22-09-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! பாபா என்ன
கூறுகின்றாரோ அதை நான் முன்பே அறிந்திருந்தேனா? என்று தனது
உள்ளத்தில் கை வைத்து கேளுங்கள். என்ன கேட்கின்றோமோ அதன்
பொருளைப் புரிந்துக் கொண்டு குஷியாக இருங்கள்.
கேள்வி:
உங்களது இந்த பிராமண தர்மத்தில்
மிக அதிக சக்தி இருக்கிறது - எந்த மாதிரியான சக்தி மற்றும்
எப்படி?
பதில்:
முழு உலகிற்கும் ஸ்ரீமத் மூலம்
சத்கதி ஏற்படுத்துவது உங்களது பிராமண தர்மமாகும். பிராமணர்கள்
தான் முழு உலகையும் அமைதியானதாக ஆக்கி விடுகின்றனர். பிராமண
குலத்தைச் சார்ந்த நீங்கள் தேவதைகளை விட உயர்ந்தவர்கள்,
உங்களுக்கு இந்த சக்தி தந்தையிட மிருந்து கிடைக்கிறது.
பிராமணர்களாகிய நீங்கள் தந்தைக்கு உதவியாளர்களாக ஆவதால்
உங்களுக்குத் தான் அனைத்தையும் விட மிகப் பெரிய பரிசு
கிடைக்கிறது. நீங்கள் பிரம்மாண்டத்திற்கும் எஜமானர்களாக மற்றும்
உலகிற்கும் எஜமானர்களாக ஆகிறீர்கள்.
ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிய ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தை வந்து
புரிய வைக்கின்றார். ஆன்மீகத் தந்தை ஒரே ஒரு முறை மட்டுமே,
ஒவ்வொரு 5 ஆயிரம் ஆண்டிற்குப் பின்பு அவசியம் வரு கின்றார்
என்பதை ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். கல்பம்
என்ற பெயரை வைத்து விட்ட படியால் அவ்வாறு கூற வேண்டியிருக்கிறது.
இந்த நாடகம் அதாவது சிருஷ்டியின் ஆயுள் 5 ஆயிரம் ஆண்டு களாகும்.
இந்த விசயங்களை ஒரு தந்தை மட்டுமே வந்து புரிய வைக்கின்றார்.
இதை ஒருபொழுதும் எந்த மனிதனின் வாயிலிருந்தும் கேட்க முடியாது.
நீங்கள் ஆன்மீகக் குழந்தைகள் அமர்ந்திருக்கிறீர்கள்.
ஆத்மாக்களாகிய நம் அனைவரின் தந்தை ஒரே ஒருவர் தான் என்பதை
நீங்கள் அறிவீர்கள். தந்தை அமர்ந்து குழந்தைகளுக்கு தனது
அறிமுகத்தைக் கொடுக்கின்றார். அதை எந்த மனிதனும் அறியவில்லை.
கடவுள் அல்லது ஈஸ்வரன் என்றால் யார்? என்பது யாருக்கும்
தெரியாது. அவரை பரம்பிதா என்று அழைக்கின்றனர் எனில் அதிக அன்பு
இருக்க வேண்டும். எல்லையற்ற தந்தை எனும் பொழுது அவசியம் அவரிட
மிருந்து ஆஸ்தியும் அடைந்திருக்கக் கூடும். ஹெவன்லி காட் பாதர்
(சொர்க்கத்தைப் படைக்கும் தந்தை) என்ற ஆங்கில வார்த்தை மிக
நன்றாக இருக்கிறது. சொர்க்கம் என்று புது உலகத்திற்குக்
கூறப்படுகிறது. நரகம் என்று பழைய உலகத்திற்குக் கூறப்படுகிறது.
ஆனால் சொர்க்கத்தைப் பற்றி யாரும் அறியவில்லை. சந்நியாசிகள்
ஏற்றுக் கொள்வதே கிடையாது. தந்தை சொர்க்கத்தைப் படைக்கக்
கூடியவர் என்று அவர்கள் ஒருபொழுதும் கூறுவது கிடையாது. ஹெவன்லி
காட் பாதர் என்ற வார்த்தை மிகவும் மிக இனிமையாக இருக்கிறது,
சொர்க்கம் மிகவும் பிரபலமாகவும் இருக்கிறது. சொர்க்கம் மற்றும்
நரகத்தின் முழு சக்கரத்தின் முதல், இடை, கடையின் ஞானம்
புத்தியில் சுற்றிக் கொண்டே இருக்கிறது. சேவாதாரிகளாக இருக்கும்
அனைவரும் ஒரே மாதிரி யான சேவாதாரிகளாக இருப்பது கிடையாது.
நீங்கள் மீண்டும் தங்களது இராஜ்யத்தை ஸ்தாபனை செய்துக்
கொண்டிருக்கிறீர்கள். ஆன்மீகக் குழந்தை களாகிய நாம் தந்தையின்
உயர்ந்ததிலும் உயர்ந்த வழிப்படி நடந்து கொண்டிருக்கிறோம் என்று
நீங்கள் கூறு கிறீர்கள். உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தையின் வழி
தான் ஸ்ரீமத் ஆகும். ஸ்ரீமத் பகவத் கீதை என்றும் பாடப்
பட்டிருக்கிறது. இது தான் முதல் நம்பர் சாஸ்திரமாகும்.
தந்தையின் பெயர் கேட்டதும் உடனேயே ஆஸ்தியின் நினைவு வந்து
விடுகிறது. பரம பிதாவிடமிருந்து என்ன கிடைக்கும்? என்பது உலகில்
யாருக்கும் தெரியாது. பழமையான யோகா என்ற வார்த்தை கூறுகின்றனர்.
ஆனால் பழமையான யோகத்தை கற்றுக் கொடுத்தது யார்? என்பதை
புரிந்துக் கொள்வது கிடையாது. கிருஷ்ணர் என்று தான் அவர்கள்
கூறுவர், ஏனெனில் கீதையில் கிருஷ்ணர் என்று அவர்கள்
கூறிவிட்டனர். தந்தை தான் இராஜயோகம் கற்பித்திருந்தார், அதன்
மூலம் முக்தி, ஜீவன்முக்தி அடைகிறோம் என்பதை இப்பொழுது நீங்கள்
புரிந்து கொண்டீர்கள். பாரதத்தில் தான் சிவபாபா வந்திருந்தார்,
அவரது ஜெயந்தியும் கொண்டாடுகிறோம் என்பதையும் புரிந்து கொண்டீர்
கள். ஆனால் கீதையில் பெயரை மறைத்து விட்டதால் மகிமையும் மறைந்து
போய் விட்டது. யார் மூலம் முழு உலகிற்கும் சுகம், சாந்தி
கிடைக்கிறதோ, அந்த தந்தையை மறந்து விட்டீர்கள். இது தான்
மறதிக்கான நாடகம் என்று கூறப்படுகிறது. தந்தையை அறியாமல்
இருப்பது தான் மிகப் பெரிய தவறாகும். அவர் பெயர், உருவமற்றவர்
என்று சில நேரங்களிலும், பிறகு மீன், ஆமை அவதாரம் எடுக்கின்றார்
என்றும் கூறுகின்றனர். கல், முள்ளில் இருக்கின்றார். இப்படி
தவறுக்கு மேல் தவறு ஏற்பட்டுக் கொண்டே செல்கிறது. ஏணியில் கீழே
இறங்கிக் கொண்டே செல்கின்றனர். கலைகள் குறைந்து கொண்டே
செல்கிறது, தமோபிரதானம் ஆகிக் கொண்டே செல்கிறது. எந்த தந்தை
சொர்க்கத்தைப் படைக்கின்றாரோ, யார் பாரதம் என்ற சொர்க்கத்திற்கு
எஜமானர்களாக ஆக்குகின்றாரோ அவரை கல், முள்ளில் இருப்பதாக
கூறிவிட்டனர். நீங்கள் ஏணியில் எப்படி இறங்கி வந்தீர்கள்?
என்பதை தந்தை இப்பொழுது புரிய வைக்கின்றார். யாருக்கும் எதுவும்
தெரியாது. நாடகம் என்றால் என்ன? என்று கேட்கின்றனர். இந்த உலகம்
எப்பொழுது ஆரம்ப மானது? புது உலகம் எப்பொழுது இருந்தது? என்று
கேட்டால் இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு என்று கூறிவிடுவர். பழைய
உலகிற்கு இன்னும் அதிக ஆண்டுகள் உள்ளன என்று நினைக் கின்றனர்.
இதற்குத் தான் அஞ்ஞான இருள் என்று கூறப்படுகிறது. ஞானக் கண்
மையை சத்குரு கொடுத்தார், அஞ்ஞான இருள் நீங்கிவிட்டது என்றும்
பாடப்பட்டிருக்கிறது. படைப்பவராகிய தந்தை அவசியம் சொர்க்கம்
தான் படைப்பார் என்பதை நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். தந்தை
வந்து தான் நரகத்தை சொர்க்கமாக ஆக்குகின்றார். படைப்பவராகிய
தந்தை வந்து தான் சிருஷ்டியின் முதல், இடை, கடையின் ஞானம்
கூறுகின்றார். வருவதும் கடைசியில் தான். நேரம் ஏற்படுகிறது
அல்லவா! நினைவு யாத்திரைக்கு எந்த அளவிற்கு நேரம்
தேவைப்படுகிறதோ அந்த அளவிற்கு ஞானத்திற்கு நேரம் ஏற்படுவது
கிடையாது என்பதையும் குழந்தைகள் புரிந்திருக்கிறீர்கள். 84
பிறவிக் கதையானது ஒரு கதை போன்றதாகும், இன்றிலிருந்து 5 ஆயிரம்
ஆண்டிற்கு முன்பு யாருடைய இராஜ்யம் இருந்தது? அந்த இராஜ்யம்
என்ன ஆனது? (இதையும் புரிந்துள்ளீர்கள்)
குழந்தைகளாகிய உங்களிடத்தில் இப்பொழுது முழு ஞானமும் இருக்கிறது.
நீங்கள் எவ்வளவு சாதாரண மானவர்களாக இருக்கிறீர்கள், அஜாமில்
போன்ற பாவிகள், அகலிகைகள், கூன் விழுந்தவர்கள், காட்டுவாசி
போன்றவர்களை எவ்வளவு உயர்ந்தவர்களாக ஆக்குகின்றார்! எப்படி
இருந்த நீங்கள் எப்படி ஆகிவிட்டீர்கள்! என்பதை தந்தை புரிய
வைக்கின்றார். பழைய உலகின் நிலை என்ன ஆகிவிட்டது? என்பதைப்
பாருங்கள் என்ற தந்தை வந்து புரிய வைக்கின்றார். சிருஷ்டிச்
சக்கரம் எவ்வாறு சுற்றுகிறது? போன்ற எதையும் மனிதர்கள் அறியாமல்
இருக்கின்றனர். நீங்கள் உங்களது உள்ளத்தில் கை வைத்து கேளுங்கள்
- முன்பு இவைகளை அறிந்திருந்தேனா? என்று தந்தை கூறுகின்றார்.
எதையும் அறியாமல் இருந்தீர்கள். பாபா மீண்டும் வந்து நமக்கு
உலக இராஜ்யம் கொடுக்கின்றார் என்பதை இப்பொழுது அறிவீர்கள்.
விஷ்வ (உலக) இராஜ்யம் என்றால் என்ன? என்பது கூட யாருடைய
புத்தியிலும் இருக்காது. விஷ்வம் என்றால் முழு உலகம். அரைக்
கல்பம் யாரும் அபகரிக்க முடியாத இராஜ்யத்தை தந்தை நமக்கு
கொடுக்கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆக குழந்தைகளுக்கு
எவ்வளவு குஷி இருக்க வேண்டும்! தந்தையிடமிருந்து எத்தனை முறை
இராஜ்யம் அடைந்திருந்தீர்கள்! தந்தை சத்தியமானவர், சத்தியமான
ஆசிரியர், சத்குருவாகவும் இருக்கின்றார். இவ்வாறு ஒருபொழுதும்
கேள்விப்பட்டிருக்கவே மாட்டீர்கள். இப்பொழுது அர்த்தத்துடன்
புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் குழந்தைகளாக இருக்கிறீர்கள்,
தந்தையை நினைவு செய்கிறீர்கள். இன்றைய நாட்களில் சிறு வயதிலேயே
குருவாக ஆகிவிடுகின்றனர். குருவின் சித்திரத்தை உருவாக்கி
கழுத்தில் மாலையாக அணிந்து கொள்கின்றனர் அல்லது வீட்டில்
வைத்துக் கொள்கின்றனர். இங்கு தந்தை, ஆசிரியர், சத்குரு
அனைவரும் ஒருவர் தான் என்பது ஆச்சரியமான விசயமாகும். நான் கூடவே
அழைத்துச் செல்வேன் என்று தந்தை கூறுகின்றார். நீங்கள் என்ன
படிக்கிறீர்கள்? என்று உங்களிடம் கேட்பார்கள். புது உலக
இராஜ்யம் அடைவதற்காக இராஜயோகம் படிக்கிறோம் என்று கூறுங்கள்.
இது இராஜயோகம் ஆகும். வக்கீலுக்கான படிப்பு எனில் அவசியம்
புத்தியானது வக்கீல் பக்கம் தான் செல்லும். ஆசிரியரை அவசியம்
நினைவு செய்வர் அல்லவா! நாம் சொர்க்க இராஜ்யம் அடைவதற்காக
படிக்கிறோம் என்று நீங்கள் கூறுவீர்கள். கற்பிப்பது யார்?
பகவான் சிவபாபா. அவரது பெயர் ஒன்று தான், அது தான் நடைமுறையில்
இருந்து வருகிறது. ரதத்திற்கு பெயரே கிடையாது. எனது பெயர் சிவன்.
தந்தை சிவன், ரதம் பிரம்மா என்று கூறுவீர்கள். இவர் எவ்வளவு
ஆச்சரியமானவர்! என்பதை நீங்கள் அறிவீர்கள். சரீரம் ஒன்றே ஒன்று
தான். இவரை (பிரம்மாவை) பாக்கியசாலி அவருடைய இரதம் என்று ஏன்
கூறுகிறீர்கள்? ஏனெனில் சிவபாபா பிரவேசம் செய்கின்றார் எனில்
அவசியம் இரண்டு ஆத்மாக்கள் ஆகிவிடு கின்றனர். இதையும் நீங்கள்
தான் அறிவீர்கள், வேறு யாருடைய சிந்தனையிலும் வர முடியாது.
பகிரதன் கங்கையை கொண்டு வந்ததாக காண்பிக்கின்றனர். நீரை கொண்டு
வந்தாரா? என்ன கொண்டு வந்தார்? கொண்டு வந்தது யார்? என்பதை
இப்பொழுது நீங்கள் நடைமுறையில் பார்க்கிறீர்கள். பிரவேசம்
ஆகியிருக்கிறது யார்? தந்தை அல்லவா! மனிதனிடத்தில் நீர்
பிரவேசிக்காது. சடையிலிருந்து (தலைமுடியிலிருந்து) தண்ணீர் வர
முடியாது. இந்த விசயங்களை மனிதர்கள் ஒருபொழுதும் சிந்தித்துப்
பார்ப்பதும் கிடையாது. தர்மம் தான் சக்தி என்றும் கூறப்படுகிறது.
தர்மத்தில் சக்தி இருக்கிறது. அனைத்தை யும் விட எந்த தர்மத்தில்
சக்தி இருக்கிறது? என்று கூறுங்கள். (பிராமண தர்மத்தில்) இது
சரியானது தான், எத்தனை சக்திகள் உள்ளனவோ அனைத்தும் பிராமண
தர்மத்தில் தான் இருக்கிறது. வேறு எந்த தர்மத்திலும் எந்த
சக்தியும் கிடையாது. நீங்கள் இப்பொழுது பிராமணர் களாக
இருக்கிறீர்கள். பிராமணர்களுக்கு தந்தையிடமிருந்து சக்தி
கிடைக்கிறது, இதன் மூலம் நீங்கள் உலகிற்கு எஜமானர்களாக
ஆகிறீர்கள். ஆக உங்களிடம் எவ்வளவு பெரிய சக்தி இருக்கிறது! நாம்
பிராமண தர்மத்தைச் சார்ந்தவர்கள் என்று நீங்கள் கூறுவீர்கள்.
ஆனால் யாருடைய புத்தியிலும் அமராது. விராட ரூபம்
உருவாக்கியிருக்கின்றனர், ஆனால் அதுவும் முழுமையாக கிடையாது.
முக்கியமாகப் படைப்பவர் மற்றும் அவரது முதல் படைப்பை பற்றி
யாரும் அறியவில்லை. தந்தை தான் படைப்பவர், பிறகு பிராமணர்கள்
குடுமி போன்றவர்கள், இதில் சக்தி இருக்கிறது. தந்தையை நினைவு
செய்தால் போதும், சக்தி கிடைத்து விடும். குழந்தை கள் அவசியம்
வரிசைக்கிரமமாகத் தான் ஆவீர்கள் அல்லவா! நீங்கள் இந்த உலகில்
அனைத்தை யும் விட மிக உயர்ந்த பிராமண குலத்தைச் சார்ந்தவர்கள்.
தேவதைகளை விட உயர்ந்தவர்கள். உங்களுக்கு இப்பொழுது சக்தி
கிடைக்கிறது. மிக அதிகமான சக்தி பிராமண தர்மத்தில் இருக்கிறது.
பிராமணர்கள் என்ன செய்கின்றனர்? முழு உலகையும் அமைதியாக்கி
விடுகின்றனர். உங்களது தர்மம் அப்படிப்பட்டது, அதாவது ஸ்ரீமத்
மூலமாக அனைவருக்கும் சத்கதி கொடுக்கிறீர் கள். அதனால் தான்
தந்தை கூறுகின்றார் - நான் உங்களை என்னை விட உயர்வாக
ஆக்குகிறேன். நீங்கள் பிரம்மாண்டத்திற்கும் எஜமானர்கள்,
உலகிற்கும் எஜமானர்களாக ஆகிறீர்கள். முழு உலகத்தின் மீதும்
நீங்கள் இராஜ்யம் செய்வீர்கள். பாரதம் நமது தேசம் என்று
இப்பொழுது பாடு கின்றனர் அல்லவா! சில நேரங்களில் புகழ்
பாடுகின்றனர், சில நேரங்களில் பாரதத்தின் நிலை என்ன ஆகிவிட்டது......
என்று கூறுகின்றனர். பாரதம் இந்த அளவிற்கு உயர்வாக எப்பொழுது
இருந்தது? என்பதை அறியவில்லை. சொர்க்கம், நரகம் இங்கு தான்
இருக்கிறது என்று மனிதர்கள் நினைக்கின்றனர். யாரிடத்தில்
செல்வம், மோட்டார் (வாகனம்) போன்றவைகள் உள்ளனவோ, அவர்கள்
சொர்க்கத்தில் இருக்கின்றனர். ஆனால் புது உலகம் தான் சொர்க்கம்
என்று கூறப்படுகிறது என்பதை புரிந்து கொள்வது கிடையாது. இங்கு
அனைத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும். அறிவியல் கலைகளும் பிறகு
அங்கு காரியத்திற்குப் பயன்படும். இந்த அறிவியலும் அங்கு சுகம்
கொடுக்கும். இங்கு இவை அனைத்திலும் அல்பக் கால சுகம்
கொடுக்கிறது. அங்கு குழந்தைகளாகிய உங்களுக்கு இது நிலையான
சுகமாக ஆகிவிடும். இங்கு அனைத்தும் கற்றுக் கொள்ள வேண்டும்,
பிறகு இந்த சம்ஸ்காரத்தை எடுத்துச் செல்வீர்கள். கற்றுக்
கொள்வதற்கு புது ஆத்மாக்கள் யாரும் வரமாட்டார்கள்.
இங்கிருக்கும் குழந்தைகள் தான் அறிவியல் கற்றுக் கொண்டு அங்கு
செல்வார்கள். மிக புத்திசாலிகளாக ஆகிவிடுவர். அனைத்து
சம்ஸ்காரங்களையும் எடுத்து செல்வர், பிறகு அங்கு
காரியத்திற்குப் பயன் பெறும். இப்பொழுது அல்பக் கால சுக
முடையதாக இருக்கிறது. பிறகு இந்த அணுகுண்டு போன்றவைகள்
அனைவரையும் அழித்து விடும். மரணம் இல்லாமல் அமைதிக்கான இராஜ்யம்
எப்படி ஏற்படும்? இங்கு அசாந்திக்கான இராஜ்யம் இருக்கிறது.
இதையும் உங்களில் வரிசைக்கிரமமாகத் தான் புரிந்து கொள்கிறீர்கள்,
நாம் முதலில் நமது வீட்டிற்குச் செல்வோம், பிறகு சுகதாமத்திற்கு
வருவோம். சுகம் இருக்கும்பொழுது தந்தை வருவதே கிடையாது. எனக்கு
வானபிரஸ்த ரதம் தேவை அல்லவா! என்று தந்தை கூறுகின்றார். பக்தி
மார்க்கத்திலும் அனைவரது மன ஆசைகளை நிறைவேற்றி வருகிறேன்.
பக்தர்கள் எப்படியெல்லாம் தபஸ்யா, பூஜை செய்கின்றனர்! தேவிகளை
அலங்கரிக்கின்றனர், பூஜை செய்கின்றனர், பிறகு கடலில் கரைத்து
விடுகின்றனர் என்பதை சந்தேசிகளுக்கும் (டிரான்ஸில் செல்லும்
சகோதரிகள்) காண்பித் திருக்கின்றார். எவ்வளவு செலவுகள்
ஏற்படுகிறது! இது எப்பொழுதிலிருந்து ஆரம்பமானது? என்று
கேளுங்கள். பரம்பரையாக நடைபெற்று வருகிறது என்று கூறுவர்.
எவ்வளவு அலைந்து கொண்டிருக்கின்றனர்! இவையனைத்தும் நாடகமாகும்.
நான் உங்களை மிகவும் இனிமையானவர்களாக ஆக்குவதற்காக
வந்திருக்கிறேன் என்ற தந்தை அடிக்கடி குழந்தைகளுக்குப் புரிய
வைக்கின்றார். இந்த தேவதைகள் எவ்வளவு இனிமையானவர் களாக
இருக்கின்றனர்! இப்பொழுது மனிதர்கள் எவ்வளவு கடுமையான
வார்த்தைகள் பேசக் கூடியவர்களாக இருக்கின்றனர்! யார் தந்தைக்கு
அதிக உதவி செய்திருந்தார்களோ அவர்களுக்கு பூஜை செய்து
கொண்டிருக்கின்றனர். உங்களுக்கும் பூஜை நடைபெற்றுக்
கொண்டிருக்கிறது. உயர்ந்த பதவியையும் நீங்கள் பலனாக
அடைகிறீர்கள். நான் உங்களை என்னை விட உயர்வான வர்களாக
ஆக்குகிறேன் என்று தந்தை சுயம் கூறுகின்றார். உயர்ந்ததிலும்
உயர்ந்த பகவானினுடையது ஸ்ரீமத் ஆகும். கிருஷ்ணனுடையது என்று
கூற முடியாது. கீதையிலும் ஸ்ரீமத் பிரபலமானது ஆகும். கிருஷ்ணர்
இந்த நேரத்தில் தந்தையிடமிருந்து ஆஸ்தியடைந்து கொண்டி
ருக்கின்றார். கிருஷ்ணனின் ஆத்மாவின் ரதத்தில் தான் தந்தை
பிரவேசமாகி இருக்கின்றார். எவ்வளவு ஆச்சரியமான விசயமாகும்! ஒரு
பொழுதும் யாருடைய புத்தியிலும் வரவே வராது. புரிந்து
கொள்பவர்களுக்கும் புரிய வைப்பதற்கு மிகுந்த உழைப்பு
ஏற்படுகிறது. தந்தை குழந்தை களுக்கு எவ்வளவு நல்ல முறையில்
புரிய வைக்கின்றார்! சர்வ உத்தமரான பிரம்மா வாய்வழி பிராமணர்கள்
என்று பாபா எழுதுகின்றார். நீங்கள் உயர்ந்த சேவை செய்வதால்
இந்த பரிசு கிடைக்கிறது. நீங்கள் தந்தைக்கு உதவியாளர்களாக
ஆவதால் அனைவருக்கும் வரிசைக்கிரமமாக பரிசு கிடைக்கிறது.
உங்களிடமும் மிகுந்த சக்தி இருக்கிறது. மனிதர்களை நீங்கள்
சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆக்கி விட முடியும். நீங்கள்
ஆன்மீக போர் வீரர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் இந்த பேட்ஜ்
அணிந்து கொள்ளவில்லையெனில் இவர்களும் ஆன்மீக மிலிட்டிரியைச்
சார்ந்தவர் கள் என்பதை மனிதர்கள் எப்படி புரிந்து கொள்வர்!
மிலிட்டிரியைச் சார்ந்தவர்கள் எப்பொழுதும் பேட்ஜ்
அணிந்திருப்பர். சிவபாபா புது உலகைப் படைப்பவர் ஆவார். அங்கு
இந்த தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. இப்பொழுது கிடையாது. பிறகு
தந்தை கூறுகின்றார் - மன்மனாபவ. தேக சகிதமாக அனைத்து
சம்மந்தங்களையும் விட்டு விட்டு என் ஒருவனை நினைவு செய்தால்
கிருஷ்ணரின் இராஜ்யத்திற்கு வந்து விடுவீர்கள். இதில்
வெட்கப்படுவதற்கான விசயம் ஏதுமில்லை. தந்தையின் நினைவு
இருக்கும். இவர் நாராயணனை பூஜித்து வந்தார், நாராயணனின்
சித்திரத்தைக் கூடவே வைத்திருந்தார், நடக்கும் பொழுதும்,
காரியங்கள் செய்கின்ற பொழுதும் இதை பார்த்துக் கொண்டே இருப்பார்
என்று இவரைப் பற்றியும் (பிரம்மாவை) கூறுகின்றார். இப்பொழுது
குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானம் கிடைத்திருக்கிறது, அவசியம்
பேட்ஜ் அணிந்திருக்க வேண்டும். நரனை நாராயணனாக ஆக்கக்
கூடியவர்கள் நீங்கள். இராஜயோகத் தையும் நீங்கள் தான் கற்றுக்
கொடுக்கிறீர்கள். நரனை நாராயணனாக ஆக்கும் சேவை செய்கிறீர்கள்.
ஆக எனக்குள் எந்த அவகுணங்களும் இல்லை தானே? என்று தனக்குள்
பாருங்கள்.
குழந்தைகளாகிய நீங்கள் பாப்தாதாவிடம் வருகிறீர்கள், பாப்தாதா
என்றால் தந்தை சிவபாபா ஆவார், தாதா (மூத்த சகோதரர்) அவரது ரதம்
ஆகும். தந்தை அவசியம் ரதத்தின் மூலம் தான் சந்திப்பார் அல்லவா!
தந்தையிடத்தில் புத்துணர்வு அடைவதற்காக வருகிறீர்கள். எதிரில்
அமர்கின்ற பொழுது நினைவு வருகிறது. அழைத்துச் செல்வதற்காக பாபா
வந்திருக்கின்றார். தந்தையின் எதிரில் அமர்ந்திருக்கும் பொழுது
அதிகமாக நினைவு செய்ய வேண்டும். உங்களது நினைவு யாத்திரையை
அங்கும் (வீட்டிலிருக்கும் போதும்) அதிகரிக்கச் செய்ய வேண்டும்.
நல்லது.
இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள்
மற்றும் காலை வணக்கம். ஆன்மீக குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) எனக்குள் எந்த அவகுணங்களும் கிடையாது தானே? தேவதைகளைப்
போன்று இனிமையானவனாக ஆகியிருக்கிறேனா? என்று தனக்குள் பாருங்கள்.
2) தந்தையின் உயர்ந்ததிலும் உயர்ந்த வழிப்படி நடந்து தனது
இராஜ்யத்தை ஸ்தாபனை செய்ய வேண்டும். சேவாதாரியாக ஆவதற்கு
சிருஷ்டியின் முதல், இடை, கடை, சொர்க்கம் மற்றும் நரகத்தின்
ஞானத்தை புத்தியில் சிந்திக்க வேண்டும்.
வரதானம்:
இறை சேவகன் எனும் நினைவு மூலமாக சுலபமான நினைவினை அனுபவம்
செய்து சகஜயோகி ஆகுக,
இறை சேவகன் என்றால் இறை தந்தை தந்தை சேவையில் எப்போதும்
இணைந்திருப்பவர். சுயம் இறைவனே எனக்கு இந்த சேவை கொடுத்துள்ளார்
என்ற பெருமையில் சதா இருங்கள். காரியம் பல செய்த போதும்
காரியத்தை கொடுத்தவரை ஒருபோதும் மறக்கலாகாது. எனவே செயல்கள் பல
செய்தபோதும் இறை தந்தையின் கட்டளைப்படி செய்வதாக நினைத்தால்
சுலபமான நினைவின் அனுபவத்தால் சகஜயோகியாவீர்கள்.
சுலோகன்:
இறை மாணவ வாழ்க்கையென்பது எப்போதும் நினைவிருந்தால் மாயை அருகே
வர முடியாது.
அவ்யக்த சமிக்ஞை: இப்போது ஈடுபாடெனும் அக்னியை மூட்டி யோகத்தை
ஜூவாலா ரூபமாக்குங்கள்.
எந்தளவிற்கு ஸ்தாபனையில் நிமித்தமானவர்கள் ஜுவாலா ரூபமாவீர்களோ
அந்தளவிற்கு வினாச ஜூவாலை வெளிப்படும். கூட்டு தியானத்தின்
அக்னி ஜூவாலையே உலக வினாச காரியத்தை பூர்த்தி செய்யும்.
இதற்காக ஒவ்வொரு சேவை நிலையங்களிலும் பிரத்யோகமாக யோக நிகழ்ச்சி
கள் நடைபெற்ற வண்ணம் இருக்க வேண்டும். அப்போது வினாசத்திற்கான
சிறகுகள் முளைக்கும் யோக அக்னியால் வினாச அக்னி எரியும்.
அக்னியே அக்னியை வெளிப்படுத்தும்.
|
|
|