22-07-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! தேகி அபிமானி (ஆத்ம
அபிமானி) ஆனீர்கள் என்றால் சீத்தளமானவர்களாகி விடுவீர்கள்.
விகாரங்களின் துர்நாற்றம் நீங்கிப் போய்விடும். (அந்தர்முகி )
உள்முகமாக இருப்பவராக ஆகிவிடுவீர்கள். மலராக ஆகிவிடுவீர்கள்.
கேள்வி:
பாப்தாதா அனைத்து
குழந்தைகளுக்கும் எந்த இரு வரதானங்கள் அளிக்கிறார்? அவைகளை
சொரூபத்தில் எடுத்து வருவதற்கான விதி என்ன?
பதில்:
பாபா அனைத்து குழந்தைகளுக்கும்
சாந்தி மற்றும் சுகத்தின் வரதானம் அளிக்கிறார். பாபா கூறுகிறார்.
குழந்தைகளே நீங்கள் சாந்தமாக இருப்பதற்கான அப்பியாசம்
செய்யுங்கள். யாராவது தப்பும் தவறுமாக பேசினால் நீங்கள் பதில்
கொடுக்காதீர்கள். நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். வீணான
வெட்டிப் பேச்சின் விஷயங்களைப் பேசக்கூடாது. யாருக்குமே துக்கம்
கொடுக்கக் கூடாது. வாயிலே சாந்தி என்ற கூழாங்கற்களை
வைத்துவிட்டீர்கள் என்றால் இந்த இரண்டு வரதானங்களும்
சொரூபத்தில் வந்து விடும்.
ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான குழந்தைகள் சில சமயம் முன்னால்
இருக்கிறார்கள். சில சமயம் தூரமாக சென்றுவிடுகிறார்கள்.
முன்னால் யார் இருக்கிறார்கள் என்றால், யார் நினைவு
செய்கிறார்களோ, ஏனெனில் நினைவு யாத்திரையில் தான் எல்லாமே
அடங்கி உள்ளது. பார்வையினாலேயே திருப்தி என்று பாடப்படுகிறது
அல்லவா? ஆத்மாவின் பார்வை பரமபிதா மீது செல்கிறது வேறு எதுவுமே
அதற்கு நன்றாக இருப்பதில்லை. அவரை நினைவு செய்வதால் விகர்மங்கள்
வினாசம் ஆகிறது. எனவே தங்கள் மீது எவ்வளவு எச்சரிக்கை கொள்ள
வேண்டும்! நினைவு செய்யவில்லை என்றால் இவரது யோகம் அறுபட்டு
உள்ளது என்று மாயை புரிந்து கொண்டு விடுகிறது. பின் தன் பக்கம்
இழுக்கிறது. ஏதாவது தவறான கர்மம் செய்வித்து விடுகிறது.
அப்படிப்பட்டவர்கள் தந்தைக்கு நிந்தனை செய்விக்கிறார்கள். பக்தி
மார்க்கத்தில் பாபா, எனக்கு உங்களைத் தவிர வேறு யாருமில்லை
என்று பாடுகிறார்கள். அதனால் தான் தந்தை கூறுகிறார் -
குழந்தைகளே குறிக்கோள் மிகவும் உயர்ந்தது ஆகும். காரியம்
செய்தபடியே தந்தையை நினைவு செய்வது என்பது உயர்ந்ததிலும்
உயர்ந்த குறிக்கோள். இதில் மிகவும் நல்ல அப்பியாசம் தேவை.
இல்லாவிட்டால் தவறான காரியம் செய்பவர்கள் நிந்திப்பவர் ஆகி
விடுகிறார்கள், உதாரணமாக ஒருவருக்கு கோபம் வந்தது, தங்களுக்குள்
சண்டையிட்டுக் கொள்கிறார்கள் என்றால் அப்பொழுதும் நிந்தனை
செய்து விட்டார்கள் அல்லவா? இதில் மிகுந்த எச்சரிக்கை கொள்ள
வேண்டும். தங்களது இல்லறத்தில் இருந்த படியே புத்தியை
தந்தையிடம் ஈடுபடுத்த வேண்டும். நாம் தேகி அபிமானி ஆவதிற்கு
முயற்சி செய்ய வேண்டும். தேக அபிமானத்தில் வருவதால் ஏதாவது
தவறான காரியம் செய்கிறார்கள் என்றால் தந்தைக்கு நிந்தனை
செய்விக்கிறார்கள். இது போல சத்குரு விற்கு நிந்தனை
செய்விப்பவர்கள் இலட்சுமி நாராயணர் ஆவதற்கான பதவியை அடைய
முடியாது என்று தந்தை கூறுகிறார். எனவே முழுமையாக புருஷார்த்தம்
செய்து கொண்டே இருந்தீர்கள் என்றால் இதனால் நீங்கள் மிகவுமே
சீத்தளமானவர்களாகி விடுவீர்கள். 5 விகாரங்களின் விஷயங்களும்
நீங்கிப் போய் விடும். தந்தையிடமிருந்து நிறைய சக்தி கிடைத்து
விடும். காரியங்கள், தொழில் ஆகியவையும் செய்ய வேண்டும் கர்மம்
செய்ய வேண்டாம் என்று தந்தை கூறுவதில்லை. அங்கு உங்களது
கர்மங்கள் அகர்மம் ஆகிவிடும். கலியுகத்தில் என்ன கர்மம்
செய்கிறார்களோ அது விகர்மம் ஆகிவிடுகிறது. இப்பொழுது
சங்கமயுகத்தில் நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டியதாக உள்ளது. அங்கு
கற்றுக் கொள்ள வேண்டிய விஷயமில்லை. இங்கு பெற்ற கல்வி தான்
அங்கு கூட வரும். வெளிமுகத்தன்மை நல்லது அல்ல என்று தந்தை
குழந்தை களுக்குப் புரிய வைக்கிறார். உள்முகமாக இருப்பீர்களாக.
குழந்தைகளாகிய நீங்கள் உள்முகமாக ஆகிவிடும் அந்த நேரமும் வரும்.
தந்தையைத் தவிர வேறு எதுவும் நினைவிற்கு வராது. நீங்கள்
வந்ததும் அவ்வாறுதான், யாருடைய நினைவும் இருக்கவில்லை.
கர்ப்பத்திலிருந்து வெளியில் வந்ததும் தான் இவர்கள் எனது தாய்
தந்தையர், இவர்கள் இன்னார் என்று தெரிய வந்தது. எனவே இப்பொழுது
செல்ல வேண்டியதும் அவ்வாறே தான். நாம் ஒரு தந்தையினுடையவர்கள்
ஆவோம், வேற யாருமே அவரைத் தவிர புத்தியில் நினைவிற்கு வரக்
கூடாது. நேரம் இருக்கிறது தான், இருந்தாலும் புருஷார்த்தம்
முழுமையான விதத்தில் செய்ய வேண்டும். சரீரத்தின் மீதோ எந்த
நம்பிக்கையும் இல்லை. முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்.
வீட்டில் மிகுந்த அமைதி இருக்க வேண்டும் துக்கம் அல்ல.
இல்லாவிட்டால் இவருக்குள் எவ்வளவு அசாந்தி இருக்கிறது என்று
எல்லோரும் கூறுவார்கள். குழந்தைகளாகிய நீங்கள் முற்றிலும்
சாந்தமாக இருக்க வேண்டும். நீங்கள் சாந்தியின் ஆஸ்தி எடுத்து
கொண்டிருக்கிறீர்கள் அல்லவா? இப்பொழுது நீங்கள் முட்களுக்கு
நடுவில் இருக்கிறீர்கள். மலர்களுக்கு நடுவில் இல்லை.
முட்களுக்கிடையில் இருந்து மலர் ஆக வேண்டும். முள்ளுக்கு
முள்ளாக கூடாது எந்த அளவு நீங்கள் தந்தையை நினைவு செய்வீர்களோ
அந்த அளவு நீங்கள் சாந்தமாக இருப்பீர்கள். யாராவது தப்பும்
தவறுமாக பேசினார்கள் என்றால் நீங்கள் அமைதியாக இருங்கள். ஆத்மா
இருப்பதே சாந்தமாக. ஆத்மாவின் சுய தர்மமே சாந்தி. இப்பொழுது
நாம் அந்த வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பதை நீங்கள்
அறிந்துள்ளீர்கள். தந்தையும் சாந்தியின் கடல் ஆவார். நீங்களும்
சாந்தியின் கடல் ஆக வேண்டும் என்று தந்தை கூறுகிறார். வீணான
வெட்டிப் பேச்சுக்கள் மிகுந்த தீமையை ஏற்படுத்துகின்றது. தந்தை
டைரக்ஷன் கொடுக்கிறார். இது போன்ற விஷயங்கள் பேசக் கூடாது.
இதனால் நீங்கள் தந்தைக்கு நிந்தனை செய்விக்கிறீர்கள். சாந்தமாக
இருக்கும் பொழுது எந்த ஒரு நிந்தனையோ விகர்மமோ ஆவதில்லை.
தந்தையை நினைவு செய்து கொண்டே இருப்பதால் மேலும் விகர்மங்கள்
வினாசம் ஆகும். நீங்களும் அசாந்தி யாக ஆகாதீர்கள் (அமைதியை
இழக்காதீர்கள்). மற்றவர்களையும் அசாந்தப்படுத்தாதீர்கள்.
மற்றவருக்கும் துக்கம் கொடுப்பதால் ஆத்மா அதிருப்தி அடைகிறது.
நிறைய பேர் புகார்கள் எழுதுகிறார்கள். பாபா இவர் வீட்டிற்கு
வந்தாரோ இல்லையோ கலகம் ஏற்படுத்தி விடுகிறார். பாபா எழுதுகிறார்
நீங்கள் உங்களது சுய தர்மமாகிய சாந்தியில் இருங்கள்
ஹாத்மதாயினுடைய கதையும் உள்ளது அல்லவா! அவருக்கு கூறினார்-
நீங்கள் வாயில் கூழாங்கற்களை வைத்து விட்டீர்கள் என்றால் சப்தம்
வெளியே வரவே வராது. பேச முடியாமல் இருப்பீர்கள்.
குழந்தைகளாகிய நீங்கள் சாந்தியில் இருக்க வேண்டும் மனிதர்கள்
அமைதிக்காக எவ்வளவு அடி வாங்கு கிறார்கள்! நமது இனிமையான பாபா
சாந்தியின் கடல் ஆவார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள்
அறிந்துள்ளீர்கள். சாந்தப் படுத்தி உலகத்தில் சாந்தியை ஸ்தாபனை
செய்கிறார். தங்களது வருங்கால பதவியையும் நினைவு செய்யுங்கள்.
அங்கு இருப்பதே ஒரு தர்மம். வேறு எந்த தர்மமும் இருக்காது
அதற்குத்தான் உலகில் சாந்தி என்று கூறப்படுகிறது பின் மற்ற
மற்ற தர்மங்கள் வரும் பொழுது குழப்பங்கள் ஏற்படுகின்றன.
இப்பொழுது எவ்வளவு சாந்தி இருக்கிறது. நமது வீடு அது தான்
என்பதை புரிந்துள்ளீர்கள். நமது சுயதர்மம் சாந்தி ஆகும்.
சரீரத்தின் சுயதர்மம் சாந்தி என்று கூறமாட்டோம். சரீரம் அழியக்
கூடிய பொருள் ஆகும். எவ்வளவு காலம் ஆத்மாக்கள் அங்கு
இருப்பார்களோ பின் அவ்வளவு சாந்தமாக இருப்பார்கள்! இங்கோ முழு
உலகத்தில் அசாந்தி உள்ளது. எனவே அமைதியை வேண்டிக் கொண்டே
இருக்கிறார்கள். ஆனால் யாராவது சதா அமைதியில் இருக்க வேண்டும்
என்று விரும்புகிறார்கள் என்றால் அவ்வாறு ஆக முடியாது. 63
பிறவிகள் அங்கு இருக்கிறார்கள் என்றாலும் கூட பிறகும் அவசியம்
வர வேண்டி இருக்கும். தங்களுடைய துக்கம் சுகத்தின் பாகத்தை
நடித்து பின் சென்று விடுவார்கள். டிராமாவை நல்ல முறையில்
கவனத்தில் வைக்க வேண்டி உள்ளது.
பாபா நமக்கு சுகம் மற்றும் சாந்தியின் வரதானம் அளிக்கிறார்
என்பது குழந்தைகளாகிய உங்களுக்கும் கவனத்தில் இருக்க வேண்டும்.
பிரம்மாவின் ஆத்மா கூட எல்லாமே கேட்கிறது. எல்லாரைவிட
நெருக்கத்திலோ இவரது காதுகள் கேட்கின்றன. இவரது வாய்
காதுகளுக்கு பக்கத்தில் உள்ளது. உங்களுடையது சிறிது தூரத்தில்
தான் உள்ளது. இவர் உடனே கேட்டுக் கொண்டு விடுகிறார். எல்லா
விஷயங்களையும் புரிந்து கொள்கிறார். இனிமையிலும் இனிமையான
குழந்தைகளே என்று தந்தை கூறுகிறார். இனிமையிலும் இனிமையான என்று
தான் எல்லோருக்கும் கூறுகிறார், ஏனெனில் அனைவருமே குழந்தைகள்
தான்! யாரெல்லாம் ஜீவ ஆத்மாக்கள் இருக்கிறார்களோ அவர்கள்
அனைவருமே தந்தையின் அவினாசி குழந்தைகள் ஆவார்கள். சரீரமோ அழியக்
கூடியது. தந்தை அழிவற்றவர் ஆவார். குழந்தைகளாகிய ஆத்மாக்களும்
அவினாசி ஆவார்கள். தந்தை குழந்தைகளிடம் உரையாடுகிறார். இது
ஆன்மீக ஞானம் என்று கூறப்படுகிறது. சுப்ரீம் ஆத்மா அமர்ந்து
ஆத்மாக்களுக்கு புரிய வைக்கிறார். தந்தையின் அன்பு இருக்கிறது.
ஆத்மாக்கள் யாரெல்லாம் இருக்கின்றார்களோ இப்பொழுது
தமோபிரதானமாக இருக்கிறார்கள் இருந்தாலும் அவர்கள் அனைவரும்
வீட்டில் இருக்கும் பொழுது சதோபிரதானமாக இருந்தார்கள் என்று
அறிந்திருக்கிறீர்கள். அனைவருக்கும் கல்ப கல்பமாக நான் வந்து
சாந்திக்கான வழியைக் கூறுகிறேன். வரம் அளிக்கும் விஷயமில்லை
அப்படி இன்றி தனவான் பவ, (செல்வம் நிறைந்தவர்) ஆயுஷ்வான் பவ (நீடுழி
வாழ்க) என்று கூறுவதில்லை. சத்யுகத்தில் நீங்கள் இது போல
இருந்தீர்கள். ஆனால் ஆசீர்வாதம் கொடுப்ப தில்லை. கிருபை அல்லது
ஆசீர்வாதம் கேட்கக் கூடாது. தந்தை தந்தையும் ஆவார், ஆசிரியரும்
ஆவார். இதே விஷயத்தை நினைவு செய்ய வேண்டும். ஓகோ! சிவபாபா
தந்தையும் ஆவார், டீச்சரும் ஆவார், ஞானக்கடலும் ஆவார்,
தந்தையும் அமர்ந்து தனது மற்றும் படைப்பின் முதல்-இடை-கடை
பற்றிய ஞானம் கூறுகிறார். அதன் மூலம் நீங்கள் சக்கரவர்த்தி
மகாராஜா ஆகி விடுகிறீர்கள். இது முழுமையான ஆல்ரவுண்டு சக்கரம்
அல்லவா! இச்சமயம் முழு உலகமே இராவண இராஜ்யத்தில் உள்ளது என்று
தந்தை புரிய வைக்கிறார். இராவணன் வெறும் இலங்கையில் மட்டும்
இல்லை. இது எல்லையில்லாத இலங்கை ஆகும். நாலா புறமும் தண்ணீர்
உள்ளது. முழு இலங்கை இராவணனி னுடையதாக இருந்தது. இப்பொழுது
மீண்டும் இராம ருடையதாக ஆகிறது. இலங்கை தங்கத்தால் இருந்தது.
அங்கு தங்கம் நிறைய இருக்கும் என்று கூறுகிறார்கள். ஒரு உதாரணம்
கூட கூறுகிறார்கள். தியானத்தில் சென்றார் அங்கு தங்கத்தில் கல்
பார்த்தார். எப்படி இங்கு மண் இருக்கிறதோ அது போல அங்கு மண்
தங்க மண்ணாக இருக்கும். எனவே சிந்தனை எழுந்தது, தங்கம் எடுத்து
வரலாம் என்று. எப்படி எப்படி எல்லாம் நாடகம் அமைக்கிறார்கள்!
பாரதம் பிரசித்தமானது மற்ற கண்டங்களில் இவ்வளவு வைரம் வைடூரியம்
இருப்பதில்லை. தந்தை கூறுகிறார், நான் எல்லாரையும் திரும்பி
அழைத்து செல்கிறேன், வழிகாட்டி ஆகி. போகலாம் குழந்தைகளே,
இப்பொழுது வீடு செல்ல வேண்டும். ஆத்மாக்கள் பதீதமாக உள்ளார்கள்.
பாவனமாக ஆகாமல் வீடு செல்ல முடியாது. பதீதமானவர்களை பாவனமாக
ஆக்குபவர் ஒரு தந்தையே ஆவார். எனவே எல்லாரும் இங்குதான்
இருக்கிறார்கள். திரும்பி யாருமே போக முடியாது. சட்டமே இல்லை.
தந்தை கூறுகிறார். குழந்தைகளே, மாயை உங்களை மேலும் தீவிரமாக
தேக அபிமானத்தில் கொண்டு வரும். தந்தையை நினைவு செய்யவே விடாது.
நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதில் தான் யுத்தம்
இருக்கிறது. கண்கள் மிகவும் ஏமாற்றுகிறது. இங்கு கண்களை
கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். சகோதரன், சகோதரிகளுக்குள்
பார்வை சரியாக இருப்பதில்லை என்று பார்க்கப்பட்டுள்ளது. எனவே,
இப்பொழுது சகோதர சகோதரர் என்று உணருங்கள் என்று புரிய
வைக்கப்படுகிறது. நாங்கள் அனைவரும் சகோதர சகோதரர்கள் ஆவோம்
என்று கூறுகிறார்கள். ஆனால் எதுவுமே புரியாமல் உள்ளார்கள். தவளை
ட்ரா ட்ரா என்று கத்திக் கொண்டே இருப்பது போல பொருள் ஒன்றுமே
புரியாமல் உள்ளார்கள். இப்பொழுது நீங்கள் ஒவ்வொரு
விஷயத்தினுடைய சரியான பொருளைப் புரிந்து கொண்டு உள்ளீர்கள்.
நீங்கள் பக்தி மார்க்கத்தில் நாயகிகளாக இருந்தீர்கள், நாயகனை
நினைவு செய்து கொண்டிருந் தீர்கள் என்று தந்தை இனிமையிலும்
இனிமையான குழந்தைகளுக்கு வந்து புரிய வைக்கிறார். துக்கத்தில்
சட்டென்று அவரை நினைவு செய்கிறார்கள். ஹே இராமனே! ஹே பகவான்
கருணை புரியுங்கள்! சொர்க்கத்திலோ ஒரு போதும் இவ்வாறு கூற
மாட்டார்கள். அங்கு இராவண ராஜ்யமே இருக்காது. உங்களை இராம
ராஜ்யத்திற்கு அழைத்து செல்கிறார். எனவே அவரது வழிப்படி நடக்க
வேண்டும் இப்பொழுது உங்களுக்கு ஈஸ்வரிய வழி கிடைக்கிறது. பிறகு
தெய்வீக வழி கிடைக்கும். இந்த கல்யாணகாரி சங்கமயுகம் பற்றி
யாருக்குமே தெரியாது. ஏனெனில் கலியுகம் இன்றும் சிறு குழந்தை
என்று எல்லாருக்கும் கூறப்பட்டுள்ளது, இலட்சக்கணக்கான வருடங்கள்
உள்ளன, பாபா கூறுகிறார் இது தான் பக்தியின் காரிருள். ஞானம்
என்பது வெளிச்சம். நாடகப்படி பக்தி கூட நாடகத்தில் பொருந்தி
உள்ளது. இது மீண்டும் நடக்கும். இப்பொழுது பகவான்
கிடைத்துவிட்டுள்ளார். எனவே அலைய வேண்டிய அவசியம் இல்லை என்பதை
நீங்கள் புரிந்துள்ளீர்கள். நாங்கள் பாபாவிடம் செல்கிறோம்
அல்லது பாப்தாதாவிடம் செல்கிறோம் என்று நீங்கள் கூறுகிறீர்கள்.
இந்த விஷயங்களை மனிதர்களோ புரிந்து கொள்ள முடியாது.
உங்களுக்குள் யாருக்காவது முழு நிச்சயம் ஏற்படவில்லை என்றால்
மாயை ஒரேயடியாக விழுங்கி விடுகிறது ஒரேயடியாக யானையை முதலை
விழுங்கிவிடுகிறது. ஆச்சரியப்படும் வகையில் கேட்டார் கள்..........
பழையவர்கள் போய் விட்டார்கள். அவர்களுக்கும் பாடல் உள்ளது.
நல்ல நல்ல மகாரதி களை மாயை தோற்கடித்து விடுகிறது. பாபாவிற்கு
எழுதுகிறார்கள். பாபா உங்கள் மாயையை அனுப்பாதீர்கள். அடே, இது
என்னுடையதா என்ன? இராவணன் தனது ஆட்சி புரிகிறான், நாம் நமது
இராஜ்யம் ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம். இது பரம்பரையாக
நடந்து வருகிறது. இராவணன் தான் உங்களுக்கு எல்லாரையும் விட
பெரிய எதிரி ஆவான். இராவணன் எதிரி ஆவான் என்பதை
அறிந்துள்ளார்கள். அதனால் தான் அவனை ஒவ்வொரு வருடமும்
எரிக்கிறார் கள். மைசூரில் தசரா நிறைய கொண்டாடுகிறார்கள். ஆனால்
ஒன்றுமே புரியாமல் உள்ளார்கள். உங்களுடைய பெயர் சிவசக்தி சேனை
என்பதாகும். அவர்கள் பின் குரங்கு சேனையைப் போட்டு விட்டார்கள்.
உண்மையில் நாம் குரங்கு போல இருந்தோம் என்பதை நீங்கள்
அறிவீர்கள். இப்பொழுது சிவபாபாவிடமிருந்து இராவணன் மீது வெற்றி
அடைவதற்கான சக்தியைப் பெற்று கொண்டிருக்கிறீர்கள். தந்தைதான்
வந்து இராஜயோகம் கற்பிக்கிறார். இதன் மீது நிறைய கதை களும்
அமைத்துவிட்டுள்ளார்கள். அமர கதை என்றும் கூறுகிறார்கள். பாபா
நமக்கு அமர கதை கூறுகிறார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள்.
மற்றபடி மலை மீது ஒன்றும் கூறுவதில்லை, கூறுகிறார்கள் சங்கரன்
பார்வதிக்கு அமரகதை கூறினார் என்று. சிவ சங்கரனின் படமும்
வைக்கிறார்கள். இருவரையும் சேர்த்துவிட்டுள்ளார்கள். இவை
அனைத்தும் பக்தி மார்க்கம் ஆகும். நாளுக்கு நாள் எல்லாரும்
தமோபிரதானமாக ஆகிவிட்டார்கள். சதோ பிரதானத்திலிருந்து சதோ ஆகி
விடும்பொழுது இரண்டு கலை குறைந்து விடுகிறது. திரேதா உண்மையில்
சொர்க்கம் என்று கூறப்படுவதில்லை. குழந்தைகளாகிய உங்களை
சொர்க்கவாசி ஆக்குவதற்காக தந்தை வருகிறார். பிராமண குலம்
மற்றும் சூரியவம்ச சந்திர வம்ச குலம் இரண்டுமே ஸ்தாபனை ஆகிக்
கொண்டி ருக்கிறது என்பதை தந்தை அறிவார். இராமசந்திரருக்கு
க்ஷத்திரியரின் அடையாளம் கொடுத்துள் ளார்கள் நீங்கள் அனைவரும்
மாயை மீது வெற்றி அடைந்துவிடும் க்ஷத்திரியர்கள் ஆவீர்கள்
அல்லவா! குறைந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி அடைபவர்கள்
சந்திரவம்சத்தினர் என்று கூறப்படு கிறார்கள். எனவே இராமருக்கு
அம்பை கொடுத்து விட்டுள்ளார்கள். திரேதாவில் ஹிம்சையே இருக்காது
இராம ராஜா, இராம பிரஜை என்று பாடல் கூட உள்ளது. ஆனால் இந்த
க்ஷத்திரிய தன்மையின் அடையாளம் கொடுத்து விட்டிருக்கிறார்கள்
எனவே மனிதர்கள் குழம்புகிறார்கள். இந்த ஆயுதங்கள் ஆகியவை
இருக்கவே இருக்காது. சக்திகளுக்கும் வாள் ஆகியவை காண்பிக்
கிறார்கள். ஒன்றுமே புரியாமல் உள்ளார்கள். தந்தை ஞானக்கடல்
ஆவார். எனவே தந்தை தான் முதல், இடை, கடை பற்றிய இரகசியங்களைப்
புரிய வைக்கிறார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது
புரிந்து விட்டுள்ளீர்கள். எல்லையில்லாத தந்தைக்கு குழந்தைகள்
மீது இருக்கும் அன்பு போல, எல்லைக்குட்பட்ட தந்தைக்கு இருக்க
முடியாது. 21 பிறவிகளுக்கு குழந்தைகளை சுகமுடையவராக
ஆக்கிவிடுகிறார். எனவே அன்பான தந்தை ஆவார் அல்லவா? எவ்வளவு
அன்பானவராக இருக்கிறார் தந்தை! அவர் உங்களது எல்லா
துக்கங்களையும் நீக்கி விடுகிறார். சுகத்தின் ஆஸ்தி
கிடைத்துவிடுகிறது. அங்கு துக்கத்தின் பெயர் அடையாளம் இருக்காது.
இப்பொழுது இது புத்தியில் இருக்க வேண்டும் அல்லவா! இதை மறக்கக்
கூடாது. எவ்வளவு சுலபமானது! முரளியை மட்டும் படித்துக் கூற
வேண்டும் அவ்வளவே. பிறகும் பிராமணி (டீச்சர் சகோதரி) வேண்டும்
என்கிறார்கள். பிராமணி இன்றி தாரணை ஆவதில்லை. அட சத்ய
நாராயணரின் கதையோ சிறு குழந்தைகள் கூட நினைவு செய்து
கூறுகிறார்கள். நான் உங்களுக்கு தினம் தினமும் புரிய வைக்கிறேன்
- தந்தையை நினைவு செய்யுங்கள் அவ்வளவே. இந்த ஞானமோ 7
நாட்களுக்குள் புத்தியில் பதிந்து விட வேண்டும். ஆனால்
குழந்தைகள் மறந்து விடுகிறார்கள், பாபாவே ஆச்சரியப்படுகிறார்.
நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு
நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. தந்தையிடம் ஆசீர்வாதம் அல்லது கிருபை (கருணை)
வேண்டக் கூடாது. தந்தை, ஆசிரியர், குருவை நினைவு செய்து தங்கள்
மீது தாங்களே கிருபை புரிய வேண்டும். மாயையிடம் எச்சரிக்கையாக
இருக்க வேண்டும். கண்கள் ஏமாற்றுகின்றன, இவற்றை தங்கள்
கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும்.
2. வீணான வெட்டிப் பேச்சுக்களின் விஷயங்கள் மிகுந்த நஷ்டத்தை
ஏற்படுத்துகின்றன. எனவே கூடுமானவரை சாந்தமாக இருக்க வேண்டும்.
வாயில் கூழாங்கற்களை வைத்து விட வேண்டும், ஒரு பொழுதும் தப்பும்
தவறுமாக பேசக் கூடாது. தானும் அசாந்தியாகக் கூடாது,
மற்றவவரையும் அசாந்தப் படுத்தவும் கூடாது.
வரதானம்:
தந்தையின் உதவி மூலமாக, ஈட்டியையும் முள்ளாக்கி விட்டு,
எப்பொழுதும் நிச்சிந்தையான (கவலையற்ற) மற்றும் டிரஸ்டி
ஆவீர்களாக.
பிந்தைய கணக்கு ஈட்டி போன்றது தான். ஆனால் தந்தையின் உதவியினால்,
அது முள்ளாகி விடுகிறது. நிலைமைகள் அவசியமாக வரும். ஏனெனில்
எல்லாம் இங்கேயே முடிக்க வேண்டி உள்ளது, ஆனால் தந்தையின் உதவி,
அவற்றை முள்ளாக ஆக்கி விடுகிறது. பெரிய விஷயத்தை, சிறியதாக
ஆக்கி விடுகிறது. ஏனெனில் பெரிய தந்தை கூட இருக்கிறார். இதே
நிச்சயத்தின் ஆதாரத்தில், எப்பொழுதும் (நிச்சிந்தையாக)
கவலையற்று இருங்கள். மேலும் டிரஸ்டி ஆகி, எனது என்பதை உனது
என்று மாற்றி, லேசாகி விடுங்கள், அப்பொழுது அனைத்து சுமையும்,
ஒரு நொடியில் முடிந்து போய் விடும்.
சுலோகன்:
சுப பாவனையின் ஸ்டாக் (இருப்பு) மூலமாக, எதிர்மறையானதை (நெகட்டிவ்)
நேர்மறையானதாக (பாஸிட்டிவ்) பரிவர்த்தனை செய்யுங்கள்
|
|
|