18-05-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! நாம் ஈஸ்வரிய
குடும்பத்தினர் - நாம் நமது மறைமுகமான தெய்வீக இராஜாங்கத்தை
ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம் என்ற இதே ஆன்மீக போதையில்
இருங்கள்.
கேள்வி:
குழந்தைகளிடம் எந்த ஒரு பழக்கம்
உறுதியாக இருந்தது என்றால் நாள் முழுவதும் குஷி
நிறைந்திருக்கும்?
பதில்:
அதிகாலை எழுந்து ஞான மனனம்
செய்யும் பழக்கம் இருந்தது என்றால், நாள் முழுவதும் அளவற்ற குஷி
இருக்கும். குழந்தைகளே ! அமிர்த வேளை எழுந்து தங்களது
தந்தையிடம் இனிமையாக உரையாடுங்கள் என்பது தந்தையின் ஸ்ரீமத்
ஆகும். நாம் இப்பொழுது எந்த குடும்பத் தினர்?. நமது கடமை என்ன?
என்று சிந்தனை செய்யுங்கள் இது நம்முடைய ஈசுவரிய குடும்பம்
ஆகும். நாம் நமது புதிய இராஜாங் கத்தை ஸ்தாபனை செய்து
கொண்டிருக்கிறோம் என்பது புத்தியில் இருந்தது என்றால், நாள்
முழுவதும் குஷி அமைந்து இருக்கும்.
ஓம் சாந்தி.
இது ஆன்மீக குடும்பமாகும் என்பதை குழந்தைகள் அறிந்துள்ளார்கள்.
அவை எல்லாமே ஸ்தூல குடும்பமாகும். இது ஆன்மீக குடும்பமாகும்.
இது ஆன்மீக தந்தையின் குடும்ப மாகும். எப்படி லௌகீக வீட்டில்
தாய், தந்தை, குழந்தைகள் இருப்பார்கள். அது எல்லைக்குட்பட்ட
குடும்பமாகும். நீங்கள் இப்பொழுது எல்லையில்லாத குடும்பத்தினர்
ஆவீர்கள். தந்தையும் நீயே ! தாயும் நீயே ! என்று குழந்தைகள்
பாடவும் செய் கிறார்கள். எனவே இது குடும்பம் போல ஆகிறது.
படைப்பவரின் படைப்பு ஆகிறது. பார்க்கப் போனால் குழந்தைகள்
அனைவரும் அவருடைய படைப்பாகும். ஆனால் அறியாமல் உள்ளார்கள்.
குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிந்துள்ளீர்கள். உண்மையில்
இது எல்லையில்லாத தந்தையின் குடும்பமாகும். ஈஸ்வரிய விஷ்வ
வித்தியாலயம். இவர்களுக்காக விநாச காலத்தில் அன்பான புத்தி
உடையவர் களே வெற்றி அடைவோர்! என்று பாடப்படுகிறது.
இப்பேர்ப்பட்ட குடும்பம் ஒரு பொழுதும் கீதையில் பாடப்படவில்லை.
ஈஸ்வரிய குடும்பமான நீங்கள் மறைமுகமான தெய்வீக அரசாட்சியை
ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறீர்கள். யாருக்குமே தெரிவதில்லை.
உங்களுக்கு போதை இருக்கிறது. யாரெல்லாம் தந்தையை நினைவு
செய்வார்களோ அவர்களுக்கு போதை இருக்கும். தேக அபிமானத்தில்
வருவதால் அந்த போதை இறங்கிப் போய் விடும். இது ஈஸ்வரிய
குடும்பமாகும். நாம் வீட்டிற்குச் செல்ல வேண்டும். பிறகு
தெய்வீக இராஜாங்கத்தில் வருவோம். அங்கு இருப்பது தெய்வீக
குடும்பம். க-யுகத்தில் அசுர குடும்பம். இது உங்களுடையது
ஈசுவரிய குடும்பமாகும். ஆன்மீகத் தந்தையின் குழந்தைகள் சகோதர
சகோதரிகள் ஆவார்கள். அவ்வளவே! இது ஆன்மீக இல்லற மார்க்கம் ஆகும்.
சத்யுகத் தில் ஈஸ்வரிய குடும்பம் என்று கூற மாட்டார்கள். அங்கு
தெய்வீக குடும்பம் ஆகி விடுகிறது. இந்த ஈஸ்வரிய குடும்பம்
மிகவும் சக்தி வாய்ந்தது. இப்பொழுது ஈஸ்வரிய குடும்பமாகிய நாம்
தெய்வீக இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம் என்பதை
நீங்கள் அறிந்துள்ளீர்கள். இவ்வாறு நமக்குள் நாமே உரையாடிய ஞான
மனனம் செய்ய வேண்டும். அதிகாலை எழுந்து நினைவில் அமர்ந்தீர்கள்
என்றால், ஞான மனனம் செய்யும் பழக்கம் ஏற்பட்டு விடும்.
ஊக்கமுடையவர்களாக ஆகிக் கொண்டே செல்வீர்கள். பிற அனைத்து எல்ல
மனிதர்களும் உறக்கத்தில் உறங்கி இருக்கும் அந்த நேரத்தில்
நீங்கள் விழிக்கிறீர்கள். நீங்கள் அதிகாலை எழுந்து இது போல
சிந்தனை செய்ய வேண்டும். அப்பொழுது பாருங்கள் உங்களுக்கு
எவ்வளவு குஷி இருக்கும். என்ன ஸ்ரீமத் கிடைக்கிறதோ அதன்படி
நடக்க வேண்டும். அப்பொழுது உங்களுக்கு மிகுந்த குஷி ஏற்படும்.
ஈஸ்வரிய குடும்பத்தின் நினைவு வரும். அசுர குடும்பத்திலிருந்து
மனம் அகன்று விடும். புதிய வீடு முற்றிலுமே தயாராகி விடும்
பொழுது பழையதின் மீதுள்ள பற்று நீங்கி விடுகிறது. புதியது
அமையாதவரை கொஞ்ச நஞ்சம் மராமத்து ஆகியவை செய்து கொண்டே
இருப்பார்கள். பிறகு மனம் அகன்று விடுகிறது. இந்த பழைய உலகம்
கூட அவ்வாறே ஆகும்.
இது பழைய வீடு ஆகும். நாம் புதிய வீட்டிற்கு செல்வோம் என்பதை
இப்பொழுது நீங்கள் அறிந்துள்ளீர்கள். பிறகு புதிய ஆடை அணிவோம்.
இந்த தேகம் கூட பழையதாகும். இப்பொழுது நீங்கள் வருங்கால 21
பிறவி களுக்கான இராஜ்ய பாக்கியத்தை எடுத்துக்
கொண்டிருக்கிறீர்கள். இங்கு ஆட்சி புரியப் போவதில்லை. இங்கு
ஸ்தாபனை ஆகிறது. இந்த விஷயங்களை நீங்கள் மட்டுமே
அறிந்துள்ளீர்கள். இது தான் கீதையாகும். இராஜயோகம் ஆகும் அல்லவா?
இதற்கு சகஜ இராஜயோகம் என்று கூறப்படுகிறது. அநேக முறை நீங்கள்
இந்த இராஜயோக அப்பியாசத்தின் மூலம் தெய்வீக ராஜ்யத்தை ஸ்தாபனை
செய்கிறீர்கள். அங்கு இந்த விஷயங்கள் நினைவில் இருக்காது.
ஒருவேளை அங்கு இந்த விஷயங்கள் நினைவு இருந்தது என்றால்,
சுகத்தின் உணர்வே இல்லாமல் போய் விடும். கவலை ஏற்பட்டு விடும்.
இச்சமயத்தில் உங்களுக்கு மறைமுகமான போதை உள்ளது. இது
உயர்ந்ததிலும் உயர்ந்த பாபாவின் குடும்பமாகும். இதற்கு ஈஸ்வரிய
(குப்தமான ஃபேமிலி டைப்) மறைமுக குடும்ப முறை என்று
கூறப்படுகிறது. ஈஸ்வரிய விஷ்வ வித்தியாலயம். ஈஸ்வரிய யக்ஞம்
என்றும் கூறுவார்கள். குடும்பம் ஆகும். நாம் மிகவும் அன்பானவர்
ஆக வேண்டும். வருங்காலத்தில் நீங்கள் மிகவுமே அன்பானவர்
ஆகிறீர்கள். நீங்கள் ரூப் பஸந்த் (ஞான யோகமுடையவர்) ஆவீர்கள்.
ஆத்மா ரூப் ஆக (ஞானம் நிறைந்து) இருக்கிறது. பஸந்த் (நடைமுறை
யோக வாழ்வு) இருக்கிறது. இவ்வளவு சிறிய ஆத்மா, அழிவற்ற பாகத்தை
ஏற்று நடிக்கிறது. இச்சமயத்தில் நீங்கள் ரூப் பஸந்த் ஆக
உள்ளீர்கள். தந்தை ஞானக் கடல் ஆவார். இந்த சரீரத்தில் வரும்
பொழுது தான் ஞானத்தை அவசியம் அளிப்பார். ஞான மழை பொழிகிறார்
என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். ஒவ்வொரு ஞான ரத்தினமும்
லட்சம் ரூபாய் மதிப்பு வாய்ந்தது. இப்பொழுது ஆத்மாக் களாகிய
உங்களுக்கு தந்தையின் அறிமுகம் கிடைத்துள்ளது. தந்தை நினைவூட்டி
உள்ளார். இந்த 84ன் சக்கரம் எப்படி சுற்றுகிறது என்பது உங்களது
புத்தியில் உள்ளது. எனவே உங்கள் பெயரே சுயதரிசன சக்கரதாரி
என்பதாகும். விஷ்ணு அல்லது இலட்சுமி நாராயணர் சுயதரிசன
சக்கரதாரியாக இருக்கவில்லை. அவர்களுக்குள் இந்த ஞானம்
இருப்பதில்லை. இப்பொழுது ஆத்மாவிற்கு இந்த ஞானம் கிடைக்கிறது.
சிருஷ்டியின் (உலகப் படைப்பு) சக்கரம் எப்படி சுற்றுகிறது. திரி
மூர்த்தி என்று கூறுகிறார்கள் என்றாலும் கூட சிவனை
காண்பிப்பதில்லை. திரிமூர்த்தியின் படங்கள் நிறைய
பார்த்திருக்கக் கூடும். அதில் கூட பெரும்பாலும் பிரம்மாவிற்கு
சூட்சம வதனத்தில் தாடி, மீசை ஆகியவை இருப்பதில்லை. இதை
பிரம்மாவிற்கு மட்டும் காண்பிக்கிறார்கள். பிரஜா பிதாவோ இங்கு
இருக்கிறார் அல்லவா? இவர் மிகவும் பழைய கிரேட் கிரேட் கிராண்டு
ஃபாதர் ஆகி விடுகிறார். எனவே இது பிரஜாபிதா பிரம்மாவின் பரம்பரை
ஆகிறது. தந்தை பிரம்மா மூலமாக சிருஷ்டியைப் படைக்கிறார். எனவே
பிரம்மா பெரியவர் ஆகிறார் அல்லவா? காண்பிப்பதும் வயோதிகராக.
இவர் 84 பிறவிகளின் சக்கரம் சுற்றி வந்துள்ளார். இப்பொழுது
நீங்கள் இந்த விஷயங்களைப் புரிந்து கொண்டுள்ளீர்கள். தந்தைக்கோ
எல்லோருமே குழந்தைகள் ஆவார்கள் என்பதையும் அறிந்துள்ளீர்கள்.
ஆத்மாக் களுக்கு தந்தையின் அறிமுகத்தை அளிக்க வேண்டும்.
இப்பொழுது பாரதத்திற்கு மிகவும் உயர்ந்த நன்மை ஆகிக்
கொண்டிருக்கிறது. அனைத்து ஆத்மாக்களும் தூய்மையாக ஆகி முக்தி
தாமத்திற்குச் சென்று விடுவார்கள். நீங்கள் இருப்பதே பாரதத்தின்
சேவைக்காக. குறிப்பாக பாரதம் பொதுவாக உலகம். இந்த விஷயங்களை
அறிந்துள்ள நீங்கள் இப்பொழுது குறைந்த அளவில் இருக்கிறீர்கள்.
பிறகு சுருக்கமாக குழந்தைகளே மன்மனா பவ என்று புரிய
வைக்கப்படுகிறது. காந்தி பாபுஜி என்ன செய்து கொண்டிருந்தார்.
அவர் கூட இராம இராஜ்யத்தை விரும்பிக் கொண்டிருந்தார்.
எப்பேர்ப்பட்ட அதிசயமான நாடகமாகும் அல்லவா? இப்பொழுது நீங்கள்
சாட்சி யாகி விளையாட்டைப் பார்க்கிறீர்கள். உங்களுக்கு சிரிப்பு
வருகிறது. எங்கே இருக்கும் விஷயங் களை எங்கே எடுத்துச்
செல்கிறார்கள்.
நாடகத்திற்கேற்ப உலகத்தின் நிலைமை கெட்டதாக ஆகி விட்டுள்ளது
என்று தந்தை கூறுகிறார். பின் தந்தை வந்து சத்கதி செய்கிறார்.
குழந்தைகளாகிய உங்களுக்கு போதை ஏறியுள்ளது. இவர் முழு
உலகத்திற்கான நிராகார தந்தை. இந்த பிரம்மா கூட யாருடைய குழந்தை
ஆவார். சிவபாபா வினுடைய குழந்தை ஆவார். அவர் யாருடைய குழந்தை?
இந்த தாய்மார்கள் சிவபாபா எங்களுடைய குழந்தை ஆவார் என்று
கூறுகிறார்கள். இது சிவபாபாவின் லீலை ஆகும். மற்றபடி
சாட்சாத்காரம் - காட்சிகள் ஆகியவற்றிலோ மாயையின் பிரவேசம்
நிறைய ஆகிறது. எங்களுக்குள் சிவபாபா வருகிறார். சிவபாபா இதைக்
கூறுகிறார் என்று கூறுகிறார்கள். இவை எல்லாமே பூதங்களின்
பிரவேசம் ஆகும். குழந்தைகளாகிய நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க
வேண்டும். இந்த பூதங்களின் வியாதி எப்பேர்ப்பட்டது என்றால்,
இரண்டு உலகங்களிலிருந்தும் இல்லாமல் செய்து விடுகிறது. நாம்
சாட்சாத்காரம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஒரு பொழுதும் வரக்
கூடாது. இவை எல்லாமே பக்தியின் சிந்தனை ஆகும். ஞான மார்க்கத்தை
நல்ல முறையில் புரிந்து கொள்ள வேண்டும். மாயை அநேக விதமாக
ஏமாற்றுகிறது. சாட்சாத்காரம் ஆகியவற்றால் எந்த நன்மையும்
கிடையாது. இவர் மூலமாக நிச்சயதார்த்தம் செய்விக்கிறார் என்று
தந்தை கூறுகிறார். தந்தையின் கட்டளை, நீங்கள் எந்த ஒரு
தேகதாரியையும் நினைவு செய்யக் கூடாது. நீங்கள் உங்களை ஆத்மா
என்று உணர்ந்து தந்தையை நினைவு செய்யுங்கள் ! தங்களது
நன்மைக்காக தந்தையை நினைவு செய்ய வேண்டும். இதுவோ மிகவும்
புரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும். பாபாவிற்கு எந்த ஒரு
சமாச்சாரம் கூட எழுதலாம். எல்லையில்லாத தந்தைக்கு கடிதத்தில்
தங்களுடைய க்ஷேம நலத்தின் சமாச்சாரம் எழுதலாம் என்ற அந்த
அளவுக்கு கூட அறிவு ஒரு சில குழந்தைகளிடம் இல்லை. லௌகீக
தந்தைக்கு கடிதம் எழுதவில்லை என்றால் நிம்மதியே கெட்டு
விடுகிறது. இவரும் எல்லை யில்லாத தந்தை ஆவார். ஒரு மாதம் கடிதம்
வர வில்லை என்பதை பார்க்கும் பொழுது, இப்பேர்ப்பட்ட பரலோக
தந்தைக்குக் கடிதம் கூட எழுதாத வகையில் மாயை ஒரு வேளை
சாப்பிட்டு விட்டது போலும் என்று நினைக்கிறார். பாபா நாங்கள்
நாராயணி போதையில் இருக்கிறோம் என்று இவ்வளவாவது எழுத வேண்டும்
அல்லவா? உங்களால் அளிக்கப்பட்ட யுக்தியிலேயே (வழிமுறைகள்)
நாங்கள் மும்முரமாக இருக்கிறோம். பின் பாபா கூட குழந்தை நலமாக
உள்ளது என்று புரிந்து கொள்வார். கடிதம் எழுதவில்லை என்றால்,
நோய்வாய்ப்பட்டிருக்கிறார் என்று நினைப்பார். நினைவிலேயே
இருப்பதில்லை. இல்லை யென்றால் பாபா நாங்கள் இந்த சேவை
செய்துள்ளோம். இவர்களுக்குப் புரிய வைத்தோம். இவர் களுடைய
புத்தியில் முழுமையாக பதியவில்லை என்று பாபாவிற்கு சமாச்சாரம்
கொடுக்க வேண்டும். பின் இவரும் இந்த முறையில் புரிய வையுங்கள்
என்று உங்களுக்கு புரிய வைப்பார்.
குழந்தைகள் பாட்டு கேட்டீர்கள். யார் பாட்டை உருவாக்கினார்களோ
அவர்கள் இந்த பாடலின் பொருளை புரியாமல் உள்ளார்கள். அவை எல்லாமே
பக்தி மார்க்கமாகும். எதெல்லாம் கூறுகிறார் களோ ஒன்றுமே
புரியாமல் உள்ளார்கள். முக்கியமான விஷயம் - தந்தையையே அறியாமல்
உள்ளார்கள். தந்தையை அறிந்து கொள்வதால் பாரதம் சத்கதியை
அடைகிறது. தந்தையை அறியாத காரணத்தால் பாரதம் முற்றிலுமே
துர்க்கதியை அடைந்து விடுகிறது. இப்பொழுது தந்தை குழந்தைகளாகிய
உங்களுக்குப் புரிய வைக்கிறார் - நான் உங்களை சத்கதிக்கு
அழைத்துச் செல்வேன். மற்ற அனைவரையும் முக்தியில் அழைத்துச்
செல்வேன். பாரதம் ஜீவன் முக்தியில் இருக்கும் பொழுது மற்ற
எல்லோரும் முக்தியில் இருப்பார்கள். இந்த மாற்றத்தை தந்தையைத்
தவிர வேறு யாரும் செய்ய முடியாது. அனைவருக்கும் சத்கதி
அளிக்கும் வள்ளல் ஒரே ஒரு தந்தை ஆவார். அனைவருக்கும்
சத்கதிஅவசியம் கல்ப கல்பமாக சங்கமத்தில் தான் ஏற்படும்.
ஆத்மாக்களாகிய நமது ஆன்மீகதத் தந்தை ஒரே ஒருவர் என்பதை நீங்கள்
அறிந்துள்ளீர்கள். அவரை ஆத்மா தான் நினைவு செய்கிறது.
உங்களுக்கு பத்தி மார்க்கத்தில் இரண்டு தந்தையர் இருக்கிறார்கள்.
சத்யுகத்தில் இருப்பது ஒரு தந்தை. சங்கமத்தில் 3 தந்தையர்
ஆவார்கள். பிரஜாபிதா பிரம்மா கூட தந்தை ஆகிறார் அல்லவா? சிவன்
கூட பாபா ஆவார். அவர் அனைத்து ஆத்மாக்களின் தந்தை ஆவார்.
அவரிடமிருந்து தான் ஆஸ்தி பெற வேண்டி உள்ளது. அவரை நினைவு
செய்வதால் தான் விகர்மங்கள் விநாசம் ஆகும். பிரம்மாவை நினைவு
செய்வதால் விகர்மங்கள் விநாசம் ஆகாது. எனவே சிவபாபாவை தான்
நினைவு செய்ய வேண்டும். நாம் அவருடையவராக ஆகியுள்ளோம். இது
ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளின் பொருட்டு அளிக்கும்
உண்மையிலும் உண்மையான சத்தியமான ஞானம் ஆகும். மற்றவர்கள்
எல்லோருமே தேக அபிமானி ஆவார்கள். தேக அபிமானி பதீதமான மனிதர்கள்,
பதீதமான காரியங்களைத் தான் செய்வார்கள். தான புண்ணியம் போன்ற
என்னவெல்லாம் காரியங்களைச் செய்கிறார்களோ அவை அனைத்தும்
பதீதர்கள் தான் செய்கிறார்கள். இராவண இராஜ்யத்தில் இதெல்லாம்
நடக்கும் தான். இப்பொழுது தந்தை வந்து சட்டத்தை பிறப்பிக்கிறார்.
கூறுகிறார் - குழந்தைகளே ! ஜாக்கிரதை, விகாரத்தில்
செல்லாதீர்கள். காமத்தின் மீது வெற்றி அடைய வேண்டும். புயல்கள்
ஆகியவையோ நிறைய வரும். இதில் மனமுடைந்து போகக் கூடாது. மாயை
யினுடைய எத்தனை விகல்பங்கள் வரும் என்றால், அஞ்ஞான காலத்தில்
கூட அவ்வளவு வந்திருக்காது. அப்படி கூட தீய எண்ணங் கள் (விகல்பங்கள்)
வருகின்றன. கூறுகிறார்கள் - பக்தி மார்க்கத்திலோ மிகவும் குஷி
இருந்தது. இப்பொழுது உங்களை நினைவு செய்ய விரும்புகிறோம். ஆனால்
செய்ய முடிவதில்லை. பிந்து (புள்ளி) நினைவிற்கு வருவ தில்லை.
பெரிய பொருளாக இருந்தால் நினைவு செய்யலாம்.
நீங்கள் சிவபாபா என்று கூறி நினைவு செய்யுங்கள் என்று பாபா
கூறுகிறார். இந்த பழைய உலகத்தை மறந்து விடுங்கள். நீங்கள்
சாந்தி தாமத்தை நினைவு செய்யுங்கள். சாந்தி தாமத்தை மட்டும்
நினைவு செய்வதல்ல. தந்தையின் நினைவினால் தான் விகர்மங்கள்
விநாசம் ஆகும். ஆத்மாவிற்கு இனிமையான தந்தை மீது அன்பு வேண்டும்.
அவர் அரைக்கல்பத்தின் பிரியதரிசனர் (பிடித்தமானவர்) ஆவார்.
நாங்கள் அரைகல்பம் உங்களை மறந்து விட்டோம் என்று ஆத்மா
கூறுகிறது. இங்கு பிராமணிகள் யாரையெல்லாம் அழைத்து வருகிறார்களோ,
மிகவும் எச்சரிக்கை யுடன் நிச்சயபுத்தி உடையவர்களையே அழைத்து
வர வேண்டும். இங்கு வந்து விட்டு பிறகு போய் யாராவது பதீதமாக
ஆனார்கள் என்றால், பிராமணி மீது தண்டனை ஏற்பட்டு விடும். எனவே
பிராமணி மீது மிகவுமே பொறுப்பு உள்ளது. பாபா இந்த ரதத்தை
எடுத்துள்ளார். அனைத்து விஷயங் களிலும் அனுபவம் உடையவர் ஆவார்.
இங்கோ அசுத்தத்தின் விஷயம் கிடையாது. தங்களுக்குள் சிரிப்பது,
விளையாடுவது உரையாடுவது - இவற்றிற்கு எந்தத் தடையும் இல்லை.
மற்றபடி சிறிதளவு கூட ஏதாவதொரு ஆத்மா மீது அன்பு வைத்தீர்கள்
என்றால், அது அதிகரித்துக் கொண்டே போகும். அவருடைய நினைவு வந்து
கொண்டே இருக்கும். எனவே இதையும் கடந்து செல்ல வேண்டும்.
இப்பொழுது நீங்கள் வீட்டில் அமர்ந்துள்ளீர்களா இல்லை
சத்யுகத்தில் அமர்ந்திருக்கிறீர்களா (வீட்டில்) தந்தை
குழந்தைகளுக்கு வீட்டில் தான் கற்பிக்கிறார். உங்கள்
அனைவருக்கும் இது வீடாகும். வெளியில் செல்கிறீர்கள் என்றால்
இப்படி கூற மாட்டார்கள். இங்கு மிகவும் நல்ல போதை இருக்கும்.
தேகத்தின் அபிமானத்தை விட வேண்டும். ஆத்ம அபிமானி ஆனீர்கள்
என்றால் சாதி மதங்களின் வேற்றுமைகள் எல்லாம் நீங்கிப் போய்
விடும். பழைய உலகம் தமோபிரதான மானமாகும். அதில் கருத்து
வேற்றுமைகள் இன்னுமே அதிகரித்துக் கொண்டு போகிறது. இதற்கு
முன்பு ஆங்கிலேயர்களின் அரசாங்கத்தின் பொழுது மொழிகளின் பூசல்
இருக்க வில்லை. இப்பொழுது நாளுக்கு நாள் பிளவுகள் அதிகரித்துக்
கொண்டே போகிறது. பிறகு சத்யுகத்தில் ஒரே ஒரு மொழி இருக்கும்.
எந்த ஒரு வேற்றுமையும் இருக்காது. நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து
கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு
நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. எந்த ஒரு தேகதாரியின் நினைவும் வரக் கூடாது. இதற்காக
எவருடனும் அன்பு கொள்ளக் கூடாது. அதையும் கடந்து செல்ல வேண்டும்.
மிகவுமே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாயையின்
விகல்பங்களுக்கு (வீண் எண்ணங்கள்) பயப்படக் கூடாது. வெற்றி
அடைபவராக வேண்டும்.
2. சாட்சாத்காரத்தில் (திவ்ய காட்சி காண்பது) மாயையின் நிறைய
பிரவேசம் ஆகிறது. பூதங்கள் பிரவேசிப்பதிலிருந்து நம்மை
காப்பாற்றிக் கொள்ள வேண்டும். தந்தைக்கு நமது உண்மையிலும்
உண்மையான சமாச்சாரத்தைக் கூற வேண்டும்.
வரதானம்:
ஒவ்வொரு விஷயத்திலும் சாரத்தைப் கிரஹத்துக் (பெற்று) கொண்டு
ஆல்ரவுண்ட் ஆகக்கூடிய சரள புருஷார்த்தி (எளிய முயற்சியாளர்)
ஆகுக.
எதை பார்த்தாலும், கேட்டாலும் அதன் சாரத்தைப் புரிந்து
கொள்ளுங்கள். பேசும் வார்த்தைகளிலும், செய்யும் செயல்களிலும்
சாரம் நிறைந்திருந்தால், முயற்சி எளிதாகிவிடும்.. அப்படிப்பட்ட
சரள புருஷார்த்தி எல்லா விஷயங்களிலும் அல்ரவுண்டராக இருப்பார்.
அவர்களிடத்தில் எந்தக் குறை யும் தெரியாது. எந்த விஷயத்திலும்
தைரியம் குறையாமல் இருப்பார்கள்,. என்னால் இதை செய்ய முடியாது
என்று வாயிலிருந்து வார்த்தைகள் வராது. அப்படிப்பட்ட எளிய
புருஷார்த்திகள் தானும் சரளமானவர்களாக இருப்பார்கள்., மற்றவர்
களையும் சரளமானவர்களாக மாற்றிவிடு வார்கள்.
சுலோகன்:
சாதனங்களை சரியாக பயன்படுத்தி, அதன் தாக்கத்திலிருந்து
விடுப்பட்டு, பாபாவிற்கு அன்புக்குரியவர்களாக ஆகுங்கள்.
அவ்யக்த சமிக்கை: சதா ஆடாத-அசையாத (உறுதியான),
ஒரே சீரான மனோநிலையை அனுபவம் செய்யுங்கள்.
ஒரே இரசனை என்ற மனநிலையை உருவாக்க, ஒருவரைத் தவிர வேறு எதை
பார்த்தாலும் பார்க்காமல் இருங்கள். இங்கே பார்க்கும் எதுவும்
நிலையாக இருக்கக் கூடியதல்ல. அதனால் ஒரே இரசனை , நிலையானத்
தன்ன்மை உருவாக்கும் போது எந்தவொரு காட்சியை பார்க்கும்போது ஏன்?
எப்படி? என்ற கேள்விகள் வராது. இது தான் வீண் எண்ணங்களின்
குழப்பத்திற்கு காரணம். இந்த க்யூ (வரிசை) முடிந்த பிறகு தான்
சம்பூரணத்தன்மை (முழுமைத்தன்மை) வரும்.