23-07-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
"இனிமையான குழந்தைகளே! நீங்கள் சரியான
சமயத்தில் உங்கள் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும்.
அதனால் நினைவின் வேகத்தை அதிகப்படுத்துங்கள். இந்த துக்க
உலகத்தை மறந்து சாந்திதாம் மற்றும் சுகதாமத்தை நினைவு
செய்யுங்கள்.
கேள்வி:
எந்த ஓரு ஆழமான ரகசியத்தை நீங்கள்
மனிதர்களுக்குச் சொன்னால் அவர்களுடைய புத்தியில் குழப்பம் வரும்?
பதில்:
அவர்களுக்கு ஆழமான ரகசியத்தைச்
சொல்லுங்கள்--ஆத்மா இவ்வளவு சிறியதாக உள்ளது, அதில் அழியாத
பாகம் அடங்கியுள்ளது. அந்த பாகம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே
இருக்கிறது. ஒரு போதும் களைத்துப் போவதில்லை. மோட்சம்
யாருக்கும் கிடைக்காது. மனிதர் கள் அதிக துக்கத்தைப்
பார்த்துவிட்டுச் சொல்கிறார்கள், மோட்சம் கிடைத்தால் நன்றாக
இருக்கும் என்று. ஆனால் அவினாசி ஆத்மா நாடக பாகத்தை நடிக்காமல்
இருக்க முடியாது. இவ் விசயத்தைக் கேட்டு அவர்களுக்குள் குழப்பம்
ஏற்படும்.
ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளுக்குத் தந்தை சொல்லிப்
புரிய வைக்கிறார், இங்கே இருப்பவர்கள் ஆன்மீகக் குழந்தைகள்.
தந்தை தினந்தோறும் சொல்லிப் புரிய வைக்கிறார், இவ்வுலகத்தில்
ஏழைகளுக்குத் தான் எவ்வளவு துக்கம்! இப்போது இந்த வெள்ளம்
முதலியவை வந்தால் ஏழைகளுக்கு துக்கம் ஏற்படுகிறது. அவர்களுடைய
பொருட்களுக்கு எல்லாம் என்ன நிலை ஏற்படுகிறது! துக்கம்
ஏற்படுகின்றது இல்லையா? அளவற்ற துக்கம். செல்வந்தர்களுக்கு
சுகம் உள்ளது. ஆனால் அதுவும் அல்பகாலத்துக்குத் தான்.
செல்வந்தர்களும் நோய்வாய்ப்படுகிறார்கள். மரணமும் அதிகம்
ஏற்படுகிறது -- இன்று இன்னார் இறந்தார், இன்று இது நடந்தது
என்று. இன்று குடியரசுத் தலைவராக இருப்பவர் நாளை பதவி இறங்க
நேரிடு கின்றது. கட்டாயப்படுத்தி அவரைக் கீழே இறக்கி
விடுகிறார்கள். இவ்வாறு துக்கமும் ஏற்படு கின்றது. பாபா
சொல்லியிருக்கிறார், துக்கங்களின் பட்டியலையும் தயார்
செய்யுங்கள், என்னென்ன வகையான துக்கங்கள் உள்ளன -- இந்த துக்க
உலகத்தில்? குழந்தைகளாகிய நீங்கள் சுகதாமம் பற்றியும்
அறிவீர்கள், உலகம் எதையும் அறிந்து கொள்ளவில்லை. துக்க உலகம்
மற்றும் சுக உலகத்தை அவர்களால் வேறுபடுத்திப் பார்க்க முடியாது.
பாபா சொல்கிறார், நீங்கள் அனைத்தை யும் அறிவீர்கள். நிச்சயமாக
உண்மையைச் சொல்கிறார் என்று ஏற்றுக் கொள்வீர்கள். இங்கே
சிலருக்கு பெரிய-பெரிய மாளிகைகள் உள்ளன, விமானங்கள் முதலியன
உள்ளன. அவர்கள் நினைக்கிறார்கள், கலியுகம் இன்னும் 40 ஆயிரம்
ஆண்டுகள் நடைபெறும், அதன் பிறகு சத்யுகம் வரும் என்று. பயங்கர
இருளில் இருக்கிறார்கள் இல்லையா? இப்போது அவர்களை அருகில்
கொண்டு வர வேண்டும். கொஞ்ச காலமே மீதமுள்ளது. அவர்கள் இலட்சம்
வருடங்கள் எனச் சொல்வது எங்கே, நீங்கள் 5000 வருடங்கள் தான்
என்பதை உறுதிப் படுத்திச் சொல்வது எங்கே! இந்த 5000
ஆண்டுகளுக்குப் பிறகு சக்கரம் திரும்பவும் நடந்தாக வேண்டும்.
டிராமா இலட்சக் கணக்கான வருடங்களெல்லாம் நடைபெறாது. நீங்கள்
புரிந்து கொண்டிருக்கிறீர்கள், என்ன நடந்தாலும் அது 5000
ஆண்டுகளுக்குள் தான் நடைபெறுகிறது என்று. ஆக, இங்கே துக்க
உலகத்தில் நோய்கள் முதலியவை உள்ளன. நீங்கள் முக்கியமான ஒரு சில
விசயங்களை மட்டும் எழுதி வையுங்கள். சொர்க்கத்தில் துக்கத்தின்
பெயர் கூட இருக்காது. இப்போது பாபா சொல்லிப் புரிய வைக்கிறார்,
மரணம் முன்னாலேயே உள்ளது. அதே கீதையின் கதை நடைபெற்றுக்
கொண்டிருக்கிறது. நிச்சயமாக சங்கமயுகத்தில் தான் சத்யுகத்தின்
ஸ்தாபனை நடைபெறும். பாபா சொல்கிறார், நான் ராஜாவுக்கெல்லாம்
ராஜாவாக ஆக்குகிறேன் என்றால் நிச்சயமாக சத்யுகத்தின் ராஜாவாகத்
தான் ஆக்குவேன் இல்லையா? பாபா மிக நல்ல முறையில் புரிய
வைக்கிறார்.
இப்போது நாம் சுகதாமத்திற்குச் செல்கின்றோம். பாபா நம்மை
அழைத்துச் சென்றாக வேண்டும். யார் நிரந்தரமாக நினைவு
செய்கிறார்களோ அவர்கள் தான் உயர்ந்த பதவி பெறுவார்கள். அதற்காக
பாபா யுக்திகள் சொல்லிக் கொண்டே இருக்கிறார். நினைவு
யாத்திரையின் வேகத்தை அதிகப் படுத்துங்கள். கும்பமேளாவுக்கும்
கூட நேரத்தில் செல்ல வேண்டியுள்ளது. நீங்களும் கூட நேரத்தில்
செல்ல வேண்டும். சீக்கிரம்-சீக்கிரமாகப் போய்ச் சேர்ந்து
விடுவீர்கள் என்பதில்லை. சீக்கிரம்-சீக்கிரம் செய்வது தனது
கையில் இல்லை. இதுவோ டிராமாவில் விதிக்கப்பட்டுள்ளது. மகிமை
அனைத்தும் டிராமாவுக்கே. இங்கே எத்தனை ஜீவ ஜந்துக்கள் முதலியவை
துக்கம் கொடுப்பதாக உள்ளன! சத்யுகத்தில் இவை இருப்ப தில்லை.
உள்ளுக்குள் சிந்தனை செய்ய வேண்டும். அங்கே இன்னின்ன (பொருட்கள்,
வசதி) இருக்கும். சத்யுகமோ நினைவுக்கு வருகிறது இல்லையா?
சத்யுகத்தின் ஸ்தாபனையை பாபா செய்கிறார். பின்னால் ஞானம்
அனைத்துமே சுருக்கமாக புத்தியில் வந்து விடுகின்றது. எப்படி
விதை எவ்வளவு சிறியது, மரம் எவ்வளவு பெரியதாக உள்ளது! அவைகளோ
ஜடப் பொருள்கள். இது சைதன்யம். இதைப்பற்றி யாருக்கும் தெரியாது.
கல்பத்தின் ஆயுள் மிக நீண்டதாகச் சொல்லி விட்டார்கள். பாரதம்
தான் மிகுந்த சுகத்தை அடைகிறது என்றால் துக்கமும் பாரதம் தான்
அடைகிறது. நோய்கள் முதலியனவும் பாரதத்தில் அதிகம். இங்கே
கொசுக்களைப் போல் மனிதர்கள் மரணமடைகிறார்கள், ஏனென்றால் ஆயுள்
சிறியது. இங்கே துப்புரவு செய்பவர்கள் மற்றும் வெளிநாட்டில்
துப்புரவு செய்பவர்களுக் கிடையில் எவ்வளவு வேறுபாடு உள்ளது.!
வெளிநாட்டிலிருந்து கண்டுபிடிப்புகள் அனைத்தும் இங்கே
வருகின்றன. சத்யுகத்தின் பெயரே பாரடைஸ் (சொர்க்கம்). அங்கே
எல்லாம் சதோபிர தானமாக இருக்கும். உங்களுக்கு அனைத்தும்
சாட்சாத்காரமாகும். இப்போது இது சங்கமயுகம், இதில் பாபா
அமர்ந்து சொல்லிப் புரிய வைக்கிறார், புரிய வைத்துக் கொண்டே
இருப்பார், புதிய-புதிய விசயங்களைச் சொல்லிக் கொண்டே இருப்பார்.
பாபா சொல்கிறார், ஒவ்வொரு நாளும் மிக ஆழமான விசயங்களைச்
சொல்கிறேன். முன்பு இது பற்றித் தெரியாது - பாபா இவ்வளவு சிறிய
புள்ளியாக உள்ளார், அவருக்குள் பாகம் முழுவதும் சதா
காலத்துக்குமாக நிரம்பியுள்ளது. நீங்கள் நாடக பாகத்தை நடித்தே
வந்திருக்கிறீர்கள். நீங்கள் யாருக்காவது சொல்வீர்களானால்
புத்தியில் எவ்வளவு குழப்பம் ஏற்படும் -- இவர்கள் என்ன
சொல்கிறார்கள்! இவ்வளவு சிறிய புள்ளியில் பாகம் முழுவதும்
அடங்கியுள்ளது. அது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.
ஒருபோதும் களைத்துப் போவதில்லை. யாருக்குமே இது பற்றித்
தெரியாது. இப்போது குழந்தை களாகிய உங்களுக்குப் புரிந்து கொண்டே
போகிறது, அதாவது அரைக்கல்பம் சுகம், அரைக்கல்பம் துக்கம். அதிக
துக்கத்தைப் பார்த்து விடடுத் தான் மனிதர்கள் சொல்கிறார்கள் --
இதைவிட மோட்சம் பெறலாம். நீங்கள் சுகத்தில், சாந்தியில்
இருக்கும் போது இதுபோல் சொல்ல மாட்டீர்கள். இந்த ஞானம்
முழுவதும் இப்போது உங்கள் புத்தியில் உள்ளது. எப்படி பாபா
விதையாக இருப்பதால் அவரிடம் முழு மரத்தின் ஞானம் உள்ளது!
மரத்தின் மாடல் வடிவம் காட்டப் பட்டுள்ளது. பெரியதாகக் காட்ட
முடியாது. புத்தியில் ஞானம் முழுவதும் வந்து விடுகிறது. ஆக,
குழந்தைகளாகிய உங்களுக்கு எவ்வளவு விசால புத்தி இருக்க வேண்டும்!
எவ்வளவு சொல்லிப் புரிய வைக்க வேண்டியுள்ளது, இன்னின்னார்
இவ்வளவு காலத்திற்குப் பின் தங்கள் பாகத்தை நடிப்பதற்காக
வருகின்றனர். இது எவ்வளவு மிகப்பெரிய டிராமா! இந்த டிராமா
முழுவதையும் ஒருபோதும் யாராலும் பார்க்கக் கூட இயலாது. முடியவே
முடியாது. திவ்ய திருஷ்டியினாலோ நல்ல பொருள் பார்க்கப்
படுகின்றது. கணேஷ், அனுமான் இதெல்லாம் பக்தி மார்க்கத்
தினுடையவை. ஆனால் மனிதர்களுக்கு பாவனை வந்து விட்டால் விட
முடியாது. இப்போது குழந்தைகளாகிய நீங்கள் புருஷார்த்தம் செய்ய
வேண்டும், கல்பத்திற்கு முன் போல் பதவி பெறுவதற்காகப் படிக்க
வேண்டும். நீங்கள் அறிவீர்கள், புனர்ஜென்மம் ஒவ்வொருவரும்
எடுத்தாக வேண்டும். பிறவிகளின் ஏணிப்படியில் எப்படி இறங்கினோம்
என்பதையோ குழந்தைகளாகிய நீங்கள் அறிந்து கொண்டு விட்டீர்கள்.
யார் தாங்களே புரிந்து கொண்டு விட்டார்களோ அவர்கள்
மற்றவர்களுக்கும் சொல்லிப் புரிய வைப்பார்கள். கல்பத்திற்கு
முன்பும் இதையே செய்திருப்பார் கள். இதுபோலத் தான் கல்பத்திற்கு
முன்பும் கூட மியூசியம் உருவாக்கிக் குழந்தைகளுக்குக் கற்றுக்
கொடுத்திருப்பார்கள். புருஷார்த்தம் செய்து கொண்டே
இருக்கிறார்கள், செய்து கொண்டே இருப்பார்கள். டிராமாவில்
விதிக்கப்பட்டுள்ளது. இதுபோல் ஏராளமான பேர் ஆவார்கள். ஒவ்வொரு
தெருவிலும் ஒவ்வொரு வீட்டிலும் இந்தப் பாடசாலை இருக்கும். தாரணை
செய்வதற்கான விசயம் இது. கேளுங்கள் -- உங்களுக்கு இரண்டு
தந்தையர், அதில் பெரியவர் யார்? அவரைத்தான் அழைக்கிறார்கள்,
கருணை வையுங்கள், கிருபை செய்யுங்கள் என்று. பாபா சொல்கிறார்,
வேண்டுவதால் எதுவும் கிடைக்காது. நான் வழியைச் சொல்லிவிட்டேன்.
நான் வருவதே வழியைச் சொல்வதற்காக. மரம் முழுவதும் உங்கள்
புத்தியில் உள்ளது.
பாபா எவ்வளவு முயற்சி செய்து கொண்டே இருக்கிறார்! இன்னும்
கொஞ்சம் சமயம் மீதி உள்ளது. எனக்கு சேவாதாரிக் குழந்தைகள்
வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் கீதா பாடசாலை வேண்டும். வேறு
சித்திரங்கள் முதலியவற்றை வைக்காதீர்கள், வெளியில் மட்டும்
எழுதிப் போடுங்கள். சித்திரம் இருந்தாலும் இந்த பேட்ஜ் கூடப்
போதுமானது. கடைசியில் இந்த பேட்ஜ் தான் உங்களுக்குக்
காரியத்திற்கு உதவும். சமிக்ஞையின் விசயம். எல்லையற்ற தந்தை
அவசியம் சொர்க்கத்தைத் தான் படைப்பார் என்பது தெரிந்து
விடுகின்றது. ஆக, பாபாவை நினைவு செய்வார்கள். அப்போது தான்
சொர்க்கத்திற்குச் செல்வார்கள் இல்லையா? இதையோ நீங்கள்
அறிவீர்கள், நாம் (தூய்மையற்றவர்கள்), நினைவினால் தான்
தூய்மையாவோம், வேறு வழி எதுவும் கிடையாது. சொர்க்கம் என்பது
பாவன (தூய்மையான) உலகம். சொர்க்கத்தின் எஜமான் ஆக வேண்டுமானால்
அவசியம் பாவனமாக வேண்டும். சொர்க்கத்திற்கு செல்பவர்கள் பிறகு
நரகத்தில் ஏன் மூழ்கியிருக்க வேண்டும்? அதனால் சொல்லப்படுகிறது,
மன்மனாபவ. எல்லையற்ற தந்தையை நினைவு செய்வீர் களானால் பிறகு
அந்த் மதி ஸோ கதி ஆகிவிடும் (கடைசி நினைவு எப்படியோ அதுபோல்
தான் கதி கிடைக்கும்). சொர்க்கத்திற்கு செல்பவர்கள் விகாரத்தில்
செல்ல மாட்டார்கள். பக்தர்கள் அவ்வளவாக விகாரத்தில் போவதில்லை.
சந்நியாசிகளும் இதுபோல் சொல்ல மாட்டார்கள், தூய்மையாகுங்கள்
என்று. ஏனென்றால் அவர்களே திருமணங்களைச் செய்து வைக்கிறார்கள்.
அவர்கள் இல்லறவாசிகளுக்குச் சொல்வார்கள் -- மாதத்தில் ஒருமுறை
விகாரத்தில் செல்லுங்கள்! பிரம்மச்சாரிகளுக்கு இதுபோல் சொல்ல
மாட்டார்கள் -- நீங்கள் திருமணம் செய்து கொள்ளக் கூடாது.
உங்களில் கந்தர்வ விவாகம் செய்கிறார்கள். பிறகு மறுநாளே
விளையாட்டை முடித்து விடுகிறார்கள். மாயா மிகவும் கவர்ச்சி
செய்கிறது. அதுவும் தூய்மையாவதற்கான புருஷார்த்தம் இப்போது தான்
நடைபெறுகின்றது. பிறகு பிராலப்தம் (பலன்). அங்கோ இராவண இராஜ்யமே
இல்லை. குற்றமான (கிரிமினல்) சிந்தனையே இருக்காது. கிரிமினலாக
இராவணன் ஆக்குகின்றான். சிவபாபா சிவில் ஆக்குகிறார். இதையும்
நினைவு வைக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் இந்த வகுப்பு
நடந்தால் அனைவரும் சொல்லிப் புரிய வைப்பவர்களாக ஆகிவிடுவார்கள்.
ஒவ்வொரு வீட்டிலும் கீதா பாடசாலைகளை உருவாக்கி
வீட்டிலுள்ளவர்களைச் சீர்திருத்த வேண்டும். இதுபோல்
வளர்ச்சியடைந்துக் கொண்டே இருக்கும். சாதாரணமானவர்கள் மற்றும்
ஏழைகள் எப்படி நம்முடையவர்களாக ஆவது? பெரிய-பெரிய மனிதர்களுக்கு
சின்னச் சின்ன மனிதர்களின் சத்சங்கத்தில் வருவதற்கும் கூட
வெட்கமாக இருக்கும். ஏனென்றால் கேட்டிருக்கிறீர்கள் இல்லையா,
மந்திரத்தால் சகோதர-சகோதரிகளாக ஆக்கி விடுவார்கள் என்று பிறர்
சொல்வதை? அட, இதுவோ நல்லது தான் இல்லையா? இல்லறத்தில் எவ்வளவு
சச்சரவு-குழப்பங்கள்! பிறகு எவ்வளவு துக்கமடைகிறார்கள்! இதுவே
துக்க உலகம். அளவற்ற துக்கம் உள்ளது. பிறகு அங்கே சுகமும்
அளவற்றதாக இருக்கும். நீங்கள் பட்டியல் தயாரிக்க முயற்சி
செய்யுங்கள். 25-30 மிக முக்கியமான துக்கங்களின் விசயங்களை
வெளிப்படுத்துங்கள்.
எல்லையற்ற பாபாவிடமிருந்து ஆஸ்தியடைவதற்காக எவ்வளவு கடின
முயற்சி செய்ய வேண்டியுள்ளது. பாபா இந்த ரதத்தின் மூலம்
நமக்குச் சொல்லிப் புரிய வைக்கிறார், இந்த தாதாவும் (பிரம்மா)
மாணவர் தான். தேகதாரிகள் அனைவரும் மாணவர்கள். கற்றுத் தருகின்ற
ஆசிரியர் மட்டுமே விதேகி (தேக மற்றவர்). உங்களையும் கூட விதேகி
ஆக்குகின்றார். அதனால் பாபா சொல்கிறார், சரீர உணர்வை விட்டுக்
கொண்டே செல்லுங்கள். இந்தக் கட்டடங்கள் முதலியன எதுவுமே
மிஞ்சியிருக்காது. அங்கே (சத்யுகத்தில்) அனைத்துமே புதியதாகக்
கிடைக்கும். கடைசியில் உங்களுக்கு அதிகம் சாட்சாத்காரம் ஆகும்.
இதையோ அறிவீர்கள், அந்தப் பக்கம் அதிகமாக வினாசம் ஆகிவிடும்,
அணுகுண்டுகள் மூலமாக. இங்கே ரத்த ஆறுகள் ஓடும். இதில் நேரம்
பிடிக்கும். இங்கே நடைபெறப் போகிற மரணங்கள் மிகவும் மோசமாக
இருக்கும். இது அழியாத கண்டம், உலக வரைபடத்தில் பார்த்தால்
இந்துஸ்தான் ஒரு மூலையில் இருப்பதாகத் தோன்றும். டிராமாவின்
அனுசாரம் இங்கே அதன் அறிகுறி வருவதே இல்லை. இங்கே ரத்த நதிகள்
ஓடும். இப்போது அதற்கான ஏற்பாடுகளைச் செய்து
கொண்டிருக்கிறார்கள். கடைசியில் இவர்களுக்கு வெடிகுண்டுகளையும்
கடன் கொடுக்கலாம். மற்றப்படி வீசியதும் உலகத்தை அழிக்கக் கூடிய
அந்த வெடிகுண்டுகளை இவர்களுக்குக் கடன் தர மாட்டார்கள். இலேசான
தரத்தின் வெடிகுண்டுகளை மட்டுமே கொடுப்பார்கள். வேலைக்காகிற
பொருட்களைக் கொடுக்க மாட்டார்கள். வினாசமோ கல்பத்திற்கு முன்
போலவே நடந்தாக வேண்டும். புதிய விசயமல்ல. அநேக தர்மங்கள்
வினாசம், ஒரு தர்மத்தின் ஸ்தாபனை. பாரத கண்டம் ஒருபோதும்
வினாசமாகாது. கொஞ்சம் மீதமிருக்கும். அனைவருமே இறந்து விட்டால்
பிறகு பிரளயம் ஆகிவிடும். உங்களுக்கு மிகுந்த மரியாதை இருக்கும்.
இப்போது அவ்வளவு மரியாதை இல்லை. அதனால் தான் குறைந்த
எண்ணிக்கையில் தேர்ச்சி அடைகிறார்கள். புத்தியில் வருவதில்லை,
எவ்வளவு தண்டனை அடைய வேண்டியதிருக்கும்? கீழே விழுந்து விட்டால்
சம்பாதித்த வருமானம் காணாமல் போய்விடும். கருப்பிலும் கருப்பாக
(முற்றிலும் தூய்மையற்றவர்களாக) ஆகிவிடுவார்கள். பிறகு
அவர்களால் எழுந்து நிற்க முடியாது. எவ்வளவு பேர் போகிறார்கள்,
இன்னும் எத்தனைப் பேர் போகப் போகிறார்கள்! தாங்களாகவே புரிந்து
கொள்ள முடியும் -- இந்த நிலைமையில் நாம் சரீரம் விட்டால் என்ன
கதி அடைய முடியும்? புரிந்து கொள்ள வேண்டிய விசயம் இல்லையா?
பாபா சொல்கிறார், குழந்தைகளாகிய நீங்கள் சாந்தி ஸ்தாபனை
செய்பவர்கள், உங்களுக்குள்ளும் அசாந்தி இருக்குமானால் பதவி
குறைந்து விடும். யாருக்கும் துக்கம் கொடுக்கத் தேவையில்லை.
பாபா எவ்வளவு அன்போடு அனைவரையும் குழந்தைகளே-குழந்தைகளே என்று
அழைத்துப் பேசுகிறார்.! எல்லையற்ற தந்தை அல்லவா? இவரிடம் முழு
உலகத்தின் ஞானமும் உள்ளது. அதனால் தான் சொல்லிப் புரிய
வைக்கிறார். இவ்வுலகத்தில் எத்தனை விதமான துக்கங்கள் உள்ளன!
ஏராளமான துக்கத்தின் விசயங்களை உங்களால் எழுத முடியும். நீங்கள்
இதைத் தெளிவு படுத்திச் சொல்லும்போது புரிந்து கொள்வார்கள்,
இவ்விசயம் முற்றிலும் சரியானது தான் என்று. இந்த அளவற்ற
துக்கத்தை பாபாவைத் தவிர வேறு யாராலும் போக்க முடியாது.
துக்கங்களின் பட்டியல் இருக்குமானால் கொஞ்சத்திற்குக்
கொஞ்சமாவது புத்தியில் பதியும். மற்றவர்கள் கேட்டாலும்
கேட்காதவர் களாக ஆகிவிடுவார்கள். அவர்களுக்காகத் தான்
பாடப்படுகிறது, இசைக்கருவி பற்றி செம்மறியாட்டுக்கு என்ன
தெரியும்? பாபா சொல்லிப் புரிய வைக்கிறார், குழந்தைகளாகிய
நீங்கள் இத்தகைய மெல்லிய மலர்களாக ஆகவேண்டும். எந்த ஒரு
அசாந்தியோ அழுக்கோ இருக்கக் கூடாது. அசாந்தியைப்
பரப்புகிறவர்கள் தேக அபிமானியாக இருக்கிறார்கள்.
அவர்களிடமிருந்து விலகி யிருக்க வேண்டும். தொடவும் கூடாது.
நல்லது.
இனிமையிலும் இனிமையான, வெகுகாலம் கழித்து, காணாமல்
கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாய், தந்தையாகிய
பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. எப்படி கற்றுத் தருகிற ஆசிரியர் சரீரமற்றவராக
இருக்கிறாரோ, அவருக்கு தேக உணர்வு இல்லையோ, அதுபோல் விதேகி
ஆகவேண்டும். சரீர உணர்வை விட்டுக் கொண்டே செல்ல வேண்டும்.
குற்றபார்வை கண்களை மாற்றி குற்றமில்லா பார்வையுடைய கண்களாக
ஆக்க வேண்டும்.
2. தனது புத்தியை விசாலமானதாக ஆக்க வேண்டும்.
தண்டனைகளிலிருந்து தப்புவதற்கு பாபாவுக்கும், படிப்புக்கும்
மரியாதை வைக்க வேண்டும். ஒருபோதும் துக்கம் கொடுக்கக் கூடாது.
அசாந்தியைப் பரப்பக் கூடாது.
வரதானம்:
பிராமண வாழ்க்கையின் நேச்சுரல் நேச்சர் (இயல்பான இயற்கை) மூலம்
கல்லையும் தண்ணீர் ஆக்கக்கூடிய மாஸ்டர் அன்புக்கடல் ஆகுக.
எப்படி உலகத்தில் சொல்கிறார்கள் -- அன்பு என்பது கல்லையும்
தண்ணீராக்கி விடும். அது போல் பிராமணர்களாகிய உங்கள் இயற்கையான
இயல்பு மாஸ்டர் அன்புக்கடல் ஆகும். உங்களிடம் ஆத்மிக அன்பு,
பரமாத்ம அன்பின் அத்தகைய சக்தி மூலம் பல வித இயல்புகளை
மாற்றியமைக்க முடியும். எப்படி அன்புக்கடல் தம்முடைய அன்பு
சொரூபத்தின் அனாதி இயல்பு மூலம் குழந்தை களாகிய உங்களைத்
தம்முடையவர் ஆக்கி விட்டார். அது போல் நீங்களும் மாஸ்டர்
அன்புக்கடல் ஆகி உலக ஆத்மாக்களுக்கு உண்மையான, சுயநலமற்ற
ஆத்மிக அன்பைக் கொடுங்கள். அப்போது அவர்களின் இயல்பு
மாற்றமடைந்து விடும்.
சுலோகன்:
தன்னுடைய சிறப்புகளை நினைவில் வைத்து அவற்றை சேவையில்
ஈடுபடுத்துவீர் களானால் பறக்கும் கலையில் பறந்து கொண்டே
இருப்பீர்கள்
|
|
|