21.09.25 காலை முரளி
ஓம் சாந்தி 02.02.2007 பாப்தாதா,
மதுபன்
பரமாத்ம பிராப்திகளில் நிறைந்த ஆத்மாவின் அடையாளம் - தூய்மை,
சிரேஷ்டம் மற்றும் செல்வந்த நிலை
இன்று உலகை மாற்றக் கூடிய பாப்தாதா தனது துணையாக இருக்கும்
குழந்தைகளை சந்திப் பதற்கு வந்திருக்கின்றார். ஒவ்வொரு
குழந்தையின் நெற்றியில் விசேஷமாக பரமாத்ம விசேஷ பிராப்திகளை
பார்த்துக் கொண்டிருக்கின்றார். ஒன்று தூய்மை, 2- சிரேஷ்டம்
மற்றும் 3- செல்வந்த நிலை. இந்த ஞானத்தின் அஸ்திவாரமே தூய்மை
ஆவதாகும். ஆக ஒவ்வொரு குழந்தையும் தூய்மையாக இருக்கிறீர்கள்,
தூய்மை என்றால் பிரம்மச்சரியம் மட்டுமல்ல, ஆனால்
மனம்-சொல்-செயல், சம்பந்தம்-தொடர்பில் தூய்மை. நீங்கள்
பாருங்கள், பரமாத்ம பிராமண ஆத்மாக்களாகிய நீங்கள் முதல்-இடை-கடை
மூன்று காலங்களிலும் தூய்மையாக இருக்கிறீர்கள். முதன் முதலில்
ஆத்மா பரந்தாமத்தில் இருந்த பொழுது அங்கும் தூய்மையாக
இருந்தீர்கள். பிறகு ஆதியில் வரும் பொழுது ஆதியிலும் தேவதா
ரூபத்தில் தூய்மையான ஆத்மாவாக இருந்தீர்கள். தூய்மை என்றால்
பவித்திர ஆத்மாவின் விசேஷதா - இல்லறத்தில் இருந்தாலும்
சம்பூர்ன தூய்மையுடன் இருப்ப தாகும். மற்றவர்களும் தூய்மையாக
ஆகிறார்கள், ஆனால் உங்களது தூய்மையின் விசேஷதன்மை - கனவிலும்
அசுத்தம் மனம்-புத்தியை தொடாது. சத்யுகத்தில் ஆத்மாவும்
தூய்மையாக ஆகிறது மற்றும் உங்களது சரீரமும் துய்மையாக ஆகிறது.
ஆத்மா மற்றும் சரீரம் இரண்டும் தூய்மையாக தேவ ஆத்மா ரூபத்தில்
இருக்கிறது - இது தான் சிரேஷ்ட தூய்மையாகும். தூய்மையாக ஆவது
போன்று சிரேஷ்டமாகவும் ஆகிறீர்கள். அனைவரையும் விட
உயர்ந்ததிலும் உயர்ந்தவர்கள் பிராமண ஆத்மாக்கள் ஆவர். மேலும்
உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தையின் குழந்தைகளாக ஆகிறீர்கள்.
ஆதியில் பரந்தாமத்திலும் சிரேஷ்டம் அதாவது தந்தையின் கூடவே
இருக்கிறீர்கள். இடையில் பூஜ்ய ஆத்மாவாகவும் ஆகிறீர்கள்.
எவ்வளவு அழகான கோயில் உருவாகிறது மற்றும் எவ்வளவு விதிப்படி
பூஜைகள் நடைபெறுகிறது. எவ்வளவு விதிப்படி தேவதைகளாகிய
உங்களுக்கு கோயிலில் பூஜை நடை பெறுகிறதோ, அவ்வளவு
மற்றவர்களுக்கு கோயில் கட்டலாம். ஆனால் விதிப்படி பூஜைகள் தேவதை
ரூபத்தில் உங்களுக்குத் தான் நடைபெறுகிறது. ஆக தூய்மை யாகவும்
இருக்கிறீர்கள் மற்றம் சிரேஷ்டமானவர்களாகவும் இருக்கிறீர்கள்.
கூடவே செல்வந்தர் களாகவும் இருக்கிறீர்கள். உலகிலே மிகப் பெரிய
செல்வந்தர் என்று உலகத்தினர் கூறுகின்றனர். ஆனால் சிரேஷ்ட
ஆத்மாக்களாகிய நீங்கள் கல்பத்திலேயே செல்வந்தர்களாக
இருக்கிறீர்கள். முழு கல்பத்திலும் செல்வந்தர்களாக
இருக்கிறீர்கள். தனது பொக்கிஷங்களின் நினைவு வருகிறது. எவ்வளவு
பொக்கிஷங்களுக்கு எஜமானர்களாக இருக்கிறீர்கள்! அழிவற்ற
பொக்கிஷங்களை இந்த ஒரு பிறப்பில் பிராப்தியாக அடைகிறீர்கள். அது
பல பிறவிகளுக்கு கூடவே வருகிறது. வேறு யாருடைய பெக்கிஷமும் பல
பிறவிகளுக்கு கூடவே வருவது கிடையாது. ஆனால் உங்களுடைய பொக்கிஷம்
ஆன்மிகமானது. சக்திகளின் பொக்கிஷம், ஞானத்தின் பொக்கிஷம்,
குணங்களின் பொக்கிஷம், சிரேஷ்ட சங்கல்பத்தின் பொக்கிஷம் மற்றும்
நிகழ்கால நேரத்தின் பொக்கிஷம் என்று அனைத்து பொக்கிஷங்களுக்கு
ஜென்ம ஜென்மங்களுக்கு கூடவே இருக்கிறது. ஒரு பிறப்பில் அடைந்த
பொக்கிஷங்கள் கூடவே வருகிறது. ஏனெனில் அனைத்து பொக்கிஷங்களையும்
கொடுக்கும் வள்ளல் பரமாத்ம தந்தையின் மூலம் பிராப்தியாக
கிடைத்திருக்கிறது. எனவே என்னுடைய பொக்கிஷம் அழிவற்றது என்ற
போதை இருக்கிறதா?
இந்த ஆன்மிக பொக்கிஷங்களை அடைவதற்கு சகஜயோகிகளாக
ஆகியிருக்கிறீர்கள். நினைவு சக்தியின் மூலம் பொக்கிஷங்களை
சேமிப்பு செய்கிறீர்கள். இந்த நேரத்திலும் அனைத்து பொக்கி
ஷங்களிலும் நிறைந்து கவலையற்ற சக்கரவர்த்தியாக இருக்கிறீர்கள்.
ஏதாவது கவலை இருக்கிறதா? இருக்கிறதா என்ன? ஏனெனில் உங்களிடம்
இருக்கும் இந்த பொக்கிஷத்தை எந்த திருடனும் திருட முடியாது,
இராஜா அனுபவிக்க முடியாது, தண்ணீரில் மூழ்காது. ஆகையால்
கவலையற்ற சக்கரவர்த்தியாக இருக்கிறீர்கள். ஆக இந்த
பொக்கிஷங்களின் நினைவு சதா இருக்கிறது அல்லவா! மேலும் நினைவு
கூட ஏன் எளிதாக இருக்கிறது? ஏனெனில் அனைத்திலும் நினைவிற்கு
ஆதாரமாக இருப்பது ஒன்று சம்பந்தம், மற்றொன்று பிராப்தி. எந்த
அளவிற்கு சம்பந்தத்தில் அன்பு இருக்குமோ, அந்த அளவிற்கு நினைவு
தானாகவே வருகிறது. ஏனெனில் சம்பந்தத்தில் அன்பு இருக்கிறது.
மேலும் எங்கு அன்பு இருக்கிறதோ, அன்பானவர்களை நினைவு செய்வது
கடினமாக இருக்காது, ஆனால் மறப்பது தான் கடினமாக இருக்கும். ஆக
தந்தை சர்வ சம்பந்தத்தில் ஆதாரமாக ஆக்கி விட்டார். அனைவரும்
தன்னை சகஜயோகி என்று அனுபவம் செய்கிறீர்களா? அல்லது கடின
யோகியாக இருக்கிறீர்களா? சகஜமாக இருக்கிறதா? அல்லது சில நேரம்
சகஜமாக, சில நேரம் கடினமாக இருக்கிறதா? எப்போது தந்தையை
சம்பந்தத்துடனும், அன்புடனும் நினைவு செய்கிறீர்களோ, நினைவு
கடினமாக இருக்காது. மேலும் பிராப்திகளை நினைவு செய்யுங்கள்.
அனைத்து பிராப்திகளின் வள்ளல் அனைத்து பிராப்திகளையும்
ஏற்படுத்தி விட்டார். ஆக அனைத்து பிராப்திகளிலும் நிறைந்த ஆத்மா
என்று அனுபவம் செய்கிறீர்களா? பொக்கிஷங்களை சேமிப்பதற்கான எளிய
விதி பாப்தாதா கூறியிருக்கின்றார் - என்ன என்ன பொக்கிஷங்கள்
இருக்கின்றனவோ அந்த அனைத்து பொக்கிஷங்களையும் அடைவதற்கான விதி
- புள்ளி. அழியக் கூடிய பொக்கிஷங்களிலும் புள்ளி வைத்துக்
கொண்டே சென்றால் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்லும் அல்லவா!
ஆக அழிவற்ற பொக்கிஷங்களை சேமிப்பதற்கான விதி புள்ளி வைப்பதாகும்.
மூன்று புள்ளிகள் உள்ளன - ஒன்று நான் ஆத்மா புள்ளி, தந்தையும்
புள்ளி மற்றும் நாடகத்தில் எது நடந்து முடிந்ததோ அதற்கும்
முற்றுப்புள்ளி. ஆக புள்ளி வைப்பதற்கு வருகிறதா? அனைத்தையும்
விட மிக எளிய வார்த்தை எது? புள்ளி வைப்பது தானே! ஆத்மா
புள்ளியாக இருக்கிறேன், தந்தையும் புள்ளியாக இருக்கின்றார்
என்ற நினைவின் மூலம் தானாகவே பொக்கிஷங்கள் சேமிப்பாகி விடுகிறது.
புள்ளியை விநாடியில் நினைவு செய்வதனால் எவ்வளவு குஷி
ஏற்படுகிறது! இந்த அனைத்து பொக்கிஷங்களும் உங்களது பிராமண
வாழ்க்கையின் அதிகாரமாகும். ஏனெனில் குழந்தை ஆவது என்றால்
அதிகாரி ஆவதாகும். மேலும் விசேஷமாக மூன்று சம்பந்தத்தின்
அதிகாரம் பிராப்தியாக கிடைக்கிறது - பரமாத்மாவை தந்தை யாகவும்
ஆக்கியிருக்கிறீர்கள், ஆசிரியராகவும் ஆக்கியிருக்கிறீர்கள்
மற்றும் சத்குருவாகவும் ஆக்கி யிருக்கிறீர்கள். இந்த மூன்று
சம்பந்தங்களின் பாலனை, படிப்பு வருமானத்திற்கு ஆதாரமாகும்
மற்றும் சத்குருவின் மூலம் வரதானம் கிடைக்கிறது. எவ்வளவு
எளிதாக வரதானம் கிடைக்கிறது? ஏனெனில் தந்தை யிடமிருந்து வரதானம்
அடைவது குழந்தைகளின் பிறப்புரிமை ஆகும்.
பாப்தாதா ஒவ்வொரு குழந்தையின் சேமிப்பு கணக்கை சோதிக்கின்றார்.
நீங்களும் தனது ஒவ்வொரு நேரத்தின் சேமிப்பு கணக்கை சோதியுங்கள்.
சேமிப்பு ஆனதா? ஆகவில்லையா? அதற்கான விதி - எந்த காரியம்
செய்தாலும், அந்த காரியத்தில் தானும் திருப்தி, யாருடன்
சேர்ந்த செய்தீர்களோ அவரும் திருப்தி. இருவரும் திருப்தியாக
இருக்கிறீர்கள் என்றால் புரிந்து கொள்ளுங்கள் கர்மத்தின் கணக்கு
சேமிப்பு ஆகியிருக்கிறது. ஒருவேளை சுயம் அல்லது யாருடைய
சம்பந்தத்தில் வருகிறீர்களோ அவர் திருப்தியாக இல்லையெனில்
சேமிப்பு ஆக வில்லை.
பாப்தாதா நேரத்தைப் பற்றிய தகவலும் கொடுத்துக்
கொண்டிருக்கின்றார். நிகழ்கால சங்கம யுகத்தின் நேரம் முழு
கல்பத்திலும் உயர்ந்ததிலும் உயர்ந்த நேரமாகும். ஏனெனில் இந்த
சங்கமம் தான் சிரேஷ்ட காரியங்கள் என்ற விதை விதைக்கும்
நேரமாகும். உடனடிப் பலன் அடையக் கூடிய நேரமாகும். இந்த
சங்கமத்தின் ஒவ்வொரு விநாடியும் உயர்ந்ததிலும் உயர்ந்து ஆகும்.
அனைவரும் ஒரு விநாடியில் அசரீரி ஸ்திதியில் நிலைத்திருக்க
முடியுமா? பாப்தாதா எளிய விதி கூறியிருக்கின்றார், நிரந்தர
நினைவிற்கு ஒரு விதி உருவாக்குங்கள் - முழு நாளும் இரண்டு
வார்த்தைகள் அனைவரும் பேசுகிறீர்கள், பல முறை பேசுகிறீர்கள்.
அந்த இரண்டு வார்த்தை நான் மற்றும் எனது. எப்போது நான் என்ற
வார்த்தை கூறுவீர்களோ, அப்போது நான் ஆத்மா என்று தந்தை அறிமுகம்
கொடுத்து விட்டார். எனவே எப்பொழுதெல்லாம் நான் என்ற வார்த்தை
கூறுவீர் களோ, அப்பொழுது நான் ஆத்மா என்பதை நினைவு செய்யுங்கள்.
தனியாக நான் என்று யோசிக் காதீர்கள். நான் ஆத்மா என்பதை கூடவே
யோசியுங்கள். ஏனெனில் நான் சிரேஷ்ட ஆத்மா, பரமாத்ம பாலனையில்
இருக்கக் கூடிய ஆத்மா என்பதை நீங்கள் அறிவீர்கள் அல்லவா! மேலும்
எனது என்ற வார்த்தை கூறும் போது என்னுடையவர் யார்? என்னுடைய
பாபா அதாவது தந்தை பரமாத்மா. எந்த அளவிற்கு தந்தையிடம்
என்னுடையவர் என்று நினைப்பீர்களோ, அந்த அளவிற்கு நினைவு
எளிதாகிக் கொண்டே செல்லும். ஏனெனில் என்னுடையதை ஒருபோதும்
மறக்க முடியாது. முழு நாளும் பாருங்கள் என்னுடையது தான்
நினைவிற்கு வருகிறது. ஆக இந்த விதியின் மூலம் எளிதாக நிரந்தர
யோகி ஆகிவிட முடியும். பாப்தாதா ஒவ்வொரு குழந்தைக்கும் சுவமானம்
என்ற இருக்கையில் அமர வைத்திருக்கின்றார். சுவமானத்தின்
பட்டியலை நினைவில் கொண்டு வந்தால் மிகவும் நீளமானதாக இருக்கிறது.
ஏனெனில் சுவமானத்தில் நிலைத்திருந்தால் தேக அபிமானம் வர
முடியாது. ஒன்று தேக அபிமானம் இருக்க வேண்டும் அல்லது சுவமானம்
இருக்க வேண்டும். சுவமானம் என்றால் - சுயம் என்றால் ஆத்மாவின்
சிரேஷ்ட நினைவிற்கான இடம். ஆக அனைவரும் தனது சுவமானத்தில்
நிலைத்திருக்கிறீர்களா? எந்த அளவிற்கு சுவமானத் தில்
நிலைத்திருப்பீர்களோ, அந்த அளவிற்கு மற்றவர்களுக்கு மரியாதை
தானாகவே கொடுப்பீர்கள். ஆக சுவமானத்தில் நிலைத்திருப்பது
எவ்வளவு எளிதாக இருக்கிறது!
அனைவரும் குஷியாக இருக்கிறீர்களா? ஏனெனில் குஷியாக இருப்பவர்கள்
மற்றவர்களையும் குஷியானவர்களாக ஆக்கி விடுவார்கள். பாப்தாதா சதா
கூறுகின்றார் - முழு நாளும் ஒருபோதும் குஷியை இழந்து
விடாதீர்கள். ஏன்? குஷி அப்படிப்பட்ட ஒரு விசயம் அந்த ஒரு
குஷியில் ஆரோக்கியமும் இருக்கிறது, செல்வமும் இருக்கிறது,
மகிழ்ச்சியும் இருக்கிறது. குஷி இல்லை யெனில் வாழ்க்கையில்
சலிப்பு ஏற்பட்டு விடுகிறது. குஷிக்காகத் தான் கூறப்படுகிறது -
குஷி போன்ற பொக்கிஷம் எதுவும் இல்லை. எவ்வளவு பொக்கிஷங்கள்
வேண்டுமென்றாலும் இருக் கட்டும், ஆனால் குஷி இல்லையெனில்
பொக்கிஷங்களையும் பிராப்தியாக அடைய முடியாது. குஷிக்காக
கூறப்படுகிறது - குஷி போன்ற சத்தான உணவு எதுவும் இல்லை. ஆக குஷி
செல்வ மாகவும் இருக்கிறது, குஷி இருந்தால் ஆரோக்கியமும்
இருக்கும். பெயரே குஷி எனில் மகிழ்ச்சி இருக்கவே செய்யும். ஆக
குஷியில் மூன்றும் இருக்கும். மேலும் தந்தை அழிவற்ற குஷியின்
பொக்கிஷம் கொடுத்திருக்கின்றார், தந்தையின் பொக்கிஷத்தை இழந்து
விடக் கூடாது. ஆக சதா குஷியாக இருக்கிறீர்களா?
பாப்தாதா வீட்டுப்பாடம் கொடுத்திருக்கின்றார் - குஷியாக இருக்க
வேண்டும், அனைவருக்கும் குஷி பகிர்ந்து கொடுக்க வேண்டும்.
ஏனெனில் குஷி அப்படிப்பட்ட பொருள் எவ்வளவு கொடுப்பீர் களோ
அவ்வளவு அதிகரிக்கும். அனுபவம் செய்து பாருங்கள். அனுபவம்
செய்திருக்கிறீர்கள் தானே? குஷி பகிர்ந்து கொடுக்கிறீர்கள்
எனில் பகிர்வதன் மூலம் முதலில் தனக்குள் அதிகரிக்கும்.
குஷிப்படுத்துவதற்கு முன் முதலில் தனக்குள் குஷி ஏற்படும். ஆக
அனைவரும் வீட்டுப்பாடம் செய்தீர்களா? செய்தீர்களா? யார்
செய்திருக்கிறீர்களோ அவர்கள் கை உயர்த்துங்கள். யார்
செய்தீர்களோ - குஷியாக இருக்க வேண்டும், காரணம் கூறாமல்
நிவாரணம் செய்ய வேண்டும், சமாதான சொரூபம் ஆக வேண்டும், கை
உயர்த்துங்கள். இது நடந்து விட்டது என்று இப்பொழுது
கூறமாட்டீர்கள் தானே! பாப்தாதாவிற்கு பல குழந்தைகள் தங்களது
ரிப்போர்ட் எழுதி அனுப்பி யிருக்கின்றனர் - நான் எவ்வளவு
சதவிகதம் ஓ,கே ஆக இருக்கிறேன். இலட்சியம் வைக்கும் போது
இலட்சணம் தானாகவே வருகிறது. நல்லது.
இரட்டை அயல்நாட்டு சகோதர, சகோதரிகளுடன்:
அயல்நாட்டினருக்கு தங்களது ஒரிஜினில் அயல்நாட்டை மறந்திருக்க
மாட்டீர்கள். ஒரிஜினல் நீங்கள் எந்த தேசத்தைச் சார்ந்தவர்கள்
என்பது நினைவில் இருக்கிறது தானே! ஆகையால் அனைவரும் உங்களை
இரட்டை அயர்நாட்டினர் என்று கூறுகின்றனர். வெறும் அயல்நாட்டினர்
கிடையாது, இரட்டை அயர்நாட்டினர். எனவே உங்களுக்கு தங்களது இனிய
வீடு ஒருபோதும் மறந்திருக்காது. ஆக எங்கு இருக்கிறீர்கள்?
பாப்தாதாவின் இதய சிம்மாசனதாரிகள் அல்லவா! பாப்தாதா
கூறுகின்றார் - ஏதாவது சிறிய, பெரிய பிரச்சனை வந்தால், பிரச்சனை
அல்ல ஆனால் சோதனைத் தாள் முன்னேற்றுவதற்காக வருகிறது.
பாப்தாதாவின் இதய சிம்மாசனத்திற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது.
இதய சிம்மாசனதாரியாக ஆகிவிடுங்கள், பிறகு பிரச்சனைகள்
விளையாட்டுப் பொருட்களாக ஆகிவிடும். பிரச்சனையைப் பார்த்து
பயப்படமாட்டீர்கள், விளையாடுவீர்கள். விளையாட்டு பொருளாக
இருக்கும். அனைவரும் பறக்கும் கலையில் உள்ளவர்கள் தானே?
பறக்கும் கலை இருக்கிறதா? அல்லது நடக்கக் கூடியவர் களா?
பறப்பவர்களா அல்லது நடப்பவர்களா? பறப்பவர்கள் கை உயர்த்துங்கள்.
பாதி கை உயர்த்திக் கொண்டிருக்கிறீர்கள். பறப்பவர்களாக
இருக்கிறீர்களா? நல்லது. அவ்வ பொழுது பறப்பதை விட்டு
விடுகிறீர்களா என்ன? நடந்து கொண்டிருக்கிறோம் என்று இருக்கக்
கூடாது, சிலர் பாப்தாதாவிடம் கூறுகின்றனர் - பாபா, நான் மிக
நன்றாக நடந்து கொண்டிருக்கிறேன். எனவே பாப்தாதா கேட்கின்றார் -
நடந்து கொண்டிருக்கிறீர்களா அல்லது பறந்து கொண்டிருக்கிறீர்களா?
இப்பொழுது நடக்கக் கூடிய நேரம் அல்ல, பறக்கும் நேரமாகும்.
ஆர்வம்-உற்சாகம், தைரியம் என்ற இறக்கை ஒவ்வொருவரிடத்திலும்
இருக்கிறது. எனவே இறக்கையின் மூலம் பறக்க வேண்டும். தினமும்
சோதனை செய்யுங்கள் - பறக்கும் கலையில் பறந்து கொண்டிருக்கிறேனா?
நன்றாக இருக்கிறது, ரிசல்ட்டில் பாப்தாதா பார்த்தார் - சேவை
நிலையங்கள் அயல்நாட்டில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இன்னும் அதிகரித்துக் கொண்டே செல்லும். எவ்வாறு இரட்டை அயல்
நாட்டினர் களாக இருக்கிறீர்களோ, அவ்வாறு இரட்டை சேவை மனதினாலும்,
வார்த்தைகளினாலும் செய்து கொண்டே செல்லுங்கள். மன சக்தியின்
மூலம் ஆத்மாக்களுக்கு ஆன்மிக விருக்தி ஏற்படுத்துங்கள்.
வாயுமண்டலத்தை உருவாக்குங்கள். இப்பொழுது துக்கம் அதிகரிப்பதைப்
பார்த்து கருணை வரவில்லையா? உங்களது ஜட சிலைகளுக்கு முன் கதறிக்
கொண்டிருக்கின்றனர், கருணை காட்டுங்கள், கருணை காட்டுங்கள்,
இப்பொழுது தயை, கருணை, இரக்கம் உடையவர் களாக ஆகுங்கள். தன்
மீதும் கருணை மற்றும் ஆத்மாக்களின் மீதும் கருணை. நல்லது.
ஒவ்வொரு சீசனிலும் வந்து விடுகிறீர்கள். இது அனைவரையும் குஷி
ஏற்படுத்துகிறது. ஆக பறந்து கொண்டே செல்லுங்கள் மற்றும் பறக்க
வையுங்கள். நன்றாக இருக்கிறது, ரிசல்ட் பார்க்கின்ற போது -
தன்னை மாற்றிக் கொள்வதிலும் வேகமாக சென்று கொண்டிருக்கிறீர்கள்.
சுய மாற்றத்தின் வேகம் உலக மாற்றத்தின் வேகத்தை
அதிகப்படுத்துகிறது. நல்லது.
முதல் முறை வந்தவர்கள் எழுந்து கொள்ளுங்கள்: உங்கள்
அனைவருக்கும் பிராமணப் பிறப்பின் வாழ்த்துக்கள். நல்ல இனிப்பு
கிடைக்கும், ஆனால் பாப்தாதா உங்களுக்கு தில்குஷ் இனிப்பு
கொடுத்துக் கொண்டிருக்கின்றார். முதல் முறை மதுவனத்திற்கு
வந்ததற்கு இந்த தில்குஷ் இனிப்பு சதா நினைவில் வைத்துக்
கொள்ளுங்கள். அந்த இனிப்பு வாயில் போட்டுக் கொண்டால் கரைந்து
விடும், ஆனால் இந்த தில்குஷ் இனிப்பு சதா கூடவே இருக்கும்.
வந்திருக்கும் உங்களைப் பார்த்து பாப்தாதா மற்றும் உள்நாடு,
வெளிநாட்டு சகோதர, சகோதரிகள் குஷியடைந்து கொண்டிருக் கின்றனர்.
அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், அமெரிக்காவும்
பார்த்துக் கொண்டிருக் கிறது, ஆப்பிரிக்காவும் பார்த்துக்
கொண்டிருக்கிறது, ரஷ்யாவும் பார்த்துக் கொண்டிருக்கிறது,
இலண்டனும் பார்த்துக் கொண்டிருக்கிறது, 5 கண்டங்களும்
பார்த்துக் கொண்டிருக்கிறது. உங்கள் அனைவரின் பிறந்த நாள்
வாழ்த்துக்களை அங்கு அமர்ந்து கொண்டே கொடுக்கின்றனர். நல்லது.
பாப்தாதாவின் ஆன்மிக டிரில் நினைவிருக்கிறதா தானே! இப்பொழுது
பாப்தாதா ஒவ்வொரு குழந்தையிடமும் புது குழந்தையாக இருந்தாலும்,
பழைய குழந்தையாக இருந்தாலும், சிறியவர் களாக இருந்தாலும்,
பெரியவர்களாக இருந்தாலும் சிறியவர்கள் மிக விரைவாக தந்தைக்கு
சமம் ஆகிவிட முடியும். இப்பொழுது விநாடியில் மனதை எங்கு
ஈடுபடுத்த விரும்புகிறீர்களோ, அங்கு மனம் ஒருநிலை ஆகிவிட
வேண்டும். இந்த ஒருநிலைப்படுத்தும் டிரில் சதா செய்து கொண்டே
இருங்கள். இப்பொழுது ஒரு விநாடி மனதிற்கு எஜமானர் ஆகி நான்
மற்றும் எனக்கு உலகம் பாபா, வேறு யாருமில்லை என்ற ஏகாக்ர
ஸ்திதியில் நிலைத்து விடுங்கள். நல்லது.
நாலாப்புறங்களிலும் உள்ள அனைத்து தீவிர முயற்சியாளர்
குழந்தைகளுக்கு, சதா ஆர்வம்-உற்சாகம் என்ற இறக்கைகளினால்
பறக்கும் கலையின் அனுபவி மூர்த்தி குழந்தைகளுக்கு, சதா தனது
சுவமானம் என்ற இருக்கையில் செட் ஆகியிருக்கும் குழந்தைகளுக்கு,
சதா கருணை உள்ள முடையவராகி உலக ஆத்மாக்களுக்கு மன சக்தியின்
மூலம் சுகம்-சாந்தியின் அஞ்சலி கொடுக்கக் கூடிய கருணை, இறக்கம்
உடைய குழந்தைகளுக்கு, சதா தந்தையின் அன்பில் மூழ்கியிருக்கும்
இதய சிம்மாசனதாரி குழந்தைகளுக்கு, பாப்தாதாவின் அன்பு நினைவுகள்
மற்றும் நமஸ்தே.
நல்லது, அனைவரும் மிக மிக மிக குஷியாக இருக்கிறீர்கள். மிகுந்த
குஷியுடன் இருக்கிறீர்களா? எவ்வளவு இருக்கிறது? சதா இவ்வாறு
இருங்கள். எது நடந்தாலும் நடக்க விடுங்கள், இப்பொழுது குஷியாக
இருக்க வேண்டும். நாம் பறக்க வேண்டும், எந்த விசயமும் கீழே
கொண்டு வர முடியாது. உறுதியாக இருக்க வேண்டும். பக்கா உறுதிமொழி
எடுத்திருக்கிறீர்களா? எவ்வளவு பக்காவாக இருக்கிறது? குஷியாக
இருங்கள், அனைவருக்கும் குஷி கொடுங்கள். ஏதாவது ஒரு விசயம்
பிடிக்கவில்லை என்றாலும் குஷி இழந்து விடாதீர்கள். விசயத்தை
விட்டு விடுங்கள், குஷியை விட்டு விடாதீர்கள். விசயங்கள்
அழிந்து விடும், ஆனால் குஷி சதா கூடவே இருக்க வேண்டும் அல்லவா!
எது கூடவே இருக்க வேண்டுமோ அதை விட்டு விடுகிறீர்கள். எதை
விடவேண்டுமோ அதை கூடவே வைத்திருக்கிறீர்கள். இவ்வாறு
செய்யாதீர்கள். அமிர்தவேளை தினமும் முதலில் தனக்குத் தானே குஷி
என்ற உணவு பரிமாறுங்கள். நல்லது.
ஆசீர்வாதம்:
இனிய அமைதி என்ற அன்பில் மூழ்கிய ஸ்திதியின் மூலம் பற்றற்ற
சக்திசாலி சொரூபம் ஆகுக.
தேகம், தேக சம்பந்தம், தேக சன்ஸ்காரம், மனிதன் அல்லது பொருள்,
வாயுமண்டலம், அதிர்வலை கள் போன்ற அனைத்தும் இருந்தாலும் கூட
அவைகள் தன் பக்கம் ஈர்க்கவே கூடாது. மனிதர்கள் கதறிக் கொண்டு
இருப்பார்கள், ஆனால் நீங்கள் உறுதியானவர்களாக இருங்கள். இயற்கை,
மாயை அனைத்தும் கடைசி பங்கிற்காக தன் பக்கம் எவ்வளவு தான்
ஈர்க்கப்பட்டும், ஆனால் நீங்கள் விடுபட்டவர்களாக மற்றும்
தந்தைக்கு அன்பானவர்களாக இருக்கும் ஸ்திதியில் மூழ்கியிருங்கள்.
இதைத் தான் பார்த்தும் பாராதிருத்தல், கேட்டும் கேளாதிருத்தல்
என்று கூறப்படுகிறது. இதுவே இனிய அமைதி சொரூபத்தின் அன்பில்
மூழ்கிய நிலையாகும். இப்படிப்பட்ட ஸ்திதி உருவாகும் போது தான்
பற்றற்ற சக்தி சொரூபத்தின் வரதானி ஆத்மா என்று கூற முடியும்.
சுலோகன்:
தூய அன்னப் பறவையாகி அவகுணம் என்ற கற்களை விட்டு விட்டு
நல்லவைகள் என்ற முத்துக்களை தேர்ந்தெடுத்துக் கொண்டே
செல்லுங்கள்.
அவ்யக்த சமிக்ஞை: இப்போது ஈடுபாடெனும் அக்னியை மூட்டி யோகத்தை
ஜூவாலா ரூபமாக்குங்கள்.
எரிமலை ரூபம் ஆவதற்காக இப்பொழுது வீடு திரும்ப வேண்டும் என்ற
ஈடுபாடு சதா இருக்க வேண்டும். செல்ல வேண்டும் என்றால் விடுபட்டு
இருப்பதாகும். தனது நிராகார வீட்டிற்குச் செல்ல வேண்டும்,
ஆகையால் தனது வேஷத்தையும் அவ்வாறு உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
ஆக செல்ல வேண்டும் மற்றும் அனைவரையும் திரும்பி அழைத்துச்
செல்ல வேண்டும் - இந்த நினைவின் மூலம் தானாகவே சர்வ சம்பந்தம்,
இயற்கையின் அனைத்து கவர்ச்சிகளிலிருந்து விடுபட்டு அதாவது
சாட்சி ஆகிவிடுவீர்கள். சாட்சி ஆவதனால் எளிதாகவே தந்தைக்குத்
துணை யாக அல்லது பாப்சமான் ஆகிவிடுவீர்கள்.
குறிப்பு: இன்று மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையாகும்.
அனைத்து இராஜயோகி தபஸ்வி சகோதர, சகோதரிகள் மாலை 6.30 மணி முதல்
7.30 மணி வரை, விசேஷ யோக பயிற்சியில் தனது ஆகாரி பரிஸ்தா
சொரூபத்தில் நிலைத்திருந்து, பக்தர்களின் கூக்குரல் கேட்டு
மற்றும் உபகாரம் செய்யுங்கள். மாஸ்டர் தயை, கருணை
உள்ளமுடையவராகி அனைவரின் மீதும் கருணைப் பார்வை வையுங்கள்.
முக்தி, ஜீவன் முக்திக்கான வரதானம் கொடுங்கள்.