20-07-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! மாயா இராவணனின் சங்கத்தில் வந்து நீங்கள் அலைந்து திரிந்தீர்கள். தூய்மையாக இருந்த செடி தூய்மை இழந்துவிட்டது. இப்போது மீண்டும் தூய்மையாகுங்கள்.

கேள்வி:
ஒவ்வொரு குழந்தைக்கும் தன்மீதே என்ன ஆச்சரியமாக இருக்கிறது? தந்தைக்கு குழந்தைகள் மீது என்ன ஆச்சரியம் ஏற்படுகிறது?

பதில்:
நாம் என்னவாக இருந்தோம், யாருடைய குழந்தைகளாக இருந்தோம், இப்படிப்பட்ட தந்தை யிடம் நமக்கு சொத்து கிடைத்தது. அந்த தந்தையை மறந்து விட்டோம் என்பது குழந்தைகளுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இராவணன் வந்ததும் எவ்வளவு பனி மூடிவிட்டது. அதனால் படைக்கக் கூடியவர் மற்றும் படைப்பு அனைத்தும் மறந்துவிட்டது. எந்த குழந்தைகளை நான் இவ்வளவு உயர்ந்தவர்களாக மாற்றினேனோ, இராஜ்ய பாக்கியத்தை கொடுத்தேனோ, அந்த குழந்தைகள் என்னை நிந்தித்து விட்டனர் என்பது பாபாவிற்கு குழந்தைகளைப் பார்த்து ஆச்சரியமாக இருக்கிறது. இராவணனின் சங்கத்தில் வந்து அனைத்தையும் இழந்து விட்டனர்

ஓம் சாந்தி.
என்ன யோசித்துக் கொண்டிருக்கின்றீர்கள். வரிசைக்கிரமத்தில் முயற்சிக்கு ஏற்ப ஒவ்வொரு ஜீவ ஆத்மாவும் தன்னைத்தான் பார்த்து அதிசயப்பட்டுக் கொண்டிருக்கிறது - நாம் எவ்வாறு இருந்தோம், யாருடைய குழந்தைகளாக இருந்தோம், உண்மையில் பாபாவிடமிருந்து சொத்து கிடைத்திருந்தது, பிறகு எப்படி மறந்து விட்டோம்! நாம் சதோபிரதானமான உலகத்தில் முழு உலகத்திற்கும் அதிபதியாக இருந்தோம், மிகவும் சுகமுடையவராக இருந்தோம். பிறகு நாம் படியில் இறங்கிவிட்டோம். இராவணன் வந்ததும் படைக்கக் கூடியவர் மற்றும் படைப்பை நாம் மறந்துவிடும் அளவிற்கு மூடுபனி வந்து விட்டது. மூடுபனியில் மனிதர்கள் வழியை மறந்து விடுகிறார்கள் அல்லவா! ஆகவே, நாம் கூட நம்முடைய வீடு எங்கே இருக்கிறது, நாம் எங்கே வசித்தவர்கள் என்பதை மறந்து விட்டோம். இப்போது என்னுடைய குழந்தைகள், இவர்களுக்கு நான் இன்றிலிருந்து 5000 வருடத்திற்கு முன் இராஜ்ய பாக்கியம் கொடுத்துவிட்டு சென்றேன், மிகவும் ஆனந்தத்தில் இருந்தனர், அந்த பூமி எப்படி ஆகி விட்டது என்பதை பாபா பார்த்துக் கொண்டிருக்கிறார். எப்படி இராவண இராஜ்யத்தில் வந்துவிட்டனர்! வேறு தேசத்தில் நிச்சயம் துக்கம் தான் கிடைக்கும். எவ்வளவு நீங்கள் அலைந்தீர்கள். மூட நம்பிக்கையில் தந்தையை தேடிக் கொண்டிருந்தீர்கள். ஆனால், எங்கே கிடைப்பார். யாரை கல்லிலும், முள்ளிலும் இருப்பார் என்று கூறிவிட்டீர்களோ அவர் பிறகு எப்படி கிடைப்பார். அரைக் கல்பமாக நீங்கள் அலைந்து அலைந்து களைத்து விட்டீர்கள். தன்னுடைய அறியாமையின் காரணமாக இராவண இராஜ்யத்தில் எவ்வளவு துக்கத்தை அடைந்திருக்கிறீர்கள். பாரதம் பக்திமார்க்கத்தில் எவ்வளவு ஏழையாகி விட்டது. பாபா குழந்தைகளை பார்க்கும் போது பக்திமார்க்கத்தில் எவ்வளவு அலைகின்றார்கள் என்ற எண்ணம் வருகிறது. அரைக்கல்பம் பக்தி செய்தீர்கள், எதற்காக? பகவானை சந்திப்பதற்காக. பக்திக்குப் பிறகு தான் பகவான் பலனை கொடுக்கின்றார். என்ன கொடுக்கின்றார்? அது யாருக்கும் தெரியாது. முற்றிலும் முட்டாளாக ஆகிவிட்டனர் நாம் என்னவாக இருந்தோம்: பிறகு எப்படி இராஜ்ய பாக்கியத்தை அடைந்தோம், பிறகு எப்படி ஏணிப்படியில் கீழே இறங்கி, இறங்கி இராவணனின் சங்கிலியில் மாட்டிக் கொண்டோம் என்பதனைத்தும் புத்தியில் இருக்க வேண்டும். அளவு கடந்த துக்கம் இருந்தது. முதன் முதலில் நீங்கள் அளவு கடந்த சுகத்தில் இருந்தீர்கள். தங்களுடைய இராஜ்யத்தில் எவ்வளவு சுகம் இருந்தது, பிறகு வேற்று இராஜ்யத்தில் எவ்வளவு துக்கம் இருக்கிறது என்பது ஆங்கிலேயர்களின் ஆட்சியில், நாம் எவ்வளவு துக்கத்தை அடைந்தோம் என அந்த மக்கள் நினைப்பது போல மனதில் வரவேண்டும். இங்கே நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள் உள்ளுக்குள் நாம் யாராக இருந்தோம்? யாருடைய குழந்தைகளாக இருந்தோம்? என்ற எண்ணம் வரவேண்டும். பாபா நமக்கு முழு உலகின் இராஜ்யத்தை கொடுத்தார்: பிறகு எப்படி நாம் இராவண இராஜ்யத்தில் இறுக்கமாகக் கட்டப்பட்டிருக்கிறோம். எவ்வளவு துக்கத்தை பார்த்திருக்கிறோம், எவ்வளவு அழுக்கான கர்மங்களை செய்திருக்கிறோம். சிருஷ்டி ஒவ்வொரு நாளும் கீழே விழுந்துக் கொண்டிருக்கிறது. மனிதர்களுடைய சம்ஸ்காரம் ஒவ்வொரு நாளும் குற்றமுடைய தாகிக் கொண்டிருக்கிறது என்பதெல்லாம் குழந்தைகளுக்கு நினைவில் வரவேண்டும். இவர்கள் தூய்மையான செடிகளாக இருந்தனர் அவர்களுக்கு இராஜ்ய பாக்கியத்தை கொடுத்தேன். ஆனால், அவர்கள் என்னுடைய தொழிலையே மறந்து விட்டனர் என்பதை பாபா பார்க்கின்றார். இப்போது மீண்டும் நீங்கள் தமோபிரதானத்திலிருந்து சதோபிர தானமாக மாற விரும்பினால் தந்தையாகிய என்னை நினைவு செய்தால் அனைத்து பாவங்களும் நீங்கிவிடும். ஆனால் நினைப்பது கிடையாது. அடிக்கடி பாபா நாங்கள் மறந்து விட்டோம் என கூறுகின்றீர்கள். அட, நீங்கள் நினைவு செய்யாவிட்டால் பாவம் எப்படி விலகும்? ஒன்று நீங்கள் விகாரங்களில் விழுந்து தூய்மை இழந்துவிட்டீர்கள். பிறகு பாபாவை நிந்தித்து விட்டீர்கள். மாயாவின் சங்கத்தில் வந்து இந்தளவு கீழே விழுந்து விட்டீர்கள். யார் உங்களை ஆகாயத்தில் ஏற்றிவைத்தாரோ அவரை கல்-லும், முள்ளிலும் இருப்பதாகி கொண்டு வந்து விட்டீர்கள். மாயாவுடைய சங்கத்தில் நீங்கள் இதுபோன்ற காரியத்தை செய்துவிட்டீர்கள்! இவை புத்தியில் வரவேண்டும் அல்லவா! ஒரேயடியாக கல்புத்தியாகக் கூடாது. பாபா தினந்தோறும் நான் உங்களுக்கு நல்ல நல்ல கருத்துகளை கூறுகின்றேன் என கூறுகின்றார்.

பாம்பேயில் கூட்டம் கூடுகின்ற பொழுது, பாரத வாசிகளே! உங்களுக்கு இராஜ்ய பாக்கியத்தை கொடுத்தேன் என பாபா கூறுகின்றார் என்பதை தெரிவிக்கலாம். தேவதைகளாகிய நீங்கள் சொர்க்கத்தில் இருந்தீர்கள். பிறகு இராவண இராஜ்யத்தில் எப்படி வந்தீர்கள்? இது கூட நாடகத்தில் பார்ட் இருக்கிறது. நீங்கள் படைக்கக்கூடியவர் மற்றும் படைப்பினுடைய முதல், இடை, கடையைப் புரிந்து கொண்டால் தான் உயர்ந்த பதவியை அடையலாம். என்னை நினைவு செய்தால் உங்கள் விகர்மங்கள் அழியும். நீங்கள் அனைவரும் இங்கே அமர்ந்திருக்கிறீர்கள். இருப்பினும் சிலருடைய புத்தி எங்கோ இருக்கிறது. இன்னும் சிலருடைய புத்தி வேறு எங்கேயோ இருக்கிறது. நாம் எங்கே இருந்தோம், இப்போது நாம் மற்றவரின் இராவண இராஜ்யத்தில் வந்திருக்கின்றோம், ஆகையால் எவ்வளவு துக்கம் அடைந்திருக்கின்றோம் என்பது புத்தியில் வரவேண்டும். நாம் சிவாலயத்தில் மிகவும் சுகமாக இருந்தோம் இப்போது வேசியாலயத்திலிருந்து வெளியே கொண்டுவருவதற்காக தந்தை வந்திருக்கின்றார். இருப்பினும் வெளியே வருவதில்லை. நீங்கள் சிவாலயத்திற்கு செல்வீர்கள் பிறகு அங்கே இந்த விகாரங்கள் இருக்காது என பாபா கூறுகின்றார். இவ்விடத் தினுடைய அழுக்கான உணவு பொருட்களும் கிடைக்காது. இவர் உலகத்திற்கே அதிபதியாக இருந்தார் அல்லவா! பிறகு எங்கே சென்றுவிட்டார் மீண்டும் தனது இராஜ்ய பாக்கியத்தை அடைகிறார். எவ்வளவு எளிய விஷயம். அனைவரும் சேவை புரிபவர்களாக இருக்க மாட்டார்கள் என்பதை பாபா புரிய வைக்கின்றார். எவ்வாறு 5000 வருடங்களுக்கு முன்பு நடந்ததோ அதுபோல் வரிசைக் கிரமத்தில் இராஜ்யம் உருவாகிக் கொண்டிருக்கிறது. சதோபிரதானமாக மாறவேண்டும் இது தமோபிரதானமான பழைய உலகம் என பாபா கூறுகின்றார். துல்லியமாக எப்போது பழையதாகிறதோ அப்போது பாபா வருவார் அல்லவா! தந்தையைத் தவிர வேறு யாரும் புரியவைக்க முடியாது, பகவான் இந்த ரதத்தின் மூலமாக நம்மை படிக்க வைத்துக்கொண்டிருக் கிறார். இது நினைவில் இருந்தால் புத்தியில் ஞானம் இருக்கும். பிறகு மற்றவர்களுக்கும் கூறி தனக்குச் சமமாக மாற்றலாம். முதலில் உங்களுக்குள் தவறான ஒழுக்கம் இருந்தது அதை கஷ்டப்பட்டு மாற்றிக் கொள்கிறீர்கள் என்பதை பாபா புரியவைக்கின்றார். கண்களினுடைய குற்றம் போகவே இல்லை. ஒன்று காமத்தின் குற்றம் அதுவும் கஷ்டப்பட்டு தான் விடுகிறது. கூடவே 5 விகாரங்களும் இருக்கிறது. கோபத்தினுடைய குற்றமும் எவ்வளவு இருக்கிறது. உட்கார்ந்து கொண்டிருக்கும் போதே பூதம் வந்து விடுகிறது. இது கூட குற்றம் தான். உயர்வான பண்பு இல்லை விளைவு என்னவாகும்? 100 மடங்கு தண்டனை அதிகரிக்கும். அடிக்கடி கோபப்பட்டுக் கொண்டேயிருப்பார்கள். பாபா புரிய வைக்கின்றார் - இப்போது நீங்கள் இராவண இராஜ்யத்தில் இல்லை அல்லவா! நீங்கள் ஈஸ்வரன் அருகில் அமர்ந்து இருக்கிறீர்கள். எனவே இந்த விகாரங் களில் இருந்து விடுபடுவதற்காக உறுதி மொழி எடுக்க வேண்டும். பாபா கூறுகின்றார் - இப்போது என்னை நினையுங்கள், கோபப்படாதீர்கள். 5 விகாரங்கள் உங்களை அரைக்கல்பமாக விழ வைத்திருக்கின்றது. எல்லோரையும் விட உயர்ந்தவர்களாக நீங்கள் இருந்தீர்கள். எல்லோரையம் விட நீங்கள் தான் விழுந்தும் (தாழ்ந்து) இருக்கிறீர்கள். இந்த 5 விகாரங்கள் தான் உங்களை விழவைத்திருக்கிறது. இப்பொழுது சிவாலயத்திற்கு செல்வதற்காக இந்த விகாரங்களை நீக்கி விடவேண்டும். இந்த வேசியாலயத்திலிருந்து மனதை விலக்கிக் கொண்டேயிருங்கள். பாபாவை நினைத்துக் கொண்டே இருந்தால் கடைசி நினைவும் அதற்கு ஏற்ற நிலையும் அடையலாம். நீங்கள் வீட்டை சென்றடைவீர்கள். வேறு யாரும் இந்த வழியைக் கூறமுடியாது. பகவான் வாக்கு: நான் சர்வ வியாபி என்று ஒரு போதும் கூறவில்லை. நான் இராஜயோகத்தை கற்பித்தேன். உங்களை உலகிற்கே அதிபதியாக்கு கின்றேன். பிறகு அங்கே இந்த ஞானத்தின் அவசியமே இல்லை. மனிதனிலிருந்து தேவதையாக நீங்கள் ஆஸ்தி அடைகின்றீர்கள். இதில் ஹடயோகத் தின் விஷயம் இல்லை. தன்னை ஆத்மா என உணருங்கள்: சரீரம் என்று ஏன்? நினைகிறீர்கள் சரீரம் என உணரும்போது ஞானத்தை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. இது கூட விதி. நாம் இராவண இராஜ்யத்தில் இருந்தோம். இப்போது இராம இராஜ்யத்திற்குச் செல்வதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கின்றோம் என்பதை புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். இப்போது நாம் புருஷோத்தம சங்கம யுகத்தினர்.

நல்லது இல்லறத்தில் இருங்கள், இத்தனை பேர் இங்கு எங்கே இருக்கமுடியும். பிராமணர்களாக மாறிய பிறகு அனைவரும் இங்கே பிரம்மாவிடம் இருக்க முடியாது. தன்னுடைய வீட்டில் இருக்க வேண்டும். நாம் சூத்திரர்கள் கிடையாது, பிராமணர்கள் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். பிராமணர்களுடைய குடுமி எவ்வளவு சிறியதாக இருக்கிறது. எனவே குடும்பத்திலிருந்தாலும் சரீர நிர்வாகத்திற்காக வேலை போன்றவைகளை செய்து கொண்டே தந்தையை மட்டும் நினையுங்கள். நாம் எப்படி இருந்தோம்? இப்போது வேற்று இராஜ்யத்தில் அமர்ந்திருக்கிறோம். எவ்வளவு நாம் துக்கத்தில் இருந்தோம். இப்போது தந்தை நம்மை அழைத்துச் செல்கிறார் என்றால் இல்லறத்தில் இருந்து கொண்டே அந்த நிலையை அடைய வேண்டும். ஆரம்பத்தில் எவ்வளவு பெரிய பெரிய மரங்கள் வந்தன. பிறகு அவர்களில் சிலர் இருக்கின்றனர் மற்றவர்கள் சென்று விட்டனர். நாம் நம்முடைய இராஜ்யத்தில் இருந்தோம், இப்போது எங்கே வந்திருக்கிறோம் என்பது உங்களுடைய புத்தியில் இருக்கிறது. மீண்டும் தன்னுடைய இராஜ்யத்திற்குப் போகின்றோம். பாபா, இவர்கள் மிகவும் நன்றாக ரெகுலராக இருந்தார்கள், பிறகு வருவதில்லை என கூறுகின்றீர்கள், எழுது கின்றீர்கள். வரவில்லை என்றால் விகாரத்தில் விழுந்து விட்டது போல. பிறகு ஞானத்தை தாரணை செய்ய முடியாது. முன்னேற்றம் அடைவதற்குப் பதிலாக விழுந்து விழுந்து ஒரு பைசா மதிப்பில்லாத பதவியை அடைவார்கள். எங்கே இராஜா, எங்கே தாழ்ந்த பதவி! அங்கே சுகம் தான் இருக்கிறது ஆனால் உயர்ந்த பதவியை அடைவதற்காகத்தான் முயற்சி செய்யப்படுகிறது. உயர்ந்த பதவியை யார் அடைவார்கள்? இதை அனைவரும் புரிந்து கொள்ள முடியும். இப்போது அனைவரும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்கள். இராஜா மகேந்திரன் (போபாலினுடைய) கூட முயற்சி செய்து கொண்டிருக் கின்றார். அந்த இராஜா ஒரு பைசா மதிப்பில்லாதவர் இவரோ (பிரம்மா பாபா) சூரிய வம்ச இராஜ்யத்தில் செல்லக்கூடியவர் இதுபோன்று முயற்சி செய்தால் தான் வெற்றி மாலையில் போக முடியும். நம்முடைய கண்களில் எங்கேயும் குற்றச் செயல் நிகழவில்லை தானே? என தன்னுடைய மனதில் சோதித்துக் கொண்டேயிருக்க வேண்டுமென பாபா புரியவைக்கின்றார். குற்றமற்றதாகி விட்டால் வேறு என்ன வேண்டும். விகாரத்தில் ஈடுபட மாட்டார்கள்: இருப்பினும் எங்காவது கொஞ்சமாவது கண்கள் ஏமாற்றிக்கொண்டிருக்கிறது. நம்பர் ஒன் காமம், குற்றப்பார்வை மிகவும் மோசமானது. ஆகையினால்தான் கிரிமினலைஸ்டு, சிவிலைஸ்டு என்ற பெயரே இருக்கிறது. எல்லையற்ற தந்தை குழந்தைகளைப் பற்றி அறிந்திருப் பார் அல்லவா! இவர்கள் என்ன கர்மம் செய்கிறார்கள், எவ்வளவு சேவை செய்கின்றார்கள்? சிலருடைய குற்றப்பார்வை இதுவரை போகவில்லை என்று குப்தமாக (ரகசியமாக) செய்திகள் வருகின்றது. இன்னும் போகப் போக மேலும் துல்லியமாக எழுதுவார்கள். நாம் எவ்வளவு காலம் பொய் பேசினோம், கீழே விழுந்தோம் என தானே உணருவார்கள். ஞானம் முழுமையாக புத்தியில் இல்லை. நம்முடைய நிலையை அடையாததற்க்கு இதுவே காரணம். பாபாவிடம் நாம் மறைத்து விட்டோம். இது போன்று பலர் மறைக்கின்றார்கள். சர்ஜனிடம் 5 விகாரங்களின் நோயை மறைக்கக் கூடாது. உண்மையைக் கூற வேண்டும் - நம்முடைய புத்தி இந்த பக்கம் போகின்றது. சிவபாபாவிடம் போகவில்லை என்பதை தெரிவிக்கவில்லை என்றால் அது விருத்தியடைந்து கொண்டேயிருக்கும். இப்போது பாபா புரிய வைக்கின்றார் - குழந்தைகளே! ஆத்ம அபிமானி ஆகுங்கள். தன்னை ஆத்மா என்று உணருங்கள். ஆத்மா சகோதரன் - சகோதரன். நீங்கள் பூஜைக்குரியவராக இருந்தபொழுது எவ்வளவு சுகமாக இருந்தீர்கள். இப்பொழுது பூஜாரியாகி துக்கமுடையவராகி விட்டீர்கள். உங்களுக்கு என்ன ஆகிவிட்டது! இந்த இல்லற ஆசிரமம் பரம்பரையாக வந்தது என அனைவரும் கூறுகிறார்கள். இராம், சீதாவிற்கு குழந்தைகள் இல்லையா என்ன! ஆனால், அங்கே விகாரத்தினால் குழந்தைகள் பிறப்பதில்லை. அட, அவர்கள் இருப்பதோ சம்பூர்ண நிர்விகார உலகம். அங்கே விகாரம் இல்லை. பிரஷ்டாச்சாரத்தினால் பிறப்பதும் இல்லை. அங்கே இந்த இராவண இராஜ்யம் கிடையாது. அதுவோ இராம இராஜ்யம். அங்கே இராவணன் எங்கிருந்து வந்தான். மனிதர்களுடைய புத்தியில் முற்றிலும் ஒன்றுமில்லை. யார் செய்தது. நான் உங்களை சதோபிரதானமாக மாற்றினேன். உங்களுடைய படகை கரை சேர்த்தேன். மீண்டும் உங்களை தமோபிரதானமாக மாற்றியது யார்! இராவணன். இதைக்கூட நீங்கள் மறந்து விட்டீர்கள். இதுவும் பரம்பரையாக வந்தது என்று கூறுகின்றீர்கள், அட, பரம்பரையாக எப்போதிலிருந்து, ஏதாவது கணக்கு சொல்லுங்கள். எதுவும் புரிந்து கொள்ள வில்லை. உங்களுக்கு எவ்வளவு இராஜ்ய பாக்கியத்தை கொடுத்தேன் என பாபா புரியவைக்கின்றார். பாரதவாசியாகிய நீங்கள் மிகவும் குஷியில் இருந்தீர்கள். வேறு யாருமே இல்லை. கிறிஸ்துவர்கள் கூட பேரடைஸ் இருந்தது என கூறுகின்றார்கள். தேவதைகளினுடைய சித்திரங்கள் கூட இருக்கிறது. அவர்களை விடபழமையானது எதுவும் இல்லை. பழமையிலும் பழமையானவர்கள் இந்த லட்சுமி நாராயணன் அல்லது இவர்களுடைய பொருட்கள். அனைத்தையும் விட பழமையிலும் பழமை யானவர் ஸ்ரீ கிருஷ்ணர் புதுமையிலும் புதுமையானவர் கூட ஸ்ரீ கிருஷ்ணர் தான். பழமையானவர் என ஏன் கூறுகின்றோம். ஏனென்றால் முடிந்து விட்டதல்லவா! நீங்கள் தான் வெண்மையாக இருந்தீர்கள், பிறகு கருப்பாகி விட்டீர்கள். கருப்பான கிருஷ்ணரை பார்த்து மிகவும் குஷியடைகிறீர்கள். ஊஞ்சலில் கூட கருப்பானவரை வைத்து ஆட்டுகிறார்கள். வெள்ளையாக எப்போது இருந்தார் என அவர்களுக்கு என்ன தெரியும். கிருஷ்ணரிடம் எவ்வளவு அன்பாக இருக்கின்றனர் இராதை என்ன செய்தார்?

பாபா கூறுகின்றார் - நீங்கள் இங்கே உண்மையான சங்கத்தில் இருக்கிறீர்கள். வெளியில் கெட்ட சங்கத்தில் சென்றதும் மறந்து விடுகிறீர்கள். யானையைக் கூட முதலை முழுங்குவது போல மாயை மிகவும் சக்திசாலியாக இருக்கிறது. இப்படியும் இருக்கிறார்கள். இப்போது ஓடிவிடுவோம் என ஓடிவிடுகின்றனர் சிறிதளவாவது தனக்குள் அகங்காரம் வருவதால் சத்தியத்தை அழித்து விடுகிறார்கள். எல்லையற்ற தந்தை புரிய வைக்கின்றார். இதில் பயப்படக்கூடாது. பாபா இவ்வாறு ஏன் கூறினார், நம்முடைய மரியாதை போய்விட்டது! அட, மரியாதை இராவண இராஜ்யத்திலேயே போய் விட்டது. தேக அபிமானத்தில் வருவதால் தனக்குத்தானே நஷ்டப்படுத்திக் கொள்கிறார்கள். கோபம் மற்றும் பேராசை கூட குற்றமானவைகளே! கண்களால் பொருட்களை பார்க்கிறார்கள். அப்போது தான் பேராசை ஏற்படுகிறது.

தந்தை வந்து தனது மலர் தோட்டத்தைப் பார்க்கின்றார் என்னென்ன விதமான மலர்கள் இருக்கின்றார்கள். இங்கிருந்து சென்று பிறகு அந்த தோட்டத்தில் மலர்களை பார்க்கின்றார். சிவதந்தைக்கு மலர்களை அணிவிக்கின்றார்கள். அவரோ நிராகார், சைத்தன்ய மலர் இப்போது நீங்கள் முயற்சி செய்து இது போன்று மலர்களாகின்றீர்கள். பாபா கூறுகின்றார் - இனிமையிலும் இனிமையான குழந்தைகளே! எது முடிந்து விட்டதோ அதை நாடகம் என்று உணருங்கள், யோசிக்காதீர்கள். எவ்வளவு உழைக்கிறார்கள், எதுவும் நடப்பதில்லை, தங்குவதும் இல்லை. அட பிரஜைகள் கூட வேண்டுமல்லவா! சிறிதளவு கேட்டாலும் அவர்கள் பிரஜைகள் ஆகிவிடுகின்றனர். பிரஜைகள் நிறைய பேர் உருவாக வேண்டும். ஞானம் ஒருபோதும் அழிவதில்லை. ஒரு முறை சிவபாபா, என்று, இதைக் கேட்டாலும் கூட பிரஜையில் வந்து விடுவார்கள். நாம் எந்த இராஜ்யத்தில் இருந்தோம், அதை மீண்டும் அடைந்து கொண்டிருக்கின்றோம் என்பது உள்ளுக்குள் உங்களுடைய நினைவில் வரவேண்டும். அதற்காக முழுமையாக முயற்சி செய்ய வேண்டும். முற்றிலும் துல்லியமாக சேவை நடந்து கொண்டிருக்கிறது. நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. சிவாயலத்திற்குப் போவதற்காக இந்த விகாரங்களை வெளியேற்ற வேண்டும். இந்த விகாரி உலகத்திலிருந்து மனதை விலக்கிக் கொண்டே போக வேண்டும். சூத்திரர் களின் சங்கத்தில் இருந்து விலக வேண்டும்.

2. எது முடிந்ததோ அதை நாடகம் என்று உணர்ந்து எதுவும் யோசிக்கக்கூடாது. அகங்காரத்தில் ஒருபோதும் வரக்கூடாது. அறிவுரைகள் கிடைக்கின்ற பொழுது பயந்து விடக்கூடாது.

வரதானம்:
மகிழ்ச்சியின் பொக்கிஷங்களினால் நிறைந்தவர் ஆகி, துக்கமான ஆத்மாக்களுக்கு மகிழ்ச்சியினுடைய தானம் கொடுக்கக்கூடிய புண்ணிய ஆத்மா ஆகுக.

இந்த சமயம் உலகத்தில் ஒவ்வொரு நேரமும் துக்கம் இருக்கின்றது மற்றும் உங்களிடம் ஒவ்வொரு நேரமும் மகிழ்ச்சி இருக்கின்றது. எனவே, துக்கமான ஆத்மாக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்க வேண்டும் - இது அனைத்தையும் விட பெரியதிலும் பெரிய புண்ணியம் ஆகும். உலகத் தினர் மகிழ்ச்சிக்காக எவ்வளவு நேரம், செல்வத்தை செலவு செய்கின்றார்கள் மற்றும் உங்களுக்கு சகஜமாக அழிவற்ற மகிழ்ச்சியினுடைய பொக்கிஷிம் கிடைத்துவிட்டது. இப்பொழுது என்ன கிடைத்திருக்கிறதோ, அதை பகிர்ந்து கொடுத்துக் கொண்டே செல்லுங்கள். பகிர்ந்தளிப்பது என்றால் அதிகரிப்பது. இவர்களுக்கு ஏதோ சிரேஷ்ட பிராப்தி கிடைத்துள்ளதால் மகிழ்ச்சி உள்ளது என்று யாரெல்லாம் சம்பந்தத்தில் வருவார்களோ அவர்கள் அனுபவம் செய்வார்கள்.

சுலோகன்:
அனுபவி ஆத்மா ஒருபொழுதும் எந்த விசயத்திலும் ஏமாற்றம் அடைய மாட்டார்கள், அவர் எப்போதும் வெற்றியாளராக இருக்கின்றார்.