19-04-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! எல்லையற்ற
தந்தையிடம் நேர்மையாக இருந்தீர்கள் என்றால் முழுமையான சக்தி
கிடைக்கும், மாயை மீது வெற்றி அடைந்துக் கொண்டே இருக்க முடியும்.
கேள்வி:
பாபாவிடம் என்ன ஒரு முக்கியமான
அதிகாரம் இருக்கிறது? அதனுடைய அடையாளம் என்ன?
பதில்:
பாபாவிடம் முக்கியமாக ஞானத்தின்
அதிகாரம் இருக்கிறது. ஞானக்கடலாக இருக்கின்றார் ஆகையினால் தான்
குழந்தைகளாகிய உங்களுக்கு படிப்பை கற்றுத்தருகின்றார். தனக்குச்
சமமாக ஞானக்கடலாக மாற்றுகின்றார். உங்களிடம் படிப்பினுடைய
குறிக்கோள் இருக்கிறது. நீங்கள் இந்த படிப்பின் மூலம் தான்
உயர்ந்த பதவியை அடைகிறீர்கள்.
பாடல்:
மாறி விடட்டும் உலகம்.......
ஓம் சாந்தி.
பக்தர்கள் பகவானுடைய மகிமையை செய்கிறார்கள். ஆனால் நீங்கள்
பக்தர்கள் கிடையாது. நீங்கள் அந்த பகவானுடைய குழந்தைகளாக ஆகி
விட்டீர்கள். அதுவும் நேர்மையான குழந்தைகளாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு விசயத்திலும் நேர்மையாக இருக்க வேண்டும். மனைவியை தவிர
கணவனுக்கோ அல்லது கணவனைத் தவிர மனைவிக்கோ வேறு பக்கம் பார்வை
சென்றது என்றால் அவர்களைக் கூட நேர்மையற்றவர்கள் என்றே சொல்ல
முடியும். இப்போது இங்கே கூட எல்லையற்ற தந்தை இருக்கின்றார்.
அவரிடம் கூட நேர்மையற்ற மற்றும் நேர்மையானவர்கள் இருவருமே
இருக்கிறார்கள். நேர்மையானவர்களாக ஆகி பிறகு நேர்மையற்ற
வர்களாக ஆகி விடுகிறார்கள். பாபா தான் உயர்ந்த அதிகாரமுடையவர்.
சர்வசக்திவான் அல்லவா. எனவே அவருடைய குழந்தைகளும் அப்படி
இருக்க வேண்டும். பாபாவிடம் சக்தி இருக்கிறது, குழந்தைகளுக்கு
இராவணன் மீது வெற்றி அடைவதற்கான யுக்தியை கூறுகின்றார்
ஆகையினால் அவரை சர்வசக்திவான் என்று சொல்லப்படுகிறது. நீங்களும்
சக்தி சேனைகள் அல்லவா. நீங்கள் தங்களையும் சர்வசக்திவான் என்று
சொல்லலாம். பாபாவிடம் என்ன சக்தி இருக்கிறதோ அதை நமக்கு
கொடுக்கின்றார், நீங்கள் மாயை இராவணன் மீது எப்படி வெற்றி
அடையலாம் என்று கூறுகின்றார், எனவே நீங்களும் கூட
சக்திசாலிகளாக ஆக வேண்டும். பாபா ஞானத்தின் அதிகார முடையவராக
இருக்கின்றார். ஞானக்கடல் அல்லவா. எப்படி அவர்கள்
சாஸ்திரங்களின், பக்தி மார்க்கத்தின் அதிகாரமுடையவர்களாக
இருக்கிறார்களோ, அதுபோல் இப்போது நீங்கள் சர்வசக்தி வான்
அதிகாரமுடைய ஞானக்கடலாக ஆகின்றீர்கள். உங்களுக்கும் ஞானம்
கிடைக்கிறது. இது பாட சாலையாகும். இதில் எந்த ஞானத்தை நீங்கள்
படிக்கிறீர்களோ, இதன்மூலம் நீங்கள் உயர்ந்த பதவி அடையலாம்.
இந்த ஒரே ஒரு பாடசாலை தான் உள்ளது. நீங்கள் இங்கே படிக்க
வேண்டும் வேறு எந்த வழிபாடும் செய்ய வேண்டியதில்லை. உங்களுக்கு
படிப்பின் மூலம் ஆஸ்தி கிடைக் கிறது, குறிக்கோள் இருக்கிறது.
பாபா ஞானக் கடலாக இருக்கின்றார், அவருடைய படிப்பு முற்றிலும்
வித்தியாசமானது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள்.
பாபா தான் ஞானக்கடல் எனும்போது அவர் தான் தெரிந்திருப்பார்
அல்லவா. அவர் தான் நமக்கு சிருஷ்டியின் முதல்-இடை-கடைசியின்
ஞானத்தை கொடுக்கின்றார். வேறு யாரும் கொடுக்க முடியாது. பாபா
நேரடியாக வந்து ஞானத்தை கொடுத்து விட்டு பிறகு சென்று
விடுகின்றார். இந்த படிப்பினுடைய பலனாக என்ன கிடைக்கிறது
என்பதையும் நீங்கள் தெரிந்துள்ளீர்கள். மற்ற சத்சங்கங்கள் என்ன
வெல்லாம் இருக்கின்றதோ அல்லது குருமார்கள் இருக்கிறார்களோ
அவையனைத்தும் பக்தி மார்க்கத்தினுடையதாகும். இப்போது உங்களுக்கு
ஞானம் கிடைத்துக் கொண்டிருக்கிறது. அவர் களிலும் யாராவது
இவ்விடத்தைச் சேர்ந்தவர் களாக இருந்தால் வந்து விடுவார்கள்
என்பதையும் தெரிந்துள்ளீர்கள். குழந்தைகளாகிய நீங்கள்
சேவைக்கான வித-விதமான யுக்திகளை உருவாக்க வேண்டும். தங்களுடைய
அனுபவத்தைச் சொல்லி அனேகருடைய பாக்கியத்தை உருவாக்க வேண்டும்.
சேவாதாரி குழந்தைகளாகிய உங்களுடைய மன நிலை மிகவும் பயமற்ற
தாகவும், நிலையானதாகவும் மற்றும் யோகம் நிறைந்ததாகவும் இருக்க
வேண்டும். யோகத்தில் இருந்து சேவை செய்தீர்கள் என்றால் வெற்றி
கிடைக்கும்.
குழந்தைகளே, நீங்கள் தங்களை முழுமையாக பாதுகாத்துக் கொள்ள
வேண்டும். ஒருபோதும் ஆவேசம் (சினம்) போன்றவை வரக்கூடாது, யோகம்
நிறைந்த தன்மையின் உறுதியாக இருக்க வேண்டும். உண்மையில் நீங்கள்
அனைவரும் வானப்பிரஸ்திகளாவீர்கள், சப்தத்தைக் கடந்த நிலையில்
இருக்கக் கூடியவர்கள். வானப்பிரஸ்திகள் என்றால் சப்தத்தை கடந்த
வீடு மற்றும் பாபாவை நினைவு செய்யக் கூடியவர்கள். இதைத் தவிர
வேறு எந்த ஆசையும் இல்லை. எங்களுக்கு நல்ல ஆடை வேண்டும்,
இவையனைத்தும் மோசமான ஆசைகளாகும். தேக-அபிமான முடையவர்கள் சேவை
செய்ய முடியாது. ஆத்ம-அபிமானியாக ஆக வேண்டும். பகவானுடைய
குழந்தைகளுக்கு சக்தி வேண்டும். யோகத்தினுடைய சக்தியாகும். பாபா
அனைத்து குழந்தை களையும் தெரிந்து கொள்ள முடியும் அல்லவா.
இந்த-இந்த குறைகள் இருக்கின்றன என்று பாபா உடனே சொல்லி விடுவார்.
பாபா புரிய வைத்துள்ளார், சிவனுடைய கோயிலுக்குச் செல்லுங்கள்,
அங்கே உங்களுக்கு நிறைய பேர் கிடைப்பார்கள். நிறைய பேர்
காசிக்கு சென்று வசிக்கிறார்கள். காசிநாதர் நமக்கு நன்மை
செய்வார் என்று புரிந்து கொள்கிறார்கள். அங்கே உங்களுக்கு
நிறைய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள், ஆனால் இதில் மிகவும்
புத்திசாலியானவர்கள் வேண்டும். கங்கையில் குளிப்பவர்களுக்கு
சென்று புரிய வைக்கலாம். கோயில் களுக்கு சென்று புரிய
வையுங்கள்.மறைமுகமான வேடத்தில் செல்லலாம் .ஹனுமானுடைய உதாரணம்
கூட இருக்கிறது. உண்மையில் அது நீங்கள் தானே. செருப்புகளின்
மீது அமரும் விஷயம் இல்லை. இதில் மிகவும் புரிதலும்
புத்திசாலித்தனமும் வேண்டும். இப்போது யாரும் கர்மாதீத்
ஆகவில்லை என்று பாபா புரிய வைத்துள்ளார். ஏதாவது சில குறைகள்
கண்டிப்பாக இருக்கின்றன.
இந்த ஒரு கடைக்குத் தான் அனைவரும் வர வேண்டும் என்ற போதை
குழந்தைகளாகிய உங்களுக்கு இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு இந்த
சன்னியாசிகள் போன்ற அனைவரும் வருவார்கள். ஒரு கடை தான்
இருக்கிறது எனும்போது வேறு எங்கு செல்வார்கள். யார் அதிகம்
அலைந்திருப்பார்களோ, அவர்களுக்குத் தான் வழி கிடைக்கும். மேலும்
இந்த ஒரு கடை தான் இருக்கிறது என்று புரிந்து கொள்வார்கள்.
அனைவருக்கும் சத்கதியை வழங்கும் வள்ளல் ஒரு பாபா ஆவார். இப்படி
எப்போது போதை ஏறுகிறதோ அப்போது தான் அதன் (உண்மையான) விசயம்
இருக்கிறது. பாபாவிற்கு இந்த கவலை தான் இருக்கிறது அல்லவா -
நான் தூய்மை யற்றவர்களை தூய்மையாக்கி சாந்திதாமம்-சுகதாமத்தின்
ஆஸ்தியை கொடுக்கத்தான் வந்துள்ளேன். உங்களுடைய தொழிலும் இதுவே
ஆகும். அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டும். இது பழைய உலகமாகும்.
இதனுடைய ஆயுள் எவ்வளவு? இந்த பழைய உலகம் அழிய வேண்டும் என்று
கொஞ்ச நேரத்தில் புரிந்து கொள்வார்கள். அனைத்து
ஆத்மாக்களுக்கும் இது புத்தியில் வரும், புதிய உலகத்தின்
ஸ்தாபனை நடந்தால் தான் பழைய உலகம் வினாசம் ஆகும். உண்மையில்
பகவான் இங்கே இருக்கின்றார் என்பது இன்னும் போகப்போக
சொல்வார்கள். படைக்கக் கூடிய தந்தையையே மறந்து விட்டார்கள்.
திருமூர்த்தியில் சிவனுடைய சித்திரத் தையே எடுத்து விட்டார்கள்,
எனவே ஒரு காரியத்திற்கும் பயன்படாமல் போய்விட்டது. படைப்பவர்
அவர் அல்லவா. சிவனுடைய சித்திரம் வந்தவுடன் பிரம்மாவின் மூலம்
ஸ்தாபனை என்பது தெளிவாகிறது. பிரஜாபிதா பிரம்மா இருந்தால்
கண்டிப்பாக பிரம்மாகுமார குமாரிகளும் இருக்க வேண்டும். பிராமண
குலம் அனைத்திலும் உயர்ந்ததாக இருக்கிறது. பிரம்மாவின்
குழந்தைகள். பிராமணர்களை எவ்வாறு படைக்கின்றார் என்பதைக் கூட
யாரும் தெரிந்திருக்க வில்லை. பாபா தான் வந்து உங்களை
சூத்திரனிலிருது பிராமணர்களாக மாற்றுகின்றார். இது மிகவும்
சிக்கலான விசயங்களாகும். பாபா எப்போது நேரடியாக வந்து புரிய
வைக்கின்றாரோ, அப்போது தான் புரிந்து கொள்ள முடியும். யார்
தேவதைகளாக இருந்தார்களோ அவர்கள் சூத்திரர்களாகியுள்ளார்கள்.
இப்போது அவர்களை எப்படி தேடுவது என்று யுக்திகளை உருவாக்க
வேண்டும். இவர்கள் பிரம்மா குமார குமாரிகள் என்று புரிந்து
கொள்வது மிகவும் பெரிய காரியமாகும். எவ்வளவு நோட்டீஸ்
போன்றவைகள் வினியோகிக்கப்படுகிறது. பாபா விமானத் திலிருந்து
நோட்டீஸ் (துண்டு பிரசுரம்) போடும்படி புரிய வைத்துள்ளார்.
குறைந்தது நாளேடுகளின் ஒரு தாள் அளவிற்கு இருக்க வேண்டும்,
அதில் முக்கியமாக ஏணிப்படி போன்றவைகளும் வரலாம். முக்கியமானது
ஆங்கிலம் மற்றும் ஹிந்தி பாஷையாகும். எனவே முழு நாளும் எப்படி
சேவையை அதிகரிப்பது என்ற சிந்தனை இருக்க வேண்டும். நாடகத்தின்
படி முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. இவர்கள் நன்றாக சேவை
செய்கிறார்கள், இவர்களுடைய பதவி உயர்ந்ததாக இருக்கும் என்று
புரிந்து கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு நடிகருக்கும் அவரவருடைய
நடிப்பு இருக்கிறது, இந்த வரியையும் கண்டிப்பாக எழுத வேண்டும்.
பாபாவும் கூட இந்த நாடகத்தில் நிராகார உலகத்திலிருந்து வந்து
பௌதீக உடலை ஆதாரமாக எடுத்து நடிப்பை நடிக்கின்றார். யார்-யார்
எவ்வளவு நடிப்பை நடிக்கிறார்கள் என்பது இப்போது உங்களுடைய
புத்தியில் இருக்கிறது? எனவே இந்த வரியும் முக்கியமானதாகும்.
இந்த சிருஷ்டி சக்கரத்தை தெரிந்து கொள்வதின் மூலம் மனிதர்கள்
சுயதரிசன சக்கரதாரிகளாக ஆகி சக்கரவர்த்தி ராஜாவாக உலகத்திற்கு
எஜமானர்களாக ஆக முடியும் என்று நிரூபித்துச் சொல்ல வேண்டும்.
உங்களிடத்தில் முழு ஞானமும் இருக்கிறது அல்லவா. பாபாவிடம்
கீதையின் ஞானம் தான் இருக்கிறது, இதன்மூலம் மனிதர்கள்
நரனிலிருந்து நாராயணனாக ஆகிறார்கள். முழு ஞானமும் புத்தியில்
வந்து விட்டால் பிறகு முழு இராஜ்யமும் வேண்டும். எனவே
குழந்தைகள் இப்படி-இப்படியெல்லாம் சிந்தனை செய்து பாபாவின்
சேவையில் ஈடுபட வேண்டும்.
ஜெய்பூரிலும் கூட ஆன்மீக அருங்காட்சியகம் எப்போதும் நிரந்தரமாக
இருக்கும். இதை புரிந்து கொள்வதின் மூலம் மனிதர்கள் உலகத்திற்கு
எஜமானர்களாக ஆகலாம் என்று எழுதப்பட்டுள்ளது. யார்
பார்க்கிறார்களோ, அவர்கள் ஒருவர் மற்றவருக்கு சொல்லிக் கொண்டே
இருப்பார்கள். குழந்தைகள் எப்போதும் சேவையில் இருக்க வேண்டும்.
மம்மாவும் கூட சேவையில் இருக்கிறார், அவர் எவ்வாறு
நியமிக்கப்பட்டுள்ளார். சரஸ்வதி யார் என்பதெல்லாம்
சாஸ்திரங்களில் இல்லை? பிரஜாபிதா பிரம்மாவிற்கு ஒரு குழந்தை
தான் இருந்திருப்பாரா என்ன? அனேக குழந்தைகள் அனேக
பெயருடையவர்கள் இருப்பார்கள் அல்லவா. அவர்
தத்தெடுக்கப்பட்டவராக இருந்தார். எப்படி நீங்கள்
தத்தெடுக்கப்பட்டவர்களாக இருக்கின்றீர்களோ, அப்படி. ஒரு தலைவர்
சென்றுவிடு கிறார் என்றால் பிறகு வேறொருவரை நியமிக்கப்படுகிறது.
பிரதம மந்திரியையும் மற்றொருவரை நியமிக்கிறார்கள்.
தகுதியானவர்களாக புரிந்து கொள்ளப்படுகிறது, ஆகையினால் தான் அவரை
விரும்புகிறார்கள் பிறகு (பதவி) காலம் முடிந்து விடுகிறது
என்றால் பிறகு மற்றொருவரை தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. நீங்கள்
யாருக்கு எப்படி மரியாதை அளிக்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு
முதலில் நடந்துக் கொள்ளும் முறையை கற்றுக் கொடுக்கப்படுகிறது.
படிக்காதவர்களுக்கு யாருக்கு எப்படி மரியாதை அளிப்பதைப் பற்றி
தெரிவதில்லை. யார் அதிகம் கூர்மையானவர்களாக இருக்கிறார்களோ
அவர்களுக்கு அனைவரும் மதிப்பு வைக்க வேண்டும். பெரியவர்களுக்கு
மதிப்பு வைப்பதின் மூலம் அவர்களும் கற்றுக் கொள்வார்கள்.
படிக்காதவர்கள் முட்டாள்களாக இருக்கிறார்கள். பாபாவும் கூட
படிக்காதவர்களை வந்து உயர்த்தியுள்ளார். இன்றைய காலகட்டத்தில்
பெண்களை முன்னால் வைக்கிறார்கள். ஆத்மாக்களாகிய நம்முடைய
நிச்சயதார்த்தம் பரமாத்மாவோடு நடந்துள்ளது என்பதை
குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர் கள். நாம் சென்று
விஷ்ணுபுரிக்கு எஜமானர்களாக ஆவோம் என்று நீங்கள் மிகவும்
குஷியடை கிறீர்கள். கன்னியர்களுக்கு பார்க்காமலே கூட
புத்தியோகம் ஈடுபட்டு விடுகிறது அல்லவா. இந்த ஆத்மா மற்றும்
பரமாத்மாவின் நிச்சயம் மிகவும் அதிசயமானது என்பதையும் ஆத்மா
தெரிந்துள்ளது. ஒரு பாபாவைத் தான் நினைவு செய்ய வேண்டும்.
அவர்கள் குருவை நினைவு செய்யச் சொல்வார்கள், இந்த மந்திரத்தை
நினைவு செய்யுங்கள் என்று சொல்வார்கள். இங்கே பாபா தான்
அனைத்துமாக இருக்கின்றார். வந்து இவரின் மூலம் நிச்சயம்
செய்விக்கின்றார். நான் உங்களுடைய தந்தையாகவும் இருக்கின்றேன்,
என்னிடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறது. கன்னிகைக்கு நிச்சயம்
நடக்கிறது என்றால் பிறகு மறப்பதில்லை. பிறகு நீங்கள் ஏன்
மறக்கின்றீர் கள்? கர்மாதீத் நிலையை அடைவதற்கு நேரம்
பிடிக்கிறது. கர்மாதீத் நிலையை அடைந்து விட்டு யாரும் திரும்பி
செல்ல முடியாது. முதலில் பிரியதர்ஷன் செல்ல வேண்டும் பிறகு தான்
ஊர்வலம் செல்ல முடியும். சங்கருடைய விஷயம் இல்லை, சிவனின்
ஊர்வலம். ஒரு பிரிய தர்ஷன் மற்றவர்கள் அனைவரும்
பிரியதர்ஷனிகளாவர். எனவே இது சிவபாபாவினுடைய ஊர்வலமாகும்.
குழந்தையினுடைய பெயரை வைத்து விட்டார்கள். உதாரணம் கொடுத்து
புரிய வைக்கப்படுகிறது. பாபா வந்து அனைவரையும் மலர்களாக்கி
அழைத்துச் செல்கின்றார். எந்த குழந்தைகள் காம சிதையில் அமர்ந்து
தூய்மை யற்றவர்களாக ஆகி விட்டார்களோ, அவர்களை ஞான சிதையில்
அமர்த்தி மலர்களாக்கி அனைவரையும் அழைத்துச் செல்கின்றார். இது
பழைய உலகம் அல்லவா. ஒவ்வொரு கல்பமும் பாபா வருகின்றார். நான்
வந்து மோசமானவர்களை மலர்களாக்கி அழைத்துச் செல்கின்றேன்.
இராவணன் மோசமானவர்களாக்குகின்றான் மற்றும் சிவபாபா மலர்களாக
மாற்றுகின்றார். ஆக பாபா நிறைய யுக்திகளை புரிய வைத்துக் கொண்டே
இருக்கின்றார். நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு
நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீக
தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) அன்ன ஆகாரங்களில் மோசமான விருப்பங்களை விட்டு விட்டு ஆத்ம-
அபிமானியாக ஆகி சேவை செய்ய வேண்டும். நினைவின் மூலம் சக்தி
அடைந்து பயமற்ற மற்றும் ஆடாத நிலையை உருவாக்க வேண்டும்.
2) யார் படிப்பில் கூர்மையாக புத்திசாலிகளாக இருக்கிறார்களோ,
அவர்களுக்கு மதிப்பு வைக்க வேண்டும். யார் அலைந்து
கொண்டிருக்கிறார்களோ, அவர்களுக்கு வழியைச் சொல்ல யுக்திகளை
உருவாக்க வேண்டும். அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டும்.
வரதானம்:
தன்னுடைய மகத்துவம் மற்றும் கடமையை அறிந்திருக்கக்கூடிய சதா
ஒளிரும் சுடர் ஆகுக.
குழந்தைகளாகிய நீங்கள் உலகத்தின் ஒளி ஆவீர்கள். உங்களுடைய
மாற்றத்தினால் உலகத்தின் மாற்றம் ஏற்பட வேண்டும். ஆகையினால்,
கடந்தவற்றிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, தன்னுடைய
மகத்துவம் மற்றும் கடமையை அறிந்து கொண்டு சதா ஒளிரும் சுடர்
ஆகுக. நீங்கள் நொடியில் சுயமாற்றத்தின் மூலம் உலக மாற்றம்
செய்ய முடியும். இந்த நொடி கர்மயோகி நிலை, அடுத்த நொடி
கர்மாதீத நிலை என்ற இந்தப் பயிற்சியை மட்டும் செய்யுங்கள்.
எவ்வாறு உங்களுடைய படைப்பான ஆமை நொடியில் அனைத்து அங்கங்களையும்
அடக்கிக் கொள்கின்றதோ, அதுபோல் மாஸ்டர் படைப்பாளராகிய நீங்கள்
புலனடக்கும் சக்தியின் ஆதாரத்தினால் நொடியில் அனைத்து
எண்ணங்களையும் அடக்கி ஒரு எண்ணத்தில் நிலைத்துவிடுங்கள்.
சுலோகன்:
அன்பில் மூழ்கிய நிலையை அனுபவம் செய்வதற்காக நினைவு,
மாதேஷ்வரிஜியின் மதுர மகா வாக்கியம் அரைக்கல்பம் ஞானம்
பிரம்மாவின் பகல் மற்றும் அரைக்கல்பம் பக்தி பிரம்மாவின் இரவு
அரைக்கல்பம் பிரம்மாவின் பகல், அரைக்கல்பம் பிரம்மாவின் இரவு.
இப்பொழுது பரமாத்மா வந்து இருளை முடித்து ஒளியை ஆரம்பித்து
வைக்கிறார். ஞானத்தினால் வெளிச்சம் ஏற்படுகிறது. பக்தி யினால்
இருள் ஏற்படுகிறது. இந்த பாவங்களின் உலகத்திலிருந்து தூரமாக
எங்காவது அழைத்துச் செல்லுங்கள். இந்த நிம்மதியில்லா
உலகத்திலிருந்து மனம் அமைதி பெறும் உலகிற்கு எடுத்துச்
செல்லுங்கள் என்று பாடலும் பாடுகிறார்கள். முக்தியில் அமைதி,
அமைதியின்மை என்று எதுவும் கிடையாது. சத்யுகம் திரேதா என்பது
அமைதியான உலகம். அந்த சுகதாமத்தை அனைவரும் நினைவு செய்கிறார்கள்.
எனவே இப்பொழுது நீங்கள் அமைதியான உலகிற்குச் சென்று கொண்டி
ருக்கிறீர்கள். அங்கு எந்த ஒரு தூய்மையற்ற ஆத்மாவும் செல்ல
முடியாது. அவர்கள் கடைசியில் தர்மராஜரிடம் தண்டனைகள் பெற்று,,
பந்தனத்திலிருந்து விடுபட்டு, தூய்மையான சம்ஸ்காரம் (பழக்க
வழக்கங்களை) எடுத்துச் செல்வார்கள். ஏனெனில் அங்கு தீய பழக்க
வழக்கங்கள் இருப்பதில்லை. பாவமும் ஏற்படாது. ஆத்மா தனது
உண்மையான தந்தையை மறந்து விடும் பொழுது இந்த கண்ணாம்பூச்சி
அநாதி விளையாட்டு - வெற்றி தோல்வினுடையதாக அமைக்கப் பட்டுள்ளது.
எனவே நாம் இந்த சர்வ சக்தி வான் பரமாத்மா மூலமாக சக்தி பெற்று
விகாரங்களின் மீது வெற்றி அடைந்து 21 பிறவிகளுக்கு இராஜ்ய
பாக்கியம் பெற்றுக் கொண்டிருக்கிறோம். நல்லது. ஓம் சாந்தி.
மறதியின் யுத்தத்தை முடிவடையச் செய்யுங்கள்.
அவ்யக்த சமிக்ஞை - இணைந்த ரூபத்தின் நினைவினால் சதா வெற்றியாளர்
ஆகுங்கள்.
ஆத்மாவாகிய என்னை இயக்குபவர் அந்த பரம ஆத்மா ஆவார்.
செய்விப்பவர் என்பதன் ஆதாரத்தில் நான் நிமித்தமாகி செய்பவர்
ஆவேன். நான் செய்பவர், அவர் செய்விப்பவர். அவர் இயக்கிக் கொண்டு
இருக்கின்றார், நான் இயங்கிக் கொண்டு இருக்கின்றேன். ஒவ்வொரு
வழிகாட்டலின்படி நடப்பதில், ஆத்மாவாகிய எனக்காக, எண்ணம், சொல்,
செயலில் சதா இறைவன் ஆஜராகி இருக்கின்றார், ஆகையினால்,
இறைவனுக்கு முன்னால் சதா ஆத்மாவாகிய நானும் ஆஜராகி
இருக்கின்றேன். சதா இந்த இணைந்த ரூபத்தில் இருங்கள்.