18-03-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! இந்த நேரம் உங்களுடைய வாழ்க்கை மிக மிக மதிப்பானது. ஏனென்றால் நீங்கள் எல்லைகுட்பட்டதிலிருந்து எல்லைக்கப்பாற்பட்ட நிலைக்கு வந்துள்ளீர்கள். நாம் இந்த உலகிற்கு நன்மை செய்யக் கூடியவர்கள் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள்.

கேள்வி:
பாபாவினுடைய ஆஸ்தியின் அதிகாரம் (உரிமை) எந்த முயற்சியினால் (பிராப்தியாக) கிடைக்கின்றது?

பதில்:
சதா சகோதர, சகோதரன் என்ற பார்வை இருத்தல் வேண்டும். ஆண், பெண் என்ற உணர்வு வெளியேற வேண்டும், அப்போது தான் பாபாவினுடைய ஆஸ்தியின் அதிகாரம் முழுமையாகக் கிடைக்கும். ஆனால் ஆண், பெண் என்ற உணர்வு, பார்வை நீங்குவது மிகவும் கடினமாக உள்ளது. இதற்காக ஆத்ம அபிமானி ஆகக்கூடிய பயிற்சி செய்ய வேண்டும். எப்பொழுது பாபாவினுடைய குழந்தையாகிறோமோ அப்பொழுது ஆஸ்தி கிடைக்கும். ஒரு பாபாவினுடைய நினைவின் மூலம் சதோபிரதானமாகிறவர்களே முக்தி ஜீவன் முக்திகான ஆஸ்தியைப் பெறுவர்.

பாடல்:
கடைசியில் அந்த நாள் வந்தது இன்று...

ஓம் சாந்தி.
குழந்தைகளுக்குத் தெரியும் ஓம் என்றால் நான் ஆத்மா என்னுடையது சரீரம். இப்பொழுது நீங்கள் இந்த நாடகத்தைப் பற்றி, சிருஷ்டி சக்கரத்தைப் பற்றி, சிருஷ்டி சக்கரத்தைத் தெரிந்துள்ள பாபாவைப் பற்றி அறிந்து கொண்டீர்கள். ஏனென்றால், சக்கரத்தை தெரிந்துக் கொண்ட வரைத் தான் படைப்பவர் என்று சொல்ல முடியும். படைப்பவர் மற்றும் படைப்பைப்பற்றி யாரும் தெரிந்து கொள்ளவில்லை. படித்தவர்கள். பெரிய வித்வான்கள், பண்டிதர்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு கர்வம் என்பது இருக்கின்றதல்லவா? ஆனால் அவர்களுக்கு இது தெரியாது, ஞானம், பக்தி, வைராக்கியம் என்று கூட கூறுகின்றார்கள். இப்பொழுது இது 3 பொருட்கள் ஆகி விட்டது. இதனுடைய அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. சன்யாசிகளுக்கு வீட்டின் மீது வைராக்கியம் வருகின்றது. அவர்களுக்குள் கீழானவர், மேலானவர் என்று பொறாமை இருக்கின்றது. இவர் உயர்ந்த குலத்தவர், இவர் நடுநிலையில் உள்ளவர் இதுபோன்று அவர்களிடம் நிறைய நடக் கின்றது. கும்ப மேளாவில்கூட முதலில் யார் முன்வரிசையில் செல்வது என்ற சண்டை அவர் களிடம் நடக்கின்றது. பிறகு போலீஸ் வந்து விலக்கிவிடுகின்றது. இது கூட தேக அபிமானம் தான் இல்லையா? உலகில் இருக்கும் அனைத்து மனிதர்களும் தேக அபிமானிகளே ! இப்பொழுது நீங்கள் ஆத்ம அபிமானியாக வேண்டும். தேக அபிமானத்தை விட்டு தன்னை ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள் என்று பாபா கூறுகின்றார். ஆத்மா தான் பதீதமாகியுள்ளது, அதில் அழுக்கு படிந்துள்ளது. ஆத்மாதான் சதோபிரதானமாகின்றது. பிறகு தமோபிரதானமாகின்றது. எப்படி ஆத்மாவோ, அப்படி சரீரம் கிடைக்கின்றது. கிருஷ்ணருடைய ஆத்மா அழகாக இருக்கின்றது எனவே சரீரமும் மிகவும் அழகானதாக உள்ளது. அவருடைய சரீரத்தில் நிறைய ஈர்ப்பு இருக் கின்றது. தூய்மையான ஆத்மாத்தான் கவர்ந்து இழுக்கின்றது. இலட்சுமி நாராயணனுக்கு ! கிருஷ்ணரைப் போன்ற நிறைய மகிமை கிடையாது. ஏனென்றால், கிருஷ்ணர் தூய்மையான சிறிய குழந்தை, இங்கு கூட கூறுகின்றார்கள் சிறிய குழந்தையும் மகான் ஆத்மாவும் சமம். மகான் ஆத்மாக்கள் வாழ்வை அனுபவித்த பிறகு தான் விகாரங்களை விடுகின்றார்கள். வெறுப்பு வருகின்றது. குழந்தைகள் என்றாலே தூய்மையானவர்கள். அவர்களை உயர்ந்த மகான் ஆத்மா என்று நினைக்கின்றார்கள். எனவே பாபா புரிய வைக்கின்றார், துறவற சன்யாசிகள் சிறிது நிலை நிறுத்துகின்றார்கள். எப்படி வீடு பாதி பழமையாகி விட்டால் பிறகு அதனை பழுதுபார்கின்றார்கள். சன்யாசிகள் கூட மராமத் (பழுது) வேலை செய்கின்றார்கள். பவித்திரமாக இருப்பதால் பாரதத்தை தூக்கி நிறுத்துகின்றார்கள். பாரதத்தைப் போல தூய்மையான தேசம் செல்வந்த தேசம், வேறெதுவும் இருக்க முடியாது. இப்பொழுது பாபா உங்களுக்கு படைப்பவர் மற்றும் படைப் பினுடைய ஆதி, மத்ய, இறுதியினுடைய நினைவை ஏற்படுத்துகின்றார். ஏனென்றால், பாபா தந்தை யாக, டீச்சராக, குருவாகவும் இருக்கின்றார். கீதையில் ஸ்ரீகிருஷ்ணபகவானின் மகாவாக்கியம் என்று எழுதப்பட்டுள்ளது. அவரை பாபா என்று கூற முடியுமா என்ன! அதாவது பதீத பாவனர் என்று சொல்வீர்களா? பதீத பாவனன் என்று சொல்லும் போது மனிதர்கள் கிருஷ்ணரை நினைப் பதில்லை, அவர்கள் பகவானைத்தான் நினைவு செய்கின்றார்கள். பிறகு கூறுகின்றார்கள். பதீத பாவன சீதாராம், இரகுபதி இராகவ இராஜாராம் ! எவ்வளவு குழப்புகின்றார்கள். நான் வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு சரியான விதத்தில் அனைத்து வேத சாஸ்திரங்களின் சாரத்தைப் புரிய வைக்கின்றேன். முதன்முதலில் முக்கிய விஷயம் நீங்கள் தன்னை ஆத்மா என்று புரிந்து கொண்டு என்னை நினைவு செய்தீர்கள் என்றால், பாவனமாகி விடுவீர்கள். நீங்கள் சகோதர சகோதரர்கள்! பிறகு பிரம்மாவின் குழந்தைகள் குமார், குமாரிகள் சகோதர சகோதரிகள் ஆகி விட்டீர்கள். இது புத்தியில் நினைவிருக்க வேண்டும். உண்மையில் ஆத்மாக்கள் சகோதர சகோதரர் கள் பிறகு சரீரத்தில் வருவதால் சகோதரன் சகோதரியாகி விடுகின்றோம். அந்தளவு புத்திகூட இல்லை புரிந்து கொள்வதற்கு. அவர் ஆத்மாக்களாகிய நமக்கு தந்தை என்றால் நாம் அனைவரும் சகோதரர்கள் ஆகிறோம் இல்லையா?. பிறகு சர்வ வியாபி என்று எப்படிக் கூறுகின்றீர்கள்? ஆஸ்தி குழந்தைகளுக்குத்தான் கிடைக்கும் தந்தைக்குக் கிடைக்காது. பாபாவிடமிருந்து குழந்தைகளுக்குத் தான் ஆஸ்தி கிடைக்கின்றது. பிரம்மா கூட சிவ பாபாவின் குழந்தையல்லவா? இவருக்கும் சிவ பாபாவிடமிருந்துதான் ஆஸ்தி கிடைக்கின்றது. நீங்கள் அனைவரும் பேரக்குழந்தைகள். உங்களுக்கும் உரிமையிருக்கின்றது. ஆத்மா ரூபத்தில் அனைவரும் குழந்தைகள் தான் பிறகு சரீரத்தில் வரும்போது சகோதரன் சகோதரி என்று சொல்கின்றீர்கள். வேறு எந்த உறவும் கிடையாது. சதா சகோதர சகோதரன் என்ற திருஷ்டி மட்டுமே இருக்கவேண்டும், ஆண் பெண் என்ற உணர்வு வெளியேற வேண்டும். ஆண் பெண் இருவருமே கூறுகின்றீர்கள் ஓ! இறை தந்தையே என்று !எனவே சகோதரன் சகோதரியாகி விட்டீர்கள் இல்லையா? எப்பொழுது சங்கம யுகத்தில் பாபா வந்து படைப்புகளை உருவாக்குகின்றாரோ அப்பொழுது நாம் சகோதரன் சகோதரி ஆகின்றோம். ஆனால் ஆண், பெண் என்ற திருஷ்டி விலகுவது மிகக் கடினமாகத்தான் இருக் கின்றது. நீங்கள் ஆத்ம அபிமானியாகுங்கள் என்று பாபா கூறுகின்றார். பாபாவினுடைய குழந்தை யானால் தான் ஆஸ்தி கிடைக்கும். என் ஒருவனை நினைவு செய்தால் பாவனமாகி விடுவீர்கள். சதோபிரதானமாகாமல் நீங்கள் முக்தி ஜீவன்முக்திக்குச் செல்ல முடியாது. இந்த யுக்தியை சன்யாசிகள் முதலியவர்கள் ஒருபோதும் கூற முடியாது. தன்னை ஆத்மா என்று உணர்ந்து என்னை நினைவு செய்யுங்கள் என்று அவர்கள் ஒருபோதும் கூற முடியாது. பாபாவிற்குத்தான் கூறப்படுகின்றது, பரமபிதா பரமாத்மா ! ஆத்மா என்று அனைவரையும் கூறுகின்றோம், ஆனால் அவரை பரமாத்மா என்று கூறுகின்றோம். குழந்தைகளே! நான் வந்திருக்கின்றேன் குழந்தை களிடம் என்று பாபா கூறுகின்றார். எனக்கு பேசுவதற்கு வாய் வேண்டுமல்லவா? தற்சமயம் ஆங்காங்கே கௌமுக் (பசுவின் வாய்) அவசியம் வைத்திருக்கின்றார்கள். பசுவின் வாயிலிருந்து அமிர்தம் வெளிப்படுகின்றது என்று சொல்கின்றார்கள். உண்மையில் அமிர்தம் என்று சொல்லப் படுவது ஞானத்தைத்தான். ஞான அமிர்தம் வாயிலிருந்து வெளிப்படுகின்றது. இதில் தண்ணீருக் கான விஷயம் கிடையாது. இந்த பசு தாயாகவும் இருக்கின்றது. பாபா இவருக்குள் பிரவேசமாகி இருக்கின்றார். பாபா இவர் மூலமாக உங்களை தன்னுடையவர் ஆக்கியிருக்கிறார். இவரிடமிருந்து ஞானம் வெளிப்படுகின்றது. அவர்கள் கல்லால் செய்து அதில் வாயைக் காட்டியிருக்கின்றார்கள். அதிலிருந்து தண்ணீர் வெளிப்படுகிறது. அது பக்தியின் பழக்கம் ஆகிறதல்லவா? உண்மையான விஷயங்களை நீங்கள் தான் தெரிந்துள்ளீர்கள். பீஷ்மர் போன்றோருக்கு குமாரிகள் நீங்கள் தான் ஞான அம்பு போடுகின்றீர்கள். நீங்கள் பிரம்மாகுமார், பிரம்மாகுமாரிகள். அதர்குமார் மேலும் குமாரிகள் இருவருக்கும் கோவில் இருக்கின்றது. நடைமுறையில் உங்களுடைய நினைவுச் சின்னம் கோவில்கள் அல்லவா? இப்பொழுது பாபா வந்து புரிய வைக்கின்றார். எப்பொழுது நீங்கள் பிரம்மா குமார், பிரம்மா குமாரிகள் ஆனீர்களோ அப்போது உங்களிடம் கெட்ட பார்வை இருக்க முடியாது. இல்லையென்றால் கடுமையான தண்டனை கிடைக்கும். தேக அபிமானத்தில் வரும் போது ஆத்மா சகோதர சகோதரன் என்பது மறந்து விடுகின்றது. நானும் பி.கு, இவர்களும் பி.கு. எனவே விகாரத்தின் பார்வை ஏற்பட முடியாது. ஆனால் அசுர சம்பிரதாயத்தில் உள்ள மனிதர்களால் விகாரமில்லாமல் இருக்க முடிவதில்லை. எனவே தடைகளைப் போடுகின்றனர். இப்பொழுது பிரம்மாகுமார் பிரம்மாகுமாரிகளுக்கு பாபாவிடமிருந்து ஆஸ்தி கிடைக்கின்றது. பாபா வினுடைய ஸ்ரீமத்படி நடக்க வேண்டும், தூய்மையாக வேண்டும். இது இந்த விகாரி மரண உலகத்தின் கடைசி ஜென்மம். இது கூட யாருக்கும் தெரியவில்லை. அமரலோகத்தில் விகாரங்கள் இருப்பதில்லை. சதோபிரதான சம்பூர்ண நிர்விகாரிகள் என்று அவர்களுக்குத் தான் கூறப்படு கின்றது. இந்த உலகில் சம்பூர்ண விகாரிகளாக தமோபிரதானமாக உள்ளனர். புகழ் பாடுகின்றார்கள் நீங்கள் சம்பூர்ண நிர்விகாரிகள், நாங்கள் விகாரி, பாவி. சம்பூர்ண நிர்விகாரிகளுக்கு பூஜை செய்கின்றார்கள். பாரதவாசிகள் நீங்கள் பூஜ்ய நிலையில் இருந்து பிறகு பூஜாரி ஆகின்றீர்கள் என்பதை பாபா புரிய வைக்கின்றார். இந்த நேரம் பக்தியின் பிரபாவம் நிறைய இருக்கின்றது. வந்து பக்தியின் பலனைக் கொடு என்று பக்தர்கள் பகவானை நினைவு செய்கின்றார்கள். பக்தி என்ன மாதிரி ஆகிவிட்டது! முக்கியமானது 4 தர்ம சாஸ்திரங்கள் ஆகும். ஒன்று தேவதா தர்மம். இதில் பிராமணன், தேவதை, சத்திரியன் என்ற மூன்று வந்துவிடுகின்றது. பாபா பிராமண தர்மத்தை ஸ்தாபனை செய்கின்றார். பிராமணர்களுடைய உயர்ந்த நிலை சங்கமயுகத்தில் தான். பிராமணர் களாகிய நீங்கள் உயர்ந்த நிலையடைந்து கொண்டிருக்கின்றீர்கள். பிராமணன் ஆகி பிறகு தேவதை ஆகின்றீர்கள். அந்த பிராமணர்கள் விகாரிகளாக இருக்கின்றார்கள். அவர்கள் கூட இந்த பிராமணர் களுக்கு முன்னால் நமஸ்தே சொல்கின்றார்கள். பிராமணன் தேவி தேவதா நமஹ! என்று கூறு கின்றார்கள். பிரம்மாவின் குழந்தைகளாக இருந்தோம் ஆனால் தற்போது பிரம்மாவின் குழந்தை யில்லை என்று புரிந்திருக்கின்றார்கள். இப்பொழுது நீங்கள் பிரம்மாவின் குழந்தைகளாக இருக் கின்றீர்கள். அனைவரும் உங்களுக்கு நமஸ்தே கூறுகின்றார்கள். நீங்கள் இப்போது தேவி தேவதை யாக ஆகின்றீர்கள். இப்பொழுது பிரம்மாகுமார், குமாரிகள் ஆகியிருக்கின்றீர்கள் பிறகு தெய்வீக குமார் குமாரிகள் ஆகிவிடுவீர்கள். அந்த நேரம் உங்களுடைய இந்த வாழ்க்கை மிகவும் மதிப் பானது என்று புகழ் பாடப்பட்டுள்ளது ஏனென்றால், ஜெகத் மாதா என்று புகழப்படுகின்றீர்கள். நீங்கள் எல்லைக்குட்பட்டதிலிருந்து எல்லைகப் பாற்பட்டதிற்கு வந்திருக்கின்றீர்கள். நாம் தான் இந்த உலகிற்கு நன்மை செய்யக்கூடியவர்கள் என்பது நமக்குத் தெரியும். எனவே ஒவ்வொரு வரும் ஜெகதம்மா ஜெகத்பிதா ஆகிவிட்டீர்கள். இந்த உலகத்தில் மனிதர்கள் மிகவும் துக்கத்தில் இருக்கின்றார்கள். அவர்களுக்கு சேவை செய்வதற்காக வந்திருக்கின்றோம். அவர்களை நாம் சொர்க்கவாசி ஆக்கியே தீருவோம். நீங்கள் சேனைகள் இதனை யுத்த ஸ்தலம் என்று கூட சொல்லப்படுகின்றது. யாதவர்கள், கௌரவர்கள், பாண்டவர்கள் மூவரும் சேர்ந்து இருக்கின்றார்கள். சகோதர சகோதரர்கள் அல்லவா? இப்போது யுத்தம் சகோதர சகோதரியிடம் இல்லை. உங்களுடைய யுத்தம் இராவணனுடன். மனிதனிலிருந்து தேவதையாக்குவதற்கு நீங்கள் சகோதர சகோதரிகளுக்குப் புரியவைக்கின்றீர்கள். தேகம் தேக சம்பந்தங்களை விட வேண்டும் என்று பாபா புரிய வைக்கின்றார். இது பழைய உலகமாக இருக்கின்றது. இதில் பெரிய அணைக்கட்டுகள், கால்வாய்கள் கட்டுகின்றார்கள். ஏனென்றால் தண்ணீர் இல்லை. பிரஜைகள் அதிகமாகிவிட்டனர். அங்கு நீங்கள் குறைவானவர்கள் தான் இருப்பீர்கள். நதிகளில் தண்ணீர் நிறைய இருக்கும், தானியங்கள் நிறைய இருக்கும். இங்கு இந்த பூமியில் கோடிக்கணக்கான மனிதர்கள் இருக் கின்றார்கள். அங்கு முழு பூமியிலுமே 9, 10 இலட்சம் பேர்கள்தான் இருப்பார்கள். வேறு எந்த கண்டமும் இருக்காது. நீங்கள் குறைவானவர் தான் அங்கு இருப்பீர்கள். நீங்கள் அங்கு எங்கும் செல்ல வேண்டிய அவசியமிருக்காது. எப்போதுமே வசந்தகாலம். 5 தத்துவங்கள் கூட எதுவும் கஷ்டம் கொடுக்காது. கட்டளையின் கீழ் இருக்கும். இப்பொழுது நரகமாக இருக்கின்றது. இது இடையில் தான் ஆரம்பம் ஆகின்றது. தேவதைகள் விகார மார்க்கத்திற்கு வந்த பிறகுதான் இராவண இராஜ்யம் ஆரம்பமாகின்றது. நாம் புரிந்திருக்கின்றோம் நாம் தான் இரட்டை கிரீடம் அணிந்த பூஜ்ய நிலையடைகின்றோம், பிறகு ஒரு கிரீடம் அணிந்தவராகின்றோம். சத்தியுகத்தில் பவித்திரத்தாவின் அடையாளம் இருக்கின்றது. தேவதைகள் என்றாலே அனைவரும் பவித்திர மானவர்கள். இங்கு பவித்திரமானவர்கள் யாருமே இல்லை. பிறப்பைக் கூட விகாரத்தின் மூலம் தான் எடுக்கின்றார்கள். எனவே இதனை கீழான உலகம் என்று சொல்லப்படுகின்றது. சத்யுகம் மிக உயர்ந்தது. விகாரத்தைத்தான் கீழான நடத்தை என்று சொல்லப்படுகின்றது. சத்தியயுகத்தில் தூய்மையான இல்லற மார்க்கம் இருந்தது, இப்பொழுது அசுத்தமாகிவிட்டது. இப்பொழுது மீண்டும் தூய்மையான உயர்ந்த உலகம் உருவாகிக்கொண்டிருக்கின்றது. உலகச் சக்கரம் சுழலுகின்ற தல்லவா? பரம்பிதா பரமாத்மாவைத் தான் பதீத பாவனன் என்று சொல்லப்படுகின்றது. பகவான் தூண்டுதல் தருகின்றார் என்று மனிதர்கள் நினைக்கின்றார்கள். இப்போது தூண்டுதல் என்றால் சிந்தனை, இதில் தூண்டுதலுக்கான விஷயம் எதுவுமில்லை. நான் சரீரத்தை ஆதாரமாக எடுக்க வேண்டியுள்ளது என்று அவரே கூறுகின்றார். நான் வாயில்லாமல் எப்படி உங்களுக்கு அறிவுரை கூறுவேன்? தூண்டுதல் மூலம் ஏதாவது அறிவுரை கூற முடியுமா? பகவான் பிரேரணை மூலம் எதுவும் செய்வதில்லை. பாபா குழந்தைகளுக்கு கல்வி கற்றுத் தருகின்றார். பிரேரணை மூலம் கல்வி கற்று தர முடியுமா என்ன? உலகத்தின் ஆதி, மத்ய,. இறுதியின் இரகசியத்தை பாபாவைத் தவிர வேறு யாரும் கூற முடியாது. பாபாவையே தெரிந்துக்கொள்ளவில்லை. சிலர் அகண்ட ஜோதி என்றும் சிலர் லிங்கம் என்றும் கூறுகின்றார்கள். பிரம்மத்தையே சிலர் ஈஸ்வரன் என்று கூறுகின்றார்கள். தத்துவ ஞானிகள் பிரம்ம ஞானிகள் கூட இருக்கின்றார்கள் அல்லவா? சாஸ்திரங்களில் 84 இலட்ச ஜன்மம் என்று. காட்டப்பட்டுள்ளது. பாபா சொல்கின்றார், முழு உலக சக்கரமே 5 ஆயிரம் ஆண்டுகள்தான். 84 லட்ச ஜென்மம் என்றால் அவ்வளவு நேரம் வேண்டு மல்லவா? அந்த சாஸ்திரங்கள் அனைத்தும் பக்தி மார்க்கம். பாபா கூறுகின்றார் நான் வந்து அனைத்து வேத சாஸ்திரத்தின் சாரத்தைப் புரிய வைக்கின்றேன். இவையனைத்தும் பக்தியின் பழக்கவழக்கங்கள், இதனால் என்னை யாரும் அடைய முடியாது. நான் எப்போது வருகின்றோனோ அப்போது அனைவரையும் அழைத்துச் செல்கின்றேன். ஹே! பதீத பாவனா வாருங்கள் ! என்று என்னைத் தான் அழைத்தீர்கள். பாவனமாக்கி எங்களை பாவனமான உலகிற்கு அழைத்துச் செல்லுங்கள் ! பிறகு ஏன் தேடுவதற்காக அலைகின்றீர்கள்? எவ்வளவு தொலைதூரமான மலைகளுக்கெல்லாம் செல்கின்றீர்கள். தற்சமயம் எவ்வளவு கோவில்கள் காலியாக உள்ளது! ஒருவருமே செல்வதில்லை. இப்பொழுது குழந்தைகள் உயர்ந்த பாபாவினுடைய வாழ்க்கை வரலாற்றினைத் தெரிந்து கொண்டீர்கள். தந்தை குழந்தைகளுக்கு அனைத்தையும் கொடுத்துவிட்டு 60 வயதிற்குப் பிறகு வானப்பிரஸ்தத்தில் அமர்ந்து விடுகின்றார். இந்தப் பழக்கம் இப்பொழுதினுடையது. திருவிழாக்கள் அனைத்தும் இந்த சமயத்திற்கானது தான்.

இப்போது நாம் சங்கமயுகத்தில் இருக்கின்றோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இரவுக்குப் பிறகு பகல் வரும். இப்பொழுது ஆழ்ந்த இருளாக இருக்கின்றது. ஞான சூரியன் உதித்தார்.. என்ற புகழ் கூட பாடுகின்றார்கள். நீங்கள் பாபாவை மற்றும் படைப்பினுடைய ஆதி, மத்ய, அந்திமத்தை இப்போது தெரிந்திருக்கின்றீர்கள். எப்படி பாபா ஞானம் நிறைந்தவராக உள்ளாரோ அப்படி நீங்களும் மாஸ்டர் ஞானம் நிறைந்தவர் ஆகிவிட்டீர்கள். எல்லையற்ற சுகத்தின் ஆஸ்தி பாபாவிடமிருந்து குழந்தைகளாகிய உங்களுக்குக் கிடைக்கின்றது. லௌகீக தந்தையிடமிருந்து எல்லைக்குட்பட்ட ஆஸ்தி கிடைக்கின்றது. இதனால் எல்லைகுட்பட்ட சுகம் கிடைக்கின்றது. இதனை சன்யாசிகள் காக்கையின் உமிழ் நீருக்குச் சமமான சுகம் என்று சொல்கின்றார்கள். அவர்கள் இங்கு வந்து சுகம் அடைவதற்கான முயற்சி செய்ய முடியாது. அவர்கள் ஹடயோகிகள், நீங்கள் இராஜயோகிகள். உங்களுடைய யோகம் பாபாவுடன், அவர்களுடைய யோகம் தத்துவங்களுடன் ! இதுவும் கூட நாடகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நல்லது.

இனிமையிலும் இனிமையான, தேடிக்கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. பாவனமாவதற்காக நான் ஆத்மா சகோதரன், சகோதரன் பிறகு பிரம்மா பாபாவினுடைய குழந்தை சகோதரன் சகோதரி, இந்த பார்வையை உறுதி செய்யவும். ஆத்மா சரீரம் இரண்டையும் பாவனமான சதோபிரதானமாக்க வேண்டும். தேக அபிமானத்தை விட்டுவிடுங்கள்.

2. மாஸ்டர் ஞானம் நிறைந்தவராகி, அனைவருக்கும் படைப்பவர் மற்றும் படைப்பினுடைய ஞானத்தைக் கூறி, அனைவரையும் ஆழ்ந்த இருளிலிருந்து வெளியேற்றுங்கள். நரகவாசி மனிதர்களுக்கு ஆன்மீக சேவை செய்து சொர்க்கவாசியாக்குங்கள்.

வரதானம்:
மாஸ்டர் ஞானக்கடல் ஆகி ஞானத்தின் ஆழத்தில் சென்று விடக்கூடிய அனுபவம் என்ற இரத்தினங்களில் நிறைந்தவர் ஆவீர்களாக.

எந்த குழந்தைகள் ஞானத்தின் ஆழத்தில் செல்கிறார்களோ அவர்கள் அனுபவம் என்ற இரத்தினங்களில் நிறைந்தவர்களாக ஆகி விடுகிறார்கள். ஒன்று ஞானத்தை கேட்பது இரண்டாவது அனுபவங்களின் வடிவம் ஆவது. அனுபவம் உடையவர்கள் எப்பொழுதும் நிலையானவர்களாக மற்றும் தடையற்றவர்களாக இருப்பார்கள். அவர்களை யாரும் அசைத்து விட முடியாது. அனுபவம் உடையவர்களுக்கு முன்னால் மாயையின் எந்த ஒரு முயற்சியும் வெற்றி அடைவதி ல்லை. அனுபவம் உடையவர்கள் ஒரு பொழுதும் ஏமாற்றம் அடைய முடியாது. எனவே அனுபவங்களை அதிகரித்தபடியே ஒவ்வொரு குணத்தின் அனுபவம் உடைய மூர்த்தி ஆகுங்கள். மனனம் (சிந்தனை) செய்யும் ஆற்றல் மூலமாக தூய எண்ணங்களின் இருப்பை சேமிப்பு செய்யுங்கள்.

சுலோகன்:
யார் தேகத்தின் சூட்சும அபிமானத்தின் சம்பந்தத்திலிருந்தும் விலகி இருக்கிறார்களோ அவர்களே ஃபரிஷ்தா ஆவார்கள்.

அவ்யக்த சமிக்ஞை : சத்தியம் மற்றும் பண்பாடு என்ற கலாச்சாரத்தை கடைபிடியுங்கள்.

முழுமையான சத்தியம் கூட தூய்மையின் ஆதாரத்தில் ஏற்படுகிறது. தூய்மை இல்லையென்றால் எப்பொழுதும் சத்தியமான தன்மை இருக்க முடியாது. காம விகாரம் மட்டுமே தூய்மையற்ற தன்மை கிடையாது. ஆனால் அதன்கூட மற்ற துணையாளர்களும் இருக்கிறார்கள். எனவே மகான் தூய்மை என்றால் அபவித்திரத்தாவின் பெயர் அடையாளம் கூட இருக்கக் கூடாது. அப்பொழுது பரமாத்மாவின் வெளிப்பாட்டிற்கு கருவியாக ஆக முடிந்தவர்களாக இருப்பீர்கள்