18-02-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே ! ஒவ்வொரு வீட்டிற்கும் தந்தையின் செய்தியை அளிப்பது உங்களுடைய கடமை ஆகும். எப்பேர்ப்பட்ட நிலைமையிலும் யுக்தியை (வழிமுறை) வகுத்து தந்தையின் அறிமுகத்தை ஒவ்வொருவருக்கும் அவசியம் கொடுங்கள்.

கேள்வி:
குழந்தைகளாகிய உங்களுக்கு எந்த ஒரு விஷயத்தில் ஆர்வம் இருக்க வேண்டும்?

பதில்:
இங்கு வெளிப்படும் புது புது பாயிண்ட்ஸ்-ஐ தங்களிடம் (நோட் செய்யும்) குறித்து கொள்ளும் ஆர்வம் வேண்டும். ஏனெனில் இத்தனை எல்லா பாயிண்ட்ஸ் (குறிப்புக்கள்) நினைவில் இருப்பது கடினம் ஆகும். நோட்ஸ் (குறிப்புக்கள்) எடுத்து பின் பிறருக்கும் புரிய வைக்க வேண்டும். எழுதிவிட்டு பின் அது (காப்பி) புத்தகத்திலேயே இருந்து விடுவது அல்ல. எந்த குழந்தைகள் நல்ல முறையில் புரிந்து கொள்கிறார்களோ அவர்களுக்கு நோட்ஸ் (குறிப்புக்கள்) எடுப்பதற்கான மிகுந்த ஆர்வம் இருக்கும்.

பாடல்:
லட்சம் சேமிக்கக்கூடிய.....

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள் பாட்டைக் கேட்டீர்களா?. ஆன்மீகக் குழந்தைகளே ! என்ற இந்த வார்த்தை ஒரு தந்தை தான் கூற முடியும். ஆன்மீகத் தந்தையைத் தவிர வேறு எவரும் ஒரு பொழுதும், யாரையும் ஆன்மீகக் குழந்தை என்று கூற முடியாது. அனைத்து ஆத்மாக்களின் தந்தை ஒரே ஒருவர் ஆவார். நாம் அனைவரும் சகோதர சகோதரர்கள் ஆவோம் என்பதை குழந்தைகள் அறிந்துள்ளார்கள். சகோதரத்துவம் (பிரதர் ஹுட்) என்று பாடவும் செய்கிறார்கள். பிறகும் மாயையின் பிரவேசம் எப்படி ஆகி விடுகிறது என்றால் பரமாத்மாவை சர்வவியாபி (எங்கும் நிறைந்தவர்) என்று கூறி விடுகிறார்கள். எனவே "ஃபாதர் ஹுட்" (அனைவரும் தந்தை) ஆகி விடுகிறது. இராவண இராஜ்யம் பழைய உலகத்தில் தான் ஏற்படுகிறது. புது உலகத்தில் இராம இராஜ்யம் அல்லது ஈசுவரிய இராஜ்யம் என்று கூறப்படுகிறது. இது புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும். ஈசுவரிய இராஜ்யம் மற்றும் அசுர இராஜ்யம் என்று நிச்சயம் இரண்டு ராஜ்யங்கள் உள்ளன. புது உலகம் மற்றும் பழைய உலகம். புதிய உலகத்தை அவசியம் தந்தை தான் படைத்திருக்கக் கூடும். ஆனால் இந்த உலகத்தின் மனிதர்கள் புது உலகம் மற்றும் பழைய உலகத்தைக் கூட புரிந்து கொள்வதில்லை. அப்படியானால் எதுவுமே அறியாதிருக்கிறார்கள். நீங்கள் கூட ஒன்றுமே அறியாமல் இருந்தீர்கள். அறிவற்றவர்களாக இருந்தீர்கள். புதிய சுகமான உலகத்தை யார் ஸ்தாபனை செய்கிறார்? பின் பழைய உலகத்தில் துக்கம் ஏன் ஏற்படுகிறது? சொர்க்கத்திலிருந்து நரகம் எப்படி ஆகிறது? என்பதெல்லாம் யாருக்குமே தெரியாது. இந்த விஷயங்களையோ மனிதர்கள் தான் அறிய வேண்டுமல்லவா? தேவதைகளின் படங்கள் கூட உள்ளன. எனவே அவசியம் ஆதி சனாதன தேவி தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. இச்சமயம் இல்லை. இது குடியரசு ஆகும். தந்தை பாரதத்தில் தான் வருகிறார். சிவபாபா பாரதத்தில் வந்து என்ன செய்கிறார் என்பது மனிதர்களுக்குத் தெரியாது. தங்களுடைய தர்மத்தையே மறந்து விட்டுள்ளார்கள். நீங்கள் இப்பொழுது திரி மூர்த்தி மற்றும் சிவ தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். பிரம்மா தேவதை, விஷ்ணு தேவதை மற்றும் சங்கர் தேவதை என்று கூறப்படுகிறது. பிறகு சிவ பரமாத்மாய நம: என்று கூறுகிறார்கள். எனவே குழந்தைகளாகிய நீங்கள் திரிமூர்த்தி சிவனுடைய அறிமுகத்தைத் தான் கொடுக்க வேண்டும். இது போல சேவை செய்ய வேண்டும். எப்பேர்ப்பட்ட நிலைமையிலும் தந்தையின் அறிமுகம் அனை வருக்கும் கிடைக்க வேண்டும். அப்பொழுது அவர்களும் தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெற்றுக் கொள்ள முடியும். நாம் இப்பொழுது ஆஸ்தி எடுத்து கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இன்னும் நிறைய பேர் ஆஸ்தி எடுக்க வேண்டி உள்ளது. வீட்டுக்கு வீடு தந்தையின் செய்தியை அளிப்பதற்கான கடமை நமக்கு உள்ளது. உண்மையில் (மெஸஞ்ஜர்) தூதர் ஒரு தந்தையே ஆவார். தந்தை உங்களுக்கு தன்னுடைய அறிமுகத்தை அளிக்கிறார். நீங்கள் பிறகு மற்றவர்களுக்கு தந்தையின் அறிமுகத்தை அளிக்க வேண்டும். தந்தையின் (நாலேஜ்) ஞானத்தை அளிக்க வேண்டும். முக்கியமானது திரி மூர்த்தி சிவன். இதையே (கோட் ஆஃப் ஆர்ம்ஸ்) அரசாங்க முத்திரையாகக் கூட அமைத்துள்ளார்கள். ஆனால் அரசாங்கம் இதனுடைய சரியான பொருளைப் புரியாமல் உள்ளது. அதில் சக்கரத்தை கூட கைராட்டினத்தைப் போல காண்பித்துள்ளார்கள். மேலும் அதில் பின்னர் சத்யமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்) என்று எழுதி உள்ளார்கள். இதற்கு பொருளோ வெளிப்படுவதில்லை. இதுவோ சம்ஸ்கிருத வார்த்தை ஆகும். இப்பொழுது தந்தையே சத்தியமானவராக உள்ளார். அவர் புரிய வைப்பதின் மூலமாக உங்களுக்கு முழு உலகத்தின் மீது வெற்றி ஏற்படுகிறது. நான் உண்மையைக் கூறுகிறேன் என்று தந்தை கூறுகிறார். நீங்கள் இந்த படிப்பின் மூலம் உண்மையிலும் உண்மையான நாராயணர் ஆக முடியும். அவர்களோ என்னென்னவெல்லாமோ பொருள் கூறுகிறார்கள். அதையும் அவர்களிடம் கேட்க வேண்டும். பாபாவோ அநேக விதங்களில் புரிய வைக்கிறார். எங்கெங்கு மேளா (திருவிழா) நடக் கிறதோ அங்கு போய் (ஞான) நதிகள் பற்றி கூட புரிய வையுங்கள். கங்கையோ பதீத பாவனராக ஆக முடியாது. நதிகள் கடலிலிருந்து வெளிப்பட்டுள்ளன. அது தண்ணீரின் கடல் ஆகும். அதிலிருந்து தண்ணீரின் நதிகள் வெளிப்படுகின்றன. ஞானக் கடலிலிருந்து ஞான நதிகள் வெளிப்படும். தாய்மார்களாகிய உங்களிடம் இப்பொழுது ஞானம் உள்ளது. கௌமுக் என்ற இடத்திற்குச் செல்கிறார்கள். அங்கு பசுவின் வாயிலிருந்து தண்ணீர் வெளிப்படுகிறது (அப்படி வடிவமைத்துள்ளனர்) இது கங்கையின் தண்ணீர் என்று நினைக்கிறார்கள். அவ்வளவு எழுதப் படிக்கத் தெரிந்த மனிதர்கள் கூட இங்கு கங்கா ஜலம் எங்கிருந்து வெளிப்படும் என்று புரிந்து கொள்வதில்லை. சாஸ்திரங்களில் அம்பு எய்தவுடன் கங்கை வெளிப்பட்டது என்று உள்ளது. இதுவோ ஞானத்தின் விஷயங்கள் ஆகும். அப்படி இன்றி அர்ஜுனர் அம்பு எய்தார், உடனே கங்கை வெளிப்பட்டது என்பதல்ல. எவ்வளவு தூரதூரமாக தீர்த்தங்களுக்குச் செல்கிறார்கள். சங்கரரின் ஜடா முடியிலிருந்து கங்கை வெளிப்பட்டது என்றும் அதில் குளிப்பதால் மனிதனிலிருந்து பரியாக (தேவதை) ஆகி விடுவார்கள் என்றும் கூறுகிறார்கள். மனிதனிலிருந்து தேவதை ஆகி விடு கிறார்கள். இதுவும் அப்படித்தானே !

இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் தந்தையினுடைய அறிமுகம் அளிக்க வேண்டும். எனவே பாபா இந்த படத்தைத் தயாரிக்குமாறு செய்துள்ளார். திரிமூர்த்தி சிவனின் படத்தில் முழு ஞானம் உள்ளது. அவர்களுடைய திரிமூர்த்தியின் படத்தில் ஞானம் (நாலேஜ்) அளிப்பவரின் (சிவன்) படம் இல்லை. நாலேஜ் (ஞானம்) எடுப்பவரின் படம் உள்ளது. இப்பொழுது நீங்கள் திரி மூர்த்தி சிவனின் படத்தின் மீது புரிய வைக்கிறீர்கள். மேலே (நாலேஜ்) ஞானம் அளிப்பவர் இருக்கிறார். பிரம்மா விற்கு அவரிடமிருந்து (நாலேஜ்) ஞானம் கிடைக்கிறது. பின் அதை அவர் பரப்புகிறார். இதற்கு இறைவனினுடைய தர்மத்தை ஸ்தாபனை செய்யும் தொண்டு அல்லது செயல் முறை (மிஷினரி) என்று கூறப்படுகிறது. இந்த தேவி தேவதா தர்மம் மிகவும் சுகம் அளிக்கக் கூடியது ஆகும். குழந்தைகளாகிய உங்களுக்கு தங்களுடைய சத்ய தர்மத்தின் அறிமுகம் கிடைத்துள்ளது. நமக்கு பகவான் கற்ப்பிக்கிறார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். நீங்கள் எவ்வளவு குஷி அடைகிறீர்கள். குழந்தைகளாகிய உங்களுடைய குஷிக்கு எல்லையே இருக்கக் கூடாது என்று தந்தை கூறுகிறார். ஏனெனில், உங்களுக்கு கற்பிப்பவர் சுயம் பகவான் ஆவார். பகவானோ நிராகாரமான சிவன் ஆவாரேயன்றி ஸ்ரீகிருஷ்ணர் அல்ல. அனைவருக்கும் சத்கதி அளிக்கும் வள்ளல் ஒருவர் ஆவார் என்று தந்தை வந்து புரிய வைக்கிறார். சத்யுகத்திற்கு சத்கதி என்று கூறப்படுகிறது. துர்க்கதி என்று கலியுகத்திற்குக் கூறப்படுகிறது. புது உலகைப் புதியது என்றும் பழையதை பழையது என்று தான் கூறுவார்கள். மனிதர்கள் இப்பொழுது உலகம் பழையதாக ஆவதற்கு 40 ஆயிரம் வருடங்கள் தேவை என்று நினைக்கிறார்கள். எவ்வளவு குழம்பி உள்ளார்கள். தந்தையைத் தவிர இந்த விஷயங்களை வேறு யாரும் புரிய வைக்க முடியாது. குழந்தைகளாகிய உங்களுக்கு இராஜ்ய பாக்கியத்தை அளித்து மற்ற அனைவரையும் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன் என்று பாபா கூறுகிறார். யார் என் வழிப் படி நடக்கிறார்களோ அவர்கள் தேவதை ஆகி விடுகிறார்கள். இந்த விஷயங்களை குழந்தைகளாகிய நீங்கள் தான் அறிந்துள்ளீர்கள். புதியவர்கள் யாராவது வந்தால் என்ன புரிந்து கொள்வார்கள்?

தோட்டக்காரர்களாகிய உங்களுடைய கடமையாவது தோட்டத்தை அமைத்து தயார் செய்வது. தோட்டத்தின் எஜமானரோ (டைரக்ஷன்) உத்தரவு அளிக்கிறார். அப்படியின்றி பாபா யாராவது புதியவர்களை சந்தித்து ஞானம் அளிப்பார் என்பதல்ல. இந்த காரியம் தோட்டக்காரர்களுடையது ஆகும். உதாரணமாக பாபா கல்கத்தாவிற்கு வந்தார் என்று வைத்து கொள்வோம். பின் நாம் நமது (ஆபீசர்) அதிகாரியை, அல்லது குறிப்பிட்ட நமது நண்பரை பாபாவிடம் அழைத்து செல்வோம் என்று குழந்தைகள் நினைக்கிறார்கள். அவர்களோ ஒன்றுமே புரிந்து கொள்ள மாட்டார்கள். ஒரு முட்டாளை முன்னால் கூட்டி வந்து உட்கார வைத்தது போல இருக்கும். எனவே புதியவர்களை ஒரு பொழுதும் பாபாவிற்கு முன்னால் கூட்டி வராதீர்கள் என்று பாபா கூறுகிறார். இதுவோ தோட்டக்காரர்களாகிய உங்களுடைய வேலையேயன்றி, தோட்டத்தின் முதலாளியின் வேலை அல்ல. தோட்டக்காரனுடைய வேலையாவது தோட்டத்தை அமைப்பது. தந்தையோ இப்படி இப்படி செய்யுங்கள் என்று டைரக்ஷ்ன் (உத்தரவு) அளிப்பார். எனவே பாபா ஒரு பொழுதும் புதியவர்களை சந்திப்பது இல்லை. ஆனால் யாராவது விருந்தாளி ஆகி வீட்டிற்கு வருகிறார்கள் என்றால் தரிசனம் செய்ய வேண்டும் என்பார்கள். நீங்கள் ஏன் எங்களை சந்திக்க அனுமதிப்பதில்லை? சங்கராச்சாரியார் ஆகியோரிடம் எத்தனை பேர் செல்கிறார்கள். தற்சமயத்தில் சங்கராச்சாரி யாருக்கு பெரிய பதவி உள்ளது. படித்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால் விகாரத்தால் தான் எடுக்கிறார்கள் அல்லவா? டிரஸ்டிகள் யாரை வேண்டுமானாலும் பீடத்தில் அமர்த்தி விடுகிறார்கள். எல்லோருக்கும் அவரவர்களுக்கென்று வழி உள்ளது. நான் கல்ப கல்பமாக இந்த பழைய உடலில் வருகிறேன் என்று சுயம் தந்தை வந்து குழந்தைகளுக்கு தன்னுடைய அறிமுகத்தைக் கொடுக் கிறார். இவர் கூட தனது பிறவிகளைப் பற்றி அறியாமல் உள்ளார். சாஸ்திரங்களிலோ கல்பத்தின் ஆயுளை லட்சக்கணக்கான வருடங்களாக ஆக்கி விட்டுள்ளார்கள். மனிதர்களோ இத்தனை பிறவி கள் எடுக்க முடியாது. பிறகு மிருகங்கள் ஆகியவற்றின் பிறவிகளையும் சேர்த்து 84 லட்சம் என்று ஆக்கி விட்டுள்ளார்கள். மனிதர்களோ என்ன கேட்கிறார்களோ அவை அனைத்தையும் சத்தியம் சத்தியம் என்று எடுத்துக் கொள்கின்றனர். சாஸ்திரங்களிலோ எல்லாமே பக்தி மார்க்கத் தின் விஷயங்கள் ஆகும். கல்கத்தாவில் தேவிகளின் மிகவுமே அழகழகான விக்கிரகங்களை அமைக் கிறார்கள். அலங்கரிக்கிறார்கள். பிறகு அவற்றை கடலில் மூழ்கடித்து விடுகிறார்கள். இதுவும் பொம்மைகளின் பூஜை செய்கிறவர்கள் சிறு குழந்தைகள் போலத் தான் ஆகிறார்கள். முற்றிலுமே அப்பாவிகளாக உள்ளார்கள். இது நரகமாகும் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். சொர்க்கத்திலோ ஏராளமான சுகம் இருந்தது. இப்பொழுது கூட யாராவது இறந்தார் என்றால் இன்னார் சொர்க்கத் திற்குச் சென்று விட்டார் என்கிறார்கள். எனவே அவசியம் ஏதோ ஒரு நேரத்தில் சொர்க்கம் இருந்தது. இப்பொழுது இல்லை. நரகத்திற்குப் பிறகு அவசியம் சொர்க்கம் வரும். இந்த விஷயங் களைக் கூட நீங்கள் தான் அறிந்துள்ளீர்கள். மனிதர்கள் சிறிதளவு கூட அறியாமல் உள்ளார்கள். எனவே புதியவர் யாராவது பாபாவிற்கு முன்னால் அமர்ந்து என்ன செய்வார்? எனவே முழுமை யாக பாலனை அளிப்பதற்காக தோட்டக்காரனும் வேண்டும். அதுவும் இங்கோ தோட்டக் காரர்கள் ஏராளமானோர் வேண்டும். மருத்துவ கல்லூரியில் (மெடிகல் காலேஜ்) யாராவது புதியதாக போய் அமர்ந்தார் என்றால் எதுவும் புரிந்து கொள்ள மாட்டார். இந்த (நாலேஜ்) ஞானம் கூட புதியது ஆகும். நான் அனைவரையும் பாவனமாக ஆக்க வந்துள்ளேன் என்று தந்தை கூறுகிறார். என்னை நினைவு செய்தீர்கள் என்றால் பாவனமாக (தூய்மையாக) ஆகி விடுவீர்கள். இச்சமயத்தில் எல்லோருமே தமோபிரதான ஆத்மாக்கள் ஆவார்கள். அதனால் தான் ஆத்மாவே பரமாத்மா, எல்லோருக்குள்ளும் பரமாத்மா இருக்கிறார் என்று கூறி விடுகிறார்கள். பின் இப்பேர்ப் பட்டோரிடம் வந்து தந்தை தலையிலடித்துக் கொண்டிருப்பாரா என்ன? இதுவோ தோட்டக்காரர் களாகிய உங்களுடைய வேலை ஆகும் - முட்களை மலராக ஆக்குவது.

பக்தி என்பது இரவு, ஞானம் என்பது பகல் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். பிரம்மாவின் பகல், பிரம்மாவின் இரவு என்றும் பாடப்படுகிறது. பிரஜாபிதா பிரம்மாவிற்கோ அவசியம் குழந்தைகளும் இருப்பார்கள் அல்லவா? இத்தனை பிரம்மா குமார் குமாரிகள் இருக்கிறார்கள். இவர்களுடைய பிரம்மா யார் என்று கேட்கும் அளவிற்கு கூட யாருக்கும் அந்த அளவு அறிவு இல்லை. அட, பிரஜாபிதா பிரம்மாவோ பிரசித்தமானவர். அவர் மூலமாகத் தான் பிராமண தர்மம் ஸ்தாபனை ஆகிறது. பிரம்மா தேவதாய நமஹ ! என்றும் கூறுகிறார்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களை பிராமணர்களாக ஆக்கி பிறகு தேவதையாக ஆக்குகிறார்.

புதுப் புது பாயிண்ட்ஸ் (குறிப்புக்கள்) என்னவெல்லாம் வெளிப்படுகிறதோ அவற்றைக் (நோட்) குறித்துக் கொள்வதற்கான ஆர்வம் குழந்தைகளிடம் இருக்க வேண்டும். எந்த குழந்தைகள் நல்ல முறையில் புரிந்துள்ளார்களோ அவர்களுக்கு (நோட்ஸ்) குறிப்புக்கள் எடுப்பதற்கான மிகுந்த ஆர்வம் இருக்கும். நோட்ஸ் எடுப்பது மிகவும் நல்லது. ஏனெனில் இத்தனை குறிப்புகளும் நினைவில் இருப்பது கடினம். நோட்ஸ் எடுத்து பிறகு பிறருக்கும் புரிய வைக்க வேண்டும். அப்படி இன்றி எழுதி விட்டு பின் (காப்பி) புத்தகத்திலேயே இருந்து விடுவது அல்ல. புது புது பாயிண்ட்ஸ் கிடைத்து கொண்டே இருக்கிறது. பின் பழைய பாயிண்ட்ஸ் - (காப்பி புத்தகம்) புத்தகங்களிலேயே இருந்து விடுகிறது. பள்ளிக் கூடத்தில் கூட படித்துக் கொண்டே செல்கிறார்கள். பின் முதல் வகுப்பின் புத்தகங்கள் இருந்து கொண்டே இருக்கும். நீங்கள் புரிய வைக்கிறீர்கள் என்றால் கடைசி யில் மன்மனாபவ என்பது பற்றியும் புரிய வையுங்கள். தந்தை மற்றும் சிருஷ்டி சக்கரத்தை நினைவு செய்யுங்கள். என் ஒருவனை நினைவு செய்யுங்கள் என்பது முக்கியமான விஷயம் ஆகும். இதற்குத் தான் யோக அக்னி என்று கூறப்படுகிறது. பகவான் ஞானக் கடல் ஆவார். மனிதர்கள் சாஸ்திரங்களின் கடல் ஆவார்கள். தந்தை ஒன்றும் சாஸ்திரத்தைக் கூறுவதில்லை. அவரும் சாஸ்திரங்களைக் கூறுகிறார் என்றால், பின் பகவான் மற்றும் மனிதர்களுக்கிடையே என்ன வித்தியாசம் இருக்கும்? இந்த பக்தி மார்க்கத்தின் சாஸ்திரங்களின் சாரத்தை நான் உங்களுக்குப் புரிய வைக்கிறேன் என்று தந்தை கூறுகிறார்.

அந்த மகுடி வாசிப்பவர்கள் பாம்பைப் பிடிக்கிறார்கள் என்றால், அதனுடைய பற்களை எடுத்து விடுகிறார்கள். தந்தையும் விஷத்தைப் பருகுவதிலிருந்து உங்களை விடுவித்துவிடுகிறார். இதே விஷத்தினால் தான் மனிதர்கள் பதீதம் (தூய்மையற்றவர்களாக) ஆகி உள்ளார்கள். இவற்றை விடுங்கள் என்று தந்தை கூறுகிறார். பிறகும் விடுவது இல்லை. தந்தை வெண்மையாக ஆக்கு கிறார். பிறகும் விழுந்து கருப்பான முகமாக ஆக்கிக் கொண்டு விடுகிறார்கள். தந்தை குழந்தை களாகிய உங்களை ஞானச் சிதையில் அமர்த்துவதற்காக வந்துள்ளார். ஞான சிதையில் அமருவ தால் நீங்கள் உலகத்தின் அதிபதியாக உலகத்தை வென்றவராக ஆகி விடுகிறீர்கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. நாம் சத்தியமான தர்மத்தின் ஸ்தாபனைக்கு கருவியாக உள்ளோம் என்ற குஷி எப்பொழுதும் இருக்கட்டும். சுயம் பகவான் நமக்கு கற்பிக்கிறார். நமது தேவி தேவதா தர்மம் மிகவும் சுகம் அளிக்கக் கூடியதாகும்.

2. தோட்டக்காரன் ஆகி முட்களை மலராக ஆக்கும் சேவை செய்ய வேண்டும். முழுமையாக பாலனை அளித்து பிறகு தந்தைக்கு முன்னால் கூட்டி வர வேண்டும். நன்கு முயற்சி செய்ய வேண்டும்.

வரதானம்:
பழைய தேகம் மற்றும் உலகத்தை மறந்து விடக் கூடிய பாப் தாதாவின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவர் ஆவீர்களாக.

சங்கமயுகத்தின் சிறந்த ஆத்மாக்களின் இருப்பிடமே பாப்தாதாவின் இதய பீடம் ஆகும். அப்பேர் பட்ட அரியணை முழு கல்பத்திலும் கிடைக்க முடியாது. உலக இராஜ்யத்தின் மற்றும் மாநிலத் தின் இராஜ்யத்தின் சிம்மாசனமோ கிடைத்து கொண்டே இருக்கும். ஆனால் இந்த அரியணை கிடைக்காது. இது எவ்வளவு விசாலமான சிம்மாசனம் என்றால் அதிலேயே நடக்கலாம், உலாவலாம், உண்ணலாம், உறங்கலாம். ஆனால் எப்பொழுதும் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவராக இருக்க முடியும். எந்த குழந்தைகள் எப்பொழுதும் பாப் தாதாவின் இதய பீடத்தில் அமர்ந்திருப் பவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் இந்த பழைய தேகம் அல்லது தேகத்தின் உலகத்தை மறந்தவர்களாக இருப்பார்கள். அதை பார்த்தும் பார்க்காமல் இருப்பார்கள்.

சுலோகன்:
எல்லைக்குட்பட்ட பெயர், மதிப்பு, புகழ் இவற்றிற்கு பின்னால் ஓடுவது என்பது நிழலை தொடர்வதற்கு முயற்சி செய்வதாகும்.

அவ்யக்த சமிக்ஞை: ஏகாந்தபிரியர் ஆகுங்கள், ஒற்றுமை மற்றும் ஒரு முக நிலையை கடைபிடியுங்கள்.

எப்படி எந்த ஒரு புதிய கண்டுபிடிப்பையும் ஆழத்தில் செல்வதால் செய்ய முடிந்தவர்களாக இருப்பார்கள். அதேபோல நீங்களும் எந்த அளவிற்கு உள்முகமானவராக இருப்பீர்களோ அந்த அளவிற்கு புது புது கண்டு பிடிப்புகள் அல்லது திட்டங்களை எடுத்து வரக்கூடியவர்களாக இருப்பீர்கள். அண்டர்கிரவுண்டாக இருக்கும் போது ஒன்று வாயு மண்டலத்திலிருந்து பாதுகாப்பு ஏற்பட்டு விடும். இரண்டாவது ஏகாந்தம் பிராப்தி ஆகி விடும் காரணத்தால் சிந்தனை செய்யும் சக்தி அதிகரிக்கும். மூன்றாவது எந்த ஒரு மாயையின் தடைகளிலிருந்தும் பாதுகாப்பிற்கான சாதனம் ஆகி விடும்.