18-10-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! உங்களை ரோஜா மலர்களாக ஆக்குவதற்கு தந்தை வந்திருக்கின்றார், மலர் போன்ற குழந்தைகளாகிய நீங்கள் ஒருபொழுதும் யாருக்கும் துக்கம் கொடுக்க முடியாது, சதா சுகம் கொடுத்துக் கொண்டே இருங்கள்.

கேள்வி:
எந்த ஒரு விசயத்தில் குழந்தைகளாகிய நீங்கள் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?

பதில்:
எண்ணம், சொல், செயல், தனது நாக்கின் (வார்த்தைகளின்) மீது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புத்தியினால் விகார உலகம், குலத்தின் அனைத்து (வார்த்தைகளின்) பழக்க வழக்கங்களையும் மறந்து விட வேண்டும். நான் எந்த அளவிற்கு தெய்வீக குணங்களை தாரணை செய்திருக்கிறேன்? இலட்சுமி நாராயணன் போன்று நற்பண்புகள் உள்ளவனாக ஆகியிருக்கிறேனா? எந்த அளவிற்கு மலராக ஆகியிருக்கிறேன்? என்று தனக்கு தானே சோதனை செய்ய வேண்டும்.

ஓம் சாந்தி.
இவர்கள் எனது குழந்தைகள், ஆத்மாக்கள் என்பதை சிவபாபா அறிவார். குழந்தை களாகிய நீங்கள் ஆத்மா என்று புரிந்து கொண்டு சரீரத்தை மறந்து சிவபாபாவை நினைவு செய்ய வேண்டும். குழந்தை களாகிய உங்களுக்கு நான் கற்பிக்கிறேன் என்று சிவபாபா கூறுகின்றார். சிவபாபாவும் நிராகாராக இருக்கின்றார், ஆத்மாக்களாகிய நீங்களும் நிராகாராக இருக்கிறீர்கள். இங்கு வந்து நடிப்பு நடிக்கிறீர்கள். தந்தையும் வந்து நடிப்பு நடிக்கின்றார். நாடகப்படி தந்தை வந்து நம்மை மலர்களாக ஆக்குகின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே அனைத்து அவகுணங்களையும் நீக்கி குணவான்களாக ஆக வேண்டும். குணவான் களாக இருப்பவர்கள் ஒருபொழுதும் யாருக்கும் துக்கம் கொடுக்க மாட்டார்கள். (மற்றவர் கூக்குரலை) கேட்டும் கேட்காதது போல் இருக்கமாட்டார்கள். யாராவது துக்கமாக இருக் கின்றனர் எனில் அவர்களது துக்கத்தை தூரமாக்குவர். தந்தை வருகின்றார் எனில் முழு உலகின் துக்கமும் அவசியம் தூரமாகி விடும். தந்தை ஸ்ரீமத் கொடுக்கின்றார், எவ்வளவு முடியுமோ முயற்சி செய்து அனைவரின் துக்கத்தையும் விலக்கிக் கொண்டே இருங்கள். முயற்சியின் மூலம் தான் நல்ல பதவி கிடைக்கும். முயற்சி செய்யவில்லையெனில் பதவி குறைந்து விடும். பிறகு அது கல்ப கல்பத்திற்கும் நஷ்டமாகி விடும். தந்தை குழந்தைகளுக்கு ஒவ்வொரு விசயத்தையும் புரிய வைக்கின்றார். குழந்தைகள் தங்களை நஷ்டப்படுத்திக் கொள்கின்றனர் - இதை தந்தை விரும்புவது கிடையாது. உலகத்தினர் இலாபம் மற்றும் நஷ்டத்தை அறியவில்லை. ஆகையால் குழந்தைகள் தன் மீது கருணை காட்டிக் கொள்ள வேண்டும். ஸ்ரீமத் படி நடந்து கொண்டே இருக்க வேண்டும். புத்தி இங்கு அங்கு என்று ஓடிக் கொண்டே இருந்தாலும் முயற்சி செய்யுங்கள் - நாம் இப்படிப்பட்ட எல்லையற்ற தந்தையை ஏன் நினைவு செய்வது கிடையாது? இந்த நினைவின் மூலம் தான் உயர்ந்த பதவி கிடைக்கிறது. குறைந்ததிலும் குறைந்தது சொர்க்கத்திற்கு சென்று விடுகிறீர்கள். ஆனால் சொர்க்கத்தில் உயர்ந்த பதவி அடைய வேண்டும். நமது குழந்தை பள்ளியில் படித்து உயர்ந்த பதவி அடைய வேண்டும் என்று குழந்தையின் தாய் தந்தையர் கூறுவர் அல்லவா! இங்கு யாருக்கும் தெரிவது கிடையாது. நீங்கள் எப்படிப்பட்ட படிப்பு படிக்கிறீர்கள்? என்பது உங்கள் உறவுகளுக்குத் தெரியாது. அந்த உலகாயத படிப்பு பற்றி உற்றார், உறவினர்கள் அனைவரும் அறிவர், இதை யாரும் அறியவில்லை. சில இடங்களில் தந்தை அறிந்திருக்கின்றார் எனில் சகோதரன், சகோதரி அறியாமல் இருப்பர். சில இடங்களில் தாய் அறிந்திருக்கின்றார் எனில் தந்தை அறியாமல் இருப்பர். ஏனெனில் இது விசித்திரமான படிப்பு மற்றும் கற்பிப்பவரும் விசித்திர மானவர் ஆவார். வரிசைக்கிரமமாக புரிந்து கொள்கின்றனர், நீங்கள் அதிக பக்தி செய்திருக் கிறீர்கள் என்று தந்தை புரிய வைக்கின்றார். அதுவும் வரிசைக் கிரமமாக, யார் அதிகமாக பக்தி செய்திருக்கிறார்களோ அவர்கள் தான் இந்த ஞானமும் அடைகின்றனர். இப்பொழுது பக்தியின் வழக்கங்கள் முடிவடைகிறது. முன்பு மீரா சமுதாய உலக பழக்க வழக்கங்களை விட்டு விட்டார் என்று கூறப்பட்டது. இங்கு நீங்கள் முழு விகார குலத்தின் பழக்க வழக்கங்களை விட வேண்டும். புத்தியினால் அனைத்தையும் சந்நியாசம் செய்ய வேண்டும். இந்த விகார உலகில் எதுவும் நல்லதாகத் தோன்றுவது கிடையாது. பாவம் செய்பவர்களைப் பார்த்தால் முற்றிலும் விரும்புவது கிடையாது. அவர்கள் தங்களது அதிஷ்டத்தையே கெடுத்துக் கொள்கின்றனர். குழந்தைகள் மற்றவர்களுக்கு தொந்தரவு செய்வதோ அல்லது படிக்காமல் இருப்பதோ எந்த தந்தைக்கும் பிடிக்காது. அங்கு இப்படிப்பட்ட குழந்தைகள் இருக்கமாட்டார்கள் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். பெயரே தேவி தேவதைகள். எவ்வளவு தூய்மையான பெயர்! என்னிடத்தில் தெய்வீக குணங்கள் உள்ளனவா? என்று தனக்குள் சோதனை செய்ய வேண்டும். பொறுமையானவர்களாகவும் ஆக வேண்டும். புத்தியோகத்தின் விசயமாகும். இந்த யுத்தம் மிக இனிமையானது ஆகும். தந்தையை நினைவு செய்வதில் யுத்தத்திற்கான விசயம் எதுவும் கிடையாது. ஆம், இதில் தான் மாயை தடையிடுகிறது. அதனிடமிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டியிருக்கிறது. மாயாவின் மீது வெற்றி நீங்கள் தான் அடைய வேண்டும். கல்ப கல்பத்திற்கு நாம் என்னவெல்லாம் செய்து வந்தோமோ, மிகவும் சரியாக அந்த முயற்சியே இப்பொழுதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, நாம் இப்பொழுது பத்மாபதம் பாக்கியசா-களாக ஆகின்றோம், பிறகு சத்யுகத்தில் அளவற்ற சுகத்துடன் இருப்போம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

கல்ப கல்பத்திற்கும் தந்தை இவ்வாறே புரிய வைக்கின்றார். இது ஒன்றும் புது விசயம் கிடையாது. இது மிகவும் பழைய விசயமாகும். குழந்தைகள் முழுமையாக மலர்களாக ஆக வேண்டும் என்று தந்தை விரும்புகின்றார். லௌகீக தந்தைக்கும் எனது குழந்தை மலர் போன்று ஆக வேண்டும் என்று விரும்புவார் அல்லவா! பரலௌகீகத் தந்தை வருவதோ முட்களை மலர் ஆக்குவதற்காக! ஆக இவ்வாறு ஆக வேண்டும் அல்லவா! எண்ணம், சொல், செயல், நாக்கின் (வாக்கு) மீது முழு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஒவ்வொரு கர்மேந்திரியத்தின் மீதும் மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மாயை மிகவும் ஏமாற்றக் கூடியது. அதனிடமிருந்து முழு பாதுகாப்புடன் இருக்க வேண்டும். இலட்சியம் மிகவும் உயர்ந்தது. அரைக் கல்பமாக நீங்கள் கெட்ட பார்வையுடன் இருந்தீர்கள். அதை ஒரே ஒரு பிறப்பிற்கு இந்த இலட்சுமி நாராயணன் போன்று! நல்லதாக (சிவில்) ஆக்க வேண்டும். இவர்கள் சர்வ குணங்களும் நிறைந் தவர்கள் அல்லவா! அங்கு கெட்டப் பார்வை இருக்காது. இராவணனே கிடையாது. இது ஒன்றும் புது விசயம் கிடையாது. நீங்கள் பல முறை இந்தப் பதவி அடைந்திருக்கிறீர்கள். இவர்கள் என்ன படிக்கின்றனர்? என்பது உலகத்தினருக்குத் தெரியாது. உங்களது அனைத்து ஆசை களையும் நிறைவேற்றுவதற்காக தந்தை வருகின்றார். சுபமற்ற ஆசைகள் இராவனனுடையது. உங்களுடையது சுப ஆசைகளாகும். எந்த கெட்ட ஆசைகளும் இருக்கக் கூடாது. குழந்தைகள் சுகத்தின் அலைகளில் விளையாட வேண்டும். உங்களது அளவற்ற சுகத்தினை வர்ணனை செய்ய முடியாது, துக்கத்தின் வர்ணனையை செய்து விடுவர், சுகத்தின் வர்ணனையை செய்யமாட்டார்கள். நாம் பாவனம் ஆக வேண்டும் என்பது தான் குழந்தைகளாகிய உங்கள் அனைவரின் ஆசையாகும். பாவனம் ஆவது எப்படி? என்பதை நீங்கள் அறிவீர்கள். தூய்மை யாக்கக் கூடிய தந்தை ஒரே ஒருவர் ஆவார், அவரது நினைவின் மூலம் தான் தூய்மை ஆவோம். புது உலகில் முதல் தரமானவர்கள் இந்த தூய்மையான தேவி தேவதைகள் ஆவர். தூய்மை ஆவதில் எவ்வளவு சக்தி இருக்கிறது என்பதைப் பாருங்கள்! நீங்கள் தூய்மை ஆகி தூய்மையான உலகின் இராஜ்யத்தை அடைகிறீர்கள். அதனால் தான் இந்த தேவதா தர்மத்தில் அதிக சக்தி இருக்கிறது என்று கூறப்படுகிறது. இந்த சக்தி எங்கிருந்து கிடைக்கிறது? சர்வசக்திவான் தந்தையிடமிருந்து! வீட்டிற்கு வீடு முக்கியமான இரண்டு, நான்கு சித்திரங்கள் வைத்து அதிக சேவை செய்ய முடியும். அப்படிப்பட்ட நேரம் வரும், அதாவது நீங்கள் எங்கும் சென்று வர முடியாத அளவிற்கு ஊரடங்குச் சட்டம் போன்றவைகள் ஏற்பட்டு விடும்.

பிராமணர்களாகிய நீங்கள் உண்மையான கீதையைக் கூறக் கூடியவர்கள். ஞானம் மிகவும் எளிதானது, எந்த வீட்டி-ருந்து அனைவரும் வருகின்றார்களோ, அமைதியானவர்களாக ஆகியிருக்கின்றார்களோ அவர்களுக்கு மிகவும் எளிதாகும். இரண்டு அல்லது நான்கு முக்கிய சித்திரங்கள் வைத்துக் கொள்ளுங்கள். இந்த திரிமூர்த்தி, நாடகச் சக்கரம், மரம் மற்றும் ஏணிப்படி சித்திரங்கள் போதுமானது. அவைகளுடன் கீதையின் பகவான் கிருஷ்ணர் அல்ல என்ற சித்திரமும் வைத்தால் நன்றாக இருக்கும். எவ்வளவு எளிதானது! இதில் பணம் எதுவும் செலவு ஏற்படுவது கிடையாது. சித்திரங்களும் வைத்திருக்கிறீர்கள், அதைப் பார்த்தும் ஞானம் நினை விற்கு வந்து கொண்டே இருக்கும். குடில் போன்ற அறை உருவாக்கி விட்டு, அதில் நீங்கள் படுக்கவும் செய்யலாம். ஒருவேளை நீங்கள் ஸ்ரீமத் படி நடந்து கொண்டே இருந்தால் பலருக்கு நன்மை செய்ய முடியும். நன்மை செய்து கொண்டு தான் இருப்பீர்கள், இருப்பினும் இவ்வா றெல்லாம் நீங்கள் செய்ய முடியும் என்று. தந்தை ஞாபகப்படுத்துகின்றார் - தாகூரின் சிலையை வைக்கிறீர்கள் அல்லவா! இது புரிய வைக்க வேண்டிய விசயமாகும். ஜென்ம ஜென்மங்களாக நீங்கள் பக்தி மார்க்கத்தில் கோயில் கோயிலாக அலைந்து கொண்டே இருந்தீர்கள், ஆனால் இவர்கள் யார்? என்பது தெரியாது. கோயில்களில் தேவிகளுக்கு பூஜை செய்கின்றனர், பிறகு அவரை எடுத்துச் சென்று தண்ணீரில் மூழ்கடித்து விடுகின்றனர். எவ்வளவு அஞ்ஞானமாக இருக்கிறது! பூஜை செய்தீர்கள், பிறகு அவரை எடுத்துச் சென்று கட-ல் கரைத்து விடுகின்றனர். விநாயகரை, துர்கையை, சரஸ்வதியையும் கரைத்து விடுகின்றனர். ஆக தந்தை அமர்ந்து குழந்தைகளுக்கு புரிய வைக்கின்றார், கல்ப கல்பத்திற்கு இந்த விசயங்களைப் புரிய வைக்கின்றார். நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்று உணர வைக்கின்றார். குழந்தைகளுக்கு வெறுப்பு ஏற்பட வேண்டும், தந்தை எவ்வளவு புரிய வைத்துக் கொண்டிருக் கின்றார் - இனிமையிலும் இனிமையான குழந்தைகளே! நீங்கள் என்ன செய்து கொண்டிருக் கிறீர்கள்? இதைத் தான் விகார விˆக்கடல் என்று கூறப்படுகிறது. அதற்காக அங்கு பால், கடலாக (பாற்கடல்) இருக்கும் என்பது கிடையாது, ஆனால் அங்கு ஒவ்வொரு பொருளும் அதிகமாக இருக்கும். எந்த பொருளுக்கும் செலவு ஏற்படாது. அங்கு பணமே இருக்காது. தங்கக் கற்கள் தான் பார்க்க முடியும், கட்டிடங்களிலும் தங்கம் அதாவது தங்கக் கற்களால் கட்டுவர். ஆக அங்கு தங்கம், வெள்ளிக்கு மதிப்பு கிடையாது என்பது நிரூபணம் ஆகிறது. இங்கு பாருங்கள் எவ்வளவு மதிப்பு இருக்கிறது! ஒவ்வொரு விசயத்திலும் ஆச்சரியம் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். மனிதர்கள் மனிதர்கள் தான், இந்த தேவதைகளும் மனிதர்கள் தான், ஆனால் இவர்களது பெயர் தேவதை ஆகும். இவர்கள் முன் மனிதர்கள் நாங்கள் பாவிகள், கீழானவர்கள், எங்களிடத்தில் எந்த குணங்களும் கிடையாது என்று தங்களது அசுத்தத்தை வெளிப்படுத்து கின்றனர் - குழந்தைகளாகிய உங்களது புத்தியில் இலட்சியம் இருக்கிறது. நாம் இந்த மனிதனி-ருந்து தேவதைகளாக ஆகின்றோம். தேவதைகளிடத்தில் தெய்வீக குணங்கள் உள்ளன. கோயில்களுக்குச் செல்கின்றனர், ஆனால் இவர்களும் மனிதர்கள் தான்,. நாமும் மனிதர்கள் தான், ஆனால் இவர்கள் தெய்வீக குணங்களுடையவர்கள், நாம் அசுர குணமுடையவர்கள் என்பதை புரிந்து கொள்வது கிடையாது. நாம் எவ்வளவு தகுதியற்றவர்களாக இருந்தோம்! என்பது இப்பொழுது உங்களது புத்தியில் வருகிறது. இவர்கள் முன் சென்று பாடி வந்தோம் - நீங்கள் சர்வ குணங்கள் நிறைந்தவர்கள் ...... இப்பொழுது தந்தை புரிய வைக்கின்றார் - இவர்கள் வாழ்ந்து சென்றிருக்கின்றனர். இவர்களிடத்தில் தெய்வீக குணங்கள் இருந்தன, அளவற்ற சுகத்துடன் இருந்தனர். அவர்களே பிறகு அளவற்ற துக்கமுடையவர்களாக ஆகிவிட்டனர். இந்த நேரத்தில் அனைவரிடத்திலும் 5 விகாரங்களும் பிரவேசமாகியிருக்கின்றன. இப்பொழுது நீங்கள் சிந்தித்துப் பார்க்கிறீர்கள் - எவ்வாறு நாம் மே-ருந்து கீழே வீழ்ச்சி அடைந்து அடைந்து முற்றிலுமாக கீழே விழுந்து விட்டோம்! பாரதவாசிகள் எவ்வளவு செல்வந்தர்களாக இருந்தனர்! இப்பொழுது பாருங்கள் கடன் வாங்கிக் கொண்டே இருக்கின்றனர்! ஆக இந்த அனைத்து விசயங்களையும் தந்தை தான் அமர்ந்து புரிய வைக்கின்றார், வேறு யாரும் கூற முடியாது. ரிஷி, முனிவர்களும் தெரியாது தெரியாது அதாவது நாங்கள் அறியவில்லை என்று கூறினர். அவர்கள் உண்மையைத் தான் கூறுகின்றனர் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்திருக்கிறீர்கள். தந்தையையும், படைப்பின் முதல், இடை, கடையையும் அறியவில்லை. இப்பொழுதும் குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு யாரும் அறியாமல் தான் இருக்கின்றனர். பெரிய பெரிய சந்நியாசிகள், மகாத்மாக்கள் போன்ற யாரும் அறியவில்லை. உண்மையில் மகான் ஆத்மாக்களாக இருப்பது இந்த இலட்சுமி நாராயணன் அல்லவா! சதா தூய்மையானவர்களாக இருக்கின்றனர். இவர்களே புரிந்து கொள்ளவில்லையெனில் மற்றவர்கள் எப்படி அறிந்து கொள்ள முடியும்! எவ்வளவு எளிய விசயத்தை தந்தை புரிய வைக்கின்றார், ஆனால் சில குழந்தைகள் மறந்து விடுகின்றனர். சிலர் நல்ல முறையில் குணங்களை தாரணை செய்கின்றனர் எனில் இனிமையானவர்களாகத் தோன்றுகின்றனர். எந்த குழந்தைகளிடத்தில் இனிய குணத்தை பார்க்கின்றாரோ அப்பொழுது உள்ளம் மகிழ்ச்சியடைந்து விடுகிறது. சிலர் பெயரைக் கெடுத்து விடுகின்றனர். இங்கோ தந்தை, ஆசிரியர், சத்குருவாக இருக்கின்றார் - மூவருக்கும் நிந்தனை செய்விக்கின்றனர். சத்திய தந்தை, சத்திய ஆசிரியர், சத்குருவை நிந்தனை செய்தால் பிறகு மும்மடங்கு தண்டனை கிடைக்கும். ஆனால் சில குழந்தைகள் எதுவும் புரியாமல் இருக்கின்றனர். இவ்வாறும் அவசியம் இருப்பார்கள் என்று தந்தை புரிய வைக்கின்றார். மாயையும் ஒன்றும் குறைந்தது கிடையாது. அரைக் கல்பத்திற்கு பாவ ஆத்மாக்களாக ஆக்குகிறது. பிறகு தந்தை அரைக் கல்பத்திற்கு புண்ணிய ஆத்மாக்களாக ஆக்குகின்றார். அதுவும் வரிசைக்கிரமமாக ஆகின்றனர். இவ்வாறு ஆக்கக் கூடியவர்களும் இருவர் - இராமர் மற்றும் இராவணன். இராமரை பரமாத்மா என்று கூறுகிறோம். இராம் இராம் என்று கூறி பிறகு சிவனை வணங்குகின்றனர். அவர் தான் பரமாத்மா. பரமாத்மாவிற்கு எண்ணிலடங்காப் பெயர்கள் உள்ளன, நீங்கள் பெயர்களை எண்ண வேண்டிய அவசியம் இல்லை. இந்த இலட்சுமி நாராயணன் தூய்மையாக இருந்தனர் அல்லவா! இவர்களது உலகம் இருந்தது, அது கடந்து முடிந்து விட்டது. அது சொர்க்கம், புது உலகம் என்று கூறப்படுகிறது. பிறகு இடிந்து போகும் தருவாயிலுள்ள பழைய கட்டிடம் போன்று ஆகிவிடுகிறது. இந்த உலகமும் இவ்வாறு தான் இருக்கிறது. இப்பொழுது க-யுகத்தின் கடைசியாகும். புரிந்து கொள்வதற்கு எவ்வளவு எளிய விசயங்களாகும்! தாரணை செய்ய வேண்டும் மற்றும் செய்விக்க வேண்டும். அனைவருக்கும் புரிய வைப்பதற்கு தந்தை செல்லமாட்டார். குழந்தை களாகிய நீங்கள் இறை சேவையில் இருக்கின்றீர்கள். தந்தை எந்த சேவை கற்றுக் கொடுக் கிறாரோ அந்த சேவை மட்டுமே செய்ய வேண்டும். நீங்கள் செய்வது இறை சேவை மட்டுமே. உங்களது பெயரை உயர்வாக்குவதற்காக பாபா கலசத்தை தாய்மார்களிடத்தில் கொடுத்திருக் கின்றார். ஆண்களுக்கு கிடைப்பது கிடையாது என்பது அல்ல. அனைவருக்கும் கிடைக்கவே செய்கிறது. நாம் எவ்வளவு சுகமானவர்களாக, சொர்க்கவாசிகளாக இருந்தோம், அங்கு எந்த துக்கமும் கிடையாது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். இப்பொழுது சங்கமயுகத்தில் இருக்கிறோம், பிறகு நாம் இந்த புது உலகத்திற்கு எஜமானர்களாக ஆகிக் கொண்டிருக்கிறோம். இப்பொழுது க-யுகம், பழைய, பதீத உலகமாகும். முற்றிலும் எருமை (மந்த) புத்தியுடையவர்களாக ஆகிவிட்டனர். இப்பொழுது இந்த அனைத்து விசயங்களையும் மறக்க வேண்டியிருக்கிறது. தேகம் உட்பட தேகத்தின் அனைத்து சம்மந்தங்களையும் விட்டு விட்டு தன்னை ஆத்மா என்று புரிந்து கொள்ள வேண்டும். சரீரத்தில் ஆத்மா இல்லையெனில் சரீரம் எதுவும் செய்ய முடியாது. அந்த சரீரத்தின் மீது எவ்வளவு பற்றுதல் வைக்கின்றனர்! சரீரம் எரிந்து விடுகிறது, ஆத்மா மற்றொரு சரீரத்தை எடுத்து விடுகிறது, இருப்பினும் 12 மாதங்கள் கவலை பட்டுக் கொண்டே இருக்கின்றனர். இப்பொழுது உங்களது ஆத்மா சரீரம் விட்டால் அவசியம் வரிசைக்கிரமமாக உயர்ந்த வீட்டில் பிறப்பு எடுக்கும். சிறிது ஞானம் உடையவர்கள் சாதாரண குலத்தில் பிறப்பெடுப்பர். உயர்ந்த ஞானம் உடையவர்கள் அவசியம் உயர்ந்த குலத்தில் பிறப்பெடுப்பர். அங்கு சுகமும் அதிகமாக இருக்கும். நல்லது.

இனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாய் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நன்ஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1) தந்தை என்ன கூறுகின்றாரோ அதை கேட்டும் கேட்காதது போன்று இருந்து விடக் கூடாது. குணவான்களாக ஆகி அனைவருக்கும் சுகம் கொடுக்க வேண்டும். முயற்சி செய்து அனைவரின் துக்கத்தையும் தூரமாக்க வேண்டும்.

2) விகாரங்களுக்கு வசமாகி எந்த விகர்மமும் செய்யக் கூடாது. பொறுமையானவர்களாக ஆக வேண்டும். எந்த கெட்ட (அசுத்த, விகார) ஆசைகளும் இருக்கக் கூடாது.

வரதானம்:
அமைதி சக்தியின் மூலம் முடியாததை முடித்து காட்டக் கூடிய சகஜயோகி ஆகுக!

அமைதி சக்தியானது அனைத்தையும் விட மிக உயர்ந்த சக்தியாகும். அமைதி சக்தியின் மூலம் தான் மற்ற அனைத்து சக்திகளும் வெளிப்படுகின்றன. அறிவியல் சக்தியின் பிராபாவமும் அமைதி சக்தியின் மூலம் தான் வெளிப்படுகிறது. எனவே அமைதி சக்தியின் மூலம் என்ன விரும்புகிறீர்களோ அதை அடைய முடியும். முடியாததையும் முடித்து காட்ட முடியும். எதை உலகத்தினர் முடியாது என்ற கூறுகிறார்களோ அது உங்களுக்கு முடிந்து விடுகிறது. முடிகின்ற காரணத்தினால் எளிதாக இருக்கிறது. அமைதி சக்தியை தாரணை செய்து சகஜயோகி ஆகுங்கள்.

சுலோகன்:
வார்த்தைகளின் மூலம் அனைவருக்கும் சுகம் மற்றும் அமைதி கொடுத்தீர்கள் எனில் புகழுக்குத் தகுதியானவர்களாக ஆவீர்கள்.