19.01.25    காலை முரளி            ஓம் சாந்தி  30.11.2003      பாப்தாதா,   மதுபன்


நான்கு பாடங்களிலும் அனுபவத்தின் அத்தாரிட்டி ஆகி சச்சரவுகளை சமாதானமாக மாற்றுங்கள்.

இன்று பிராமண உலகை படைப்பவர் நாலாபுறமும் உள்ள தனது பிராமணக் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருக்கின்றார். இந்த பிராமண உலகம் சின்னஞ்சிறிய உலகம். ஆனால் மிக உயர்ந்த அன்பான உலகம் இந்த பிராமண உலகம் அகிலத்திலேயே விசேஷ ஆத்மாக்களின் உலகம். ஒவ்வொரு பிராமணரும் கோடியில் சிலர், அந்த சிலரிலும் சில ஆத்மாக்கள். ஏனெனில் தனது தந்தையை தெரிந்து கொண்டு தந்தையின் ஆஸ்திக்கு அதிகாரி ஆகியுள்ளனர். தந்தை எந்தளவிற்கு உயர்ந்ததிலும் உயர்ந்தவரோ, தந்தையை தெரிந்து கொண்டு அவரது குழந்தை யானவர்களும் விசேஷ ஆத்மாக்களே. ஒவ்வொரு பிராமண ஆத்மாவும் பிறவி யிலேயே பாக்ய வள்ளல் தந்தை நெற்றியில் உயர்ந்த பாக்யரேகை வரையப் பெற்ற மிக சிரேஸ்ட பாக்யவான் ஆத்மாக்கள். அத்தகைய பாக்யவான் என தன்னை உணர்கின்றீர்களா? அந்த அளவிற்கு பெரிய ஆன்மீக போதையை அனுபவம் செய்கின்றீர்களா? ஒவ்வொரு பிராமணன் உள்ளத்திலும் உள்ளப்பூர்வமான அன்பு பெருமிதம் தருகின்றார். இந்த பரமாத்மா அன்பானது முழு கல்பத்திலும் ஒருவர் மூலமாக ஒருமுறை மட்டுமே கிடைக்கின்றது. இந்த ஈஸ்வரிய போதை எப்போதும் ஒவ்வொரு செயலிலும் உள்ளதா? ஏனெனில் உலகிற்கே, நாங்கள் கர்மயோகி வாழ்க்கை வாழ்பவர்கள் என்று சவால் விடுபவர்கள். அவ்வப்போது மட்டும் யோகம் செய்யும் யோகிகள் அல்ல, யோகி வாழ்க்கை வாழ்பவர்கள் வாழ்க்கை என்பது சதா காலத்திற்குமானது இயல் பாக மற்றும் நிரந்தரமானது 8 மணி நேரமோ 6 மணி நேரமோ யோகி வாழ்க்கையல்ல. யோகம் என்பது நினைவே பிராமண வாழ்வின் இலட்சியமும் வாழ்வின் இலட்சியம் இயல்பாகவே நினை விருக்கும். இலட்சியத் திற்கேற்ப இலட்சணமும் இயல்பாகவே வரும்.

பாப்தாதா ஒவ்வொரு பிராமண ஆத்மாவின் நெற்றியிலும் மின்னுகின்ற அதிர்ஷ்ட நட்சத்திரத்தைப் பார்க்கின்றார். பாப்தாதா எப்போதும் ஒவ்வொரு குழந்தையையும் சிரேஸ்ட சுயமரியாதை உள்ளவராக, சுயராஜ்ய அதிகாரியாகவே பார்க்கின்றார். அவ்வாறே நீங்களும் தன்னை சுயமரியாதையுள்ள ஆத்மா நான் சுயராஜ்யதாரி ஆத்மா நான் எனும் அனுபவம் செய்கிறீர் களா ஒரு நொடியில் நான் சுயமரியாதைக்குரிய ஆத்மா என நினைத்த மாத்திரமே சுயமரியாதை கள் எத்தனை பெரிய பட்டியல் வருகின்றது. இப்போதும் தனது சுயமரியாதை பட்டியல் நினைவு வந்ததா? நீண்ட பட்டியல் தானே. சுயமரியாதை அபிமானத்தை (நான் எனும் அகந்தை) அழித்து விடுகின்றது. ஏனெனில் சுயமரியாதை என்பது பெருமிதம் ஆகும். ஆகவே உயர்ந்த அபிமானம் விதவிதமான அசுத்த தேகபிமானங்களை அழித்து விடுகின்றது. எப்படி லைட் சுவிட்ச்சை போட்ட மாத்திரமே இருள் ஓடிவிடுகின்றது. இருளை விரட்ட வேண்டியதில்லை, இருளை அகற்ற முயற்சி தேவைப்படுவதில்லை ஆனால் சவிட்ச்சை போட்ட மாத்திரமே இருள் தானாகவே அழிந்து விடுகின்றது. அவ்வாறே சுயமரியாதையெனும் நினைவு சுவிட்ச்சை போட்டவுடனேயே விதவித மான தேக அபிமானமும் முயற்சியின்றி தானாகவே அகன்று விடுகின்றது. சுயமரியாதை நினைவில் வராதவரையில் முயற்சி செய்ய வேண்டியுள்ளது. பாப்தாதா குழந்தைகளின் விளையாட்டைப் பார்க்கின்றார். சுயமரியாதையை மனதில் வர்ணனை செய்கின்றார்கள். நான் பாப்தாதாவின் இதய சிம்மாசனதாரி வர்ணனையும் செய்கிறார்கள், சிந்தனையும் செய்கின்றார்கள் ஆனால் அனுபவம் செய்வதில்லை. சிந்திப்பதை அனுபவம் செய்வது அவசியம் ஏனெனில் அனைத்திலும் உயர்ந்த அத்தாரிட்டி அனுபவமே. பாப்தாதா பார்க்கின்றார் மிக நன்றாகவே கேட்கிறார்கள், சிந்திக்கின்றார்கள் ஆனால் கேட்பது சிந்திப்பது வேறு அனுபவி ஆவது இதுவே பிராமண வாழ்வின் உயர்ந்த அத்தாரிட்டியாகும். பக்திக்கும் ஞானத்திற்கும் இடையே வேறுபாடு உள்ளது. பக்தியிலும் ரசனையுடன் ஆனந்தத்தில் திளைப்பார்கள். சிந்தனையும் செய்வார்கள் ஆனால் அனுபவம் செய்வதில்லை. ஞானி என்பதன் பொருளே ஒவ்வொரு சுயமரியாதையும் அனுபவம் செய்வதாகும். அனுபவ நிலை போதையை உயர்த்தும் அனுபவம் ஒருபோதும் வாழ்வில் மறவாது. கேட்டது, சிந்தனை செய்வது மறந்து போகும். ஆனால் அனுபவம் செய்தது ஒருபோதும் குறையாது.

எனவே பாப்தாதா குழந்தைகளுக்கு இதனையே நினைவூட்டுகிறார். பகவான் தந்தையிடம் கேட்ட ஒவ்வொரு விசயங்களையும் அனுபவம் செய்து அனுபவ மூர்த்தி ஆகுங்கள். அனுபவம் செய்து விட்டால் ஆயிரம் பேர் அகற்ற நினைத்தாலும் அகற்ற முடியாது. மாயாவும் அனுபவத்தை அகற்ற முடியாது. உடலில் வந்தவுடனேயே நான் இன்னார் என்பது எவ்வளவு உறுதியாக நினைவில் உள்ளது எப்போதாவது உடலின் பெயர் மறந்து போகிறதா? யாரேனும் உங்களைப் பார்த்து நீங்கள் இவர் இல்லை, இவர் இல்லை என்றால் ஏற்றுக் கொள்வீரா? அவ்வாறே ஒவ்வொரு சுயமரியாதை யின் பட்டியலை அனுபவம் செய்து விட்டால் மறவாது. ஆனால் பாப்தாதா பார்க்கின்றார் ஒவ்வொரு சுயமரியாதையும், ஒவ்வொரு ஞான கருத்துக்களிலும் அனுபவம் பெறுவது வரிசைக் கிரமமாகவே உள்ளது. ஒரு முறை நான் ஆத்மா எனும் அனுபவம் செய்துவிட்டால், ஆத்மாவன்றி வேறென்ன இருக்கும். தேகத்தைத்தான் எனது என்று சொல்கின்றீர்கள் ஆனால் நானோ ஒரு ஆத்மா. ஆத்மா தான் என்றால் பிறகு தேக உணர்வு எங்கிருந்து வந்தது? ஏன் வந்தது. காரணம் 63 பிறவிகளான பயிற்சி. நான் தேகமெனும் தலை கீழான பயிற்சி உறுதியாக உள்ளது. யதார்த்தமான பயிற்சி அனுபவத்தில் மறந்து விடுகிறது. குழந்தைகளின் கடும் உழைப்பை காணும்போது தந்தைக்கு குழந்தைகள் மீது அன்பு வருகின்றது. பரமாத்மாவின் குழந்தைகள் உழைப்பதான் காரணம் அனுபவத்தின் குறைவு. தேக உணர்வு எனும் அனுபவம் என்ன ஆனாலும் எந்த செயல் செய்தாலும் மறப்பதில்லை. ஆக பிராமண வாழ்வு என்பது கர்ம யோகி வாழ்க்கை, யோகி வாழ்க்கையின் அனுபவம் எப்படி மறக்கும்.

ஆக சோதனை செய்யுங்கள் ஒவ்வொரு பாடத்தையும் அனுபவத்தில் கொண்டு வந்தேனா? ஞானம் கேட்பது, சொல்வது எளிது ஆனால் ஞானத்தை நடைமுறையில் கொண்டு வர வேண்டும். ஞானத்தை நடை முறைப்படுத்தினால் இயல்பாகவே ஒவ்வொரு செயலும் ஞானம் நிறைந்ததாக சக்திவாய்ந்ததாக இருக்கும். ஞானமே ஒளியும், சக்தியுமாக உள்ளது அவ்வாறே யோகி சொரூபம், யோக நிலை, யுக்தி யுக்த் சொரூபம் தாரணை சொரூபம் என்றாலே ஒவ்வொரு செயல், ஒவ்வொரு கர்மேந்திரியம், ஒவ்வொரு குணத்திலும் நடை முறைப்படுத்துவதாகும். சேவையில் அனுபவி, சேவாதாரி என்றாலே நிரந்தர இயல்பான சேவாதாரி, மனம், சொல், செயல் உறவு முறையில் ஒவ்வொரு செயலிலும் இயல்பாகவே சேவை நடைபெறும். இதனையே 4 பாடங்களிலும் அனுபவசாலி என்பதாகும். ஆக அனைவரும் எவ்வளவு தூரம் அனுபவி என்பதை சோதனை செய்யுங்கள். ஒவ்வொரு குணத்திலும் சக்தியிலும் அனுபவி ஆகுங்கள். அனுபவமே தக்க சமயத்தில் உதவும் என்பார்கள். அனுபவியின் அனுபவமானது எந்த சூழலிலும் ஒரு நொடியில் சமாதானம் செய்வார்கள். இன்னல் இன்னலாகாது, சமாதானமாகும் புரிந்ததா. இப்போது நேரத்தின் அருகாண்மை, தந்தைக்கு நிகராகவதற்கான அருகாண்மை சமாதான சொரூபத்தை அனுபவம் செய்க. வெகுகாலமாக சச்சரவுகள் வருவதும் அதற்காக சமாதானம் செய்வதற்கான முயற்சி யிலேயே இருந்தீர்கள். இப்போது பாப்தாதா ஒவ்வொரு குழந்தையையும் சுயமரியாதையுடன், சுயராஜ்யதிகாரியாக சமாதான சொரூபமாக பார்க்க விரும்புகின்றார். அனுபவ மூர்த்திகள் ஒரு நொடியில் மாற்றிவிட முடியும். நல்லது.

அனைத்து இடங்களிலிருந்தும் வந்துள்ளீர்கள். இரட்டை அயல் நாட்டவரும் ஒவ்வொரு முறையும் தமது வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். நல்லது. இந்த குழுவில் பாண்டவர்களும் குறைவில்லை. பாண்டவர் அனைவரும் கை உயர்த்துங்கள். மாதர்கள், குமாரிகள், ஆசிரியர்கள் கை உயர்த்துங்கள். முதல் குழுவில் மாதர்கள் அதிகம் இருந்தனர். ஆனால் இந்த குழுவில் பாண்டவர்களும் நன்கு பந்தயம் செய்துள்ளனர். பாண்டவர்களின் பெருமிதம் நம்பிக்கை இன்றளவும் மகிமை செய்யப்படுகின்றது. அத்தகைய பாண்டவர்தானே? நல்லது பெருமிதம் உள்ளதா? பாண்டவர் என்று வார்த்தை கேட்கும்பொழுதே பாண்டவர்களின் பதியை மறக்க முடியாது. அவ்வப்போது மறக்கிறதா? பாண்டவர், பாண்டவர்களின் பதி. பாண்டவர்களுக்கு இந்த பெருமிதம் வேண்டும். நாம் கல்பம் கல்பமும் பாண்டவர்கள் பாண்டவபதிக்கு மிகவும் அன்பானவர் கள். நினைவார்த்தத்தில் பாண்டவர்களின் பெயரும் குறைந்ததில்லை. பாண்டவர்களின் பட்டமே வெற்றி பாண்டவர் என்பதாகும். அத்தகைய பாண்டவர்கள் தானே? நாம் வெற்றிப் பாண்டவர், அவ்வளவே தான். பாண்டவர் மட்டுமல்ல வெற்றிப் பாண்டவர் வெற்றித் திலகம் அழியாது நெற்றியில் உள்ளது.

மாதர்களுக்கு (தாய்மார்கள்) என்ன பெருமிதம் உள்ளது? அதிக போதை உள்ளதா? பாபா வந்ததே எனக்காக என்று மாதர்கள் மிகவும் பெருமையுடன் சொல்கிறார்கள். அப்படித்தானே. ஏனெனில் அரை கல்பமாக மாதர்களுக்கு எந்த பதவியும் கிடைக்கவில்லை. இப்போது சங்கமயுகத்தில் அரசாங்கத்திலும் மாதர்களுக்கு அதிகாரம் கிடைத் துள்ளது. ஒவ்வொரு துறையிலும் சக்திகளான உங்களை பாபா முன்னால் வைத்துள்ளார். இப்போது உலகிலும் ஒவ்வொரு துறையிலும் மாதர்களுக்கு அதிகாரம் கிடைத்துள்ளது. மாதர்கள் இல்லாத துறையே இல்லை. இது சங்கம யுகத்தின் பலன். மாதர்கள் நமது பாபா என்கிறார்கள். இருக்கிறதா எனது பாபா? போதை உள்ளதா? மாதர்கள் கை அசைக்கின்றார்கள். நல்லது. பகவானை தனதாக்கிய மந்திரவாதி மாதர்கள். பாண்டவர்கள், மாதர்கள் சர்வ சம்மந்தங்களிலும் பாபாவுடன் அன்பு செலுத்துகின்றனர். இருப் பினும் விசேஷ அன்பு எந்த சம்மந்தத்தில் என்பதை பாப்தாதா பார்க்கின்றார். அனேக குழந்தை களுக்கு இறைவனை நண்பனாக வைப்பது பிடித்துள்ளது. எனவே இறை நண்பனைப் பற்றிய கதையும் உள்ளது. பாப்தாதா, எந்த சமயத்தில் எந்த சம்மந்தம் தேவைப்படுகிறதோ அந்த சம்மந்தத்தில் பகவானை தனதாக்கிக் கொள்ளுங்கள் என்று கூறுகின்றார். அனைத்து சம்மந்தமும் வைக்கலாம் எனது பாபா என்று குழந்தைகள் சொன்ன மாத்திரமே பாபா என்ன சொல்கிறார் நான் உங்களுடையவன்.

மதுபனின் அழகு நன்றாக உள்ளது. எவ்வளவு தான் தொலைவில் இருந்து பார்த்தாலும் கேட்டாலும் மதுபனின் அழகே தனிப்பட்டது. மதுபனில் பாப்தாதாவின் சந்திப்பு நிகழ்கின்றது. இன்னும் என்னென்ன பிராப்திகள் கிடைக்கின்றன, எத்தனை பிராப்திகள் என பட்டியல் போட்டால் தெரியும். அனைத்திலும் பெரிய பிராப்தி சகஜயோகம், இயல்பான யோகம் உழைப்பு தேவைப் படாது. மதுபன் வாயு மண்டலத்தின் மகிமை உயர்வானது. நம்மை சகஜயோகி, இயல்பான யோகியாக மாற்றவல்லது. ஏன்? மதுபனில் புத்திக்கு ஒரே ஒரு வேலை தான். சேவாதாரி குழுவில் வருபவர்கள் வேறு. மதுபன் தினசரி வாழ்க்கை சகஜயோகி, இயல்பு யோகியாக வைக்கும் நம்மை. புத்துணர்ச்சி பெற வருபவர்களுக்கு என்ன வேலை ? ஏதேனும் பொறுப்புள்ளதா? சாப்பிடுங்கள், பருகுங்கள், ஆனந்தமாக இருங்கள், படியுங்கள், மதுபன் மதுபன் தான். அயல் நாட்டிலும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அங்கு கேட்பதற்கும் மதுபன் வருவதற்கும் இரவு பகலுக்கான வேறுபாடு உள்ளது. பாப்தாதா சாதனங்கள் வாயிலாக கேட்பவர்கள், பார்ப்பவர்களுக்கு அன்பு நினைவுகளைத் தருகின்றார். சில குழந்தைகள் இரவில் கண் விழித்துக் கேட்கிறார்கள். நான்றாகத் தான் இருக்கின்றது இருப்பினும் மதுபனில் வருவது மிகவும் நல்லது. மதுபனில் வருவது நன்றாக உள்ளதா, அங்கே அமர்ந்து கேட்பது நன்றாக உள்ளதா அங்கேயும் கேட்கலாம். இங்கும் கூட பின் வரிசையில் தொலைக்காட்சியில் பார்க்கின்றீர்கள். மதுபனில் வருவது நல்லது என உணர்பவர்கள் கை உயர்த்துங்கள். (அனைவரும் கை உயர்த்தினர்) நல்லது. பக்தியிலும் என்ன மகிமை உள்ளது? மதுபனில் முரளி பாடப்பட்டது. லண்டனில் முரளி வாசிக்கப்பட்டது என்பதல்ல. எங்கிருந்தாலும் மதுபனின் மகிமையை உணர்வது என்றாலே தன்னை மகான் ஆக மாற்றுவதாகும்.

நல்லது இங்கு வந்துள்ள அனைவரும் யோகி, ஞானி, தாரணை அனுபவம் செய்கின்றனர். இப்போது முதல் முறை இந்த சீசனில் முக்கிய கவனம் தரப்படுகின்றது. இந்த சீசன் முழுவதும் தானும் திருப்தியாக இருந்து பிறரையும் திருப்தி செய்யுங்கள். தான் மட்டும் திருப்தி பெறாமல் பிறரையும் திருப்திப்படுத்துங்கள். மேலும் சமயத்திற்கேற்ப எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம். எப்போது நடக்கும், ஒரு வருடம் ஆகுமா, 6 மாதம் ஆகுமா என கேள்வி கேட்காதீர்கள். எதிர் பாராவிதமாக எப்போதும் எதுவும் நடக்கலாம் . எனவே தனது நினைவு எனும் சுவிட்ச்சை மிகவும் சக்திசாலியாக வையுங்கள். ஒரு நொடியில் சுவிட்ச் ஆன் செய்த உடன் அனுபவம் செய்யுங்கள். சுவிட்ச் தளர்வாகயிருந்தால் மீண்டும் மீண்டும் ஆன் ஆஃப் செய்ய வேண்டியிருக்கும், சரி செய்வதில் நேரம் வீணாகும். ஒரு நொடியில் சுவிட்ச் ஆன் செய்த உடனேயே சுயமரியாதை, சுயராஜ்ய அதிகாரி, அந்தர்முகி எனும் அனுபவம் செய்து கொண்டேயிருங்கள். அனுபவங்க ளெனும் கடலில் மூழ்கிவிடுங்கள். அனுபவமெனும் அத்தாரிட்டி உள்ளவர்களை எந்த ஒரு அத்தாரிட்டியும் வெல்ல முடியாது. என்ன செய்ய வேண்டும், புரிந்ததா பாப்தாதா சமிக்ஞை செய்கிறார் ஆனால் எப்போது எப்போது எப்போது என எதிர்பார்க்கிறார்கள் இப்போது தயாராகுங் கள். ஒரு நொடியில் சுவிட்ச் ஆன் செய்ய முடியுமா? செய்ய முடியுமா? எந்த சூழ்நிலையிலும் எந்த இன்னலிலும் நினைவு சுவிட்ச் ஆன செய்க இந்த பயிற்சியை செய்க, ஏனெனில் இறுதி பேப்பர் ஒரு நொடியே வரும், நிமிடமல்ல யோசித்துக் கொண்டிருந்தால் பாஸ் ஆக முடியாது. அனுபவம் செய்பவரே பாஸ் ஆக முடியும். இப்போது ஒரு நொடியில் அனைவரும் நான் பரந்தாமவாசி சிரேஷ்ட ஆத்மா இந்த நினைவு சுவிட்சை ஆன் செய்யுங்கள். வேறெந்த நினைவும் கூடாது. புத்தியில் எந்த தடுமாற்றமின்றி, நிலை பெறுங்கள். (டிரில்) நல்லது.

நாலாபுறமுள்ள சிரேஸ்ட சுவமான்தாரி, அனுபவி ஆத்மாக்களுக்கு, எப்போதும் எல்லா பாடத்தையும் அனுபவத்தில் கொண்டு வருபவர்களுக்கு சதா யோகி வாழ்வில் இருக்கும் நிரந்தர யோகி ஆத்மாக்களுக்கு எப்போதும் தனது சிறப்பம்சங்களை நினைவில் வைத்து செயல்படுத்தும் பாக்யவான் கோடியில் சிலரான விசேஷ ஆத்மாக்களுக்குபாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே !

தாதி அவர்களுடன்: அனைவரையும் ஊக்கம் உற்சாகம் செய்யும் நல்லதொரு செயலை செய்து கொண்டிருக் கின்றீர்கள் (இப்போது கோடிக்கணக்கில் செய்தி தரும் சேவைக்காக திட்டம் நடந்து கொண்டிருக்கின்றது) கோடி என்ன அகிலம் முழுவதும் உள்ள ஆத்மாக்களுக்கு செய்தி கிடைக்க வேண்டும். ஆஹா! இறைவா என்று சொல்வார்கள் அல்லவா? ஆஹா! இறைவா என்று சொல்வதற் காக ஏற்பாடு செய்ய வேண்டும். (தாதிகளுடன்) இவர்களும் ஒத்துழைப்பு தருகிறார்கள். நல்லது மதுபனை நிர்வாகம் செய்கிறார்கள். நல்ல ஒத்துழைப்பு குழு கிடைத்துள்ளது அல்லவா. ஒவ்வொருவரின் விசேஷம் இருப்பினும் ஆதி ரத்தினங்களின் தாக்கம் ஏற்படுகிறது. எத்தனை வயதானாலும் புதிய புதியவர்களும் முன்னேறுகின்றனர் இருப்பினும் ஆதிரத்தினங்களின் பராமரிப்பு உயர்வானதே. எனவே குழு நன்றாக உள்ளது.

வரதானம்:
தடைகளை தகர்த் தெரியும் பளபளப்பான ஃபரிஸ்தா ஆடை அணிந்து சதா தடைகளை களைபவர் ஆகுக !

தனக்காகவும் அனைவருக்காகவும் தடைகளை தகர்த்தெரிய கேள்விக்குறிக்கு விடை கொடுங்கள். முற்றுப் புள்ளி மூலமாக அனைத்து சக்திகளையும் சேமித்து வையுங்கள். எப்போதும் தடைகளை நீக்கும் பளபளப்பான ஃபரிஸ்தா ஆடை அணிந்திடுங்கள். சேரு படிந்த ஆடை கூடாது அதோடு மட்டுமல்லாது சர்வ குணங்களெனும் ஆபரணங்களால் அலங்கரித்துக் கொள்ளுங்கள். எப்போதும் அஷ்ட சக்திகளெனும் ஆயுதங்களுடன் மூர்த்தியாகி தாமரை மலரெனும் ஆசனத்தில் சிரேஸ்ட வாழ்வெனும் பாதத்தை வைத்திடுங்கள்.

சுலோகன்:
பயிற்சியில் முழுமையிலும் முழுமையான கவனம் வைத்தால் முதல் எண்ணில் வந்து விடலாம்.

தனது சக்திசாலி மனோ நிலை மூலம் சக்தி தரும் சேவை செய்க

வார்த்தைகளின் சேவை இயல்பாகி விட்டது, அவ்வாறே மனதில் சேவையும் இயல்பாக வேண்டும். வார்த்தையுடன் மனதாலும் இணைந்தே சேவை செய்தால் வார்த்தைகள் குறையும். வார்த்தையால் செலவாகும் சக்தி மனோ சேவையின் ஒத்துழைப்பால் வார்த்தையின் சக்தி சேமிப்பாகும். மேலும் சக்தி வாய்ந்த மனோநிலையின் சேவையால் வெற்றி அதிகம் அனுபவம் ஆகும்.

குறிப்பு : இன்று மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை. அகில உலக தியான தினம், மாலை 6.30 முதல் 7.30 மணி வரை சகோதர, சகோதரிகள் அனைவரும் ஒரே சுத்த சங்கல்பத்துடன் இயற்கை உட்பட உலகின் அனைத்து ஆத்மாக்களுக்கும் சாந்தி, சக்தியின் ஒளிக் கதிர்களை வழங்கும் சிறப்பான சேவை செய்க. பாப்தாதாவின் நெற்றியிலிருந்து சக்தி வாய்ந்த ஒளிக்கதிர்கள் எனது நெற்றியில் நிரம்பி என்னிலிருந்து வெளிப்பட்டு முழு உலக உருண்டையின் மீது பரவுகிறது.