19-02-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! நீங்கள் இதுவரை
என்னென்ன படித்திருக்கிறீர்களோ, (உலகீய சம்மந்தப்பட்ட படிப்பு)
அதை மறந்து விடுங்கள். உயிருடன் இருந்து கொண்டே இறந்து விடுவது
என்றால் அனைத்தையும் மறந்துவிட வேண்டும். கடந்து போனது எதுவும்
நினைவு வரக்கூடாது.
கேள்வி:
யார் உயிருடன் இருந்து கொண்டே
இறந்த நிலையை முழுமையாக அடைய வில்லையோ, அவர்களின் அடையாளம்
என்னவாக இருக்கும்?
பதில்:
அவர்கள் தந்தையிடம் கூட
வாக்குவாதம் செய்து கொண்டே இருப்பார்கள். சாஸ்திரங்களின்
உதாரணம் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். யார் முழுமையாக இறந்து
விட்டார்களோ, அவர்கள், பாபா என்ன சொல்கிறாரோ, அது தான் உண்மை
என்பார்கள். நாம் அரைக் கல்பமாக என்ன கேட்டு வந்திருக்கிறோமோ,
அதெல்லாம் பொய்யாகவே இருந்துள்ளது. அதனால் அதை வாயால்
சொற்களாகக் கூடக் கொண்டுவரக் கூடாது. பாபா சொல்லியுள்ளார்,
தீயதைக் கேட்காதீர்கள்..........
பாடல்:
ஓம் நமோ சிவாய........
ஓம் சாந்தி.
குழந்தைகளுக்குப் புரிய வைக்கப் பட்டுள்ளது, எப்போது அமைதியில்
இருக்க வைக் கிறீர்களோ, அதற்கு நிஷ்டை என்ற சொல்லைக்
கொடுத்துள்ளனர். இந்த டிரில் செய்ய வைக்கப் படுகின்றது. இப்போது
பாபா வந்து ஆன்மிகக் குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார், யார்
இருந்து கொண்டே இறந்து விட்டுள்ளனரோ, நாங்கள் உயிருடன் இருந்து
கொண்டே இறந்து விட்டோம் எனச் சொல்கின்றனர். எப்படி மனிதர்கள்
இறக்கின்றனர் என்றால் அனைத்தும் மறந்து விடு கின்றது.
சம்ஸ்காரங்கள் மட்டுமே மிச்சம் உள்ளன. இப்போது நீங்களும் தந்தை
யுடையவராகி உலகத்திலிருந்து இறந்து விட்டிருக்கிறீர்கள். பாபா
சொல்கிறார், உங்களிடம் பக்தியின் சம்ஸ்காரம் இருந்தது. இப்போது
அந்த சம்ஸ்காரம் மாறிக் கொண்டிருக்கிறது என்றால், நீங்கள்
உயிருடன் இருந்து கொண்டே இறந்து விடுகிறீர்கள் அல்லவா?
இறப்பதால் மனிதர்கள் படித்ததெல்லாம் மறந்து போகின்றனர். பிறகு
அடுத்த பிறவியில் புதிதாகப் படிக்க வேண்டியுள்ளது. பாபாவும்
சொல்கிறார், நீங்கள் எதையெல்லாம் படித்திருப்பீர்களோ, அவை
அனைத்தையம் மறந்து விடுங்கள். நீங்களோ பாபாவுடையவர்களாக
ஆகியிருக்கிறீர்கள் தானே? நான் உங்களுக்குப் புது விஷயத்தைச்
சொல்கிறேன். ஆக, இப்போது வேதம், சாஸ்திரம், கிரந்தம், ஜபம்,
தவம் முதலிய அனைத்து விஷயங்களையும் மறந்து விடுங்கள். அதனால்
தான் சொல்லப்பட்டுள்ளது - தீயதைக் கேட்காதீர் கள், தீயதைப்
பார்க்காதீர்கள்.......... இது குழந்தைகளாகிய உங்களுக்கானது.
அநேகர் அதிகம் சாஸ்திரங்கள் முதலியவற்றைப் படித்துள்ளனர்.
முழுமையாக இறக்கவில்லை என்றால் தவறான வாக்குவாதங்கள்
செய்வார்கள். இறந்து விட்டால் பிறகு ஒருபோதும் வாக்குவாதம்
செய்ய மாட்டார்கள். அவர்கள் சொல்வார்கள், பாபா என்ன சொல்கிறாரோ,
அதுவே உண்மையானது. மற்ற விஷயங்களை நாம் ஏன் கொண்டுவர வேண்டும்?
பாபா சொல்கிறார், இதை வாய் மூலம் கொண்டு வரவே வேண்டாம். தீயதைக்
கேட்காதீர்கள். பாபா வழிகாட்டுதல் தந்துள்ளார் இல்லையா? எதையும்
கேட்க வேண்டாம். சொல்லுங்கள், நாங்கள் இப்போது ஞானக்கடலின்
குழந்தைகளாக ஆகியுள்ளோம் எனும்போது பக்தியை ஏன் நினைவு செய்ய
வேண்டும்? ஒவ்வொருவரும் பகவானையே நினைவு செய்கின்றனர். பாபா
சொல்லியிருக்கிறார், பக்தி மார்க்கத்தை மறந்து விடுங்கள். நான்
உங்களுக்கு சகஜமான விஷயங்களைச் சொல்கிறேன் - விதையாகிய என்னை
நினைவு செய்வீர்களானால் மரம் முழுவதும் புத்தியில் வந்து விடும்.
உங்களுக்கு முக்கிய மானது கீதையாகும். கீதையில் தான் பகவானுடைய
ஞானம் உள்ளது. இப்போது இது புது விஷயமாகும். புதிய விஷயத்தில்
எப்போதுமே அதிக கவனம் செலுத்தப்படுகின்றது. அதுவும் மிகவும்
எளிமை யான விஷயம் தான். அனைத்திலும் பெரிய விஷயம் நினைவு
செய்வதற்கானதாகும். மன்மனாபவ என்று அடிக்கடி சொல்ல
வேண்டியுள்ளது. தந்தையை நினைவு செய்யுங்கள். இது தான் மிகவும்
ஆழமான விஷயமாகும். இதில் தான் தடைகள் ஏற்படுகின்றன. அநேகக்
குழந்தை கள் நாள் முழுவதிலும் இரண்டு நிமிடங்கள் கூட நினைவு
செய்வதில்லை. தந்தையுடைய வர்களாக ஆகியும் கூட நல்ல கர்மங்கள்
செய்வதில்லை என்றால் நினைவும் செய்வதில்லை, விகர்மங்கள் செய்து
கொண்டே இருக்கின்றனர். புத்தியில் பதிவதே இல்லை என்றால் இது
தந்தையின் கட்டளையை அவமதிப்பதாகும் என்று சொல்வார்கள். படிக்க
முடியாது, அந்த சக்தி கிடைப்பதில்லை. உலகீயப் படிப்பிலும் கூட
பலம் கிடைக்கிறது இல்லையா? படிப்பு என்பது வருமானத்திற்கு
ஆதாரமாகும். சரீர நிர்வாகம் நடைபெறுவதும் கூட அல்பகாலத்திற்குத்
தான். அநேகர் படித்துப் படித்து இறந்து போகின்றனர் என்றால்
அந்தப் படிப்பை உடன் கொண்டு செல்ல மாட்டார்கள். அடுத்த பிறவி
எடுத்துப் பிறகு புதிதாகப் படிக்க வேண்டியிருக்கும். இங்கோ
நீங்கள் எவ்வளவு படிக்கிறீர்களோ, அதை உடன் எடுத்துச்
செல்வீர்கள். ஏனென்றால் நீங்கள் அதற்கான பலனை அடுத்த பிறவியில்
அடைகிறீர்கள்,. மற்றப்படி மற்றவை அனைத்தும் பக்தி மார்க்கம்.
என்னென்ன பொருட்கள் என்பதை யாரும் அறிந்திருக்க வில்லை.
ஆன்மிகத் தந்தை ஆத்மாக் களாகிய உங்களுக்கு வந்து ஞானத்தைத்
தருகிறார். ஒரே ஒரு தடவை தந்தை சுப்ரீம் ஆத்மா வந்து
ஆத்மாக்களுக்கு ஞானம் தருகிறார். இதன் மூலம் உலகத்தின்
எஜமானர்களாக ஆகி விடுகிறீர்கள். பக்தி மார்க்கத்தில் சொர்க்கமா
இருக்கிறது. இப்போது நீங்கள் செல்வந்தருடைய வராக
ஆகியிருக்கிறீர்கள். மாயா அநேக தடவை குழந்தைகளையும் கூட
அநாதைகளாக ஆக்கி விடுகின்றது. சின்னச் சின்ன விஷயங்களில்
தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றனர். தந்தையின் நினைவில்
இருப்பதில்லை என்றால், ஒன்றுமில்லாத ஏழைகள் ஆகின்றனர் இல்லையா?
அநாதை ஆகி விட்டனர் என்றால் நிச்சயமாக ஏதேனும் பாவ கர்மம்
செய்து விடு வார்கள். பாபா சொல்கிறார், என்னுடையவர்களாக ஆகி
விட்டு என் பெயரைக் கெடுக்காதீர்கள். ஒருவர் மற்றவரிடம்
மிகுந்த அன்போடு நடந்து கொள்ளுங்கள். தலைகீழான பேச்சுகளைப்
பேசாதீர்கள்.
பாபாவுக்கு இப்படிப் பட்ட அகல்யாக்கள், கூனிகள், மற்றும்
மலைஜாதிப் பெண்களையும் கூட உயர்வடையுமாறு செய்ய வேண்டி உள்ளது.
அன்புடன் அளிக்கும் விருந்து மலைஜாதிப் பெண் அளித்தாலும் உண்ண
வேண்டும் எனச் சொல்வார்கள். இப்போது அப்படியெல்லாம் மலைஜாதிப்
பெண் கொடுப்பதை வாங்கிச் சாப்பிட்டுவிட மாட்டார்கள்.
மலைஜாதியிலிருந்து எப்போது பிராமணி ஆகி விடுகிறார்களோ, பிறகு
ஏன் சாப்பிட மாட்டார்கள்? அதனால் பிரம்மா போஜனத்துக்கு மகிமை
உள்ளது. சிவபாபாவோ சாப்பிட மாட்டார். அவரோ அபோக்தா (எதையும்
அனுபவிக்காதவர்). மற்றப்படி இந்த அவருடைய ரதமோ (பிரம்மா)
சாப்பிடுவார் இல்லையா? குழந்தைகள் நீங்கள் யாரிடமும்
வாக்குவாதம் செய்வதற்கான தேவை கிடையாது. எப்போதுமே தன்னைப்
பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டே வார்த்தை
சொல்லுங்கள் - சிவபாபா சொல்கிறார். சிவபாபா தான் ருத்ரன் எனச்
சொல்லப் படுகிறார். ருத்ர ஞான யக்ஞத்திலிருந்து விநாச ஜுவாலை
எழுந்தது என்றால் ருத்ர பகவான் ஆகிறார் இல்லையா? கிருஷ்ணரையோ
ருத்ரன் எனச் சொல்ல மாட்டார்கள். விநாசமும் கூட கிருஷ்ணர்
ஒன்றும் செய்விப் பதில்லை. பாபா தான் ஸ்தாபனை, விநாசம், பாலனை
செய்விக்கிறார். தாமே எதையும் செய்வதில்லை. இல்லையென்றால்
குற்றமாகி விடும். அவர் செய்பவர், செய்விப்பவர். பாபா
சொல்கிறார், விநாசம் செய்யுங்கள் என்று நான் ஒன்றும்
சொல்வதில்லை. இது எல்லாமே டிராமாவில் விதிக்கப்பட்டுள்ளது.
சங்கர் ஏதாவது செய்கிறாரா என்ன? ஒன்றுமில்லை. சங்கர் மூலம்
விநாசம் என்பது வெறும் பாடல் மட்டுமே! மற்றப்படி விநாசமோ
அவர்கள் தாமே செய்து கொள்கின்றனர். இது அநாதி உருவாக்கப்பட்ட
டிராமா என்பது புரிய வைக்கப்படுகின்றது. படைப்பவராகிய தந்தையையே
அனைவரும் மறந்து விட்டுள்ளனர். கடவுளாகிய தந்தை படைப்பவர் எனச்
சொல்கின்றனர். ஆனால் அவரைப் பற்றித் தெரிந்து கொள்ளவில்லை. அவர்
உலகத்தைப் படைக்கிறார் என்று புரிந்து கொண்டுள்ளனர். பாபா
சொல்கிறார், நான் படைப்ப தில்லை, நான் மாற்றம் செய்கிறேன்.
கலியுகத்தை சத்யுகமாக்குகிறேன். நான் சங்கமயுகத்தில் வருகிறேன்.
அதற்காகத் தான் பாடப்பட்டுள்ளது - மிக மேலான மங்களகாரி (நன்மை
செய்யும்) யுகம். பகவான் கல்யாண்காரி, அனைவருக்கும் நன்மை
செய்கிறார். ஆனால் எப்படி மற்றும் என்ன நன்மை செய்கிறார்? இதைப்
பற்றி எதுவும் அறிந்திருக்கவில்லை. ஆங்கிலத்தில் சொல்கின்றனர்,
லிபரேட்டர், கைடு என்று. ஆனால் அதன் அர்த்தத்தைப் புரிந்து
கொள்ளவில்லை. பக்திக்குப் பின் பகவான் கிடைப்பார், சத்கதி
கிடைக்கும் எனச் சொல்கின்றனர். அனைவருக்கும் சத்கதியையோ எந்த
ஒரு மனிதரும் அளிக்க முடியாது. இல்லையென்றால் பரமாத்மாவை
பதீத-பாவனர், அனைவருக்கும் சத்கதி தரும் வள்ளல் என்று ஏன்
பாடப்பட்டுள்ளது? தந்தையை யாருமே அறிந்து கொள்ளவில்லை. ஆதரவற்ற
அநாதைகளாக உள்ளனர். தந்தையிடம் விபரீத புத்தி உள்ளவர்கள்.
இப்போது பாபா என்ன செய்வார்? பாபாவோ தாமே அத்தாரிட்டியாக
இருப்பவர். அவருக்கு சிவஜெயந்தியும் பாரதத்தில்
கொண்டாடுகின்றனர். பாபா சொல்கிறார், பக்தர்களுக்கு பலனைத்
தருவதற்காக நான் வருகிறேன். வருவதும் பாரதத்தில் தான்.
வருவதற்காக எனக்கு சரீரமோ அவசியம் வேண்டும் இல்லையா? பிரேரணை
மூலம் எதுவும் நடைபெறாது. இவருக்குள் பிரவேசமாகி, இவருடைய
வாயின் மூலம் உங்களுக்கு ஞானம் கொடுக்கிறேன். கௌமுக்கின் (பசுவின்
வாய்) விஷயம் கிடையாது. இதுவோ இந்த (பிரம்மாவின்) வாயின்
விஷயமாகும். வாயோ மனிதருடையது தான் வேண்டும். மிருகத்தினுடையது
அல்ல. இந்த அளவு கூட புத்தி வேலை செய்வதில்லை. மற்றொரு பக்கம்
பிறகு பாக்கிய ரதத்தை காட்டுகின்றனர். அவர் எப்படி மற்றும்
எப்போது வருகிறார்? யாருக்கும் ஒரு சிறிதும் தெரியாது. ஆக, பாபா
குழந்தைகளுக்கு வந்து புரிய வைக்கிறார், நீங்கள் வாழ்ந்து
கொண்டே இறந்து விட்டீர்கள் என்றால் பக்தி மார்க்கத்தை
முற்றிலும் மறந்து விடுங்கள். சிவபகவான் சொல்கிறார் - என்னை
நினைவு செய்வீர் களானால் விகர்மங்கள் விநாசமாகி விடும். நான்
தான் பதீத-பாவனன். நீங்கள் பவித்திரமாகி விடுவீர்கள். பிறகு
அனைவரையும் அழைத்துச் செல்வேன். ஒவ்வொரு வீட்டிற்கும்
செய்தியைக் கொடுங்கள். தந்தை சொல்கிறார், என்னை நினைவு
செய்வீர்களானால் விகர்மங்கள் விநாசமாகும். நீங்கள் பவித்திரமாகி
விடுவீர்கள். விநாசம் எதிரிலேயே உள்ளது. நீங்கள் அழைக்கவும்
செய்கிறீர்கள், ஹே பதித-பாவனரே வாருங்கள், பதீதர்களைப்
பாவனமாக்குங்கள், இராமராஜ்யத்தை ஸ்தாபனை செய்யுங்கள், இராவண
இராஜ்யத்திலிருந்து விடுவியுங்கள். அவர்கள் ஒவ்வொருவரும்
தங்கள்-தங்களுக்காகவே முயற்சி செய்கின்றனர். பாபா சொல்கின்றார்.
நான் வந்து அனைவரையும் விடுவிக்கிறேன். அனைவரும் 5 விகாரங்கள்
என்ற சிறையில் உள்ளனர். நான் அனைவருக்கும் சத்கதி அளிக்கிறேன்.
நான் துக்கத்தைப் போக்கி சுகம் தருபவன் எனச் சொல்லவும்
படுகிறேன். இராம ராஜ்யமோ நிச்சயமாகப் புது உலகத்தில் தான்
இருக்கும்.
பாண்டவர்களாகிய உங்களுக்கு இப்போது அன்பான புத்தி. ஒரு
சிலருக்கோ உடனே அன்பான புத்தி ஆகி விடுகின்றது. சிலருக்குக்
கொஞ்சம்-கொஞ்சமாக அன்பான புத்தி சேர்கின்றது. சிலரோ நான்
அனைத்தையும் தந்தைக்கு சமர்ப்பணம் செய்கிறேன் எனச் சொல்கின்றனர்.
ஒரே ஒருவரைத் தவிர வேறு யாரும் கிடையாது. அனைவருக்கும்
ஆதரவளிப்பவர் ஒரு கடவுள் மட்டுமே! எவ்வளவு எளிமையிலும்
எளிமையான விஷயம்! பாபாவை நினைவு செய்யுங்கள், சக்கரத்தை நினைவு
செய்யுங்கள், அப்போது சக்கரவர்த்தி ராஜா-ராணி ஆவீர்கள். இந்தப்
பாடசாலையே உலகத்தின் எஜமானர் ஆவதற்கானது. அதனால் சக்கரவர்த்தி
ராஜா என்ற பெயர் வந்துள்ளது. சக்கரத்தை அறிந்து கொள்வதன் மூலம்
பிறகு சக்கரவர்த்தி ஆகின்றனர். இதை பாபா தான் புரிய வைக்கிறார்.
மற்றப்படி எந்த ஒரு வாக்குவாதமும் செய்யக் கூடாது. பக்தி
மார்க்கத்தின் அனைத்து விஷயங்களையும் விட்டுவிடுங்கள் எனச்
சொல்லுங்கள். பாபா சொல்கிறார், என்னை மட்டும் நினைவு
செய்யுங்கள். முக்கியமான விஷயமே இது தான். தீவிரப்
புருஷார்த்தியாக யார் இருக் கிறார்களோ, அவர்கள் நன்றாகப்
படிப்பில் ஈடுபட்டு விடுகின்றனர். யாருக்கு படிப்பில் ஆர்வம்
உள்ளதோ, அவர்கள் அதிகாலை எழுந்து படிப்பார்கள். பக்தி
செய்பவர்களும் கூட அதிகாலையில் எழுகின்றனர். தீவிர பக்தி
எவ்வளவு செய்கின்றனர்! தலையை வெட்டிக் கொள்ளத் தலைப்படும்
பொழுது சாட்சாத்காரம் கிடைக்கின்றது. இங்கோ பாபா சொல்கிறார்,
இந்த சாட்சாத்காரமும் கூட நஷ்டத்தை ஏற்படுத்தக் கூடியது.
சாட்சாத்காரத்தில் செல்வதால் படிப்பு மற்றும் யோகம் இரண்டுமே
கெட்டுப் போகின்றன. நேரம் வீணாகி விடுகின்றது. அதனால்
டிரான்ஸில் போவது முதலியவற்றில் ஆர்வம் எதுவும் வைக்கக் கூடாது.
இதுவும் பெரிய வியாதியாகும். இதன் மூலம் மாயாவின் பிரவேசம்
நிகழ்ந்து விடுகிறது. எப்படி யுத்தத்தின் சமயம், செய்தி
சொல்கின்றனர் என்றால், இடையில் யாரும் அதைக் கேட்க முடியாதவாறு
அதைக் கொஞ்சம் கெடுத்து விடு கின்றனர். மாயாவும் அநேகருக்கு
விக்னங்களை ஏற்படுத்துகிறது. பாபாவை நினைவு செய்ய விடு வதில்லை.
இவர்களின் அதிர்ஷ்டத்தில் விக்னம் உள்ளது என்பது புரிய
வைக்கப்படுகின்றது. மாயாவின் பிரவேசமோ இல்லாதிருக்கிறதா என்பது
பார்க்கப் படுகின்றது. விதிமுறைக்குப் புறம்பாகவோ, ஏதேனும்
பேசுகின்றனர் என்றாலோ உடனே பாபா கீழே இறக்கி விடுவார். அநேக
மனிதர்கள் - எங்களுக்கு சாட்சாத்காரம் மட்டும் கிடைக்குமானால்
இவ்வளவு செல்வம், பொருட்கள் அனைத்தையும் உங்களுக்குத் தந்து
விடுவோம் என்று சொல்கின்றனர். ஆனால் பாபா சொல்கிறார், இதை
நீங்கள் உங்களிடமே வைத்துக் கொள்ளுங்கள். பகவானுக்கு உங்கள்
பைசாவுக்கான தேவை என்ன உள்ளது? பாபாவோ அறிவார், இந்தப் பழைய
உலகத்தில் என்னென்ன உள்ளதோ, அனைத்தும் பஸ்மமாகி விடும். பாபா
என்ன செய்வார்? பாபாவிடமோ துளித்துளியாகச் சேர்ந்து குளமாகி
விடுகிறது. பாபாவின் வழிகாட்டுதல் படி செல்லுங்கள்.
மருத்துவமனையுடன் கூடிய பல்கலைக்கழகம் திறந்து வையுங்கள். அங்கே
யாராவது வந்து உலகத்தின் எஜமானர் ஆக முடியும். மூன்றடி
நிலத்தில் அமர்ந்து மனிதரை நரனிலிருந்து நாராயணனாக ஆக்க
வேண்டும். ஆனால் மூன்றடி நிலமும் கூடக் கிடைப்பதில்லை. பாபா
சொல்கிறார், நான் உங்களுக்கு அனைத்து வேத-சாஸ்திரங்களின்
சாரத்தைச் சொல்கிறேன். இவையனைத்தும் பக்தி மார்க்கத்தின்
சாஸ்திரங்களாகும். பாபா ஒன்றும் நிந்தனை செய்ய வில்லை. இதுவோ
உருவாக்கப்பட்ட விளையாட்டாகிறது. இது புரிய வைப்பதற்காக மட்டுமே
சொல்லப் படுகின்றது. பிறகும் கூட விளையாட்டு தான் இல்லையா?
விளையாட்டை நாம் நிந்தனை செய்வதில்லை. நாம் சொல்கிறோம், ஞான
சூரியன், ஞானச் சந்திரன் என்றால், பிறகு அவர்கள் சந்திரன்
முதலியவற்றில் போய்த் தேடுகின்றனர். அங்கே ஏதேனும் இராஜ்யம்
வைக்கப் பட்டுள்ளதா என்ன? ஜப்பானியர்கள் சூரியனை
வணங்குதற்குரியதாக ஏற்றுக் கொண்டுள்ளனர். சூரியவம்சி என்று நாம்
சொல்கிறோம். அவர்கள் பிறகு சூரியனுக்கு பூஜை செய்கின்றனர்.
சூரியனுக்குத் தண்ணீர் தருகின்றனர். ஆக, பாபா குழந்தை களுக்குப்
புரிய வைத்துள்ளார், எந்த ஒரு விஷயத்திலும் அதிகம் வாக்குவாதம்
செய்ய வேண்டாம். ஒரே வார்த்தையில் சொல்லுங்கள், பாபா சொல்கிறார்
- என்னை மட்டுமே நினைவு செய்வீர்களானால் பாவனமாகி விடுவீர்கள்.
இப்போது இராவண இராஜ்யத்தில் அனைவருமே பதீதமாக உள்ளனர். ஆனால்
தன்னைப் பதிதம் என்று யாரும் ஏற்றுக் கொள்வதில்லை.
குழந்தைகளே, உங்களுடைய ஒரு கண்ணில் சாந்திதாமம், இன்னொரு
கண்ணில் சுகதாமம் இருக்க வேண்டும். மற்றப்படி இந்த துக்கதாமத்தை
மறந்து விடுங்கள். நீங்கள் சைதன்ய லைட்ஹவுஸாக இருக்கிறீர்கள்.
இப்போது கண்காட்சியிலும் பெயர் வைக்கப் பட்டுள்ளது - பாரத் தி
லைட் ஹவுஸ்..... ஆனால் அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
இப்போது நீங்கள் லைட் ஹவுஸ் இல்லையா? துறைமுகத்தில் லைட் ஹவுஸ்
கப்பலுக்கு வழி காட்டு கின்றது. நீங்களும் அனைவருக்கும்
முக்தி-ஜீவன்முக்தி தாமத்திற்கான வழி சொல்கிறீர்கள். யாராவது
கண்காட்சிக்கு வரும்போது மிகுந்த அன்போடு சொல்லுங்கள் -
காட்ஃபாதரோ அனைவருக்கும் ஒருவர் தானே? காட்ஃபாதர் அல்லது
பரமபிதா சொல்கிறார், என்னை நினைவு செய்யுங்கள் என்றால்
நிச்சயமாக வாயின் மூலமாகத் தான் சொல்வார் இல்லையா? பிரம்மா
மூலம் ஸ்தாபனை, நாம் அனைவரும் பிரம்மா முகவம்சாவளி
பிராமண்-பிராமணிகள். பிராமணர்களாகிய உங்களுக்கு அந்த பிராமணர்
களும் கூட மகிமை பாடுகின்றனர், பிராமண் தேவதாய நமஹ.
உயர்ந்தவரிலும் உயர்ந்தவர் ஒரு தந்தை மட்டுமே! அவர் சொல்கிறார்,
நான் உங்களுக்கு உயர்ந்ததிலும் உயர்ந்த இராஜயோகம் கற்பிக்கிறேன்.
இதன் மூலம் நீங்கள் முழு உலகத்திற்கும் எஜமானர்களாக ஆகிறீர்கள்.
அந்த இராஜ்யத்தை உங்களிடமிருந்து யாராலும் அபகரிக்க முடியாது.
உலகத்தின் மீது பாரதத்தின் இராஜ்யம் இருந்தது. பாரதத்திற்கு
எவ்வளவு மகிமை! இப்போது நீங்கள் அறிவீர்கள், நாம் ஸ்ரீமத் படி
இந்த இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம். நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) தீவிர புருஷார்த்தி ஆவதற்காக படிப்பில் ஆர்வம் வைக்க
வேண்டும். அதிகாலையில் எழுந்து படிப்பைப் படிக்க வேண்டும்.
சாட்சாத்காரத்தின் ஆசை வைக்கக் கூடாது. இதிலும் கூட நேரம்
வீணாகின்றது.
2) சாந்திதாமம் மற்றும் சுகதாமத்தை நினைவு செய்ய வேண்டும்.
இந்த துக்கதாமத்தை மறந்துவிட வேண்டும். யாரிடமும் வாக்குவாதம்
செய்யக் கூடாது. அன்போடு முக்தி மற்றும் ஜீவன்முக்திக்கான வழி
சொல்ல வேண்டும்.
வரதானம்:
சதா சுகங்களின் கடலில் மூழ்கி இருக்கக்கூடிய அந்தர்முகி ஆகுக.
அந்தர்முகி சதா சுகி (உள்முகநோக்கில் இருப்பவர்கள் எப்போதும்
சுகமாக இருப்பார்கள்) என்று சொல்லப் படுகிறது. எந்தக்
குழந்தைகள் சதா அந்தர்முகி என்ற வரதானத்தைப் பெறுகிறார்களோ,
அவர்கள் பாபாவுக்கு சமமாக சதா சுகத்தின் கடலில் மூழ்கி
இருப்பார்கள். சுகம் தரும் வள்ளலின் குழந்தைகள், தாங்களும்
சுகம் தரும் வள்ளலாகி விடுகின்றனர். ஆத்மாக்கள் அனைவர்க்கும்
சுகத்தின் கஜானாவையே பகிர்ந்தளிக்கின்றனர். எனவே இப்போது
அந்தர்முகி ஆகி, அந்த மாதிரி அனைத்தும் நிரம்பிய மூர்த்தி ஆகி
விடுங்கள் -- உங்களிடம் யார் எந்த ஒரு பாவனையோடு வந்தாலும்
தங்கள் பாவனையை நிறைவேற்றிக் கொண்டு செல்வார்கள். எப்படி
பாபாவின் கஜானாவில் கிடைக்காத எந்த ஒரு பொருளும் இல்லை.
நீங்களும் கூட பாபாவுக்கு சமமாக அனைத்தும் நிரம்பியவர் ஆகுங்கள்.
சுலோகன்:
ஆன்மிகப் பெருமிதத்தில் இருப்பீர்களானால் ஒரு போதும்
அபிமானத்தின் உணர்வு (ஃபீலிங்) வராது.
ஏகாந்தப் பிரியர் ஆகுங்கள், ஒற்றுமை மற்றும் ஒருமுகத்தன்மையைத்
தனதாக்குங்கள்
தன்னை சதா அண்டர்கிரவுண்ட், அதாவது அந்தர்முகி ஆக்குவதற்கான
முயற்சி செய்யுங்கள். அண்டர்கிரவுண்டிலும் கூட அனைத்துக்
காரியங்களும் நடைபெறுகின்றன. அதே போல் அந்தர் முகி ஆகியும்
காரியங்களைச் செய்ய முடியும். அந்தர்முகி ஆகிக் காரியம்
செய்வதால், ஒன்று – விக்னங்களில் இருந்து தப்பிக்க முடியும்.
இரண்டாவது, சமயம் மிச்சமாகும். மூன்றாவது, சங்கல்பங்கள்
சேமிப்பாகும். ஏகாந்தவாசியாக இருப்பதோடு, (மனதை மகிழ்விக்கும்)
ரமணீகரத் தன்மையும் அந்த அளவு இருக்கும்.