20-05-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! நான் எவ்வளவு நேரம்
தந்தையின் நினைவில் இருக்கிறேன்? மற்றும் ஆத்ம அபிமானி நிலையில்
எவ்வளவு நேரம் இருக்கிறேன்? என்று தனக்குத் தானே கேட்டுக்
கொள்ளுங்கள்.
கேள்வி:
அதிர்ஷ்டசாலி குழந்தைகள் மட்டுமே
தந்தையின் எந்த கட்டளையை கடைபிடிப்பார்கள்?
பதில்:
தந்தையின் கட்டளை - இனிய
குழந்தைகளே! ஆத்ம அபிமானி ஆகுங்கள். ஆத்மாக்களாகிய நீங்கள்
அனைவரும் ஆண்களாக இருக்கிறீர்கள், பெண்கள் அல்ல. ஆத்மாக்களாகிய
உங்களிடம் தான் முழு நடிப்பும் நிறைந்திருக்கிறது. நான் எப்படி
ஆத்ம அபிமானியாக ஆவது? என்ற இந்த ஒரு முயற்சி அல்லது பயிற்சி
மட்டுமே செய்யுங்கள். இது தான் உயர்ந்த இலட்சியம் ஆகும்.
பாடல்:
அதிர்ஷ்டம் உருவாக்கி
வந்திருக்கிறீர்கள் ........
ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிய ஆன்மீகக் குழந்தைகள் பாட்டு கேட்டீர்கள்.
ஆன்மீகக் குழந்தை என்றால் நான் புது உலகிற்கான அதிர்ஷ்டம்
அதாவது சொர்க்கத்தின் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டு
ஆன்மீகத் தந்தையிடம் அமர்ந்திருக்கிறேன் என்று ஜீவ ஆத்மா
கூறுகிறது. இப்போது குழந்தைகள் ஆத்ம அபிமானியாக ஆக வேண்டும்.
உயர்ந்ததிலும் உயர்ந்த முயற்சி இது தான். தன்னை ஆத்மா என்று
புரிந்து கொள்ள வேண்டும் மேலும் ஆத்மாவாகிய நான் தான் 84 பிறவி
எடுத்திருக்கிறேன் என்றும் புரிந்து கொள்ளுங்கள். சில
நேரங்களில் வக்கீலாகவும், சில நேரங் களில்.... ஆகியிருக்கிறேன்.
ஆத்மா ஆணாக இருக்கிறதே தவிர பெண் கிடையாது, அனைவரும் சகோதரர்கள்.
இது எனது சரீரம் என்று ஆத்மா கூறுகிறது அந்த கணக்கின் படி ஆத்மா
ஆண் என்றாலும் இந்த சரீரம் பெண்ணாக ஆகிவிடுகிறது. ஒவ்வொரு
விசயத்தையும் நல்ல முறையில் புரிந்து கொள்ள வேண்டும். தந்தை
மிகவும் விசாலபுத்தி, ஆழமான புத்தியுடையவர்களாக ஆக்குகின்றார்.
ஆத்மாவாகிய நான் 84 பிறவிகள் எடுத்திருக்கிறேன் என்பதை இப்போது
நீங்கள் அறிவீர்கள். நல்லதோ, கெட்டதோ எண்ணங்கள் ஆத்மாவில்
பதிவாகி இருக்கிறது. அதன் ஆதாரத் தின் படி தான் சரீரமும்
கிடைக்கிறது. அனைத்திற்கும் ஆதாரம் ஆத்மாவில் இருக்கிறது. இது
மிகவும் உயர்ந்த முயற்சியாகும். ஜென்ம ஜென்மங்களாக லௌகீகத்
தந்தையை நினைவு செய்தீர்கள். இப்போது பரலௌகீகத் தந்தையை நினைவு
செய்ய வேண்டும். தன்னை அடிக்கடி ஆத்மா என்று புரிந்து கொள்ள
வேண்டும். நான் ஆத்மா, இந்த சரீரத்தை எடுத்திருக்கிறேன்.
இப்போது ஆத்மாவாகிய எனக்கு தந்தை கற்பிக்கின்றார். இது ஆன்மீக
ஞானமாகும், இதை ஆன்மீகத் தந்தை கொடுக்கின்றார். முதன் முதல்
முக்கிய விசயம் என்னவெனில் குழந்தைகள் ஆத்மா அபிமானியாக இருக்க
வேண்டும். இது மிக உயர்ந்த இலட்சியமாகும். ஞானம் உயர்ந்தது
கிடையாது, ஞானத்தில் முயற்சி கிடையாது. சிருஷ்டி சக்கரத்தை
அறிந்து கொள்வது என்பது சரித்திர பூகோளமாகும். உயர்ந்ததிலும்
உயர்ந்தவர் தந்தை ஆவார், பிறகு சூட்சுமவதன தேவதை கள். உலகின்
சரித்திர பூகோளமானது மனித சிருஷ்டியில் ஏற்படுகிறது. மூலவதனம்,
சூட்சும வதனத்தில் சரித்திர பூகோளம் என்பது கிடையாது. அது
சாந்திதாமம் ஆகும். சத்யுகம் சுகதாமம் ஆகும். கலியுகம்
துக்கதாமம் ஆகும். இங்கு இராவண இராஜ்யத்தில் யாரும் அமைதி அடைய
முடியாது. நான் ஆத்மா, சாந்திதாமத்தில் வசிக்கக் கூடியவன் என்ற
ஞானம் இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு கிடைத்திருக்கிறது.
இந்த கர்மேந்திரியங்கள் காரியம் செய்வதற் காகவே. காரியங்கள்
செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி. நான் ஆத்மா, எனது
சுயதர்மம் அமைதியாகும். கர்மயோகி அல்லவா! அவசியம் காரியமும்
செய்ய வேண்டும். கர்ம சந்நியாசி களாக ஒருபோதும் இருக்க முடியாது.
இதுவும் இந்த சந்நியாசிகளின் பாகமாகும். வீடு, வாசலை விட்டு
சென்று விடுகின்றனர், உணவு சமைப்பது கிடையாது, இல்லறவாசிகளிடம்
யாசிக்கின்றனர், பிறகு அந்த இல்லறவாசிகளின் உணவை
சாப்பிடுகின்றனர் அல்லவா! வீடு வாசல் விட்டு விட்டாலும் காரியம்
செய்கின்றனர். கர்ம சந்நியாசம் செய்யவே முடியாது. எப்போது ஆத்மா
சாந்திதாமத்தில் இருக்குமோ அப்போது தான் கர்ம சந்நியாசத்துடன்
இருக்க முடியும். அங்கு கர்மேந்திரியங்களே இல்லை எனும்போது
காரியம் எப்படி செய்ய முடியும்? இது கர்மசேத்திரம் என்று
கூறுகிறோம். அனைவரும் கர்மசேத்திரத்திற்கு வர வேண்டியிருக்கிறது.
அது சாந்திதாமம் அதாவது மூலவதனமாகும். பிரம்மத்தில் ஆத்மா
ஐக்கியமாகி விடும் என்பது கிடையாது. ஆத்மா சாந்திதாமத்தில்
இருக்கக் கூடியது, பிறகு இங்கு கர்மசேத்திரத்தில் காரியம்
செய்வதற்காக வருகிறது. இது விரிவான விசயமாகும். சுருக்கமாக
சொன்னால் தன்னை ஆத்மா என்று நிச்சயம் செய்யுங்கள் மற்றும்
தந்தையை நினைவு செய்தால் விகர்மம் விநாசம் ஆகிவிடும். இது தான்
பாரதத்தின் பழமையான யோகா என்று கூறப்படுகிறது. உண்மையில் இதை
யோகா என்று கூறக் கூடாது, நினைவு என்று கூற வேண்டும். இதில்
தான் முயற்சி இருக்கிறது. மிகக் குறைவானவர்கள் தான் யோகிகளாக
ஆகின்றனர். யோகா பற்றிய கல்வி (அறிவு) முதலில் தேவை. பிறகு தான்
ஞானம். முதன் முதலில் தந்தையின் நினைவு.
ஆத்ம அபிமானி ஆகுங்கள் என்று தந்தை கூறுகின்றார். இது ஆன்மீக
நினைவு யாத்திரை ஆகும். ஞான யாத்திரை கிடையாது, இதற்கு அதிக
முயற்சி செய்ய வேண்டும். சிலர் பி.கு என்று கூறிக் கொள்கின்றனர்,
ஆனால் தந்தையை நினைவு செய்வது கிடையாது. தந்தை வந்து
பிரம்மாவின் மூலம் குழந்தைகளாகிய உங்களை ஆத்ம அபிமானியாக
ஆக்குகின்றார். இவர் தேக அபிமானத் துடன் இருந்தார். இப்போது
ஆத்ம அபிமானி ஆவதற்கான முயற்சி நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது.
பிரம்மா பகவான் கிடையாது. இங்கு அனைத்து மனிதர்களும்
தூய்மையற்றவர்களாக இருக்கின்றனர். தூய்மையானவர்கள்,
சிரேஷ்டமானவர்கள் ஒருவர் கூட கிடையாது. ஆத்மா விற்குத் தான்
புண்ணிய ஆத்மா, பாவ ஆத்மா என்று கூறப்படுகிறது. என் ஆத்மாவை
துன்புறுத் தாதீர்கள் என்று மனிதர்களும் கூறுகின்றனர். ஆனால்
நான் யார்? என்பதை புரிந்து கொள்வது கிடையாது. ஹே ஜீவ ஆத்மாவே!
நீ என்ன தொழில் செய்கிறாய்? என்று கேட்கப்படுகிறது. நான் ஆத்மா,
இந்த சரீரத்தின் மூலம் இந்த தொழில் செய்து கொண்டிருக்கிறேன்
என்று கூறுவர். ஆக முதலில் இந்த நிச்சயம் செய்து தந்தையை நினைவு
செய்யுங்கள். இந்த ஆன்மீக ஞானத்தை தந்தையைத் தவிர வேறு யாரும்
கொடுக்க முடியாது. தந்தை வந்து ஆத்ம அபிமானியாக ஆக்குகின்றார்.
ஞானத்தில் தீவிரமாக இருக்கின்றனர் எனில் ஆத்ம அபிமானத்தில்
உறுதியாக இருக்கின்றனர் என்பது கிடையாது. யார் ஆத்ம அபிமானியாக
இருக்கிறார்களோ அவர்கள் ஞானத்தை நல்ல முறையில் தாரணை செய்வர்.
மற்றபடி பலர் ஞானத்தை நன்றாக புரிந்திருக் கின்றனர், ஆனால்
சிவபாபாவின் நினைவை மறந்து விடுகின்றனர். அடிக்கடி தன்னை ஆத்மா
என புரிந்து கொண்டு தந்தையை நினைவு செய்ய வேண்டும், இதில் ஜின்
பூதம் போன்று ஆகிவிட வேண்டும். ஜின் பூதத்தின் கதை இருக்கிறது.
என்னை நினைவு செய்யுங்கள், இல்லையெனில் மாயை உன்னை சாப்பிட்டு
விடும் என்று தந்தையும் எனக்கு வேலை கொடுத்திருக்கின்றார். மாயை
தான் ஜின்ன பூதமாகும். எந்த அளவிற்கு தந்தையை நினைவு செய்வோமோ
அந்த அளவிற்கு விகர்மங்கள் விநாசம் ஆகும். மேலும் உங்களுக்கு
அதிக புற கவர்ச்சி ஏற்படும். மாயை உங்களை தலைகீழாக்கி
உங்களுக்கு அதிக புயல்களை கொண்டு வரும். நான் ஆத்மா, தந்தையின்
குழந்தை என்பது மட்டுமே புத்தியில் நினைவில் இருக்க வேண்டும்.
இந்த குஷியில் இருக்க வேண்டும் அவ்வளவே.
தேக அபிமானத்தில் வரும் பொழுது மாயை அடி கொடுத்து விடுகிறது.
ஹாத்மதாயின் விளையாட்டு இருக்கிறது அல்லவா! வாயில்
கூழாங்கல்லைப் போட்டதும் மறைந்து விடுவர். நீங்களும் தந்தையின்
நினைவில் இருந்தால் மாயை உங்களை தொந்தரவு செய்யாது. இதில் தான்
யுத்தம் நடைபெறுகிறது. நினைவு செய்வதற்கு நீங்கள் முயற்சி
செய்கிறீர்கள், ஆனால் நினைவு செய்ய முடியாத அளவிற்கு மாயை
மூக்கை, பிடித்து விடுகிறது. நீங்கள் களைப்படைந்து தூங்கி
விடுவீர்கள். அந்த அளவிற்கு மாயையிடம் யுத்தம் நடைபெறும்.
மற்றபடி உலக சரித்திர பூகோளம் மிகவும் சாதாரணமானது. இப்போது
நமது 84 பிறவிகள் முடிவடைந்து விட்டது, நாம் பாபாவை
சந்திப்பதற்காக செல்கிறோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள் என்று
உங்களுக்கு அடிக்கடி கூறப் படுகிறது. இந்த நினைவு இருப்பதே
கடினமாக இருக்கிறது. மற்றபடி யாருக்காவது புரிய வைப்பது ஒன்றும்
கடினம் கிடையாது. நான் மிகவும் நன்றாகப் புரிய வைக்கிறேன்
என்பது கிடையாது. இல்லை, முதன் முதல் முக்கிய விசயம் நினைவு
ஆகும். கண்காட்சிகளில் பலர் வருகின்றனர். தன்னை ஆத்மா என்ற
நிச்சயம் செய்து தந்தையை நினைவு செய்தால் தமோ
பிரதானத்திலிருந்து சதோ பிரதானமாக ஆகிவிடுவீர்கள் என்ற முதல்
பாடத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். இந்த பாடம் தான் முதலில்
கொடுக்க வேண்டும். பாரதத்தின் பழமையான யோகத்தை யாரும் கற்பிக்க
முடியாது. தந்தை எப்போது வந்து கற்றுக் கொடுக்கிறாரோ அப்போது
தான் கற்றுக் கொள்ள முடியும். மனிதன் மனிதனுக்கு இராஜயோகம்
கற்பிக்க முடியாது, முடியாத காரியமாகும். சத்யுகத்தில்
இருப்பவர்கள் தூய்மையானவர்கள், அங்கு அடைந்த பலனை
அனுபவிக்கின்றனர். அங்கு ஞானம், அஞ்ஞானத்திற்கான விசயம்
கிடையாது. வந்து துக்கம் நீக்கி சுகம் கொடுங்கள் என்ற பக்தி
மார்க்கத்தில் தான் அழைக்கின்றனர். சத்யுகம், திரேதாவில் எந்த
குருமார்களும் இருக்க மாட்டார்கள். அங்கு சத்கதி அடைந்திருப்பர்.
சத்கதிக்கான ஆஸ்தியை நீங்கள் 21 பிறவிகளுக்கு அடைந்திட முடியும்.
பிரம்மா குமாரி என்றாலே 21 தலைமுறையினருக்கு காப்பாற்றக் (முன்னேற்றம்
செய்யக்) கூடியவர்கள் என்று கூறுகின்றனர். பாரதத்தில்
உள்ளவர்களுக்காகத் தான் இவ்வாறு பாடப்பட்டிருக்கிறது.
பாரதத்தில் தான் நீங்கள் 21 தலைமுறையினருக்கான ஆஸ்தி
அடைகிறீர்கள். அங்கு நீங்கள் ஒரே ஒரு தேவி தேவதா தர்மத்தைச்
சார்ந்தவர்கள் மட்டுமே இருப்பீர்கள், வேறு எந்த தர்மமும்
கிடையாது. தந்தை வந்து உங்களை மனிதனிலிருந்து தேவதைகளாக
ஆக்குகின்றார். தூய்மையாகாமல் நாம் எப்படி திரும்பிச் செல்ல
முடியும்? இங்கு அனைவரும் விகாரிகளாக, தூய்மை இன்றி
இருக்கின்றனர். யாரெல்லாம் தர்ம ஸ்தாபகர்களாக இருக்கிறார்களோ
அவர்கள் பாலனையும் செய்கின்றனர், பிறகு அவர்களது தர்மமும்
வளர்ச்சி அடைந்து கொண்டே செல்கிறது. திரும்பி யாரும் சென்று
விட முடியாது. எந்த ஒரு நடிகனும் திரும்பி சென்று விட முடியாது.
அனைவரும் சதோ பிரதானம், சதோ, ரஜோ, தமோவிற்கு வந்தே ஆக வேண்டும்.
பிரம்மாவிற்காக கூட பிரம்மாவின் பகல், பிரம்மாவின் இரவு என்று
கூறுகின்றனர். ஆக உலகில் (படைப்பில்) ஒரே ஒரு பிரம்மா மட்டும்
தனியாக இருப்பாரா என்ன? இப்போது நீங்கள் பிராமண குலத்தினர்களாக
ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் இரவில் இருந்தீர்கள்,
இப்போது பகலை நோக்கி சென்று கொண்டிருக்கிறீர்கள்.
எவ்வளவு காலம் பூஜைக்குரிய நிலையில் இருந்தீர்கள்? எத்தனை
பிறவிகள் பூஜாரிகளாக இருந்தீர்கள்? என்பது உங்களுக்குப் புரிய
வைக்கப்படுகிறது. எதுவரை தந்தை வரவில்லையோ அதுவரை யாரும்
இழிவான நிலையிலிருந்து உயர்வானவர்களாக ஆக முடியாது. யார்
விகாரத் தின் மூலம் பிறப்பு எடுக்கிறார்களோ அவர்கள் தான்
தாழ்வானவர்கள் (விகாரிகள் ) என்று கூறப்படுகின்றனர். அதனால்
தான் இது நரகம் என்று கூறப்படுகிறது. நரகம் மற்றும் சொர்க்கம்
இரண்டிலும் ஒருவேளை துக்கம் இருந்தால், பிறகு அதை சொர்க்கம்
என்றே கூற முடியாது. எதுவரை முழுமையாக புரிந்து கொள்ளவில்லையோ,
அதுவரை தவறான, தலைகீழான கேள்விகள் கேட்பார்கள். பாரதம் மிகவும்
உயர்வாக இருந்தது என்பதை நீங்கள் புரிய வைக்க வேண்டும். எவ்வாறு
ஈஸ்வரனின் மகிமை அளவற்றதோ, அவ்வாறு பாரதத்தின் மகிமையும்
அளவற்றது ஆகும். பாரதம் எப்படி இருந்தது? அவ்வாறு ஆக்கியது யார்?
எந்த தந்தையின் மகிமை செய் கிறார்களோ அந்த தந்தை தான் ஆக்கி
யிருக்கின்றார். தந்தை வந்து தான் குழந்தைகளை உலகிற்கு
எஜமானர்களாக ஆக்குகின்றார். மனிதர்களை துர்கதியிலிருந்து
சத்கதிக்கு அழைத்துச் செல்கிறார். சாந்திதாமத்திற்கு அழைத்துச்
செல்கிறார். அதற்குத் தான் மனிதர்கள் முயற்சி செய்து
கொண்டிருக்கின்றனர். அது தான் நிலையான சுகம், நிலையான சாந்தி,
நிலையான தூய்மை என்று கூறப்படுகிறது. அங்கு நீங்கள் சுகமாகவும்
இருப்பீர்கள், அமைதியாகவும் இருப்பீர்கள். மற்ற ஆத்மாக்கள்
அமைதியாக (சாந்தி தாமத்தில்) இருப்பார்கள். அதிக பட்ச பிறவிகள்
நீங்கள் எடுக்கிறீர்கள். மற்றபடி குறைந்தபட்சம் எடுப்பவர்கள்
சாந்திதாமத்தில் இருப்பார்கள். அவர்கள் கொசுக் கூட்டம் போன்று
வருவார்கள், ஒரு பிறவி, பாதி பிறவி நடிப்பு நடிப்பார்கள்,
இதனால் என்னவாகும்? அவர்களுக்கு எந்த மதிப்பும் இருக்காது.
கொசுக்களுக்கு என்ன மதிப்பு இருக்கும்? இரவில் பிறவி எடுக்கும்,
இரவிலேயே இறந்து விடும். இந்த நேரத்தில் பலர் அமைதியைத் தான்
விரும்புகின்றனர், ஏனெனில் இந்த நேரத்தில் இருக்கும்
குருமார்கள் அமைதிக்கு செல்லக் கூடியவர்கள்.
சொர்க்கவாசி ஆவதற்காக நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள்.
சொர்க்கவாசிகளை சாந்திவாசி என்ற கூற முடியாது. சாந்திவாசிகள்
என்று நிராகார உலகில் வசிப்பவர்கள் கூறப்படுகின்றனர். முக்தி
என்ற வார்த்தை குருக்களிடமிருந்து கற்றுக் கொண்டனர்.
வைகுண்டபுரி செல்வதற்காக தாய்மார்கள் விரதம் கடைபிடிக்கின்றனர்.
யாராவது இறந்து விட்டாலும் சொர்க்கவாசி ஆகி விட்டார் என்று
கூறுகின்றனர். அப்படி எதுவும் ஆவது கிடையாது, ஆனால் பாரதவாசிகள்
சொர்க்கத்தை ஏற்றுக் கொள்கின்றனர். பாரதம் சொர்க்கமாக இருந்தது
என்பதை புரிந்திருக் கின்றனர். சிவபாபா பாரதத்தில் வந்து தான்
சொர்க்கத்தை படைக்கின்றார் எனில் கண்டிப்பாக இங்கு தான்
படைப்பார். சொர்க்கத்திற்கு வர மாட்டார். சொர்க்கம் மற்றும்
நரகத்தின் சங்கமத்தில் நான் வருகிறேன் என்று கூறுகின்றார்.
கல்ப கல்பத்தின் சங்கமத்தில் வருகிறேன். இதையே அவர்கள்
யுகத்திற்கு யுகம் என்று எழுதி வைத்து விட்டனர். கல்பம் என்ற
வார்த்தையை மறந்து விட்டனர். இந்த விளையாட்டும்
உருவாக்கப்பட்டிருக்கிறது. பிறகு இதுவே மீண்டும் நடைபெறும்.
இந்த கடைசிப் பிறவியில் நீங்கள் தந்தையை மற்றும் சிருஷ்டிச்
சக்கரத்தை அறிந்திருக்கிறீர்கள். வரிசைக்கிரமமாக எவ்வாறு
ஸ்தாபனை ஆகிறது? என்பதை நீங்கள் இப்போது அறிவீர்கள். இந்த முழு
விளையாட்டும் பாரதவாசிகளாகிய உங்களுக்காகத் தான் உருவாக்கப்
பட்டிருக்கிறது. இப்போது நீங்கள் தந்தையின் மூலம் இராஜயோகம்
கற்கிறீர்கள். தந்தையின் நினைவின் மூலம் தான் இராஜ்யத்தை
அடைகிறீர்கள். சித்திரங்களும் இருக்கிறது அல்லவா! இந்த
சித்திரங்களை உருவாக்கியது யார்? இதற்கு எந்த குருமார்களும்
கிடையாது. ஒருவேளை குரு இருந்தாலும் குருவிற்கு ஒரே ஒரு சிஷ்யர்
மட்டும் இருந்து விட முடியாது. பலர் இருப்பார்கள் அல்லவா! இந்த
ஞானம் ஒரு சிவபாபாவைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. இந்த
சித்திரங்களை உங்களது தாதா உருவாக்கினாரா? என்று பலர்
கேட்கின்றனர். தந்தை தெய்வீக திருஷ்டியின் மூலம் சாட்சாத்காரம்
செய்வித்தார். வைகுண்டத்தின் சாட்சாத்காரமும் செய்வித்தார்.
அங்கு பள்ளிகள் எப்படி நடைபெறும்? என்ன மொழி இருக்கும்?
அனைத்தும் சாட்சாத்காரம் செய்தார். குழந்தைகள் பட்டியில்
இருந்த பொழுது பாபா குழந்தைகளை மகிழ்வித்தார். கராச்சியில்
நீங்கள் மட்டுமே தனியாக இருந்தீர்கள், நமது இராஜ்யம் போன்று.
தனது அன்பிற்குரியவர், தனது விசயங்கள் ....... வேறு யாரும்
புரிந்து கொள்ள முடியாது. இது குதாவின் (இறைவனின்) இருப்பிடம்
என்று புரிந்திருந்தீர்கள். நீங்கள் துறவிகள் என்பதை தந்தை
புரிய வைத்திருக்கின்றார். பாபாவைத் தவிர வேறு யாருமில்லை. ஒரு
தந்தையைத் தவிர வேறு யாரையும் நினைவு செய்யக் கூடாது. அந்த
துறவிகள் கிறிஸ்துவை மட்டுமே அறிந்திருப்பர், அவரைத் தவிர வேறு
யாரையும் அறிந்திருக்க மாட்டார்கள்.
ஒரு சிவபாபாவிடமிருந்து தான் ஆஸ்தி கிடைக்கும் என்பதை நீங்கள்
அறிந்திருக்கிறீர்கள். சிவபாபா புள்ளியாக (பிந்துவாக)
இருக்கின்றார். அவரும் யார் மூலமாகவாவது தான் புரிய வைப்பார்
அல்லவா! பிரஜாபிதா பிரம்மா அவசியம் இங்கு தான் இருக்க வேண்டும்.
இவரது பல பிறவிகளின் கடைசிப் பிறவியில் தூய்மையற்ற சரீரத்தில்
பிரவேசம் செய்கிறேன் என்று தந்தை கூறுகின்றார். நல்லது.
இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள்
மற்றும் காலை வணக்கம். ஆன்மீக குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) ஞானத்தை நல்ல முறையில் தாரணை செய்து ஆத்ம அபிமானியாக ஆக
வேண்டும். இதுவே முயற்சியாகும். இதுவே உயர்ந்த இலக்காகும்.
இந்த முயற்சியின் மூலம் ஆத்மாவை சதோ பிரதானம் ஆக்க வேண்டும்.
2) ஜின் பூதமாகி நினைவு யாத்திரை செய்ய வேண்டும். மாயை எவ்வளவு
வேண்டுமென்றாலும் தடைகளை கொண்டு வரட்டும், ஆனால் வாயில் கூழாங்
கற்களை போட்டுக் கொள்ள வேண்டும். மாயையினால் களைப்படைந்து விடக்
கூடாது. ஒருவரின் நினைவின் மூலம் புயல்களை நீக்கி விட வேண்டும்.
வரதானம்:
சாதனங்களைப் பயன்படுத்திக் கொண்டே சாதனையைத்
தனது ஆதாரமாக ஆக்கக்கூடிய சித்தி சொரூபம் ஆகுக.
பழைய உலகின் எந்த ஒரு கவர்ச்சிகரமான காட்சியும், அல்பகால
சுகத்திற்கான சாதனங்களைப் பயன்படுத்துகிறீர்கள் அல்லது
பார்க்கிறீர்கள் என்றால், அந்த சாதனங்களின் வசமாக ஆகிவிடுகிறீர்
கள். சாதனங்களின் ஆதாரத்தில் சாதனை என்பது - மணற்பாங்கான
அஸ்திவாரத்தில் கட்டப்பட்ட கட்டடம் போன்றதாகும். எனவே, எந்த ஓர்
அழியக்கூடிய சாதனத்தின் ஆதாரத்திலும் அவிநாசி சாதனை இருக்கக்
கூடாது. சாதனம் நிமித்த மாத்திரமே மற்றும் சாதனையானது
நிர்மாணத்தின் ஆதாரமாகும். எனவே சாதனைக்கு மகத்துவம்
கொடுப்பீர்களானால் சாதனை சித்தி பெறச் செய்யும்.
சுலோகன்:
எந்த ஒரு பலவீனத்தின் அம்சமாவது இருக்குமானால், அதன் வம்சம்
உற்பத்தியாகி விடும். மற்றும் வேறு (மாயா) வசமாக்கி விடும்.
அவ்யக்த சமிக்கை: சதா ஆடாத-அசையாத (உறுதியான),
ஒரே சீரான மனோநிலையை அனுபவம் செய்யுங்கள்.
புத்தியை ஓரிடத்தில் நிலைக்க வைப்பதற்கான யுக்தி என்ன
கிடைத்திருக்கிறதோ, அதை ஸ்மிருதியில் வையுங்கள். அசைய
விடாதீர்கள். தேகம் மற்றும் தேகத்தின் உலகத்தில் இருந்து
விலகியவராகி, மனம் புத்தியின் விமானத்தின் மூலம் ஒரு நொடியில்
ஆகாரி மற்றும் நிராகாரி ஸ்திதிகளை அனுபவம் செய்யுங்கள்.
புத்தியை அசைய விடாதீர்கள். இல்லையென்றால் யுத்தத் தில் சமயம்
அதிகமாக வீணாகி விடும். எப்படி தபஸ்வி எப்போதும் ஆசனத்தின் மீது
அமர்ந்திருக் கிறாரோ, அது போல் தனது ஏக்ரஸ் ஸ்திதி என்ற
ஆசனத்தின் மீது அமர்ந்திருப்பீர்களானால் வருங்கால சிம்மாசனம்
கிடைத்து விடும்.