22-03-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! நம்முடைய பாரலௌகீக தந்தை உலக அதிசயத்தை (சொர்க்கம்) உருவாக்குகிறார். அதற்கு நாம் அதிபதியாகின்றோம் என்ற போதை உங்களுக்கு இருக்க வேண்டும்.

கேள்வி:
பாபாவின் சங்கத்தில் (தொடர்பில்) இருப்பதால் உங்களுக்கு என்னென்ன பிராப்திகள் கிடைக்கின்றது?

பதில்:
பாபாவின் தொடர்பினால் நாம் முக்தி, ஜீவன் முக்தியின் அதிகாரத்தைப் பெறுகின்றோம். பாபாவின் தொடர்பு கரையேற கயிற்றைக் கொடுக்கிறது. (அக்கரை அழைத்து செல்கிறது) பாபா நம்மை தன்னுடையவராக்கி ஆஸ்திகராகவும் திரிகால தர்ஷியாகவும் மாற்றுகின்றார். நாம் படைப்பவர் மற்றும் படைப்பின் முதல் இடை கடையைத் தெரிந்துக் கொள்கிறோம்.

பாடல்:
பொறுமையாக இரு மனிதா......

ஓம் சாந்தி.
இதை யார் கூறுகிறார்கள்? குழந்தைகளுக்கு தந்தை தான் கூறுகிறார். அனைத்து குழந்தைகளுக்கும் சொல்ல வேண்டியிருக்கிறது. ஏனென்றால் அனைவரும் துக்கத்தில் இருக்கிறார்கள். தைரியம் அற்றவர் களாக இருக்கிறார்கள். தந்தையை நினைக்கிறார்கள். துக்கத் திலிருந்து எங்களை விடுவியுங்கள். சுகத்தின் வழி காட்டுங்கள் என்கிறார்கள். இப்போது மனிதர்களுக்கு, குறிப்பாக பாரதவாசிகளுக்கு, பாரதவாசிகளாகிய நாம் சுகத்தில் இருந்தோம் என்ற நினைவில்லை. பாரதம் பழமையிலும் பழமையான அதிசயமான நாடாக இருந்தது. உலக அதிசயம் என கூறுகிறார்கள் அல்லவா? இங்கே மாயாவின் இராஜ்யத்தில் ஏழு அதிசயங்கள் பாடப் பட்டிருக்கிறது. அது ஸ்தூல அதிசயம் ஆகும். இது மாயாவின் அதிசயம் ஆகும். இதில் துக்கம் இருக்கிறது. ராமர், பாபாவின் அதிசயம் சொர்க்கம் ஆகும். அதுவே உலக அதிசயம் ஆகும். பாரதம் சொர்க்கமாக இருந்தது. வைரம் போன்று இருந்தது. இங்கே தேவி தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. பாரத வாசிகள் அனைவரும் இதை மறந்து விட்டனர். தேவதைகளுக்கு முன்பு தலை வணங்குகின்றனர். பூஜை செய்கின்றனர். ஆனால் யாருக்கு பூஜை செய்கிறார்களோ அவர் களுடைய வரலாற்றைத் தெரிந்துக் கொள்ள வேண்டும் அல்லவா? இங்கே பாரலௌகீக தந்தை யிடம் வந்துள்ளீர்கள் என எல்லையற்ற தந்தை புரிய வைக்கின்றார். சொர்க்கத்தை ஸ்தாபனை செய்யக் கூடியவர் பாரலௌகீக தந்தையாவார். இந்த காரியத்தை எந்த மனிதரும் செய்ய முடியாது. இவருக்கு (பிரம்மா) கூட பாபா கூறுகின்றார்-, கிருஷ்ணனின் பழைய தமோபிரதான ஆத்மா நீ, உன்னுடைய பிறவிகளை பற்றி அறியவில்லை. நீ கிருஷ்ணனாக இருக்கும் போது சதோபிரதானமாக இருந்தாய். பின் 84 பிறவிகளை எடுத்து இப்போது தமோபிரதானமாக ஆகியிருக்கிறாய். விதவிதமான பெயர் இருக்கின்றது. இப்போது உன்னுடைய பெயர் பிரம்மா என வைக்கப்பட்டிருக்கிறது. பிரம்மாவிலிருந்து விஷ்ணு அல்லது ஸ்ரீகிருஷ்ணர் ஆகிறார். பிரம்மாவிலிருந்து விஷ்ணு, விஷ்ணுவிலிருந்து பிரம்மா என்றாலும் விசயம் ஒன்று தான். பிரம்மாவின் வாய் வழி வம்சம் பிராமணர்களிலிருந்து தேவதையாகிறீர்கள். பிறகு அதே தேவி தேவதைகள் தான் சூத்திரர்கள் ஆகிறார்கள். இப்போது நீங்கள் பிராமணன் ஆகிவிட்டீர்கள். இப்போது பாபா குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். இதுவே பகவான் வாக்கு ஆகும். நீங்கள் மாணவர்கள் ஆகிவிட்டீர்கள். எனவே உங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி இருக்க வேண்டும். ஆனால் அவ்வளவு மகிழ்ச்சி இருப்பதில்லை. செல்வந்தர்கள் செல்வத்தின் போதையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் அல்லவா? இங்கே பகவானின் குழந்தை ஆகியும் அவ்வளவு மகிழ்ச்சி இல்லை. புரிந்துக் கொள்வதில்லை. கல் புத்தி அல்லவா? அதிர்ஷ்டத்தில் இல்லை என்றால் ஞானத்தை தாரணை செய்ய முடியாது. இப்போது பாபா உங்களை கோவிலில் வைக்கும் அளவிற்கு தகுதி அடைய வைத்திருக்கிறார். ஆனால் மாயாவின் நட்பு குறைந்தது அல்ல. நல்ல நட்பில் இருந்தால் உயர்வர். கெட்ட தொடர்பில் இருந்தால் அழிவர் என பாடப்பட்டிருக்கிறது. பாபாவின் தொடர்பு உங்களை முக்தி ஜீவன் முக்திக்கு அழைத்துச் செல்கிறது. பிறகு இராவணனின் கெட்ட சகவாசம் துர்கதியில் அழைத்துச் செல்கிறது. 5 விகாரங்களின் தொடர்பா கிறது அல்லவா? பக்தியில் சத்சங்கம் என்று கூறுகிறார்கள். ஆனால் ஏணியில் கீழே இறங்கிக் கொண்டே வருகிறார்கள். ஏணியில் இருந்து யாராவது விழுந்தால் நிச்சயம் கீழே தான் விழுவார் கள் அல்லவா? அனைவருக்கும் சத்கதியை அளிக்கும் வள்ளல் ஒரு தந்தை தான். யாராக இருந்தாலும் பகவானை மேலே தான் காட்டுகின்றார்கள். இப்போது தந்தை இல்லாமல் குழந்தைகளுக்கு யார் அறிமுகம் கொடுப்பார்கள். தந்தை தான் குழந்தைகளுக்கு தனது அறிமுகத்தைக் கொடுக்கின்றார். அவர் தன்னுடையவராக்கி சிருஷ்டியின் முதல், இடை கடை ஞானத்தைக் கொடுக்கின்றார். நான் வந்து உங்களை ஆஸ்திகராக மாற்றுகிறேன். திரிகால தர்ஷியாக மாற்றுகிறேன் என தந்தை கூறுகின்றார். இது நாடகம், இதை எந்த சாது சன்னியாசியும் தெரிந்துக் கொள்ளவில்லை. அது எல்லைக்குட்பட்ட நாடகம் ஆகும். இது எல்லைக்கப்பாற் பட்டதாகும். இந்த எல்லையற்ற நாடகத்தில் நாம் நிறைய சுகத்தையும் பார்க்கின்றோம். நிறைய துக்கத்தையும் பார்க்கின்றோம். கிருஷ்ணர் மற்றும் கிறிஸ்தவர்களின் கணக்கு வழக்கு எப்படி இருக்கிறது என்று பாருங்கள். அவர்கள் பாரதத்தில் சண்டையிட்டு இராஜ்யத்தை அடைந்தனர். இப்போது நீங்கள் சண்டையிடவில்லை. அவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். இராஜ்யம் உங்களுக்குக் கிடைக்கிறது. இது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இந்த விசயங்களை வேறு யாரும் அறியவில்லை. ஞானம் கொடுக்கக் கூடியவர் ஞானக் கடலாகிய ஒரே ஒரு தந்தை தான். அவர் அனைவருக்கும் சத்கதி கொடுக்கிறார். பாரதத்தில் தேவி தேவதைகளின் இராஜ்யம் இருந்தது என்றால் சத்கதி இருந்தது. மற்ற ஆத்மாக்கள் அனைவரும் முக்தி தாமத்தில் இருந்தனர். பாரதம் தங்கமாக இருந்தது. நீங்கள் தான் இராஜ்யம் செய்தீர்கள். சத்யுகத்தில் சூரிய வம்ச இராஜ்யம் இருந்தது. இப்போது நீங்கள் சத்ய நாராயணனின் கதையைக் கேட்கிறீர்கள். நரனிலிருந்து நாராயணன் ஆவதற்கான கதை இதுவாகும். உண்மையான கீதையினால் பாரதம் உண்மையான கண்டமாக, மிகவும் மதிப்புடையதாக மாறுகிறது என்று பெரிய எழுத்துக்களில் எழுதுங்கள். தந்தை வந்து உண்மையான கீதையைக் கூறுகின்றார். சகஜ இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார் என்றால், மதிப்புடையதாக மாறுகின்றது. பாபா மந்திர வித்தை களை மிகவும் நன்கு புரிய வைக்கிறார். ஆனால் குழந்தைகள் தேக அபிமானத்தால் மறந்து போகிறார்கள். ஆத்ம அபிமானி ஆகினால் தாரணையும் ஆகும். தேக அபிமானத்தின் காரணாமாக தாரணை ஆவதில்லை.

நான் சர்வ வியாபி என்று நான் ஒருபோதும் கூறுவதில்லை என பாபா புரிய வைக்கிறார். தாயும் நீயே தந்தையும் நீயே...... என எனக்கு கூறுகிறார்கள். இதன் பொருள் என்ன? உமது கருணையால் அளவிட முடியாத சுகம் கிடைக்கிறது. இப்போதோ துக்கம். இந்த வார்த்தைகள் எந்த சமயத்தில் கூறப்பட்டவை என புரியவில்லை. பறவைகள் கீச் கீச் என சப்தம் செய்துக் கொண்டே இருக்கின்றன. அர்த்தம் புரிவதில்லை. அவ்வாறே இவர்களும் கீச் கீச் என செய்துக் கொண்டே இருக்கிறார்கள். பொருள் புரியவில்லை. இது அனைத்தும் தவறு என பாபா புரிய வைக்கிறார். யார் தவறாக மாற்றியது? இராவணன். பாரதம் உண்மையான கண்டமாக இருந்தது என்றால் அனைவரும் உண்மையைப் பேசினர். திருடவோ ஏமாற்றவோ இல்லை. இங்கே எவ்வளவு திருடுகிறார்கள். உலகில் ஏமாற்றமே ஏமாற்றம். இதற்கு பாவ உலகம், துக்க உலகம் என்று கூறப்படுகிறது. சத்யுகத்திற்கு சுக உலகம் என்று பெயர். இது விகார உலகம் ஆகும், வேசியாலயம் ஆகும். சத்யுகம் சிவாலயம் ஆகும். பாபா எவ்வளவு நன்றாக புரிய வைக்கின்றார். பிரம்மா குமாரி ஈஸ்வரிய விஷ்வ வித்யாலம் என்ற பெயர் கூட எவ்வளவு நன்றாக இருக்கிறது. இப்போது பாபா வந்து புத்திசாலி ஆக்குகிறார். இந்த விகாரங்களை வெற்றி அடைந்தால் இந்த உலகத்தையே வெற்றி அடையலாம் என கூறுகின்றார்கள். இந்த காமம் தான் மிகப் பெரிய எதிரி ஆகும். எங்களை தேவி தேவதையாக ஆக்குங்கள் என குழந்தைகள் அழைக்கிறார்கள்.

பாபாவின் உண்மையான மகிமைகளை குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துக் கொள்கிறீர்கள். மனிதர்களுக்கு தந்தை பற்றியும் தெரியவில்லை. தந்தையின் மகிமைகளைப் பற்றியும் தெரிய வில்லை. அவர் அன்பின் கடல் என நீங்கள் அறிகிறீர்கள். பாபா உங்களுக்கு இவ்வளவு ஞானம் கூறுகின்றார், இதுவே அவரின் அன்பாகும். ஆசிரியர்கள் மாணவர்களைப் படிக்க வைக்கிறார்கள் என்றால் மாணவர்கள் எப்படி மாறுகிறார்கள். குழந்தைகளாகிய நீங்களும் தந்தையைப் போன்று அன்பின் கடலாக வேண்டும். அன்போடு யாருக்கு வேண்டுமானாலும் புரிய வைக்கலாம். நீங்களும் ஒருவருக்கொருவர் அன்பாக இருங்கள் என பாபா கூறுகின்றார். நம்பர் ஒன் அன்பு பாபாவின் அறிமுகத்தைக் கொடுப்பது. நீங்கள் குப்தமான தானம் செய்கிறீர்கள். ஒருவரை ஒருவர் வெறுக்கக் கூடாது. இல்லையென்றால் நீங்களும் தண்டனை அடைய வேண்டியிருக்கும். யாரையாவது அவமதித்தால் தண்டனை அடைய வேண்டியிருக்கும். ஒரு போதும் யார் மீதும் வெறுப்பு காட்டாதீர்கள், அவமதிக்காதீர்கள். தேக அபிமானத்தில் வருவதால் தான் பதீதமாகிறீர்கள். பாபா ஆத்ம அபிமானி ஆக்குகிறார் என்றால் நீங்கள் தூய்மையாகிறீர்கள். இப்போது 84 பிறவிகளின் சக்கரம் முடிகிறது என அனைவருக்கும் புரிய வையுங்கள். சூரிய வம்சத்தின் மகாராஜா மகாராணியாக யார் இருந்தனரோ அவர்களே 84 பிறவிகளை எடுத்து கீழே இறங்கி இறங்கி இப்போது தரையில் இருக்கின்றனர். இப்போது பாபா மீண்டும் மகாராஜா மகாராணியாக்குகின்றார். என்னை மட்டும் நினைத்தால் தூய்மையாகி விடுவீர்கள் என பாபா கூறுகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் இரக்க மனம் உடையவராகி முழு நாளும் சேவையைப் பற்றி சிந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும். இனிமையான குழந்தைகளே, பாவம் துக்க ஆத்மாக்களாக இருக்கிறார்கள், அந்த துக்க ஆத்மாக்களுக்கு இரக்க மனமுடையவராகி சுகம் அளியுங்கள் என பாபா டைரக்ஷன் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவர்களுக்கு மிகவும் சுருக்கமாக கடிதங்களை எழுத வேண்டும். என்னை நினையுங்கள் மற்றும் சொர்க்கத்தை நினையுங்கள் என பாபா கூறுகின்றார். ஒரு சிவபாபாவிற்குத் தான் மகிமை இருக்கிறது. மனிதர்களுக்கு பாபாவின் மகிமையைப் பற்றித் தெரியவில்லை. இந்தியில் கூட கடிதம் எழுதலாம். சேவை செய்ய வேண்டும் என்று குழந்தை களுக்கு ஆர்வம் இருக்க வேண்டும். பலர் தற்கொலை செய்துக் கொள்ள கூட நினைக்கிறார்கள். அவர்களுக்கு தற்கொலை மகா பாவம் என நீங்கள் புரிய வைக்கலாம். இப்போது குழந்தை களாகிய உங்களுக்கு ஸ்ரீமத் அளிப்பவர் சிவபாபா ஆவார். அவரே ஸ்ரீஸ்ரீ சிவபாபா ஆவார். உங்களை ஸ்ரீ லஷ்மி ஸ்ரீ நாராயணன் ஆக்குகிறார். ஸ்ரீஸ்ரீ அவர் ஒருவர் தான். அவர் ஒரு போதும் சக்கரத்தில் வருவதில்லை. மற்ற படி உங்களுக்கு ஸ்ரீ என்ற பட்டம் கிடைக்கிறது. தற்காலத்தில் பலருக்கு ஸ்ரீ என்ற பட்டம் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். எங்கே அந்த நிர்விகாரி? எங்கே இந்த விகாரிகள்? இரவு பகல் வித்தியாசம் இருக்கிறது. தந்தை தினந்தோறும் ஆத்ம உணர்வுடைவராகுங்கள் மற்றும் அவைருக்கும் செய்தியைக் கொடுங்கள் என புரிய வைத்துக் கொண்டே இருக்கிறார். நீங்கள் செய்தியாளர்களின் குழந்தைகள். அனைவருக்கும் சத்கதியை வழங்கக் கூடிய வள்ளல் ஒருவர் தான். மற்ற தர்ம ஸ்தாபகர்களை குரு என கூற முடியாது. சக்தி அளிப்பவர் ஒருவரே. நல்லது

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. யார் மீதும் வெறுப்பைக் காண்பிக்கக் கூடாது. இரக்க மனமுடையவராகி துக்கத்திலிருக்கும் ஆத்மாக்களை சுகமுடையவராக மாற்றும் சேவை செய்ய வேண்டும். தந்தைக்குச் சமமாக மாஸ்டர் அன்புக் கடல் ஆக வேண்டும்.

2. நாம் பகவானின் குழந்தைகள். இந்த போதையில் அல்லது மகிழ்ச்சியில் இருக்க வேண்டும். ஒரு போதும் மாயையின் தலைகீழான தொடர்பில் போய்விடக் கூடாது. ஆத்ம உணர்வுடையவராகி ஞானத்தைக் கடைபிடிக்க வேண்டும்.

வரதானம்:
தந்தைக்கு சமமாக வரதானி ஆகி ஒவ்வொருவருடைய உள்ளத்திற்கும் ஓய்வு அளிக்கக்கூடிய மாஸ்டர் திலாராம் ஆகுக.

தந்தைக்கு சமமாக வரதானி மூர்த்தியாக எந்தக் குழந்தைகள் இருக்கின்றார்களோ, அவர்கள் ஒருபோதும் எவருடைய பலவீனத்தையும் பார்க்கமாட்டார்கள், அவர்கள் அனைவரின் மீதும் கருணை உள்ளம் கொண்டிருப்பார்கள். எவ்வாறு தந்தை யாருடைய பலவீனத்தையும் உள்ளத்தில் வைத்துக் கொள்வதில்லையோ, அதுபோல் வரதானி குழந்தைகளும் யாருடைய பலவீனத்தையும் உள்ளத்தில் தாரணை செய்யமாட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவருடைய உள்ளத்திற்கும் ஓய்வளிக்கக்கூடிய மாஸ்டர் திலாராமாக இருப்பார்கள், ஆகையினால், உடன் இருப்பவர்களோ அல்லது பிரஜைகளோ - அனைவரும் அவர்களுடைய மகிமையைப் பாடுவார்கள். இவர்கள் நம்முடைய சதா சினேகி, சகயோகி ஆவார்கள் என்று அனைவருடைய உள்ளத்தில் இருந்தும் இந்த ஆசீர்வாதம் வெளிப்படும்.

சுலோகன்:
யார் சதா கவலையற்ற சக்கரவர்த்தியாக இருக்கின்றார்களோ, அவர்களே சங்கமயுகத்தில் சிரேஷ்டமான ஆத்மா ஆவார்கள்.

மாதேஸ்வரி அவர்களின் விலைமதிக்க முடியாத மகாவாக்கியம்

1. ஞானம் நிறைந்த ஆத்மாக்கள் செய்யும் தவறுகளுக்கான தண்டனை 100 மடங்கு ஆகும்

இந்த அழிவற்ற ஞான யக்ஞத்தில் வந்து சாட்சாத் பரமாத்மாவின் கையை பிடித்துக் கொண்ட பிறகு தெரிந்தோ, தெரியாமாலோ, ஒருவேளை அதன் மூலம் விகர்மம் ஏற்பட்டுவிடுகிறது என்றால், அதற்கான தண்டனை மிகவும் கடுமையாக இருக்கும். எவ்வாறு ஞானம் பெறுவதினால் அதற்கு 100 மடங்கு நன்மை இருக்கிறது, அவ்வாறே ஞானம் பெற்ற பிறகு ஏதாவது தவறு ஏற்படுகிறதென்றால், மேலும் 100 மடங்கு தண்டனையும் கூட இருக்கும், ஆகையால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தவறு செய்து கொண்டேயிருந்தீர்கள் என்றால் பலஹீனம் ஏற்பட்டுவிடும். ஆகையால் சிறிய பெரிய தவறுகளைக் கண்டுபிடித்துக் கொண்டேயிருங்கள், முன்னதாகவே சோதனை செய்துக் கொண்டே செல்லுங்கள். பாருங்கள், எப்படி புத்திசாலியான பெரிய மனிதர்கள் தவறான காரியம் செய்கிறார்கள் என்றால், அதற்கு பெரிய தண்டனை கிடைக்கிறது, மேலும் யார் சாதாரண மனிதர்களாக ஏதாவது தவறான காரியம் செய்கிறார்கள் என்றால், அதற்காக இந்தளவு தண்டனை கிடைப்பது கிடையாது. இப்பொழுது நீங்கள் கூட பரமாத்மாவின் குழந்தைகள் என்று சொல்லிக் கொள்கிறீர்கள் என்றால், அந்தளவு நீங்கள் உண்மையாக இருக்க வேண்டும்.

2. பரமாத்மா எப்படி அனைத்தும் அறிந்தவர் இருக்கிறார்?

பரமாத்மா அனைத்தும் அறிந்தவர் என்று உலகத்தினர் கூறுகின்றனர், ஆனால் அனைத்தும் அறிந்தவர் என்பது - அனைவரது மனங்களையும் அறிந்தவர் என்று பொருள் கிடையாது. ஆனால் உலகத்தினுடைய முதல்-இடை-இறுதியை பற்றி அறிந்திருக்கக் கூடியவராக இருக்கிறார். பரமாத்மா படைக்கிறார், பாலனை செய்கிறார் மேலும் அழிக்கும் காரியத்தையும் செய்கிறார் என்று பொருள் அல்ல, பரமாத்மா உற்பத்தி செய்கிறார், உணவு கொடுக்கிறார், அழித்தும் விடுகிறார் என்பது அல்ல. மனிதர்கள் தனது கர்மத்தின் கணக்கு-வழக்கு படி பிறவி எடுக்கிறார்கள். பரமாத்மா வந்து அனைவரது தவறான எண்ணங்களையும், நல்ல எண்ணங்களையும் தெரிந்திருக் கிறார் என்பது பொருள் அல்ல. முழு நாளும் தவறான எண்ணங்கள் வரும், ஞானம் உள்ள குழந்தை களுக்கு சுத்த எண்ணங்கள் வந்து கொண்டேயிருக்கும், மற்றபடி ஒவ்வொருவரின் எண்ணத்தையும் பார்த்துக் கொண்டிருப்பாரா என்ன? இப்பொழுதோ ஆத்மாக்கள் அனைவரும் துக்கமான நிலையில் சென்று கொண்டிருகிறார்கள், அவர்களை நல்ல நிலைக்கு எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்பதை பரமாத்மா அறிந்திருக்கிறார். இதைத் தான் அனைத்தையும் அறிந்தவர் என்று சொல்லப் படுகிறது. இப்பொழுது மனிதர்களின் செயல் கீழானதாக இருக்கிறது, அதை சிரேஷ்ட செயலாக மாற்ற வேண்டும். கற்றுக் கொடுப்பது மேலும் அவர்களை கர்மபந்தனத் திலிருந்து விடுவிப்பது, இதை பரமாத்மா தெரிந்திருக்கிறார். பரமாத்மா சொல்கிறார் - எனக்கு படைப்பு மற்றும் என்னுடைய படைப்பின் முதல்-இடை-இறுதியினுடைய முழுமையான ஞானத்தை நான் தெரிந்திருக்கிறேன். இந்த அறிதலை குழந்தைகளாகிய உங்களுக்கு தந்து கொண்டிருக்கிறேன். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அந்த பாபாவின் நிரந்தர நினைவில் இருக்க வேண்டும் அப்பொழுது தான் அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபட்டு, அமரலோகத்திற்குச் செல்வீர்கள், இப்பொழுது இதை தெரிந்திருப்பதற்குத் தான் அனைத்தையும் தெரிந்தவர் என்று சொல்கிறார்கள். நல்லது. ஒம்சாந்தி

அவ்யக்த சமிக்ஞை - சத்தியம் மற்றும் பண்பு நிறைந்த கலாச்சாரத்தை தனதாக்குங்கள்

ஒருபொழுதும் பண்புகளை விட்டுவிட்டு உண்மையை நிரூபிக்கக் கூடாது. பண்பின் அடையாளம் பணிவு ஆகும். இந்தப் பணிவு, படைப்பு காரியத்தை சகஜமாக்குகின்றது. எதுவரை பணிவானவர் ஆகவில்லையோ, அதுவரை படைப்பை செய்ய முடியாது. ஞானத்தினுடைய சக்தியானது சாந்தி மற்றும் அன்பாகும். அஞ்ஞானத்தின் சக்தியானது கோபத்தை மிகவும் கடுமையான சமஸ்காரம் ஆக்கி விடுகின்றது மற்றும் அதை பயன்படுத்திக் கொண்டும் இருக்கின்றீர்கள், பிறகு, மன்னிப்பும் கேட்டுக் கொண்டே இருக்கின்றீர்கள். அவ்வாறு இப்பொழுது ஒவ்வொரு குணத்தையும், ஒவ்வொரு ஞானத்தின் கருத்தை சமஸ்காரமாக ஆக்குங்கள், அப்பொழுது பண்புகள் வந்துவிடும்.