22-01-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! இது ஆரம்பம் முடிவுமற்ற உருவாகி உருவாக்கப்பட்ட நாடகம், இது மிகவும் நன்றாக உருவாக்கப்பட்டுள்ளது, இதனுடைய முதல், இடை, கடைசியை நீங்கள் நல்ல விதமாக அறிவீர்கள்.

கேள்வி:
எந்த கவர்ச்சியின் ஆதாரத்தில் அனைத்து ஆத்மாக்களும் உங்களிடம் ஈர்க்கப்பட்டு வருவார்கள்?

பதில்:
தூய்மை மற்றும் யோகத்தின் கவர்ச்சியின் ஆதாரத்தில். இதன் மூலமே உங்களின் விருத்தி (வளர்ச்சி) ஏற்பட்டுக்கொண்டு போகும். மேலும் போகப்போக தந்தையை சட்டென்று தெரிந்து கொண்டு விடுவார்கள். இவ்வளவு எண்ணற்றவர்கள் அனைவரும் ஆஸ்தி அடைந்துக் கொண்டி ருக்கின்றனர் என்பதைப் பார்த்தார்கள் என்றால் பலர் வருவார்கள். எந்த அளவு கால தாமதம் ஆகிறதோ அந்த அளவு உங்கள் மீது கவர்ச்சி அதிகரித்துக் கொண்டே செல்லும்.

ஓம் சாந்தி.
ஆத்மாக்களாகிய நாம் பரந்தாமத்திலிருந்து வருகிறோம் என்பது ஆன்மீகக் குழந்தை களுக்குத் தெரியும் - புத்தியில் இருக்கிறதல்லவா. எப்போது அனைத்து ஆத்மாக்களும் வருவ தென்பது முடிந்து இன்னும் சிலர் மட்டுமே மீதம் இருப்பார்களோ அப்போது தந்தை வருகிறார். இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு யாருக்கு வேண்டுமானாலும் புரிய வைப்பது மிகவும் சகஜமானது. தூரதேசத்தில் வசிப்பவர் அனைவருக்கும் பின்னால் கடைசியில் வருகிறார். இன்னும் சிலர் மீதம் இருப்பார்கள். இதுவரையிலும் கூட மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டிருக்கிறது அல்லவா. இதையும் தெரிந்திருக்கிறீர்கள் - தந்தையையே தெரிந்து கொள்ளவில்லை எனும்போது சிருஷ்டியின் முதல் இடை கடைசியை எப்படி அறிவார்கள்? இது எல்லைக்கப்பாற்பட்ட நாடகம் அல்லவா. எனவே நாடகத்தின் நடிகர்களைத் தெரிந்திருக்க வேண்டும். எப்படி எல்லைக்குட்பட்ட நாடகத்தின் நடிகர்களைக் கூட தெரிந்திருக்கிறது - இன்னாருக்கு இந்த நடிப்பு கிடைத்துள்ளது என்பதைப் போல, எந்த விசயம் கடந்த காலமானதாகி விடுகிறதோ அதனைப் பிறகு சிறிய நாடகமாக உருவாக்குகின்றனர். எதிர்காலத்தை அப்படி உருவாக்க முடியாது. கடந்த காலமாக இருந்த விசயத்தை எடுத்துக் கொண்டு மேலும் கொஞ்சம் கதையைச் சேர்த்து நாடகமாக தயாரிக் கின்றனர். அதையே அனைவருக்கும் காட்டுகின்றனர். எதிர்காலத்தைப் பற்றி அறிவதில்லை. இப்போது நீங்கள் புரிந்திருக்கிறீர்கள், தந்தை வந்திருக்கிறார், ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது, நாம் ஆஸ்தியைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம். யாரெல்லாம் வந்தபடி இருக்கின்றனரோ அவர்களுக்கு நாம் வழி காட்டுகிறோம் - தேவி தேவதா பதவியை அடைவதற்காக. இந்த தேவதைகள் இவ்வளவு உயர்வானவர் களாக எப்படி ஆனார்கள்? இது கூட யாருக்கும் தெரியாது. உண்மையில் ஆதி சனாதனம் என்பது தேவி தேவதா தர்மம்தான் ஆகும். தமது தர்மத்தை மறந்து விட்டதால் எங்களுக்கு எல்லா தர்மமும் ஒன்று தான் என்று சொல்லி விடுகின்றனர்.

பாபா நம்மைப் படிப்பிக்கின்றார் என்பதை இப்போது குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். தந்தையின் வழிப் படிதான் சித்திரங்கள் முதலானவை உருவாக்கப்படுகின்றன. பாபா திவ்ய திருஷ்டியின் மூலம் படங்களை உருவாக்க வைத்துக் கொண்டிருந்தார். சிலர் பிறகு தமது புத்தியைப் பயன்படுத்தியும் உருவாக்குகின்றனர். குழந்தை களுக்கு இதையும் புரிய வைத்துள்ளார் - நடிகர்களாக இருக்கின்றோம், ஆனால் படைப்பவர், இயக்குனர் முதலானவரை யாருக்கும் தெரியாது என்பதை கண்டிப்பாக எழுதுங்கள். தந்தை இப்போது புதிய தர்மத்தை ஸ்தாபனை செய்துக் கொண்டிருக்கிறார். பழையதிலிருந்து புதிய உலகம் உருவாக வேண்டும். இதுவும் புத்தியில் இருக்க வேண்டும். பழைய உலகில்தான் தந்தை வந்து உங்களை பிராமணர் களாக ஆக்குகிறார். பிராமணர்கள்தான் பிறகு தேவதைகள் ஆகின்றனர். யுக்தியைப் பாருங்கள் எவ்வளவு நன்றாக உள்ளது. அனாதியாக உருவாகி உருவாக்கப்பட்ட நாடகம்தான், ஆனாலும் மிகவும் நன்றாக உருவாகியுள்ளது. உங்களுக்கு ஆழத்திலும் ஆழமான விசயங்களை தினமும் சொல்லியபடி இருக்கிறேன் என்று தந்தை கூறுகிறார். வினாசம் தொடங்கினால் குழந்தைகளாகிய உங்களுக்கு கடந்த காலத்தின் முழு வரலாறும் தெரிந்து விடும். பிறகு சத்யுகத்தில் சென்று விட்டால் கடந்த காலத்தின் வரலாறு கொஞ்சம் கூட நினைவில் இருக்காது. நடைமுறையில் நடிப்பை நடித்தபடி இருப்பீர்கள். கடந்த காலத்தைப் பற்றி யாருக்குச் சொல்வோம்? இந்த லட்சுமி நாராயணருக்கு கடந்த காலத்தைப் பற்றி கொஞ்சமும் தெரியாது. உங்களுடைய புத்தியில் கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் என அனைத்தும் உள்ளது - எப்படி வினாசம் ஆகும், எப்படி இராஜ்யம் ஏற்படும், எப்படி மாளிகைகள் உருவாகும் என்பது போன்றவை. கண்டிப்பாக உருவாகும் அல்லவா. சொர்க்கத்தின் காட்சிகளே தனிப்பட்டவையாகும். நடிப்பை எப்படி எப்படி நடித்தபடி இருப்பார்கள் என்பதெல்லாம் தெரிந்தபடி இருக்கும். இது நோக்கமின்றி ரத்தம் சிந்தக் கூடிய விளையாட்டு. காரணமே இல்லாமல் நஷ்டம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது அல்லவா. நில நடுக்கம் ஏற்படுகிறது, எவ்வளவு நஷ்டம் ஏற்படுகிறது. அணு குண்டுகள் வீசுகின்றனர் - இது தேவையற்றது அல்லவா. யாரும் எதுவும் செய்வதில்லை. விசால புத்தி உள்ளவர் கள் வினாசம் ஆகியிருந்தது என்பதைப் புரிந்து கொள்கின்றனர். கண்டிப்பாக அடிதடி நடந்தது. இது போன்ற விளையாட்டையும் உருவாக்குகின்றனர். இதைப் புரிந்து கொள்ளவும் முடியும். சில சமயம் சிலருக்கு புத்தியில் தோன்றும். நீங்கள் நடைமுறையில் இருக்கிறீர்கள். நீங்கள் அந்த இராஜ்யத் தில் எஜமான் ஆகவும் ஆகிறீர்கள். இப்போது அந்த புதிய உலகத்திற்குக் கண்டிப்பாகச் செல்ல வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். பிரம்மாவின் மூலமோ, பிரம்மா குமார்-குமாரிகள் மூலமோ பிராமணர்கள் ஆகிறவர்கள் ஞானத்தை எடுக்கும்போது அங்கே வந்து விடுகின்றனர். தம்முடைய வீடு மற்றும் இல்லறத்தில் வசிக்கின்றனர் அல்லவா. உங்களால் பலரைத் தெரிந்து கொள்ளவும் முடிவதில்லை. சென்டர்களுக்கு எவ்வளவு பேர் வருகின்றனர். இவ்வளவு பேரும் நினைவில் இருக்க முடியாது. எவ்வளவு பிராமணர்கள் இருக்கின்றனர், வளர்ச்சி அடைந்தபடி எண்ணற்றவர்கள் ஆகி விடுகின்றனர். துல்லியமான கணக்கு எடுக்க முடியாது. துல்லியமாக தமது பிரஜைகள் எவ்வளவு பேர் என ராஜாவுக்கும் தெரியாது. மக்கள் தொகை கணக்கும் எடுக்கின்றனர், ஆனாலும் வித்தியாசம் ஏற்படுகிறது. இப்போது நீங்களும் மாணவர்கள், இவரும் (பிரம்மா) மாணவர். அனைத்து சகோதரர்களும் (ஆத்மாக்களும்) ஒரு தந்தையை நினைவு செய்ய வேண்டும். பாபா பாபா என்று சொல் என சிறிய குழந்தைகளுக்கும் கற்றுத் தரப்படுகிறது. முன்னே செல்லச் செல்ல தந்தையைச் சட்டென்று தெரிந்து கொண்டு விடுவார்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். இவ்வளவு அளவற்றவர்கள் அனைவரும் ஆஸ்தியை பெற்றுக் கொண்டிருக் கின்றனர் என்பதை பார்த்தார்கள் என்றால் பலர் வருவார்கள். நேரம் அதிகம் ஆக ஆக அந்த அளவு உங்கள் மீது ஈர்ப்பு ஏற்பட்டபடி இருக்கும். தூய்மையடையும்போது ஈர்ப்பு ஏற்படுகிறது. எந்த அளவு நினைவில் இருப்பீர்களோ அந்த அளவு ஈர்ப்பு ஏற்படும். பிறரையும் கவர்ந்து ஈர்ப்பீர்கள். தந்தையும் கவர்ந்து ஈர்க்கிறார் அல்லவா. மிகவும் வளர்ச்சி அடைந்தபடி இருப்பீர்கள். அதற்கான யுக்திகளும் உருவாக் கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கீதையின் பகவான் யார்? கிருஷ்ணரை நினைவு செய்வது மிகவும் சகஜமே. அவர் சாகார ரூபமாக இருக்கிறார் அல்லவா. நிராகார தந்தை சொல்கிறார் - என்னை மட்டும் நினைவு செய்யுங்கள் - இந்த விஷயத்தில்தான் அனைத்து ஆதாரமும் உள்ளது, ஆகையால் இந்த விˆயத்தை அனைவரிடமிருந்தும் எழுத வைத்துக் கொண்டே இருங்கள் என்று பாபா கூறியிருக்கிறார். பெரிய பெரிய பட்டியல் (லிஸ்ட்) தயாரித்தீர்கள் என்றால் மனிதர்களுக்குத் தெரிய வரும்.

பிராமணர்களாகிய நீங்கள் பக்குவமானவர்களாக ஆகும்போது மரம் வளர்ந்தபடி இருக்கும். மாயையின் புயல்கள் கூட இறுதி வரை வீசும். வெற்றி அடைந்து விட்டால் பிறகு முயற்சியும் இருக்காது, மாயையும் இருக்காது. நினைவில்தான் நிறைய பேர் தோல்வி அடைகின்றனர். எந்த அளவு நீங்கள் நினைவின் தொடர்பில் உறுதியாக இருப்பீர்களோ அந்த அளவு தோல்வி அடைய மாட்டீர்கள். இந்த இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. நம்முடைய இராஜ்யம் நடக்கப் போகிறது என்ற நிச்சயம் குழந்தைளுக்கு இருக்கிறது, பிறகு நாம் வைர வைடூரியங்களை எங்கிருந்து கொண்டு வருவோம்! களஞ்சியங்கள் அனைத்தும் எங்கிருந்து வரும்! இவையனைத் தும் இருந்தது என்பது சரிதானே! இதில் குழம்ப வேண்டிய விˆயமே இல்லை. என்ன நடக்க வுள்ளதோ அதை நடைமுறையில் பார்க்கப் போகிறீர்கள். சொர்க்கம் கண்டிப்பாக உருவாக வேண்டும். நல்ல விதமாக படிப்பவர் களுக்கு நாம் சென்று எதிர்காலத்தில் இளவரசன் ஆகப் போகிறோம் என்பது நிச்சயம் இருக்கும். வைர வைடூரியங்களால் ஆன மாளிகைகள் கண்டிப்பாக இருக்கும். இந்த நிச்சயமும் சேவை செய்யத் தகுந்த குழந்தை களிடம் இருக்கும், குறைந்த பதவி பெறக்கூடியவர்களுக்கு நாம் மாளிகைகள் முதலானவைகளை எப்படி உருவாக்கப் போகிறோம் என்பது போன்ற சிந்தனைகள் வராது. யார் சேவை செய்வார்களோ அவர்கள்தான் மாளிகை களுக்குச் செல்வார்கள் அல்லவா. தாச தாசிகள் தயாராக கிடைப்பார்கள். சேவை செய்யத் தகுந்த குழந்தைகளுக்குத்தான் இப்படிப்பட்ட சிந்தனைகள் வரும். குழந்தைகள் கூட யார் யார் நல்ல சேவை செய்கின்றனர் என்பதை புரிந்து கொள்கின்றனர். நாமோ படித்தவர்களுக்கு முன்பாக சுமை தூக்கப் போகிறோம். இந்த பாபா இருக்கிறார் அல்லவா, பாபாவுக்கு சிந்தனை இருக்கிறது அல்லவா. முதியவர், குழந்தை சமமாக ஆகி விட்டனர், ஆகையால் இவரின் நடவடிக்கைகள் கூட குழந்தைப் பருவத்தைப் போல இருக்கிறது. பாபாவின் ஒரே நடவடிக்கை - குழந்தைகளைப் படிப்பிப்பது, கற்பிப்பது. வெற்றி மாலையின் மணியாக வேண்டும் என்றால் முயற்சியும் நிறைய தேவை. மிகவும் இனிமையானவராக ஆக வேண்டும். ஸ்ரீமத்படி நடக்க வேண்டும், அப்போதுதான் உயர்ந்தவராக ஆவீர்கள். இது புரிந்து கொள்ளக் கூடிய விஷயம் அல்லவா. நான் சொல்பவற்றை யோசித்து தீர்மானியுங்கள் என்று தந்தை சொல்கிறார். முன்னே செல்லச் செல்ல உங்களுக்கு காட்சிகள் கிடைத்தபடி இருக்கும். அருகாமையில் வரும்போது நினைவு வந்து கொண்டே இருக்கும். தமது இராஜ்யத்திலிருந்து திரும்பி வந்து 5 ஆயிரம் வருடங்கள் ஆகி விட்டன. 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றி வந்தீர்கள். வாஸ்கோடகாமாவைப் பற்றி சொல்லும்போது அவர் உலக சக்கரத்தை சுற்றி வந்தார் என்று சொல்வது போல, நீங்கள் இந்த உலகில் 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றினீர்கள். அந்த ஒரு வாஸ்கோடகாமா சென்றார் அல்லவா. இவர் கூட ஒருவர்தான், அவர் உங்களுக்கு 84 பிறவிகளின் ரகசியத்தைப் புரிய வைக்கிறார். இராஜ்யம் நடக்கிறது. ஆக, தனக்குள் பார்க்க வேண்டும் - எனக்குள் தேக அபிமானம் ஏதும் இல்லைதானே? சோர்ந்து போவதில்லைதானே? எங்கும் கெட்டுப் போகவில்லைதானே?

நீங்கள் யோக பலத்துடன் இருந்தால், சிவபாபாவை நினைவு செய்து கொண்டே இருந்தால், உங்களை யாரும் அடித்து விட (துன்புறுத்த) முடியாது. யோக பலம் தான் கவசம் (கேடயம்) ஆகும். யாரும் எதுவும் செய்ய முடியாது. ஒருவேளை யாராவது அடியை (துக்கம்) அனுபவிக் கின்றனர் என்றால் கண்டிப்பாக தேக அபிமானம் உள்ளது என்று அர்த்தம். ஆத்ம அபிமானிகளை யாரும் அடிக்க முடியாது. தவறு அவர்களுடையதாகத் தான் இருக்கும். பகுத்தறிவு கூறுகிறது - ஆத்ம அபிமானியை யாரும் எதுவும் செய்ய முடியாது. ஆகையால் ஆத்ம அபிமானி ஆவதற்காக முயற்சி செய்ய வேண்டும். அனைவருக்கும் செய்தியும் கொடுக்க வேண்டும். பகவானின் மாகாவாக்கியம் - மன்மனாபவ. எந்த பகவான்? இதையும் குழந்தைகளாகிய நீங்கள் புரிய வைக்க வேண்டும். இந்த ஒரு விசயத்தில்தான் உங்கள் வெற்றி ஏற்பட வேண்டும். முழு உலகிலும் மனிதர்களின் புத்தியில் கிருஷ்ண பகவானுடைய மகா வாக்கியம் என்றுதான் உள்ளது. நீங்கள் புரிய வைக்கும்போது சரியான விசயம்தான் என்று சொல்வார்கள். ஆனால் உங்களைப் போல புரிந்து கொள்ளும்போது சொல்வார்கள் - பாபா கற்றுத் தருவது சரியானதே. நான் இப்படி இருக்கிறேன், என்னை யாரும் தெரிந்து கொள்ள முடியாது என்று கிருஷ்ணர் கூற மாட்டார். என்னை யாரும் தெரிந்து கொள்ள முடியாது. கிருஷ்ணரை அனைவரும் தெரிந்து கொள்வார்கள். கிருஷ்ணரின் உடல் மூலம் பகவான் சொல்கிறார் என்றும் சொல்ல முடியாது. இல்லை. கிருஷ்ணர் இருப்பதென்னவோ சத்யுகத்தில். அங்கே எப்படி பகவான் வருவார்? பகவான் வருவதே புருஷோத்தம சங்கம யுகத்தில். ஆக குழந்தைகளாகிய நீங்கள் பலரையும் எழுத வைத்தபடி செல்லுங்கள். உங்களுடைய பெரிய நோட்டுப் புத்தகம் அச்சிடப்பட்டு இருக்க வேண்டும், அதில் அனைவரின் கருத்துக்களும் இருக்க வேண்டும். இவ்வளவு பேர் எழுதி இருந்ததைப் பார்த்தால் தாமும் எழுதுவார்கள். பிறகு உங்களிடம் பலரின் கருத்துகள் இருக்கும் - கீதையின் பகவான் யார்? உயர்ந்ததிலும் உயர்ந்தவர் தந்தைதான் ஆவார், கிருஷ்ணர் உயர்ந்ததிலும் உயர்ந்தவர் இல்லை என்று மேலேயும் எழுதி வைத்திருக்க வேண்டும். அவர் என்னை மட்டும் நினைவு செய்யுங்கள் என்று சொல்ல முடியாது. பிரம்மாவைக் காட்டிலும் உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பகவான் அல்லவா. முக்கியமான விசயமே இதுதான், இதில்தான் அனைவருமே குழப்பமாகி விடுவார்கள்.

இங்கே வந்து விட வேண்டும் என்று பாபா சொல்வதில்லை. சத்குருவை தம்மவராக்கிக் கொண்டீர்கள், பிறகு தமது வீட்டில் சென்று இருங்கள். ஆரம்பத்தில் உங்களின் பட்டி நடந்தது. சாஸ்திரங்களிலும் கூட பட்டி என்பது உள்ளது, ஆனால் பட்டி என்று எதற்கு சொல்லப்படுகிறது என்பதை யாரும் அறிவதில்லை. செங்கல்லின் பட்டி (சூளை) இருக்கிறது. அதில் சில பக்கு வமடைந்தும், சில லேசாகவும் (வேகாமல்) வெளிப்படுகின்றன. இங்கும் கூட பாருங்கள், தங்கம் இல்லை, மற்றபடி கல், முள் போன்றவை இருக்கின்றன. பழைய பொருட்களுக்கு மதிப்பு அதிகம். சிவபாபாவுக்கு, தேவதைகளுக்கு மதிப்பு இருக்கிறது அல்லவா. சத்யுகத்தில் மதிப்பு குறித்த விசயமே இருப்பதில்லை. அங்கே பழைய பொருட்களை அமர்ந்து தேடிக் கொண்டிருப்பதில்லை. அங்கே வயிறு நிரம்பியிருக்கும். எதையும் தேடக்கூடிய தேவை இருக்காது. நீங்கள் தோண்டக் கூடிய அவசியம் இருக்காது. துவாபரத்திற்குப் பிறகு தோண்டுவது தொடங்குகிறது. வீடு கட்டு கிறார்கள், எதாவது பொருள் வெளி வருகிறது எனும்போது கீழே ஏதோ இருக்கிறது என்று புரிந்து கொள்கின்றனர். சத்யுகத்தில் உங்களுக்கு எதுவும் கவலை இருக்காது. அங்கே தங்கமே தங்கமாக இருக்கும். செங்கல்லே தங்கத்தாலானதாக இருக்கும். கல்பத்திற்கு முன்பு என்ன நடந்ததோ, என்ன பதிவாகியுள்ளதோ, அது காட்சியாகத் தெரியும். ஆத்மாக்கள் அழைக்கப்படுவதும் கூட நாடகத்தில் பதிவாகியுள்ளது. இதில் குழப்பமடைய வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு வினாடியும் நடிப்பு நடக்கும், பிறகு மறைந்து போகும். இது படிப்பாகும். பக்தி மார்க்கத்தில் பல படங்கள் இருக்கின்றன. உங்களுடைய இந்த படங்கள் அனைத்தும் அர்த்தம் நிறைந்ததாக உள்ளன. அர்த்தமில்லாத படங்கள் எதுவுமில்லை. பிறருக்கு நீங்கள் புரிய வைக்காத வரை யாரும் எதுவும் புரிந்து கொள்ள முடியாது. புரிய வைக்கக் கூடிய புத்திசாலி ஞானம் நிறைந்தவர் ஒரு தந்தைதான் ஆவார். இப்போது உங்களுக்கு ஈஸ்வரிய வழி கிடைக்கிறது. நீங்கள் ஈஸ்வரிய வம்சம் அல்லது குலத்தைச் சேர்ந்தவர்கள். ஈஸ்வரன் வந்து வம்சத்தைத்தான் ஸ்தாபனை செய்கிறார். இப்போது உங்களுக்கு இராஜ்யம் எதுவும் கிடையாது. இராஜ்யம் இருந்தது, இப்போது இல்லை. தேவி-தேவதைகளின் தர்மமும் கண்டிப்பாக உள்ளது. சூரிய வம்ச, சந்திர வம்சத்தின் இராஜ்யம் இருக்கிறது அல்லவா. கீதையின் மூலம் பிராமண குலமும் உருவாகிறது, சூரிய வம்சத்தின், சந்திர வம்சத்தின் குலமும் உருவாகிறது. வேறு எதுவும் இருக்க முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் சிருஷ்டியின் முதல், இடை, கடைசியைத் தெரிந்து கொண்டு விட்டீர்கள். பெரிய பிரளயம் ஏற்படும் என்று முன்பு புரிந்து கொண்டிருந்தார்கள். கடலில் ஆலிலையில் கிருஷ்ணர் வருவார் என பின்னர் காட்டுகின்றனர். முதல் நம்பரில் ஸ்ரீகிருஷ்ணர்தான் வருவார் அல்லவா. மற்றபடி கடலின் விசயம் அல்ல, இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு மிக நல்ல புத்திசாலித்தனம் வந்துள்ளது. ஆன்மீகப் படிப்பை நல்ல விதமாக படிப்பவர்களுக்கு குஷி ஏற்படும். நல்ல விதமாக படிப்பவர்கள்தான் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைவார்கள். ஒருவேளை யாரிடமாவது மனம் ஈடுபட்டு விட்டது என்றால் படிக்கும் சமயம் கூட அவர் நினைவில் வருவார். புத்தி அங்கே போய்விடும், ஆகையால் படிப்பு பிரம்மச்சரியத்தில் நடக்கிறது. ஒரு தந்தையைத் தவிர வேறு எங்கும் புத்தி போகக் கூடாது என்று இங்கே குழந்தைகளாகிய உங்களுக்கு புரிய வைக்கப்படுகிறது. ஆனால் பலருக்கு பழைய உலகம் நினைவில் வந்து விடுகிறது என்பது தெரியும். பிறகு இங்கே அமர்ந்திருந்தாலும் கேட்பதே இல்லை. பக்தி மார்க்கத்திலும் இப்படிப்பட்டவர்கள் இருப்பார்கள். சத்சங்கத்தில் அமர்ந்தபடி புத்தி எங்கெங்கோ ஓடியபடி இருக்கிறது. இது மிகவும் பெரிய வலிமை மிக்க கடினமான பரீட்சையாகும். சிலர் அமர்ந்திருப்பது போல் இருந்தாலும் கேட்பதே இல்லை. பல குழந்தைகளுக்கு குஷி ஏற்படுகிறது. எதிரில் குஷியில் ஊஞ்சலாடியபடி இருப்பார்கள். புத்தி தந்தையிடம் சென்றது என்றால் பிறகு இறுதி நிலைக்குத் தகுந்தாற்போன்ற கதி ஏற்படும். இதற்காக மிகவும் நல்ல முயற்சி செய்ய வேண்டும். இங்கே உங்களுக்கு மிகவும் அதிகமான செல்வம் கிடைக்கிறது. நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. வெற்றி மாலையின் மணியாவதற்காக மிகவும் நல்ல முயற்சி செய்ய வேண்டும், மிகவும் இனிமையானவர் ஆக வேண்டும். ஸ்ரீமத்படி நடக்க வேண்டும்.

2. யோகம் (நினைவு)தான் பாதுகாப்பிற்கான கேடயம் ஆகும். ஆகையால் யோகபலத்தை சேமிக்க வேண்டும். ஆத்ம அபிமானி ஆவதற்காக முழுமையான முயற்சி செய்ய வேண்டும்.

வரதானம்:
விசேஷம் என்ற சொல்லின் ஸ்மிருதி மூலம் சம்பூர்ண நிலையின் குறிக்கோளை அடையக்கூடிய, சுய மாற்றம் செய்பவர் ஆகுக.

சதா இதே ஸ்மிருதி இருக்க வேண்டும் - நான் விசேச ஆத்மா, விசேச காரியத்திற்கு நிமித்தமாக இருக் கிறேன். மற்றும் விசேசதாவைக் காட்டக்கூடிய இந்த விசேஷ் என்ற சொல்லை விசேசமாக நினைவு வையுங்கள் - பேசுவதும் விசேசம், பார்ப்பதும் விசேசம், செய்வதும் விசேசம், யோசிப்பதும் கூட விசேசம் ஒவ்வொரு விசயத்திலும் இந்த விசேஷ் என்ற சொல்லைக் கொண்டு வருவதன் மூலம் சகஜமாக சுய மாற்றத்தில் இருந்து உலக மாற்றம் செய்பவராக ஆகி விடுவீர்கள். மேலும் சம்பூர்ண நிலையை அடைவதற்கான லட்சியமாகிய குறிக்கோளையும் சகஜமாகவே அடைந்து விடுவீர்கள்.

சுலோகன்:
விக்னங்களிடம் பயப்படுவதற்கு பதிலாக பேப்பர் (சோதனைத் தாள்) எனப் புரிந்து கொண்டு அவற்றைக் கடந்து செல்லுங்கள்.

தனது சக்திசாலி மனதின் மூலம் சகாஷ் கொடுப்பதற்கான சேவை

இப்போது மனதின் தரத்தை அதிகப் படுத்துங்கள். அப்போது தரம் உள்ள ஆத்மாக்கள் அருகில் வருவார்கள். இதில் இரட்டை சேவை உள்ளது - தன்னுடையது மற்றும் மற்றவர்களுடையதும் கூட. தனக்காகத் தனியாக முயற்சி செய்ய வேண்டியதாக இருக்காது. பிராலப்தத்தை அடைந்து விட்டோம் என்ற ஸ்திதி அனுபவம் ஆகும். இச்சமயத்தின் சிரேஷ்ட பிராலப்தம் -- சதா சுயம் சர்வ பிராப்திகளால் நிரம்பியவராக இருப்பது மற்றும் அனைவரையும் நிரம்பியவராக ஆக்குவது.