23-01-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! இரண்டு முக்கிய
விசயங்களை அனைவருக்கும் புரிய வைக்க வேண்டும் - ஒன்று தந்தையை
நினைவு செய்யுங்கள், மற்றொன்று 84 பிறவிச் சக்கரத்தை அறிந்து
கொள்ளுங்கள். பிறகு அனைத்து கேள்விகளும் நீங்கி விடும்.
கேள்வி:
ஸ்ரீகிருஷ்ணரின் மகிமையில்
பயன்படுத்தாத எந்த ஒரு சொல் தந்தையின் மகிமையில் பயன்
படுத்தப்படுகிறது?
பதில்:
விருட்சபதி ஒரே ஒரு தந்தை ஆவார்.
ஸ்ரீகிருஷ்ணரை விருட்சபதி என்று கூறுவது கிடையாது.
தந்தைக்கெல்லாம் தந்தை அல்லது பதிகளுக்கெல்லாம் பதியானவர் என்று
ஒரே ஒரு நிராகாரமானவர் தான் என்று கூறப்படுகின்றார், கிருஷ்ணர்
அல்ல. இருவரின் மகிமையையும் தனித்தனியாக தெளிவுபடுத்துங்கள்.
கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் ஊர் ஊராக
எந்த ஒரு விசயத்தை (தண்டோரா) பறை சாற்ற வேண்டும்?
பதில்:
மனிதனிலிருந்து தேவதை, நரகவாசியிலிருந்து சொர்க்கவாசியாக எப்படி
ஆவது? மற்றும் ஸ்தாபனை, விநாசம் எப்படி ஏற்படுகிறது என்பதை
வந்து புரிந்து கொள்ளுங்கள் என்பதை ஊர் ஊராக சென்று முரசு
கொட்டுங்கள்.
பாடல்:
நீங்கள் தான் தாயாகவும்,
தந்தையாகவும் இருக்கிறீர்கள் .......
ஓம் சாந்தி.
இந்த பாட்டின் அடுத்த வரியாக வரக் கூடிய - நீங்கள் தான் படகாக,
நீங்கள் தான் படகோட்டியாக இருக்கிறீர்கள்...... என்ற வரிகள்
தவறானது ஆகும். எவ்வாறு நீங்கள் தான் பூஜ்ய நிலையிலும், நீங்கள்
தான் பூஜாரி யாகவும் இருக்கிறீர்கள் என்று கூறுவது போல் இதுவும்
அவ்வாறே ஆகிவிடுகிறது. ஞான ஒளியுடையவர்கள் (நன்கு அறிந்தவர்கள்)
உடனேயே பாட்டை நிறுத்தி விடுவர். ஏனெனில் தந்தையை நிந்திப்பதாக
ஆகிவிடுகிறது. இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானம்
கிடைத்திருக்கிறது, மற்ற மனிதர்களிடத்தில் இந்த ஞானம் இருப்பது
கிடையாது. உங்களுக்கும் இப்பொழுது தான் கிடைக்கிறது. பிறகு
ஒருபொழுதும் இருக்காது. புருஷோத்தம் ஆவதற்காக கீதையின் பகவானின்
ஞானம் கிடைக்கிறது என்பதை மட்டுமே புரிந்திருக்கின்றனர். ஆனால்
எப்பொழுது கிடைக்கும்? எப்படி கிடைக்கும்? என்பதை மறந்து
விட்டனர். கீதை என்பது தர்ம ஸ்தாபனைக்கான சாஸ்திரமாகும், மற்ற
எந்த சாஸ்திரமும் தர்ம ஸ்தாபனையின் பொருட்டு கிடையாது.
சாஸ்திரம் என்ற வார்த்தையும் பாரதத்தில் தான்
பயன்படுத்தப்படுகிறது. அனைத்து சாஸ்திரங்களையும் விட உயர்ந்தது
(சிரோமணி) கீதையாகும். மற்ற அனைத்து தர்மங்களும் பின்னால்
வரக்கூடியவைகளாகும். அவைகளை உயர்ந்தது (சிரோமணி) என்று கூறுவது
கிடையாது. விருட்சபதியாக இருப்பது ஒரே ஒரு தந்தை தான் என்பதை
குழந்தைகள் அறிவீர்கள். அவர் நமது தந்தையாகவும் இருக்கின்றார்,
பதியாகவும் இருக் கின்றார். அனைவருக்கும் தந்தையாகவும்
இருக்கின்றார். அவர் பதிகளுக்கெல்லாம் பதி, தந்தை களுக்கெல்லாம்
தந்தை ...... என்று கூறப்படுகின்றார். இந்த மகிமை ஒரு
நிராகாரமான வருக்குத் தான் பாடப்படுகிறது. கிருஷ்ணர் மற்றும்
நிராகார தந்தையின் மகிமை ஒப்பிட்டுப் பார்க்கப் படுகிறது. ஸ்ரீ
கிருஷ்ணர் புதிய உலகின் இளவரசர் ஆவார். பிறகு அவர் பழைய உலகில்
சங்கம யுகத்தில் இராஜயோகம் எப்படி கற்றுக் கொடுக்க முடியும்?
நமக்கு பகவான் படிப்பு கற்பித்துக் கொண்டிருக்கின்றார் என்பதை
இப்பொழுது குழந்தைகள் புரிந்திருக்கிறீர்கள். நீங்கள் படித்து
இவ்வாறு (தேவி தேவதையாக) ஆகிறீர்கள். பிறகு இந்த ஞானம்
இருக்காது. மறைந்து விடுகிறது. பிறகு மாவில் உப்பு அளவிற்கு
சித்திரங்கள் பாதுகாப்பாக இருக்கும். உண்மையில் யாருடைய
சித்திரமும் யதார்த்தமானது கிடையாது. முதன் முதலில் தந்தையின்
அறிமுகம் கிடைத்து விட்டால் இதை பகவான் புரிய வைக்கின்றார்
என்று நீங்கள் கூறுவீர்கள். அவர் தானாகவே புரிய வைப்பார்.
நீங்கள் என்ன கேள்வி கேட்பீர்கள்? முதலில் தந்தையை அறிந்து
கொள்ளுங்கள்.
ஆத்மாக்களுக்கு தந்தை கூறுகின்றார் - என்னை நினைவு செய்யுங்கள்.
இரண்டு விசயங்களை நினைவு செய்தால் போதும். என்னை நினைவு
செய்யுங்கள் மற்றும் 84 பிறவிச் சக்கரத்தை நினைவு செய்தால்
போதும் அவ்வளவு தான் என்று தந்தை கூறுகின்றார். இந்த இரண்டு
முக்கிய விசயங்களைத் தான் புரிய வைக்க வேண்டும். நீங்கள்
உங்களது பிறப்புகளைப் பற்றி அறியாமல் இருக்கிறீர்கள் என்று
தந்தை கூறுகின்றார். பிராமண குழந்தைகளுக்குத் தான் கூறுகின்றார்,
வேறு யாரும் புரிந்து கொள்ளவும் முடியாது. கண்காட்சிகளில்
எவ்வளவு கூட்டம் வருகிறது என்பதைப் பாருங்கள். இவ்வளவு
மனிதர்கள் செல்கின்றனர் எனில் அவசியம் ஏதோ பார்ப்பதற்கு
இருக்கிறது என்று நினைத்து உள்ளே வந்து விடுகின்றனர்.
ஒவ்வொருவருக்கும் அமர்ந்து புரிய வைக்கும் பொழுது வாய்
களைப்படைந்து விடுகிறது. அப்பொழுது என்ன செய்ய வேண்டும்?
கண்காட்சி மாதக் கணக்கில் நடைபெற்றால் இன்று கூட்டம் அதிகமாக
இருக்கிறது, நாளை வாருங்கள், நாளை மறுநாள் வாருங்கள் என்று
கூறுங்கள். அதுவும் யாருக்கு படிப்பில் விருப்பம் இருக்கிறதோ
அதாவது மனிதனிலிருந்து தேவதை ஆக விரும்பு கிறார்களோ
அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். ஒரே ஒரு இந்த லெட்சுமி
நாராயணன் சித்திரம் அதாவது பேட்ஜ் காண்பிக்க வேண்டும்.
தந்தையின் மூலம் இந்த விஷ்ணுபுரிக்கு எஜமானர்களாக ஆக முடியும்.
இப்பொழுது கூட்டம் அதிகமாக இருப்பதால் சென்டருக்கு வாருங்கள்.
விலாசம் எழுதப்பட்டிருக்கிறது. மற்றவர்கள் இது சொர்க்கம், இது
நரகம் என்று கூறிவிடுவர். இதனால் மனிதர்கள் என்ன புரிந்து
கொள்ள முடியும்? நேரம் வீணாகிவிடுகிறது. இப்படிப்பட்டவர்கள்
புரிந்து கொள்ளவும் முடியாது - இவர்கள் பெரிய மனிதர்களா?
செல்வந்தர்களா? அல்லது ஏழைகளா? யாரும் புரிந்து கொள்ள முடியாத
அளவிற்கு இன்றைய நாட்களில் ஆடை அணிந்து கொள்கின்றனர். முதன்
முதலில் தந்தையின் அறிமுகம் கொடுக்க வேண்டும். தந்தை
சொர்க்கத்தை ஸ்தாபனை செய்யக் கூடியவர். இப்பொழுது இவ்வாறு ஆக
வேண்டும். இலட்சியம், குறிக்கோள் இருக்கிறது. நான்
உயர்ந்ததிலும் உயர்ந்தவன் என்று தந்தை கூறுகின்றார். என்னை
நினைவு செய்யுங்கள், இது வசீகரிக்கும் மந்திரமாகும். தந்தை
கூறுகின்றார் - என்னை நினைவு செய்தால் உங்களது விகர்மங்கள்
அழிந்து விடும், நீங்கள் விஷ்ணுபுரிக்கு வந்து விடுவீர்கள்
என்பதையாவது அவசியம் புரிய வைக்க வேண்டும். 8 -10 நாட்களுக்கு
கண்காட்சி வைக்க வேண்டும். நீங்கள் ஊர் ஊராகச் சென்று தமுக்கு
அடியுங்கள் - மனிதனிலிருந்து தேவதை, நரகவாசியிலிருந்து
சொர்கவாசியாக எப்படி ஆவது? என்பதை வந்து புரிந்து கொள்ளுங்கள்.
ஸ்தாபனை, விநாசம் எப்படி ஏற்படும்? வந்து புரிந்து கொள்ளுங்கள்.
நிறைய யுக்திகள் உள்ளன.
சத்யுகத்திற்கும் மற்றும் கலியுகத்திற்கும் இரவு பகல்
வித்தியாசம் இருக்கிறது என்பதை குழந்தை களாகிய நீங்கள்
அறிவீர்கள். பிரம்மாவின் பகல் மற்றும் பிரம்மாவின் இரவு என்று
கூறப்படுகிறது. பிரம்மாவின் பகல் என்றால் விஷ்ணுவின் பகல்,
விஷ்ணுவின் பகல் என்றால் பிரம்மாவின் பகல் ஆகும். விசயம் ஒன்று
தான். பிரம்மாவிற்கும் 84 பிறவிகள், விஷ்ணுவிற்கும் 84
பிறவிகளாகும். இந்த லீப் (யுக) பிறப்பு மட்டுமே வித்தியாசம்
ஏற்படுகிறது. இந்த விசயங்களை புத்தியில் அமரச் செய்ய வேண்டும்.
தாரணை ஏற்படவில்லையெனில் மற்றவர்களுக்கு எப்படி புரிய வைக்க
முடியும்? இதை புரிய வைப்பது மிகவும் எளிது. லெட்சுமி நாராயணன்
சித்திரத் திற்கு முன் மட்டுமே இந்த கருத்தைக் கூறுங்கள்.
தந்தையின் மூலம் இந்த பதவி அடைய வேண்டும், நரகத்தின் விநாசம்
நடக்கவிருக்கிறது. அவர்கள் தங்களது மனித வழியை மட்டுமே கூறுவர்.
இங்கு ஈஸ்வரிய வழியாகும், ஆத்மாக்களாகிய நமக்கு
ஈஸ்வரனிடமிருந்து கிடைக்கிறது. நிராகார ஆத்மாக்களுக்கு நிராகார
பரமாத்மாவின் வழி கிடைக்கிறது. மற்ற அனைத்தும் மனித வழியாகும்.
இரவு பகல் வித்தியாசம் இருக்கிறது அல்லவா! சந்நியாசிகள் துறவி
போன்றவர்கள் கொடுக்க முடியாது. ஈஸ்வரிய வழி ஒரே ஒரு முறை தான்
கிடைக்கிறது. எப்பொழுது ஈஸ்வரன் வருகிறாரோ அப்பொழுது அவர்
வழியின் மூலம் நாம் இவ்வாறு ஆகிறோம். தேவி தேவதா தர்மத்தை
ஸ்தாபனை செய்வதற்காகவே அவர் வருகின்றார். இந்த கருத்தையும்
தாரணை செய்ய வேண்டும், அது தகுந்த நேரத்தில் காரியத்திற்குப்
பயன்படும். முக்கிய விசயம் குறைந்த அளவில் புரிய வைத்தாலே
போதும். ஒரு லெட்சுமி நாராயணன் சித்திரத்தை வைத்து புரிய
வைத்தாலே போதுமானது. இது இலட்சியம், குறிக்கோளுக்கான சித்திரம்.
பகவான் இந்த புது உலகை படைத் திருக்கின்றார். பகவான் தான்
புருஷோத்தம சங்கமயுகத்தில் இவர்களுக்கு கற்பித்திருந்தார்.
இந்த புருஷோத்தம யுகம் பற்றி யாருக்கும் தெரியாது. ஆக
குழந்தைகள் இந்த அனைத்து விசயங்களையும் கேட்டு எவ்வளவு
குஷியடைய வேண்டும்! கேட்டு பிறகு மற்றவர்களுக்குக் கூறும்
பொழுது மேலும் குஷி ஏற்படும். சேவை செய்பவர்களைத் தான் பிராமணன்
என்று கூறலாம். உங்களிடத்தில் உண்மையான கீதை இருக்கிறது.
பிராமணர்களிலும் வரிசைக்கிரமம் இருக்கிறது அல்லவா! சில
பிராமணர்கள் மிகவும் பிரபல மானவர்களாக இருப்பர், அதிகம்
சம்பாதிக்கின்றனர். சிலருக்கு சாப்பிடுவதற்கும் கிடைப்பது
கிடையாது. சில பிராமணர்கள் இலட்சாதிபதியாக இருப்பர். நாம்
பிராமணர்கள் என்று மிகுந்த குஷியுடன், போதையுடன் கூறிக்
கொள்கின்றனர். உண்மையிலும் உண்மையான பிராமண குலம் பற்றி
தெரியாது. பிராமணர்கள் என்றால் உத்தம மானவர்கள் என்று ஏற்றுக்
கொள்ளப்படுகின்றனர். அதனால் தான் பிராமணர்களுக்கு உணவு
படைக்கின்றனர். தேவதா, சத்ரியன் அல்லது வைஷ்ணவர்கள், சூத்திரர்
களுக்கு ஒருபொழுதும் உணவு படைப்பது கிடையாது. பிராமணர்களுக்குத்
தான் படைக்கின்றனர். அதனால் தான் பாபா கூறுகின்றார் - நீங்கள்
பிராமணர்களுக்கு நல்ல முறையில் புரிய வையுங்கள்.
பிராமணர்களுக்கும் சங்கம் இருக்கிறது, அவர்களிடத்தில் செல்ல
வேண்டும். பிராமணர்கள் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகளாக
இருக்க வேண்டும், நாம் அவரது குழந்தை களாக இருக்கிறோம். பிரம்மா
யாருடைய குழந்தை? என்பதையும் புரிய வைக்க வேண்டும். எங்கு
அவர்களது சங்கம் இருக்கிறது? என்று சிந்திக்க வேண்டும். நீங்கள்
பலருக்கு நன்மை செய்ய முடியும். வயதான பெண்களுக்காகவும் சங்கம்
இருக்கிறது. பாபாவிற்கு நாங்கள் எங்கெல்லாம் சென்றோம்? என்று
யாரும் செய்தி கூறுவது கிடையாது. எங்கும் காடாகத் தான்
இருக்கிறது, நீங்கள் எங்கு சென்றாலும் வேட்டையாடிக் கொண்டு வர
முடியும், பிரஜைகளை உருவாக்கிக் கொண்டு வர முடியும்,
இராஜாவாகவும் ஆக்க முடியும். சேவை அதிகமாக இருக்கிறது. மாலை 5
மணிக்கு வேலை முடிந்தவுடன், இன்று இங்கு இங்கு செல்ல வேண்டும்
என்று பட்டியல் குறித்துக் கொள்ள வேண்டும். பாபா பல யுக்தி
களைக் கூறுகின்றார். தந்தை குழந்தைகளிடத்தில் தான் உரையாடல்
செய்கின்றார். நான் ஆத்மா என்ற நிச்சயம் பக்காவாக இருக்க
வேண்டும். பாபா (பரம் ஆத்மா) நமக்கு கூறுகின்றார், நாம் தாரணை
செய்ய வேண்டும். எவ்வாறு சாஸ்திரங்கள் படிக்கின்றனர் எனில்
பிறகு சம்ஸ்காரத்தை எடுத்துச் செல்கின்றனர், அடுத்த பிறவியில்
அதே சம்ஸ்காரம் வெளிப்பட்டு விடுகிறது சம்ஸ்காரம் எடுத்து
வந்திருக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது. யார் அதிக
சாஸ்திரங்களை படிக்கிறார்களோ அவர்கள் அதிகாரமுடையவர்கள் (சக்தி
வாய்ந்தவர்) என்று கூறப்படுகின்றனர். ஆனால் அவர்கள் தன்னை
சர்வசக்தியும் நிறைந்தவர் என்று புரிந்து கொள்ள மாட்டார். இது
விளையாட்டு ஆகும். இதை தந்தை தான் புரிய வைக்கின்றார், ஒன்றும்
புதிய விசயமில்லை. நாடகம் உருவாக்கப்பட்டிருக்கிறது, புரிந்து
கொள்ள வேண்டிய விசயமாகும். இது பழைய உலகமாகும் என்பதை மனிதர்கள்
புரிந்து கொள்வது கிடையாது. நான் வந்து விட்டேன் என்று தந்தை
கூறுகின்றார். மகாபாரத யுத்தம் நடந்து கொண்டு இருக்கிறது.
மனிதர்கள் அஞ்ஞான இருளில் தூங்கிக் கொண்டிருக்கின்றனர்.
அஞ்ஞானம் என்று பக்தி கூறப்படுகிறது. ஞானக் கடலானவர் தந்தை
மட்டுமே. யார் அதிகம் பக்தி செய்கிறார்களோ அவர்கள் பக்தியின்
கடல் ஆவர். பக்த மாலையும் இருக்கிறது அல்லவா! பக்த மாலையின்
பெயர்களையும் ஒன்று சேர்க்க வேண்டும். பக்த மாலை துவாபர
யுகத்திலிருந்து கலியுகம் வரை இருக்கும். குழந்தைகளுக்கு அதிக
குஷி இருக்க வேண்டும். யார் முழு நாளும் சேவை செய்து கொண்டே
இருக்கிறார்களோ அவர்களுக்குத் தான் அதிக குஷி இருக்கும்.
மாலை மிகவும் நீளமாக இருக்கும், ஆயிரக் கணக்கில் இருக்கும்
என்பதை பாபா புரிய வைத்திருக் கின்றார். எங்கிருந்தெல்லாம்
தேர்ந்தெடுத்திருக்கின்றார்! ஏதாவது நடந்திருக்கும் அல்லவா!
அதனால் தான் இவ்வளவு பெரிய மாலை உருவாகியிருக்கிறது! வாயில்
ராம் ராம் என்று கூறிக் கொண்டே இருக்கின்றனர், யாரை ராம் ராம்
என்று கூறி நினைவு செய்கிறீர்கள்? என்றும் கேட்க வேண்டும்.
நீங்கள் எந்த சத்சங்கத்திற்கும் சென்று கலந்து அவர்களோடு
அமர்ந்து விட முடியும். அனுமானின் உதாரணம் இருக்கிறது அல்லவா -
எங்கு சத்சங்கம் நடைபெறுமோ அங்கு செருப்பு வைக்கும் இடத்தில்
அமர்ந்து விடுவார். நீங்களும் வாய்ப்பு எடுத்துக் கொள்ள
வேண்டும். நீங்கள் அதிக சேவை செய்ய முடியும். எப்பொழுது
புத்தியில் ஞானக் கருத்துகள் இருக்குமோ, ஞான போதை இருக்குமோ
அப்பொழுது தான் சேவையில் வெற்றி கிடைக்கும். சேவைக்கு பல
யுக்திகள் உள்ளன. இராமாயணம், பாகவதம் போன்றவைகளில் பல விசயங்கள்
உள்ளன, இதன் மீது நீங்கள் பார்வை செலுத்த வேண்டும். குருட்டு
நம்பிக்கையுடன் அமர்ந்து சத்சங்கம் செய்யக் கூடாது. நாம்
உங்களுக்கு நன்மை செய்ய விரும்புகிறோம் என்று கூறுங்கள். அந்த
பக்தி முற்றிலும் தனிப்பட்டது, இந்த ஞானம் தனிப்பட்டது. ஞானம்
ஒரே ஒரு ஞானேஸ்வரன் தந்தை தான் கொடுக் கின்றார். சேவை அதிகம்
இருக்கிறது, உயர்ந்ததிலும் உயர்ந்தவர் யார்? என்பதை கூறுங்கள்.
உயர்ந்ததிலும் உயர்ந்தவர் ஒரே ஒரு பகவான் ஆவார், ஆஸ்தியும்
அவரிடமிருந்து தான் கிடைக்கிறது. மற்ற அனைத்தும் படைப்புகள்
ஆகும். குழந்தைகளுக்கு சேவையில் ஆர்வம் இருக்க வேண்டும்.
நீங்கள் இராஜ்யம் செய்ய வேண்டும் எனில் பிரஜைகளை உருவாக்க
வேண்டும். தந்தையை நினைவு செய்தால் கடைசி நிலை நல்ல நிலையாக
ஆகிவிடும் என்ற மந்திரம் ஒன்றும் குறைந்தது கிடையாது. நல்லது.
இனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாய் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள்
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) தந்தை கொடுத்த வசீகர மந்திரத்தை அனைவருக்கும் நினைவுபடுத்த
வேண்டும். சேவைக்கு விதவிதமான யுக்திகளை உருவாக்க வேண்டும்.
கூட்ட நெருக்கடியில் தனது நேரத்தை வீணாக்கக் கூடாது.
2) ஞான கருத்துகளை புத்தியில் வைத்து ஞான போதையில்
மூழ்கியிருக்க வேண்டும். அனுமானைப் போன்று சத்சங்களுக்குச்
சென்று அமர வேண்டும் மற்றும் அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும்.
குஷியாக இருப்பதற்கு முழு நாளும் சேவை செய்ய வேண்டும்.
வரதானம்:
நான் மற்றும் எனது இதனை பலி செய்து சம்பூரண மகாபலி ஆகுக
எல்லைக்குட்பட்ட எந்த மனிதர் மற்றும் பொருள் மீதுள்ள பற்று -
இதுவே எனது என்பதாகும். எனது எனும் இதனை நான் செய்தேன், நான்
செய்கிறேன்.... இந்த நான் என்பதனை முழுமையான அர்ப்பணம் செய்வதே
மகாபலி செய்வதாகும். எல்லைக்குட்பட்ட நான், நான் என்பதை
சமர்பணம் செய்வதே முற்றிலும் பாப்சமான ஆவதாகும். நான்
செய்கிறேன் என்பதல்ல. பாபா செய்ய வைத்துக் கொண்டிருக்கின்றார்.
பாபா நடத்திக் கொண்டிருக்கின்றார். எந்த ஒரு விசயத்திலும் நான்
எனும் சொல்லுக்கு பதிலாக இயல்பாகவே சொல்லில் பாபா என்றே
வரவேண்டும். நான் என்பதல்ல.
சுலோகன்:
எண்ணமும், செயலும் சமநிலை பெறும் வண்ணம் எண்ணங்களுக்கு உறுதித்
தன்மையை சேருங்கள்.
தனது சக்திசாலி மனதின் மூலம் சகாஷ் கொடுப்பதற்கான சேவை
செய்யுங்கள்
சமயத்திற்கேற்ப இப்போது மனதாலும் சொல்லாலும் இணைந்தே சேவை
செய்யுங்கள். சொல்லின் சேவை சுலபம். மனதின் சேவைக்கு கவனம்
சற்று தேவை. எனவே அனைத்து ஆத்மாக்களுக்காகவும் நல்லாசை,
நல்விருப்பம் மனதில் வேண்டும். சொல்லில் இனிமை, திருப்தி,
சகஜமெனும் புதுமை இருந்தால் வெற்றி சுலபமாகவே கிடைத்து விடும்.