21.07.24    காலை முரளி            ஓம் சாந்தி  16.12.20      பாப்தாதா,   மதுபன்


சாட்சாத் பிரம்மா பாபாவைப் போன்று கர்மயோகி பரிஸ்தா ஆகும்பொழுதே சாட்சாத்காரம் ஆரம்பமாகும்.

இன்று பிராமண உலகை படைக்கும் பாப்தாதா தனது பிராமண உலகைப் பார்த்து பார்த்து பெரும் மகிழ்ச்சி அடைகின்றார். எவ்வளவு சின்னஞ்சிறிய அன்பான அழகான உலகமிது. ஒவ்வொரு பிராமணரின் நெற்றியிலும் பாக்ய நட்சத்திரம் மின்னுகின்றது. வரிசைக்கிரமமாக இருந்த போதிலும் ஒவ்வொரு நட்சத்திரத்திலும் பகவானைத் தெரிந்து கொண்டு அவரது குழந்தையாகும் உன்னத பாக்யம் மின்னுகிறது. எந்த தந்தையை தபஸ்வி, ரிஷி முனிவரெல்லாம் தெரியாது தெரியாது என்று சொல்லி வந்தார்களோ அந்த தந்தையை பிராமண உலகில் கள்ளமில்லா ஆத்மாக்கள் தெரிந்து கொண்டு அடைந்து விட்டார்கள். இந்த பாக்யம் எந்த ஆத்மாக்களுக்கு பிராப்தமாகிறது சாதாரண ஆத்மாக்களுக்கே, தந்தையும் சாதாரண உடலில் தான் வருகின்றார், குழந்தைகளும் சாதாரணமானவர்களே தெரிந்து கொள்கின்றனர். இன்று இந்த சபையில் யார் அமர்ந்துள்ளார்கள் பாருங்கள்? யாரேனும் இலட்சாதிபதி, கோடீஸ்வரன் அமர்ந்துள்ளார்களா? சாதாரண ஆத்மாக்களுக்கே மகிமை உள்ளது. தந்தை ஏழைப்பங்காளன் என்றே போற்றப்படு கின்றார். கோடீஸ்வரனின் பங்காளன் எனப் பாடல் பெறவில்லையே. புத்திவானுக்கெல்லாம் புத்தி வான் பாபா ஏன் எந்த இலட்சாதிபதி, கோடீஸ்வரன் புத்தியை மாற்ற முடியாதா? அது என்ன அவருக்கு பெரிய விசயமா? ஆனால் நாடகத்தில் மிக நல்ல மங்களகரமான நியமம் அமைக்கப் பட்டுள்ளது. பரமாத்மாவின் காரியத்தில் சிறு துளியே பெரு வெள்ளமாகிறது. அனேக ஆத்மாக் களின் எதிர்காலம் அமைக்கப்படுகின்றது. 10-20 பேருக்காக அல்ல, அனேக ஆத்மாக்களுக்கு இலாபம் ஏற்படவேண்டும். எனவே தான் சிறு துளி பெரு வெள்ளம் எனப் போற்றப்படுகின்றது. நீங்கள் அனைவரும் எந்தளவிற்கு உடல், மனம், பொருளால் செயல்படுவீர்களோ அந்தளவு வெற்றி நட்சத்திரம் ஆகியுள்ளீர்கள். அனைவரும் வெற்றி நட்சத்திரம் ஆகியுள்ளீர்களா? ஆகியுள்ளீர்களா? இனிதான் ஆக வேண்டுமா? யோசிக்கின்றீர்களா? யோசிக்காதீர்கள். செய்யலாம், பார்க்கலாம், செய்யத்தான் வேண்டும்.... இவ்வாறு யோசிப்பதும் நேரத்தை இழப்பதாகும். எதிர்காலத்திற்கும் நிகழ்காலத்திலும் இழப்பதாகும்.

பாப்தாதாவிடம் ஒருசில குழந்தைகளின் சங்கல்பம் வந்தடைகின்றது. வெளியில் உள்ளவர்கள் பாவம், ஆனால் பிராமண ஆத்மாக்கள் பாவம் அல்ல, சிந்திப்பவர்கள், புத்திசாலிகள், ஆனால் சில தருணங்களில் சில குழந்தைகளிடம் ஒரு பலவீனமான எண்ணம் எழுகின்றது, சொல்லட்டுமா! சொல்லலாமா? அனைவரும் கை உயர்த்துகின்றீர்கள், மிக நல்லது. அவ்வப்போது வினாசம் நடக்குமா, நடக்காதா? 1999ம் முடிந்தது 2000ம் முடியப்போகிறது. இன்னும் எதுவரையில்? பாப்தாதா நினைக்கின்றார், சிரிப்பதகான விசயம் இது, வினாசத்தைப் பற்றி நினைப்பது எனில் தந்தைக்கு விடை கொடுத்து அனுப்புவதாகும். ஏனெனில் வினாசம் ஆகிவிட்டால் பாபா பரந்தாமம் சென்று விடுவாரல்லாவா. சங்கமயுகம் சலித்துவிட்டதா? வைரம் போன்றதென சொல்கிறீர்கள் ஆனால் பொன்னுலகை அதிகம் நினைக்கின்றீர்கள் நடக்கத்தான் போகிறது ஆனால் பொன்னுலகை அதிகம் நினைக்கின்றீர்கள். நடக்கத்தான் போகிறது ஆனால் ஏன் எதிர்பார்க்கின்றீர்கள். சிலர் நினைக் கின்றனர் இலாபகரமான செயல்படுத்தலாம் ஆனால் வினாசம் ஆகிவிட்டால் நாளையோ, மறு நாளே, நமது பயனற்று போய்விடுமே. நமது சேவையில் பயன்படாதே, என்ன செய்யலாம், யோசித்து செய்யலாம். இது போன்ற எண்ணங்கள் தந்தையை வந்தடைகின்றது. ஆனால் புரிந்து கொள்ளுங்கள் இன்று நீங்கள் தனது உடலை சேவையில் சமர்ப்பணம் செய்தீர்கள், மனதை உலக மாற்றத்திற்கான சேவையில் நிரந்தரமாக செயல்படுத்தினீர்கள், செல்வம் எவ்வளவு தான் கொடுத் தாலும் நீங்கள் அடைய உள்ள பிராப்திக்கு முன்னால் அது ஒன்றுமே இல்லை. என்னவெல்லாம் உள்ளதோ இன்று நீங்கள் செய்தீர்கள் நாளையே வினாசம் ஆகிவிட்டது எனில் அது உங்களுக்கு இலாபமா, நட்டமா? சிந்தியுங்கள் சேவையில் பயன்படுத்தவில்லையெனில் அது இலாபகரமாகுமா? நீங்கள் யாருக்காக செய்தீர்கள்? பாப்தாதாவிற்காகத்தானே? பாப்தாதா அழிவற்றவர், அவர் ஒரு போதும் அழிவதில்லை அழியாத கணக்கில் அழியாத தந்தையிடம் இன்று சேமித்தீர்கள், ஒரு மணி நேரம் முன்பு சேமிப்பு செய்தீர்கள் எனில் அழியாத தந்தையிடம் செய்த சேமிப்பு ஒன்றுக்கு பல மடங்கு சேமிப்பானது. பாபா கட்டுப்பட்டவர், ஒன்றுக்கு பல மடங்கு கொடுப்பார். பாபா போய்விட மாட்டாரே! பழைய உலகம் வினாசம் ஆகும் எனவே நீங்கள் உளமாற செய்தீர்களா, வலுக் கட்டாயமாக செய்தீர்களா, பிறரைப் பார்த்து செய்தீர்களா அதற்கு முழுவதும் கிடைக்காது அவசியம் கிடைக்கும். ஏனெனில் வள்ளலுக்கு கொடுத்தீர்கள். ஆனால் முழுவதும் கிடைக்காது, எனவே 2001 லும் வினாசம் வரவில்லையே என நினைக்காதீர்கள் இப்போது தான் நிகழ்ச்சிகளை நடத்துகின்றார்கள் வீடு கட்டுகிறார்கள், பெரிய பெரிய திட்டம் போடுகின்றார்கள். 2001 லும் தென்படவில்லை. தென்படாது ஒருபோதும் இவற்றையெல்லாம் ஆதாரமாக வைத்துக் கொண்டு அலட்சியமாக இருக்காதீர்கள். திடீரென நடக்கும் இன்று இங்கே அமர்ந்துள்ளீர்கள். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு கூட நடக்கலாம் நடக்காது, ஒரு மணி நேரம் கழித்து என்ன ஆகுமோ என்று தெரியவில்லையே என பயந்து விடாதீர்கள். நடக்கலாம் அந்தளவிற்கு எவரெடி ஆக இருந்தே ஆக வேண்டும். சிவராத்திரி வரையிலும் செய்யலாம் என நினைக்காதீர்கள். நேரத்தை எதிர்பாரா தீர்கள். நேரம் உங்களது படைப்பு நீங்கள் படைப்பாளர் படைப்பவர் படைப்பிற்கு அடிமையாக மாட்டார். நேரம் உங்களது கட்டளைப்படி செயல்படும் படைப்பு நீங்கள் நேரத்திற்காக எதிர்பாரா தீர்கள் ஆனால் இப்போது நேரம் உங்களை எதிர்பார்க்கிறது, சில குழந்தைகள் நினைக்கின்றார் பாப்தாதா 6 மாதம் என்றாரே, 6 மாதம் ஆகுமல்லவா, ஆகும் தானே - ஆனால் பாப்தாதா கூறுகிறார். இந்த எல்லைக்குட்பட்ட விசயங்களை ஆதாரமாக கொள்ளாதீர்கள் எவரெடியாக இருங்கள். எந்த ஆதாரமுமின்றி ஒரு நொடியில் ஜீவன் முக்தி, ஒரு நொடியில் ஜீவன்முக்தி பெறுபவர்கள் என சவால் விடுகிறீர்களே நீங்கள் தன் வாழ்வில் ஒரு நொடியில் ஜீவன் முக்தி அடையமுடியாதா ! ஆகவே எதிர்பார்த்து இருக்காமல் சம்பன்னமாவதற்கு ஏற்பாடுகளை செய்யுங்கள்.

குழந்தைகளின் விளையாட்டைப் பார்த்து பாப்தாதாவிற்கு சிரிப்பு தான் வருகிறது எந்த விளையாட்டைப் பார்த்து சிரிப்பு வருகிறது? என்னவென்று சொல்லவா? இன்று முரளி நடத்தவில்லை, செய்தி சொல்கிறேன். இதுவரையிலும் கூட சில குழந்தைகளுக்கு பொம்மை களுடன் விளையாடுவது மிகவும் பிடித்துள்ளது. சின்ன சின்ன விசயங்களெனும் பொம்மைக ளுடன் விளையாடுவது, சின்ன விசயத்தில் கவனம் செலுத்தி நேரத்தை வீண் செய்வது. இது சாலையோரக் காட்சிகள் விதவிதமான சம்ஸ்காரம், நடத்தையாவும் முழுமையை நோக்கி செல்லும் பாதையில் வரும் சாலையோரக் காட்சிகள் இதில் இடையில் நிற்பது, சிந்திப்பது, பிரபாவத்தில் வருவது, நேரத்தை வீண் செய்வது, ஆர்வமுடன் கேட்பது, பேசுவது, வாயு மண்டலத்தை அமைப்பது..... இவை யாவும் தடையாகும், இதனால் முழுமைக்கான இலக்கு வெகு தொலைவில் சென்று விடுகிறது. விருப்பமும், முயற்சியும் அதிகம் பாப்சமான் ஆகியே தீருவேன். நல்லாசை நல் விருப்பம் உள்ளது ஆனால் முயற்சித்தும் தடைகள் வந்துவிடுகிறது. இருகாது, இருகண்கள், முகம் இருக்கிறதென்றால் பார்வையிலும் படுகிறது, காதிலும் விழுகிறது வார்த்தையிலும் வந்து விடுகிறது. ஆனால் பாபாவின் மிகப் பழைய சுலோகன் என்றும் நினைவில் வையுங்கள் பார்த்தும் பாராமல், கேட்டும் கேளாமல் இருங்கள். கேட்டாலும் சிந்திக்காதீர்கள். கேட்டாலும் உள்ளடக்குங்கள் பரப்பாதீர்கள். இந்த பழைய சுலோகனை நினைவில் கொள்வது மிக அவசியம். ஏனெனில் நாளுக்கு நாள் உடலின் கணக்கு வழக்குகள் வியாதியாக முடிவது போன்று பழைய கம்ஸ்காரங்களும் முடிவுக்கு வரும். எனவே தெரியவில்லையே இன்னும் விசயங்கள் பெரியதாகின்றதே என பயம் கொள்ள வேண்டாம். முன்பெல்லாம் இப்படி இல்லையே, முன்பில்லாதது எல்லாம் வருகிறது. அப்படித்தான் வெளிப்படும் உங்களுடைய பொறுமை சக்தி எதிர்கொள்ளும் சக்தி, உள்ளடக்கும் சக்தி கண்டறியும் சக்தி இவைகளுக்கான சோதனை இது 10 ஆண்டுகள் முன்பிருந்த பரீட்சை இப்போது வருமா? பி.ஏ. வகுப்பின் பேப்பர் எம்.ஏ. வகுப்பின் பேப்பராக வருமா என்ன? எனவே என்ன இது என பயப்பட வேண்டாம். என்ன நடக்கிறது..., இப்படி ஆகிறதே .... இப்படி ஆகிறதே...... விளையாட்டைப் பாருங்கள் பரீட்சை கடந்து போகும், மதிப்புடன் தேர்ச்சி பெறுங்கள்.

பாப்தாதா முன்பே கூறியுள்ளார், தேர்ச்சி அடைய எளிய வழி பாப்தாதாவின் அருகே இருங்கள், உங்களுக்கு தேவையில்லாததை கடந்து செல்லுங்கள், அருகே இருங்கள் தேர்ச்சி பெறுங்கள், கடந்து செல்லுங்கள் இதில் என்ன கடினம்? ஆசிரியர்கள், மதுபன் வாசிகள் சொல்லுங்கள் மதுபன் வாசிகள் கை உயர்த்துங்கள். புத்திசாலிகள் மதுபன் வாசிகள் முன்னால் வந்து விடுகின்றீர்கள். நல்லது வாருங்கள். பாப்தாதாவிற்கு மகிழ்ச்சியே தன்னுரிமையை பெறுகின்றீர்கள் அல்லவா? நல்லது பாப்தாதாவிற்கு கோபம் இல்லை, நல்லது முன்னால் அமருங்கள். மதுபனில் இருப்பவர்களுக்கு சிறிதேனும் பராமரிப்பு வேண்டுமல்லவா. ஆனால் (பாஸ்) தேர்ச்சி எனும் சொல்லை நினைவில் வையுங்கள். மதுபனில் புதுப்புது விசயங்கள் நடக்கிறதல்லவா. திருடன் வருகிறான், இன்னும் புதுப்புது விசயங்கள் நடக்கிறது, இப்போது பாபா பொதுவாக என்ன சொல்வது சற்று குப்தமாகவே வைப்போம். ஆனால் மதுபன் வாசிகளுக்குத் தெரியும் மகிழ்வுடன் இருங்கள், குழப்பம் வேண்டாம் ஒன்று குழம்புவது மற்றொன்று விளையாட்டென புரிந்து மகிழ்ந்திருப்பது. குழம்புவது நல்லதா? மகிழ்ந்திருப்பது நல்லதா? கடந்து செல்ல வேண்டுமல்லவா ! தேர்ச்சி பெற வேண்டும் அல்லவா ! ஆக கடந்து செல்லுங்கள் என்ன பெரிய விசயம்? எதுவும் பெரியதல்ல. விசயத்தை பெரிதாக்குவதும் சிறிதாக்குவதும் தன் புத்தியைப் பொறுத்தே உள்ளது. விசயத்தை பெரிதாக்குபவர்களை அஞ்ஞானிகளே என சொல்வார்கள். இவர் கயிறை பாம்பாக மாற்றுகிறார். சிந்தியில் நோரி கோ நாக் என்பார்கள் இப்படியெல்லாம் விளையாடாதீர்கள் . இப்போது இந்த விளையாட்டு முடிந்தது.

இன்று விசேஷ செய்தி கூறினேன். பாப்தாதா இப்போது ஒரு சுலபமான முயற்சி சொல்கிறார். கடினம் அல்ல அனைவருக்குமே பாப்சமான் ஆகியேத் தீரவேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஆகியே தீர வேண்டும். உறுதியாக உள்ளதல்லவா! அயல்நாட்டவர் ஆகியே தீர வேண்டுமல்லவா? ஆசிரியர்கள் ஆகியே தீர வேண்டு மல்லவா? இவ்வளவு ஆசிரியர்கள் வந்துள்ளீர்கள். ஆஹா ! ஆசிரியர்களின் அதிசயம் இன்று பாப்தாதா ஆசிரியர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி ஒன்று கூறுகிறார். அது என்ன சொல்லுங்கள் இன்று ஆசிரியர்களுக்கு கோல்டன் (மெடல்) பேட்ஜ் கிடைத்துள்ளது . யாருக்கு தங்க மெடல் (கோல்டன் பேஜ்) கிடைத்துள்ளது, கையை உயர்த்துங்கள். பாண்டவர்களுக்கும் கிடைத்ததா? பாபாவிற்கு மட்டும் தோழனாக (ஹம்ஜின்ஸ்) இருந்துவிடக் கூடாது. பாண்டவர்கள் பிரம்மா பாபாவிற்கும் இணையானவர்கள் (அவர்களுக்கு வேறு விதமான பேட்ஜ் கிடைத்தது) பாண்டவர்களுக்கு ராயல் கோல்டு மெடல் கிடைத்துள்ளது. கோல்டன் பேஜ் பெற்றவர்களுக்கு பாப்தாதாவின் கோடான கோடி மடங்கு நல் வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்.

உள்நாடு, அயல்நாடு எங்கும் கேட்டுக் கொண்டிருப்பவர்களும் கோல்டு மெடல் பெற்று விட்டவர்களும் நமக்காக பாப்தாதா வாழ்த்துக்கள் வழங்குவதாக ஏற்றுக் கொள்ளுங்கள். பாண்டவர்கள், சக்திகள், எந்த சேவையில் நிமித்தமானவருக்கும் முக்கியமான இந்த தாதிமார்கள், இந்த பரிவாரத்தில் உள்ளவர்கள் யாவருக்கும் ஏதேனும் சிறப்பம்சத்திற்காக கோல்டன் மெடல் வழங்கப்படுகின்றது. ஏதேனும் விசேஷ சேவைக்காக சிலருக்கு மற்றும் சரண்டர் ஆனவர்களுக்கு மேலும் சேவையில் முன்னேற்றம் செய்தவர்களுக்கு தாதிகள் மூலமாக கோல்டன் மெடல் கிடைக்கிறது. வெகுதொலைவில் அமர்ந்து கேட்பவர்களுக்கும் வாழ்த்துக்கள், தொலைவில் அமர்ந்து முரளி கேட்பவர்களுக்காக கோல்டன் மெடல் பெற்றவர்களுக்காக ஒரு கை அசைத்து கர ஒலி செய்யுங்கள். அவர்களும் நீங்கள் கை தட்டுவதை பார்க்கிறார்கள். அவர்களும் மகிழ்ச்சியடைகிறார்கள்.

பாப்தாதா சுலபமான முயற்சி சொல்லிக் கொண்டிருந்தார். இப்போதைய நேரம் எதுவும் எதிர்பாராமல் நடக்கும். ஒரு மணி நேரம் முன்பு கூட அறிவிப்பு ஏதுமின்றி நடக்கும் அறிவிப்பு இருக்காது நம்பர் வருவது எப்படி? எதிர்பாராமல் நடக்காது எனில் பரீட்சையாகுமா அது? பாஸ்வித் ஹானர் என்ற சான்றிதழ் எதிர்பாரா விதமாக இறுதியில் ஏற்படும். எனவே தாதிகளின் ஒரு எண்ணம் பாபாவை வந்தடைந்தது தாதிமார்கள் பாப்தாதா இப்போதே சாட்சாத்காரத்தின் சாவியைக் கொண்டு திறக்க வேண்டும் என நினைக்கிறார்கள். நீங்கள் அனைவரும் விரும்பு கின்றீர்களா? பாப்தாதா சாவி கொண்டு திறப்பாரா, அல்லது நீங்கள் திறக்க நிமித்தமாவீர்களா சரி பாபாவே திறக்கட்டும், சரியா, பாப்தாதா ஆம் என்று சொல்கின்றார். (கை தட்டுகிறார்கள்) முதலில் முழுவதும் கேளுங்கள். சாவி கொண்டு திறப்பதில் பாப்தாதாவிற்கு எவ்வளவு நேரமாகும் - ஆனால் யார் மூலம் செய்வார்? யாரை பிரத்யட்சம் செய்ய வேண்டும்? குழந்தைகளையா? அல்லது பாபாவையா? பாபாவிற்கும் குழந்தைகள் மூலமே செய்ய வேண்டும். ஏனெனில் ஜோதிர் பிந்து சாட்சாத்காரம் ஆகிவிட்டால் சிலர் பாவம்.... பாவம் அல்லவா! இது என்னவென்றே புரிந்து கொள்ள முடியாது. இறுதியில் சக்திகள் மற்றும் பாண்டவர்கள் மூலமாக பாபாவின் பிரத்யட்சம் ஏற்படும். எனவேதான் பாப்தாதா சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள் குழந்தைகள் அனைவருக்கும் பாப்சமான் ஆகியே தீர வேண்டும் என்ற ஒரே சங்கல்பம் இருக்க வேண்டும். இதில் இரு எண்ணம் கூடாது. ஒரே எண்ணம் ஆகவே பிரம்மா பாபாவை பின் பற்றுங்கள். அசரீரி புள்ளியாகி விடுவீர் கள். அனைவருக்குமே பிரம்மா பாபா மீது அன்பு உள்ளதல்லவா. பார்க்கும் போது அனைவரிலும் அயல் நாட்டவருக்கு அதிக அன்பு உள்ளது. இந்த கண்கள் மூலமாக பார்க்கவில்லை, ஆனால் அனுபவம் என்ற கண்கள் மூலமாக பெளிநாட்டவர்அதிகபட்மாக பிரம்மா பாபாவை பார்த்தார்கள், அதிகமான அன்பும் உள்ளது. பாரதத்தின் கோப, கோபியர்களுக்கும் அன்பு உள்ளது இருப்பினும் அவ்வப்போது அயல்நாட்டவரின் கதைகளை பாப்தாதா கேட்கின்றார். பிறருக்கும் சொல்கின்றார். பாரதவாசிகள் சிறிது மறைந்தே உள்ளார்கள் அவர்கள் பிரம்மாவைப் பற்றி அதிகம் சொல்கிறார் கள். அயல்நாட்டவருக்கு வாழ்த்துக்கள் லண்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஆசியா, ரசியா, ஜெர்மனி ஆக நாலாபுறமும் உள்ளவர்கள் தொலைவில் அமர்ந்து கேட்கின்றனர். அவர்களுக்கும் பாப்தாதா வாழ்த்து தருகின்றார். குறிப்பாக பிரம்மா பாபா வாழ்த்து தருகின்றார். பாரதவாசிகள் கொஞ்சம் மறை முகமாக இருக்கின்றார்கள், பிரபலமானவர்கள் அவ்வளவு செய்ய முடியாது. குப்தமாக மறைமுகமாக வைத்துள்ளார்கள். இப்பொழுது வெளிப்படுத்துங்கள். மற்றபடி பாரதத்திலும் மிக நல்ல நல்ல குழந்தைகள் உள்ளனர். அப்படி உள்ள கோபியர்களின் அனுபவ கதைகளைக் கேட்டால் இன்றைய பிரதம மந்திரி, ஜானதிபதி யின் கண்களும் குளமாகும். ஆனால் வெளியில் திறவாமல் குப்தமாக வைத்துள்ளார்கள். வாய்ப்பும் குறைவாகவே உள்ளது. ஆக பாபா சொல்கிறார் பிரம்மா பாபாவிடம் அனைவருக்கும் அன்பு உள்ளது தானே. எனவே தன்னை என்னவென்று சொல்கின்றீர்கள். பிரம்மா குமாரியா? அல்லது சிவ குமாரியா? பிரம்மா குமாரி என்று சொல்கிறீர்கள் அல்லவா. அப்படியெனில் பிரம்மா பாபாவின் மீது அன்பு உள்ளதாயிற்று - சரி அசரீரி ஆவதில் சிறிது முயற்சி செய்ய வேண்டியுள்ளது - ஆனால் பிரம்மா பாபா இப்போது எந்த ரூபத்தில் உள்ளார்கள்? சொல்லுங்கள்? (பரிஸ்தா வடிவில்) ஆக பிரம்மா மீது அன்பு எனில் பரிஸ்தா நிலை மீது அன்பு உள்ளது. புள்ளி ஆவது சற்று கடினம் தான், பரிஸ்தா ஆவது அதைவிட சுலபம் தானே. சொல்லுங்கள் பிந்து ஆவதை விட பரிஸ்தா ஆவது சுலபம் தானே நீங்கள் கணக்காளர் வேலை செய்பவரானால் புள்ளி வைக்க முடியுமா? பரிஸ்தா ஆக முடியும் தானே பிந்து வாகிய ரூபத்தில் செயல்படும்பொழுது அவ்வப்போது தேகத்தில் வர வேண்டியுள்ளது. ஆனால் பாப்தாதா பார்க்கின்றார். விஞ்ஞானிகள் ஒரு ஒளியின் ஆதாரத்திலே தான் (ரோபோட்) இயந்திர மனிதனை உருவாக்கி உள்ளார்கள். கேட்டீர்கள் தானஇ அதைப் பார்க்கவில்லை கேள்விப்பட்டுள்ளீர்கள் தானே - தாய்மார்கள் கேட்டீர்களா? உங்களுக்கு படம் காண்பிக்கும். அவர்கள் ஒளியின் ஆதாரத்தில் ரோபட்டை செய்துள்ளார்கள். மேலும் அது எல்லா வேலையும் செய்கிறது. மேலும் விரைவாக செய்கிறது, ஒளியின் ஆதாரத்தில் செய்கிறது. அது அறிவியலின் வெளிப்பாடு, பாப்தாதா கேட்கிறார் அமைதி சக்தி மூலமாக நீங்கள் கர்மங்கள் செய்ய முடியாதா? முடியாதா? பொறியாளர்களும், விஞ்ஞானிகளும் அமர்ந்துள்ளீர்களா? ஆக நீங்களும் ஒரு ஆன்மீக ரோபோட் மனோ நிலையை தயார் செய்யுங்கள். அதனையே ஆன்மீக கர்மயோகி, பரிஸ்தா கர்மயோகி என்போம். முதலில் நீங்கள் தயார் ஆகுங்கள் பொறியாளரும், விஞ்ஞானிகளும் முதலில் நீங்கள் அனுபவம் செய்யுங்கள், செய்வீர்களா? செய்ய முடியுமா? நல்லது அதற்காக திட்டம் போடுங்கள், பாப்தாதா அத்தகைய நடமாடும் ஆன்மிக கர்மயோகி பரிஸ்தாவைப் பார்க்க விரும்புகின்றார். அமிர்த வேளையில் எழுந்திரி யுங்கள், தந்தையுடன் சந்திப்பை கொண்டாடுங்கள், ஆன்மிக உரையாடல் செய்யுங்கள். வரதானங்களை பெறுங் கள் என்ன வேண்டுமோ செய்யுங்கள். ஆனால் பாப்தாதா விடமிருந்து தினமும் அமிர்தவேளையில் கர்மயோகி பரிஸ்தா பவ எனம் வரதானம் பெற்ற பிறகே தினசரி செயலில் ஈடுபடுங்கள். இதனை செய்ய முடியுமா?

இந்த புதிய ஆண்டில் இலட்சியம் வையுங்கள். ஒத்துழைப்பின் மூலமாக தன்னிலும் பிறரிலும் சம்ஸ்கார மாற்றம் செய்வேன் ஏதேனும் பலவீனம் இருந்தால் ஒத்துழைப்பு தாருங்கள் அதனை நாலு பேரிடம் வர்ணனை செய்யாதீர்கள். சுற்றுச் சூழலை மாற்றாதீர்கள். ஒத்துழைப்பு தாருங்கள் இந்த ஆண்டிற்கான தலைப்பு சம்ஸ்கார மாற்றம் பரிஸ்தா சம்ஸ்காரம், பிரம்மா பாபாவிற்கு நிகரான சம்ஸ்காரம் இது சுலபமான முயற்சியா கடினமா? சற்று கடினமா? எந்த விசயமும் ஒருபோதும் கடினம் என்பதில்லை, தனது பலவீனமே கடினமாக்குகின்றது எனவே பாப்தாதா கூறுகிறார். மாஸ்டர் சர்வசக்திவான் குழந்தைகளே இப்போது சக்திகள் நிறைந்த சுற்றுச் சூழலை உருவாக்குங்கள். இப்போது உங்களது சுற்றுச் சூழல் மிக மிக மிக அவசியமானது. இன்றைய உலகில் மாசுத் தொல்லை உள்ளது. அவ்வாறே உலகில் ஒரு நொடியில் மனதிற்கு சுகம், சாந்திக்கான சுற்றுச் சூழல் நொடியில் மனதிற்கு சுகம், சாந்திக்கான சுற்றுச் சூழல் அவசியமானது ஏனெனில் மனதின் மாசு அதிகம் உள்ளது காற்றின் மாசை விட அதிகமாக உள்ளது.

நாலாபுறமும் பாப்தாதாவிற்கு சமமாகியே தீருவேன் என்ற இலட்சியம் கொண்டுள்ள நிச்சயபுத்தியுடன் வெற்றியடையும் ஆத்மாக்களுக்கு என்றென்றும் பழைய உலகம் மற்றும் பழைய சம்ஸ்காரங்களை திட சங்கல்பத்தின் மூலமாக மாற்றியமைக்கும் மாஸ்டர் சர்வசக்தி வான் ஆத்மாக்களுக்கு எப்போதும் ஏதேனும் ஒரு காரணத்திலோ சூழ்நிலையிலோ சுபாவ சம்ஸ்காரத்தாலோ பலவீனமான சக நண்பர்களுக்கு ஆத்மாக்களுக்கு ஒத்துழைப்பு தருபவர் களுக்கு காரணம் காணாமல் நிவாரணம் தருகின்ற அத்தகைய தைரியமான ஆத்மாக்களுக்கு என்றென்றும் பிரம்மா பாபாவின் அன்பிற்கு கைமாறு தரும் கர்மயோகி, பரிஸ்தா ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

வரதானம்:
சுபசிந்தனையின் மனோநிலை மூலமாக அனைவரின் ஒத்துழைப்பையும் பெற்று அனைவருக்கும் அன்பானவராகுக !

எல்லோருக்காகவும் சுப சிந்தனை செய்யும் ஆத்மாக்களுக்கே ஒவ்வொருவர் உள்ளத்திலும் அன்பு உற்பத்தியாகின்றது. அந்த அன்பே ஒத்துழைப்பை தரச் செய்கிறது. எங்கு அன்பு இருக்குமோ அங்கே நேரம், செல்வம், ஒத்துழைப்பு என்றென்றும் அர்ப்பணமாக தயாராகின்றது. ஆக சுபசிந்தனை யானது அன்பானவராக மாற்றுகிறது அன்பு அனைத்து விதமான ஒத்துழைப்பிலும் அர்ப்பணம் ஆக்கிவிடுகின்றது, எனவே எப்போதும் சுபசிந்தனையில் முழுமையாயிருங்கள். பிறருக்கும் சுபசிந்தனை செய்து அனைவரையும் அன்பானவராக ஒத்துழைப்பு தருபவராக மாற்றுங்கள்.

சுலோகன்:
இச்சமயம் வள்ளல் ஆகுங்கள் அப்போது தங்களுடைய இராஜ்யத்தில் பிறவி பிறவியாக ஒவ்வொரு ஆத்மாவும் நிரம்பியவராக இருப்பார்கள்.


இன்று மாதத்தின் மூன்றாவது ஞாயிறு அகில உலக தியான தினம், பிராமணர்கள் அனைவரும் மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரையில் விசேஷமாக தனது மாஸ்டர் சர்வ சக்திவான் சொரூபத்தில் நிலைத்திருந்து சக்தியிழந்து பலவீனமான ஆத்மாக்களுக்கு சுபபாவனை எனும் ஒளிக்கதிர்களை வழங்குங்கள். பரமாத்மாவின் சக்திகளை தன்னுள் அனுபவம் செய்து நாலா புறமும் அகிலமெங்கும் சக்திசாலியான சுற்றுச் சூழலை அமைப்பதற்கான சேவை செய்யுங்கள்.