20.04.25    காலை முரளி            ஓம் சாந்தி  18.01.2005      பாப்தாதா,   மதுபன்


ஒரு நொடியில் தேக உணர்விலிருந்து விடுபட்டு ஜீவன் முக்தி நிலையை அனுபவம் செய்யுங்கள் மற்றும் மாஸ்டர் முக்தி ஜீவன் முக்தி வள்ளல் ஆகுங்கள்

இன்று பாப்தாதா நாலாபுறமும் உள்ள அதிர்ஷ்டசாலியும், அன்பான குழந்தைகளையும் பார்த்துக் கொண்டிருக்கின்றார். ஒவ்வொரு குழந்தையும் அன்பில் மூழ்கியுள்ளனர். இந்த பரமாத்ம அன்பு அலௌகீக அன்பாகும். இந்த அன்பு தான் குழந்தைகளை தந்தையினுடையவராக மாற்றியது. அன்பு தான் சுலபமான வெற்றியைத் தந்தது. இன்று அமிர்தவேளை முதலாகவே நாலாபுறமும் உள்ள குழந்தைகள் ஒவ்வொருவரும் தனது அன்பெனும் மாலையை தந்தைக்கு அணிவித்தனர். ஏனெனில் இந்த பரமாத்ம அன்பு எதிலிருந்து எதுவாக மாற்றுகிறது என்பதை குழந்தைகள் ஒவ்வொருவரும் தெரிந்துள்ளனர். அன்பின் அனுபவம் பரமாத்மாவின் அனேக பொக்கிஷங்களுக்கு எஜமானாக மாற்றுவது. பரமாத்மாவின் அனைத்து பொக்கிஷங்களுக்குமான பொற்சாவி யை அனைத்து குழந்தைகளுக்கும் கொடுத்துள்ளார். தெரியுமல்லவா? அந்த பொற்சாவி எது? அந்த பொற்சாவி மேரா பாபா என்னுடைய பாபா. எனது பாபா என்று சொன்ன மாத்திரமே அனைத்து பொக்கிஷங்களின் அதிகாரி ஆகிவிட்டீர்கள். அனைத்து பிராப்திகளின் அதிகாரத்தால் முழுமை யடைந்துள்ளீர்கள். சர்வ சக்திகளால் சக்திசாலியாகி உள்ளீர்கள். மாஸ்டர் சர்வ சக்திவான் ஆத்மாக்கள் ஆகிவிட்டீர்கள். அத்தகைய முழுமையான ஆத்மாக்களின் உள்ளத்திலிருந்து எழும் பாடலென்ன? இல்லையென்ற பொருளே இல்லை பிராமணர்களான உங்களது பொக்கிஷத்தில்.

இன்றைய நாளை நினைவு நாளாக சொல்லப்படுகிறது. இன்று குழந்தைகள் அனைவருக்கும் முக்கியமாக ஆதி தேவ் பிரம்மா பாபாவின் நினைவு வருகின்றது. பிரம்மா பாபா பிராமண குழந்தைகளான உங்களைப் பார்த்து மகிழ்கின்றார். ஏன்? பிராமண குழந்தை ஒவ்வொருவரும் கோடியில் ஒருவரான பாக்கியவான் குழந்தை ஆவீர்கள். தனது பாக்கியத்தைத் தெரிந்துள்ளீர்களா? பாப்தாதா ஒவ்வொரு குழந்தையின் நெற்றியிலும் மின்னுகின்ற பாக்ய நட்சத்திரத்தைப் பார்த்து மகிழ்கின்றார். இன்றைய நினைவு நாளில் முக்கியமாக பாப்தாதா உலக சேவைக்கான பொறுப்பு கிரீடத்தை குழந்தைகளிடம் அர்ப்பணம் செய்துள்ளார். ஆகவே இந்த நினைவு நாள் குழந்தை களான உங்களுக்கு ராஜதிலகம் அணிவித்த நன்னாளாகும். முக்கியமாக மானுடலில் இருந்த போதே வில்பவர் அனைத்தையும் உயில் செய்த நன்னாளாகும். தந்தையைப் போல் பிள்ளை எனும் சொல்லை நடைமுறையில் செயல்படுத்திய நன்னாளாகும். பாப்தாதா குழந்தைகளின் நிமித்த பாவனையுடன் தன்னலமில்லா விஷ்வ சேவையைப் பார்த்து மகிழ்கின்றார். பாப்தாதா செய்விப்பவர், செய்யும் குழந்தைகளின் ஒவ்வொரு அடியையும் பார்த்து மகிழ்கின்றார். ஏனெனில் சேவையின் வெற்றிக்கு முக்கிய ஆதாரமே - செய்விப்பவர் பாபா செய்யும் ஆத்மா என் மூலமாக செய்ய வைக்கின்றார் என்பதாகும். நான் ஆத்மா நிமித்தமாக உள்ளேன். ஏனெனில் கருவியெனும் உணர்வால் பணிவு நிலை இயல்பாகின்றது. தேக உணர்வில் கொண்டுவரும் நான் எனும் அகந்தையை பணிவெனும் உணர்வு இலகுவாக அழித்து விடுகின்றது. இந்த பிராமண வாழ்வில் மிகப் பெரிய தடையை உருவாக்குவது நான் எனும் தேக உணர்வே ஆகும். செய்ய வைப்பவர் செய்விக்கின்றார், நான் நிமித்தமான கருவியாகி செய்கின்றேன் எனும்போது சுலபமாகவே தேக அபிமானம் முடிவடைந்து ஜீவன் முக்தியெனும் ஆனந்தம் அனுபவமாகிறது. நாளை ஜீவன் முக்தி பிராப்தமாகியே தீரும். ஆனால் இப்போதைய சங்கமயுகத்தின் ஜீவன் முக்தியின் அலௌகீக ஆனந்தம் முற்றிலும் அலாதியானது. கர்மம் செய்த போதும் கர்ம பந்தனத்திலிருந்து விடுடிபட்ட நிலையில் பிரம்மா பாபாவைப் பார்த்தோம். வாழ்வில் இருந்தபோதும் தாமரை மலர் போன்று அன்பாகவும் விலகியும் இருந்தார். இவ்வளவு பெரிய குடும்பத்தின் பொறுப்பு, வாழ்வின் பொறுப்பு யோகியாக மாற்றுவதற்கான பொறுப்பு, பரிஸ்தாவிலிருந்து தேவதையாக மாற்றுவதற்கான பொறுப்பு இருந்தும் கவலையில்லா இராஜா நிலை. இதனையே ஜீவன் முக்தி நிலை என கூறப்படுகின்றது. எனவே தான் பக்தி மார்க்கத்திலும் பிரம்மாவின் ஆசனத்தை தாமரை மலராக காண்பிக்கப்படுகின்றது. கமலாசானதாரியாக காண்பிக்கின்றனர். அவ்வாறே குழந்தைகளாகிய உங்கள் அனைவருக்கும் சங்கமயுகத்திலேயே ஜீவன் முக்திக்கான ஆஸ்தி இந்த சமயத்திலேயே பிராப்தமாகின்றது. இப்போதே மாஸ்டர் முக்தி, ஜீவன் முக்தி வள்ளல் ஆக வேண்டும். ஆகின்றீர் கள், மேலும் ஆக வேண்டும். முக்தி ஜீவன் முக்தியின் மாஸ்டர் வள்ளல் ஆவதற்கான விதி - ஒரு நொடியில் தேக உணர்விலிருந்து விடுபட வேண்டும். இந்த பயிற்சியே இப்போது தேவை. மனதின் மீது அத்தகைய கட்டுப்பாடு இருத்தல் தேவை. எப்படி இந்த ஸ்தூல இந்திரியங்களை கை, கால்களை தேவைக்கேற்ப வேண்டிய பொழுது விரும்பியபடியே பயன்படுத்துகின்றீர்கள். அதற்கு நேரம் ஆகிறதா என்ன? கையை மேலே உயர்த்த நினையுங்கள், நேரம் ஆகிறதா? உயர்த்த முடிகிற தல்லவா? இப்போது பாப்தாதா சொல்கிறார் கையை மேலே உயர்த்துங்கள் - உயர்த்துவீர்கள் தானே! உயர்த்தாதீர்கள், செய்ய முடியும் தானே! அவ்வாறே மனதின் மீது அந்தளவிற்கு கட்டுப்பாடு இருத்தல் வேண்டும். எங்கே மனதை ஒருநிலைப்படுத்த வேண்டுமோ அங்கு ஒரு நிலைப்பட வேண்டும். மனம் என்பது கை, காலைவிட சூட்சுமமானது தான். இருப்பினும் அது உங்களுடையது தானே! எனது மனம் என்றே சொல்வீர்கள் அல்லவா! உனது மனம் என்று சொல்ல மாட்டீர்கள் மாட்டீர்களே! எவ்வாறு ஸ்தூல மான கர்மேந்திரியங்களை கட்டுபாட்டில் வைக்கின்றீர்களோ அவ்வாறே மனம்-புத்தி-சம்ஸ்காரங்களை கட்டுப்பாட்டில் வையுங்கள். அப்போதே நம்பர் ஒன் வெற்றியாளர் ஆவீர். அறிவியல் விஞ்ஞானிகளே ராக்கெட் மூலமாக மற்றும் தனது சாதனங்கள் மூலமாக இந்த உலகின் உச்சத்தை சென்றடைகிறார்கள், அதிகபட்சம் கிரகங்களை சென்றடை கின்றார்கள். ஆனால் பிராமண ஆத்மாக்களான நீங்களோ மூன்று லோகங்களையும் கடந்து செல்கின்றீர்கள். ஒரு நொடியில் சூட்சும லோகம், நிராகரி ஆத்ம லோகம் இம்மண்ணில் உள்ள மதுபனையும் சென்றடைகின்றீர்கள் அல்லவா! மதுபன் செல் என மனதிற்கு கட்டளை பிறப்பித்த மாத்திரமே செல்கிறது தானே, உடலால் அல்ல மனதால், கட்டளையிடுங்கள் சூட்சுமவதனம் செல், நிராகாரி ஆத்ம லோகம் செல் என மூன்று லோகத்திற்கும் விரும்பிய போதே மனதால் செல்வீர்கள் அல்லவா! பயிற்சி செய்கின்றீர்கள் ஆனால் வேண்டிய பொழுது எவ்வளவு நேரம் ஒருமுக நிலையில் ஆடாது அசையாது இருப்பதில் அதிக கவனம் தேவை.

மனதை வென்றவர் உலகை வென்றவர் எனப்பாடப்படுகிறது. இப்போதோ மனம் அவ்வப்போது ஏமாற்றவும் செய்கின்றது. ஆகவே சக்திவாய்ந்த நன்னாளான இன்று பாப்தாதா இந்த சக்தியின் மீதே முக்கிய கவனத்தை திருப்புகின்றார். ஏ சுயராஜ்ய அதிகாரி குழந்தைகளே, இப்போது முக்கியமாக இந்த பயிற்சியினையே நடமாடும் பொழுதெல்லாம் சோதனை செய்யுங்கள். ஏனெனில் சமயத்திற்கேற்ப இப்போது எதிர்பாராத சம்பவங்கள் அதிகம் பார்க்க நேரிடும். இதற்காக ஏகாக்ரதா ஒரு முக சக்தி அவசியமாகும். மனதின் ஒருமுகத்தன்மையால் உறுதி மனபான்மையும் சுலபமாகவே வந்துவிடும். அந்த உறுதித் தன்மையானது வெற்றியை இலகுவாக பெற்றுத் தருகின்றது. ஆகவே முக்கியமாக சக்தி வாய்ந்த நன்னாளான இன்று இந்த சக்தியின் பயிற்சியில் முக்கிய கவனம் வையுங்கள். எனவே தான் பக்தி மார்க்கத்திலும் மனதால் தோற்றவர் தோற்றுப் போனவர், மனதை வென்றவர் வெற்றி கொண்டவர் எனவும் சொல்வர். சக்திகளெனும் கடிவாளத்தால் வெற்றியடையுங்கள். இந்த புத்தாண்டில் இந்த வீட்டுப்பாடத்தின் மீது முக்கிய கவனம் செலுத்துங்கள். யோகி தான் நீங்கள் இப்போது பிரயோகி (செயல் முறை படுத்துபவர்) ஆகுங்கள்.

மேலும் இன்று அன்பான ஆன்மீக உரையாடலும், அன்பான புகார்களும் சமநிலை பெறுவோம் என்ற ஊக்கம் உற்சாகம் நிறைந்த சொற்களும் இவ்வாறாக மூன்று விதமான ஆன்மீக உரை யாடலும் பாப்தாதாவை வந்தடைந்தது, நாலாபுறமும் உள்ள குழந்தைகளின் அன்பு நிறைந்த நினைவுகளும் அளவிலா அன்பும் பாப்தாதாவை வந்தடைந்தது. கடிதமும் வந்தது, ஆன்மீக உரை யாடலும் வந்தது, பாப்தாதா குழந்தைகளின் அன்பை ஏற்றுக் கொண்டார். பதிலுக்கு கைமாறாக அன்பு நினைவுகளையும் வழங்கினார். உளமார்ந்த வாழ்த்துக்களையும் வழங்கினார். ஒவ்வொரு வர் பெயரையும் குறிப்பிட முடியாதல்லவா! அனேக குழந்தைகள் உள்ளனர். ஆனால் எங்கோ ஒரு மூலையில் இருப்பினும், கிராமமோ, நகரமோ அனைத்து இடங்களிலுமுள்ள குழந்தைகளுக்கு பந்தனத்திலுள்ளவர்கள், புகார் செய்வார்கள். அனைவரது அன்பு நினைவுகளும் வந்து சேர்ந்தது இப்போது பாப்தாதாவின் விருப்பம் இதுவே - அன்பிற்கு கைமாறாக தன்னை மாற்றிக் காட்டுங்கள் - மேடையின் மீது தனது முழுமையான வடிவத்தை வெளிப்படுத்துங்கள். உங்களது முழுமையால் மட்டுமே துக்கம் அசாந்தி அழிந்து போகும். இனி தனது சகோதர சோதரிகளை அதிக துயரம் பார்க்க விடாதீர்கள். இந்த துக்கம், அசாந்தியிலிருந்து விடுவியுங்கள். மிகவும் பயந்துள்ளார்கள். என்ன செய்வது, என்ன ஆகுமோ.... இந்த இருளில் அல்லல்ப்படுகின்றார்கள். ஆத்மாக்களுக்கு இப்போது வெளிச்சமான பாதையை காண்பியுங்கள். ஊக்கம் வருகிறதா? இரக்கம் வருகின்றதா? இப்போது பேருலகைப் பாருங்கள். அகிலத்தின் மீது பார்வையை செலுத்துங்கள். நல்லது. வீட்டுப் பாடம் நினைவிலிருக்குமல்லவா. மறந்து விடாதீர்கள். பரிசு வழங்குவோம். யாரொருவர் ஒரு மாதத்தில் தனது மனதை முழு கட்டுப்பாட்டில் எங்கு வேண்டுமோ, எப்போது வேண்டுமோ அங்கு ஒருமுக நிலையில் இருந்தீர்களோ அந்த சார்ட்க்கான ரிசல்ட்டைப் பார்த்து பரிசு தருவோம். சரி தானே! யார் பரிசு பெறுவார்? பாண்டவர் - முதலில் பாண்டவர்களா? பாண்டவர்கள் நம்பர் ஒன், சக்திகள் ஏ ஒன். சக்திகள் ஏ ஒன் இல்லையெனில் பாண்டவர்கள் ஏ ஒன். இப்போது சற்று வேகத்தை துரிதப்படுத்துங்கள். சாவகாசமாக அல்ல. துரித வேகத்திலேயே தான் ஆத்மாக்களின் துக்கம், வலி நீங்கும். இரக்கம் எனும் நிழல் குடையை ஆத்மாக்கள் மீது விரியுங்கள். நல்லது.

இரட்டை அயல் நாட்டு சகோதர சகோதரிகளுடன்: இரட்டை அயல் நாட்டவர். பாப்தாதா கூறுகின்றார் இரட்டை அயல் நாட்டவர் என்றாலே இரட்டை முயற்சியில் முன்னேறுபவர். இரட்டை அயல் நாட்டவர் அயல் நாட்டவர் முதல் இடத்தை அடைய இரட்டை வேகத்தில் முன்னேறுபவர். நல்லது. ஒவ்வொரு குழுவிலும் பாப்தாதா இரட்டை அயல் நாட்டவரைப் பார்த்து மகிழ்கின்றார். ஏனெனில் பாரத வாசிகள் உங்களைப் பார்த்து மகிழ்கின்றனர். பாப்தாதாவும் விஷ்வ கல்யாணகாரி எனும் டைட்டிலைப் பார்த்து மகிழ்கின்றார். இப்போது இரட்டை அயல் நாட்டவர் என்னதிட்டம் வைத்துள்ளீர்கள்? பாப்தாதா மகிழ்கின்றார். ஆப்பிரிக்காவைச் சார்ந்தவர்கள் தீவிர முயற்சி செய்கின்றனர். அவ்வாறே நீங்களும் அக்கம் பக்கம் உள்ள விடுபட்ட சகோதர சகோதரி களுக்கும் செய்தி தர ஆர்வம் வையுங்கள். புகார் வரக்கூடாது. வளர்ச்சி அடைந்து கொண்டிருக் கின்றது, மேலும் வளரும் ஆனால் புகார் முடிவடைய வேண்டும். இரட்டை அயல் நாட்டவரின் விசேஷத் தன்மை சொல்லப்படுகிறது. தந்தையை திருப்தி செய்வதற்கான சாதனம் - உண்மை உள்ளம் கண்டு தந்தை திருப்தி அடைகின்றார். இதுவே இரட்டை அயல் நாட்டவரின் விசேஷத் தன்மை. தந்தையை திருப்தி செய்வதில் மிகவும் புத்திசாலிகள். உண்மை உள்ளம் பாபாவிற்கு ஏன் பிரியமாகின்றது. ஏனெனில் பாபாவை சத்யமானவர் என சொல்கின்றோம். உண்மையே கடவுள் என சொல்லப்படுகின்றது. பாப்தாதாவிற்கு உண்மை உள்ளம், தூய உள்ளம் மிகவும் பிரியமானது. அப்படித்தானே. உண்மை உள்ளம், தூய உள்ளம். சத்யமே பிராமண வாழ்வின் மேன்மையாகும். எனவே இரட்டை அயல் நாட்டவரை பாப்தாதா எப்போதும் நினைவு செய்கின்றார். பல்வேறு தேசங்களில் ஆத்மாக்களுக்கு செய்தி தர நிமித்தமானீர்கள். பாருங்கள் எத்தனை தேசங்களிலிருந்து வந்துள்ளீர்கள்? ஆக இத்தனை தேசங்களுக்கும் நன்மை நடந்துள்ளது. ஆக பாப்தாதா, இங்கு நிமித்த மான நீங்கள் வந்துள்ளீர்கள் ஆனால் நாலாபுறமும் உள்ள இரட்டை அயல் நாட்டு குழந்தை களுக்கு, நிமித்தமான குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள் தருகின்றார். பறந்து கொண்டேயிருங்கள், பிறரையும் பறக்க வையுங்கள். பறக்கும் கலையால் அனைவருக்கும் நன்மையே நிகழும். அனைவரும் புத்துணர்ச்சி பெறுகிறீர்களா? புத்துணர்வு பெற்றீர்களா? என்றென்றும் அமரராக இருப்பீர்களா? அல்லது மதுபனிலேயே பாதி விட்டுச் செல்வீர்களா? உடனிருக்குமா, எப்போதும் இருக்குமா? அமர்பவ எனும் வரதானம் உள்ளதல்லவா? எதனை மாற்றினீர்களோ அது எப்போதும் வளர்ந்து கொண்டேயிருக்கும். அமர் (அழியாது) இருக்கும். நல்லது. பாப்தாதா மகிழ்கின்றார், நீங்களும் மகிழ்கின்றீர்கள். பிறரையும் மகிழவையுங்கள். நல்லது.

ஞானசரோவருக்கு 10 ஆண்டுகள் ஆயிற்று: நல்லது. நன்றாக உள்ளது. ஞானசரோவரில் ஒரு விசேசம் ஆரம்பமானது. ஞானசரோவர் ஆரம்பமான முதலே முக்கியஸ்தர்கள், மிக முக்கிய பிரமுகர்களுக்கு விதிப்பூர்வமான நிகழ்ச்சிகள் ஆரம்பமாயிற்று. அனைத்து துறையினருக்குமான நிகழ்ச்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக நடைபெற்ற வண்ணம் உள்ளது. மேலும் பார்க்கும் போது ஞானசரோவரில் வரும் ஆத்மாக்களுக்கு மனதாலும், உடலாலும் மிகவும் விருப்பத்துடன் சேவை செய்கின்றனர். எனவே ஞான சரோவரில் உள்ளவர்களுக்கு பாப்தாதா விசேஷ வாழ்த்துக்களைத் தருகின்றார். சேவையின் ரிசல்ட் அனைவருமே மகிழ்ந்து செல்கின்றனர். மேலும் மிகுந்த மகிழ்ச்சி யுடன் தனது நண்பர்களையும் உடனழைத்து வருகின்றனர். நாலாபுறமும் செய்தி பரவச் செய்வதில் ஞான சரோவர் நிமித்தமாக உள்ளது. வாழ்த்துக்கள் என்றென்றும் வாழ்த்துக்கள் பெற்றுக் கொண்டேயிருங்கள். நல்லது.

இப்போது ஒரு நொடியில் மனதை ஒரு நிலைப்படுத்த முடியுமா? அனைவரும் ஒரு நொடியில் பிந்து நிலையில் நிலைபெறுங்கள். (பாப்தாதா டிரில் செய்வித்தார்) நல்லது. இத்தகைய பயிற்சியை நடமாடும் பொழுதெல்லாம் செய்து கொண்டேயிருங்கள.

நலாபுறமும் உள்ள சினேகி, லவ்லீன் ஆத்மாக்களுக்கு சதா இரக்க மனதுடன் ஒவ்வொரு ஆத்மாவையும் துக்கம் அசாந்தியிலிருந்து விடுவிக்கும் சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு சதா தனது மனம், புத்தி சம்ஸ்காரத்தினை கட்டுப்படுத்தும் சக்தி மூலமாக கட்டுப்பாட்டில் வைக்கும் மகாவீர் ஆத்மாக்களுக்கு சதா சங்கமயுகத்தின் ஜீவன் முக்தி நிலையினை அனுபவம் செய்யும் பாப்சமான் ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் பன்மடங்கு அன்பு நினைவுகளும் நமஸ்காரமும்.

வரதானம்:
அனைவருக்கும் இலக்கை காண்பிக்க இரக்க மனமுள்ள தந்தையின் குழந்தை இரக்கமனமுள்ளவர் ஆகுக.

இரக்கமனமுள்ள தந்தையின் இரக்க மனம் நிறைந்த குழந்தைகள் ஏழ்மையாக யாரைப் பார்த்தாலும் இந்த ஆத்மாவிற்கு நல்வழி கிடைக்கட்டும், நன்மை நடக்க வேண்டும் என்ற இரக்கம் ஏற்படும். அவரது தொடர்பில் வரும் அனைவருக்கும் அவசியம் தந்தையின் அறிமுகம் தருவார்கள். வீட்டிற்கு யாரேனும் வந்தால் முதலில் தண்ணீர் வழங்குவார்கள். மாறாக தரவில்லை யெனில் தவறாகக் கருதப்படும். அவ்வாறே தன் தொடர்பில் வரும் அனைவருக்கும் தந்தையின் அறிமுகம் எனும் தண்ணீர் வழங்குங்கள். அதாவது வள்ளலின் பிள்ளைகள் வள்ளலாகி ஏதேனும் ஒன்றை கொடுக்க வேண்டும். அதன் மூலம் நல் வழி கிடைக்க வேண்டும்.

சுலோகன்:
யதார்த்தமான வைராக்கிய உள்ளுணர்வு என்பதன் எளிமையான அர்த்தம் - எந்தளவிற்கு விலகியிருப்போமோ அந்தளவே அன்பாயிருத்தல் ஆகும்.

அவ்யக்த சமிக்ஞை: இணைந்த ரூபத்தின் நினைவால் சதா வெற்றியாளராகுங்கள்

நானும், எனது தந்தையும் இதே நிலையில் இணைந்தேயிருந்தால் மாயையினை வென்றவராவீர்கள். செய்பவர் செய்ய வைப்பவர் இந்த சொல்லில் தந்தையும் குழந்தையும் இணைந்தேயுள்ளனர். கை குழந்தைகளுடையது செயல் தந்தையினுடையது. கை கொடுப் பதற்கான பொன்னான வாய்ப்பு குழந்தைகளுக்கு மட்டுமே கிடைத்துள்ளது. ஆனால் செய்ய வைப்பவர் செய்ய வைத்துக் கொண்டிருக்கின்றார் என்ற அனுபவமே ஏற்படுகின்றது. நிமித்தமான கருவியாக நம்மை வைத்து நடத்திக் கொண்டிருக்கின்றார். இந்த சப்தமே எப்போதும் மனதிலிருந்து வெளிப்படுகின்றது