23-07-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! நீங்கள் தந்தையை
போல அனைவருக்கும் செய்தி அளிக்கக் கூடிய உண்மையிலும் உண்மையான
தூதராக வேண்டும். அனைவருக்கும் வீட்டிற்குச் (பரந்தாமம்)
செல்வதற்கான செய்தியைக் கொடுக்க வேண்டும்.
கேள்வி:
தற்காலத்தில் மனிதர்களின் புத்தி
நாள் முழுவதும் எந்த பக்கம் அலைகிறது?
பதில்:
நாகரீகத்தின் பக்கம். மனிதர்களை
கவருவதற்காக அநேகவிதமான ஃபேஷன் நாகரீக நடைமுறைகளைக்
கடைப்பிடிக்கிறார்கள். இந்த நாகரீகத்தை சித்திரங்களிலிருந்து
தான் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். பார்வதி கூட இது போல
நாகரீகமாயிருந்தார், தலைமுடி அலங்காரம் செய்து கொண்டிருந்தார்
என்று நினைக்கிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இந்த பதீத
உலகத்தில் ஃபேஷன் (செயற்கை அலங்காரம்) செய்யக் கூடாது. நான்
உங்களை எப்பேர்ப்பட்ட உலகிற்கு அழைத்துச் செல்கிறேன் என்றால்
அங்கு இயல்பான அழகு இருக்கும். ஃபேஷன் செய்ய வேண்டிய அவசியம்
இருக்காது.
பாடல்:
தாயும் நீயே, தந்தையும் நீயே.....
ஓம் சாந்தி.
குழந்தைகள் பாட்டைக் கேட்டீர்கள். மகிமை பாடும் பொழுது புத்தி
மேலே சென்று விடுகிறது. ஆத்மா தான் தந்தையிடம் நீங்களே படகோட்டி
ஆவார், பதீத பாவனர் ஆவார் அல்லது உண்மை யிலும் உண்மையான தூதர்
ஆவார் என்று கூறுகிறது. தந்தை வந்து ஆத்மாக்களுக்கு செய்தி
அளிக்கிறார். மேலும் அவர்களுக்கு மெஸஞ்ஜர் (தூதர்) அல்லது
பைகம்பர் என்று கூறுகிறார்கள். சிலர் சிறியவர்களாகவோ அல்லது
பெரியவர்களாகவோ இருப்பார்கள் உண்மையில் அவர்கள் மெஸேஜ் அல்லது
செய்தி ஒன்றும் கொடுப்பதில்லை. அப்படி பொய்யான மகிமை செய்து
விட்டுள்ளார்கள். ஒருவரைத் தவிர இந்த மனித சிருஷ்டி யில் வேறு
யாருக்கும் மகிமை இல்லை என்பதை குழந்தைகள் புரிந்துள்ளார்கள்.
எல்லோரை யும் விட அதிக மான மகிமை இந்த இலட்சுமி நாராயணருக்கு
உள்ளது. ஏனெனில் இவர்கள் புது உலகத்தின் அதிபதி ஆவார்கள்.
அதையும் பாரதவாசி அறிந்துள்ளார்கள். பாரதம் பழமை யான தேசமாகும்
என்பதை மட்டும் உலகத்தார் அறிந்துள்ளார்கள். பாரதத்தில் தான்
தேவி தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. கிருஷ்ணரைக் கூட கடவுள்
என்று கூறி விடுகிறார்கள். பாரதவாசிகள் இவர்களை பகவான் பகவதி
என்று கூறுகிறார்கள். ஆனால் இந்த பகவான் பகவதி சத்யுகத்தில்
ஆட்சி புரிகிறார்கள் என்பது யாருக்குமே தெரியாது. பகவான் தான்
தேவி தேவதைகளின் இராஜ்யத்தை ஸ்தாபனை செய்தார். நாம் பகவானின்
குழந்தைகள் ஆவோம். எனவே நாம் கூட பகவான் பகவதியாக இருக்க
வேண்டும் என்று புத்தியும் கூறுகிறது. எல்லோரும் பகவானின்
குழந்தைகள் என்றால், நாம் கூட பகவான் பகவதியாக இருக்க வேண்டும்.
எல்லோரும் ஒருவருடைய குழந்தைகள் ஆவார்கள் அல்லவா? ஆனால் பகவான்
பகவதி என்று கூற முடியாது. அவர்களை தேவி தேவதைகள் என்று
கூறுவார்கள். இந்த எல்லா விஷயங்களையும் தந்தை வந்து புரிய
வைக்கிறார். பாரதவாசிகளாகிய நாம் முதலில் புது உலகத்தில்
இருந்தோம் என்று பாரதவாசிகள் கூறுவார்கள். புதிய உலகத்தையோ
எல்லோரும் விரும்புகிறார்கள். தேசபிதா கூட புது உலகம், புதிய
இராம இராஜ்யத்தை விரும்பினார். ஆனால் இராம இராஜ்யத்தின் பொருளை
முற்றிலுமே புரியாமல் உள்ளார்கள். தற்காலத்தில் மனிதர் களுக்கு
தங்களுடைய அகங்காரம் எவ்வளவு இருக்கிறது! கலியுகத்தில் இருப்பது
கல்புத்தி. சத்யுகத்தில் இருப்பது தங்க புத்தி. ஆனால் இந்த
அறிவு யாருக்குமே இல்லை. பாரதத்தில் தான் சத்யுகத்தில் தங்க
புத்தி இருந்தது. இப்பொழுது பாரதத்தில் கலியுகத்தில்
கல்புத்தியாக உள்ளார்கள். மனிதர்கள் இதையே சொர்க்கம் என்று
நினைக்கிறார்கள். சொர்க்கத்தில் விமானங் கள் இருந்தன. பெரிய
பெரிய அரண்மனைகள் இருந்தன என்பார்கள். அவை எல்லாமே இப்பொழுதும்
உள்ளது. விஞ்ஞானம் எவ்வளவு முன்னேற்றம் அடைந்துள்ளது. எவ்வளவு
சுகம் இருக்கிறது. நாகரீகம் (ஃபேஷன்) ஆகியவை எவ்வளவு இருக்கிறது.
நாள் முழுவதும் புத்தி நாகரீக நடைமுறைகளுக்குப் பின்னால் தான்
இருக்கிறது. செயற்கையான அழகுடன் இருப்ப தற்காக தலை முடி
அலங்காரத்தை எப்படியெல்லாம் செய்கிறார்கள். எவ்வளவு செலவு
செய்கிறார்கள்! இந்த எல்லா நாகரீகமும் சித்திரங்களிலிருந்து
வெளி வந்துள்ளது. பார்வதி யைப் போல நாங்கள் தலைமுடி அலங்காரம்
செய்து கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். இவை எல்லாமே
கவருவதற்காகத் தான் அமைக்கிறார்கள். முன்பெல்லாம் பாரசீகப்
பெண்கள் யாராவது தம்மைப் பார்த்து மோகம் கொண்டு விடக் கூடாது
என்பதற்காக முகத்தின் மீது கறுப்பு வலையை அணிந்திருந்தனர்.
இதற்கு பதீத (துய்மையற்ற) உலகம் என்றே கூறப்படு கிறது.
தந்தையும் நீயே, தாயும் நீயே! என்று பாடுகிறார்கள். ஆனால் இதை
யாருக்குக் கூற வேண்டும்? தாய் தந்தை என்பவர்கள் யார் என்பது
கூடத் தெரியாது. தாய் தந்தையர் அவசியம் ஆஸ்தியை அளித்திருக்கக்
கூடும். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு சுகத்தின் ஆஸ்தி
அளித்திருந்தார். பாபா நாங்கள் உங்களைத் தவிர வேறு யார்
கூறுவதையும் கேட்க மாட்டோம் என்று கூறவும் செய்கிறார்கள்.
சிவபாபாவின் மகிமை பாடப் படுகிறது என்பதை இப்பொழுது நீங்கள்
அறிந்துள்ளீர்கள். நானே பாவனமாக இருந்தேன், இப்பொழுது பதீதமாக
ஆகியுள்ளேன் என்று சுயம் பிரம்மாவின் ஆத்மா கூட கூறுகிறது.
பிரம்மாவின் குழந்தைகள் கூட அவ்வாறே கூறுவார்கள். பிரம்மா
குமார் குமாரிகளாகிய நாங்களே தேவி தேவதைகளாக இருந்து பின்னர்
84 பிறவிகளின் கடைசியில் பதீதமாக ஆகி உள்ளோம். யார் முதல்
நம்பரில் பாவனமாக இருந்தாரோ, அவரே முதல் நம்பர் பதீதமாக ஆகி
உள்ளார். எப்படி தந்தையோ, அப்படியே குழந்தைகள். சுயம் இவரும்
கூறுகிறார். சிவபாபாவும் கூறுகிறார் - நான் இவருடைய அநேக
பிறவிகளின் கடைசியில் வருகிறேன். அவர் தான் முதல் நம்பரில்
பூஜைக்குரிய இலட்சுமி நாராயணரின் பரம்பரையில் இருந்தார்.
இப்பொழுது இருப்பது சங்கமம். நீங்கள் கலியுகத்தில் இருந்தீர்கள்.
இப்பொழுது சங்கமயுகத்தினராக ஆகி உள்ளீர்கள். தந்தை சங்கமத்தில்
தான் வருகிறார். நாடகப்படி குழந்தைகளும் முன்னேற்றம்
அடைகிறார்கள். இப்பொழுது குழந்தை களுக்கு ஞானம் கிடைத்துள்ளது.
நாமே தேவதைகளாக இருந்தோம். பிறகு க்ஷத்திரியர், வைசியர்,
சூத்திரர்களாக ஆனோம். முழு சக்கரத்தை நல்ல முறையில் நீங்கள்
அறிந்துள்ளீர் கள். இது மிகவும் சுலபமாகும். நாம் 84 பிறவிகள்
எடுத்தோம். அநேகருடைய புத்தியில் இதுவும் பதிவதில்லை.
மாணவர்களிடையே வரிசைக்கிரமமாக இருக்கவே இருப்பார்கள். வலது
புறத்தி லிருந்து ஆரம்பிக்கிறோம். முதல் தரம், இரண்டாம் தரம்
மற்றும் மூன்றாம் தரம். பெண் குழந்தைகள், அவர்களே எங்களுடைய
புத்தி மூன்றாம் தரமாக உள்ளது என்கிறார்கள். எங்களால்
யாருக்கும் புரிய வைக்க முடிவதில்லை. மனம் மிகவுமே
விரும்புகிறது. ஆனால் பேச முடியவில்லை. பாபா என்ன செய்வது? இது
தங்களது கர்மங்களின் கணக்கு வழக்கு ஆகும். நான் உங்களுக்கு
கர்மம், அகர்மம் மற்றும் விகர்மத்தின் கதி பற்றிய ஞானத்தைக்
கூறு கிறேன் என்று இப்பொழுது தந்தை கூறுகிறார். கர்மம் செய்ய
வேண்டி உள்ளது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள்.
மூன்றாம் தர புத்தி உடையவர் களால் இந்த விஷயங்களைப் புரிந்து
கொள்ள முடியாது. இது இருப்பதே இராவண இராஜ்யமாக. ஆனால் இது
யாருக்குமே தெரியாது. இராவண இராஜ்யத்தில் மனிதர்களோ விகர்மங்கள்
(தீயச் செயல்கள்) தான் செய் கிறார்கள். எனவே கீழே தான்
விழுகிறார்கள். துக்கமான உலகத்தில் தான் குருவிடம்
செல்கிறார்கள். முக்தியில் அழைத்து செல்வார் என்று
சத்கதிக்காகத் தான் குருவிடம் செல்கிறார்கள். அது நிர்வாண தாமம்
ஆகும் - சப்தத்திற்கு அப்பாற்பட்ட இடம். மனிதர்கள் தங்களை
வானப்பிரஸ்தி என்று கூறுகிறார்கள். அதுவோ வாய்சொல் அளவிற்கு
மட்டும் தான். வானப்பிரஸ்தியர்களின் சபைக் கூட இருக்கிறது.
எல்லா சொத்து ஆகிய வற்றையும் குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு
குருவிடம் போய் உட்கார்ந்து கொள்கிறார்கள். உணவு, உடை, ஆகியவையோ
நிச்சயம் குழந்தைகள் தான் வழங்குவார்கள். ஆனால் வானப்பிரஸ்தம்
என்பதன் பொருளை யாருமே புரியாமல் உள்ளார்கள். நாம் நிர்வாணதாமம்
செல்ல வேண்டும் என்பது யாருடைய புத்தியிலும் வருவதில்லை. நமது
வீட்டிற்குச் செல்ல வேண்டும். அவர்கள் ஒன்றும் அதை வீடு என்று
நினைப்பது இல்லை. அவர்கள் ஜோதி ஜோதி யுடன் கலந்து போய் விடுவோம்
என்று நினைக்கிறார்கள். நிர்வாணதாமம் இருப்பதற்கான இடமாகும்.
முன்பெல்லாம் 60 வருடங்களுக்குப் பிறகு வானபிரஸ்தம் செல்வார்கள்.
இது ஒரு நியமமாக இருந்தது. இப்பொழுது கூட இது போல செய்கிறார்கள்.
சப்தத்திற்கு அப்பாற்பட்ட இடத்திற்கு யாருமே போக முடியாது
என்பதை இப்பொழுது நீங்கள் புரிய வைக்கலாம். இதற்காக ஹே பதீத
பாவன பாபா வாருங்கள்! எங்களை பாவனமாக ஆக்கி வீட்டிற்கு
அழைத்துச் செல்லுங்கள் என்று தந்தையைத் தான் அழைக்கிறார்கள்.
முக்தி தாமத்தில் ஆத்மாக்களின் வீடு உள்ளது. குழந்தைகளாகிய
உங்களுக்கு சத்யுகம் பற்றி கூட புரிய வைக்கப் பட்டுள்ளது -
அங்கு யார் இருப்பார்கள், எப்படி அதிகரித்துக்
கொண்டேயிருக்கிறது., ஜனத்தொகை பற்றி கூட யாருக்கும் தெரியாது.
இராம இராஜ்யத்தில் ஜனத்தொகை எவ்வளவு இருக்கும். குழந்தைகள்
ஆகியோர் எப்படி பிறவி எடுப்பார்கள்? எதுவும் புரியாமல்
உள்ளார்கள். நாடகத்தின் சக்கரத்தை யாராவது புரிய வைக்கக் கூடிய
வகையில் எந்த ஒரு வித்துவான், ஆசிரியர் அல்லது பண்டிதர் கூட
இல்லை. 84 லட்ச பிறவியின் சக்கரம் எப்படி இருக்க முடியும்?
எவ்வளவு தவறான விஷயங்கள்! முற்றிலுமே நூல்-கண்டு சிக்கலாக
இருப்பதைப் போல, தந்தை கர்மம், அகர்மம், விகர்மம் பற்றிய முழு
இரகசியத்தைப் புரிய வைத்துள்ளார் என்பதை இப்பொழுது நீங்கள்
அறிந்துள்ளீர்கள் என்பதை தந்தை புரிய வைக்கிறார். சத்யுகத்தில்
உங்களுடைய கர்மம் அகர்மமாக ஆகி விடுகிறது. அங்கு எந்த ஒரு தீய
செயலும் நடப்பதே இல்லை. எனவே கர்மம் அகர்மமாக ஆகி விடுகிறது.
இங்கு மனிதர்கள் என்ன கர்மம் செய்தாலும் அது விகர்மம் ஆகி
விடுகிறது.
சிறியவர்கள், பெரியவர்கள் அனைவருக்கும் முழு உலகிற்கும்
வானப்பிரஸ்த நிலையாகும் என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள்
அறிந்துள்ளீர்கள். எல்லோரும் (வாணி ஸே பரே) சப்தத்திற்கு
அப்பாற்பட்டு செல்பவர்கள் ஆவார்கள். ஹே பதீத பாவனரே! வாருங்கள்.
வந்து எங்களை பதீத நிலையிலிருந்து பாவனமாக ஆக்குங்கள் என்று
கூறுகிறார்கள். ஆனால் பாவன புது உலகம் இல்லாதவரையும் இங்கு
பதீத உலகத்தில் பாவனமானவர்கள் யாருமே இருக்க முடியாது. இந்த
பதீத உலகம் எல்லாமே முடியப் போகிறது. நாம் மீண்டும் புது
உலகத்திற்குச் செல்ல வேண்டும் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள்.
எப்படி செல்வீர்கள்? இதுவோ புதிய ஞானம் முழு ஞானமும் உள்ளது.
இது புதிய உலகம். அமரலோகம் அல்லது பாவன உலகத்திற்கான புதிய
ஞானமாகும். நீங்கள் இப்பொழுது சங்கமத்தில் அமர்ந்துள்ளீர்கள்.
மற்ற மனிதர்கள், பிராமணர்களாக இல்லாதோர் அவர்கள் கலியுகத்தில்
இருக்கிறார்கள் என்பதையும் அறிந்துள்ளீர்கள். நாம் அனைவரும்
சங்கமத்தில் உள்ளோம். சத்யுகத்திற்குச் சென்று கொண்டிருக்கிறோம்.
உண்மையில் இது சங்கம யுகமாகும். அதுவோ இருப்பதே சொர்க்கமாக!
அதற்கு சங்கமம் என்று கூறப்படுவதில்லை. சங்கமம் என்பது
இப்பொழுது உள்ளது. இந்த சங்கமயுகம் எல்லாவற்றையும் விட சிறியது
ஆகும். இதற்கு லீப் யுகம் என்று கூறப்படுகிறது. இதில் மனிதர்கள்
பாவ ஆத்மாவிலிருந்து தர்ம ஆத்மா ஆகிறார்கள். எனவே இதற்கு
தர்மாவு யுகம் என்று கூறப்படுகிறது. கலியுகத்தில் எல்லா
மனிதர்களும் அதர்மத்தினராக இருக்கிறார்கள். அங்கோ எல்லோரும்
தர்மாத்மாக்களாக இருப்பார்கள். பக்தி மார்க்கத்தினுடைய தாக்கம்
எவ்வளவு பெரியதாக உள்ளது. கல்லினால் விக்கிரகங்கள் அமைக்
கிறார்கள். அவற்றைப் பார்த்தாலே மனம் மகிழ்ந்து போய் விடும்.
இது கல்லுக்கு செய்கின்ற பூஜை ஆகும். சிவனுடைய கோயிலுக்கு பூஜை
செய்வதற்காக எவ்வளவு தூரமான இடங் களுக்கு போகிறார்கள்.
சிவனுடைய படத்தை வீட்டில் கூட வைக்கலாமே! பிறகு இவ்வளவு தூர
தூரமாகப் போய் ஏன் அலைய வேண்டும்? இந்த ஞானம் இப்பொழுது
புத்தியில் வந்துள்ளது. இப்பொழுது உங்களுடைய கண்கள்
திறந்துள்ளன. புத்தியின் கதவு திறந்துள்ளது. தந்தை ஞானம்
அளித்துள்ளார். பரமபிதா பரமாத்மா இந்த மனித சிருஷ்டியின் விதை
ரூபமான ஞானக் கடல், ஞானம் நிறைந்தவராக இருக்கிறார். ஆத்மா கூட
அந்த ஞானத்தை தாரணை செய்கிறது. ஆத்மா தான் ஜனாதிபதி ஆகியோராக
ஆகிறது. மனிதர் களோ தேக அபிமானியாக ஆகி இருக்கும் காரணத்தால்
தேகத்திற்குத் தான் மகிமை செய்துக் கொண்டே இருக்கிறார்கள்.
ஆத்மா தான் எல்லாமே செய்கிறது என்பதை இப்பொழுது நீங்கள்
புரிந்துள்ளீர்கள். ஆத்மா வாகிய நீங்கள் 84 பிறவிகளின் சக்கரம்
சுற்றி வந்து முற்றிலுமே துர்க்கதியை அடைந்து விட்டுள்ளீர்கள்.
இப்பொழுது ஆத்மாவாகிய நாம் தந்தையை அடையாளம் கண்டு கொண்டிருக்
கிறோம். தந்தையிடமிருந்து ஆஸ்தி பெற்றுக் கொண்டிருக்கிறோம்.
ஆத்மா அவசியம் சரீரத்தை தாரணை செய்ய வேண்டி உள்ளது. சரீரமின்றி
ஆத்மாக்கள் எப்படி பேச முடியும்? எப்படி கேட்க முடியும்? நான்
நிராகாரமானவன் என்று தந்தை கூறுகிறார். நான் கூட சரீரத்தை
ஆதாரமாக எடுக்கிறேன். சிவபாபா இந்த பிரம்மா உடலின் மூலமாக
நமக்கு கூறுகிறார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இந்த
விஷயங்களை பிரம்மாகுமார் குமாரிகளாகிய நீங்கள் தான் புரிய
வைக்கிறீர்கள். உங்களுக்கு இப்பொழுது ஞானம் கிடைத்துள்ளது.
பிரம்மா மூலமாக ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தின் ஸ்தாபனை ஆகிறது.
அதே தந்தை இராஜயோகத்தைக் கற்பித்துக் கொண்டிருக்கிறார். இதில்
குழம்ப வேண்டிய அவசியமே இல்லை. சிவபாபா நமக்கு புரிய வைக்கிறார்.
பின் நாம் மற்றவர்களுக்குப் புரிய வைக்கிறோம். நமக்கும்
கூறுபவர் சிவபாபா தான் ஆவார். நாம் இப்பொழுது பதீத
நிலையிலிருந்து பாவனமாக ஆகிக் கொண்டி ருக்கிறோம் என்று
இப்பொழுது நீங்கள் கூறுவீர்கள். இது இருப்பதே பதீதமான உலகமாக.
இராவணனின் இராஜ்யம் அல்லவா? என்று தந்தை புரிய வைக்கிறார்.
இராவணன் பாவ ஆத்மாவாக ஆக்குகிறான். இது வேறு யாருக்கும்
தெரியாது. இராவணனினுடைய உருவம் அமைத்து எரிக்கிறார்கள். ஆனால்
எதுவும் புரியாமல் உள்ளார்கள். சீதையை இராவணன் எடுத்துச்
சென்றான், இப்படி செய்தான்... எத்தனை கதைகளை எழுதி உள்ளார்கள்.
உட்கார்ந்து கேட்கும் பொழுது அழுது விடுகிறார்கள். அவை எல்லாமே
கட்டுக் கதைகள். பாபா நமக்கு விகர்மங்களை வென்றவராக (விகர்மாஜீத்)
ஆக்குவதற்காக புரிய வைக்கிறார். என் ஒருவனை மட்டுமே நினைவு
செய்யுங்கள் என்று கூறுகிறார். எங்குமே புத்தியை
ஈடுபடுத்தாதீர்கள். சிவபாபா நமக்கு தனது அறிமுகத்தை
அளித்துள்ளார். பதீத பாவன தந்தை வந்து தனது அறிமுகத்தை
அளிக்கிறார். நம்மை சொர்க்கத்திற்கு அதிபதியாக ஆக்கிக்
கொண்டிருக்கும் அவர் எவ்வளவு இனிமையான பாபா ஆவார் என்பதை
இப்பொழுது நீங்கள் புரிந்துள்ளீர்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து
கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய
பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. கர்மம், அகர்மம் மற்றும் விகர்மம் பற்றிய கதியை (விளைவு)
அறிந்து சிறந்த செயல்களையே செய்ய வேண்டும். ஞான தானம் செய்து
தர்மாத்மா ஆக வேண்டும்.
2. இது வானப்பிரஸ்த நிலையாகும். இந்த கடைசி கணங்களில் பாவனமாக
ஆகி பாவன உலகிற்குச் செல்ல வேண்டும். பாவனம் ஆவதற்கான செய்தியை
அனைவருக்கும் அளிக்க கூற வேண்டும்.
வரதானம்:
பாஸ் வித் ஆனர் (மதிப்புடன் தேர்ச்சி பெற்றவராக) ஆகுவதற்காக,
அனைவரிடமிருந்தும் திருப்திக்கான பாஸ்போர்ட்டைப் (அனுமதிச்சீட்டை)
பெறக்கூடிய சந்துஷ்டமணி (திருப்தி நிறைந்த மணி) ஆகுக.
எந்தக் குழந்தைகள் தங்களுக்குள், தங்களது ஆன்மீக முயற்சியில் (புருஷார்த்தத்தில்)
அல்லது சேவையில் மற்றும் பிராமணக் குடும்பத்தின் தொடர்பில்
எப்பொழுதும் திருப்தியாக இருக் கின்றார்களோ, அவர்களே
சந்துஷ்டமணி என்று அழைக்கப்படுகின்றார்கள். அனைத்து ஆத்மாக்
களின் தொடர்பிலும் உங்களைத் திருப்தியாக வைத்துக் கொள்வது
அல்லது அனைவரையும் திருப்திப்படுத்துவது-இதில் யார்
வெற்றியடைகின்றார்களோ, அவர்களே வெற்றிமாலையில் (விஜயமாலா) இடம்
பெறுகின்றார்கள். பாஸ் வித் ஆனர் ஆகுவதற்கு, அனைவரிடமிருந்தும்
திருப்தி என்ற பாஸ்போர்ட் கிடைக்க வேண்டும். இந்த
பாஸ்போர்ட்டைப் பெறுவதற்கு, சகித்துக் கொள்ளும் சக்தி அல்லது
உள்ளடக்கிக் கொள்ளும் சக்தியை மட்டும் தாரணை செய்யுங்கள்.
சுலோகன்:
கருணை உள்ளம் கொண்டவராக மாறி, சேவையின் மூலம்
ஏமாற்றமடைந்த மற்றும் சோர்வடைந்த ஆத்மாக்களுக்கு ஆதாரமாக
விளங்குங்கள்.
அவ்யக்த சமிக்கை: ஜுவாலா (அக்னி) சொரூப நிலையில் இருந்து
சக்திவாய்ந்த நினைவை அனுபவம் செய்யுங்கள்
சக்தி வாய்ந்த நினைவிற்கு உண்மையான இதயத்தின் அன்பு தேவை.
உண்மையான இதயம் கொண்டவர்கள் ஒரு நொடியில் புள்ளியாக மாறி (பிந்துவாகி),
புள்ளி வடிவ தந்தையை நினைக்க முடியும். உண்மையான இதயம்
கொண்டவர்கள் உண்மையான எஜமானனை (இறைவனை) மகிழ்விப்பதன் காரணமாக,
தந்தையின் விசேஷ ஆசீர்வாதங்களைப் பெறு கின்றார்கள்; இதனால் மிக
எளிதாகவே ஒரே சங்கல்பத்தில் நிலைத்து, ஜுவாலா சொரூப நினைவை
அனுபவம் செய்ய முடிகின்றது மற்றும் சக்திவாய்ந்த அதிர்வலைகளைப்
(வைப்ரேஷன்ஸ்) பரப்ப முடிகின்றது. உண்மையின் சக்தி காரணமாக,
புத்தியும் சரியான நேரத்தில் யுக்தி யுக்தமாகவும் (சரியான
விதத்தில்), துல்லியமாகவும் செயல்படுகின்றது; எந்தவொரு தவறான
செயலும் நடக்க சாத்தியமில்லை.