23.03.25 காலை முரளி
ஓம் சாந்தி 02.11.2004 பாப்தாதா,
மதுபன்
சுய-உபகாரி ஆகி அபகாரியின் மீதும் உபகாரம் செய்யுங்கள், சர்வ
சக்தி, சர்வகுண சம்பன்னமாக மரியாதை வழங்கும் வள்ளலாக ஆகுங்கள்
இன்று அன்புக் கடல் தன்னுடைய நாலாபுறங்களிலும் உள்ள அன்பான
குழந்தைகளைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கின்றார்.
சாகார ரூபத்தில் எதிரில் இருந்தாலும் சரி, ஸ்தூல ரூபத்தில்
தொலைவில் அமர்ந்திருந்தாலும் சரி, ஆனால், அன்பானது அனைவரையும்
தந்தைக்கு அருகாமையில் அமர்ந்திருப்பதாக அனுபவம் செய்வித்துக்
கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு குழந்தையின் அன்பு தந்தையை
அருகாமையில் அனுபவம் செய்வித்துக் கொண்டி ருக்கிறது.
குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் கூட தந்தையின் மீதள்ள அன்பினால்
முன்னால் வந்திருக்கின்றீர்கள். ஒவ்வொரு குழந்தையின்
உள்ளத்திலும் பாப்தாதாவின் அன்பு நிறைந்திருப் பதை பாப்தாதா
பார்த்தார்கள். ஒவ்வொருவரின் உள்ளத்திலும் என்னுடைய பாபா என்ற
இந்த அன்பின் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. அன்பு தான்
இந்த தேகம் மற்றும் தேகத்தின் சம்பந்தத்தில் இருந்து
விடுபட்டவராக ஆக்கிக்கொண்டு இருக்கின்றது. அன்பு தான் மாயாவை
வென்றவராக ஆக்கிக்கொண்டு இருக்கின்றது. எங்கே உள்ளத்தின் அன்பு
உள்ளதோ, அங்கே மாயா தொலைவில் இருந்தே ஓடிவிடுகின்றது. அன்பின்
பாடத்தில் அனைத்துக் குழந்தைகளும் தேர்ச்சி பெற்று
இருக்கின்றீர்கள். ஒன்று அன்பு உள்ளது. இரண்டாவது சர்வசக்திவான்
தந்தை மூலம் சர்வ சக்திகள் என்ற பொக்கிஷம் உள்ளது.
இன்று பாப்தாதா ஒருபுறம் அன்பைப் பார்த்துக் கொண்டு
இருக்கின்றார்கள், மறுபுறம் சக்தி சேனையின் சக்திகளைப்
பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். எந்தளவு அன்பு
நிறைந்திருக் கின்றதோ, அந்தளவு சர்வ சக்திகளும்
நிறைந்திருக்கின்றனவா? பாப்தாதா அனைத்து குழந்தை களுக்கும்
ஒன்றுபோலவே சர்வ சக்திகள் கொடுத்திருக் கின்றார்கள், மாஸ்டர்
சர்வசக்திவான் ஆக்கியிருக்கின்றார்கள். சிலரை சர்வ சக்திவான்
களாகவும், சிலரை சக்திவான்களாகவும் ஆக்கவில்லை. நீங்கள்
அனைவரும் கூட மாஸ்டர் சர்வசக்திவான் என்பது தன்னுடைய சுவமானம்
என்று கூறுகின்றீர்கள். பாப்தாதா நாலாபுறங்களிலும் உள்ள
குழந்தைகளிடம் கேட்கின்றார்கள் - ஒவ்வொரு வரும் தன்னிடத்தில்
சர்வ சக்திகளின் அனுபவம் செய்கின்றீர்களா? சதா சர்வ சக்திகள்
மீது அதிகாரம் உள்ளதா? சர்வ சக்திகள் பாப்தாதாவினுடைய ஆஸ்தி
ஆகும், எனவே, தன்னுடைய ஆஸ்தியின் மீது அதிகாரம் உள்ளதா? உள்ளதா
அதிகாரம்? டீச்சர்கள் சொல்லுங்கள், அதிகாரம் உள்ளதா? யோசித்துச்
சொல்ல வேண்டும். பாண்டவர்கள் அதிகாரம் உள்ளதா? சதா உள்ளதா
அல்லது அவ்வப்பொழுது உள்ளதா? எந்த சமயம் எந்த சக்தியின் தேவை
உள்ளதோ, சக்தி சேனையாகிய உங்களுடைய கட்டளையின் படி அந்த சக்தி
ஆஜர் ஆகிவிடு கின்றதா? சரியான நேரத்தில் வந்தேன் எனது பிரபுவே
என்று கூறுகின்றதா? யோசியுங்கள், பாருங்கள், அதிகாரி உத்தரவு
பிறப்பிக்கின்றார், மேலும், சக்தி வந்தேன் எனது பிரபுவே என்று
சொல்ல வேண்டும், எந்த சக்தியை அழைத்தாலும், சமயம் எப்படியோ,
சூழ்நிலை எப்படியோ, அப்படி சக்தியை காரியத்தில் பயன்படுத்த
முடியவேண்டும். அப்பேற்பட்ட அதிகாரி ஆத்மாக்களாக
ஆகியிருக்கின்றீர்களா? ஏனெனில், தந்தை ஆஸ்தி கொடுத்தார் மற்றும்
ஆஸ்தியை நீங்கள் தன்னுடையதாக ஆக்கி இருக்கின்றீர்கள்,
தன்னுடையதாக ஆக்கி இருக்கின்றீர்கள் அல்லவா! தன்னுடையதின் மீது
அதிகாரம் உள்ளது. எந்த சமயம், எந்த விதிப்படி தேவைப்படுகிறதோ,
அந்த சமயம் காரியத்தில் பயன்படவேண்டும். உதாரணத்திற்கு
உள்ளடக்கும் சக்தி உங்களுக்கு அவசிய மாக உள்ளது மற்றும்
உள்ளடக்கும் சக்திக்கு நீங்கள் உத்தரவு பிறப்பிக்கின்றீர்கள்
எனில் உங்களுடைய உத்தரவை ஏற்று வந்தேன் பிரபுவே என்று
வருகின்றதா? வருகிறது என்றால் தலையை அசைத்திடுங்கள், கையை
அசைத்திடுங்கள். சில நேரங்களில் வருகின்றதா அல்லது சதா
வருகின்றதா? உள்ளடக்கும் சக்தி ஆஜர் ஆகிறது, ஆனால், 10 முறை
உள்ளடக்கிவிட்டேன், ஆனால், 11 வதுமுறை கொஞ்சம் கீழும், மேலுமாக
ஆகிறதா? சதா மற்றும் சகஜமாக ஆஜர் ஆக வேண்டும், சமயம் கடந்த
பிறகு வரக்கூடாது, இதை செய்ய விரும்பினேன், ஆனால் இப்படி ஆகி
விட்டது, இது இருக்கக்கூடாது. இவர்களையே சர்வ சக்திகளின்
அதிகாரி என்று கூறப்படுகின்றது. இந்த அதிகாரத்தை பாப்தாதா
அனைவருக்கும் கொடுத்திருக் கின்றார்கள், ஆனால், சதா அதிகாரி
ஆகுவதில் வரிசைக்கிரமமாக ஆகிவிடுகின்றனர் என்பது தெரிகிறது. சதா
மற்றும் சகஜமாக இருக்க வேண்டும், இயற்கையாக இருக்க வேண்டும்,
இயல்பாக இருக்க வேண்டும், இதற்கான விதி - எவ்வாறு தந்தை பிரபு
என்றும் அழைக்கப்படுகின்றார், இறைவன் இருக்கின்றார் என்று
கூறுகின்றனர். ஆயத்தமாய் இருக்கின்றேன் எனது பிரபுவே என்று
கூறுகின்றனர். எந்தக் குழந்தை இறைவனின் ஒவ்வொரு ஸ்ரீமத்திற்கும்
ஆயத்தமாய் இருக்கின்றேன் பிரபுவே என்று கூறி நடக்கின்றாரோ,
அவருக்கு முன்னால் சர்வ சக்திகளும் வந்தேன் எனது பிரபுவே என்று
சொல்கின்றன. ஒவ்வொரு கட்டளைக்கும் உத்தரவு ஐயா, ஒவ்வொரு அடியில்
உத்தரவு ஐயா என்று கூறிக்கொண்டு வரும். ஒருவேளை, ஒவ்வொரு
ஸ்ரீமத்தில் ஆயத்தமாய் இருக்கின்றேன் என்பது இல்லை என்றால்
ஒவ்வொரு சக்தியும் கூட ஒவ்வொரு நேரம் ஆயத்தமாய் உள்ளேன் பிரபுவே
என்று கூறமுடியாது. ஒருவேளை, சில நேரங்களில் தந்தையின் ஸ்ரீமத்
மற்றும் கட்டளையை ஏற்று நடக்கின்றீர்கள் என்றால் சக்திகள் கூட
சில நேரங்களில் உங்களிடம் ஆஜர் ஆகுவதற்கான கட்டளையை ஏற்று
நடக்கும். அந்த நேரம் அதிகாரி என்பதற்கு பதிலாக அடிமை
ஆகிவிடுகின்றனர். எனவே, பாப்தாதா இந்த ரிசல்ட்டை சோதனை
செய்தார்கள், அதில் என்ன பார்த்தார்கள். வரிசைக்கிரமமாக உள்ளனர்.
அனைவரும் முதல் எண்ணில் இல்லை, வரிசைக் கிரமமாக உள்ளனர் மற்றும்
சதா சகஜமாக இல்லை. சில நேரம் சகஜமாக உள்ளது மற்றும் சில நேரம்
கொஞ்சம் கடினமாகவே சக்தி எமர்ஜ் (வெளிப்படுகிறது) ஆகிறது.
பாப்தாதா ஒவ்வொரு குழந்தையையும் தந்தைக்கு சமமாகப் பார்ப்பதற்கு
விரும்பு கின்றார்கள். வரிசைக்கிரமமாக இருப்பதை பார்க்க
விரும்பவில்லை மேலும், தந்தைக்கு சமமாகுவதே உங்கள் அனைவருடைய
இலட்சியமும் ஆகும். சமமாக ஆகுவதற்கான இலட்சியம் உள்ளதா அல்லது
வரிசைக்கிரமமாக ஆகுவதற்கான இலட்சியம் உள்ளதா? ஒருவேளை, இதைக்
கேட்டால் அனைவரும் சமமாக ஆகவேண்டும் என்றே கூறுவீர்கள்.
ஆகையினால், சோதனை செய்யுங்கள் - ஒன்று சர்வ சக்திகள் உள்ளனவா?
சர்வ என்பதற்கு அடிக்கோடிடுங்கள். சர்வ குணங்கள் உள்ளனவா?
தந்தைக்கு சமமான ஸ்திதி உள்ளதா? சில நேரம் சுயத்தின் ஸ்திதி,
சில நேரம் ஏதாவது பர ஸ்திதி வெற்றி அடைகிறதா? பர ஸ்திதி ஒருவேளை
வெற்றி பெற்றுவிடுகிறது என்றால் அதற்கான காரணத்தை அறிவீர்கள்
தானே? ஸ்திதி பலவீனமாக இருக்கும்பொழுதே பரஸ்திதியால் யுத்தம்
செய்ய முடியும். சதா சுய ஸ்திதி வெற்றி அடைந்தே இருக்க வேண்டும்,
அதற்கான சாதனம் - சதா சுவமானம் மற்றும் மரியாதையின் சமநிலை
ஆகும். சுவமானதாரி ஆத்மா இயல்பாகவே மரியாதை கொடுக்கக்கூடிய
வள்ளலாக இருப்பார்கள். உண்மையில் யாருக்காவது மரியாதை கொடுப்பது
என்றால் கொடுப்பதல்ல, மரியாதை கொடுப்பது என்றால் மரியாதை
பெறுவது என்பதாகும். மரியாதை கொடுக்கக் கூடியவர்கள் அனைவருடைய
உள்ளத்தில் தானாகவே மரியாதைக்குரியவர்களாக ஆகிவிடுகின்றார்கள்.
பிரம்மா பாபாவைப் பார்த்தீர்கள் - ஆதிதேவனாக இருந்தபோதிலும்,
நாடகத்தின் முதல் ஆத்மாவாக இருந்தபோதிலும் சதா குழந்தை களுக்கு
மரியாதை கொடுத்தார். தன்னை விடவும் அதிகமாகக் பிற ஆத்மாக்கள்
மூலமாக குழந்தைகளுக்கு மரியாதை கொடுக்க வைத்தார், ஆகையினால்,
ஒவ்வொரு குழந்தையின் உள்ளத்தில் பிரம்மா பாபா
மரியாதைக்குரியவராக ஆனார். எனவே, மரியாதை கொடுத்தாரா அல்லது
மரியாதை பெற்றாரா? மரியாதை கொடுப்பது என்றால் பிறருடைய
உள்ளத்தில் உள்ளப்பூர்வமான அன்பின் விதை விதைப்பதாகும்.
விஷ்வத்திற்கு முன்னால் கூட விஷ்வ கல்யாணகாரி ஆத்மா என்பது
எப்பொழுது ஆத்மாக்களுக்கு அன்போடு மரியாதை கொடுக்கின்றீர் களோ,
அப்பொழுதே அனுபவம் செய்கின்றார்கள்.
பாப்தாதா நிகழ்கால சமயத்தில் ஒருவருக்கொருவர் மரியாதை
கொடுப்பதற்கான அவசியம் இருப்பதைப் பார்த்தார்கள். மரியாதை
கொடுப்பவர்களே விதாதா ஆத்மா வாகத் தென்படு கின்றார்கள். மரியாதை
கொடுப்பவர்களே பாப்தாதாவின் ஸ்ரீமத்தை (சுபபாவனை, சுபவிருப்பம்)
ஏற்றுக் கொள்ளக்கூடிய கட்டளைப்படி நடக்கும் குழந்தை களாக
உள்ளனர். மரியாதை கொடுப்பது தான் ஈஸ்வரிய பரிவாரத்தினுடைய
உள்ளத்தின் அன்பு ஆகும். மரியாதை கொடுப்பவர் சுவமானத்தில்
சகஜமாகவே நிலைத்திருக்க முடியும். ஏன்? எந்த ஆத்மாக்களுக்கு
மரியாதை கொடுக்கின்றார்களோ, அந்த ஆத்மாக்கள் மூலம் உள்ளத்தின்
ஆசீர்வாதங்கள் என்ன கிடைக் கின்றனவோ, அந்த ஆசீர்வாதங்களின்
களஞ்சியமானது சகஜமாக மற்றும் தானாகவே சுவமானத் தின் நினைவை
ஏற்படுத்துகிறது. ஆகையினால், மரியாதை கொடுக்கும் வள்ளல்
ஆகுங்கள் என்று பாப்தாதா நாலாபுறங்களிலும் உள்ள குழந்தைகளை
விசேஷமாக அடிக்கோடிட வைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.
பாப்தாதாவிடம் எந்தவொரு குழந்தையும் எந்த நிலையில் வந்தாலும்,
பலவீனமாக வந்தாலும், சமஸ்காரத்திற்கு வசமாகி வந்தாலும்,
பாவங்களின் சுமையை எடுத்துக் கொண்டு வந்தாலும், கடினமான
சமஸ்காரத்தை எடுத்துக் கொண்டு வந்தாலும், பாப்தாதா ஒவ்வொரு
குழந்தையையும் எந்தப் பார்வையோடு பார்த்தார்கள்! என்னுடைய
வெகுகாலத்திற்குப் பிறகு தேடிக் கண்டெடுக்கப் பட்ட செல்லமான
குழந்தை, ஈஸ்வரிய பரிவாரத்தைச் சேர்ந்த குழந்தை என்ற பார்வையில்
பார்த்தார்கள். ஆக, மரியாதை கொடுத்தார்கள் மற்றும் நீங்கள்
சுவமானதாரி ஆகிவிட்டீர்கள். எனவே, தந்தையைப் பின்பற்றுங்கள்.
ஒருவேளை, சகஜமாக சர்வ குணங்களிலும் சம்பன்ன மானவர் ஆகவேண்டும்
என விரும்பினால் மரியாதை கொடுக்கும் வள்ளல் ஆகுங்கள். புரிந்ததா!
சகஜம் தானே? இது சுலபமானதா அல்லது கடினமானதா? டீச்சர்கள் என்ன
நினைக்கின்றீர்கள், சுலபமானதா? சிலருக்குக் கொடுப்பது சகஜமாக
உள்ளது, சிலருக்கு கடினமாக உள்ளதா அல்லது கொடுப்பது
அனைவருக்கும் சகஜமாக உள்ளதா? உங்களுடைய பட்டம் - சர்வ உபகாரி
என்பதாகும். அபகாரம் செய்பவர் களுக்கும் உபகாரம் செய்பவர்கள்.
எனவே, சோதனை செய்யுங்கள் - சர்வ உபகாரி திருஷ்டி, விருத்தி,
நினைவு இருக்கிறதா? பிறருக்கு உபகாரம் செய்வது என்பது தனக்கு
உபகாரம் செய்வது என்பதாகும். எனவே, என்ன செய்ய வேண்டும்?
மரியாதை கொடுக்க வேண்டும் அல்லவா! வெவ்வேறு விசயங்களை தாரணை
செய்வதற்காக என்ன உழைப்பு செய்கின்றீர்களோ, அதிலிருந்து
விடுபட்டுவிடுவீர்கள். ஏனெனில், சமயத்தின் வேகம் தீவிரம் ஆகிக்
கொண்டிருக் கின்றது என்பதை பாப்தாதா பார்த்துக் கொண்டு
இருக்கின்றார்கள். சமயம் காத்துக் கொண்டு இருக்கின்றது. நீங்கள்
அனைவரும் ஏற்பாடு செய்ய வேண்டும். சமயத்தின் காத்திருப்பை
முடிவடையச் செய்ய வேண்டும். என்ன ஏற்பாடு செய்ய வேண்டும்?
தன்னுடைய சம்பூரணத் தன்மை மற்றும் சமான் தன்மையின் வேகத்தை
தீவிரப்படுத்த வேண்டும். செய்து கொண்டு இருக்கின்றேன் இப்படி
இருக்கக்கூடாது, தீவிர வேகத்தில் உள்ளதா? என்று தீவிர கதியை
சோதனை செய்யுங்கள்.
மற்றபடி அன்போடு புதுப்புது குழந்தைகளும் வந்திருக்கின்றார்கள்.
பாப்தாதா புதுப்புது குழந்தைகளைப் பார்த்து மகிழ்ச்சி
அடைகின்றார்கள். யார் முதல் முறையாக வந்திருக்கின்றீர்களோ,
அவர்கள் கை உயர்த்துங்கள். நிறைய பேர் உள்ளனர். தந்தை
வீட்டிற்கு, தன்னுடைய வீட்டிற்கு வந்திருக்கின்றீர்கள்,
வாழ்த்துக்கள். நல்லது.
சேவைக்கான முறை கர்நாடகத்தினுடையது:-
கர்நாடகத்தினர் எழுந்திருங்கள். சேவை யினுடைய பொன்னான
வாய்ப்பிற்கான வாழ்த்துக்கள். பாருங்கள், சேவைக்கான முதல்
நம்பரைப் பெற்றிருக்கின்றீர்கள் என்றால் முதல் நம்பரிலேயே
இருக்க வேண்டும் அல்லவா! முயற்சியில், வெற்றியாளர் ஆகுவதில்
அனைத்திலும் முதல் நம்பர் பெறக்கூடியவர்கள். இரண்டாவது நம்பர்
பெறக் கூடாது, முதல் நம்பர் பெற வேண்டும். இருக்கிறதா தைரியம்!
தைரியம் உள்ளதா? தைரியம் உங்களுடையது மற்றும் ஆயிரம் மடங்கு
உதவி தந்தையினுடையது ஆகும். நன்றாக வாய்ப்பை பயன்படுத்தி
இருக்கின்றீர்கள். தங்களுடைய புண்ணியத்தின் கணக்கை நிறைய நிறைய
சேமித்துவிட்டீர்கள். நல்லது. கர்நாடகத்தில் மெகா புரோகிராம்
செய்து விட்டீர்களா? செய்யவி ல்லையா, ஏன்? ஏன் செய்யவில்லை?
கர்நாடகம் அனைவரைவிட முதல் நம்பர் பெற வேண்டும். (பெங்களூரில்
செய்யப் போகிறோம்.) நல்லது, யாரெல்லாம் பெரிய புரோகிராம்
செய்திருக்கி ன்றீர்களோ, அவர்கள் எழுந்திருங்கள். எத்தனை
நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன? (8, 10 நடந்து விட்டன) பாப்தாதா
பெரிய புரோகிராமிற்கான பெரிய வாழ்த்துக்கள் கொடுத்துக் கொண்டு
இருக்கின்றார்கள். மண்டலங்கள் எத்தனை உள்ளன! ஒவ்வொரு மண்டலமும்
பெரிய புரோகிராம் செய்ய வேண்டும், ஏனெனில், உங்களுடைய நகரத்தில்
புகார் செய்யக் கூடியவர்கள் புகார் செய்ய மாட்டார்கள். பெரிய
நிகழ்ச்சியில் விளம்பரமும் கூட பெரியதாக செய்கிறீர்கள் அல்லவா,
மீடியா மூலமோ, போஸ்டர் மூலமோ, ஹோர்டிங் போன்ற வெவ்வேறு
சாதனங்களை பயன்படுத்துனீர்கள் என்றால் புகார் குறைந்துவிடும்.
பாப்தாதாவிற்கு இந்த சேவை பிடித்துள்ளது, ஆனால் . . . ஆனால்
என்பது உள்ளது. நிகழ்ச்சியோ பெரியதாக செய்திருக்கிறீர்கள்,
அதற்கான வாழ்த்துக்களோ உண்டு, ஆனால், ஒவ்வொரு நிகழ்ச்சியிலும்
குறைந்ததிலும் குறைந்தது 108ன் மாலை தயாராக வேண்டும். அது எங்கே
தயாராகி உள்ளது? குறைந்ததிலும் குறைந்தது 108, அதிகத்திலும்
அதிகமாக 16 ஆயிரம். ஆனால், இவ்வளவு சக்தி என்ன செலவழித்து
உள்ளீர்களோ, இவ்வளவு செல்வத்தை ஈடுபத்தி இருக்கிறீர்கள்,
அதற்கான ரிசலட் குறைந்ததிலும் குறைந்தது 108 தயாராக வேண்டும்.
அனைவருடைய முகவரியும் உங்களிடம் இருக்க வேண்டும். பெரிய
நிகழ்ச்சியில் யாரெல்லாம் பிறரை அழைத்து வருபவர்களோ, அவர்களிடம்
அழைத்து வருபவர்களுடைய அறிமுகமோ, இருக்கத்தான் செய்கிறது,
அவர்களை மீண்டும் அருகாமையில் கொண்டு வரவேண்டும். நாங்கள்
செய்துவிட்டோம் என்பது கூடாது, ஆனால், என்ன காரியம்
செய்யப்படுகிறது என்றாலும் அதற்கான பலனோ கிடைக்க வேண்டும்
அல்லவா. எனவே, ஒவ்வொரு பெரிய நிகழ்ச்சி செய்பவர்களும் இந்த
ரிசல்ட் பாப்தாதாவிற்குக் கொடுக்க வேண்டும். அவர்கள் வெவ்வேறு
சென்டருக்கு செல்பவர்களாக இருக்கட்டும், அவர்கள் எந்த நகரத்தைச்
சேர்ந்தவர்களோ, அவர்கள் அங்கே செல்லட்டும், ஆனால், ரிசல்ட்
இருக்க வேண்டும். சரி தானே, முடியும் அல்லவா! கொஞ்சம் கவனம்
கொடுத்தால் வெளிப்பட்டு வருவார்கள், 108 என்பது ஒன்றுமே இல்லை,
ஆனால், பாப்தாதா ரிசலட்டைப் பார்ப்பதற்கு விரும்புகின்றார்கள்,
குறைந்ததிலும் குறைந்த மாணவர்கள் உருவாக வேண்டும். சகயோகம்
செய்வதற்கு முன்னால் வரவேண்டும், யார் யார் எத்தனை பேரை
உருவாக்கி இருக்கின்றார்கள், அந்த ரிசல்ட்டை பாப்தாதா இந்த
சீசனில் பார்க்க விரும்புகின்றார்கள். சரி தானே? பாண்டவர்கள்
சரியா? பார்க்கலாம் நம்பர் ஒன் யார் என்று? எத்தனை பேரை வேண்டு
மானாலும் உருவாக்குங்கள், ஆனால், கண்டிப்பாக உருவாக்குங்கள்.
நடப்பது என்னவென்றால், புரோகிராம் நடந்துவிடுகிறது, ஆனால்,
அவர்களை பின்தொடர்தலில் (ஃபாலோ-அப்) கவனம் கொஞ்சம்
குறைவாகிவிடுகிறது, ஆனால், உருவாக்குவது ஒன்றும் கடினம் அல்ல.
மற்றபடி பாப்தாதா குழந்தைகளுடைய தைரியத்தைப் பார்த்து மகிழ்ச்சி
அடைகின்றார்கள். நல்லது.
ல்லது. இப்பொழுது அனைவரும் ஒரு நொடியில், ஒரு நொடி ஒரு நிமிடம்
அல்ல, ஒரு நொடியில் நான் ஃபரிஷ்தா ஸோ(தான்) தேவதை - இந்த மனதின்
டிரில்லை நொடியில் அனுபவம் செய்யுங்கள். இப்படிப்பட்ட டிரில்லை
ஒரு நாளில் ஒரு நொடியில் அடிக்கடி செய்யுங்கள். எவ்வாறு
சரீரத்திற்கான டிரில் சரீரத்தை சக்திசாலியாக ஆக்குகிறதோ,
அதுபோல் இந்த மனதின் டிரில் மனதை சக்திசாலியாக ஆக்கவல்லதாகும்.
நான் ஃபரிஷ்தா, இந்த பழைய உலகம், பழைய தேகம், பழைய தேகத்தின்
சமஸ்காரத்தில் இருந்து விடுபட்ட ஃபரிஷ்தா ஆத்மா ஆவேன். நல்லது.
நாலாபுறங்களிலும் உள்ள மிகவும் அன்பான, சதா அன்புக் கடலில்
மூழ்கியிருக்கும் ஆத்மாக்களுக்கு, சதா சர்வ சக்திகளின்
அதிகாரியான சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு, சதா தந்தைக்கு சமமாக
ஆகக்கூடிய தந்தையினுடைய அன்பான ஆத்மாக்களுக்கு, சதா
சுவமானத்தில் இருக்கக் கூடிய ஒவ்வொரு ஆத்மாவிற்கும் மரியாதை
கொடுக்கக் கூடிய, அனைவரின் மரியாதைக் குரியவராக ஆகக்கூடிய
ஆத்மாக்களுக்கு, சதா சர்வ உபகாரி ஆத்மாக்களுக்கு
பாப்தாதாவினுடைய உள்ளத்தின் அன்பு நினைவுகள் மற்றும் உள்ளத்தின்
ஆசீர்வாதங்கள் சுவீகாரம் ஆகட்டும். மேலும், கூடவே விஷ்வத்தின்
எஜமானரான ஆத்மாக்களுக்கு நமஸ்காரம்.
தாதிஜீ அவர்களுடன்:-
மரியாதை கொடுப்பதில் முதல் நம்பரில் தேர்ச்சி அடைந்துள்ளீர்கள்.
நன்றாக உள்ளது, அனைத்து தாதிகளினால் மதுவனத்திற்கு அழகு. (சபையினரிடம்)
இந்த அனை வருக்கும் தாதிகளினுடைய அழகு நன்றாக இருக்கின்றது
அல்லவா. எவ்வாறு தாதிகளின் மகிமை யினால் மதுபனத்திற்கு மகிமை
ஏற்படுகின்றதோ, அவ்வாறு நீங்கள் அனைவரும் தாதி மட்டுமல்ல,
தாதிகள் மற்றும் தாதாக்களும் ஆவீர்கள். எனவே, அனைத்து தாதிகள்
மற்றும் அனைத்து தாதாக்கள், அனைவரும் எங்கு இருக்கின்றீர்களோ,
அந்த இடத்தின் அழகு ஆவீர்கள் என்ற இந்த சிந்தனை இருக்க வேண்டும்,
செய்ய வேண்டும். எவ்வாறு தாதிகளால் மகிமை உள்ளதோ, அவ்வாறு
ஒவ்வொரு இடத்தின் அழகு ஆவீர்கள், ஏனென்றால், தாதிக்குப்
பின்னால் வரும் தாதிகள் ஆவீர்கள் அல்லவா, குறைந்தவர்கள் அல்ல.
தாதாக்களும் உள்ளனர், தாதிகளும் உள்ளனர். ஆகவே, எந்தவொரு
சென்டரிலும் வறட்சி இருக்கக் கூடாது, செழிப்பு இருக்க வேண்டும்.
நீங்கள் ஒவ்வொருவரும் உலகத்தில் அழகை ஏற்படுத்தக்கூடிய
ஆத்மாக்கள் ஆவீர்கள். எனவே, நீங்கள் எந்த இடத்தில்
இருக்கின்றீர்களோ, அது பார்ப்பதற்கு அழகான இடமாகத்
தெரியவேண்டும். சரி தானே? ஏனெனில், உலகத்தில் எல்லைக்குட்பட்ட
அழகு உள்ளது மற்றும் உங்கள் ஒவ்வொரு வரிடமும் எல்லையற்ற அழகு
உள்ளது. சுயம் குஷி, சாந்தி மற்றும் அதீந்திரிய சுகத்தின்
அழகோடு இருந்தீர்கள் என்றால் இடத்திலும் கூட அழகு வந்து விடும்,
ஏனெனில், ஸ்திதியினால் இருப்பிடத்தில் வாயுமண்டலம் பரவுகின்றது.
அனைவரும் சோதனை செய்ய வேண்டும் - நான் எங்கே இருக்கின்றேனோ
அங்கே அழகு உள்ளதா? துயரம் இல்லை தானே? அனைவரும் மகிழ்ச்சி யில்
நடனமாடிக் கொண்டு இருக்கின்றீர்களா? இப்படி இருக்கின்றீர்கள்
அல்லவா! தாதிகளாகிய உங்களுடைய வேலையே இது தான் அல்லவா! தாதிகள்
மற்றும் தாதாக்களைப் பின்பற்றுங்கள். நல்லது.
அனைத்துப் பக்கங்களிலும் அன்பான குழந்தைகள் யாரெல்லாம்
பாப்தாதாவை உள்ளத்தில் நினைத்துக் கொண்டு இருக்கின்றார்களோ
மற்றும் கடிதம், ஈமெயில் மூலம் நினைவை அனுப்பி இருக்கின்றார்களோ,
அந்த நாலாபுறங்களிலும் உள்ள குழந்தைகளை பாப்தாதா தொலைவில்
இருப்பதாகப் பார்த்துக் கொண்டு இருக்க வில்லை, ஆனால், உள்ளம்
என்ற சிம்மாசனத்தில் பார்த்துக் கொண்டு இருக்கின்றார் கள்.
அனைத்தையும் விட அருகாமையில் இருப்பது உள்ளம் ஆகும். பாப்தாதா
உள்ளத்தில் இருந்து நினைவை அனுப்பக் கூடியவர்களுக்கு மற்றும்
நினைவை அனுப்பவில்லை, ஆனால் நினைவில் இருப்பவர்கள் அனைவரையும்
இதய சிம்மாசனதாரியாகப் பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள்.
பதில் கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள். தூரத்தில்
அமர்ந்திருந்தாலும் நம்பர்ஒன் தீவிர முயற்சியாளர் பவ.
வரதானம்:
கவனக்குறைவு என்ற தூக்கத்திற்கு விவாகரத்து கொடுக்கக்கூடிய
தூக்கத்தை வென்றவராக, சக்கரவர்த்தியாக ஆகுக.
சாட்சாத்கார மூர்த்தி ஆகி பக்தர்களுக்கு சாட்சாத்காரம்
செய்விப்பதற்காக அதாவது சக்கரவர்த்தி ஆகுவதற்காக தூக்கத்தை
வென்றவர் ஆகுங்கள். எப்பொழுது வினாசகாலம் மறக்கின்றதோ,
அப்பொழுதே கவனக்குறைவு என்ற தூக்கம் வருகின்றது. பக்தர்களின்
கூக்குரலைக் கேளுங்கள், துக்கமான ஆத்மாக்களின் துக்கத்தின்
அழுகையைக் கேளுங்கள், தாகமான ஆத்மாக்களின் பிரார்த்தனையின்
வேண்டுதலைக் கேளுங்கள், அப்பொழுது ஒருபொழுதும் கவனக்குறைவு
என்ற தூக்கம் வராது. எனவே, இப்பொழுது சதா விழித்திருக்கும் (சுடர்விடும்)
ஜோதி ஆகி கவனக்குறைவு என்ற தூக்கத்திற்கு விவாகரத்து கொடுங்கள்
மற்றும் சாட்சாத்கார மூர்த்தி ஆகுங்கள்.
சுலோகன்:
உடல், மனம், செல்வம், எண்ணம், சொல், செயல் - எவ்விதத்திலாவது
தந்தையின் காரியத்தில் சகயோகி ஆனீர்கள் என்றால் சகஜயோகி
ஆகிவிடுவீர்கள்.
அவ்யக்த சமிக்ஞை - சத்தியம் மற்றும் பண்பு நிறைந்த கலாச்சாரத்தை
தனதாக்குங்கள்
தந்தையை ‘‘காட் இஸ் ட்ரூத்” (கடவுள் சத்தியமானவர்) என்று
கூறுகின்றார்கள், சத்தியம் தான் தந்தைக்குப் பிரியமானது ஆகும்.
சத்தியமான உள்ளத்தால் இறைவன் மகிழ்ச்சி அடைகின்றார். எனவே, இதய
சிம்மாசனதாரி சேவாதாரி குழந்தைகளுடைய சம்பந்தம், தொடர்பில்,
ஒவ்வொரு எண்ணம் மற்றும் பேச்சில் உண்மையும், தூய்மையும்
புலப்படும். அவர்களுடைய ஒவ்வொரு எண்ணம், ஒவ்வொரு வார்த்தை
உண்மையாக இருக்கும்.