21-02-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! மதிப்புடன்
தேர்ச்சி பெற வேண்டுமெனில் புத்தியின் தொடர்பு சிறிது கூட
வேறெங்கும் அலையக் கூடாது. ஒரு தந்தையின் நினைவு இருக்க
வேண்டும், தேகத்தை நினைவு செய்பவர்கள் உயர்ந்த பதவி அடைய
முடியாது.
கேள்வி:
அனைத்தையும் விட உயர்ந்த
இலட்சியம் எது?
பதில்:
ஆத்மா உயிருடன் இருந்து கொண்டே
இறந்து ஒரு தந்தையினுடையவராக ஆவது, வேறு யாருடைய நினைவும்
வராமல் இருப்பது, தேக அபிமானம் முற்றிலும் நீங்கி விடுவது - இது
தான் உயர்ந்த இலட்சியம் ஆகும். நிரந்தரமாக ஆத்ம அபிமானி நிலை
ஏற்பட்டு விட வேண்டும் - இதுவே மிகப் பெரிய இலட்சியம் ஆகும்.
இதன் மூலம் கர்மாதீத நிலையை பிராப்தியாக அடைவீர்கள்.
பாடல்:
நீ அன்புக் கடலாக இருக்கிறாய்
.........
ஓம் சாந்தி.
இப்பொழுது இந்த பாட்டும் கூட தவறாகும். அன்பிற்குப் பதிலாக
ஞானக் கடல் என்று இருக்க வேண்டும். அன்பு என்பது (லோட்டா)
குவளைக்குள் இருக்க முடியாது. கங்கை நீர் தான் குவளையில்
இருக்கும். ஆக இது பக்தி மார்க்கத்தின் மகிமையாகும். இது
தவறானது, அது சரியானது ஆகும். முதன்
முதலில் தந்தை ஞானக் கடலாக இருக்கின்றார். குழந்தைகளிடத்தில்
சிறிது ஞானம் இருந்தாலும் உயர்ந்த பதவியைப் பலனாக அடைகின்றனர்.
இப்பொழுது நாம் சைத்தன்ய தில்வாடா கோயிலில் இருப்பவர்கள் என்பதை
குழந்தைகள் அறிவீர்கள். அது ஜடமான தில்வாடா கோயில், இது
சைத்தன்யமான (உணர்வுள்ள) தில்வாடா ஆகும். இதுவும் ஆச்சரியம்
அல்லவா! எங்கு ஜடத்தின் நினைவுச் சின்னம் இருக்கிறதோ அங்கு
நீங்கள் சைத்தன்யமாக வந்து அமர்கிறீர்கள். ஆனால் மனிதர்கள்
எதையும் புரிந்து கொள்வது கிடையாது. இது இறை தந்தையின்
பல்கலைக்கழகம் ஆகும், இங்கு பகவான் கற்பிக்கின்றார்,. இதை விட
உயர்ந்த பல்கலைக்கழகம் வேறு எதுவும் இருக்க முடியாது என்பதை
நாளடைவில் புரிந்து கொள்வார்கள். இது தான் உண்மையான சைத்தன்ய
தில்வாடா கோயில் என்பதையும் நாளடைவில் புரிந்து கொள்வார்கள்.
இந்த தில்வாடா கோயில் உங்களது மிகச் சரியான நினைவுச்
சின்னமாகும். மேலே சூரியவம்சி, சந்திரவம்சத்தினர் இருக்கின்றனர்,
கீழே ஆதி தேவன், ஆதிதேவி மற்றும் குழந்தைகள்
அமர்ந்திருக்கின்றனர். இவரது பெயர் பிரம்மா, பிறகு சரஸ்வதி
பிரம்மாவின் குழந்தை ஆவார். பிரஜாபிதா பிரம்மா இருக்கின்றார்
எனில் அவசியம் கோப கோபியர்களும் இருப்பார்கள் அல்லவா! அது ஜட
சிலைகள் ஆகும். யார் கடந்த காலத்தில் இருந்து
சென்றிருக்கிறார்களோ அவர்களுக்கு சிலைகள் உருவாக்கப்பட்டிருக்
கின்றன. யாராவது இறக்கின்றனர் எனில் உடனேயே அவர்களுக்கு சிலை
வைத்து விடுகின்றனர். அவரது பதவி, சரித்திரம் பற்றி தெரிந்து
கொள்வது கிடையாது. தொழிலைப் பற்றி அறியவில்லை யெனில் பிறகு
அந்த சிலையானது எந்த காரியத்திற்கும் உதவாததாக ஆகிவிடுகிறது.
இன்னார் இந்த இந்த காரியம் செய்திருக்கின்றார் என்பது தெரிந்து
கொள்ள முடியும். இந்த தேவதைகளின் கோயில்கள் உள்ளன, ஆனால்
இவர்களது தொழில், சரித்திரம் பற்றி யாருக்கும் தெரியாது.
உயர்ந்ததிலும் உயர்ந்த சிவபாபாவை யாரும் அறியவில்லை. இந்த
நேரத்தில் குழந்தைகளாகிய நீங்கள் அனைவரின் சரித்திரத்தையும்
அறிவீர்கள். யாரை பூஜிக்கிறார்களோ அவர்களின் முக்கியமானவர்கள்
யார்? உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பகவான். சிவராத்திரி
கொண்டாடுகின்றனர் எனில் அவசியம் அவர் அவதாரம் எடுத்திருக்க
வேண்டும். ஆனால் எப்பொழுது எடுத்தார்? அவர் வந்து என்ன செய்தார்?
என்பது யாருக்கும் தெரியாது. சிவனின் கூடவே இருப்பது பிரம்மா.
ஆதிதேவன் மற்றும் ஆதிதேவி யார்? அவர்களுக்கு இவ்வளவு புஜங்கள்
ஏன் கொடுக்கப்பட்டிருக் கின்றன? ஏனெனில் வளர்ச்சி ஏற்படுகிறது
அல்லவா! பிரஜாபிதா பிரம்மாவின் மூலம் எவ்வளவு விரிவாக்கம்
ஏற்படுகிறது! 100 புஜங்கள், ஆயிரம் புஜங்கள் உடையவர் என்று
பிரம்மாவிற்குத் தான் கூறுகின்றனர். விஷ்ணு அல்லது சங்கருக்கு
இந்த அளவு புஜங்கள் உடையவர் என்று கூறமாட்டார்கள்.
பிரம்மாவிற்கு ஏன் கூறுகின்றனர்? இவர்கள் பிரஜாபிதா பிரம்மாவின்
வம்சத்தினர்கள் அல்லவா! இது புஜங்களுக் கான விசயம் கிடையாது.
ஆயிரம் புஜங்கள் உடைய பிரம்மா என்று அவர்கள் கூறலாம், ஆனால்
பொருளைப் புரிந்து கொள்வது கிடையாது. பிரம்மாவிற்கு எவ்வளவு
புஜங்கள் உள்ளன என்பதை இப்பொழுது நீங்கள் நடைமுறையில்
பார்க்கிறீர்கள். இது எல்லையற்ற புஜங்கள் ஆகும். பிரஜாபிதா
பிரம்மாவை அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர், ஆனால் தொழில் பற்றி
யாரும் அறியவில்லை. ஆத்மாவிற்கு புஜங்கள் இருக்காது, சரீரத்தில்
தான் புஜங்கள் இருக்கும். இவ்வளவு கோடிக்கணக்கான சகோதரர்கள்
இருக்கின்றனர் எனில் அவருக்கு எவ்வளவு புஜங்கள் இருக்கும்?
ஆனால் முதலில் ஞானத்தை முழுமையான முறையில் புரிந்து கொள்ள
வேண்டும், பிறகு தான் இந்த விசயங்களைக் கூற வேண்டும். முதன்
முதல் முக்கிய விசயம் ஒன்று, தந்தை கூறுகின்றார் - என்னை நினைவு
செய்யுங்கள் மற்றும் ஆஸ்தியை நினைவு செய்யுங்கள். பிறகு ஞானக்
கடல் என்றும் பாடப்பட்டிருக்கிறது. எவ்வளவு அளவற்ற கருத்துக்களை
கூறுகின்றார்! இந்த அனைத்து கருத்துகளும் நினைவில் வைத்திருக்க
முடியாது. சாரத்தை புத்தியில் வைத்துக் கொள்ள முடியும்.
கடைசியில் மன்மனாபவ என்பது சாரமாக ஆகிவிடும்.
ஞானக் கடல் என்று கிருஷ்ணரைக் கூறமாட்டோம். அவர் படைப்பு ஆகும்.
படைப்பவர் ஒரே ஒரு தந்தை ஆவார். தந்தை தான் அனைவருக்கும் ஆஸ்தி
கொடுப்பார், வீட்டிற்கு அழைத்துச் செல்வார். தந்தை மற்றும்
ஆத்மாக்களின் வீடு அமைதியான வீடாகும். விஷ்ணுபுரியை தந்தையின்
வீடு என்று கூறமாட்டோம். வீடு மூலவதனம் ஆகும், அங்கு தான்
ஆத்மாக்கள் வசிக்கின்றன. இந்த அனைத்து விசயங்களையும் புத்திசாலி
குழந்தைகள் தான் தாரணை செய்ய முடியும். இவ்வளவு முழு
ஞானத்தையும் யாரும் புத்தியில் நினைவில் வைத்துக் கொள்ள
முடியாது. அந்த அளவிற்கு காகிதங்களில் எழுதவும் முடியாது. இந்த
அனைத்து முரளியும் அனைவரிடமிருந்தும் ஒன்று சேர்ந்தால் இந்த
ஹாலை விட பெரிதாகி விடும். அந்தப் படிப்பிலும் எத்தனை
புத்தகங்கள் உள்ளன! தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்பு சாரம்
புத்தியில் அமர்ந்து விடுகிறது. வக்கீலுக்கான தேர்வில் தேர்ச்சி
பெற்று விடுகின்றனர், ஒரு பிறவிக்காக அல்ப கால சுகம் கிடைத்து
விடுகிறது. அது அழியக் கூடிய வருமானமாகும். உங்களுக்கு
எதிர்காலத்திற்காக இந்த அழிவற்ற வருமானம் தந்தை
செய்விக்கின்றார். மற்றபடி குருமார்கள் அனைவரும் அழியக் கூடிய
வருமானம் செய்விக்கின்றனர். விநாசம் நெருக்கத்தில் வந்து கொண்டே
இருக்கிறது, வருமானமும் குறைந்து விடுகிறது. வருமானம்
அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்று நீங்கள் கூறுவீர்கள்,
ஆனால் அவ்வாறு கிடையாது. இவை அனைத்தும் அழிந்து போய்விடும்.
முன்பு அரசர் போன்றவர்களின் வருமானத்தில் நடைபெற்று வந்தன.
இப்பொழுது அவர்களும் கிடையாது. உங்களது வருமானம் எவ்வளவு
காலத்திற்கு வரும்? இது ஏற்கெனவே உருவாக்கப்பட்ட நாடகம், இதை
உலகில் யாரும் அறிந்து கொள்ளவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்.
உங்களிலும் வரிசைக் கிரமமாகத் தான் தாரணை புரிதல் ஏற்படுகிறது.
சிலரால் முற்றிலும் புரிய வைக்கவும் முடிவது கிடையாது. நாம்
உற்றார் உறவினர்களுக்குப் புரிய வைக்கின்றோம் என்று சிலர்
கூறுகின்றனர், அதுவும் அல்பகாலம் ஆகிவிடுகிறது அல்லவா!
கண்காட்சி போன்றவைகளில் மற்றவர்களுக்கு ஏன் புரிய வைப்பது
கிடையாது? முழு தாரணை கிடையாது. தன்னை அதி புத்திசாலி என்று
நினைத்துக் கொள்ளக் கூடாது அல்லவா! சேவையில் ஆர்வம் இருக்கிறது
எனில் யார் நன்றாகப் புரிய வைக்கிறார்களோ அவர்கள் கூறுவதைக்
கேட்க வேண்டும். உயர்ந்த பதவி ஏற்படுத்துவதற்காக தந்தை
வந்திருக்கின்றார் எனில் முயற்சி செய்ய வேண்டும் அல்லவா! ஆனால்
அதிர்ஷ்டம் இல்லையென்றால் ஸ்ரீமத்-ஐ ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்,
பிறகு பதவி குறைந்து விடும். நாடகப்படி இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக்
கொண்டிருக்கிறது. அதில் அனைத்து வகையினரும் தேவைப்படுவர் அல்லவா!
சிலர் நல்ல பிரஜைகளாக ஆகக் கூடியவர்களாக இருப்பர், சிலர்
குறைவானவர்களாக இருப்பர் என்பதை குழந்தைகள் புரிந்து கொள்ள
முடியும். நான் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்க வந்திருக்கிறேன்
என்று தந்தை கூறுகின்றார். தில்வாடா கோயிலில் இராஜாக்களின்
சித்திரம் இருக்கிறது அல்லவா! யார் பூஜ்ய நிலையில் இருந்தார்களோ
அவர்களே பிறகு பூஜாரிகளாக ஆகின்றனர். இராஜா ராணி என்ற பதவி
உயர்ந்தது அல்லவா! பிறகு விகார மார்க்கத்தில் வரும் பொழுதும்
இராஜாக்கள் அதாவது பெரிய பெரிய செல்வந்தர்கள் இருக்கின்றனர்.
ஜெகந்நாத் கோயிலில் அனைவருக்கும் கிரீடம்
காண்பித்திருக்கின்றனர். பிரஜைகளுக்கு கிரீடம் இருக்காது.
கிரீடமுடைய இராஜாக்களும் விகாரிகளாக காண்பிக்கின்றனர். சுகம்,
செல்வம் அவர்களிடத்தில் அதிகம் இருக்கும். செல்வத்தில் ஏற்ற
இறக்கம் ஏற்படுகின்றது. தங்க மாளிகைக்கும், வெள்ளி மாளிகைக்கும்
வித்தியாசம் இருக்கும் அல்லவா! ஆக தந்தை குழந்தைகளுக்கு
கூறுகின்றார் - நன்றாக முயற்சி செய்து உயர்ந்த பதவி அடையுங்கள்.
இராஜாக்களிடத்தில் அதிக சுகம் இருக்கும், இருப்பினும் பதவியில்
வரிசைக்கிரமம் இருக்கிறது. முயற்சி செய்து கொண்டே இருங்கள்,
சோம்பலுடையவர்களாக ஆகிவிடாதீர்கள் என்று தந்தை சதா கூறுகின்றார்.
நாடகப்படி இவரது சத்கதியானது இவ்வளவு தான் ஏற்படும் என்பதை
முயற்சியை வைத்து புரிந்து கொள்ளலாம்.
தனது சத்கதிக்காக ஸ்ரீமத் படி நடக்க வேண்டும். ஆசிரியரின்
வழிப்படி மாணவர்கள் நடக்க வில்லையெனில் எதற்கும் உதவாதவர்களாக
ஆகிவிடுவர். அனைவரும் வரிசைப்படியான முயற்சியாளர்களாக
இருக்கின்றனர். என்னால் இது செய்ய முடியாது என்று யாராவது
கூறுகின்றனர் எனில் பிறகு அவர்கள் என்ன கற்றுக் கொள்வார்கள்?
கற்றுக் கொண்டு புத்திசாலியாக ஆக வேண்டும், இவர்கள் நன்றாகப்
புரிய வைக்கின்றனர், ஆனால் ஆத்மா உயிருடன் இருந்து கொண்டே
இறந்து தந்தையினுடையவராக ஆக வேண்டும், வேறு யாருடைய நினைவும்
வரக் கூடாது, தேக அபிமானம் நீங்கி விட வேண்டும் - இது உயர்ந்த
இலட்சியம் ஆகும். அனைத்தையும் மறக்க வேண்டும். முழுமையாக ஆத்ம
அபிமானி நிலை ஏற்பட்டு விட வேண்டும் - இது மிகப் பெரிய
இலட்சியம் ஆகும். அங்கு ஆத்மாக்கள் அசரீரியாக இருப்பார்கள்,
பிறகு இங்கு வந்து தேகத்தை தாரணை செய்கிறது. இப்பொழுது மீண்டும்
இந்த தேகத்தில் இருந்து கொண்டே தன்னை அசரீரி என்று புரிந்து
கொள்ள வேண்டும். இந்த முயற்சி மிகவும் உயர்ந்தது. தன்னை ஆத்மா
என்று உணர்ந்து கர்மாதீத நிலையில் இருக்க வேண்டும். பாம்பிற்கு
அறிவு இருக்கிறது அல்லவா - பழைய ஆடையை விட்டு விடுகிறது. ஆக
நீங்கள் தேக அபிமானத்திலிருந்து எவ்வளவு விடுபட வேண்டும்!
மூலவதனத்தில் நீங்கள் ஆத்ம அபிமானிகளாகத் தான் இருப்பீர்கள்.
இங்கு தேகத்திலிருந்து கொண்டே தன்னை ஆத்மா என்று புரிந்து
கொள்ள வேண்டும். தேக அபிமானம் நீங்கி விட வேண்டும். எவ்வளவு
பெரிய பரீட்சை பகவான் சுயம் வந்து கற்பிக்க வேண்டியிருக்கிறது.
தேகத்தின் அனைத்து சம்மந்தங்களையும் விட்டு விட்டு
என்னுடையவராக ஆகுங்கள், தன்னை நிராகார ஆத்மா என்று புரிந்து
கொள்ளுங்கள் என்று வேறு யாரும் இவ்வாறு கூற முடியாது. எந்த
பொருளின் உணர்வும் இருக்கக் கூடாது. மாயை ஒருவருக்கொருவரின்
தேகத்தில் அதிகமாக மாட்ட வைத்து விடுகிறது, அதனால் தான் பாபா
கூறுகின்றார் - இந்த சாகாரத்தையும் (பிரம்மா) நினைவு செய்யக்
கூடாது. நீங்கள் தங்களது தேகத்தையும் மறக்க வேண்டும் என்று பாபா
கூறுகின்றார். ஒரு தந்தையை நினைவு செய்ய வேண்டும். இதில் அதிக
முயற்சி இருக்கிறது. மாயை நல்ல நல்ல குழந்தைகளையும் கூட பெயர்,
உருவத்தில் மாட்ட வைத்து விடுகிறது. இந்த பழக்கம் மிகவும்
கெட்டது. சரீரத்தை நினைவு செய்வது என்பது பூதங்களை நினைவு
செய்வதாக ஆகிவிடுகிறது. ஒரு சிவபாபாவை மட்டுமே நினைவு
செய்யுங்கள் என்று நான் கூறுகிறேன். நீங்கள் 5 பூதங்களை நினைவு
செய்து கொண்டே இருக்கிறீர்கள். தேகத்தின் மீது முற்றிலும்
பற்றுதல் இருக்கக் கூடாது. பிராமணியிடத்தில் (நிமித்த
சகோதரியிடம்) கற்றுக் கொள்ள வேண்டுமே தவிர அவரது பெயர்,
உருவத்தில் மாட்டிக் கொள்ளக் கூடாது. ஆத்ம அபிமானி ஆவதில் தான்
முயற்சி இருக்கிறது. பாபாவிற்கு பல குழந்தைகள் சார்ட் அனுப்பி
வைக்கின்றனர், ஆனால் அதன் மீது நம்பிக்கை வைப்பது கிடையாது.
நான் சிவபாபாவைத் தவிர வேறு யாரையும் நினைவு செய்வது கிடையாது
என்று சிலர் கூறுகின்றனர், ஆனால் துளியளவும் நினைவு செய்வது
கிடையாது என்பதை தந்தை அறிவார். நினைவில் தான் அதிக முயற்சி
இருக்கிறது. எதிலாவது மாட்டிக் கொள்கிறீர்கள். தேகதாரிகளை
நினைவு செய்வது என்பது 5 பூதங்களை நினைப்பதாகும். இது பூத பூஜை
என்று கூறப்படுகிறது. பூதத்தை நினைவு செய்கிறீர்கள். இங்கு
நீங்கள் ஒரே ஒரு சிவபாபாவை நினைவு செய்ய வேண்டும். பூஜைக்கான
விசயம் கிடையாது. பக்தியின் பெயர், அடையாளம் மறைந்து விடுகிறது,
பிறகு ஏன் சிலைகளை நினைவு செய்ய வேண்டும்? அதுவும் மண்ணால்
செய்யப்பட்டது ஆகும். இவை அனைத்தும் கூட நாடகத்தில்
பதிவாகியிருக்கிறது என்று தந்தை கூறுகின்றார். இப்பொழுது
மீண்டும் உங்களை பூஜாரியிலிருந்து பூஜைக்குரியவர் களாக
ஆக்குகின்றேன். ஒரு தந்தையைத் தவிர வேறு எந்த சரீரத்தையும்
நினைவு செய்யக் கூடாது. ஆத்மா தூய்மை ஆகிவிடும் பொழுது பிறகு
சரீரமும் தூய்மையாகக் கிடைக்கும். இப்பொழுது இந்த சரீரம் தூய்மை
கிடையாது. முதலில் ஆத்மா சதோ பிரதானத்திலிருந்து சதோ, ரஜோ,
தமோவில் வரும் பொழுது சரீரமும் அதன்படி கிடைக்கிறது. இப்பொழுது
உங்களது ஆத்மா தூய்மை ஆகிக் கொண்டே செல்கிறது, ஆனால் சரீரம்
இப்பொழுது தூய்மை ஆகாது. இது புரிந்து கொள்ள வேண்டிய விசயமாகும்.
யார் நன்றாகப் புரிந்து கொண்டு புரிய வைத்துக்
கொண்டிருக்கிறார்களோ அவர்களது புத்தியில் தான் இந்த கருத்துகள்
அமரும். சதோ பிரதானமாக ஆத்மா தான் ஆக வேண்டும். தந்தையை நினைவு
செய்வதில் தான் அதிக முயற்சி இருக்கிறது. சிலருக்கு துளியும்
நினைவு இருப்பது கிடையாது. மதிப்புடன் (பாஸ்வித் ஆனர்) தேர்ச்சி
பெற வேண்டுமெனில் புத்தியோகம் சிறிதும் எங்கும் அலையக் கூடாது.
ஒரு தந்தையின் நினைவு மட்டுமே இருக்க வேண்டும். ஆனால்
குழந்தைகளின் புத்தியானது அலைந்து கொண்டே இருக் கிறது. எந்த
அளவு பலரை தனக்குச் சமமாக ஆக்குவீர்களோ அந்த அளவிற்குத் தான்
பதவி கிடைக்கும். தேகத்தை நினைவு செய்பவர்கள் ஒருபொழுதும்
உயர்ந்த பதவி அடைய முடியாது. இங்கு நேர்மையுடன் தேர்ச்சி அடைய
வேண்டும். முயற்சியின்றி இந்த பதவி எப்படி அடைய முடியும்?
தேகத்தை நினைவு செய்பவர்கள் எந்த முயற்சியும் செய்ய முடியாது.
தந்தை கூறுகின்றார் - முயற்சி செய்பவர்களைப் பின்பற்றுங்கள்.
இவரும் (பிரம்மாவும்) முயற்சியாளர் அல்லவா!
இது மிகவும் விசித்திரமான (வித்தியாசமான) ஞானமாகும். உலகில்
யாருக்கும் தெரியாது. ஆத்மாவிற்குள் எப்படி மாற்றங்கள்
ஏற்படுகின்றன? என்பது யாருடைய புத்தியிலும் அமராது.
இவையனைத்தும் குப்தமான முயற்சியாகும். பாபாவும் குப்தமானவர்.
நீங்கள் இராஜ்யத்தை எப்படி பிராப்தியாக அடைகிறீர்கள்? சண்டை
சச்சரவு எதுவும் கிடையாது. ஞானம் மற்றும் யோகாவிற் கான
விசயமாகும். நாம் யாரிடத்திலும் சண்டையிடுவது கிடையாது. ஆத்மாவை
தூய்மை யாக்குவதற்காக முயற்சி செய்ய வேண்டும். ஆத்மா அசுத்தம்
ஆக ஆக சரீரமும் தூய்மை இழந்து விடுகிறது. ஆத்மா தூய்மையாகிச்
செல்ல வேண்டும். அதிக முயற்சி இருக்கிறது. யார் யார் முயற்சி
செய்கின்றனர்? என்பதை பாபா புரிந்து கொள்வார். இது சிவபாபாவின்
பண்டாரா ஆகும். சிவபாபாவின் பண்டாராவில் நீங்கள் சேவை
செய்கிறீர்கள். சேவை செய்யவில்லையெனில் மிகச் சிறிய பதவி
அடைவீர்கள். தந்தையிடம் சேவைக்காக வந்திருக்கிறீர்கள், ஆனால்
சேவை செய்ய வில்லையெனில் என்ன பதவி கிடைக்கும்? இங்கு இராஜ்யம்
ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. இதில் வேலைக்காரன்
போன்றவர்களாக ஆவார்கள் அல்லவா! இப்பொழுது நீங்கள் இராவணனின் (மாயை)
மீது வெற்றி அடைகிறீர்கள், மற்ற எந்த யுத்தமும் கிடையாது. இது
புரிய வைக்கப்படுகிறது, எவ்வளவு குப்தமான விசயம் ஆகும்! யோக
பலத்தின் மூலம் உலக இராஜ்யம் நீங்கள் அடைகிறீர்கள். நாம் நமது
சாந்திதாமத்தில் வசிக்கக் கூடியவர்கள் என்பதை நீங்கள்
அறிவீர்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு எல்லையற்ற வீட்டின்
நினைவு தான் இருக்கிறது. இங்கு நாம் நடிப்பு நடிப்பதற்காக
வந்திருக்கிறோம், மீண்டும் நமது வீட்டிற்குச் செல்வோம். ஆத்மா
எப்படி செல்கிறது? என்பதையும் யாரும் புரிந்து கொள்வது கிடையாது.
நாடகப்படி ஆத்மாக்கள் வந்தே ஆக வேண்டும். நல்லது.
இனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாய் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள்
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) எந்த தேகதாரியின் மீதும் பற்று வைக்கக் கூடாது. சரீரத்தை
நினைவு செய்வது என்பது பூதத்தை நினைவு செய்வதாகும். ஆகையால்
யாருடைய பெயர், உருவத்திலும் மாட்டிக் கொள்ளக் கூடாது. தனது
தேகத்தையும் மறக்க வேண்டும்.
2) எதிர்காலத்திற்காக அழிவற்ற வருமானத்தை சேமிப்பு செய்ய
வேண்டும். புத்திசயாகி ஞானக் கருத்துகளை புத்தியில் தாரணை
செய்ய வேண்டும். தந்தை என்ன புரிய வைத்தாரோ அதை புரிந்து கொண்டு
மற்றவர்களுக்கும் கூற வேண்டும்.
வரதானம்:
கல்ப கல்பம் வெற்றியாளன் என்ற நினைவின் ஆதாரத்தில் மாயை எதிரியை
வரவேற்கக் கூடிய மகாவீர் வெற்றியாளர் ஆகுக.
மகாவீர் வெற்றியாளர் குழந்தை சோதனைத்தாளைப் பார்த்து
பயப்படமாட்டார். ஏனெனில் திரிகாலதர்சியாக இருக்கின்ற
காரணத்தினால் நான் கல்ப கல்பத்திற்கும் வெற்றியாளன் என்பதை
அறிவார். பாபா, என்னிடம் மாயாவை அனுப்பாதீர்கள் - கருணை
காட்டுங்கள், ஆசிர்வாதம் செய்யுங்கள், சக்தி கொடுங்கள், என்ன
செய்வது, ஏதாவது வழி கூறுங்கள் என்று மகாவீர் ஒருபோதும் கூற
முடியாது. இதுவும் பலவீனமாகும். மகாவீரர்கள் எதிரியை, நீ வா
ஆனால் நான் தான் வெற்றியடைவேன் என்று வரவேற்பு செய்வார்கள்.
சுலோகன்:
காலத்தின் தகவல் - சமம் ஆகுங்கள் மற்றும் சம்பன்னம் ஆகுங்கள்.
அவ்யக்த இசாரே - ஏகாந்தவாசி ஆகுங்கள், ஏக்தா (ஒற்றுமை) மற்றும்
ஏகாக்ரதா (ஒருநிலைப்படுத்தல்) கொண்டு வாருங்கள்
எந்த ஒரு விசயத்திலும் வெற்றி பெறுவதற்கு ஒன்று ஏகாந்தம்,
மற்றொன்று ஏகாக்ரதா. இந்த இரண்டு விதியின் மூலம் வெற்றி
பெறுவீர்கள். எவ்வாறு உங்களுடைய நினைவுச் சின்னங்களின் மூலம்
வெற்றி அடைபவர்கள் விசேசமாக இரண்டு விதிகளை கடைபிடிக்கின்றனர்
- ஏகாந்தவாசி மற்றும் ஏகாக்ரதா. இந்த விதியையே நீங்களும்
சாகரத்தில் கொண்டு வாருங்கள். ஏகாக்ரதா குறைகின்ற காரணத்தினால்
தான் திட நம்பிக்கையிலும் குறை ஏற்படுகிறது. ஏகாந்தவாசியில்
குறை ஏற்படுகின்ற காரணத்தினால் சாதாரண சங்கல்பம் விதையை
பலவீனமாக ஆக்கி விடுகிறது. ஆகையால் இந்த விதியின் மூலம் வெற்றி
சொரூபம் ஆகுங்கள்