால் நீங்களும் துக்க மடைவீர்கள், பிறரையும் கூட
துக்கப்படுத்துவீர்கள் என்று தந்தை படிப்பினை கொடுக்கின்றார்.
தந்தை சதா காலத்திற்கும் சுகத்தைக் கொடுக்கக்கூடியவர், எனவே,
குழந்தைகளும் கூட தந்தைக்கு சமமாக ஆக வேண்டும். ஒருவர்
மற்றவருக்கு ஒருபொழுதும் துக்கம் கொடுக்கக் கூடாது. மிக மிக
அன்பானவர் ஆகவேண்டும். அன்பான தந்தையை மிகவும் அன்போடு நினைவு
செய்தீர்கள் என்றால் தனக்கும் நன்மை, பிறருக்கும் கூட நன்மை
ஏற்படும்.
இப்பொழுது உலகத்தின் எஜமானர் உங்களிடம் விருந்தாளியாகி
வந்திருக்கின்றார். குழந்தை களாகிய உங்களுடைய சகயோகத்தினால்
தான் உலகத்திற்கு நன்மை ஏற்பட முடியும். எவ்வாறு ஆன்மிக
குழந்தைகளாகிய உங்களுக்கு தந்தை மிக அன்பானவராக இருக்கின்றாரோ,
அவ்வாறு தந்தைக்கும் கூட ஆன்மிக குழந்தைகளாகிய நீங்கள் மிகவும்
அன்பானவர்களாக இருக்கின்றீர்கள், ஏனெனில், நீங்கள் தான்
ஸ்ரீமத்படி முழு உலகத்திற்கும் நன்மை செய்யக் கூடியவர்கள்
ஆவீர்கள். இப்பொழுது நீங்கள் ஈஸ்வரிய பரிவாரத்தில்
அமர்ந்திருக்கின்றீர்கள். தந்தை எதிரில் இருக்கின்றார்.
உங்களுடனேயே சாப்பிடுவேன், உங்களுடனேயே அமர்வேன், . . . சிவபாபா
இவருக்குள் வந்து, இனிமையான குழந்தைகளே, தேக சகிதம் தேகத்தின்
அனைத்து சம்பந்தங்களையும் மறந்துவிட்டு என் ஒருவரை நினைவு
செய்யுங்கள் என்று கூறுகின்றார் என்பதை நீங்கள்
அறிந்துள்ளீர்கள். இது கடைசி பிறவி யாகும், இந்த பழைய உலகம்,
பழைய தேகம் அழியப் போகிறது. நீங்கள் இறந்துவிட்டால் உலகமும்
இறந்து விட்டதாகும் என்ற பழமொழியும் உள்ளது. முயற்சிக்காக
சங்கமயுக சமயம் குறைவாகவே உள்ளது. பாபா இந்த படிப்பு எதுவரை
நடக்கும் என்று குழந்தைகள் கேட்கின்றார்கள்? எதுவரை தெய்வீக
இராஜ்யம் ஸ்தாபனை ஆகுமோ, அதுவரை சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.
பிறகு, புது உலகத்திற்கு மாற்றல் ஆகிவிடுவீர்கள். பாபா எவ்வளவு
அகங்காரமற்று குழந்தைகளாகிய உங்களுடைய சேவை செய்கின்றார்.
குழந்தை களாகிய நீங்களும் கூட அந்தளவு சேவை செய்ய வேண்டும்.
ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். எங்கேயாவது தன் வழியைக்
காண்பித்தால் அதிர்ஷ்டம் துண்டித்துவிடும். பிராமணர்களாகிய
நீங்கள் ஈஸ்வரிய குழந்தைகள் ஆவீர்கள். பிரம்மாவின் குழந்தைகள்
சகோதரன், சகோதரி ஆவீர்கள், ஈஸ்வரனின் பேரன், பேத்திகள் ஆவீர்கள்,
அவரிடம் இருந்து ஆஸ்தியைப் பெற்றுக் கொண்டிருக்கின்றீர்கள்.
எந்தளவு முயற்சி செய்வீர்களோ, அந்தளவு பதவி அடைவீர்கள். இதில்
சாட்சியாக இருப்பதற்கான பயிற்சி அதிகமாகத் தேவை. தந்தையினுடைய
முதல் கட்டளையே - அசரீரி ஆகுக, ஆத்ம அபிமானி ஆகுக என்பதாகும்.
தன்னை ஆத்மா எனப் புரிந்துகொண்டு தந்தை யாகிய என்னை நினைவு
செய்யுங்கள், அப்பொழுதே என்ன அழுக்கு படிந்துள்ளதோ, அது
நீங்கிவிடும், உண்மையான தங்கம் ஆகிவிடுவீர்கள். பாபா, ஓ
இனிமையான பாபா, நீங்கள் என்னை தன்னுடையவராக்கி அனைத்தையும்
ஆஸ்தியாகக் கொடுத்திருக்கின்றீர்கள் என்று குழந்தை களாகிய
நீங்கள் அதிகாரப்பூர்வமாக சொல்ல முடியும். இந்த ஆஸ்தியை எவரும்
பறிக்க முடியாது, இந்தளவு குழந்தைகளாகிய உங்களுக்கு போதை
இருக்க வேண்டும். நீங்கள் தான் அனைவருக்கும் முக்தி, ஜீவன்
முக்திக்கான வழியை சொல்லக்கூடிய லைட் (ஒளி) ஹவுஸ் ஆவீர்கள்.
எழும்பொழுதும், அமரும்பொழுதும், போகும்பொழுதும், வரும்பொழுதும்
நீங்கள் லைட் ஹவுஸ் ஆகி இருங்கள்.
குழந்தைகளே, இப்பொழுது சமயம் மிகவும் குறைவாக உள்ளது என்று பாபா
கூறுகின்றார். ஒரு நாழிகை (24 நிமிடங்கள்), அரை நாழிகை (12
நிமிடங்கள்) . . . எவ்வளவு முடியுமோ, ஒரு தந்தையை நினைவு
செய்வதில் ஈடுபடுங்கள் மற்றும் பிறகு சார்ட்டை அதிகரித்துக்
கொண்டே செல்லுங்கள்.
இனிமையிலும் இனிமையான வெகுகாலத்திற்குப் பிறகு தேடிக்
கண்டெடுக்கப்பட்ட அதிர்ஷ்டசாலியான மற்றும் அன்பான ஞான
நட்சத்திரங்களுக்கு தாய் தந்தையான பாப்தாதாவின் உள்ளத்தில்
இருந்து அன்பான அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிக
குழந்தைகளுக்கு ஆன்மிக தந்தையின் நமஸ்காரம்.
அவ்யக்த மகாவாக்கியம் - நிரந்தர யோகி ஆகுக
எவ்வாறு ஒரு நொடியில் சுவிட்ச் ஆன் மற்றும் ஆஃப்
செய்யப்படுகிறது, அதுபோலவே, ஒரு நொடி யில் சரீரத்தை ஆதாரமாக
எடுத்தீர்கள் மற்றும் பிறகு ஒரு நொடியில் சரீரத்தில் இருந்து
கடந்து அசரீரி ஸ்திதியில் நிலைத்து விடுங்கள். இந்த நொடி
சரீரத்தில் வந்தேன், பிறகு அடுத்த நொடி அசரீரி ஆகிவிட்டேன்,
இந்தப் பயிற்சி செய்ய வேண்டும், இதையே கர்மாதீத் நிலை என்று
சொல்லப்படுகிறது. எவ்வாறு ஒரு ஆடையை அணிவது அல்லது அணியாமல்
இருப்பது அவரவர் கையில் உள்ளது. அவசியம் ஏற்பட்டபொழுது
அணியப்பட்டது, அவசிய மற்றபொழுது களையப் பட்டது (மாற்றப்பட்டது).
இதுபோன்ற அனுபவம் இந்த சரீரம் என்ற ஆடையை தாரணை செய்யும்
பொழுதும் மற்றும் களையும்பொழுதும் இருக்க வேண்டும். எவ்வாறு ஒரு
ஆடையை அணிந்து கொண்டு காரியம் செய்து கொண்டிருக்கின்றார்கள்,
காரியம் நிறைவுற்றது மற்றும் ஆடையை களைந்துவிட்டார்கள் என்பது
போல் கர்மம் செய்யும்பொழுதும் அனுபவம் ஆகவேண்டும்.
போகும்பொழுதும், வரும்பொழுதும் சரீரம் மற்றும் ஆத்மா ஆகிய
இரண்டும் தனித்தனியானதாக அனுபவம் ஆகவேண்டும். எவ்வாறு ஏதாவது
ஒரு பழக்கம் ஏற்பட்டுவிடுகிறது அல்லவா, ஆனால், இந்தப் பயிற்சி
யாரால் செய்ய முடியும்? யார் சரீரத்துடன் மற்றும் சரீரத்தின்
சம்பந்தத்தில் என்ன வெல்லாம் விசயங்கள் உள்ளனவோ, சரீரத்தின்
உலகம், சம்பந்தம் மற்றும் அனேக பொருட்கள் என்னவெல்லாம் உள்ளனவோ,
அவற்றில் இருந்து முற்றிலுமாக விடுபட்டு இருப்பார்களோ, கொஞ்சம்
கூட பற்று இருக்காதோ, அவர்களே விடுபட முடியும். ஒருவேளை,
சூட்சும சங்கல்பத்தில் கூட இலேசான தன்மை இல்லை, விடுபட
முடியவில்லை என்றால் பற்றற்ற தன்மையின் அனுபவம் செய்ய முடியாது.
எனவே, ஒவ்வொருவரும் இந்தப் பயிற்சி செய்ய வேண்டும், முற்றிலும்
பற்றற்ற நிலையின் அனுபவம் செய்ய வேண்டும். இந்த நிலையில்
இருப்பதனால் மற்ற ஆத்மாக்களுக்கும் உங்கள் மூலம் விடுபட்ட
தன்மையின் அனுபவம் ஆகும், அவர்களும் அனுபவம் செய்வார்கள்.
எவ்வாறு யோகத்தில் அமர்ந்திருக்கும் சமயம், இந்த டிரில்
செய்விப் பவர்கள் விடுபட்ட நிலையில் இருக்கின்றார்கள் என்று
சில ஆத்மாக்களுக்கு அனுபவம் ஆகிறது அல்லவா, அதுபோல்
போகும்பொழுதும், வரும்பொழுதும் ஃபரிஷ்தா நிலையின் காட்சி
கிடைக்கும். இங்கே அமர்ந்து இருக்கும்பொழுதும், அனேக ஆத்மாக்
களுக்கு, யாரெல்லாம் உங்களுடைய சத்யுக குடும்பத்தில்
நெருக்கத்தில் வரக்கூடியவர்களாக இருப்பார்களோ, அவர்களுக்கு
உங்களுடைய ஃபரிஷ்தா ரூபம் மற்றும் எதிர்கால இராஜ்ய பதவி ஆகிய
இரண்டும் சேர்ந்து காட்சியாகக் கிடைக்கும். எவ்வாறு ஆரம்பத்தில்
பிரம்மாவைப் பார்க்கும்பொழுது சம்பூரண சொரூபம் மற்றும்
ஸ்ரீகிருஷ்ணர் ஆகிய இரண்டையும் சேர்த்து காட்சியாகப்
பார்த்தார்கள், அதுபோன்று இப்பொழுது அவர்களுக்கு உங்களுடைய
இரட்டை ரூபத்தின் காட்சி கிடைக்கும். எந்தளவு வரிசைக்கிரமமாக
இந்த விடுபட்ட நிலையை அடைந்து கொண்டே செல்வீர்களோ, அப்பொழுது
உங்களுடைய இந்த இரட்டை காட்சி கிடைக்கும். இப்பொழுது இந்த
முழுமையான பயிற்சி செய்துவிட்டால், இங்கு அங்கிருந்து இதே
செய்தி வர ஆரம்பித்துவிடும். எவ்வாறு ஆரம்பத்தில் வீட்டில்
இருக்கும்பொழுது கூட அனேக நெருக்கமாக வரக்கூடிய
ஆத்மாக்களுக்குக் காட்சி கிடைத்தது அல்லவா. அது போன்று
இப்பொழுதும் காட்சி கிடைக்கும். இங்கே அமர்ந்து
இருக்கும்பொழுதும், உங்களுடைய சூட்சும சொரூபம் எல்லையற்ற சேவை
செய்யும். இப்பொழுது இந்த சேவையே எஞ்சி உள்ளது. சாகாரத்தில்
அனைவரும் உதாரணத்தைப் பார்த்துள்ளீர்கள். அனைத்து விசயங்களும்
வரிசைக் கிரமமாக நாடகத்தின் அனுசாரம் நடைபெற வேண்டும்.
எவ்வளவுக்கு எவ்வளவு சுயம் ஆகாரி ஃபரிஷ்தா சொரூபத்தில்
இருப்பீர்களோ, அந்தளவு உங்களுடைய ஃபரிஷ்தா ரூபம் சேவை செய்யும்.
ஆத்மாவிற்கு முழு உலகத்தை சக்கரம் சுற்றுவதற்கு எவ்வளவு சமயம்
ஆகிறது? ஆக, இப்பொழுது உங்களுடைய சூட்சும சொரூபம் கூட சேவை
செய்யும், ஆனால், யார் இந்த விடுபட்ட ஸ்திதியில் இருப்பார்களோ,
சுயம் ஃபரிஷ்தா ரூபத்தில் நிலைத்திருப்பார்களோ, அவர்களுடைய
சூட்சும ரூபம் சேவை செய்யும். ஆரம்பத்தில் அனைவருக்கும்
சாட்சாத்காரம் ஏற்பட்டது. ஃபரிஷ்தா ரூபத்தில் சம்பூரண நிலை
மற்றும் புருஷார்த்தி நிலை ஆகிய இரண்டும் தனித்தனியாக காட்சி
கிடைத்தது. எவ்வாறு சாகார பிரம்மா மற்றும் சம்பூரண
பிரம்மாவினுடைய தனித்தனியான காட்சி கிடைத்ததோ, அதுபோன்று
ஒப்பற்ற குழந்தைகளின் காட்சியும் கிடைக்கும். குழப்பம்
எப்பொழுது ஏற்படுமோ, அப்பொழுது சாகார சரீரத்தின் மூலம் ஒன்றும்
செய்ய முடியாது மற்றும் இந்த சேவையின் மூலமே பிரபாவமும்
ஏற்படும். எவ்வாறு ஆரம்பத்தில் கூட காட்சி மூலமே பிரபாவம்
ஏற்பட்டது அல்லவா. மறைமுகமான அனுபவம் பிரபாவத்தை ஏற்படுத்தியது.
அதேபோன்று இறுதியிலும் கூட இதே சேவை நடக்கப்போகிறது. தன்னுடைய
சம்பூரண சொரூபத்தின் காட்சி தனக்குத் தானே கிடைக்கிறதா?
இப்பொழுது சக்திகளை அழைப்பது ஆரம்பம் ஆகிவிட்டது. இப்பொழுது
பரமாத்மாவை குறைவாகவே அழைக்கின்றார்கள், சக்திகளை அழைக்கும்
வேகம் தீவிரத்துடன் ஆரம்பமாகிவிட்டது. எனவே, அப்பேற்பட்ட
பயிற்சியை இடை இடையில் செய்ய வேண்டும். இந்தப் பழக்கம்
ஏற்படுவதனால் பிறகு மிகுந்த ஆனந்தம் அனுபவம் ஆகும். ஒரு
நொடியில் ஆத்மா சரீரத்தில் இருந்து விடுபட்டுவிடும்
பழக்கமாகிவிடும். இப்பொழுது இந்த முயற்சியே செய்ய வேண்டும்.
நிகழ்கால சமயத்தில் மனன சக்தி மூலம் ஆத்மாவில் அனைத்து
சக்திகளையும் நிறைப்பதற்கான அவசியம் உள்ளது, அப்பொழுதே
மூழ்கியிருக்கும் நிலை இருக்கும் மற்றும் தடை விலகிவிடும்.
எப்பொழுது ஆன்மிகத் தன்மையின் பக்கம் வேகம் குறைந்து போகிறதோ,
அப்பொழுதே தடை களின் அலை வருகிறது. எனவே, நிகழ்கால சமயத்தில்
சிவராத்திரியின் சேவைக்கு முன்னதாக தனக்குள் சக்தியை
நிறைப்பதற்கான வேகம் தேவை. யோகத்திற்கான நிகழ்ச்சிகள் நடத்து
கின்றீர்கள், ஆனால், யோகத்தின் மூலம் சக்திகளை அனுபவம் செய்வது,
செய்விப்பது, இப்பொழுது இத்தகைய வகுப்புகளின் அவசியம் உள்ளது.
நடைமுறையில் தன்னுடைய பலத்தின் ஆதாரத்தினால் பிறருக்கு பலம்
கொடுக்க வேண்டும். வெளிப்படையான சேவைக்கான திட்டத்தை மட்டும்
யோசிக்கக் கூடாது, ஆனால், அனைத்தின் பக்கமும் முழுமையான கவனம்
தேவை. யார் நிமித்தம் ஆகியிருக்கின்றார்களோ, அவர்களுக்கு
நம்முடை.ய பூந்தோட்டம் எந்த விசயத்தில் பலவீனமாக உள்ளது என்ற
இந்த சிந்தனை வரவேண்டும். எவ்விதத்திலாவது தன்னுடைய
பூந்தோட்டத்தின் பலவீனத்தின் மீது கடுமையான பார்வை வைக்க
வேண்டும். நேரத்தைக் கொடுத்தாவது பலவீனங்களை அழிக்க வேண்டும்.
எவ்வாறு சாகார ரூபத்தைப் பார்த்தீர்கள், ஏதாவது அப்படி ஒரு அலை
வரும் சமயமாக இருந்தால் பகல், இரவாக சகாஷ் (சக்தி) கொடுக்கும்
விசேஷ சேவை நடைபெற்றது, விசேஷ திட்டங்கள் போடப்பட்டன. பலமற்ற
ஆத்மாக்களுக்குள் பலத்தை நிறைப்பதற்கான விசேஷ கவனம் இருந்தது,
அதன் மூலம் அனேக ஆத்மாக்களுக்கு அனுபவமும் ஏற்பட்டது.
இரவெல்லாம் கூட சமயம் ஒதுக்கி ஆத்மாக்களுக்குள் சகாஷை
நிறைப்பதற்கான சேவை நடந்தது. எனவே, இப்பொழுது விசேஷமாக சகாஷ்
கொடுக்கும் சேவை செய்ய வேண்டும். லைட் (ஒளி) ஹவுஸ், மைட் (சக்தி)
ஹவுஸ் ஆகி இந்த சேவையை குறிப்பாக செய்ய வேண்டும், அப்பொழுதே
நாலாபுறங்களிலும் ஒளி மற்றும் சக்தியின் பிரபாவம் பரவும்.
இப்பொழுது இதுவே அவசியமானது. எவ்வாறு ஒரு செல்வந்தர்
இருக்கின்றார் என்றால் அவர் தன்னுடைய நெருக்கமான உறவினர்களுக்கு
உதவி செய்து மேலே உயர்த்திவிடுகின்றார், அதுபோல் நிகழ்கால சமயம்,
தொடர்பில் மற்றும் சம்பந்தத்தில் யாரெல்லாம் பலவீனமான
ஆத்மாக்கள் இருக்கின்றார்களோ, அவர்களுக்கு விசேஷமாக சகாஷ்
கொடுக்க வேண்டும். நல்லது.
வரதானம்:
ஆயிரம் புஜங்களைக் கொண்ட பிரம்மா பாபாவினுடைய துணையை
நிரந்தரமாக அனுபவம் செய்யக்கூடிய உண்மையான சினேகி ஆகுக.
நிகழ்கால சமயம் ஆயிரம் புஜங்களைக் கொண்ட பிரம்மா பாபாவினுடைய
ரூபத்திற்கான பாகம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எவ்வாறு
ஆத்மா இல்லாமல் புஜங்கள் எதுவும் செய்ய முடியாதோ, அவ்வாறு
பாப்தாதா இல்லாமல் புஜங்களாகிய குழந்தைகள் எதுவும் செய்ய
முடியாது. ஒவ்வொரு காரியத்திலும் முதலில் தந்தையினுடைய சகயோகம்
இருக்கின்றது. எதுவரை ஸ்தாபனைக்கான பாகம் இருக்கின்றதோ, அதுவரை
பாப்தாதா குழந்தைகளின் ஒவ்வொரு சங்கல்பம் மற்றும் நொடியில்
துணையாகக் கூடவே இருக்கின்றார்கள், ஆகையினால், ஒருபொழுதும்
பிரிவினைக்கான திரையைப் போட்டு பிரிந்துவிடாதீர்கள். அன்புக்
கடலின் அலை களில் ஆடுங்கள், புகழ் பாடுங்கள், ஆனால், காயமடைய
வேண்டாம். தந்தையினுடைய அன்பிற்கான பிரத்யட்ச சொரூபம் சேவையில்
சினேகி ஆகுங்கள்.
சுலோகன்:
அசரீரி ஸ்திதியினுடைய அனுபவம் அல்லது பயிற்சி தான் நம்பர்
முன்னால் வருவதற்கான ஆதாரம் ஆகும்.
தன்னுடைய சக்திசாலி மனதின் மூலம் சகாஷ் கொடுக்கும் சேவை
செய்யுங்கள்
ஒவ்வொரு நேரம், ஒவ்வொரு ஆத்மாவிற்காகவும் மனதில் தானாகவே
சுபபாவனை மற்றும் சுபவிருப்பம் நிறைந்த சுத்தமான அதிர்வலைகளைக்
கொண்டிருப்பவராக தனக்கும் மற்றும் பிறருக்கும் அனுபவம்
ஆகவேண்டும். மனதில் இருந்து ஒவ்வொரு நேரமும் சர்வ
ஆத்மாக்களுக்காகவும் ஆசீர்வாதங்கள் வெளிப்பட்டுக் கொண்டே
இருக்க வேண்டும். மனதால் சதா இந்த சேவையில் பிஸியாக இருங்கள்.
எவ்வாறு பேச்சினுடைய சேவையில் பிஸியாக இருப்பதற்கான அனுபவி
ஆகியுள்ளீர்கள். ஒருவேளை, சேவை கிடைக்கவில்லை என்றால் தன்னை
காலியாக அனுபவம் செய்கின்றீர்கள். அவ்வாறு ஒவ்வொரு நேரமும்
வார்த்தையின் கூடவே மனதின் சேவை தானாகவே நடந்து கொண்டே இருக்க
வேண்டும்.