21-05-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! ஸ்ரீமத்படி நடந்து
அனைவருக்கும் சுகத்தைக் கொடுங்கள். அசுர வழிப்படி துக்கத்தைக்
கொடுத்து வந்தீர்கள். இப்பொழுது சுகத்தைக் கொடுங்கள் சுகத்தை
அடையுங்கள்.
கேள்வி:
புத்திசாலி குழந்தைகள் எந்த
ரகசியத்தை புரிந்துகொண்ட காரணத்தால் உயர்ந்த பதவியடைய முயற்சி
செய்கின்றார்கள்?
பதில்:
இது துக்கம் மற்றும்
சுகத்திற்கான, வெற்றி தோல்விக்கான விளையாட்டு என்பதை அவர்கள்
புரிந்திருப்பார்கள். இப்பொழுது அரை கல்பம் சுகத்திற்கான
விளையாட்டு நடைபெற உள்ளது. அங்கு எந்தவிதமான துக்கமும்
இருக்காது. இப்பொழுது புதிய ராஜ்யம் வரவிருக்கின்றது.. அதற்
காக பாபா தன்னுடைய பரந்தாம வீட்டை விட்டு குழந்தைகளுக்கு கல்வி
கற்றுத்தர வந்துள்ளார். இப்பொழுது முயற்சி செய்து உயர்ந்த
பதவியே அடைந்தே தீர வேண்டும்.
பாடல்:
இந்த உலகமே மாறினாலும் நான் மாற
மாட்டேன்.!
ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான குழந்தைகள் அர்த்தத்தை புரிந்து
கொண்டீர்கள். இங்கு எந்த சபதமும் செய்ய வேண்டிய அவசியமில்லை.
இங்கு ஆத்மாவிற்குள் ஞானம் இருக்க வேண்டும். ஆத்மா
தமோபிரதானமான காரணத்தினால் முற்றிலும் புத்தியற்றதாகிவிட்டது.
நாம் எவ்வளவு புத்தியற்றவர்களாக இருந்தோம் என்பது
குழந்தைகளுக்குத் தெரியும். இப்பொழுது எவ்வளவு
புத்திசாலியாகிவிட்டோம். மற்ற சத்சங்கங்களில் இதுபோன்ற
விஷயங்கள் கிடையாது. அவர்கள் சாஸ்திரங்கள், இராமாயணம்
ஆகியவற்றைப் படிக்கின்றார்கள். ஒரு காதால் வாங்கி இன்னொரு
காதால் வெளியேற்றிவிடுகின்றார்கள். எந்த பிராப்தியும் இல்லை.
யஞ்யம், தானம், தவம் முதலியவற்றை செய்து
கொண்டேயிருக்கின்றார்கள். அலைந்து கொண்டேயிருக்கின்றார் கள்.
பிராப்தி எதுவுமில்லை. இந்த உலகத்தில் யாருக்குமே சுகமில்லை.
இப்பொழுது பாபா முழு ஞானமும் அளித்திருக்கின்றார். அனைவருக்கும்
சுகம் சாந்தியை அளிக்கக்கூடியவர் ஒரே ஒரு பாபாதான். மனிதர்கள்
முற்றிலும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கின்றார்கள். ஹே!
துக்கத்தைப் போக்கி சுகத்தை தரக்கூடியவரே ! சத்கதி அளிப்பவரே !
வாருங்கள் என்று பக்திமார்க்கத்தைச் சேர்ந்தவர்களும் நினைவு
செய்து கொண்டேயிருக்கின்றார்கள். பாருங்கள் உலகம் எந்த நிலையில்
இருக்கின்றது. அனைவரும் துக்கத்தில்தான் இருக்கின்றார்கள். பாபா
யார் என்பது எந்த மனிதர்களுக்கும் தெரியவில்லை. பாபாவிடமிருந்து
என்ன ஆஸ்தி கிடைக்கின்றது என்பது எந்த மனிதர்களுக்கும்
தெரியவில்லை. அமைதிக்காக அலைந்து கொண்டேயிருக்கின்றார்கள்.
மனதிற்கு அமைதி வேண்டும் என்று கூறியது யார்? ஆத்மாதான்
கூறுகின்றது என்பது மனிதர்களுக்குத் தெரியாது. தேக அபிமானம்
உள்ளதல்லவா? சாது சன்னியாசிகள் முதலியோர் கூட துக்கத்தில்
உள்ளார்கள். அனைவரும் சாந்தியை விரும்புகின்றார்கள். நோய்
முதலியவை சாது சன்னியாசி களுக்குக் கூட வருகின்றது.
விபத்துக்கள் கூட நடக்கின்றது. உலகத்தில் துக்கத்தைத் தவிர வேறு
எதுவுமே இல்லை. இப்பொழுது நீங்கள் புத்திசாலியாகி விட்டீர்கள்.
நாடகத்தில் சுகம், துக்கத்தின் விளையாட்டு, புதிய உலகம், பழைய
உலகம் என்பது உருவாக்கப்பட்டது. பாபா உங்களுடைய புத்தி என்ற
பூட்டைத் திறந்துவிட்டிருக்கின்றார். மற்ற மனிதர்களின்
புத்திக்கு கோத்ரேஜ் பூட்டு போடப் பட்டிருக்கின்றது. முற்றிலும்
தமோபிரமானமான புத்தியாக உள்ளது. குழந்தைகள் நீங்கள் வரிசைக்
கிரமமான முயற்சியின் அனுசாரமாகத்தான் புரிந்துள்ளீர்கள்.
எல்லையற்ற தந்தை கிடைத் துள்ளார், அவர் நமக்கு இந்த உலகம்
எப்படி உருவாக்கப்பட்டுள்ளது என்ற நாடகத்தின ஆதி மத்ய இறுதியின்
ரகசியத்தைப் புரிய வைக்கின்றார். எப்பொழுது சுகம் உள்ளதோ
அப்பொழுது துக்கத்தின் பெயர் அடையாளம் கூட இருப்பதில்லை.
இப்பொழுது பாபாவிடமிருந்து சுகம் சாந்தி, செல்வத் திற்கான
ஆஸ்தியை அடைந்து கொண்டிருக்கின்றோம் என்பது குழந்தை களின்
புத்தியில் உள்ளது. சத்தியுக ஆரம்பத்திலிருந்து திரேதாயுக கடைசி
வரையில் எந்தவிதமான துக்கமும் கிடையாது. இப்பொழுது நீங்கள்
வெளிச்சத்தில் இருக்கின்றீர்கள். தன்னுடைய ராஜ்யத்தில் ஒருவர்
மற்றவரைக் காட்டிலும் உயர்ந்த பதவியடைய முயற்சி செய்கின்றீர்கள்.
இது எல்லையற்ற கல்வி சாலையாகும். எல்லையற்ற தந்தை
கற்பிக்கின்றார். அவர் தான் நம்முடைய எல்லையற்ற தந்தை அவருடைய
மகிமை எல்லையற்றது என்பது நமக்குத் தெரியும். அந்த உயர்ந்திலும்
உயர்ந்த தந்தை ஸ்ரீமத் தருகின்றார். மற்றபடி அசுர வழிப்படி
அனைவரும் ஒருவருக்கொருவர் துக்கத்தைத் தான் தருகின்றார்கள்.
நீங்கள் ஸ்ரீமத் படி அனைவருக்கும் சுகத்தை தர வேண்டும். இந்த
நாடகத்தில் நாம் அனைவரும் நடிகர்கள் என்பதை யாரும் உணரவில்லை.
இந்த நாடகத்தில் பாரதவாசிகளுக்குத் தான் முழுமையான நடிப்பு
உள்ளது என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் கூட இதற்கு
முன்னால் எதுவுமே தெரியாமல் தான் இருந்தீர்கள். இப்பொழுது
மூலவதனத் திலிருந்து, சூட்சும வதனம், ஸ்துல வதனம் முதலிய
அனைத்தையும் நீங்கள் தெரிந்து கொண்டீர் கள். உங்களுக்கு
முழுமையான ஞானம் உள்ளது. பரம்பிதா பரமாத்மா உங்களுக்கு இவர்
மூலமாக கற்பித்துக்கொண்டிருக்கின்றார். பாபா நமக்கு மூன்று
உலகத்தின் முழு ஞானத்தையும் அளித்துக் கொண்டிருக்கின்றார். இது
முள் நிறைந்த காடாகும். இப்பொழுது நாம் மனிதரிலிருந்து தேவதை,
முள்ளிலிருந்து மலராகிக்கொண்டிருக்கின்றோம். இங்கு சிறியவர்,
பெரியவர் அனைவரும் துக்கம் தருகின்றார்கள். கர்ப்பத்தில்
குழந்தை தன்னுடைய தாய்க்குத் துக்கத்தை தருகின்றது. இது மிகவும்
பழைய சீ.சீ உலகம். இந்த உலக சக்கரத்தை யாரும் தெரிந்து
கொள்ளவில்லை. நாம் எங்கிருந்து வந்தோம்? எங்கு செல்ல வேண்டும்?
எதையுமே அறிந்து கொள்ளாமல் இருக்கின்றார்கள். எல்லை யற்ற தந்தை,
அனைத்து சீதைகளுக்கும் ஒரே ஒருவர்தான் இராமர். அவர் நிராகாரமாக
உள்ளார். நீங்கள் அனைவரும் சீதைகள். பாபா மணமகன். அனைத்து
நாயகிகளுக்கும் ஒரே ஒரு நாயகன் தான். அனைவரும் பக்தர்களாக
உள்ளீர்கள். அனைத்து சீதைகளும் இராவணனின் சிறையில் சோக வனத்தில்
இருக்கின்றார்கள். உலகத்தின் அனைத்து மனிதர்களும் ஒரே ஒரு
பகவானைத்தான் நினைவு செய்கின்றார்கள். பகவான் தான் பக்தர்களை
பாதுகாப்பவர் என்று அழைக்கப்படுகின்றார். நீங்கள் அனைவரும்
இப்பொழுது பிரம்மாவின் வாய்வழி (ஞானம் கேட்டு) பிராமணர்களாக
உள்ளீர்கள். நமக்கு சிவபாபா கல்வி கற்றுத்தருகின்றார் என்பது
உங்களுக்குத் தெரியும். சிவபாபா சொர்க்கத்தைப் படைக்கும்
தந்தையாக இருக்கின்றார். சொர்க்கம் என்று சொன்னாலும் சரி,
தெய்வீக இராஜ்யம் என்று சொன்னாலும் சரி. அது சொர்க்க இராஜ்யம்
அல்லவா? லட்சுமி, நாராயணன் சொர்க்கத்தின் எஜமானன் அல்லவா?
இதைக்கூட நீங்கள் இப்பொழுதுதான் புரிந்தள்ளீர் கள். எப்பொழுது
இங்கு சொர்க்கம் இருந்ததோ அப்பொழுது லட்சுமி நாராயணனின்
ராஜ்யம்தான் இருந்தது. இப்பொழுது கலியுகம் ஆகும். இது
கலியுகத்தின் கடைசி நேரம் என்பதை மனிதர்கள் ஆழ்ந்த இருளில்
மூழ்கியிருக்கின்ற காரணத்தால் புரிந்து கொள்ளவில்லை. வினாசம்
எதிரிலேயே உள்ளது. சீதைகளாகிய உங்கள் அனைவருக்கும் சத்கதி
தரக்கூடிய வள்ளல் ஒரு இராமர் தான். சீதைகள் அனைவரும்
துர்க்கதியில் உள்ளார்கள். ஆனால் நாம் துர்க்கதியில் உள்ளோம்
என்பதை அவர்கள் புரிந்திருக்கின்றார்களா என்ன? தங்களுடைய
செல்வத்தின் போதையில் உள்ளார்கள். நமக்கு இவ்வளவு செல்வம்
உள்ளது, மாளிகை உள்ளது, சொத்துக்கள் உள்ளது என்ற போதையில்
உள்ளார்கள், ஆனால் இவை இந்த துக்கமான உலகம் மாறப்போகின்றது
என்பது யாருக்கும் தெரிய வில்லை. மரணம் எதிரிலேயே உள்ளது.
அனைத்துமே மண்ணோடு மண்ணாகப் போகின்றது. எதையெல்லாம் இந்த பழைய
உலகத்தில் பார்க்கின்றீர்களோ? அனைத்தும் வினாசம் ஆகப்போ கின்றது.
வினாசத்திற்காகத்தான் ஏற்பாடுகள் அனைத்தும் முழுமையாக
நடந்துக்கொண்டிருக் கின்றது. இதுதான் அதே மகாபாரதப்போர். அதே
கீதையின் பகவான். ஆனால் பாபாவினுடைய வாழ்க்கை வரலாற்றில்
குழந்தையின் பெயரைப் போட்டு விட்டார்கள். இப்பொழுது பாபா
உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார். கீதையில் பகவானின்
பெயரை மறைத்து விட்டார்கள். இதுவே மிகப்பெரிய தவறாகும்.
நமக்கு எந்த மனிதனோ, சாது சன்னியாசிகளோ கற்பிக்கவில்லை என்பது
உங்களுக்குத்தெரியும். சிவபாபா நமக்குக் கற்பிக்கின்றார். இவர்
தந்தையும் டீச்சரும், சத்குருவுமாக உள்ளார். அனைத்துமே அவர்தான்.
இதனை மறக்கக்கூடாது. அனைவருமே என்னுடைய குழந்தைகள், ஆனால் நான்
அனைவருக்குமா கல்வியைக் கற்றுத்தருகின்றேன்? நான் பாரதவாசி
குழந்தை களுக்குத்தான் மீண்டும் ராஜயோகத்தைக் கற்பிக்க
வந்துள்ளேன். பாரதவாசிகள் தான் சொர்க்கவாசிகளாக இருந்தார்கள்,
வைரத்தைப் போல இருந்தார்கள். இப்பொழுது சோழிக்குச் சமமாக
ஆகிவிட்டார்கள். வீட்டில் எவ்வளவு அசாந்தி உள்ளது. பாபா
எங்களுக்கு கோபம் வருகின்றது, குழந்தைகளை அடிக்க வேண்டியுள்ளது
என்று கூறுகின்றார்கள். நீங்கள் 5 விகாரங் களை பாபாவிற்கு தானம்
அளித்து விட்டீர்கள்; பிறகு இதை ஏன் செய்கின்றீர்கள்? இந்த
நேரம் அனைவருக்குள்ளும் 5 விகாரங்கள் என்ற கிரகணம்
பிடித்துள்ளது. தேக அபிமானம் என்ற பூதம் வருவதால் மற்ற
அனைத்தும் வந்துவிடுகின்றது. ஆத்ம அபிமானியாகிவிடுங்கள் என்று
பாபா கூறுகின்றார். சத்தியயுகத்தில் நாம் ஆத்ம அபிமானியாகத்தான்
இருந்தோம். இப்பொழுது உங்களுக்கு ஞானம் கிடைத்துள்ளது.
ஆத்மாவிற்கு இந்த சரீரம் பழையதாகிவிட்டது என்பதைப்
புரிந்துக்கொள்வார்கள். ஆயுள் முடிந்துவிட்டது இப்பொழுது பழைய
சரீரத்தை விட்டுவிட்டு புதியதை எடுக்க வேண்டும் என்பதைப்
புரிந்து கொள்வார்கள். (பாம்பைப்போல) பாம்பிற்கு ஒரு தோல்
பழையதாகிவிட்டால் அதனை விட்டுவிட்டு புதிய தோலை எடுத்துவிடும்.
இந்த உதாரணம் சத்திய யுகத்திற்காகதான். அங்கு நீங்கள்
அப்படித்தான் தேகத்தை விடுவீர்கள். துக்கமான விஷயங்கள் எதுவுமே
இருக்காது. இங்கு எவ்வளவு துக்கம் ஏற்படுகின்றது? அழுவது,
கூச்சலிடுவது போன்றவற்றைச் செய்கின்றார்கள். இப்பொழுது நீங்கள்
குழந்தைகள் தெரிந்திருக்கின்றீர்கள், எனவே சந்தோஷமாக ஒரு உடலை
விட்டு இன்னொன்றை எடுக்கின்றீர்கள். இந்த விஷயங்களை நீங்கள்
புரிந்துள்ளீர்கள். இங்கு எவ்வளவு புதிய குழந்தைகள்
வருகின்றார்கள் எதையாவது கொஞ்சமாவது
புரிந்துகொண்டிருக்கின்றார்களா? 2 நாட்கள், 4 நாட்கள் வந்து
கேட்கின்றார்கள், பிறகு சென்று மறந்துவிடுகின்றார்கள். ஆமாம்
நன்றாக கேட்டார்கள், மகிழ்ச்சியடைந்தார்கள் எனில், அவர்கள்
பிரஜையில் வருவார்கள். பிரஜைகள் கூட நிறைய உருவாகிக்
கொண்டிருக்கின்றார்கள். இது ஈஸ்வரனுடைய வீடு. நீங்கள்
ஈஸ்வரனுடைய வீடடில், அதாவது சபையில் அமர்ந்திருக் கின்றீர்கள்.
பரம்பிதா பரமாத்மா தன்னுடைய வீட்டை விட்டு வந்து இங்கு சாதாரண
உடலில் அமர்ந்துள்ளார். அங்கு பாபாவிற்கு அருகாமையில்
ஆத்மாக்கள் இருக்கின்றார்கள். இங்கு சங்கமயுகத்தில் பதீத
ஆத்மாக்களை பாவனமாக்க பாபா வந்துள்ளார். அவர் நிராகாரமான சிவன்
என்று சொல்லப்படுகின்றார். நிராகாரமான தந்தையைத்தான் ஓ! பகவானே
என்று அழைக் கின்றார்கள். இந்த லட்சுமி நாராயணரைக்கூட பகவான்
பகவதி என்று ஐரோப்பியர்கள் கூறு கின்றார்கள். இவர்களை அப்படி
ஆக்கியது யார்? இந்த தேவதைகளை 16 கலைகள் நிறைந்தவர் என்று
கூறுகின்றனர், பிறகு தம்மை எவ்வாறு கூறிக் கொள்கின்றனர்?
இவர்களும் மனிதர்கள்தான் என்பதை அவர்கள் உணரவில்லை. பாரதத்தில்
தான் இராஜ்யம் செய்து சென்றிருக்கின்றார்கள். அவர்களுக்கு
முன்னால் சென்று மகிமை பாடுகின்றார்கள். தன்னை கீழானவன், பாவி
என்றும் கூறுகின்றார்கள். கிருஷ்ணருடைய கோவிலுக்கும் சென்று
மகிமை பாடுகின்றார்கள். சிவனை மகிமை பாடுவதில்லை. அவருடைய மகிமை
தனிப்பட்டது. பையை நிறைத்து விடுங்கள் என்று வார்த்தையளவிற்கு
மட்டுமே கூறுகின்றார்கள். பிறகு அவர் போதை பானம்
அருந்தக்கூடியவர் என்றும் கூறுகின்றார்கள். மாமிசத்தை
உண்ணக்கூடியவர் என்றெல்லாம் கூறுகின்றார்கள். அங்கு மது,
மாமிசம் இவை யெல்லாம் எங்கிருந்து வர முடியும்? எதையுமே
புரிந்து கொள்வதில்லை. 8, 10 புஜங்கள் யாருக்காது எப்பொழுதாவது
இருக்குமா என்ன? இல்லற மார்க்கம் என்பதற்காகத்தான் 4 புஜங்கள்
காட்டப்பட்டுள்ளது. அதற்கு விஷ்ணு என்று பெயர்
கொடுக்கப்பட்டுள்ளது. லட்சுமி நாராயணன் சத்தியயுகத்தில் தான்
உள்ளார்கள். லட்சுமி நாராயனணுடைய அணைந்த ரூபத்தின் மூலமாகத்
தான் பாலனை நடக்கின்றது என்பது மனிதர்களுக்குத் தெரியாது.
சித்திரங்களில் லெட்சுமிக்கு நான்கு புஜங்கள் காட்டப்பட்டுள்ளன.
4 புஜங்கள் உடையவர்களின் குழந்தைகளுக்கும் 4 புஜங்கள் இருக்க
வேண்டுமல்லவா? எதையுமே புரிந்து கொள்வதில்லை. இப்பொழுது முழு
உலகத்தின் ஆதி, மத்ய, இறுதி ரகசியத்தைப் புரிந்து கொண்டீர்கள்.
பாபா வந்து பதீதமான உலகத்தை பாவனமாக்குகின்றார். ஹே! பதீத
பாவனரே ! வாருங்கள் என்று அழைக்கின்றார்கள். இப்பொழுது பரமாத்மா
எப்படி வந்து பதீத ஆத்மாக்களை பாவனமாக்குகின்றார்? பாபா
கூறுகின்றார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நான் தெய்வீக
ராஜ்யத்தை ஸ்தாபனை செய்திருந்தேன். பிறகு நீங்கள் தான் 84 பிறவி
எடுத்தீர்கள். இந்த ஞானம் இதற்கு முன்னால் உங்கள் புத்தியில்
இருக்க வில்லை. இந்த பிரம்மாவைப் பற்றியும் எதுவுமே தெரியாது.
இராதை, கிருஷ்ணரையும், லெட்சுமி நாராயணரையும் பூஜை
செய்கின்றார்கள். ராதை கிருஷ்ணர் தான் திருமணத்திற்கு பிறகு
லெட்சுமி நாராயணன் ஆகின்றார்கள் என்பது தெரியாது. எனவே தான்
இளவரசர் கிருஷ்ணர், இளவரசி இராதை என்று சொல்லப்படுகின்றது.
திருமணத்திறகுப் பிறகு தான் மகாராஜா மகாராணி ஆகின்றார்கள். யார்
ஆகிக்கொண்டிருக்கின்றார்களோ அவர்களுக்கே இது தெரியாது.
சிலருக்கு காட்சி கூட கிடைக்கின்றது ஆனால் எதையுமே
புரிந்துகொள்வதில்லை. பிறகும் கூட பக்தர்களின் பாவனையை அல்ப
காலத்திற்கு பூர்த்தி செய்வதற்காக நான் அவர்களுக்கு காட்சி
காண்பிக் கின்றேன். இங்குகாட்சிக்கான விஷயங்கள் இல்லை.
சாட்சாத்காரத்தில் மாயை பிரவேசமானால் பதவி கீழானதாகிவிடும்.
எங்களுக்கு சிவபாபாவின் சாட்சாத்காரம் வேண்டும் என்று
சொல்கின்றார்கள். மின்மினிப்பூச்சி எவ்வளவு சிறியதாக உள்ளது.
ஆனால் அதனைப் கண்ணால் காண முடிகின்றது. ஆத்மா அதனைக்காட்டிலும்
மிகச்சிறிய புள்ளியாக உள்ளது. எப்படி ஆத்மா வின் ரூபமோ? அப்படி
பரமாத்மாவும் இருக்கின்றார். சாட்சாத்காரம் கிடைக்க
வேண்டுமென்றால் அந்த சிறிய புள்ளிதான் கிடைக்கும். இவர் சிறிய
புள்ளியானவர் இரண்டு புருவங்களுக்கு மத்தியில் இருக்கின்றார்.
ஆத்மாவின் சாட்சாத்காரம் கிடைத்தாலும், எதையுமே புரிந்து கொள்ள
முடியாது.
இப்பொழுது நாம் சிவபாபாவினுடைய குழந்தை என்பது உங்களுக்குத்
தெரியும். அனைத்து பிரம்மாகுமார், பிரம்மா குமாரிகளும்
சிவபாபாவிடம் இருந்து ஆஸ்தியடைந்து கொண்டிருக் கின்றோம்.
இதுதான் நமது நோக்கம். மாணவர்கள் அல்லவா? பாபாவிடமிருந்து
இராஜயோகத்தைக் கற்க வந்துள்ளோம் என்று நீங்கள் கூறகின்றீர்கள்.
இதுதான் நோக்கம் என்பதை குழந்தைகள் மறந்துவிடக்கூடாது. பக்தி
மார்க்கத்தில் பக்தர்கள் தேவதைகளின் சித்திரத்தை உடன்
வைத்திருக் கின்றார்கள். நீங்கள் இங்கு மூம்மூர்த்தி படத்தை
பாக்கெட்டில் வைத்திருக்க வேண்டும். இந்த சிவபாபா மூலமாக நான்
லெட்சுமி நாராணனன் ஆகிக்கொண்டிருக்கின்றேன். நல்லது.
இனிமையிலும் இனிமையான, வெகுகாலத்திற்குப் பிறகு
கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்குத் தாய் தந்தையாகிய
பாப்தாதாவின அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) சிவபாபாவிடம் விகாரங்களை தானம் செய்த பிறகு ஒருபோதும்
திரும்பப் பெறக்கூடாது. தேக அபிமானம் என்ற பூதத்திடம் இருந்து
தன்னை காப்பாற்றிக்கொள்ள வேண்டும். இந்த பூதத்தினால் தான்
அனைத்து பூதமும் வந்துவிடும். எனவே ஆத்ம அபிமானியாக பயிற்சி
செய்யவும்.
2) காட்சி பார்க்கும் ஆசை வேண்டாம். நோக்கத்தை முன்னால் வைத்து
முயற்சி செய்யவும். ஸ்ரீமத்படி அனைவருக்கும் சுகம் கொடுக்க
வேண்டும்.
வரதானம்:
செய்விப்பவரின் (இறைவன்) நினைவின் மூலமாக, சேவையில்
சதா பணிவுடன் காரியங்களை (கர்மா) செய்யக்கூடிய கர்மயோகி ஆகுக.
எந்த ஒரு காரியத்தையும், கர்மயோகியின் நிலையில் மாற்றம்
செய்யுங்கள். வெறும் காரியம் செய்பவர்களாக இல்லாமல்,
கர்மயோகியாக இருங்கள். கர்மம் என்றால் நடைமுறை செயல், யோகம்
என்றால் பரமார்த்தம் (இறை நினைவில் இறைவன் பொருட்டு செய்யும்
உயர்ந்த செயல்) - இவை இரண்டிற்கும் (கர்மம் மற்றும் யோகம்)
இடையே சமநிலை இருத்தல் வேண்டும். உடல் ரீதியான தேவைகளைக்
கவனிக்கின்றேன் என்று, ஆத்மாவிற்கான தேவைகளை மறந்துவிடா தீர்கள்.
எந்த ஒரு காரியமாக இருந்தாலும் அது ஈஸ்வரிய சேவைக் கானதாக
இருக்கட்டும். இதற் காக, சேவையில் நான் ஒரு கருவி (நிமித்தம்)
மட்டுமே அல்லது நான் செயல்படுபவன் (அவரே செய்விப்பவர்) என்ற
மந்திரம் சதா நினைவில் இருக்கட்டும். செய்விப்பவரின் நினைவை
மறக்க வில்லை எனில், சேவையில் எப்போதும் பணிவு என்பது நிறைந்து
இருக்கும்.
சுலோகன்:
சேவையிலும் உறவு-தொடர்புகளிலும் தடைகள் ஏற்படுவதற்கு காரணம் -
பழைய சமஸ்காரங்களே (குணங்களே); அந்த பழைய குணங்களின் மீது
வைராக்கியம் (பற்றற்ற நிலை) வைய்யுங்கள்.
அவ்யக்த சமிக்கை: சதா ஆடாத-அசையாத (உறுதியான),
ஒரே சீரான மனோநிலையை அனுபவம் செய்யுங்கள்.
அனைத்தையும் விட உயர்ந்த சிம்மாசனம் பாப்தாதாவின் இதய
சிம்மாசனதாரியாக ஆகுவதாகும். ஆனால், இந்த சிம்மாசனத்தில்
அமர்வதற்கு முதலில் உங்களுக்கு அசைவற்ற, சீரான மனோநிலை (ஏக்ரஸ்)
என்ற சிம்மாசனம் தேவை. அழிவற்ற சிம்மாசனத்தில் (நெற்றியின் இரு
புருவ மத்தியில்) அமரும் பயற்சி இருந்தால்தான், உங்களால் அந்த
ஏக்ரஸ் நிலையினுடைய சிம்மாசனத்தில் நிலைத்திருக்க முடியும். ஒரு
தபஸ்வி எப்படி எப்போதும் தனது ஆசனத்தில் அமர்ந்திருக்கிறாரோ,
அதேபோல் நீங்கள் உங்கள் ஏக்ரஸ்-ஆத்ம நிலை என்ற ஆசனத்தில்
வீற்றிருங்கள். இந்த ஆசனத்தை விடாமல் இருந்தால்தான், உங்களுக்கு
அந்த உயர்ந்த சிம்மாசனம் கிடைக்கும்.