23.02.25 காலை முரளி
ஓம் சாந்தி 17.02.2004 பாப்தாதா,
மதுபன்
அனைவருக்கும் ஒத்துழைப்பு கொடுங்கள் சகயோகியாக மாற்றுங்கள்
எப்போதும் இடைவிடாது களஞ்சியம் இயங்கட்டும்
இன்று பாப்தாதா சுயம் தன்னுடன் குழந்தைகளின் சிறப்பான பிறந்த
நாளான சிவ ஜெயந்தியை கொண்டாட வந்துள்ளார். குழந்தைகளான
நீங்களும் தனது பரலௌகீகம் மற்றும் அலௌகீக தந்தையின் பிறந்த நாளை
கொண்டாட வந்துள்ளீர்கள். தந்தை குழந்தை களின் பாக்யத்தைப்
பார்த்து ஆஹா என்று மகிழ்ச்சியடைகின்றார். ஆஹா எனது பாக்யவான்
குழந்தைகளே தந்தை யுடனேயே உலகின் இருளை அகற்ற அவதரித்த
குழந்தைகள், முழு கல்பத்திலும் இது போன்ற பிறந்த நாள்
எவருக்குமே வருவதில்லை. பரமாத்மா தந்தையுடன் இணைந்து கொண்டாடு
கின்றீர்கள். இந்த அலௌகீக அதி உன்னதமான தனித்துவம் வாய்ந்த
பிறந்த நாளை பக்த ஆத்மாக்களும் கொண்டாடுகின்றனர். ஆனால்
குழந்தைகளான நீங்கள் சந்திப்பை கொண்டாடு கின்றீர்கள். பக்த
ஆத்மாக்கள் மகிமை பாடுகின்றார்கள். மகிமையும் செய்கிறார்கள்,
அழைத்துக் கொண்டிருக்கின்றார்கள். பாப்தாதா பக்தர்களின்
மகிமையும் கூக்குரலையும் கேட்டு அவர் களுக்கும் வரிசைக்கிரமமாக
பாவனைக்கான பலனைத் தருகின்றார், ஆனால் பக்தர்களுக்கும்
குழந்தைகளுக்கமிடையே வேறுபாடு உள்ளது. நீங்கள் செய்த சிரேஷ்ட
கர்மம் மற்றும் சிரேஷ்ட பாக்கியத்தின் நினைவை நன்றாகவே
கொண்டாடுகின்றனர். எனவே பாப்தாதா பக்தர்களின் பக்தியின்
லீலைகளைப் பார்த்து அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றார்.
ஏனெனில் நினைவார்த்தத்தை மிக நன்றாகவே காப்பியடித்துள்ளனர்.
அவர்களும் இந்த நாளில் விரதம் இருக்கின்றனர் தற்காலிகமாக
அல்பகால அன்ன ஆகாரத்தில் தூய்மையை கையாளுகின்றனர். நீங்கள்
முழுத் தூய்மையை விரதம் மேற்கொள்கின்றீர்கள். இதில் ஆகாரம்,
விவகாரம் வார்த்தை, செயல் யாவும் பிறவி முழுவதும் விரதம்
மேற்கொள் கின்றீர்கள். ஆகவே பக்தர்களின் புத்தியும்
குறைந்ததில்லை. நினைவினை நன்றாகவே காப்பி செய்கின்றனர்.
சங்கமயுகத்தில் வாழ்நாள் உள்ளமட்டிலும் மனம், சொல், செயலில்
தூய்மையாக வாழ்ந்தே ஆக வேண்டும். ஆகவே பக்தர்களின் புத்தியும்
குறைந்ததல்ல, பக்தியில் நன்றாகவே காப்பி செய்துள்ளனர், நீங்கள்
அனைவரும் வீணானவற்றை சமர்ப்பணம் செய்து விட்டு
சக்திசாலியாகியுள்ளீர்கள். அதாவது தனது தூய்மையற்ற வாழ்வை
சமர்ப்பணம் செய்துள்ளீர்கள், உங்கள் சமர்ப்பணத் தின் நினைவாக
பலியும் தருகின்றார்கள். ஆனால் தன்னை பலியிடுவதில்லை, ஆட்டை பலி
தருகின்றனர். பாருங்கள் எவ்வளவு நன்றாக காப்பி செய்துள்ளார்கள்,
ஆட்டை ஏன் பலி தருகின்றார்கள்? இதனையும் நன்றாகவே காப்பி
செய்துள்ளனர் ஆடு என்ன செய் கின்றது? மே மே மே என கத்துகின்றது
அல்லவா, ஆனால் நீங்கள் என்ன சமர்ப்பணம் செய்தீர்கள்? நான் நான்
நான் தேகபிமானம் எனும் நான் ஏனெனில் இந்த நான் எனும் அகந்தையில்
தான் தேகபிமானம் வருகின்றது அந்த தேகபிமானமே அனைத்து விகாரங்
களுக்கும் விதையாகும்.
பாப்தாதா முன்பும் கூறியுள்ளார் அனைத்தும் அர்ப்பணம் செய்வதில்
நான் எனும் தேகபிமானமே தடையாக உள்ளது. நான், நான் தேகம், தேக
சம்மந்தம், தேகத்தின் சாதனங்களை சமர்ப்பணம் செய்வது சுலபம்,
இதனை செய்து விட்டீர்களா? இதுவும் செய்யவில்லையா முன்னேற
முன்னேற நான் எனும் எண்ணமும் அதி நுட்பமானதும்,
ஆழமானதுமாகின்றது, மேலோட்டமாக நான் என்பது அழிவது சுலபம், ஆனால்
நான் என்பதில் ஆழம் பரமாத்மா பிறப்புரிமையின் அதிகாரத்தின்
மூலமாக விசேஷத்தன்மைகள் பிராப்தமாகின்றது. புத்தியின் வரதானம்,
ஞான சொரூபமா வதற்கான வரதானம், சேவைக்கான விசேஷ வரதானங்கள் இதனை
பிரபுவின் வரபிரசாதம் என்றாலும் நான் என்பது இது மிகவும்
ஆழமானது நான் சொல்வதும், செய்வதும் சரியே அதுவே நடக்க வேண்டும்
இந்த ராயலான நான் எனும் அகந்தை முன்னேறும் கலையில்
சுமையாகின்றது. ஆகவே பாபா கூறுகின்றார் நான் என்பதை சமர்ப்பணம்
செய்யுங்கள். நான் என்பதுமில்லை, எனது என்பதுமில்லை. பிரபுவின்
வரபிரசாதம், பிரபுவின் வரதானம், பிரபுவின் விசேஷத் தன்மை கள்
ஆகவே உங்கள் அனைவரது சமர்ப்பணமும் எவ்வளவு ஆழமானது சோதனை
செய்தீர்களா? சாதாரண நான் இராயலான நான் இரண்டையும் சமர்ப்பணம்
செய்து விட்டீர் களா? செய்து விட்டீர் களா? அல்லது செய்து
கொண்டிருக்கிறீர்களா? செய்தே ஆக வேண்டும். நீங்களும் சாகத்தான்
வேண்டும் என சொல்வீர்கள். ஆனால் இறப்பது என்பது இறைவன் மடியில்
வாழ்வது இது இறப்பது இறப்பதல்ல, 21 பிறவிகளுக்கு தேவ
ஆத்மாக்களின் மடியில் பிறப்பது, எனவே மிகவும் குஷி குஷியாக
சமர்ப்பணம் ஆகின்றீர்கள். கதறுவதில்லையே? இல்லை. பக்தியில் கூட
கதற கதற செய்யும் பலி ஏற்றவையாகாது, யாரொருவர் எல்லைக்குட்பட்ட
நான் எனது என்பதை குஷி யுடன் சமர்ப்பணம் செய்கிறார்களோ அவர்கள்
பல ஜென்மத்திற்கும் ஆஸ்திக்கு அதிகாரி ஆகின்றனர்.
சோதனை செய்யுங்கள். எந்த ஒரு வீண் எண்ணம், சொல் செயல் யாவிலும்
மாற்றத்தை மகிழ்வுடன் செய்கின்றீர்களா அல்லது வலுக்கட்டாயமாக
செய்கின்றீர்களா? அன்புடன் மாறுகின்றீர் களா? கடின உழைப்புடன்
மாறுகின்றீர்களா? குழந்தைகள் நீங்கள் அனைவரும் தனது வாழ்வின்
தொழிலாக வைத்திருப்பதே உலகை மாற்றுபவர் விஸ்வ பரிவர்த்தக்.
இதுவே பிராமணர்கள் உங்களது தொழிலாகும். இது உறுதியெனில் கை
அசையுங்கள், கொடி அசைக்கின்றீர்கள், மிக நல்லது (அனைவரும்
கைகளில் வைத்துள்ள கொடியை அசைக்கின்றனர்) இன்று கொடி நாள் மிக
நல்லது. ஆனால் கொடியசைத்தால் மட்டும் போதாது. கொடியசைப்பது மிக
சுலபம், மனதை அசையுங்கள் மனதை மாற்றுங்கள். தைரியம் உள்ளதா,
தைரியமானவர்கள் தானே? மிகவும் தைரியமானவர்கள். நல்லது.
பாப்தாதா மகிழ்ச்சியான ஒரு விசயத்தைப் பார்க்கின்றார், எது
தெரியுமா? பாப்தாதா இந்த ஆண்டிற் காக சிறப்பான பரிசு
தருகின்றார். இந்த ஆண்டு ஏதேனும் ஒரு செயலில், உலக சேவையில்
சிறிதளவு தைரியம் வைத்தாலும் அபரிமிதமான உதவி கிடைக்கும் பாபா
பார்த்த மிகிழ்வான செய்தி. இந்த முறை சிவ ஜெயந்திக்கான சேவை
நாலாபுறமும் மிக மிக நல்ல முறையில் தைரியம் மற்றும் ஊக்கம்,
உற்சாகத்துடன் முன்னேற்றத்துடன் கொண்டாடி வருகின்றீர்கள் (அனைவரும்
கை தட்டுகின்றனர்) ஆம் நன்கு கை தட்டுங்கள். எப்போதும் இவ்வாறு
கை தட்டுவீர் களா அல்லது சிவராத்திரியில் மட்டுமா? எப்போதும்
கை தட்டிக் கொண்டேயிருங்கள் நல்லது. நாலாபுறமும் இருந்து
செய்திகள் மதுபனிற்கு வந்த வண்ணம் உள்ளது. பாப்தாதாவோ
வதனத்திலேயே பார்த்து விடுகின்றார் ஊக்கம் நன்றாக உள்ளது. நன்கு
திட்டம் வகுத்துள்ளீர்கள். இவ்வாறே சேவையில் ஊக்கம் உற்சாக
மானது உலகின் ஆத்மாக்களுக்கும் ஊக்கம் உற்சாகத் தினை
அபிவிருத்தி செய்யும். தாதியின் முன்னிலையில் பேனா விந்தை
செய்தது நல்ல ரிசல்ட், எனவே பாப்தாதா இப்போது ஒவ்வாரு சென்டரின்
பெயரை சொல்லவில்லை, ஆனால் நாலா புறமும் சேவையின் ரிசல்ட்டைப்
பார்த்து பாப்தாதா ஒவ்வொரு சேவாதாரி குழந்தைகளின் பெயர்
குறித்து பன்மடங்கு வாழ்த்துக்களை வழங்கு கின்றார். பார்த்துக்
கொண்டு மிருக்கின்றனர். குழந்தைகள் அவரவர் இடத்தில் இருந்தபடியே
பார்த்து மகிழ்கின்றனர். அயல் நாட்டிலும் மகிழ்கின்றனர்.
ஏனெனில் நீங்கள் தான் உலக ஆத்மாக்களுக்கான தேவி, தேவதைகள்,
பாப்தாதா குழந்தைகளின் சபையை பார்க்கும் போது மூன்று ரூபங்களில்
பார்க்கின்றார்.
1. நிகழ்காலத்தில் சுயராஜ்ய அதிகாரி, இப்போதும் ராஜாவே
லௌகீகத்திலும் கூட தந்தை குழந்தை களை ராஜா, ராஜா என்றே சொல்வார்.
ஏழையாயினும் தந்தைக்கு தன் குழந்தை ராஜாவே. ஆனால் இப்போது
சங்கமயுகத்தில் தந்தை தனது ஒவ்வொரு குழந்தை யையும் சுயராஜ்ய
அதிகாரி ராஜா குழந்தையாகவே பார்க்கின்றார். ராஜா தானே சுயராஜ்ய
அதிகாரி, நிகழ்காலத்தில் சுயராஜ்ய அதிகாரி 2. நாளையும் விஸ்வ
ராஜ்ய அதிகாரி 3. துவாபரயுகத்திலிருந்து கலியுக கடைசி வரையிலும்
பூஜைக்குரியவர்கள். பூஜைக்கு அதிகாரிகள், இந்த மூன்று
வடிவங்களில் ஒவ்வொரு குழந்தையையும் பாபா பார்க்கின்றார்.
சாதாரணமாக பார்க்கவில்லை. நீங்கள் எப்படியிருந்தாலும் பாப்தாதா
ஒவ்வொரு குழந்தை யையும் சுய ராஜ்ய அதிகாரி ராஜா குழந்தையாகவே
பார்க்கின்றார். இராஜயோகிகள் தானே இதில் யாரேனும் பிரஜா யோகிகள்
இருக்கின்றீர்களா? பிரஜாயோகியா? இல்லை, அனைவரும் இராஜயோகிகள்
இராஜயோகி என்றாலே ராஜா, அத்தகைய சுயராஜ்ய அதிகாரி குழந்தைகளின்
பிறந்த நாளை கொண்டாட சுயம் தந்தையே வந்துள்ளார். பாருங்கள்
நீங்கள் இரட்டை அயல் நாட்டவரும் பிறந்த நாளை கொண்டாட
வந்துள்ளீர்கள். இரட்டை அயல் நாட்டவர் கை உயர்த்துங்கள்.
அனைத்திலும் தொலை தூரம் எது? அமெரிக்காவா அதைவிட தொலை தூரம் எது?
பாப்தாதா எங்கிருந்து வந்துள்ளார்? பாப்தாதா பரந்தாமத்
திலிருந்து வந்துள்ளார். தந்தைக்கு குழந்தைகள் மீது அன்பு
உள்ளதல்லவா? ஆக இந்த பிறந்த நாள் எவ்வளவு உயர்வானது பகவானே வர
வேண்டியுள்ளது. ஆம் (பிறந்த நாள் பேனர், அனைத்து மொழிகளிலும்
எழுதியதை காண்பிக்கின்றனர்) நன்றாக செய்துள்ளீர்கள் பாப்தாதா
அனைத்து தேசத்திலும் அனைத்து மொழிகளிலும் உள்ள குழந்தைகளுக்கு
வாழ்த்துக்களை வழங்குகின்றார். பாருங்கள், தந்தையும் சிவஜெயந்தி
கொண்டாடுகின்றார், ஆனால் பாபா யார்? பிந்தி ஒரு புள்ளி
புள்ளிக்கு பிறந்த நாள், அவதார தினம் கொண்டாடு கின்றனர்.
அனைத்திலும் உயர்ந்த வைரம் போன்ற பிறந்த நாள் யாருடையது? பிந்து
வினுடையது, புள்ளியின் பிறந்த நாள், பிந்துவிற்கு எவ்வளவு மகிமை
எனவே பாப்தாதா சதா சொல்கிறார் மூன்று பிந்துவை சதா நினைவில்
வையுங்கள் மூன்றையும் நன்றாக தெரிந்திருப்பீர்கள் அல்லவா.
நீங்களும் பிந்து பாபாவும் பிந்து, பிந்துவின் குழந்தை பிந்து,
சிருஷ்டி எனும் நாடக மேடையில் செயல்புரிய வந்துள்ளீர்கள், இந்த
சிருஷ்டி நாடக மேடை, ஆக டிராமா வில் செய்த செயல், முடிந்த செயல்
அதற்கு முற்றுப் புள்ளி வையுங்கள். ஆக முற்றுப் புள்ளி என்பது
என்ன? பிந்து எனவே மூன்று புள்ளியை என்றென்றும் நினைவில்
வையுங்கள். விந்தைகள் அனைத்தையும் பாருங்கள் இன்றைய உலகில்
அதிக மதிப்பு இருப்பது எதற்கு? பணத்திற்கு மதிப்பு உள்ளதல்லவா
தாய் தந்தையும் ஒன்றுமில்லை, எல்லாமே பணம் தான். அதிலும்
பாருங்கள், ஒன்றுக்கு பக்கத்தில் ஒரு புள்ளி வைத்தால் என்னாகும்.
பத்தாகுமல்லவா, இன்னொரு புள்ளி வைத்தால் நூறு ஆகும். மூன்றாவது
வையுங்கள் 1000ம் ஆகிவிடும். ஆக இது புள்ளியின் விந்தையல்லவா
பணத்திலும் பிந்தியின் விந்தை மேலும் சிரேஷ்ட ஆத்மா ஆவதிலும்
புள்ளியின் விந்தையே, செய்பவரும் செய்விப்பவரும் புள்ளியே, ஆக
எல்லா பக்கமும் எதற்கு மகிமை உள்ளது பிந்துவிற்கு தானே,
புள்ளியை மட்டும் நினையுங்கள். விஸ்தாரத்தில் செல்ல வேண்டாம்.
பிந்துவை நினைக்க முடியுமா. பிந்துவாகுங்கள், பிந்துவை
நினையுங்கள், பிந்து (முற்றுப்புள்ளி) வையுங்கள். அவ்வளவே தான்.
இது தான் முயற்சி. கடினமா? சுலபமா? சுலபம் என்று நினைப்பவர்கள்
கை உயர்த்துங்கள். சுலபம் எனில் புள்ளி வைக்க வேண்டும். ஏதேனும்
இன்னல் வரும்போது புள்ளி வைப்பீர்களா? கேள்வி எழுப்புவீர்களா?
கேள்விக் குறியல்ல, புள்ளி வையுங்கள் கேள்விக் குறி எவ்வளவு
வளைந்துள்ளது. பாருங்கள் எழுதுங்கள், எத்தனை வளைவு? புள்ளி
வைப்பது சுலபமா? புள்ளி வைக்க தெரியுமா? தெரியுமா? எல்லோரும்
புத்திசாலிகளே.
பாப்தாதா விசேஷ சேவைகளின் ஊக்கம், உற்சாகத்திற்கு வாழ்த்துக்கள்
தருகின்றார். மிக நன்றாக செய்கின்றீர்கள், செய்து
கொண்டேயிருப்பீர்கள். ஆனால் இனி வரும் காலங் களில் ஒவ்வொரு
நேரமும் ஒவ்வொரு நாளும் நான் உலக சேவகன்- இதனை நினைவில்
வையுங்கள். உங்களுக்கு நினைவு உள்ளதா? பிரம்மா பாபா என்னவென்று
கையொப் பமிடுவார்? உலக சேவகன் ஆக உலக சேவகன், சிவராத்திரி
சேவையுடன் உலக சேவை முடிந்து விடுவதில்லை, நான் உலக சேவகன்
எனும் இலட்சியத்தை வையுங்கள். ஆக ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு
சுவாசமும் சேவை செய்ய வேண்டும், யார் வந்தாலும் யார் தொடர்பில்
வந்தாலும் வள்ளலாகி அவர்களுக்கு ஏதேனும் ஒன்றை வழங்க வேண்டும்,
ஒரு வரும் வெறும் கையோடு செல்லக் கூடாது, இடைவிடாது களஞ்சியம்
திறந்தே இருக்க வேண்டும். குறைந்த பட்சம் ஒவ்வொருவருக்கும்
சுபபாவனை அவசியம் வைக்க வேண்டும்.
சம்மந்தத்தில் வரும்போது சுபபாவனை எனும் ஒத்துழைப்பை
வழங்குங்கள். இப்போது ஆத்மாக் கள் அனைவருக்கும் உங்களது
ஒத்துழைப்பு மிக மிக அவசியமானது, ஆகவே ஒத்துழைப்பு தாருங்கள்
பிறரையும் ஒத்துழைப்பு தருபவராக மாற்றுங்கள், மனதாலோ, சொல்லாலோ
உறவிலோ ஏதேனும் ஒரு வகையில் ஒத்துழைப்பை வழங்குங்கள், இந்த
சிவராத்திரி நன்னாளில் விசேஷ சுலோகன் நினைவில் வையுங்கள்
ஒத்துழைப்பு தாருங்கள் ஒத்துழைப்பவராக மாற்றுங்கள்.
குறைந்தபட்சம் தன் தொடர்பில் வருபவர்களுக்காவது சகயோகம்
செய்யுங்கள், சகயோகியாக மாற்றுங்கள் யாரேனும் தொடர்பில்
வருவார்கள் தானே, அவர்களுக்கு வேறெந்த உபசரிப்பு
செய்யவில்லையென்றாலும் மனதை மகிழ்விக்கும் வண்ணம் (தில் குஷ்
மிட்டாய்) வார்த்தை பேசுங்கள், சமயலறையில் செய்யும் இனிப்பல்ல.
மன மகிழ்ச்சி தாருங்கள். தானும் மகிழ்ந்து பிறரையும் மகிழ
வையுங்கள். தருவீர்களா. இதில் எந்த கடினமில்லையே உழைப்
பேதுமில்லை. நேரம் அதிகம் பிடிக்காது. சுப பாவனையுடன் மனதை
மகிழ வையுங்கள். செய்வீர் களா தானும் குஷி பிறரும் குஷி
வேறென்ன வேண்டும், குஷியாக இருப்போம், குஷியே தருவோம்,
ஒருபோதும் உங்கள் அனைவர் முகமும் அதி கம்பீரமாக இருக்கக் கூடாது,
அதிக கம்பீரமும் நல்லதல்ல. புன்னகை வேண்டும். கம்பீரம் தேவைதான்,
அளவுக்கதிகமான கம்பீரமும் எங்கோ காணாமல் போனதாக தென்படச்
செய்யும், பார்த்துக் கொண்டு தான் இருப்பார்கள் ஆனால் இல்லாமல்
இருப்பார்கள். பேசுவார்கள் ஆனால் இல்லாதவராக அந்த முகம்
பார்க்கவே அழகா யிராது. முகம் எப்போதும் புன்சிரிப்புடன் திகழ
வேண்டும். சீரியசாக இருக்கக் கூடாது. என்ன செய்வது, எப்படி
செய்வது, அதிக உழைப்பு, அதிக வேலை சீரியஸாகி விடுவது. ஆனால்
எவ்வளவு அதிக வேலையோ அவ்வளவு அதிக புன்னகை, புன்னகை செய்ய
தெரியுமா? தெரியுமா? உங்களுடைய ஜட மூர்த்திகளையும் பாருங்கள்
அப்படி சீரியசாக காண்பிக்கிறார்களா என்ன? அப்படி சீரியசாக
காண்பித்தால் ஓவியர் சரியில்லை என்பார்கள். அவ்வாறே நீங்களும்
சீரியஸாக இருந்தால் இவர்களுக்கு வாழும் கலை தெரியவில்லை
என்பார்கள். எனவே என்ன செய்வீர்கள்? டீச்சர் என்ன செய்வீர்கள்?
நல்லது அதிக ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள் (சேவைக்
கான வாழ்த்துக்கள். நல்லது.
ஒரு நொடியில் தனது பூர்வஜ் மற்றும் பூஜ்ய சொரூபத்தை நினைவில்
கொண்டு வர முடியுமா? அதே தேவி தேவதைகளின் நினைவில் தன்னை
பார்க்க முடியுமா? தேவி, தேவதா எதுவாயினும், நான் பூர்வஜ் ஆத்மா,
சங்கமயுகத்தில் பூர்வஜ் நான், துவாபரயுகத்தில் இருந்து
பூஜைக்குரியவன், சத்யுகம், திரேதாயுகத்தில் ராஜ்யதிகாரி.
அனைவரும் ஒரு நொடி யில் மற்ற எண்ணங்களை நிறுத்தி தன்னை பூர்வஜ்,
பூஜ்ய சொரூபத்தில் நிலை பெறச் செய்யுங்கள். நல்லது.
நாலாபுறமுமுள்ள அலௌகீக தெய்வீக அவதாரம் செய்துள்ள
குழந்தைகளுக்கு தந்தை மற்றும் குழந்தைகளின் பிறந்த நாள்
ஆசீர்வாதங்கள், மற்றும் அன்பு நினைவுகள் திலாராம் பாபாவின்
உள்ளத்தில் வலதுகரமான சேவாதாரி குழந்தைகள் எப்போதும் இருக்
கின்றனர். அத்தகைய உள்ளமெனும் ஆசனத்தில் உறைந்துள்ள தில்தக்த்
நசீன் சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு சதா புள்ளியின் மகிமையை புரிந்து
கொண்டு உயர்ந்த பிந்து சொரூபத்தில் உள்ள குழந்தைகளுக்கு,
எப்போதும் தனது சுயமரியாதையில் நிலைத்திருந்து அவைருக்கும்
ஆன்மீக மரியாதை தரும் மரியாதைக் குரிய ஆத்மாக்களுக்கு எப்போதும்
வள்ளலாகி ஒவ்வொருவருக்கும் தனது நிரந்தர களஞ்சியத்தால் ஏதேனும்
ஒன்றை வழங்கும் மாஸ்டர் வள்ளல் குழந்தைகளுக்கு பாப்தாதாவின்
மிக மிக அதிகமான பன்மடங்கு கோகினுôர் வைரத்தினும் மேலான இறை
தந்தையின் கண்மணிகளான குழந்தைகளுக்கு அன்பு நினைவுகளும்
நமஸ்காரமும்.
வரதானம்:
ஒவ்வொரு சக்தியையும் கட்டளைப்படி நடத்தும் மாஸ்டர் படைப்பாளர்
ஆகுக !
செயலை ஆரம்பிக்கும் முன்பே செயலுக்கேற்ப சக்திகளை வரவேற்பு
செய்யுங்கள். எஜமானனாகி கட்டளை யிடுங்கள். ஏனெனில்
சர்வசக்திகளும் நமது கரங்களாகும். உமது கரங்கள் உங்களது
கட்டளையின்றி எதுவும் செய்ய இயலாது. பொறுமை சக்திக்கு கட்டளை
யிடுங்கள். செயலை வெற்றிகரமாக முடியுங்கள். வெற்றி உமதே
நிச்சயம். மாறாக கட்டளை யிடுவதற்கு பதிலாக முடியுமா முடியாதா
என பயந்தால், கட்டளையிட முடியாது. எனவே மாஸ்டர் படைப்பவராகி
ஒவ்வொரு சக்தியையும் கட்டளைப்படி செயல்படுத்தி பயமற்றவர் ஆகுக.
சுலோகன்:
அடைக்கலம் வழங்கும் (வள்ளலை) பாபாவை வெளிப்படுத்தி அனைவருக்கும்
பாதுகாப்பு வழங்குங்கள்.
அவ்யக்த சமிக்ஞை: ஏகாந்த பிரியனாகி ஒற்றுமை மற்றும் ஏகாக்ரதா (மனம்,
புத்தி ஒருமுகம்) நிலையிலிருங்கள்.
கண்டுபிடிப்பாளர் ஒன்றை கண்டுபிடிக்க ஏகாந்தமாக
செயல்படுகின்றார், இங்கு ஏகாந்தமென்பது ஒருவர் நினைவில்
மூழ்குவது ஆகும். வெளி உலக ஈர்ப்பிலிருந்து தனித்திருக்க
வேண்டும். ஒரு தனியறையில் மட்டும் ஏகாந்தமாக அமருவதில்லை,
மனமும் ஏகாந்தமாக வேண்டும் மனதின் ஏகாக்ரதா என்பது ஒருவர்
நினைவில் நிலைப்பது ஒருமுகமாதல் இதுவே ஏகாந்தம்.