20.10.24 காலை முரளி
ஓம் சாந்தி 28.03.2002 பாப்தாதா,
மதுபன்
இந்த ஆண்டு பணிவு, களங்கமற்ற ஆண்டு மற்றும் வீணானவைகளிலிருந்து
விடுபட்ட ஆண்டாக கொண்டாடுங்கள்
இன்று பாப்தாதா நாலாபுறங்களிலும் உள்ள தனது குழந்தைகளின்
நெற்றியில் ஜொலித்துக் கொண்டிருக்கும் மூன்று ரேகைகளை
பார்த்துக் கொண்டிருக்கின்றார். முதல் ரேகை பிரபுவின் பாலனை,
இரண்டாவது ரேகை சிரேஷ்ட படிப்பு மற்றும் மூன்றாவது ரேகை
சிரேஷ்ட வழி. மூன்று ரேகைகளும் ஜொலித்துக் கொண்டிருக்கின்றன.
இந்த மூன்று ரேகைகளும் அனைவரின் பாக்கிய ரேகைகளாகும். நீங்கள்
அனைவரும் கூட தனது மூன்று ரேகைகளை பார்த்துக்
கொண்டிருக்கிறீர்கள் தானே! பிரபு பாலனை என்ற பாக்கியம் பிராமண
ஆத்மாக்களாகிய உங்களைத் தவிர வேறு யாருக்கும் பிராப்தியாக
கிடைப்பதில்லை. பரமாத்மா பாலனையின் மூலம் மிகவும் சிரேஷ்ட
பூஜைக்குரியவர்களாக ஆகிவிடுகிறீர்கள். ஆத்மாவாகிய எனக்கு
பரமாத்ம படிப்பிற்கான அதிகாரம் பிராப்தியாக கிடைக்கும் என்று
கனவிலும் நினைத் திருப்பீர்களா! ஆனால் இப்பொழுது சாகாரத்தில்
அனுபவம் செய்து கொண்டிருக்கிறீர்கள். சுயம் சத்குரு
அமிர்தவேளையிலிருந்து இரவு வரை ஒவ்வொரு காரியத்திற்கான சிரேஷ்ட
வழி கொடுத்து கர்மபந்தனத்தை மாற்றி, கர்ம சம்பந்தத்தில்
வருவதற்கான ஸ்ரீமத் கொடுப்பதற்கு நிமித்தம் ஆக்குவார் - இதுவும்
கனவில் நினைக்கவில்லை. ஆனால் இப்பொழுது அனுபவத்தில்
கூறுகிறீர்கள் - எனது ஒவ்வொரு காரியமும் ஸ்ரீமத் படி
நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த அனுபவம் இருக்கிறதா? ஒவ்வொரு
குழந்தையின் இப்படிப்பட்ட சிரேஷ்ட பாக்கியம் பார்த்து பார்த்து
பாப்தாதாவும் மகிழ்ச்சி அடைகின்றார். ஆஹா எனது சிரேஷ்ட
பாக்கியம் ஆஹா. குழந்தைள் ஆஹா பாபா ஆஹா என்று கூறுகின்றோம்.
தந்தை ஆஹா குழந்தைகளே ஆஹா என்று கூறுகின்றார்.
இன்று அமிர்தவேளையிலிருந்து குழந்தைகளின் இரண்டு சங்கல்பங்களின்
நினைவு பாப்தாதாவிடம் வந்து சேர்ந்தது. ஒன்று சில
குழந்தைகளுக்கு தனது கணக்கு கொடுக்கும் நினைவு இருந்தது.
மற்றொன்று தந்தையின் சகவாசத்தின் கலருக்குக்கான ஹோலி நினைவு
இருந்தது. ஆக அனைவரும் ஹோலி கொண்டாட வந்திருக்கிறீர்கள் தானே!
பிராமணர்களின் மொழியில் கொண்டாடுவது என்றால் ஆவது. ஹோலி
கொண்டாடுகிறீர்கள் என்றால் ஹோலி ஆகிறீர்கள். பிராமணக்
குழந்தைகள் ஹோலி ஆவது அனைத்தையும் விட மிகவும் தனிப் பட்டது
மற்றும் அன்பானது என்பதை பார்க்கின்றார். துவாபர யுகத்தின்
ஆரம்பத்தில் இருந்த மகான் ஆத்மாக்கள் மற்றும் தகுந்த நேரத்தில்
வந்த தர்ம தலைவர்களும் தூய்மையாக, ஹோலியாக ஆனார்கள். ஆனால்
உங்களது தூய்மை அனைத்தையும் விட சிரேஷ்டமாகவும் இருக்கிறது,
தனிப்பட்டதாகவும் இருக்கிறது. முழு கல்பத்திலும் எந்த ஒரு
மகாத்மா, தர்மாத்மா, தர்மபிதா இருந்தாலும் உங்களது ஆத்மாவும்
தூய்மை, சரீரமும் தூய்மை, இயற்கையும் சதோ பிரதானம் தூய்மை,
இவ்வாறு ஹோலி யாரும் ஆகவில்லை, ஆகவும் முடியாது. தனது எதிர்கால
சொரூபத்தை எதிரில் கொண்டு வாருங்கள். அனைவரின் எதிரில் தனது
எதிர்கால ரூபம் வந்து விட்டதா? அல்லது ஆவேனா? இல்லையா? என்ன
ஆவேன் என்று தெரியாது. என்ன ஆனாலும் சரி தான், ஆனால் தூய்மையாக
இருப்பீர்கள் அல்லவா! சரீரமும் தூய்மையாக இருக்கும், ஆத்மாவும்
தூய்மையாக இருக்கும் மற்றும் இயற்கையும் தூய்மையாக மற்றும்
பாவனமாக, சுகம் கொடுக்கக் கூடியதாக இருக்கும். நிச்சயம் என்ற
பேனா மூலம் தனது எதிர்கால சித்திரத்தை எதிரில் கொண்டு வர
முடியும். நிச்சயம் இருக்கிறது அல்லவா! ஆசிரியர்களுக்கு
நிச்சயம் இருக்கிறதா? நல்லது, ஒரு விநாடியில் தனது எதிர்கால
சித்திரத்தை எதிரில் கொண்டு வர முடியுமா? கிருஷ்னராக ஆக
முடியாது, ஆனால் துணையாக ஆக முடியும் அல்லவா! எவ்வளவு
அன்பானதாக இருக்கிறது! ஓவியராக ஆக முடிகிறதா? முடிய வில்லையா?
எதிரில் பாருங்கள் போதும். இப்பொழுது சாதாரணமாக இருக்கிறேன்,
நாளை (நாடகத்தில் நாளை, நாளைய பொழுது அல்ல) இந்த தூய்மையாக
சரீரதாரியாக ஆகியே தீர வேண்டும். பாண்டவர்கள் என்ன
நினைக்கிறீர்கள்? உறுதி தானே, ஆவேனா? ஆகமாட்டேனா? என்ற சந்தேகம்
கிடையாது. சந்தேகம் இருக்கிறதா? இல்லை தானே! உறுதியாக
இருக்கிறீர்கள். இராஜயோகி என்றால் இராஜ்ய அதிகாரி ஆகியே தீர
வேண்டும். பாப்தாதா பல முறை நினைவு படுத்தி இருக்கின்றார் -
தந்தை உங்களுக்காக பரிசு கொண்டு வந்திருக்கின்றார். என்ன பரிசு
கொண்டு வந்திருக்கின்றார்? பொன்னிறமான உலகம், சதோபிரதான உலகத்தை
பரிசாக கொண்டு வந்திருக்கின்றார். ஆக நிச்சயம் இருக்கிறது.
நிச்சயத்தின் அடையாளம் ஆன்மீக போதை. தனது இராஜ்யம் எந்த
அளவிற்கு நெருக்கத்தில் வந்து கொண்டிருக்கிறதோ, வீடு
நெருக்கத்தில் வந்து கொண்டிருக்கிறதோ மற்றும் தனது இராஜ்யம்
நெருக்கத்தில் வந்து கொண்டிருக்கிறதோ அந்த அளவிற்கு அடிக்கடி
தனது இனிய வீடு மற்றும் தனது இனிய இராஜ்யத்தின் நினைவு தெளிவாக
வந்தே ஆக வேண்டும். இது நெருக்கத்தில் வருவதன் அடையாளமாகும்.
தனது வீடு, தனது இராஜ்யம் அந்த அளவிற்கு தெளிவாக நினைவிற்கு வர
வேண்டும், மூன்றாவது கண் மூலம் தெளிவாக தென்பட வேண்டும். இன்று
இவ்வாறு இருக்கிறேன், நாளை இவ்வாறு ஆவேன் என்று அனுபவம் ஆக
வேண்டும். பலமுறை தனது பாகத்தை முடித்து தனது வீடு மற்றும் தனது
இராஜ்யத்திற்கு சென்றிருக்கிறீர்கள் - நினைவிற்கு வருகிறதா தானே!
இப்பொழுது மீண்டும் செல்ல வேண்டும்.
பாப்தாதா அனைவரின் நிகழ்கால ரிசல்ட் பார்த்தார். இரட்டை
அயல்நாட்டினராக இருந்தாலும், பாரதவாசிகளாக இருந்தாலும் அனைத்து
குழந்தைகளின் ரிசல்டில் நிகழ்காலத்தில் குழந்தை களிடம்
புதுப்புது விதத்தில் அலட்சியம் இருப்பதை பார்த்தார்.
பலவிதத்தில் அலட்சியம் இருக்கிறது. மனதிற்குள்ளேயே அனைத்தும்
நடக்கத் தான் செய்யும் என்று நினைக்கின்றனர். இன்றைய நாட்களில்
அனைத்து விசயங்களிலும் இந்த விசேஷ சுலோகன் அனைத்தும் நடக்கத்
தான் செய்கிறது. இந்த அலட்சியம் இருக்கிறது. முயற்சியில்
மற்றும் சுய மாற்றத்தில் அலட்சியத்தின் கூடவே சில சதவிகிதம்
சோம்பலும் இருக்கிறது. ஆகிவிடும், செய்து விடுவோம் புதுப்புது
விதமான அலட்சியத்தின் விசயங்களை பாப்தாதா பார்த்தார். ஆகையால்
தனது உண்மையான உள்ளத்துடன் அலட்சியத்துடன் அல்ல, உண்மையான
சார்ட் வையுங்கள்.
ஆக பாப்தாதா இன்று ரிசல்ட் கூறிக் கொண்டிருக்கின்றார்.
கேட்டீர்கள் அல்லவா! அல்லது அன்பு மட்டும் செலுத்தினால் போதுமா?
இதுவும் அன்பு தான். ஒவ்வொருவரின் மீதும் பாப்தாதாவிற்கு அந்த
அளவிற்கு அன்பு இருக்கிறது - அனைத்து குழந்தைகளும் பிரம்மா
பாபாவின் கூடவே தனது வீட்டிற்குச் செல்ல வேண்டும். பின்னால்
வரக் கூடாது, கூடவே செல்ல வேண்டும். எனவே சமம் ஆக வேண்டும்
அல்லவா! சமம் ஆகாமல் துணையாக இருந்து செல்ல முடியாது, பிறகு
தனது இராஜ்யத்தில் முதல் பிறப்பு, முதல் பிறப்பு என்றால்
முதலாவதாகத் தான் இருக்கும் அல்லவா! ஒருவேளை இரண்டாவது,
மூன்றாவது பிறப்பில் வந்தாலும் கூட, இராஜாவாக ஆனாலும் கூட
இரண்டாவது, மூன்றாவது என்று கூறுவார்கள். கூடவே செல்ல வேண்டும்
மற்றும் பிரம்மா பாபாவின் கூடவே முதல் பிறப்பின் அதிகாரி ஆக
வேண்டும் - இது தான் நம்பர்ஒன் நேர்மையுடன் தேர்ச்சி
பெறுவதாகும். ஆக நேர்மையுடன் தேர்ச்சி பெற வேண்டுமா? அல்லது
தேர்ச்சி பெறுமளவிற்கு மதிப்பெண் எடுத்தால் போதுமா? நான் எது
செய்து கொண்டிருக்கிறேனோ, எது நடைபெற்றுக் கொண்டிருக்கிறதோ, அதை
பாப்தாதா பார்ப்பது கிடையாது என்று ஒருபோதும் நினைக்காதீர்கள்.
இதில் ஒருபோதும் அலட்சியமாக இருந்து விடாதீர்கள். ஏதாவது ஒரு
குழந்தை தனது உள்ளப்பூர்வமான சார்ட் கேட்டால் பாப்தாதாவினால்
கூறி விட முடியும். ஆனால் இப்பொழுது கூறமாட்டார். ஒவ்வொரு
மகாரதி, குதிரைப்படை அனைவரின் சார்ட் பார்த்துக்
கொண்டிருக்கின்றார். சில நேரங்களில் பாப்தாதாவிற்கு அதிக கருணை
ஏற்படுகிறது - இவர்கள் எப்படிப்பட்டவர்கள்? ஆனால் என்ன
செய்கிறார்கள்? பிரம்மா பாபா கூறுவார் அல்லவா - என்ன கூறுவார்
என்பது நினைவிருக்கிறதா? பகவானுக்குத் தெரியும் மற்றும்
அவரவர்களுக்குத் தெரியும். சிவபாபா அறிவார் மற்றும் பிரம்மா
பாபா அறிவார். ஏனெனில் பாப்தாதாவிற்கு அதிக கருணை ஏற்படுகிறது.
ஆனால் அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு பாப்தாதாவின் கருணைக்கான
சங்கல்பம் டச் ஆவது கிடையாது, அடைவது கிடையாது. ஆகையால்
பாப்தாதா கூறியிருக்கின்றார் - விதவிதமான ராயல் அலட்சியம் தந்தை
பார்த்துக் கொண்டிருக்கின்றார். அதிக கருணை ஏற்படுகிறது என்று
இன்று பாப்தாதா அழுத்தமாக கூறிவிட்டார். சத்யுகத்தில் யார்
எப்படி இருந்தனர் என்பது தெரியாது. ஆகையால் இப்பொழுது
மகிழ்ச்சியாக கொண்டாடி விடலாம். இப்பொழுது என்ன செய்ய வேண்டும்
செய்து விடுங்கள். தடுப்பதற்கு யாருமில்லை, பார்ப்பதற்கு
யாருமில்லை என்று சில குழந்தைகள் நினைக்கின்றனர். ஆனால் இது
தவறு. பாப்தாதா பெயர் கூறவில்லை, பெயர் கூறினால் நாளை சரியாகி
விடும்.
ஆக என்ன செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொண்டீர்களா!
பாண்டவர்கள் புரிந்து கொண்டீர்களா, இல்லையா! அப்படித் தான்
நடக்கும் என்று இருக்கக் கூடாது. ஏனெனில் பாப்தாதாவிடம்
ஒவ்வொருவரின் ஒவ்வொரு நாளின் ரிபோர்ட் வருகிறது. பாபா மற்றும்
தாதா தங்களுக்குள் உரையாடல் செய்கின்றனர். ஆக பாப்தாதா
அனைத்துக் குழந்தைகளுக்கும் மீண்டும் சைகை கொடுத்துக்
கொண்டிருக்கின்றார் - நேரம் அனைத்து விதங்களிலும் வேகமாக சென்று
கொண்டிருக்கிறது. மாயாவும் தனது கடைசி பாகம் நடித்துக்
கொண்டிருக்கிறது, இயற்கையும் தனது கடைசி பாகம் நடித்துக்
கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட நேரத்தில் பிராமணக் குழந்தைகள்
தங்கள் மீது கடைசி அதாவது எண்ணம்-சொல்-செயலில் வேகமாக இருக்க
வேண்டும். சாதாரண முயற்சி இருக்கக் கூடாது. சேவையில் ஈடுபாடு
மிக நன்றாக இருப்பதை பாப்தாதா பார்கிறார். சேவைக்கு எவரெடியாக
இருக்கிறீர்கள், வாய்ப்பு கிடைத்தால் அன்பாக சேவை செய்ய தயாராக
இருக்கிறீர்கள். ஆனால் இப்பொழுது சேவையில் சேர்த்துக் கொள்ள
வேண்டியது - வார்த்தையின் கூடவே, தனது ஆத்மாவை விசேஷமாக ஏதாவது
பிராப்தி சொரூபத்தில் நிலைக்கச் செய்து வார்த்தைகளின் சேவை
செய்யுங்கள். சொற்பொழிவு செய்கிறீர்கள் என்று வைத்துக்
கொள்ளுங்கள், வார்த்தைகளினால் சொற்பொழிவு நன்றாகவே
செய்கிறீர்கள். ஆனால் அந்த நேரத்தில் தனது ஆன்மீக ஸ்திதி
விசேஷமாக அது சக்தியாக, அமைதியானதாக, பரமாத்மாவின்
அன்புக்கானதாக, ஏதாவது விசேஷ அனுபவம் என்ற ஸ்திதியில் நிலைக்கச்
செய்து மனதின் மூலம் ஆன்மீக ஸ்திதிக்கான பாதிப்பை வாயு
மண்டலத்தில் பரப்புங்கள் மற்றும் செய்தி கொடுங்கள்.
வார்த்தைகளின் மூலம் செய்தி கூறுங்கள், மனதில் ஆன்மிக ஸ்திதி
மூலம் அனுபவம் செய்ய வையுங்கள். சொற்பொழிவு நேரத்தில் உங்களது
வார்த்தை உங்களது நெற்றியின் மூலம், கண்களின் மூலம், முகத்தின்
மூலம் அந்த அனுபவத்தின் தோற்றத்தின் மூலம் தென்பட வேண்டும் -
இன்று சொற்பொழிவு கேட்டேன், ஆனால் பரமாத்ம அன்பின் அனுபவம் மிக
நன்றாக ஏற்பட்டது. சொற்பொழிவின் ரிசல்டில் - மிக நன்றாக
பேசினீர்கள், மிக நல்ல நல்ல விசயங்களைக் கூறினீர்கள் என்று
கூறுகின்றனர். அதே போன்று உங்களது ஆன்மீக சொரூபத்தின்
அனுபவத்தைப் பற்றியும் வர்ணிக்க வேண்டும். மனித ஆத்மாக்களுக்கு
வைபிரேசன் சென்றடைய வேண்டும், வாயு மண்டலம் உருவாக வேண்டும்.
அறிவியல் சாதனங்கள் குளிர்ச்சியான வாயுமண்டலத்தை உருவாக்குகிறது.
நன்றாக குளிர்ச்சியாக இருக்கிறது என்று அனைவரும் உணர்கிறார்கள்.
வெப்பத்தின் வாயுமண்டலம் அனுபவம் செய்விக்க முடிகிறது. அறிவியல்
குளிர்ச்சியில் வெப்பத்தின் அனுபவம் செய்விக்க முடிகிறது,
வெப்பமான நேரத்தில் குளிர்ச்சியின் அனுபவம் செய்விக்க முடிகிறது.
உங்களுடைய அறிவியல் என்ன - அன்பு சொரூபம், சுக சொரூபம், சாந்த
சொரூபம் வாயுமண்டலத்தில் அனுபவம் செய்விக்க முடியாதா?
ஆராயுங்கள். நல்லது செய்தீர்கள், நல்லது செய்தீர்கள் என்பதுடன்
இல்லாமல், நல்லவர்களாக ஆகிவிட வேண்டும். அப்போது தான் முடிவு
நேரத்தை முடித்து தனது இராஜ்யத்தை கொண்டு வருவீர்கள்.
உங்களுக்கு தங்களது இராஜ்யம் நினைவிற்கு வரவில்லையா என்ன?
சங்கமயும் சிரேஷ்ட மானது தான், அது உண்மையே, வைத்திற்கு சமமானது.
ஆனால் ஹே கருணையுள்ளம் உடைய, விஸ்வ கல்யாணகாரி குழந்தைகளே!
தங்களது துக்கமான, அசாந்தியான சகோதர, சகோதரிகளின் மீது கருணை
ஏற்படவில்லையா? ஆர்வம் வரவில்லையா? துக்கமான உலகை சுகமானதாக
ஆக்கி விட வேண்டும் என்ற ஆர்வம் வரவில்லையா? துக்கத்தை பார்க்க
விரும்பு கிறீர்களா? மற்றவர்களது துக்கத்தைப் பார்த்தும் கருணை
வரவில்லையா? உங்களது சகோதரர்கள், உங்களது சகோதரிகள், அவர்களது
துக்கம் பார்க்கப் பிடிக்கிறதா? தனது கருணை, இரக்க சொரூபத்தை
வெளிப்படுத்துங்கள். சேவையில் மட்டும் ஈடுபட வேண்டும், இந்த
நிகழ்ச்சி செய்தேன், இந்த நிகழ்ச்சி செய்தேன் ஆண்டு முடிவடைந்து
விட்டது. இப்பொழுது கருணை யுள்ளம் உடையவர் ஆகுங்கள்.
திருஷ்டியின் மூலம், அனுபவத்தின் மூலம், ஆன்மிக ஸ்திதியின்
பிரபாவத்தின் மூலம் கருணையுள்ளம் உடையவர் ஆகுங்கள்.
இரக்கமுள்ளவர் ஆகுங்கள். நல்லது.
பாப்தாதா மேலும் ஒரு விசயத்தைப் பார்த்தார், கூறுவதற்குப்
பிடிக்கவில்லை. அவ்வப்பொழுது சில குழந்தைகள், நல்ல நல்ல
குழந்தைகளும் மற்றவர்களது விசயங்களில் அதிக சென்று விடுகின்றனர்.
மற்றவர்களது விசயங்களை பார்ப்பது, மற்றவர்களது விசயங்களை
வர்ணிப்பது பார்ப்பதும் வீணான விசயங்களாகும். ஒவ்வொரு வரின்
விசேஷதாவை வர்ணிப்பது என்பது குறைவாக இருக்கிறது. ஒவ்வொருவரின்
விசேஷதாவைப் பார்க்க வேண்டும், விசேஷதாவை வர்ணிக்க வேண்டும்,
அவர்களது விசேஷதாவின் மூலம் அவர்களுக்குள் ஆர்வம்-உற்சாகம்
கொடுப்பது குறைவாக இருக்கிறது. எந்த வீண் விசயத்தை பாப்தாதா
விட வேண்டும் என்று கூறுகிறாரோ அந்த வீண் விசயங்களை விடுவதற்கு
முயற்சி செய்கிறீர்கள். ஆனால் மற்றவர் களைப் பார்க்கும்
பழக்கமும் இருக்கிறது. அதில் அதிக நேரம் சென்று விடுகிறது.
பாப்தாதா ஒரு விசேஷ ஸ்ரீமத் கொடுத்துக் கொண்டிருக்கின்றார் -
அது பொதுவான விசயம் தான், ஆனால் நேரம் அதிகம் வீணாகி விடுகிறது.
வார்த்தைகளில் பணிவாக இருங்கள். வார்த்தைகளில் பணிவு குறைந்து
விடக் கூடாது. சாதாரண வார்த்தைகள் பேசினாலும்,
புரிந்திருந்தாலும், பேசித் தான் ஆகவேண்டும் அல்லவா! ஆனால்
பணிவிற்குப் பதிலாக அதிகாரத்துடன் அதாவது காரியத்தின்,
இருக்கையின், அதிகாரம் 5 சதவிகித அபிமானம் தென்படுகிறது. பணிவு
பிராமண வாழ்க்கையின் விசேஷ அலங்காரமாகும். மனதில்,
வார்த்தைகளில், பேச்சில், சம்பந்தம்-தொடர்பில் பணிவு இருக்க
வேண்டும். மூன்று விசயங்களில் நான் பணிவாக இருக்கிறேன், ஒன்றில்
குறை இருந்தால் என்ன? என்று இருக்கக் கூடாது. ஆனால் அந்த ஒரு
குறை நேர்மையுடன் தேர்ச்சி பெற விடாது. பணிவு தான் மகான்
நிலையாகும். தலை குனியக் கூடாது, தலை குனிய வைக்க வேண்டும்.
சில குழந்தைகள் நான் தான் தலைகுனிய வேண்டுமா, இவர் குனிந்தால்
என்ன? என்று கேளியாக கேட்கின்றனர். ஆனால் இங்கு குனிவது என்பது
குனிவது கிடையாது. உண்மையில் பரமாத்மாவையும் தன் மீது குனிய
வைப்பதாகும், ஆத்மாவின் விசயங்களை விட்டு விடுங்கள். பணிவு
அகங்காரமற்றவர்களாக தானாகவே ஆக்கி விடும். அகங்காரமற்றவர்களாக
ஆவதற்கான முயற்சி செய்ய வேண்டியிருக்காது. பணிவு ஒவ்வொருவரின்
மனதில் உங்களுக்கு அன்பான இடத்தை உருவாக்கி விடும். பணிவு
ஒவ்வொருவரின் மனதில் உங்கள் மீது ஆசிர்வாதம் ஏற்படுத்தும்.
அதிக ஆசிர்வாதங் கள் கிடைக்கும். ஆசிர்வாதங்கள் முயற்சியில்
லிப்ட் விட ராக்கெட் ஆகிவிடும். பணிவு அப்படிப் பட்ட விசயமாகும்.
ஒருவர் எப்படிப்பட்டவராக இருக்கட்டும், பிசியாக இருக்கட்டும்,
கடுமையாக உள்ளமுடையவராக இருக்கட்டும், கோபப்படுபவராக
இருக்கட்டும், ஆனால் பணிவு உங்களுக்கு அனைவரின் மூலம் உதவி
செய்விப்பதற்கு நிமித்தமாகி விடும். பணிவு ஒவ்வொருவரின்
சன்ஸ்காரத்தின் அநுசாரமாக தன்னை நடத்த முடியும். உண்மையான
தங்கமாக இருக்கின்ற காரணத்தினால் தன்னை அனுசரித்துக் கொள்ளும்
விசேஷதா இருக்கும். ஆக வார்த்தை களிலும்,
சம்பந்தம்-தொடர்புகளிலும், சேவையிலும் ஒருவருக்கொருவருடன்
பணிவான சுபாவமுடையவர்கள் வெற்றியை பிராப்தியாக அடைகின்றனர்.
ஆகையால் இந்த ஆண்டு பாப்தாதா விசேஷமாக பணிவு, நிர்மலமான ஆண்டு
என்று பெயர் கொடுத்துக் கொண்டிருக் கின்றார். இந்த ஆண்டாக
கொண்டாடுவீர்கள் தானே!
ஒவ்வொரு குழந்தையும் இந்த ஆண்டு வீணானவைகளிலிருந்து முக்தியடைய
வேண்டும் என்று பாப்தாதா விரும்புகின்றார். முக்தி ஆண்டு
கொண்டாடுங்கள். எந்த ஒரு குறை யிருந்தாலும் அதற்கு முக்தி
கொடுங்கள். ஏனெனில் எதுவரை முக்தி கொடுக்கவில்லையோ,
முக்திதாமத்திற்கு தந்தையுடன் செல்ல முடியாது. ஆக முக்தி
கொடுப்பீர்களா? முக்தி ஆண்டு கொண்டாடுவீர்களா? யார்
கொண்டாடுவீர்களோ அவர்கள் கை உயர்த்துங்கள். கொண்டாடு வீர்களா?
ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டீர்கள் அல்லவா, கொண்டாடுவீர்கள்
தானே! நல்லது. ஒருவேளை முக்தி ஆண்டு கொண்டாடினீர்கள் எனில்
பாப்தாதா நகைகள் நிறைந்த தட்டுக்களில் மிக அதிக வாழ்த்துக்கள்
கொடுப்பார். நல்லது. தன்னையும் முக்தி ஆக்குங்கள். தனது சகோதர,
சகோதரிகளையும் துக்கத்திலிருந்து தூரமாக்குங்கள். அவர்களது
மனதில் குஷிக்கான ஓசை வெளிப்பட வேண்டும் - நமது தந்தை வந்து
விட்டார். சரி தானே! நல்லது.
நாலாபுறங்களிலும் உள்ள அனைத்து தூய்மையான ஆத்மாக்களுக்கு, சதா
பணிவானவர்களாகி படைப்பின் காரியம் செய்யக் கூடிய பாப்தாதாவின்
நெருக்கத்திலிருக்கும் ஆத்மாக்களுக்கு, சதா தனது முயற்சிக்கான
விதியை வேகப்படுத்தி சம்பன்னமாகக் கூடிய அன்பான ஆத்மாக்களுக்கு,
சதா தனது சேமிப்பு கணக்கை அதிகப்படுத்தக் கூடிய தீவிர முயற்சி,
தீவிர புத்தியுடைய குழந்தைகளுக்கு விசால புத்திக்கான
வாழ்த்துக்கள். அன்பு நினைகளின் கூடவே அனைத்து குழந்தைகளுக்கும்
நமஸ்தே.
வரதானம்:
ஒரே பலம் ஒரே நம்பிக்கையின் ஆதாரத்தில் மாயாவை சரண்டர் ஆக்கக்
கூடிய சக்திசாலி ஆத்மா ஆகுக.
ஒரே பலம் ஒரே நம்பிக்கை என்றால் சதா சக்திசாலி. எங்கு ஒரே பலம்
ஒரே நம்பிக்கை இருக்கிறதோ, அங்கு யாரும் அசைக்க முடியாது.
அவர்கள் முன் மாயை மயக்கமடைந்து விடும், சரண்டர் ஆகிவிடும்.
மாயை சரண்டர் ஆகிவிட்டால் சதா வெற்றி தான். எனவே வெற்றி
என்னுடைய பிறப்புரிமை என்ற போதை இருக்க வேண்டும். இந்த
அதிகாரத்தை யாரும் அபகரிக்க முடியாது. நான் தான் கல்ப
கல்பத்தின் சக்திகள் மற்றும் பாண்டவர்கள் வெற்றி அடைந்தவர்களாக
இருந்தோம், இருக்கின்றோம், மீண்டும் ஆவோம் என்ற நினைவு இருக்க
வேண்டும்.
சுலோகன்:
புது உலகின் நினைவின் மூலம் அனைத்து குணங்களையும் வரவேற்பு
செய்யுங்கள் மற்றும் தீவிர வேகத்தில் முன்னேறுங்கள்.
குறிப்பு: இன்று மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை, அகில
உலக யோகா தினமாகும். அனைத்து பிராமணர்களும் குழு ரூபத்தில் மாலை
6.30 மணி முதல் 7.30 மணி வரை விசே‘மாக கருணை, இரக்கமுடைய
தந்தையுடன் சேர்ந்து ஒவ்வொரு ஆத்மாவின் மீதும் கருணை, இரக்கப்
பார்வை வையுங்கள். அனைவருக்கும் ஆசிர்வாதம் கொடுங்கள் மற்றும்
ஆசிர்வாதம் பெறுங்கள்.