19.10.25 காலை முரளி
ஓம் சாந்தி 31.03.2007 பாப்தாதா,
மதுபன்
நல்ல குழந்தையாகி தனது தோற்றத்தின் மூலம் தந்தையின் தோற்றத்தை
வெளிப்படுத்துங்கள், நிர்மாணிப்பின் (சேவையின்) கூடவே
நிர்மலமான வார்த்தை, பணிவான ஸ்திதியில் சமநிலையுடன் இருங்கள்
இன்று பாப்தாதா நாலாப்புறங்களிலும் உள்ள குழந்தைகளின் பாக்கிய
ரேகைகளை பார்த்துக் கொண்டிருக்கின்றார். அனைத்துக் குழந்தைகளின்
நெற்றியில் ஜோதி போன்று ரேகை ஜொலித்துக் கொண்டிருக்கிறது.
கண்களில் ஆன்மிகம் என்ற பாக்கிய ரேகை தென்பட்டுக்
கொண்டிருக்கிறது. வாயில் சிரேஷ்ட வார்த்தை என்ற பாக்கிய ரேகை
தென்பட்டுக் கொண்டிருக்கிறது. உதட்டில் ஆன்மிக புன்முறுவல்
பார்த்துக் கொண்டிருக்கின்றார். கைகளில் பரமாத்மாவின் அனைத்து
பொக்கிஷங்களின் ரேகை தென்பட்டுக் கொண்டிருக்கிறது. நினைவின்
ஒவ்வொரு அடியிலும் பல மடங்கு வருமானத்தின் ரேகை பார்த்துக்
கொண்டிருக்கின்றார். ஒவ்வொருவரின் இதயத்தில் தந்தையின் அன்பில்
மூழ்கி யிருக்கும் ரேகை பார்த்துக் கொண்டிருக்கின்றார்.
இப்படிப்பட்ட சிரேஷ்ட பாக்கியம் ஒவ்வொரு குழந்தையும் அனுபவம்
செய்து கொண்டிருக்கிறீர்கள் அல்லவா! ஏனெனில் பாக்கியத்தின்
இந்த ரேகைகள் சுயம் தந்தை ஒவ்வொருவரின் சிரேஷ்ட காரியம் என்ற
பேனாவினால் எழுதியிருக்கின்றார். இந்த சிரேஷ்ட பாக்கியம்
அழிவற்றதாகும், இது இந்த பிறவிற்கு மட்டுமல்ல, ஆனால் அநேக
பிறவிகளுக்கு அழிவற்ற பாக்கிய ரேகைகளாகும். தந்தை அழிவற்றவர்
மற்றும் பாக்கிய ரேகைகளும் அழிவற்றதாகும். இந்த நேரத்தில்
சிரேஷ்ட காரியத் தின் ஆதாரத்தில் அனைத்து ரேகைகளும்
பிராப்தியாக கிடைக்கிறது. இந்த நேரத்திற்கான முயற்சி அநேக
பிறவிகளின் பிராப்தியை உருவாக்கி விடுகிறது.
அனைத்து குழந்தைகளுக்கும் எந்த பிராப்தி அநேக பிறவிகளுக்கு
அடைய வேண்டுமோ, அதை பாப்தாதா இந்த நேரத்தில், இந்த பிறவியின்
முயற்சியை பார்க்க விரும்புகின்றார். எதிர்காலத்திற்கு
மட்டுமல்ல, இப்பொழுதே இந்த அனைத்து ரேகைகளும் சதா அனுபவம் ஆக
வேண்டும். ஏனெனில் இப்போதை இந்த தெய்வீக சன்ஸ்காரம் உங்களது
புது உலகை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. எனவே சோதனை செய்யுங்கள்,
சோதனை செய்ய வருகிறது தானே! தனக்குத் தானே சோதனை யாளராக
ஆகுங்கள். அனைத்து பாக்கிய ரேகைகளும் இப்பொழுதே அனுபவம் ஆகிறதா?
இந்த பிராப்திகள் கடைசியில் தான் தென்படும் என்று நினைக்கவில்லை
தானே? பிராப்தியும் இப்பொழுது இருக்கிறது, வெகுமதியும்
இப்பொழுதே அனுபவம் செய்ய வேண்டும். எதிர்கால உலகின்
சன்ஸ்காரத்தை இப்பொழுது நடைமுறை வாழ்க்கையில் அனுபவம் ஏற்பட
வேண்டும். ஆக எது சோதனை செய்ய வேண்டும்? எதிர்கால உலகின்
சன்ஸ்காரத்தை மகிமை செய்கிறீர்கள் - எதிர்கால உலகில் ஒரு
இராஜ்யம் இருக்கும். அந்த உலகம் நினைவிருக்கிறது அல்லவா! எத்தனை
முறை அந்த உலகில் இராஜ்யம் செய்திருக்கிறீர்கள்?
நினைவிருக்கிறதா? அல்லது நினைவுப்படுத்தும் போது நினைவிற்கு
வருகிறதா? எப்படி இருந்தோம் என்ற நினைவு இருக்கிறது தானே? ஆனால்
அதே சன்ஸ்காரம் இப்போதை வாழ்க்கையில் வெளிப்படையான ரூபத்தில்
இருக்கிறதா? எனவே சோதனை செய்யுங்கள் - இப்பொழுது மனதில்,
புத்தியில், சம்பந்தம்-தொடர்பில், வாழ்க்கையில் ஒரே இராஜ்யம்
இருக்கிறதா? அல்லது சில நேரம் ஆத்மாவின் இராஜ்யத்தின் கூடவே
மாயாவின் இராஜ்யமும் இல்லை தானே? எதிர்கால வெகுமதியில் ஒரே ஒரு
இராஜ்யம் தான் இருக்கும், இரண்டு இருக்காது. எனவே இப்பொழுதும்
இரண்டும் இராஜ்யம் கிடையாது தானே? எதிர்கால இராஜ்யத்தில் ஒரு
இராஜ்யத்தின் கூடவே ஒரு தர்மம் இருக்கும். அந்த தர்மம் எது?
சம்பூர்ன தூய்மையை தாரணை செய்யும் தர்மம் ஆகும். எனவே இப்பொழுது
சோதனை செய்யுங்கள் - தூய்மை முழுமையாக இருக்கிறதா? கனவிலும்
அசுத்தத்தின் பெயர், அடையாளம் கிடையாது. தூய்மை என்றால்
சங்கல்பம், வார்த்தை, செயல் மற்றும் சம்பந்தம்-தொடர்பில் ஒரே
ஒரு தாரணை சம்பூர்ன தூய்மை ஆகும். பிரம்மச்சாரியாக இருக்க
வேண்டும். தன்னை சோதனை செய்ய வருகிறதா? யாருக்குத் சுய சோதனை
செய்ய வருகிறதோ அவர்கள் கை உயர்த்துங்கள். வருகிறதா? அல்லது
செய்கிறீர்களா? செய்கிறீர்களா? செய்கிறீர்களா? ஆசிரியர்களுக்கு
வருகிறதா? இரட்டை அயர்நாட்டினர்களுக்கு வருகிறதா? ஏன்?
இப்போதைய தூய்மையின் காரணத்தினால் உங்களது ஜட சித்திரத்தின்
மூலமும் தூய்மையை கேட்கின்றனர். தூய்மை என்றால் ஒரே தர்மம்
இப்பொழுது ஸ்தாபனை ஆகிறது, அது எதிர்காலத்திலும் நடைபெறுகிறது.
அதே போன்று எதிர் காலத்திற்கு என்ன மகிமை இருக்கிறது? ஒரே
இராஜ்யம், ஒரே தர்மம் மற்றும் சுகம்-சாந்தி, செல்வம், அகண்ட
சுகம், அகண்ட அமைதி, அகண்ட செல்வம் இருக்கும். எனவே இப்போதைய
உங்களது சுவ இராஜ்யத்தின் வாழ்க்கையில், அது உலக இராஜ்யம், இது
சுவ இராஜ்யம், சோதனை செய்யுங்கள் - அழிவற்ற சுகம், பரமாத்ம
சுகம், அழிவற்று அனுபவம் ஆகிறதா? ஏதாவது சாதனம் அல்லது ஏதாவது
தீர்வின் ஆதாரத்தில் சுகம் அனுபவம் ஆகவில்லையா? ஏதாவது
காரணத்தினால் சில நேரம் துக்கத்தின் அலை அனுபவம் ஆகக் கூடாது.
பெயர், மரியாதை, புகழின் ஆதாரத்தில் சுகத்தின் அனுபவம்
ஏற்படவில்லை தானே? ஏன்? இந்த பெயர், புகழ், மரியாதை, சாதனம்,
தீர்வு அழியக் கூடியவைகள், அல்பகாலத்திற்கானது. எனவே அழியக்
கூடியவைகளின் ஆதாரத்தில் அழிவற்ற சுகம் கிடைக்காது. சோதனை
செய்து கொண்டே செல்லுங்கள். இப்பொழுதே கேட்டுக் கொண்டே
செல்லுங்கள் மற்றும் தனக்குள் சோதனை செய்து கொண்டே செல்லுங்கள்.
அப்போது தான் இப்போதைய சன்ஸ்காரத்திற்கும் எதிர்கால உலகின்
வெகுமதிக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது என்பது
தெரியவரும். நீங்கள் அனைவரும் பிறப்பு எடுத்ததும் பாப்தாதாவிடம்
உறுதிமொழி செய்திருக்கிறீர்கள், உறுதிமொழி நினைவிருக்கிறதா?
அல்லது மறந்து விட்டீர்களா? நாம் அனைவரும் தந்தைக்கு துணையாக
இருந்து, விஷ்வ கல்யாணகாரி ஆகி புதிய சுகம், சாந்தி நிறைந்த
உலகம் உருவாக்குவோம். நினைவிருக்கிறதா? தனது உறுதிமொழி
நினைவிருக்கிறதா? நினைவிருக்கிறது எனில் கை உயர்த்துங்கள்.
உறுதிமொழி உறுதியாக இருக்கிறதா? அல்லது சிறிது குழப்பம்
ஆகிவிடுகிறதா? இப்போது பரமாத்ம சம்ஸ்காரத்தின் மூலம் புது உலகை
உருவாக்கக் கூடியவர்கள். எனவே இப்போது முயற்சி மட்டும்
செய்யாமல், முயற்சிக்கான வெகு மதியையும் இப்பொழுதே அனுபவம்
செய்ய வேண்டும். சுகத்தின் கூடவே அமைதியையும் சோதனை செய்யுங்கள்
- அசாந்தியான சூழ்நிலையிலும், அசாந்தியான வாயுமண்டலத்திலும்
அமைதிக் கடலான குழந்தைகள் நீங்கள் சதா தாமரை மலர் போன்று
அசாந்தியையும் சாந்தியான வாயுமண்டலமாக மாற்றி விட முடிகிறதா?
அமைதியான வாயுமண்டலத்தில் நீங்கள் அமைதி அனுபவம் செய்தீர்கள்.
இது ஒன்றும் பெரிய விசயமில்லை. ஆனால் உங்களது உறுதிமொழி -
அசாந்தியை சாந்தியாக மாற்றக் கூடியவர்கள். எனவே சோதனை
செய்யுங்கள் - சோதனை செய்து கொண்டிருக்கிறீர்கள் தானே? மாற்றம்
செய்யக் கூடியவர்கள், வசமாக வில்லை தானே? மாற்றம் செய்யக்
கூடியவர்கள். மாற்றம் செய்பவர்கள் ஒருபோதும் வசமாக முடியாது.
அதே போன்று செல்வம், அழிவற்ற செல்வம். சுவ இராஜ்ய அதிகாரிகளின்
செல்வம் எது? ஞானம், குணம் மற்றும் சக்திகள் தான் சுவ இராஜ்ய
அதிகாரிகளின் செல்வங்களாகும். எனவே சோதனை செய்யுங்கள் -
ஞானத்தின் முழு விஸ்தாரத்தையும் சார ரூபத்தில் தெளிவாக
அறிந்திருக்கிறேன் தானே? ஞானம் என்றால் சொற்பொழிவு செய்வது,
கோர்ஸ் கொடுப்பது மட்டுமல்ல, ஞானம் என்றால் புரிந்து கொள்வது.
ஞானம் என்றால் புத்திசாலி. ஆக ஒவ்வொரு சங்கல்பம், ஒவ்வொரு
வார்த்தை, ஒவ்வொரு செயல் ஞானம் நிறைந்தவராகி செய்கிறேனா?
அனைத்து குணங்களும் நடைமுறை வாழ்க்கையில் வெளிப்படையாக
இருக்கிறதா? அனைத்தும் இருக்கிறதா? அல்லது இயன்ற அளவு
இருக்கிறதா? அதே போன்று சர்வசக்திகளும் - உங்களது பட்டம்
மாஸ்டர் சர்வசக்திவான், சக்தி வான் கிடையாது. ஆக
சர்வசக்திகளிலும் நிறைந்திருக்கிறீர்களா? மேலும் சர்வசக்திகளும்
சரியான நேரத்தில் வேலை செய்கிறதா? சரியான நேரத்தில் ஆஜர் ஆகிறதா?
அல்லது நேரம் முடிந்த பிறகு நினைவிற்கு வருகிறதா? எனவே சோதனை
செய்யுங்கள், மூன்று விசயங்களும் ஒரே இராஜ்யம், ஒரே தர்மம்
மற்றும் அழிவற்ற சுகம்-சாந்தி, செல்வம். ஏனெனில் இப்போதைய சுவ
இராஜ்யத் திற்கான நேரத்தில் செய்யும் அனுபவம் புது உலகில்
இருக்க முடியாது. இப்போது இந்த அனைத்து விசயங்களின் அனுபவம்
செய்ய முடியும். இப்போதிலிருந்தே இந்த சன்ஸ்காரம் வெளிப்படும்
போது தான் அநேக பிறவிகள் வெகுமதியின் ரூபத்தில் நடைபெறும்.
தாரணை செய்து கொண்டி ருக்கிறோம், நடந்து விடும், கடைசி நேரம்
வந்தால் ஆகிவிடுவோம் என்று நினைக்கக் கூடாது.
நீண்ட காலம் என்று பாப்தாதா முன் கூட்டியே சைகை கொடுத்து
விட்டார். இப்போதைய பயிற்சி நீண்ட கால பிராப்திக்கு ஆதாரமாகும்.
கடைசியில் ஆகிவிடுவேன் என்று நினைக்கக் கூடாது. ஆகிவிடுவேன்
என்றல்ல, ஆகியே தீருவேன். ஏன்? சுவ இராஜ்யத்தின் அதிகாரம்
இப்போது நீண்ட கால பயிற்சியாக இருக்க வேண்டும். ஒரு பிறவியில்
அதிகாரியாக ஆக முடியவில்லையெனில், அடிமையாக ஆகிவிட்டால் அநேக
பிறவியில் எப்படி ஆக முடியும்! ஆகையால் பாப்தாதா
நாலாப்புறங்களிலும் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் அடிக்கடி
சைகை கொடுத்துக் கொண்டி ருக்கின்றார் - இப்பொழுது நேரம் தீவிர
வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது, ஆகையால் அனைத்து
குழந்தைகளும் முயற்சியாளர்களாக மட்டும் ஆகக் கூடாது. தீவிர
முயற்சியாளர் ஆகி, முயற்சியின் வெகுமதியை இப்பொழுது நீண்ட காலம்
அனுபவம் செய்ய வேண்டும். தீவிர முயற்சியாளர்களின் அடையாளம்
பாப்தாதா முன்பும் கூறியிருக்கின்றார். தீவிர முயற்சியாளர் சதா
மாஸ்டர் வள்ளல்களாக இருப்பர், பெறுபவர்களாக இருக்கமாட்டார்கள்,
கொடுப்பவர்களாக இருப்பர். இவ்வாறு இருந்தால் என்னுடைய முயற்சி
இருக்கும், இவர் செய்தால் நானும் செய்வேன், இவர் மாறினால்
நானும் மாறுவேன், இவர் மாற வேண்டும், இவர் செய்ய வேண்டும் - இது
வள்ளலின் அடையாளம் கிடையாது. ஒருவர் செய்தாலும், செய்யா
விட்டாலும், நான் பாப்தாதாவிற்கு சமம் செய்வேன், பிரம்மா
பாபாவிற்கு சமமாக செய்வேன், சாகாரத்திலும் பார்த்
திருக்கிறீர்கள், குழந்தைகள் செய்தால் நான் செய்வேன் என்று
ஒருபோதும் கூறவில்லை. நான் செய்து குழந்தைகளின் மூலம்
செய்விப்பேன். தீவிர முயற்சியாளரின் இரண்டாவது அடையாளம், சதா
பணிவு, காரியங்கள் செய்தாலும் பணிவு, சேவை மற்றும் பணிவு
இரண்டிலும் சமநிலை வேண்டும். ஏன்? பணிவாக இருந்து காரியம்
செய்யும் போது அனைவரின் மூலம் உள்ளப்பூர்வமான அன்பு மற்றும்
ஆசிர்வாதம் கிடைக்கும். இன்றைய நாட்களில் சேவை சேத்திரத்தில்
அனைவரும் ஆர்வம்- உற்சாகத்துடன் நல்ல நல்ல திட்டங்களை
உருவாக்கிக் கொண்டிருப்பதை பாப்தாதா பார்த்தார். இதற்கு
நாலாப்புறங்களிலும் உள்ள குழந்தைகளுக்கு பாப்தாதா வாழ்த்துக்
கொடுத்துக் கொண்டிருக்கின்றார்.
பாப்தாதாவிடம் சேவைக்கான நல்ல நல்ல திட்டங்கள் வந்திருக்கின்றன.
சேவையின் காரியம் மிக நன்றாக இருக்கிறது. ஆனால் எந்த அளவிற்கு
சேவையில் ஆர்வம்-உற்சாகம் இருக்கிறதோ, அந்த அளவிற்கு பணிவாக
இருப்பதில் சமநிலை இருந்தால் சேவையில் வெற்றி இன்னும் அதிகமாக
வெளிப்படையான ரூபத்தில் பார்க்க முடியும். பாப்தாதா முன்பே
கூறியிருக்கின்றார் - பணிவான சுபாவம், பணிவான வார்த்தை மற்றும்
பணிவான ஸ்திதி மூலம் சம்பந்தம் தொடர்பில் வருவது, தேவதைகளுக்கு
மகிமை செய்கின்றனர். ஆனால் அது பிராமணர்களின் மகிமையாகும்.
தேவதைகளைப் பற்றி கூறும் போது அவர்களது வாயில் வெளிப்படும்
வார்த்தைகள் வைரம், முத்துக்கள், விலை மதிப்பற்றது, நிர்மலமான
வார்த்தை, நிர்மலமான சுபாவம் என்று கூறுவர். இப்போது பாப்தாதா
பார்க்கின்றார், ரிசல்ட் கூற வேண்டும். ஏனெனில் இது சீசனின்
கடைசி முறையாகும். நிர்மலமான வார்த்தை, பணிவான ஸ்திதியில்
இன்னும் கவனம் தேவை என்பதை பாப்தாதா பார்த்தார்.
மூன்று பொக்கிஷங்களின் கணக்கை சேமியுங்கள் என்று பாப்தாதா
முன்பே கூறியிருக்கின்றார். என்ன ரிசல்ட் பார்த்தார்? மூன்று
பொக்கிஷங்கள் என்ன? அது நினைவிருக்கிறது தானே! இருப்பினும்
திரும்பவும் கூறுகின்றேன் - ஒன்று தனது முயற்சியின் மூலம்
சேமிப்பு கணக்கை அதிகப்படுத்துவது. இரண்டாவது சதா தானும்
திருப்தியாக இருப்பது, மற்றவர்களையும் திருப்திப் படுத்துவது.
விதி விதமான சம்ஸ்காரங்களை அறிந்திருந்தும் திருப்தியுடன்
இருப்பது மற்றும் திருப்திப்படுத்துவது. இதன் மூலம்
ஆசிர்வாதத்தின் கணக்கு சேமிப்பாகிறது. ஒருவேளை ஏதாவது ஒரு
காரணத்தினால் திருப்திப்படுத்துவதில் குறை இருக்கிறது எனில்
புண்ணிய கணக்கில் சேமிப்பாகாது. திருப்தி புண்ணியத்தின்
சாவியாகும். மூன்றாவது - சேவையில் சதா பணிவாக இருப்பது, நான்
என்பது கூடாது. நான் செய்தேன் அல்லது எனக்கு கிடைக்க வேண்டும்
என்ற நான் மற்றும் எனது சேவையில் வரும் போது அங்கு புண்ணிய
கணக்கு சேமிப்பாகாது. அனுபவிகளாக இருக்கிறீர்கள், இராயல்
ரூபத்தின் எனது என்பது அதிகமாக இருக்கிறது. சாதாரண எனது என்ற
பட்டியலை விட இராயல் ரூபத்தின் எனது என்பது அதிகமாக இருக்கிறது.
ஆக எங்கு நான் மற்றும் எனது என்ற சுய நலம் வந்து விடுகிறதோ,
சுய நலமற்ற நிலையல்ல, அங்கு புண்ணிய கணக்கு சேமிப்பு குறைந்து
விடுகிறது. எனது என்பதன் பட்டியல் பிறகு கூறுகின்றேன். மிக
நீளமாக இருக்கிறது மற்றும் மிக சூட்சுமமாக இருக்கிறது. அனைவரும்
அவரவர்களுக்கு இயன்ற அளவு சேமிப்பு கணக்கு சேமித்துக்
கொண்டிருப்பதை பாப்தாதா பார்த்தார். ஆனால் ஆசிர்வாதங்களின்
கணக்கு மற்றும் புண்ணியக் கணக்கு இப்பொழுது நிறைத்துக் கொள்வது
அவசியமாகும். ஆகையால் மூன்று கணக்குகளையும் சேமிப்பதில் கவனம்.
இப்பொழுதும் விதவிதமான சம்ஸ்காரம் தென்படுகின்றன. அனைவரின்
சம்ஸ்காரம் இப்பொழுது சம்பன்னம் ஆகவில்லை. ஆனால் பிறரது பலவீன
சுபாவம், பலவீன சம்ஸ்காரத்தின் பாதிப்பு தன் மீது ஏற்படக்
கூடாது. நான் மாஸ்டர் சர்வ சக்திவான், பலவீன சம்ஸ்காரம்
சக்திசாலியானது அல்ல. மாஸ்டர் சர்வ சக்திவான் மீது பலவீன
சம்ஸ்காரத்தின் பாதிப்பு ஏற்படக் கூடாது. பாதுகாப்பான
சாதனமாகிய பாப்தாதாவின் நினைவு என்ற குடைக்குள் இருங்கள்.
பாப்தாதாவுடன் இணைந்து இருங்கள். குடை நிழல் என்றால் ஸ்ரீமத்.
இன்று பாப்தாதா சைகை கொடுத்துக் கொண்டிருக்கின்றார் - தனக்காக
ஒவ்வொருவரும் சங்கல்பம், வார்த்தை, சம்பந்தம்-தொடர்பு, செயலில்
புதுமை கொண்டு வருவதற்கான திட்டம் உருவாக்கியே தீர வேண்டும்.
என்ன புதுமை கொண்டு வந்தீர்கள்? என்ற ரிசல்ட் பாப்தாதா முதலில்
பார்ப்பார். திட சங்கல்பத்தின் மூலம் பழைய சம்ஸ்காரத்தை
மாற்றியிருக்கிறீர்களா? இந்த ரிசல்ட் முதலில் பார்ப்பார். என்ன
நினைக்கிறீர்கள்? இவ்வாறு செய்வீர்களா? செய்வீர்களா? செய்வேன்
என்று கூறுபவர்கள் கை உயர்த்துங்கள். நல்லது. செய்வீர்களா?
அல்லது மற்றவர்களை பார்ப்பீர் களா? என்ன செய்வீர்கள்?
மற்றவர்களை பார்க்கக் கூடாது. பாப்தாதாவை பாருங்கள், தங்களது
பெரிய தாதியை பாருங்கள். எவ்வளவு விடுபட்ட மற்றும் அன்பான
நிலையாகும்! பாப்தாதா கூறுகின்றார் - எல்லைக்குட்பட்ட நான்
மற்றும் எனது என்பதிலிருந்து விடுபட்டவரை யாராவது பார்க்க
வேண்டுமென்றால் தங்களது பாப்தாதாவின் இதய சிம்மாசனதாரி தாதியைப்
பாருங்கள். முழு வாழ்க்கையிலும் எல்லைக்குட்பட்ட நான், எனது
என்பதிலிருந்து விடுபட்டு இருந்தார். அதன் ரிசல்ட் வியாதி
எவ்வளவு பெரிதாக இருந்தாலும், வலிலிதுக்கத்திலிருந்து
விடுபட்டிருந்தார். ஒரே ஒரு வார்த்தையில் உறுதியாக இருந்தார்,
தாதி-ஏதாவது வலி இருக்கிறதா? தாதி ஏதாவது ஆகிக் கொண்டிருக்
கிறதா? என்று யாராவது கேட்டால் என்ன பதில் கிடைக்கும்?
ஒன்றுமில்லை. ஏனெனில் சுய நலமின்றி மற்றும் பரந்த உள்ளத்துடன்,
அனைத்தையும் தனக்குள் அடக்கிக் கொண்டார், அனைவருக்கும்
பிரியமானவராக இருந்தார், இதன் நடைமுறை அடையாளம் பார்த்துக்
கொண்டிருக்கிறீர்கள். பிரம்மா பாபாவின் விசயம் கூறும் பொழுது
அவரிடம் தந்தை இருந்தார் என்று கூறுகின்றோம். ஆனால் தாதி
உங்களுடன் பிரபுவின் பாலனையில் இருந்தார், படிப்பு படித்தார்,
சேவையில் துணையாக இருந்தார். ஆக ஒருவர் சுய நலமற்ற ஸ்திதியில்
இருக்க முடிகிறது எனில் நீங்கள் அனைவரும் ஆக முடியாதா? ஆக
முடியும் அல்லவா! நீங்கள் தான் ஆகக் கூடியவர்கள் என்ற நிச்சயம்
பாப்தாதாவிடம் இருக்கிறது. எத்தனை முறை ஆகியிருக் கிறீர்கள்?
நினைவிருக்கிறதா? அநேக கல்பம் பாப்சமான் ஆகியிருக்கிறீர்கள்.
மேலும் இப்பொழுது நீங்கள் தான் ஆகக் கூடியவர்கள். இதே
ஆர்வத்துடன், உற்சாகத்துடன் பறந்து கொண்டே செல்லுங்கள்.
தந்தைக்கு உங்கள் மீது நிச்சயம் இருக்கிறது எனில் நீங்களும் தன்
மீது சதா நிச்சயபுத்தி, ஆகியே தீர வேண்டும் என்ற நிச்சயபுத்தி
உடையவராகி பறந்து கொண்டே செல்லுங் கள். தந்தையின் மீது அன்பு
இருக்கிறது. அன்பு 100 சதவிகிதம் விட அதிகமாக இருக்கிறது.
இவ்வாறு கூறுகிறீர்கள் அல்லவா! இது சரி தானே? யாரெல்லாம்
அமர்ந்திருக் கிறீர்களோ அல்லது யாரெல்லாம் அவரவர்களது இடங்களில்
கேட்டுக் கொண்டிருக்கிறீர்களோ, பார்த்துக் கொண்டிருக் கிறீர்களோ
அவர்கள் அனைவரும் அன்பு என்ற பாடத்தில் தன்னை 100 சதவிகிதம்
என்று நினைக் கிறீர்களா? கை உயர்த்துங்கள். 100 சதவிகிதம்
இருக்கிறதா? (அனைவரும் கை உயர்த்தினர்). நல்லது. பின்னால்
அமர்ந்திருப்பவர்கள் நன்றாக கை உயர்த்துங்கள், அசையுங்கள். (இன்று
22 ஆயிரத்திற்கும் அதிக சகோதர, சகோதரிகள் வந்திருக்கின்றனர்).
இதில் அனைவரும் கை உயர்த்தி யிருக்கிறீர்கள். ஆக அன்பின்
அடையாளம் சமம் ஆக வேண்டும். யார் மீது அன்பு இருக்கிறதோ, அவரைப்
போன்று பேசுவது, அவர் போன்று நடப்பது, அவரைப் போன்று
சம்பந்தம்-தொடர்பில் வருவது - இது தான் அன்பின் அடையாளமாகும்.
இன்று இப்பொழுதே பாப்தாதா பார்க்க விரும்புகின்றார் - ஒரு
விநாடியில் சுவ இராஜ்யத்தின் இருக்கையில் கட்டுப்படுத்தும்
சக்தி, ஆளும் சக்தியின் சன்ஸ்காரத்தை வெளிப்படையான ரூபத்தில்
விநாடியில் அமர முடிகிறதா! ஆக ஒரு விநாடியில் இரண்டு, மூன்று
நிமிடத்திற்கு இராஜ்ய அதிகாரி என்ற இருக்கையில் செட் ஆகி
விடுங்கள். நன்று. (டிரில்).
நாலாப்புறங்களிலும் உள்ள குழந்தைகளின் அன்பு நினைவுகளின் கடிதம்,
கூடவே விஞ்ஞானத்தின் சாதனங்கள் என்னவெல்லாம் இருக்கிறதோ அதன்
மூலம் அனுப்பிய அன்பு நினைவுகள் பாப்தாதாவிடம் வந்து சேர்ந்து
விட்டன. தனது உள்ளத்திலிருக்கும் விசயங்களையும் அதிக குழந்தைகள்
எழுதவும் செய்கின்றனர், உரையாடலின் போதும் கூறுகின்றனர்.
பாப்தாதா அந்த அனைத்து குழந்தைகளுக்கும் பதில் கூறுகின்றார் -
உண்மையான உள்ளத்தில் சதா பகவான் குடி இருப்பார். பாப்தாதாவின்
உள்ளப்பூர்வமான ஆசிர்வாதம் மற்றும் உள்ளப்பூர்வமான அன்பு அந்த
ஆத்மாக்களின் மீது விசேஷமாக இருக்கிறது.
நாலாப்புறங்களிலிருந்தும் யாரெல்லாம் செய்தி
அனுப்பியிருக்கிறார்களோ, ஆர்வம்-உற்சாகத்துடன் நல்ல நல்ல
திட்டங்கள் உருவாக்கி இருப்பவர் களுக்கு, பாப்தாதா அதற்கான
வாழ்த்துக்களும் கொடுத்துக் கொண்டிருக்கின்றார் மற்றும்
வரதானமும் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்-முன்னேறிக் கொண்டே
செல்லுங்கள், முன்னேற்றிக் கொண்டே செல்லுங்கள்.
பாப்தாதாவின் நாலாப்புறங்களிலும் உள்ள கோடியில் சிலர்,
சிலரிலும் சில சிரேஷ்ட பாக்கியவான் குழந்தைகளுக்கு பாப்தாதாவின்
விசேஷ அன்பு நினைவுகள். அனைத்து குழந்தைகளின் தைரியம் மற்றும்
ஆர்வம்-உற்சாகத்திற்கான வாழ்த்துக்களையும் கொடுத்துக்
கொண்டிருக்கின்றார். மேலும் தீவிர முயற்சியாளர் ஆவதற்கான, சம
நிலையுடன் இருப்பதற்கு பல கோடி மடங்கு ஆசிர்வாதமும் கொடுத்துக்
கொண்டிருக்கின்றார். அனைவரின் பாக்கிய நட்சத்திரம் சதா
ஜொலித்துக் கொண்டே இருக்க வேண்டும். மேலும் பிறரது பாக்கியத்தை
உருவாக்கிக் கொண்டே இருக்க வேண்டும். இதற்கான ஆசிர்வாதமும்
கொடுத்துக் கொண்டிருக்கின்றார். நாலாப்புறங்களிலும் உள்ள
குழந்தை கள் அவரவர்களது இடங்களில் கேட்டுக் கொண்டும்
இருக்கின்றனர், பார்த்துக் கொண்டும் இருக் கின்றனர்.
பாப்தாதாவும் தூரத்தில் அமர்ந்திருக்கும் அனைத்து
குழந்தைகளையும் பார்த்து பார்த்து குஷியடைந்து
கொண்டிருக்கின்றார். பார்த்துக் கொண்டே இருங்கள் மற்றும்
மதுவனத்தின் அழகை அதிகரித்துக் கொண்டே இருங்கள். ஆக அனைத்துக்
குழந்தைகளுக்கும் உள்ளப்பூர்வமான ஆசிர்வாதத்துடன் நமஸ்தே.
ஆசீர்வாதம்:
கவனம் என்ற திரி மூலம் ஆன்மிக சொரூபம் என்ற நட்சத்திரத்தின்
ஜொலிப்பை அதிகப்படுத்தக் கூடிய ஈர்க்கும் மூர்த்தி ஆகுக.
தந்தையின் மூலம், ஞானத்தின் மூலம் ஆன்மிக சொரூபம் என்ற
நட்சத்திரம் ஜொலிக்க ஆரம்பித்து விட்டது எனில் பிறகு அனைக்க
முடியாது. ஆனால் ஜொலிப்பின் சதவிகிதத்தை குறைக்க அல்லது
அதிகப்படுத்த முடியும். இந்த நட்சத்திரம் அனைவரையும் ஈர்க்க
வேண்டு மென்றால் தினமும் அமிர்தவேளையில் கவனம் என்ற திரி இட
வேண்டும். தீபத்தில் திரி போடும் போது அது ஒரே மாதிரியாக
எரிகிறது. அதே போன்று முழு கவனம் கொடுப்பது என்றால் தந்தை யின்
அனைத்து குணங்கள் அல்லது சக்திகளை தனக்குள் தாரணை செய்வதாகும்.
இந்த கவனத் தின் மூலம் ஈர்க்கும் மூர்த்தியாக ஆகிவிடுவீர்கள்.
சுலோகன்:
எல்லையற்ற வைராக்கிய விருக்தியின் மூலம் சாதனை என்ற விதையை
வெளிப்படுத்துங்கள்.
அவ்யக்த சமிக்கை: தங்களுக்காகவும் மற்றும் அனைவருக்காகவும்
மனதின் மூலமாக யோகத்தின் சக்திகளை பயன்படுத்துங்கள்.
யோக சக்தியை சேமிப்பதற்கு காரியம் மற்றும் யோகா இதன் சமநிலையை
இன்னும் அதிகரியுங்கள். காரியம் செய்தாலும் யோகாவின் சக்திசாலி
ஸ்திதி இருக்க வேண்டும் - இதன் பயிற்சியை அதிகப்படுத்துங்கள்.
சேவைக்காக புது கண்டுபிடிப்பு செய்வது போன்று இதன் விசேஷ
அனுபவங்களின் பயிற்சிக்காக நேரம் ஒதுக்குங்கள். மேலும் புதுமையை
கொண்டு வந்து அனைவரின் முன் உதாரணம் ஆகுங்கள்.
குறிப்பு: இன்று மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை. அனைத்து
இராஜயோகி, தபஸ்வி சகோதர, சகோதரிகள் மாலை 6.30 மணி முதல் 7.30
மணி வரை விசேஷ யோக பயிற்சியின் பொழுது மாஸ்டர் சர்வ சக்திவானின்
சக்திசாலி சொரூபத்தில் நிலைத்திருந்து இயற்கை சகிதமாக அனைத்து
ஆத்மாக்களுக்கும் தூய்மையின் கிரணங்கள் பரப்புங்கள், சதோ
பிரதானம் ஆக்குவதற்கான சேவை செய்யுங்கள்.