21.06.26    காலை முரளி            ஓம் சாந்தி 15.11.2010      பாப்தாதா,   மதுபன்


சுயமாற்றத்தின் வேகத்தை தீவிரப்படுத்தி சமஸ்காரம், சுபாவத்தின் முடிவு விழாவைக் கொண்டாடுங்கள், ஒவ்வொரு எண்ணம், சொல் மற்றும் கர்மத்தில் பிரம்மா பாபாவைக் காப்பி (நகல்) பண்ணுங்கள்

இன்று பாப்தாதா அனைவருடைய நெற்றியில் மூன்று பாக்கியத்தினுடைய ஜொலிப்பின் அடையாளங்களைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். முதலாவது தந்தை மூலமாக வளர்ப்பின் (பாலனை) பாக்கியம், இரண்டாவது ஆசிரியர் ரூபத்தில் கல்வியின் பாக்கியம், மூன்றாவது சத்குரு மூலம் வரதானங்களின் பாக்கியம். மூன்று பாக்கியங்களும் ஜொலித்துக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஒவ்வொருவருடைய நெற்றியும் மூன்று பாக்கியங்களினால் ஜொலித்துக் கொண்டு இருக்கின்றது.அப்பேற்பட்ட பாக்கியம் வேறு யாருடைய நெற்றியிலும் ஜொலிப்பதைப் பார்க்க முடியாது. ஆனால், உங்கள் அனைவருடைய நெற்றி பாக்கியத்தினால் ஜொலித்துக் கொண்டு இருக்கிறது. நீங்கள் அனைவரும் கூட தங்களுடைய பாக்கியத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றீர்கள் தானே! பாக்கியமோ அனைவருக்கும் கிடைத் திருப்பதை பாப்தாதா பார்த்தார்கள், ஆனால், பாக்கியத்தின் ஜொலிப்பு அனைவருக்கும் ஒன்றுபோல் இல்லை. சிலருடைய ஜொலிப்பு மிகவும் பிரகாசமானதாக இருக்கிறது, சிலருடைய ஜொலிப்பு சிறிது குறைவாகத் தெரிகிறது. பாப்தாதா அனைவருக்கும் ஒன்றாக, ஒன்றுபோலத் தான் பாக்கியத்தை வழங்கியுள்ளார்கள். கல்வியும் ஒரே கல்வி தான் படிப்பிக்கின்றார்கள். பாலனை ஒன்றுபோலத்தான் கொடுத்து இருக்கின்றார்கள் மற்றும் வரதானம் கூட ஒன்றுபோலத் தான் கொடுத்து இருக்கின்றார்கள். ஆதி இரத்தினங்கள் மற்றும் பின்னால் வந்திருப்பவர்கள் அனைவருக்கும் ஒரே முரளியின் மூலம் தான் பாலனை கிடைக்கிறது, கல்வி கிடைக்கிறது. வரதானம் கூட அனைவருக்கும் ஒன்றுபோல் தான் கிடைக்கிறது. ஆதிரத்தினங்களுக்கு தனி முரளி அல்ல, ஒன்றாகத் தான் இருக்கிறது. ஆனால், ஜொலித்துக் கொண்டிருக்கும் பாக்கியமானது வரிசைக்கிரமமாக தென்பட்டுக் கொண்டிருக்கிறது. தந்தையினுடைய அன்பின் பாலனை அனைவருக்கும் ஒன்றுபோலத்தான் கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொருவருடைய வாயி லிருந்து என்னுடைய பாபா என்பது தான் வெளிப்படுகிறது, முன்னால் வந்தவர்களாக இருந்தாலும், பின்னால் வந்தவர்களாக இருந்தாலும், ஒவ்வொருவரும் தன்னுடைய அதிகாரத் தோடு என்னுடைய பாபா என்று கூறுகின்றார்கள். தந்தையிடம் இருந்து அன்பு கிடைத்துள்ளதா? என்று யாரிடம் வேண்டு மானாலும் கேளுங்கள். எனக்கு தந்தையின் அன்பு அனைவரையும் விட அதிகமாகக் கிடைக்கிறது என்று பெருமையுடன் கூறுகின்றார்கள். இவர் என்னுடைய பாபா என்று உள்ளத்தில் இருந்து சொல்பவர்கள் எந்த பெருமித்துடன் சொல்கின்றார்கள்? எனக்கு அனைவரை யும் விட அதிகமான அன்பு கிடைக்கிறது, பாபாவினுடைய அன்பு முதலில் என் மீது தான் உள்ளது என்று சொல்கின்றார்கள். ஏனெனில், அன்பு தான் தந்தையின் பாலனை ஆகும். என்னுடைய பாபா என்று ஏற்றுக் கொண்டதனால் நீங்கள் பாபாவினுடையவராக ஆகிவிட்டீர்கள் மற்றும் தந்தை உங்களுடையவராக ஆகிவிட்டார்.

இன்று நீங்கள் அனைவரும் வந்திருக்கின்றீர்கள் என்றால் அன்பின் விமானத்தில் வந்துள்ளீர்கள் தானே. அன்பு அனைவரையும் இங்கே ஈர்த்துக் கொண்டு வரவழைத்துள்ளது. அனைவரும் அன்போடு ஓய்வாக வந்து சேர்ந்துவிட்டீர்கள். இந்த பரமாத்ம அன்பு இப்பொழுது சங்கமயுகத்தில் மட்டும் கிடைக்கிறது. எதிர்காலத்தில் தேவ ஆத்மாக்களின் அன்பு கிடைக்கிறது, ஆனால், பரமாத்ம அன்பு இந்த ஒரு பிறவியில் கிடைக்கிறது. எனவே, பாப்தாதாவும் கூட அப்பேற்பட்ட தகுதியான ஆத்மாக்களைப் பார்த்து என்ன கூறுகின்றார்கள்? ஆஹா குழந்தைகளே ஆஹா! கோடியில் தகுதியான ஒருவராக நீங்கள் தான் ஆகியிருக்கின்றீர்கள் மற்றும் ஒவ்வொரு கல்பமும் நீங்கள் தான் தகுதியானவர்களாக ஆகுவீர்கள். போகும்பொழுதும், வரும்பொழுதும் அப்பேற்பட்ட போதை உள்ளது தானே! உங்களுடைய உள்ளம் கூட ஆஹா என்னுடைய பாக்கியம் என்ற இந்த பாடலைப் பாடுகிறது. இந்த பாடலைப் பாடிக் கொண்டே இருக்கின்றீர்கள் தானே! இந்த அனைத்து குழந்தை களும் அதிகாரிகள் என்று தந்தைக்கும் கூட மகிழ்ச்சி ஏற்படுகிறது. எவரும் தன்னை பரமாத்ம அன்பில் குறைந்தவராக நினைப்பதில்லை. அன்பில் அனைவரும் தேர்ச்சி பெற்றவர்கள். அனை வரையும் விட அதிகமான அன்பு யாருடையது? என்று பாப்தாதா கேட்கின்றார்கள். யாருடையது என்று கூறுவீர்கள்? நம்முடைய அன்பு குறைந்தது அல்ல என அனைவரும் தெரிந்து இருக் கின்றீர்கள். அன்பின் பாடத்தில் அனைவரும் தேர்ச்சி பெற்று இருப்பதால் என்னுடைய பாபா என்று சொல்கின்றீர்கள் என்று தந்தையும் கூறுகின்றார். எவ்வளவு அன்பு உள்ளது என்பதை ஒவ்வொரு வரும் அறிந்து இருக்கின்றீர்கள். அன்பில் அனைவரும் தேர்ச்சி பெற்றுவிட்டனர் என்பதை பாப்தாதா பார்த்தார்கள், ஆனால், இப்பொழுது சமயத்தின் அனுசாரம் சுயமாற்றம் அவசியமானதாக உள்ளது. சுயமாற்றம் மட்டும் அவசியமானது, இந்த சமயம் சுயமாற்றத்தில் விசேசமாக சமஸ்கார மாற்றம், சுபாவ மாற்றம் ஆகிய இவை அவசியமானது என்பதை விசேசமாக கூறியும் உள்ளார்கள்.

இப்பொழுது சுயமாற்றத்தின் வேகம் தீவிரமாக இருக்க வேண்டும். செய்து கொண்டும் இருக்கின்றீர்கள், கவனமும் உள்ளது, ஆனால், வேகம் இப்பொழுது தீவிரம் ஆகவேண்டும். புது வருடத்தில் சுயமாற்றம், சமஸ்கார மாற்றம் செய்தே ஆகவேண்டும் என்று தந்தையிடம் முன்பு வாக்குறுதி அளித்தது பாப்தாதாவிற்கு நினைவிருக்கிறது. ஆனால், சமஸ்கார மாற்றத்தில் எவ்வளவு வேகமான முயற்சி தேவையோ, அந்த வேகம் இன்னும் அதிகரிக்க வேண்டும் என்பதை பாப்தாதா பார்த்தார்கள். காலத்தின் தேவைக்கேற்ப, எவ்வளவு வேகமான மாற்றம் தேவையோ, அந்த அளவிற்கு ஒவ்வொருவரின் முயற்சியும் தீவிரமாக இருக்கிறதா அல்லது இன்னும் அதிகமாக இருக்க வேண்டுமா என்பதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? ஏனெனில், காலத்திற்கு ஏற்ப, காலத்தில் மாற்றங்கள் வேகமாக நடந்து வருகின்றன. எனவே, ஒரு சங்கல்பம் செய்த மாத்திரத்திலேயே அது நடந்து முடிய வேண்டும் - அப்போதுதான் உங்களுடைய மாற்றமும் தீவிரமானதாக இருக்கும். தவறான (யதார்த்தமற்ற) சங்கல்பங்களானது ஒரு காகிதத்தில் புள்ளி வைப்பது போல உடனடியாக முடிவுக்கு வரவேண்டும். ஒரு புள்ளி வைக்க எவ்வளவு நேரம் ஆகும்? தவறான அல்லது வீணான சங்கல்பம் அவ்வளவு வேகமாக மாற்றமடைய வேண்டும். பாப்தாதா விரும்பும் இந்த வேகத்தை உங்களால் கொண்டுவர முடியுமா? தைரியம் இருக்கிறதா? இப்பொழுதில் இருந்து இவ்வளவு வேகத்தில் என்னால் முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று நினைப்பவர்கள் கை உயர்த்துங்கள், தைரியம் உள்ள குழந்தைகளுக்கு தந்தையின் உதவி கிடைக்கும். குழந்தைகளின் இந்த உறுதியான சங்கல்பத்தைப் பார்த்து பாப்தாதா வாழ்த்துகள் கொடுக்கின்றார்கள். செய்தே ஆகவேண்டும் என்பது தான் உறுதியான சங்கல்பத்தின் அடையாளம் என்று பாப்தாதா முன்பே கூறியிருக்கின்றார்கள். எனவே, இன்றைய சபையில் அனைவரும் இந்த உறுதியான சங்கல்பத்தை செய்துள்ளீர்கள் அல்லவா! நீங்கள் பார்த்தீர்கள், தாதிமார்கள் பார்த்தார்கள், அனைவரும், பெரும்பான்மையானவர்கள் கை உயர்த்தினீர்கள். பார்த்தீர்களா! அப்படியானால், நாளை முதலே சுபாவம் மற்றும் சமஸ்காரங்களை முடிவுக்குக் கொண்டு வரும் விழாவைக் கொண்டாட வேண்டும். கொண்டாடலாமா? கை தூக்கியவர்கள் மீண்டும் கைகளை உயர்த்துங்கள், விழாவைக் கொண்டாடலாமா? இந்த விழாவை மிகவும் கோலாகலமாகக் கொண்டாடுங்கள். இலட்சியத்தை தைரியமாக வைத்தது போல, இலட்சணங்களையும் தைரியமாக வைத்தால், இது ஒன்றும் பெரிய விசயம் அல்ல. தந்தைக்கு சமமாக ஆகவேண்டும் என்பது தான் இலட்சியம் எனும்போது, இப்போது இலட்சியத்தையும் இலட்சணத்தையும் ஒன்றாக்க வேண்டும். பிரம்மா பாபாவை பின்பற்றுங்கள். எந்தவொரு சங்கல்பம், சொல், செயல் செய்தாலும், முதலில் அதை பிரம்மா பாபாவுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். நகல்(காப்பி) செய்யுங்கள். உலகத்தில் காப்பி அடிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது, ஆனால், பிரம்மா பாபாவை நகல் செய்யுங்கள் என்று பாப்தாதா கூறுகின்றார்கள். நிராகாரமான தந்தைக்கு உடல் இல்லை என்பதால், அவருக்கு உடல் உணர்வு என்ன இருக்கும்! ஆனால், பிரம்மா பாபா தேகதாரியாக இருந்துள்ளார். உண்மையில் பாருங்கள், யார் சமர்ப்பணம் ஆகியிருக்கின்றீர்களோ, சமர்ப்பணம் ஆகக்கூடியவர்கள் கை உயர்த்துங்கள், யார் சமர்ப்பணம் ஆனவர்களோ, அவர்கள் கை உயர்த்துங்கள். சமர்ப்பணம் ஆனபோது என்ன சங்கல்பம் செய்தீர்கள்? பாபா, இந்த உடல், மனம், செல்வம் அனைத்தும் உங்களுடையது. இப்படித்தானே செய்தீர்கள்? செய்தீர்களா? செய்தீர்களா? இதில் கை உயர்த்துங்கள். இப்பொழுது எனது என்பது எதுவுமல்ல, உடலும் எனதல்ல, செல்வமும் எனதல்ல என்று சமர்ப்பணம் செய்துவிட்டீர்கள். பிரம்மா பாபா தன் சரீரத்தை சேவைக்காக பாபாவிற்கு அர்ப்பணித்தார், இந்த சரீரம் என்னுடையது அல்ல, சேவைக்கானது என்பதை பிரம்மா பாபா அறிந்திருந்தார். எனவே, நீங்கள் உடல், மனம், பொருள் ஆகிய மூன்றையும் அர்ப்பணித்த போது, உங்கள் சரீரம் பாபாவின் சேவைக்காக நிமித்தமாக உள்ளது. பிரம்மா பாபாவின் சரீரம் சேவைக்காக இருந்தது போல, உங்கள் சரீரம் உங்களுடையது அல்ல, சேவைக்கானது. அப்படி யிருக்க, இந்த தேக அபிமானம் அல்லது தேக உணர்வின் சமஸ்காரம் என்ன உள்ளதோ, அது இருக்கலாமா? இந்த உடல் உலக சேவைக்கானது, என்னுடையது அல்ல, பாபா எனக்கு சேவைக்காகக் கொடுத்துள்ளார் என்பதை நினைவில் வைத்திடுங்கள். தேக உணர்வு மற்றும் தேக அபிமானம், தேக அபிமானம் அதிக நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. தேக உணர்வு அதைவிட இலேசானது. ஆனால், இரண்டையுமே கொடுத்துவிட்டீர்கள். ஃபார்ம் நிரப்பும்போது என்ன எழுது கிறீர்கள்? டீச்சர்களே, நீங்கள் ஃபார்ம் நிரப்பச் செய்கிறீர்கள் அல்லவா, அதில் என்ன எழுதச் சொல்கிறீர்கள்? என்னுடைய இந்த வாழ்க்கை இப்போது சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது என்று எழுதச் சொல்கிறீர்கள். பிராமணர்களாக ஆகியுள்ள அனைவரும் தந்தையிடம் செய்த வாக்குறுதியும் இதுதான் - உடல், மனம், பொருள் தந்தையினுடையது, என்னுடையது அல்ல. எனவே, உருவாகும் இந்த பழைய சமஸ்காரங்களானது தேக உணர்வு அல்லது தேக அபிமானத் தினால் தான் ஏற்படுகின்றன. ஆகையினால் தான் இன்றும் கூட சமஸ்காரங்களை முடிவுறச் செய்வதற்கான வாக்குறுதியை அளித்துள்ளீர்கள். ஏனெனில், தந்தையை பிரத்யட்சம் செய்வதில் இதுவே தடைகளை ஏற்படுத்துகிறது. தந்தையை பிரத்யட்சம் செய்ய வேண்டும் என்ற இந்த ஊக்கம் அனைவருக்குள்ளும் இருக்கிறது. தந்தையை பிரத்யட்சம் செய்ய வேண்டும் என்பதை நீங்களும் கூறிக்கொண்டே இருக்கின்றீர்கள், பாப்தாதா கேட்டுக்கொண்டே இருக்கின்றார்கள். இப்பொழுதுவரை பிரம்மா குமாரிகள், பிரம்மா குமாரர்கள் பிரத்யட்சம் ஆகியிருக்கின்றனர், பகவான் தந்தை வந்துவிட்டார் என்ற தந்தையின் வெளிப்பாடு இன்னும் மறைமுகமாகவே உள்ளது. முயற்சி செய்து கொண்டிருக்கின்றீர்கள், ஆனால், நம்முடைய தந்தை வந்துவிட்டார், பகவானின் மகாவாக்கியம், பிரம்மா குமாரிகளின் வாக்கியம் அல்ல என்ற இந்த சப்தம் பரவ வேண்டும். இந்த பிரத்யட்சதா இப்போது நடந்தே தீரவேண்டும். இந்த சுபாவம், சமஸ்காரங்கள் மாறுவதன் மூலம் உங்கள் ஒவ்வொருவரின் முகம் மற்றும் நடத்தையின் மூலம் பிரத்யட்சம் ஏற்படும். தந்தையை பிரத்யட்சம் செய்ய வேண்டும், செய்து கொண்டிருக்கின்றீர்கள், ஆனால், பகவான் வந்துவிட்டார், தந்தை வந்துவிட்டார் என்ற குரல் அனைவரின் காதுகளிலும் ஒலிக்க வேண்டும், நடக்க வேண்டும் அல்லவா! நடக்க வேண்டும் என்றால் கை உயர்த்துங்கள், நடக்க வேண்டுமா? கை மிகவும் நன்றாக உயர்த்தினீர்கள். அனைவரின் மனதிலும் ஈடுபாடு இருப்பதைக் கண்டு பாப்தாதா மகிழ்ச்சியடைகின்றார்கள், மேலும், இது நடந்தே தீரும். இதற்காக, நாளை முதல் சமஸ்காரம் மற்றும் சுபாவத்தை மாற்றம் செய்வீர்கள், அதற்கான சாதனம் என்னவென்றால் - பிராமணர்களாகிய ஒவ்வொருவரும் தங்களது சார்ட்டில் சுபபாவனை மற்றும் சுபவிருப்பம் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். உலகத்தினரிடம் உங்களால் எவ்வளவு நேரம் சுபபாவனை மற்றும் சுபவிருப்பம் வைக்க முடியும்? என்று ஒரு பணி கொடுக்கப்பட்டது, உங்களால் வைக்க முடியும் என்று அவர்களுக்கு சொல்லப்பட்டது எனும்பொழுது, உங்களால் கண்டிப்பாக முடியும் அல்லவா! ஒரு ஆத்மாவின் மீது சுபபாவனை மற்றும் சுபவிருப்பம் இல்லாத சமயத்திலேயே, அவருடைய சுபாவ சமஸ்காரம் எதிர்க்கிறது. எனவே, நீங்களும் அமிர்தவேளையில் இருந்தே, நான் ஒவ்வொரு ஆத்மாவின் மீதும் சுபபாவனை மற்றும் சுபவிருப்பம் வைத்தே தீருவேன் என்று சங்கல்பம் செய்யுங்கள், அப்பொழுதே மாற்றம் செய்தே ஆகவேண்டும் என்று என்ன சங்கல்பம் செய்துள்ளீர்களோ, அதை முழுமையாக நிறைவேற்ற முடியும். விசயங்கள் வரும், விசயங்களின் வேலை வருவது, அது மாயை அல்லவா! மேலும், உங்களுடைய வேலை வெற்றி அடைவதாகும். எனவே, நாளை தங்களுக்குள் குழுக்களை உருவாக்கி, நிமித்தமாக இருப்பவர்களுடன் ஆன்மிக உரையாடல் செய்து, செய்த சங்கல்பத்தை நடைமுறையில் எப்படி கொண்டு வருவது என்று கலந்துரையாடுங்கள். முடிந்துவிட்டது, முற்றுப்புள்ளி வைத்துவிடுங்கள். கை உயர்த்தினீர்கள் அல்லவா! முன்னால் இருப்பவர்கள் கை உயர்த்தினீர்கள், எனவே, நீங்கள் நிமித்தமாக ஆகவேண்டும். ஆரம்பத்தில் பிரம்மா பாபாவிற்கு முன் எத்தனை விதமான சமஸ்காரங்கள் கொண்டவர்கள் வந்தார்கள், ஆதியில் பிரம்மா பாபா எத்தனை சமஸ்காரங்களின் விளையாட்டு களைப் பார்த்தார்! ஆனால், தந்தையின் ஒத்துழைப்போடு முன்னேறி, மற்றவர்களையும் முன்னேற்றிக் கொண்டே இருந்தார், அதன் விளைவாக இன்று எண்ணிக்கை எவ்வளவு அதிகமாக உயர்ந்துள்ளது! அசைக்கக்கூடிய விசயங்கள் வந்தபோதிலும் அவர் அசையாமல் இருந்தார். அதன் விளைவாக எத்தனை சென்டர்கள் திறக்கப்பட்டுள்ளன, எத்தனை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன!

இப்போது எத்தனை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன? நடந்துள்ளன அல்லவா! இந்த ஒட்டுமொத்த பலனும் பிரம்மா பாபாவின் தைரியத்தினால் வந்ததாகும். முதலில் பிரம்மா பாபா தனித்து இருந்தார், நீங்கள் பிறகு வந்தீர்கள், ஆனால், அவர் தனி ஆளாக தைரியம் வைத்து முன்னேறினார். அதன் நடைமுறை பலனாக நீங்கள் அனைவரும் இன்று துணையாக இருக் கின்றீர்கள். எனவே, தைரியம் இருக்கிறது அல்லவா! பிரம்மா பாபா தனி ஆளாக தைரியம் வைத்தார், நீங்கள் நிறைய தோழர்கள் இருக்கின்றீர்கள்! எனவே, தந்தையைப் பின்பற்றுங்கள். அனைவரும் தங்களை பிரம்மா பாபாவின் குழந்தைகள், துணையாக இருக்கும் குழந்தைகள் என்று உணர்கின்றீர்கள் அல்லவா, ஒன்றாக இருக்கின்றோம், ஒன்றாகச் செல்வோம் மற்றும் பிரம்மா பாபாவுடன் இணைந்து இராஜ்யத்திற்கு வருவோம். எனவே, இப்போதுதான் சமயம், பிரம்மா பாபா தைரியம் வைத்தார், அதன் பலனை நீங்கள் பார்த்துக் கொண்டு இருக்கின்றீர்கள், இவ்வளவு பெரிய குழுவாக நீங்களும் தைரியமாக அடியெடுத்து வைத்தால், நடக்க முடியாதது என்ன உள்ளது! கல்ப கல்பமாக நடந்துள்ளது, நடந்தே தீரும்.

எனவே, தந்தை இப்போது என்ன விரும்புகின்றார் என்பது கூறப்பட்டுவிட்டது. நீங்கள் அனைவரும் ஒரே ஒரு விசயத்தை மட்டும் செய்யுங்கள், அந்த ஒரு விசயம் - சாதாரண முயற்சியை தீவிர முயற்சியாக மாற்றுங்கள். எங்கெங்கு அலட்சியம் ஏற்படுகிறது என்பதை பாப்தாதா பார்த்தார்கள். எல்லாம் நடந்துவிடும், வெற்றி நமது பிறப்புரிமை என்று ஞானத்தின் கணக்குப்படி நிச்சயம் உள்ளது, ஆனால், அலட்சியத்திலும் இதே வார்த்தைகள்தான் வருகின்றன - நமது வெற்றி நிச்சயம் தான், அது ஏற்கனவே ஏற்பட்டுவிட்டது, எந்த வேலையும் நிற்கவில்லை, நடந்தே தீரும் என்று கூறுவது அலட்சியத்தின் வார்த்தைகளாகும். ஒன்று இவை முயற்சிக்கான வார்த்தைகள், மற்றொன்று இதுவே அலட்சியத்திற்கான வார்த்தைகளாகவும் இருக்கின்றன. எந்த வேலையும் நிற்காது, நடந்தே தீரும் . . . - இது அலட்சியம், இந்த சமஸ்காரத்தை சோதனை செய்ய வேண்டும். அலட்சியத்தின் அடையாளம் என்னவென்றால், அவர்களின் வாழ்க்கையில் சிறிய சிறிய விசயங் களில் கூட சோர்வு காணப்படும். முகத்தில் அந்த மகிழ்ச்சியின் ஜொலிப்பு தென்படாது. சேவை யின் மூலம் புண்ணியம் உருவாகிக் கொண்டு இருக்கின்றது என்றால் முகத்தில் மகிழ்ச்சி இருக்க வேண்டும். ஏதோ ஒரு வகையான சோர்விற்குக் காரணம் ஏதோ ஒரு விசயத்தில் உள்ள அலட்சியமே ஆகும். செய்யத்தான் வேண்டும் எனும்போது, மகிழ்ச்சியோடு செய்யுங்கள். உங்கள் முகம் சேவை செய்ய வேண்டும், உங்கள் நடத்தை சேவை செய்ய வேண்டும். இன்று சமஸ்காரங் களை முடிவுக்குக் கொண்டு வரும் பெரும்பான்மையினரின் கைகளைக் கண்டு பாப்தாதா மீண்டும் மீண்டும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

நல்லது, இந்த குரூப்பில் யாரெல்லாம் முதன்முறையாக வந்திருக்கின்றீர்களோ, அவர்கள் எழுந்திருங்கள். பாருங்கள், எத்தனை பேர் உள்ளனர்? நிறைய பேர் உள்ளனர். கை அசைத்திடுங்கள். யார் முதன்முறையாக வந்திருக்கின்றீர்கள், அவர்களுக்கு தன்னுடைய தந்தையுடன் சந்திப்பதற் கான வாழ்த்துக்கள். எனவே, விசேசமாக சமயத்தின் அனுசாரம் இப்பொழுது நீங்கள் தீவிர முயற்சி செய்ய வேண்டியதாக உள்ளது மற்றும் யார் தீவிர முயற்சி செய்வார்களோ, தளர்வாக, மந்தமாக அல்ல, அவர்கள் கடைசியில் வந்தாலும் வேகமாகவும்(லாஸ்ட் ஸோ ஃபாஸ்ட்) மற்றும் வேகமான தில் இருந்து முதலாவதாக(ஃபாஸ்ட் ஸோ ஃபர்ஸ்ட்) வந்துவிடுவார்கள் என்பதையே பாப்தாதா கூறுகின்றார்கள். அத்தகைய அதிசயம் செய்ய வேண்டும். வாய்ப்பு உள்ளது. நாமோ கடைசியில் வந்திருக்கின்றோம் என்று நினைக்காதீர்கள், அவ்வாறு இல்லை, வேகமாக செல்ல முடியும். ஆனால், ஒவ்வொரு நேரமும் தீவிர முயற்சி செய்தே ஆகவேண்டும். மாறியே தீரவேண்டும். லாம், லாம் என்பது கூடாது, பார்க்கலாம், யோசிக்கலாம் . . . லாம், லாம் என்பது கூடாது. நன்றாக உள்ளது தங்கள் வீடு, வள்ளலின் வீடு நன்றாக இருக்கும் அல்லவா! எனவே, அனைத்து சகோதர, சகோதரிகளும் உங்களை வரவேற்கின்றார்கள். நல்லது.

இன்று நாலாபுறங்களிலும் உள்ள பிராமண குழந்தைகளுக்கு பாப்தாதாவினுடைய சினேகம் நிறைந்த அன்பு நினைவுகள் உரித்தாகுக, தூரத்தில் அமர்ந்திருந்தாலும், சில குழந்தைகள் பார்த்துக் கொண்டும் இருக்கின்றார்கள், சந்தித்துக் கொண்டும் இருக்கின்றார்கள் என்பதை பாப்தாதா அறிவார்கள். அந்த நாலாபுறங்களிலும் உள்ள குழந்தைகளுக்கு பாப்தாதா இதையே கூறுகின்றார் கள், எவ்வாறு இப்பொழுது பெரும்பாம்பான்மையினர் கைகளை உயர்த்தினீர்கள், சமஸ்காரம் சமாப்தி. நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சமாப்தியின் சமயத்தை சமீபத்தில் கொண்டு வருவதற்கான இந்த சங்கல்பத்தை செய்து கொண்டிருக்கின்றோம் மற்றும் நாலாபுறங்களிலும் சமயம் சம்பூரணம் ஆகுவதால் பிரம்மா பாபா, சிவ பாபா ஆகிய இருவரையும் நம்முடைய பாபா வந்துவிட்டார் என்ற பிரத்யட்சம் செய்வோம் என்று இப்பொழுது நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, ஒரே சங்கல்பம் என்ற கையை உயர்த்திக் கொண்டு இருக்கின்றீர்கள். அனைவரின் வாயிலிருந்தும் தந்தையின் பிரத்யட்சதா வெளிப்பட்டுவிடும், இப்பொழுது இந்த வருடத்தில் தந்தையை பிரத்யட்சம் செய்தே ஆகவேண்டும் என்ற திடசங்கல்பம் செய்திடுங்கள். பாதி வேலையைத் தான் செய்திருக்கின்றீர்கள், தந்தை குழந்தைகளை உலகத்திற்கு முன்பு பிரத்யட்சம் செய்துவிட்டார், பகவான் வந்துவிட்டார் என்ற இந்த சப்தம் உலகத்தின் ஒவ்வொரு குழந்தை வரையிலும் கொண்டு சேர்ப்பது இப்பொழுது குழந்தைகளின் காரியமாகும். எனவே, அனை வரையும் பாப்தாதா பார்த்து ஒவ்வொருவருக்கும் உள்ளத்தின் சினேகம், உள்ளத்தின் அன்பு, உள்ளத்தின் ஊக்கம், உற்சாகம் சகிதமாக அன்புநினைவுகள் கொடுத்துக் கொண்டு இருக் கின்றார்கள். நல்லது.

சேவைக்கான டர்ன் கர்நாடகா மண்டலத்திற்கானதாகும்: சேவைக்கான வாய்ப்பை எடுத்துக் கொள்வது என்றால் தந்தைக்கு சமீபமாக வருவதற்கான வாய்ப்பு கிடைப்பதாகும். பாருங்கள், சேவையின் காரணத்தினால் எத்தனை பேருக்கு வருவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. நிமித்த டீச்சர்களாகிய உங்களுக்கு அனைவருடைய ஆசீர்வாதங்களும் கிடைக்கின்றன. ஏனெனில், சேவைக்கான தைரியம் வைத்தீர்கள், மேலும், இத்தனை பேருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. புதியவர்களும் கூட முதன்முறையாக நிறைய பேர் வந்திருக்கின்றார்கள் என்பதை பாப்தாதா பார்த்தார்கள், யார் முதன்முறையாக கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் வந்திருக்கின்றீர்களோ, அவர்கள் உயரமாக கை உயர்த்துங்கள். முதன் முறையாகக் கூட நிறைய பேர் வந்திருக் கின்றார்கள். நல்லது. கர்நாடகத்தின் வளர்ச்சி நன்றாக உள்ளது, இப்பொழுது எவ்வாறு வளர்ச்சி அடைந்துள்ளீர்களோ, அவ்வாறு தீவிர முயற்சிக்கான விதியின் அலைகளை நாலா புறங்களிலும் பரவச் செய்யுங்கள். நம்பர் பெறுங்கள். சமஸ்கார சமாப்திக்கான நம்பர் பெறுங்கள். பெற முடியுமா? நாம் முதல் நம்பர் பெற முடியும் என்று யார் புரிந்திருக்கின்றீர்களோ, அவர்கள் கை உயர்த்துங்கள். நல்லது. அவ்வாறு தங்களுக்குள் குழுவாக இணைந்து நிகழ்ச்சியை உருவாக்குங்கள், அனைவரும் ஒன்று தான். வெவ்வேறான இடங்களில் இருக்கின்றீர்கள், ஆனாலும் ஒன்றுதான். இந்த அதிசயம் செய்து காண்பியுங்கள். உள்ளதல்லவா தைரியம்? தைரியம் உள்ளதா? எனவே, பாப்தாதாவிற்கு செய்தி வந்து கொண்டு இருக்கிறது. மதுபனிற்கு ஒவ்வொரு மாதமும் தன்னுடைய மாற்றத்திற் கான செய்தியை எழுத வேண்டும். ஒவ்வொரு மாதத்திற்கானதும் எழுதுவீர்கள் தானே! கடந்தது கடந்துவிட்டது, இப்பொழுது நம்பர் ஒன் ஆகிக் காண்பியுங்கள். நல்லது. சேவை நன்றாக செய்வதை பாப்தாதா பார்த்தார்கள், இப்பொழுது குழுவாக பார்க்க விரும்புகின்றார்கள். உதாரணம் ஆகுங்கள். தயார். தயாராக இருக்கின்றீர்களா? கை உயர்த்துங்கள். நீங்கள் பாருங்கள், ஒரு மாதத்தில் ரிசல்ட் வந்துவிடும். நல்லது, மிக மிக விசேசமான அன்புநினைவுகள்.

ஆசீர்வாதம்:
சம்பூரண சமர்ப்பணத்தின் விதி மூலம் தன்னுடையது என்பதன் அதிகாரத்தை முடிவடையச் செய்யக்கூடிய சமமான துணைவர் ஆகுக.

இணைந்தே இருப்போம், இணைந்தே செல்வோம் மற்றும் இணைந்தே இராஜ்யம் செய்வோம் என்ற உறுதிமொழி செய்துள்ளீர்கள், எப்பொழுது துணைவனுக்கு சமம் ஆகுவீர்களோ, அப்பொழுதே இந்த உறுதிமொழிகளை நிறைவேற்ற முடியும். சமநிலை என்பது அர்ப்பணிப்பு உணர்விலிருந்து வரும். அனைத்தையும் அர்ப்பணித்துவிட்ட போது, தன் மீதோ அல்லது மற்றவர்கள் மீதோ உள்ள அதிகாரம் முடிவுக்கு வந்துவிடுகிறது. இன்னும் யாரிடமாவது அதிகாரம் இருக்கும் வரை, முழுமையான அர்ப்பணிப்பில் குறைபாடு உள்ளது, எனவே சமமாக மாற முடியாது. எனவே, இணைந்தே இருப்பதற்காக, இணைந்தே பறப்பதற்காக சீக்கிரத்திலும் சீக்கிரமாக சமமானவர் ஆகுங்கள்.

சுலோகன்:
தன்னுடைய சமயம், சுவாசம் மற்றும் சங்கல்பத்தை
வெற்றி உடையதாக ஆக்குவதே வெற்றிக்கான ஆதாரம் ஆகும்.


அவ்யக்த சமிக்ஞை: சதா மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் தங்களது சுபாவத்தை சரளமானதாக ஆக்கிக் கொள்ளுங்கள், சகிப்புத்தன்மை உடையவர் ஆகுங்கள்.

யார் சரள சுபாவம் உடையவர்களாக இருப்பார்களோ, அவர்களுக்குள் தயாராகும் சக்தி இயல்பாகவே இருக்கும். சரள சுபாவம் உடையவர்கள் அனைவருக்கும் சகயோகி மற்றும் சினேகியாக இருப்பார்கள் மற்றும் எந்தளவு சரள சுபாவம் உடையவர்களாக இருப்பார்களோ, அந்தளவு மாயாவின் எதிர்ப்பு குறைவாக இருக்கும். சரள சுபாவம் உடையவர்களிடம் வீணான சங்கல்பம் எழாது. அவர்களுடைய சமயம் கூட வீணாக செலவழியாது. அவர்களுடைய புத்தி விசாலமானதாக மற்றும் தொலைநோக்கு உடையதாக இருக்கும், ஆகையினால், அவர்களுக்கு முன்னால் எந்தவொரு பிரச்சனையும் எதிர்த்து நிற்க முடியாது.

விசேச குறிப்பு: மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமைக்கான யோக பயிற்சி

இன்று மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை ஆகும். சகோதர, சகோதரிகள் அனைவரும் குழுவாக ஒன்றிணைந்து மாலை 6.30 முதல் 7.30 மணி வரை தன்னுடைய ஃபரிஷ்தா சொரூபத் தின் மூலம் அலைந்து கொண்டிருக்கும் துக்கமான, அசாந்தியான ஆத்மாக்களுக்கு சுகம், சாந்தியின் தூய்மையான கிரணங்களை வழங்கி, அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வள்ளல் பரமாத்ம தந்தையின் நினைவை ஏற்படுத்தக்கூடிய சேவை செய்யுங்கள்.