20-03-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே ! இந்தப் பழைய உலகில் அல்பகால ஒரு நொடிக்கான சுகமே உள்ளது, இது உடன் வராது, தங்களுடன் அழிவற்ற ஞான இரத்தினங்களே உடன் வரும்,

கேள்வி:
தந்தையினுடைய படிப்பில் எந்த ஒரு கல்வி கற்பிக்கப்படுவதில்லை?

பதில்:
பூதங்கள் சம்மந்தமான கல்வி. மற்றவர்களின் எண்ணங்களை ஆராய்வது (தெரிந்து கொள்வது) இது பூதங்களின் கல்வியாகும். உங்களுக்கு இந்தக் கல்வி கற்பிக்கப்படுவதில்லை. பாபா மனதில் உள்ள எண்ணங்களை அறிபவர் அல்ல. அவர் எல்லாம் அறிந்தவர் அதாவது ஞானம் நிறைந்தவர். தந்தை வருவதே உங்களுக்கு ஆன்மீகக் கல்வி கற்பிப்பதற்காக. இந்தக் கல்வியின் மூலம் உங்களுக்கு 21 பிறவிகளுக்கான இராஜ பதவி கிடைக்கின்றது.

ஓம் சாந்தி.
ஆத்மாக்களும் பரமாத்மாவும் நீண்ட காலமாகப் பிரிந்துள்ளனர்.... என பாரதத்தில் உள்ளவர்கள் பாடுகின்றனர். ஆத்மாக்களாகிய நமக்கு பரம பிதா பரமாத்மா இராஜ யோகத்தைக் கற்றுத் தருகிறார் என்பதைக் குழந்தைகள் அறிந்துள்ளனர். தன்னைப் பற்றிய அறிமுகத்தை கூறுவதோடு படைப்பின் முதல்-இடை-கடை பற்றியும் விளக்குகின்றார். சிலர் உறுதியான நிச்சயபுத்தி உள்ளவர்களாகவும், ஒரு சிலர் குறைவாகப் புரிந்து கொள்பவர்களாகவும், வரிசைக்கிரமம் என்று உள்ளதல்லவா! வாழ்ந்துக் கொண்டிருக்கின்ற ஆத்மாக்கள் நாம் பரமபிதா பரமாத்மாவிற்கு முன்பாக அமர்ந்திருக்கின்றோம் என குழந்தைகள் தெரிந்துள்ளனர். ஆத்மாக்களும் பரமாத்மாவும் பலகாலமாக பிரிந்திருக்கிறோம் என பாடப்படுகிறது. மூல வதனத்தில் ஆத்மாக்கள் பிரிந்திருக்கின்றன என்ற விசயம் எழாது . இங்கு (பூமிக்கு) வந்த பின் வாழ்கின்ற ஆத்மாவாகின்றோம், அப்போது எல்லா ஆத்மாக்களும் பரமாத்மாவாகிய தந்தையிடமிருந்து பிரிந்திருக்கின்றன. பரமபிதா பரமாத்மாவிடமிருந்து பிரிந்து இங்கு நடிப்பின் பாகத்தை ஏற்று நடிப்பதற்கு வருகின்றோம். இதனுடைய அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் அவ்வாறு பாடிக் கொண்டிருந்தனர். இப்போது தந்தை வந்து புரிய வைக்கின்றார். பரமபிதா பரமாத்மாவிடமிருந்து பிரிந்து வந்து நம்முடைய பாகத்தை நடிப்பதற்காக வருகின்றோம் என்பதை குழந்தைகளும் தெரிந்துள்ளனர். நீங்கள் தான் முதன் முதலாக தந்தையிட மிருந்து பிரிந்தவர்கள், ஆகவே சிவ பாபாவும் உங்களைத் தான் முதன் முத-ல் சந்திக்கின்றார். உங்களுக்காகவே பாபா வர வேண்டியுள்ளது. கல்பத்திற்கு முன்பு கூட இந்த குழந்தைகளுக்குத்தான் கல்வி கற்றுத் தரப்பட்டது. பிறகு சொர்க்கத்தின் எஜமானர் ஆனார்கள். அந்த சமயத்தில் வேறெந்த தேசமும் இருக்கவில்லை. நாம் ஆதிசநாதன தேவி தேவதா தர்மத்தினராக இருந்தோம் என்று தெரியும், அதற்கு தேவதா தர்மம், தேவதைகளின் வம்சத்தினர் (பரம்பரை) என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு வருக்கும் தமக்கென தர்மம் என்பதுள்ளது. தர்மம் தான் சக்தியானது எனக் கூறப்படுகிறது. தர்மத்தில் தான் சக்தி உள்ளது. இலட்சுமி-நாராயணன் எவ்வளவு சக்தியுள்ளவர்களாக இருந்தனர் என்று உங்களுக்குத் தெரியும். பாரத வாசிகள் தங்களுடைய தர்மத்தையே தெரிந்து கொள்ளவில்லை. யாருடைய புத்தியிலும் பாரதத்தில் தமது தர்மம் தான் இருந்தது என்று தோன்றவில்லை. தர்மத்தை அறியாத காரணத்தால் நாத்திகர்கள் ஆகி விட்டனர். தம் சொந்த தர்மத்தினராக ஆனதால் எவ்வளவு சக்தி உள்ளது! !நீங்கள் இரும்பு யுகமாகிய மலையைத் தகர்த்து தங்கயுகமாக மாற்றுகின்றீர்கள். பாரதத்தை தங்கத்தின் மலையாக உருவாக்குகின்றீர்கள். அங்கே சுரங்கங்களில் அளவில்லா தங்கம் நிரம்பியுள்ளது. தங்கத்தின் மலையாகிறது. பிறகு அது திறந்து கொள்கிறது. தங்கத்தை வெட்டி எடுத்து தங்க கற்களாக்கப்படுகிறது. மாளிகைகள் பெரிய தங்க கற்களால் கட்டப்படும். மாயா மச்சந்தர் என்ற கதையைக் கூட காண்பிக்கிறார்கள். ஆனால் அவையனைத்தும் கதைகள். நான் அவற்றின் சாரத்தைக் கூறுகிறேன் என்று தந்தை கூறுகிறார். தியானத்தில் இருந்த போது நாங்கள் பை நிறைய எடுத்துச் சென்றதைக் கண்டோம். ஆனால் கீழே இறங்கிய பின் ஒன்றுமே இல்லை என்று காண்பிக்கின்றனர். அது போலத்தான் உங்களுடையதும் ஆகிறது. இதற்கு தெய்வீக திருஷ்டி எனப்படுகிறது. இவற்றை மனதில் கொள்ளாதீர்கள். கண் மூடித்தனமான பக்தி நிறைய பேர் செய்கின்றனர். பக்தி மாலை வேறு, ஞான மாலை வேறு. ருத்ர மாலை, விஷ்ணு மாலை. பிறகு பக்தி மாலை. இப்பொழுது இராஜ பதவிக்காகப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுடைய புத்தியின் தொடர்பு ஆசிரியரோடும் இராஜ்யத்தோடும் ஈடுபட்டிருக்கிறது. எப்படி கல்லுôரியில் படிக்கும் போது புத்தி ஆசிரியரின் தொடர்பில் உள்ளதோ அது போல. பாரிஸ்டர் தான் படித்து மற்றவர்களைத் தனக்குச் சமமாக உருவாக்குகிறார். ஆனால் பாபா தான் அப்படி ஆவதில்லை (இராஜாவாக). இது தான் இங்கு அதிசயமானது. இது உங்களுடைய ஆன்மீகப் படிப்பு. உங்களுடைய புத்தியின் தொடர்பு சிவ பாபாவோடு உள்ளது. அவரைத் தான் ஞானம் நிறைந்தவர், ஞானக் கடல் என கூறப்படுகிறது. எல்லாம் அறிந்தவர் என்று கூறுவதால் எல்லோருடைய மனதிலும் பிரவேசித்து அவர்களுடைய மனதில் என்ன எண்ணங்கள் ஓடுகிறது என்பதைத் தெரிந்து கொள்கின்றார் என்று அர்த்தமல்ல. யார் மற்றவர் மனதில் உள்ளதை கூறக்கூடியவரோ அவர் எல்லாவற்றையும் கூறுவார், இதற்கு பூதங்களின் கல்வி (படிப்பு) எனப்படுகிறது. இங்கு மனிதர்கள் தேவதை ஆவதற்கான படிப்பை தந்தை கற்ப்பிக்கின்றார். மனிதனி-ருந்து தேவதையாக ........ என்ற பாடலும் உள்ளது. குழந்தைகள் நீங்கள் இப்போது பிராமணர்களாகி உள்ளோம், பிறகு தேவதையாக ஆவோம் என்பதைப் புரிந்துள்ளீர்கள். ஆதி சநாதன தேவி தேவதைகள் தான் பாடப்படுகின்றனர். சாஸ்திரங்களில் எத்தனையோ கதைகளை எழுதிவிட்டனர். இங்கு தந்தையே நேரடியாக வந்து கற்பிக்கின்றார்.

பகவானுடைய மகா வாக்கியம் - பகவான் தான் ஞானக்கடல், சுகக்கடல், சாந்திக் கடல், குழந்தைகளாகிய உங்களுக்கு ஆஸ்தி தருகின்றார். இந்தப் படிப்பு உங்களுடைய 21 பிறவிகளுக்கானது. எனவே எவ்வளவு நல்ல முறையில் படிக்க வேண்டும். இந்த ஆன்மீகப் படிப்பை, தந்தை புதிய உலகைப் படைப்பதற்காக கல்பத்தில் ஒரே ஒரு முறை மட்டுமே வந்து கற்பிக்கின்றார். புதிய உலகத்தில் தேவி-தேவதைகளுடைய இராஜ்யம் நடந்தது. பிரம்மா மூலமாக ஆதி சநாதன தேவி தேவதைகளுடைய இராஜ்யம் நடந்தது. பிரம்மா மூலமாக ஆதி சநாதன தேவி தேவதைகளின் தர்மத்தை நான் ஸ்தாபனை செய்கிறேன் என்று தந்தை கூறுகின்றார். இந்த தர்மம் இருந்த போது வேறெந்த தர்மமுமே இருக்கவில்லை. இப்போது மற்ற எல்லா தர்மங்களும் உள்ளன, ஆகவே பிரம்மா மூலம் ஒரே தர்மம் ஸ்தாபனை ஆகிறது என்றும் திரிமூர்த்தி பற்றியும் புரிய வைக்கின்றீர்கள். இப்போது அந்த தர்மம் இல்லை. (தேவதைகள் முன்பாக சென்று வழிபடும் போது) நாங்கள் எந்த நற்குணமும் இல்லாம-ருக்கிறோம், நீங்கள் தான் எங்கள் மீது கருணை காட்ட வேண்டும் என்கிறோம். அப்படி கூறும்போது புத்தி இறை தந்தையின் பக்கம் தான் செல்கிறது, அவரைத்தான் கருணை உள்ளம் கொண்டவர் என அழைக்கின்றோம். குழந்தைகளின் அனைத்து துக்கங்களையும் நீக்கி 100 சதவிகிதம் சுகம் தருவதற்காகவே பாபா வருகிறார். எவ்வளவு இரக்கம் காட்டுகிறார்! பாபாவிடம் நாம் வந்து விட்டோம், அவரிடமிருந்து முழு சுகத்தையும் அடைந்துவிட வேண்டுமென நீங்கள் புரிந்துள்ளீர்கள். அது தான் (சொர்க்கம்) சுகம் நிறைந்த வசிப்பிடம், இது (க-யுகம்) துக்கம் நிறைந்த உலகம். இந்த சக்கரத்தை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். சாந்தி தாமத்தையும், சுக தாமத்தையும் நினைவு செய்வதால் அந்த கடைசி கால எண்ணங்கள் படி தான் நமது நிலை அமையும். (அந்த் மதி....) சாந்தி தாமத்தை நினைவு செய்தோமானால் சரீரத்தி-ருந்து விடுபடும் போது ஆத்மாக்கள் சாந்தி தாமம் சென்றடையும். ஒரு தந்தையைத் தவிர வேறு யாருடைய நினைவும் வரக்கூடாது. ஒரேயடியாக (புத்தி) பாதை தெளிவாக இருக்க வேண்டும். ஒரு தந்தையை மட்டும் நினைவு செய்வதனால் உள்ளுர எல்லை கடந்த குஷி ஏற்படும். இந்தப் பழைய உலகில் அல்ப கால ஒரு நொடிக்கான சுகம் தான் உள்ளது. இது கூடவே வரப் போவதில்லை. அழிவற்ற ஞான இரத்தினங்கள் தான் கூடவே வரும். அதாவது இந்த ஞான இரத்தினங்களின் சேமிப்புதான் கூடவே வரும் மேலும் 21 பிறவிகளுக்கு இதன் பலனை அனுபவிப்பீர்கள். ஆம், அழியக்கூடிய செல்வத்தால் பாபாவிற்கு வேறு வழி முறைகளில் யார் உதவி புரிந்தாலும் அவர்களின் கூடவே வரும். பாபா நம்மிடமுள்ள மதிப்பில்லாத சோழிகளை வாங்கிக் கொண்டு நமக்கு அங்கே மாளிகைகளைத் தருகின்றார். பாபா சோழிகளுக்குப் பதிலாக எவ்வளவு இரத்தினங்களைத் தருகிறார் ! அமெரிக்க மக்கள் நிறைய செலவு செய்து மிகப் பழமையான பொருட்களை வாங்குகின்றனர் அப்படி. மனிதர்கள் பழைய பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள். அமெரிக்க மக்கள் பைசா பெறாத பொருளுக்கு ஆயிரம் ரூபாய் அளவிற்குக் கூட கொடுக்கின்றனர். பாபா எவ்வளவு நல்ல வாடிக்கையாளர். அதனால் அவரை கள்ளம் கபடமற்றவர் எனப் புகழ் பாடுகின்றனர். மனிதர்களுக்கு இது கூட தெரியாத காரணத்தால் சிவனையும், சங்கரையும் ஒருவரே எனக் கூறிவிட்டனர். எங்கள் பையை நிரப்புங்கள் என்று கூறுகின்றனர். நமக்கு ஞான இரத்தினங்கள் கிடைக்கின்றன, இவற்றால் நமது (புத்தியின்) பை நிறைகிறது என்று குழந்தைகள் நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இவர் தான் எல்லைக்கப் பாற்பட்ட தந்தை. அவர்களோ சங்கர் என்று கூறுவதோடு மட்டுமல்லாமல் ஊமத்தை விதைகளை உண்பதாகவும், போதை தரும் லாகிரி வஸ்துவின் புகை பிடிப்பதாகவும் கூறுகின்றனர். என்னவெல்லாமோ விசயங்களைக் கூறி விட்டனர் ! குழந்தைகள் நீங்கள் சத்கதிக்கான படிப்பை படிக்கின்றீர்கள். இந்தப் படிப்பு தான் முழு அமைதியில் இருப்பதற்கானதாகும். ஊது பத்தி கொளுத்துகின்றனர். பகட்டு காட்டுகின்றனர். ஆகவேதான் இவர்கள் (மனிதர்கள்) நம்மிடம் இந்த அளவு சிவ ஜெயந்தியை ஏன் கொண்டாடுகின்றீர்கள் எனக் கேட்கின்றனர். சிவ பாபாதான் பாரதத்தைச் செல்வம் மிகுந்த நாடாக மாற்றுகிறார். இலட்சுமி- நாராயணரை சொர்க்கத்தின் எஜமானராக யார் உருவாக்கியது? இது உங்களுக்குத் தெரியும். இவர்கள் முற்பிறவியில் என்னவாக இருந்தனர்? இவர் (இலட்சுமி) முன் ஜென்மத்தில் ஜெகத் அம்பா ஞான ஞானேஸ்வரியாக இருந்தார், அவரே பிறகு இராஜ-இராஜேஸ்வரியாகின்றார். இப்போது யாருடைய பதவி பெரியது? பார்க்கும் போது இவர் சொர்க்கத்தின் எஜமானர். ஜெகத் அம்பா எதற்கு எஜமானியாக இருந்தார்? இவரிடம் ஏன் செல்கின்றனர்? பிரம்மாவிற்கும் கூட 100 கைகள், 200 கைகள், 1000 கைகளுடையவராகக் காட்டுகிறார்கள். எத்தனை குழந்தைகளோ அந்தளவு கைகளின் எண்ணிக்கை அதிகமாகிறது. ஜகத் அம்பாவிற்குக் கூட இலட்சுமியை விட அதிகமான கைகளைக் கொடுத்து விட்டனர், அவரிடம் சென்று அனைத்தையும் வேண்டுகின்றனர். இது வேண்டும், அது வேண்டும் .... இப்படி நிறைய ஆசைகளோடு செல்கிறார்கள். இலட்சுமியிடம் ஒருபோதும் இப்படிப்பட்ட விருப்பங்களோடு செல்வதில்லை. இவரிடம் செல்வம் மட்டுமே உள்ளது. ஜகத் அம்பாவிடமிருந்து சொர்க்கத்தின் இராஜ பதவி கிடைக்கிறது. எனவே ஜகத் அம்பாவிடம் எதை விரும்பி யாசிப்பது என்று தெரிவதில்லை. இதுவோ படிப்பு (ஆன்மீக ஞானம்) ஜகத் அம்பா எதைக் கற்பிக்கின்றார்? இராஜயோகத்தை ! இது புத்தியோகம் என்றும் கூறப்படுகிறது. உங்களுடைய புத்தி பலவற்றின் பக்கமிருந்து விலக்கப்பட்டு ஒரு பாபாவிடம் ஈடுபடுகிறது. புத்தி பல திசைகளில் அலை பாய்ந்து ஓடுகிறது. பாபா கூறுகிறார் - என்னோடு புத்தியின் தொடர்பை ஈடுபடுத்துங்கள், இல்லையெனில், விகாரங்கள் விநாசமாகாது. எனவே தான் பிரம்மா பாபாவின் புகைப்படம் எடுப்பதைக் கூட தடுக்கின்றார். ஏனெனில் இது அவருடைய சரீரம் தான் அல்லவா !

பாபா தானே தரகர் ஆகிக் கூறுகிறார் : இப்போதே உங்களுடைய நிச்சயதார்த்தம் (திருமண பந்தம்) இரத்தாகிறது. காமச் சிதையி-ருந்து இறங்கி இப்பொழுது ஞானச் சிதையில் அமருங்கள். காமச்சிதையி-ருந்து கீழிறங்கவும். தங்களை ஆத்மா என உணர்ந்து தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள், அப்போது விகர்மங்கள் விநாசமாகிவிடும். எந்த ஒரு மனிதனும் இவ்வாறு சொல்ல முடியாது. மனிதர்களை பகவான் என்று கூற முடியாது. அவர் இவரில் (பிரம்மா) வந்து கூறுகிறார். நீங்களும் ஆத்மா, மற்றவர்களையும் ஆத்மா என உணருங்கள். மன்மனாபவ என்று தந்தை கூறுகின்றார். மன்மனாபவ என்று கூறுவதன் மூலம் நினைவு வந்து விடும். இந்தப் பழைய உலகத்தின் அழிவு (கண்) முன்பாக உள்ளது. இதுதான் மகாபாரத யுத்தம் என்று ஏன் கூறுகிறார்கள்? பாரதத்தில் யக்ஞம் ஆயத்தம் (ஆரம்பம்) ஆகியுள்ளது. இதி-ருந்து விநாசத்தின் தீப் பிழம்பு வெளியாகிறது. உங்களுக்காக புதிய உலகம் தேவைப்படுவதால் இனிமையான குழந்தைகளே ! இந்தப் பழைய உலகம் அழிய வேண்டும். எனவே இந்த போரினுடைய மூல வேர் இங்கிருந்து வெளிவருகிறது (முளைக்கிறது) இந்த ருத்ர ஞான வேள்வியி-ருந்து மிகப் பெரிய போர், விநாச ஜுவாலை கொழுந்து விட்டு எரிகிறது. இது சாஸ்திரங்களில் எழுதப்பட்டிருந்தாலும் எங்களுக்குத் தெரியாதெனக் கூறி விட்டனர். புதிய உலகத்திற்காக பாபா இப்போது புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். இப்போது நீங்கள் இராஜ்யத்தை பெறுகின்றீர்கள், தேவி தேவதைகளாக ஆகின்றீர்கள். உங்களுடைய இராஜ்யத்தில் வேறு யாரும் இருக்க முடியாது. சைத்தானின் (அசுர) உலகம் விநாசம் ஆகிறது. நாம் தான் நேற்று (கடந்த காலத்தில் ) இராஜ்யம் செய்தோம் என்ற நினைவு இருக்க வேண்டும். பாபா இராஜ்யம் கொடுத்திருந்தார். பிறகு 84 பிறவிகள் எடுத்து வந்துள்ளோம். மீண்டும் பாபா வந்துள்ளார். குழந்தைகள் உங்களிடம் இந்த ஞானம் இருக்கிறதல்லவா? தந்தை தான் இந்த ஞானத்தை அளித்தார். எப்போது தேவதா தர்மத்தின் ஸ்தாபனை ஆகிறதோ பிறகு முழு அசுர உலகம் விநாசம் ஆகிவிடுகிறது. பாபா பிரம்மா மூலம் அனைத்து விசயங்களையும் புரிய வைக்கிறார். பிரம்மாவும் கூட சிவபாபாவின் குழந்தையே, விஷ்ணுவின் இரகசியத்தை அதாவது பிரம்மாவி-ருந்து விஷ்ணு, விஷ்ணுவி-ருந்து பிரம்மா ஆகிறார் என்பதைப் புரிய வைத்தார். இப்போது நாம் பிராமணர்கள், பிறகு தேவதை ஆகி பிறகு 84 பிறவிகள் எடுப்போம் என்று நீங்களும் புரிந்து கொண்டீர்கள். இந்த ஞானத்தைத் தருபவர் ஒரே ஒரு தந்தை தான் எனவே மனிதர்களிடமிருந்து இந்த ஞானம் எப்படிக் கிடைக்கும்? இதில் புத்திக்கான எல்லா விசயமும் உள்ளது. மற்ற எல்லா புறங்களிலும் செல்கின்ற புத்தியை நிறுத்தவும். புத்தி தான் கெட்டுவிடுகிறது. என்னை நினைவு செய்தீர்களானால் விகர்மங்கள் விநாசமாகிவிடும். இல்லற விவகாரங்களில் இருங்கள், இலக்கு மற்றும் இலட்சியம் உங்கள் முன் உள்ளது. படித்து நாம் இப்படி ஆவோம் என்பது உங்களுக்குத் தெரியும். உங்களுடைய படிப்பு சங்கம யுகத்தில் தான். தற்சமயம் நீங்கள் இந்தப் பக்கமும் இல்லை, அந்தப் பக்கமும் இல்லை. வெளியில் இருக்கின்றீர்கள். பாபாவை படகோட்டி என்றும் கூறுகின்றனர். எங்களுடைய படகை அக்கரையில் கொண்டு போய் சேர்ப்பியுங்கள் என்று பாடுகின்றீர்கள். இது சம்மந்தமாக ஒரு கதை கூட உள்ளது (பண்டிதர்). சிலர் சென்று விடுகிறார்கள், சிலர் நின்று விடுகிறார்கள். பாபா கூறுகின்றார். நான் இந்த பிரம்மாவின் வாய் மூலமாக சொல்கின்றேன். பிரம்மா எங்கிருந்து வந்தார்? பிரஜாபிதா பிரம்மா அவசியம் இங்கு தேவை அல்லவா ! நான் இவரைத் தத்தெடுக்கின்றேன், இவருக்கு பெயரையும் சூட்டுகிறேன். நீங்கள் கூட பிரம்மா வாய் வம்சாவளி. நீங்கள் க-யுகத்தின் இறுதியில் உள்ளீர்கள், பிறகு சத்யுக ஆரம்பத்தில் செல்வீர்கள். நீங்கள் தான் முதன் முதலாக பிரிந்து உங்களுடைய நடிப்பின் பாகத்தை நடிக்க வந்தவர்கள். எங்களுடன் எல்லோருமே இருப்பதாக சொல்ல மாட்டீர்கள் அல்லவா! யார் முழுமையாக 84 பிறவிகள் எடுக்கின்றார்கள் என்று இதன் மூலம் தெரியக்கூடும். ஆனால் இந்த இலட்சுமி -நாராயணருக்கு உத்திரவாதம் உள்ளது அல்லவா ! இவர்களைத்தான் ஷியாம், சுந்தர் என்று பாடுகின்றனர். தேவி-தேவதைகள் அழகாக இருந்தனர், கருப்பாக இருந்து வெண்மையாக ஆகின்றனர். கிராமத்தின் சிறுவனாக இருந்து மாறி அழகானவராகின்றார். தற்சமயம் எல்லோரும் ஆண் மற்றும் பெண் (குழந்தைகள்) சிறுவர்கள். இது எல்லைக்கப்பாற்பட்ட விசயம், யாருக்கும் அவர்களைத் தெரியாது. எவ்வளவு நல்ல - நல்ல விளக்கங்கள் தரப்படுகின்றன. அனைவருக்குமான மருத்துவர் (சர்ஜன்) ஒருவர் தான். அவர் தான் அழிவற்ற சர்ஜன்.

யோகத்திற்கு அக்னி என்று கூறப்படுகிறது. ஏனென்றால், யோகத்தால் தான் ஆத்மாவிலுள்ள கறை நீங்குகிறது. யோக அக்னியால் தமோபிரதான ஆத்மா சதோபிரதானமாக ஆகிறது. ஒருவேளை இந்த அக்னி குளிர்ந்து விட்டால் கறை நீங்காது. நினைவிற்குத்தான் யோக அக்னி என்று சொல்லப்படுகிறது, இதனால் விகர்மங்கள் விநாசமாகிறது. உங்களுக்கு எவ்வளவு புரிய வைத்துக் கொண்டிருக்கிறேன் என்று பாபா சொல்கிறார். தாரணையும் கூட இருக்கிறது தானே ! நல்லது, மன்மனாபவ. இதில் களைப்படைந்து விடக்கூடாது. தந்தையை நினைவு செய்வதைக் கூட மறந்து விடுகிறார்கள். பதிகளுக்கெல்லாம் பதியானவர் (கணவர்) உங்களை ஞானத்தால் எந்தளவு அலங்காரம் செய்கிறார்! நிராகாரமான தந்தை கூறுகிறார் மற்ற எல்லாவற்றிலுமிருந்தும் புத்தியின் தொடர்பை நீக்கி தங்களுடைய தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள். அனைவருக்குமாக தந்தை ஒருவர் தான். இப்பொழுது உங்களுடைய முன்னேறும் கலை. உங்களுடைய உயர்வால் (சிறப்பால்) அனைவருக்கும் நலம்- என்று (வழக்கு மொழி) சொல்லப்படுகிறது. அனைவருக்கும் நன்மை செய்ய பாபா வந்துள்ளார். இராவணன் அனைவரையும் துர்கதிக்கு இட்டுச் செல்கிறான், இராமன் அனைவரையும் சத்கதிக்கு அழைத்துச் செல்கிறார். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. தந்தையின் நினைவினால் அளவு கடந்த சுகத்தை அனுபவம் செய்வதற்காக புத்தி தெளிவாக இருக்க வேண்டும். நினைவு எப்போது அக்னி சொரூபமாக ஆகிறதோ அப்போது ஆத்மா சதோபிரதானமாக ஆகிவிடும்.

2. தந்தை சோழிகளுக்குப் பதிலாக இரத்தினங்களைத் தருகின்றார். அப்படிப்பட்ட கள்ளம் கபடமற்ற தந்தையிடமிருந்து தங்களுடைய பையை (புத்தியை) நிரப்பிக் கொள்ளவும். சாந்தியில் இருப்பதற்காக இந்தக் கல்வியைக் கற்று சத்கதியை பலனாக அடைய வேண்டும்.

வரதானம்:
மாயாவின் பந்தனங்களிலிருந்து சதா பந்தனமற்று இருக்கக்கூடிய யோகயுக்த் பந்தன்முக்த் ஆகுக

பந்தனமுக்தியின் அடையாளம் சதா யோகம் நிறைந்த(யுக்த்) நிலையாகும் யோகயுக்த் குழந்தைகள் பொறுப்புகளின் பந்தனம் மற்றும் மாயாவின் பந்தனத்திலிருந்து முக்தியடைந் திருப்பார்கள். மனதிற்கான பந்தனமும் இராது. லௌகீக பொறுப்புகள் விளையாட்டு, ஆகவே கட்டளைப்படி விளையாட்டு என்ற ரீதியில் சிரித்துக்கொண்டே விளையாடுங்கள். ஒருபொழுதும் சின்னச்சின்ன விசயங்களில் களைப்படைய மாட்டீர்கள் .பந்தனம் என நினைத்தால் கஷ்டம் ஏற்படும். என்ன, ஏன் என்ற கேள்வி எழும். ஆனால் பொறுப்பு பாபா இருக்கின்றார், நீங்கள் நிமித்தம். இந்த நினைவின் மூலம் பந்தனமுக்தியாகுங்கள் அப்பொழுது யோகயுக்த் ஆகிவிடலாம்.

சுலோகன்:
செய்பவர் செய்விப்பவர் என்ற நினைவில் அகந்தை மற்றும் அபிமானத்தை அழித்துவிடுங்கள்.

அவ்யக்த பிரேரணை - சத்தியம் மற்றும் பண்பாடு என்ற கலாச்சாரத்தை தனதாக்குங்கள்

அபவித்திரம் என்பது வெறும் யாருக்கேனும் துக்கம் கொடுப்பதோ அல்லது பாவம் செய்வதோ அல்ல, ஆனால் தனக்குள் சத்தியம், சுத்தம் விதிப்பூர்மாக அனுபவம் செய்தால் பவித்திரமாக இருக் கின்றோம் என்று அர்த்தம். பழமொழி - சத்தியம் என்ற படகு மூழ்காது ஆனால் ஆடுமசையும். நம்பிக்கை என்ற படகு சத்தியம், நேர்மை, அது அசையும், ஆனால் மூழ்காது ஆகையால் சத்திய தன்மையின் தைரியத்துடன் பரமாத்மாவின் பிரத்தியட்சத்திற்கு நிமித்த மாகுங்கள்.