20-06-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! உங்களிடம் அழிவற்ற
ஞான ரத்தினங்களின் பொக்கிஷம் அளவற்று இருக்கிறது, நீங்கள் அதனை
தானம் செய்யுங்கள், உங்களது வாச-ல் வந்து யாரும் (வெறும்
கையுடன்) திரும்பிச் சென்று விடக் கூடாது.
கேள்வி:
அனைத்து சம்மந்தங்களின்
சாக்ரீனாக இருக்கும் (இனிமையான) தந்தை தனது குழந்தை களுக்கு
எந்த ஸ்ரீமத் கொடுக்கின்றார்?
பதில்:
இனிய குழந்தைகளே! தனது
புத்தியோகத்தை அனைத்து திசைகளிலிருந்தும் நீக்கி என் ஒருவனை
நினைவு செய்து கொண்டே இருங்கள். உலகின் எந்த பொருளும், உற்றார்,
உறவினர் களின் நினைவும் வந்து விடக் கூடாது. ஏனெனில் இந்த
நேரத்தில் அனைவரும் துக்கம் கொடுக்கக் கூடியவர்கள். உலகிற்கு
எஜமானர் களாக ஆக வேண்டுமெனில் 63 பிறவிகளின் கணக்கு வழக்குகளை
முடிப்பதற்கான முயற்சி அவசியம் செய்ய வேண்டும். அனைத்தையும்
மறந்து அசரீரி ஆகின்ற பொழுது தான் கணக்கு வழக்கு முடியும். நான்
அனைத்து சம்மந்தங்களின் சாக்ரீனாக இருக்கிறேன்.
ஓம் சாந்தி.
யாருடைய நினைவில் அமர்ந்திருக்கிறீர்கள்? என்று பாப்தாதா
குழந்தைகளிடம் கேட்கின்றார். (சிவபாபாவின் நினைவில்)
சிவபாபாவின் நினைவில் அமர்ந்திருக்கிறோம் என்று உடனேயே உரத்த
குரலில் கூற வேண்டும். குழந்தைகளாகிய அதாவது ஆத்மாக்களாகிய
உங்களது தொடர்பு சிவபாபாவிடம் இருக்கிறது. நீங்கள் இவர் (பிரம்மா)
மூலமாக சிவபாபாவினுடையவர் களாக ஆகிறீர்கள். ஏனெனில் சிவபாபாவை
இவர் மூலமாகத் தான் சந்திக்கிறோம். இவர் இடைத் தரகர் என்றும்
கூறப்படுகின்றார். தரகருக்கும் உங்களுக்கும் எந்த தொடர்பும்
கிடையாது. இவர் இடையில் வரக்கூடிய தரகர், அவ்வளவு தான்.
கொடுக்கல்-வாங்கல் போன்ற அனைத்து கணக்குகளும் தந்தையிடம்
இருக்க வேண்டுமே தவிர இவரிடம் அல்ல. இவரது கொடுக்கல்- வாங்கலும்
கூட தந்தையிடம் இருக்கிறது. இவரும் அந்த தந்தையிடம் பாபா, எனது
அனைத்தும் தங்களுடையது என்று கூறுகின்றார். ஒன்று நான் ஆத்மா
என்ற நிச்சயம், மற்றொன்று ஆத்மாக் களாகிய நாம் இப்போது பரம்பிதா
பரமாத்மாவிடமிருந்து ஆஸ்தியடைந்து கொண்டிருக்கிறோம் என்ற
நிச்சயம் உங்களிடம் இருக்கிறது. எண்ணம், சொல், செயல், உடல்,
மனம், பொருள் மூலம் நாம் சிவபாபாவிற்கு உதவியாளர்களாக ஆகிறோம்.
இவர் அனைத்தையும் சிவபாபாவிற்கு அர்ப்பணம் செய்திருக்கின்றார்.
பிறகு இப்படி செய்யுங்கள், இப்படி பயன்படுத்துங்கள் என்று
சிவபாபா கட்டளையிடுகின்றார். இது தான் ஸ்ரீமத் என்று
கூறப்படுகிறது. நான் இந்த பழைய சரீரத்தில் பிரவேசிக்கிறேன்
என்று சுயம் தந்தை கூறுகின்றார். இவரும் தூய்மை இல்லாமலிருந்து
தூய்மையானவராக ஆகிக் கொண்டிருக்கின்றார். இதை கூறியது யார்?
சிவபாபா. இவரும் தூய்மை ஆகிக் கொண்டிருக்கின்றார். இவருக்கும்
என்னிடத்தில் கணக்கு வழக்கு இருக்கிறது. இவருக்கு வேறு
யாரிடத்திலும் கணக்கு கிடையாது. சிவபாபா, கேர் ஆஃப் பிரம்மா
என்று நீங்கள் கடிதம் எழுதுகிறீர்கள். ஆனால் மாயை நிரந்தரமாக
நினைவு செய்ய விடுவது கிடையாது. புத்தி யோகத்தை அடிக்கடி
துண்டித்து விடுகிறது. ஒருவேளை இந்த முயற்சியை உறுதியாகச்
செய்தால் மற்ற அனைத்தையும் மறந்து விடுவீர்கள். சரீரமும் மறந்து
விடுவீர்கள். இந்த சரீரம் இருக்கும், ஆனால் ஆத்மாவிற்கு இந்த
அனைத்தின் மீதும் வெறுப்பு ஏற்பட்டு விடும். இந்த நிலையை
உருவாக்குவதற்கு பயிற்சி செய்ய வேண்டும். கடைசியில் நமக்கு நமது
சரீரத்தின் நினைவும் வரக் கூடாது. தந்தை கூறுகின்றார் - தன்னை
அசரீரி என்று புரிந்து கொண்டு தந்தையாகிய என்னை நினைவு
செய்யுங்கள். நான் சதா அசரீரியாக இருக்கிறேன், நீங்களும்
அசரீரியாக இருந்தீர்கள். பிறகு நீங்கள் நடிப்பு நடித்தீர்கள்.
இப்போது நீங்கள் மீண்டும் நடிப்பு நடிக்க வேண்டும், இது தான்
முயற்சியாகும். உலகிற்கு எஜமானர்களாக ஆவது சிறிய விசயமா என்ன?
மனிதர்கள் தான் உலகிற்கு எஜமானர்களாக ஆக முடியும். இந்த
தேவதைகளும் மனிதர்கள் தான், ஆனால் இவர்கள் தெய்வீக குணமுடைய
தேவதைகள் என்று கூறப்படுகின்றனர். லெட்சுமி நாராயணன் உலகிற்கு
எஜமானர்களாக இருந்தனர். இவர்களுக்கும் தங்களது குழந்தைகள்
இருப்பர். அவர்கள் தான் இவர்களை தாய், தந்தை என்ற ஏற்றுக்
கொள்வார்கள். ஆனால் இன்றைய நாட்களில் மனிதர்கள் குருட்டு
நம்பிக்கையுடன் இந்த லெட்சுமி, நாராயணனையும் தாயும் நீயே,
தந்தையும் நீயே ....... என்று கூறுகின்றனர். உண்மையில் இந்த
மகிமை சிவபாபாவினுடையது. தேவதை களுக்கு நீங்கள் அனைத்து
குணங்களும் நிறைந்தவர்கள் ...... என்று மகிமை பாடுகின்றனர்.
ஆனால் அவர்களுக்கு ஏன் பூஜை செய்கின்றனர்? என்பது யாருக்கும்
தெரியாது. நீங்கள் தான் தாய், தந்தை ...... போன்ற மகிமை இப்போது
நீங்கள் பாடமாட்டீர்கள். சிவபாபா நிராகாரமான பரம்பிதா பரமாத்மா
என்பதை நீங்கள் அறிவீர்கள். அவரிடமிருந்து தான் சுகமான ஆஸ்தி
கிடைக்கிறது. மற்றபடி உறவினர்கள் அனைவரிடமிருந்தும் துக்கம்
தான் கிடைக்கிறது. இவர் ஒரு சாக்ரீன் போன்று இருக்கின்றார்,
இவர் மூலம் சர்வ சம்மந்தங்களின் ரசனையும் கிடைக்கிறது, ஆகையால்
மாமா, சித்தப்பா, பெரியப்பா போன்றவர்களிடமிருந்து புத்தி
யோகத்தை நீக்கி என் ஒருவனை நினைவு செய்யுங்கள் என்று தந்தை
கூறுகின்றார். துக்கத்தை நீக்கி சுகம் கொடுப்பவர்...... என்று
நீங்கள் பாடவும் செய்கிறீர்கள். அனைவருக்கும் சத்கதி கொடுக்கும்
வள்ளல் ஒரே ஒருவர் ஆவார். எல்லாமே நமக்கு அவர் தான். லௌகீகத்
தந்தையிடமிருந்தும் துக்கம் கிடைக்கிறது. மற்றபடி ஆசிரியராக
இருப்பவர் யாருக்கும் துக்கம் கொடுப்பது கிடையாது. ஆசிரியரிடம்
சென்று படிப்பதன் மூலம் நீங்கள் சரீர நிர்வாகம் செய்து
கொள்கிறீர்கள். கலைகளை கற்றுக் கொடுப்பவர்களும் இருக்கின்றனர்.
அவர்கள் அனைவரும் அல்ப காலத்திற்கு கற்றுக் கொடுக்கின்றனர்.
பக்தியிலும் மகிமை ஒரே ஒரு இராமர் அதாவது பரம்பிதா
பரமாத்மாவிற்கு மட்டுமே செய்கின்றனர், அவரை மட்டுமே நினைவு
செய்கின்றனர். உண்மையில் பக்தியும் ஒரே ஒருவருக்கத் தான் செய்ய
வேண்டும். அவர் ஒருவர் தான் உங்களை பூஜைக்குரியவராக
ஆக்குகின்றார். நீங்கள் முதலில் ஒரே ஒரு சிவபாபாவிற்கு பூஜை
செய்தீர்கள். அது சதோபிரதான பக்தி என்று கூறப்படுகிறது. பிறகு
ஆத்மாவும் சதோபிரதானத்திலிருந்து சதோ, ரஜோ, தமோவாக ஆகிறது. நாம்
பூஜாரிகளாக ஆகி விட்டோம் என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்கள்.
நீங்கள் முதலில் ஒரே ஒரு சிவனை மட்டுமே பூஜித்தீர்கள், பிறகு
கலைகள் குறைந்து கொண்டே சென்றது. பக்தியும் சதோ
பிரதானத்திலிருந்து, சதோ, ரஜோ, தமோவாக ஆகிவிடுகிறது. முழு
நாடகமும் உங்களை வைத்து உருவாக்கப் பட்டிருக்கிறது. நீங்களே
பூஜைக்குரியவர்கள், நீங்களே பூஜாரிகளாக ஆகி, முழு 84 பிறவிகள்
எடுக்கிறீர்கள், அது தான் கதையாகும். அதைத் தான் தந்தை அமர்ந்து
கூறுகின்றார் - நீங்கள் 84 பிறவிகள் எப்படி எடுத்தீர்கள்?
உங்களுடையது தான் கணக்கிடப்படுகிறது. யார் முதன் முதலில்
பூஜைக்குரிய தேவி தேவதைகளாக ஆகிறார்களோ அவர்களே பூஜாரிகளாக
ஆகின்றனர். தந்தை கூறுகின்றார் - நான் கல்ப கல்பத்திற்கு வந்து
உங்களுக்கு கற்பிக்கிறேன், மேலும் தேவி தேவதா தர்மத்தை ஸ்தாபனை
செய்கிறேன், இராஜயோகம் கற்பிக்கிறேன். கீதையில் தவறுதலாக
கிருஷ்ண பகவானின் மகாவாக்கியம் என்று எழுதி விட்டனர். பகவான்
ஒரே ஒருவர் தான் இருக்க முடியும். கல், முள், அணு, அணுவிலும்
பகவான் இருக்கின்றார் என்று அவர்கள் கூறுகின்றனர். ஆனால்
இவ்வாறு இருக்க முடியாது. பகவானின் மகிமை அளவற்றது. ஹே பாபா,
உங்களது வழிமுறைகள் தனிப்பட்டது, அதாவது என்ன ஸ்ரீமத் அடைகிறோமோ
அது தனிப்பட்டது என்று கூறுகின்றனர். கதி, சத்கதியின் வள்ளல்
பரம்பிதா பரமாத்மா என்று தந்தையை கூறும் போது புத்தி மேலே
சென்று விடுகிறது. துக்கமான நேரத்தில் அவரது நினைவு தான்
வருகிறது. ஒருவேளை இராமர், சீதை புத்தியில் இருந்தால் பிறகு
முழு இராமாயணமும் புத்தியில் வந்து விட வேண்டும். அந்த ஒரே ஒரு
தந்தையைத் தான் நீங்கள் அழைக்கிறீர்கள். ஒரு தந்தையைத் தவிர
வேறு எந்த சாகார மனிதன் அல்லது ஆகார தேவதைகளிடம் புத்தியை
செலுத்தக் கூடாது. பதீத பாவன் ஒரே ஒரு தந்தை ஆவார். எந்த
சத்சங்கத்திற்கு சென்றாலும் பதீத பாவன சீதாராம் என்று தான்
பாடுகின்றனர், எந்த அர்த்தமும் கிடையாது. இவை அனைத்தும் பக்தி
மார்க்கத்தின் மகிமை களாகும். அனைவரும் இராவணனின் சிறையில்
இருக்கின்றனர். பக்தி மார்க்கத்தில் அதிகம் அலைகின்றனர். இங்கு
அலைவதற்கான எந்த விசயமும் கிடையாது. குழந்தைகள் கருத்துகளை
புத்தியில் நல்ல முறையில் தாரணை செய்ய வேண்டும், படிப்பு
தினமும் படிக்க வேண்டும் என்று தந்தை புரிய வைக்கின்றார்.
ஒருவேளை ஏதாவது காரணத்தினால் காலையில் வர முடியவில்லை யெனில்
மதியம் வந்து விட வேண்டும். யாரையும் தொந்தரவு செய்யக் கூடாது.
முழு நாளும் இருக்கிறது. எந்த நேரத்திலாவது சென்று படிக்க
வேண்டும். இந்த சகோதரிகள் காலையிலிருந்து மாலை வரை சேவையில்
இருக்கின்றனர். முழு நாளும் சேவை நிலையம் திறந்து இருக்கிறது.
யார் வந்தாலும் அவர்களுக்கு வழி கூற வேண்டும். உங்களுக்கு
இரண்டு தந்தைகள் உள்ளனர் என்பதை சற்று சிந்தியுங்கள் என்று
முதலில் கூற வேண்டும். துக்கத்தின் போது பரலௌகீகத் தந்தையை
நினைவு செய்கின்றனர் அல்லவா! என் ஒருவனை நினைவு செய்யுங்கள்
என்று இப்போது சிவபாபா கூறுகின்றார். மரணம் எதிரில் இருக்கிறது.
இது அதே மகாபாரத யுத்தமாகும். கோடீஸ்வரர்கள், செல்வந்தவர்கள்
பெரிய பெரிய மாளிகைகளை உருவாக்கலாம். ஆனால் அதுவெல்லாம்
இருக்கப் போவது கிடையாது, இவையனைத்தும் அழிந்து விடும்.
கலியுகத்தின் ஆயுள் இலட்சம் ஆண்டுகள் என்று அவர்கள்
நினைக்கின்றனர். இது தான் காரிருள் என்று கூறப் படுகிறது.
யாரிடத்திலாவது பணம் இருக்கிறது எனில் கட்டடம் கட்டவா? என்று
கேட்கின்றனர். பணம் இருக்கிறது எனில் நன்றாக கட்டுங் கள் என்று
பாபா கூறுவார். பணமும் மண்ணோடு சென்று விடும். இது
தற்காலிகமானது. இல்லையெனில் மொத்தப் பணமும் சென்று விடும்.
எதுவும் இருக்காது, ஆகையால் நன்றாக கட்டுங்கள். பிறகு அதில்
கீதா பாட சாலைக்கான ஏற்பாடு செய்யுங்கள். யார் உங்கள் வீட்டு
வாசலுக்கு வந்தாலும் அவர்களை உலகிற்கு எஜமானர்களாக ஆக்கிவிடும்
அளவிற்கு (ஞான) பிச்சை போடுங்கள். உங்களிடம் அளவற்ற ஞான செல்லம்
இருக்கிறது, இந்த அளவிற்கு வேறு யாரிடத்திலும் கிடையாது.
உங்களிலும் யாரிடத்தில் அதிக ஞான இரத்தினங்கள் புத்தியில்
நிறைந்திருக்கிறதோ அவர்கள் தான் அனைவரையும் விட செல்வந்தர்கள்.
யார் வந்தாலும் நீங்கள் அவர்களது பையை நிரப்பி விடுங்கள்.
உங்களிடத்தில் அந்த அளவிற்கு பொக்கிஷங்கள் இருக்கிறது.
வாருங்கள், நாம் உங்களை சதா சுகமான, சொர்க்கத் தின் ஆஸ்தி
அடைவதற்கான வழி கூறுகிறோம் என்று போர்ட் (பலகை) வைத்து
விடுங்கள். ஆனால் குழந்தைகளிடம் அந்த போதை இருப்பது கிடையாது.
இங்கு போதை அதிகரிக்கிறது, வெளியில் சென்றதும் மறந்து
விடுகிறீர்கள். ஆர்வம் இருக்க வேண்டும். யார் வந்தாலும்
அவர்களுக்கு வழி கூற வேண்டும், அதன் மூலம் படகு கறையேறி விட
வேண்டும். உங்களிடத்தில் மிக உயர்ந்த செல்வம் இருக்கிறது. யார்
யாசித்து வந்தாலும், செல்வந்தர்கள் வந்தாலும் நீங்கள்
அவர்களுக்கும் அதிக ரத்தினங்களைக் கொடுக்க முடியும். பாபா இங்கு
போதை அதிகரிக்கச் செய்கின்றார், பிறகு சோடா தண்ணீராக
ஆகிவிடுகிறீர்கள். பாபா அழிவற்ற ஞான ரத்தினங் களினால் உங்களது
பையை நிறைத்து விடுகின்றார். ஆனால் வரிசைக்கிரமம் இருக்கிறது.
யாருக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதோ அவர்கள் முழுமையாக தாரணை செய்து
விடுகின்றனர். முயற்சி செய்து நீங்கள் நிரந்தரமாக நினைவில்
இருங்கள் என்று பாபா கூறுகின்றார். சென்டருக்கு சென்று ஒரே
இடத்தில் அமர்ந்து விட வேண்டும் என்பது கிடையாது. நடந்தாலும்,
காரியங்கள் செய்தாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தந்தையை
நினைவு செய்து கொண்டே இருக்க வேண்டும். கைகள் வேலை செய்து
கொண்டி ருந்தாலும், உள்ளம் அதாவது புத்தி யோகம் தந்தையிடம்
இருக்க வேண்டும். தந்தையின் நினைவின் மூலம் உங்களுக்கு அதிக
நன்மை ஏற்படும். 21 பிறவிகளுக்கு நீங்கள் செல்வந்தர்களாக
ஆகிவிடுகிறீர்கள். எல்லையற்ற தந்தை எல்லையற்ற ஆஸ்தி
கொடுக்கின்றார். பாரதம் சொர்க்கமாக இருந்தது. இப்போது நரகமாக
இருக்கிறது.
தந்தை கூறுகின்றார் - இப்போது என்னை நினைவு செய்தால் உங்களது
ஆத்மா சதோபிரதானமாக ஆகி விடும். தந்தையை நினைவு செய்தால் போதை
அதிகரிக்கும். நம்மைப் போன்ற செல்வந்தர் கள் உலகில் யாரும்
கிடையாது. தந்தையின் நினைவு இல்லையெனில் செல்வம் எங்கிருந்து
வரும்? சொர்க்கத்தில் குழந்தைகளாகிய உங்களுக்கு அளவற்ற சுகம்
கிடைக்கும். சாஸ்திரங்களில் எவ்வளவு கட்டுக் கதைகள் எழுதி
வைத்து விட்டனர்! இராம இராஜ்யம், இராம இராஜ்யம்....... என்று
கூறுகின்றனர். நல்ல தர்மம் இருந்தது. பிறகு இராமரின் சீதையை
அபகரிக்கப்பட்டாள் என்றும் குரங்குகளின் சேனை
பயன்படுத்தப்பட்டது ...... என்றும் கூறப்படுகிறது. முன்பு
நாமும் படித்து வந்தோம், எதையும் புரிந்து கொள்ளவில்லை. இப்போது
எவ்வளவு புரிந்து கொள்ள முடிகிறது! எவ்வளவு ஆச்சரியமான
விசயங்களை எழுதியிருக்கின்றனர்! நான் இயற்கை தத்துவங்களை (சரீரம்)
ஆதாரமாக எடுக்க வேண்டியிருக்கிறது என்று தந்தை கூறுகின்றார்.
திரிமூர்த்தியிலும் பிரம்மா, விஷ்ணு, சங்கரை காண்பிக் கின்றனர்.
ஆனால் விஷ்ணு யார்? எங்கு இருக்கக் கூடியவர்? என்பதையும்
புரிந்து கொள்வது கிடையாது. விஷ்ணுவின் கோயிலை நர நாராயணன்
கோயில் என்றும் கூறுகின்றனர். ஆனால் எந்த அர்த்தத்தையும்
புரிந்து கொள்வது கிடையாது. விஷ்ணுவின் இந்த இரண்டு ரூபம்
லெட்சுமி, நாராயணன் ஆகும். அவர்கள் தான் சத்யுகத்தில் இராஜ்யம்
செய்தனர். இப்போது நீங்கள் மனிதனிலிருந்து தேவதைகளாக ஆகிக்
கொண்டிருக் கிறீர்கள். யார் வந்தாலும் இவர்கள் பிரம்மா குமார்,
குமாரிகள் என்று கூறுங்கள். ஆக பிரஜாபிதா பிரம்மா அனைவருக்கும்
தந்தை ஆகிவிடுகிறார். அதிகமான பிரஜைகள் இருக்கின்றனர். பெயர்
கேள்விப் பட்டிருக்கிறீர்கள் அல்லவா! பகவான் பிரம்மாவின் மூலம்
பிராமணர்களை படைத்திருக்கின்றார். தந்தை குழந்தை களுக்கு
அவசியம் ஆஸ்தி கொடுத்திருக்க வேண்டும் அல்லவா! குழந்தை களாகிய
உங்களை உலகிற்கு எஜமானர்களாக ஆக்குகின்றார். நீங்கள்
சிவபாபாவிடமிருந்து ஆஸ்தி அடைகிறீர்கள். ஒன்று லௌகீகத் தந்தை,
மற்றொன்று பரலௌகீகக் தந்தை. இப்போது உங்களுக்கு இந்த அலௌகீகத்
தந்தை கிடைத்திருக்கின்றார், அவர் வைர வியாபாரியாக இருந்தார்.
இவர் எதையும் அறியாமல் இருந்தார். இவரது பல பிறவிகளின் கடைசிப்
பிறவியிலும் கடைசி நேரத்தில் இவரிடம் பிரவேசம் செய்கிறேன் என்று
இவருக்காகத் தான் கூறுகின்றார். வானபிரஸ்திக்கான வழக்கமும்
பாரதத்தில் இருக்கிறது. 60 ஆண்டுகளுக்குப் பிறகு குருவிடம்
சென்று விடுவர். தந்தை இவரிடம் பிரவேசித்து இப்போது நீங்கள்
வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று கூறுகின்றார். அனைவரும்
முக்தி விரும்பு கின்றனர், ஆனால் யாரும் முக்தியை அறிய வில்லை.
யாரும் பிரம்மத்தில் ஐக்கியமாகி விட முடியாது. இது சிருஷ்டிச்
சக்கரம், சுற்றிக் கொண்டே இருக்கும், அனைவரும் நடிப்பு நடித்தே
ஆக வேண்டும். இது ஞான நடனம் ஆகிறது. அவர்கள் உடுக்கை
காண்பிக்கின்றனர். சூட்சும வதனவாசி சங்கர் உடுக்கை எப்படி
வாசிப்பார்?
நீங்கள் குரங்கு போன்று இருந்தீர்கள், ஆக குரங்குகளாகிய உங்களை
சேனையை பயன்படுத்திக் கொள்கிறேன் என்று தந்தை புரிய
வைக்கின்றார். உங்கள் முன் பாபா ஞான உடுக்கை வாசித்துக்
கொண்டிருக்கின்றார். உங்களுக்கு ஞானம் கொடுக்கின்றார். இப்போது
உங்களது முகம் மற்றும் தோற்றம் இரண்டும் சீராகிக் கொண்டி
ருக்கிறது. காமச் சிதையில் அமர்ந்து நீங்கள் கருப்பாகி
விட்டீர்கள். பாபா மீண்டும் உங்களை ஞானச் சிதையில் அமர வைத்து
முகம் மற்றும் தோற்றம் இரண்டையும் மாற்றி கருப்பிலிருந்து
வெள்ளையாக ஆக்கிவிடுகின்றார். இங்கு பாபா எவ்வளவு போதையை
ஏற்படுத்துகின்றார், பிறகு ஏன் போதை குறைய வேண்டும்! நல்லது.
இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள்
மற்றும் காலை வணக்கம். ஆன்மீக குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) தந்தை கொடுத்த அளவற்ற ஞான செல்வத்தை தாரணை செய்து தன்னையும்
செல்வந்தனாக்கிக் கொள்ள வேண்டும், மேலும் அனைவருக்கும் தானமும்
செய்ய வேண்டும். யார் வந்தாலும் அவர்களது பையை நிரப்பி விட
வேண்டும்.
2) தந்தையின் நினைவில் தான் நன்மை இருக்கிறது, ஆகையால் எவ்வளவு
முடியுமோ நடந்தாலும், காரியங்கள் செய்தாலும் தந்தையின் நினைவில்
இருக்க வேண்டும். அனைத்து சம்மந்தங்களின் (ரசனையை) அனுபவத்தை
ஒரு தந்தையிடத்தில் பெற வேண்டும்.
வரதானம்:
எப்போதும் பிஸியாக இருக்கும் விதியின் மூலம், வீண் எண்ணங்கள்
என்ற புகாரை முடிவுக்குக் கொண்டு வரும், சம்பூர்ண கர்மாதீத்
நிலை அடைபவர் ஆகுக.
சம்பூர்ண கர்மாதீத் நிலையை அடைவதற்கு வீண் சங்கல்பங்களின் புயலே
தடை ஏற்படுத்துகிறது. இந்த வீண் சங்கல்பங்களின் புகாரை முடிக்க
உங்கள் மனதை எப்போதும் பிஸியாக வைத்திருங் கள்; நேரத்தில்
முன்பதிவு செய்யும் முறையைக் கற்றுக் கொள்ளுங்கள். நாள்
முழுவதும் மனதை எங்கெல்லாம் பிஸியாக வைத்திருக்க வேண்டும்
என்பதற்கான திட்டத்தை உருவாக்குங்கள். தினமும் உங்கள் மனதை
நான்கு விசயங்களில் ஈடுபடுத்துங்கள்: 1. சந்திப்பு (ரூஹ்-ரிஹான்),
2. வர்ணித்தல் (சேவை), 3. மூழ்கியிருத்தல் (மகன்) மற்றும் 4.
ஈடுபாடு (லகன்). இதன் மூலம் நேரம் வெற்றிகரமாக மாறும் மற்றும்
வீண் புகார்கள் முடிவுக்கு வரும்.
சுலோகன்:
வெற்றியை இறைவனின் பிறப்புரிமையாகக் கருதுபவர்களே சதா
மகிழ்ச்சியான மனநிலையில் (பிரசன்னமாக) இருக்க முடியும்.
அவ்யக்த சமிக்ஞை: சதா மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால்
தங்களது சுபாவத்தை சரளமானதாக ஆக்கிக் கொள்ளுங்கள்,
சகிப்புத்தன்மை உடையவர் ஆகுங்கள்.
எளிமையைக் கொண்டு வர - உங்கள் மனோநிலையை (ஸ்திதியை)
மற்றவர்களின் புகழ்ச்சிக்கு (ஸ்துதிக்கு) ஆதாரமாக
ஆக்கிக்கொள்ளக் கூடாது என்ற இந்த ஒரு விசயத்தை மட்டும்
கவனத்தில் கொள்ள வேண்டும். சில குழந்தைகள் செயலின் பலன் மீது
அதிக ஆசை வைக்கிறார்கள், அதனால் புகழ் கிடைக்காத போது மனோநிலை
குழப்பத்தில் வந்துவிடுகிறது. நிந்தனை ஏற்படும்போது அனாதையாகி
விடுகிறார்கள்; தங்களின் நிலையை விட்டு தந்தையையும் மறந்து
விடுகிறார்கள்; எனவே புகழ்ச்சியின் அடிப்படையில் மனோ நிலையை
அமைக்காதீர்கள்.
|
|
|
|