23-10-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! உங்கள் யாத்திரை புத்தியினுடையதாகும். இது தான் ஆன்மீக யாத்திரை எனச் சொல்லப்படுகின்றது. நீங்கள் தன்னை ஆத்மா என உணர்ந்திருக்கிறீர்கள், சரீரமல்ல. சரீரம் என உணர்ந்து கொள்வது என்றால் தலைகீழாகத் தொங்குவதாகும்.

கேள்வி:
மாயாவின் ஆடம்பரத்தினால் மனிதர்களுக்கு எந்த ஒரு கௌரவம் கிடைக் கின்றது?

பதில்:
அசுர கௌரவம். மனிதர்கள் இன்று யாருக்காவது கௌரவம் அளித்தால் நாளை அவமரியாதை, நிந்தனை செய்கின்றனர். மாயா அனைவரின் கௌரவத்தையும் குலைத்துள்ளது. பதீத்தாக ஆக்கி விட்டுள்ளது. உங்களை தெய்வீக மரியாதை உள்ளவர்களாக ஆக்குவதற்காக பாபா வந்திருக்கிறார்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை ஆத்மாக்களிடம் கேட்கிறார் - எங்கே அமர்ந்திருக்கிறீர்கள்? உலகத்தின் ஆன்மீகப் பல்கலைக்கழகத்தில் என்று நீங்கள் சொல்வீர்கள், ஆன்மீகம் என்ற சொல் பற்றியோ அவர்களுக்குத் தெரியாது. விஷ்வ வித்யாலயங்களோ உலகில் அநேகம் உள்ளன. இது உலகம் முழுவதிலும் உள்ள ஒரே ஆன்மீக வித்யாலயமாகும். ஒருவர் தான் படிப்பு சொல்லித் தருபவர். என்ன சொல்லித்தருகிறார்? ஆன்மீக ஞானம். ஆக, இது ஆன்மீக வித்யாலயம், அதாவது ஆன்மிகப்பாடசாலை. ஸ்பிரிச்சுவல், அதாவது ஆன்மீக ஞானத்தைச் சொல்லித் தருபவர் யார்? இதையும் குழந்தைகள் நீங்கள் தான் இப்போது அறிந்து கொண்டிருக்கிறீர்கள். ஆன்மீகத் தந்தை தான் ஆன்மீகப் படிப்பை சொல்லித்தருகிறார். அதனால் அவரை ஆசிரியர் என்றும் சொல்கின்றனர். ஸ்பிரிச்சுவல் ஃபாதர் கற்றுத் தருகிறார். நல்லது, பிறகு என்ன ஆகும்? குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், இந்த ஆன்மீக ஞானத்தின் மூலம் நாம் நம்முடைய ஆதி சநாதன தேவி-தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்கிறோம். ஒரு தர்மத்தின் ஸ்தாபனை, மற்ற இந்த அனைத்து தர்மங்களும் விநாசமாகி விடும். இந்த ஸ்பிரிச்சுவல் ஞானத்திற்கு மற்ற தர்மங்களோடு என்ன தொடர்பு? இதையும் நீங்கள் இப்போது அறிந்து கொண்டிருக்கிறீர்கள். ஒரு தர்மத்தின் ஸ்தாபனை இந்த ஆன்மீக ஞானத்தின் மூலம் நடைபெறு கின்றது. இந்த இலட்சுமி-நாராயணர் உலகத்தின் எஜமானர்களாக இருந்தனர் இல்லையா? அது ஆன்மீக உலகம் (ஸ்பிரிச்சுவல் வேர்ல்டு) எனச் சொல்வார்கள். இந்த ஸ்பிரிச்சுவல் நாலெட்ஜினால் (ஆன்மீக ஞானம்) நீங்கள் இராஜயோகம் கற்றுக் கொள்கிறீர்கள். இராஜ்யம் ஸ்தாபனை ஆகின்றது. நல்லது, பிறகு மற்ற தர்மங்களுடன் என்ன சம்பந்தம்? மற்ற எல்லா தர்மங்களும் விநாசமாகி விடும். ஏனென்றால் நீங்கள் பாவனமாகிறீர்கள் என்றால் உங்களுக்குப் புது உலகம் வேண்டும். இவ்வளவு தர்மங்கள் அனைத்தும் அழிந்து போகும். ஒரு தர்மம் மட்டும் இருக்கும். அது உலகத்தில் சாந்தியின் இராஜ்யம் என சொல்லப்படும். இப்போது இருப்பது பதீத்த அசாந்தியின் இராஜ்யம். பிறகு பாவன சாந்தியின் இராஜ்யம் இருக்கும். இப்போதோ அநேக தர்மங்கள் உள்ளன. எவ்வளவு அசாந்தி உள்ளது! அனைவரும் ஒரே பதீத்தர்களாகவே (தூய்மையற்ற நிலை) உள்ளனர். இராவணனின் இராஜ்யம் அல்லவா? இப்போது குழந்தை களுக்குத் தெரியும், 5 விகாரங்களை அவசியம் விட்டாக வேண்டும். இவற்றை உடன் கொண்டு செல்லக்கூடாது. ஆத்மா நல்ல அல்லது கெட்ட சம்ஸ்காரங்களை எடுத்துச் செல்கிறது இல்லையா? இப்போது பாபா குழந்தைகளாகிய உங்களுக்குப் பவித்திரமாவதற்கான விஷயம் பற்றி சொல்கிறார். அந்தப் பாவன உலகத்தில் எந்த ஒரு துக்கமும் இருக்காது. இந்த ஆன்மீக ஞானத்தைக் கற்றுத் தருபவர் யார்? ஆன்மீகத் தந்தை. அனைத்து ஆத்மாக்களின் தந்தை. ஆன்மீகத் தந்தை எதைக் கற்றுக் கொடுப்பார்? ஆன்மீக ஞானம். இதில் எந்த ஒரு புத்தகம் முதலியவற்றின் அவசியம் கிடையாது. தன்னை ஆத்மா என உணர்ந்து தந்தையை நினைவு செய்தால் போதும். தூய்மையாக வேண்டும். பாபாவை நினைவு செய்து-செய்தே அந்த் மதி ஸோ கதி (கடைசியில் என்ன நினைவோ அந்த நிலை) ஆகிவிடும். இது நினைவு யாத்திரை. யாத்திரை என்ற சொல் நன்றாக உள்ளது. அதெல்லாம் உலகாயத யாத்திரை. இது ஆன்மீக யாத்திரை. அதிலோ நடந்து செல்ல வேண்டியுள்ளது. செயலில் ஈடுபடுகின்றனர். இதில் எதுவும் கிடையாது. நினைவு மட்டும் செய்ய வேண்டும். எங்கு வேண்டுமானாலும் சென்று சுற்றி வாருங்கள். அமருங்கள், எழுந்திருங்கள். ஆனால் தன்னை ஆத்மா என உணர்ந்து தந்தையை நினைவு செய்யுங்கள். கஷ்டமான விஷயம் கிடையாது. நினைவு செய்தால் போதும். இதுவோ உண்மை இல்லையா? முன்பு நீங்கள் தலைகீழாக நடந்து கொண்டு இருந்தீர்கள். தன்னை ஆத்மாவுக்கு பதில் சரீரம் என உணர்வது தலைகீழாகத் தொங்குவதாகும். தன்னை ஆத்மா என உணர்வது நேராக நிற்பதாகும். அல்லா எப்போது வருகிறாரோ, அப்போது பாவனமாக்கு கிறார். அல்லாவுடையது பாவன உலகம். இராவணனுடையது பதீத்த உலகம். தேக அபிமானத் தில் அனைவரும் தலைகீழாக ஆகி விட்டனர். இப்போது ஒரே ஒரு தடவை ஆத்ம அபிமானி ஆக வேண்டும். ஆக, நீங்கள் அல்லாவின் குழந்தைகள். நான் தான் அல்லா எனச் சொல்ல மாட்டீர்கள். கைவிரலால் மேலே சமிக்ஞை காட்டுகின்றனர். இதனால் மேலே இருக்கும் அவர் அல்லா என்பது தெளிவாகின்றது. ஆகவே இங்கே இருப்பது நிச்சயமாக வேறு பொருள். நாம் அந்த அல்லாவாகிய தந்தையின் குழந்தைகள். நாம் சகோதர-சகோதரர்கள். நான் அல்லா எனச்சொல்வதால் பிறகு தலைகீழாக (தவறு) ஆகி விடும் - அதாவது நாம் அனைவரும் தந்தையர் என்று ஆகிவிடும். ஆனால் அப்படி இல்லை. தந்தை ஒருவர் தான். அவரை நினைவு செய்ய வேண்டும். அல்லா சதா தூய்மையாக இருப்பவர். அல்லா தானே அமர்ந்து படிப்பு சொல்லித் தருகிறார். சின்ன விஷயத்தில் மனிதர்கள் எவ்வளவு குழப்பமடைகின்றனர்! சிவஜெயந்தியும் கொண்டாடுகின்றனர் இல்லையா?

கிருஷ்ணருக்கு அதுபோன்ற பதவியை யார் கொடுத்தார்? சிவபாபா! ஸ்ரீகிருஷ்ணர் சொர்க்கத்தின் முதல் இளவரசர். இந்த எல்லையற்ற தந்தை இவருக்கு இராஜ்ய-பாக்கியம் தருகிறார். பாபா ஸ்தாபனை செய்யும் புது உலகம் சொர்க்கத்தில் ஸ்ரீகிருஷ்ணர் நம்பர் ஒன் இளவரசர் ஆவார். பாபா அமர்ந்து குழந்தைகளுக்குப் பாவன மாவதற்கான யுக்தி சொல்கிறார். குழந்தைகள் அறிவார்கள், வைகுண்டம், விஷ்ணுபுரி என்றெல்லாம் அழைக்கப் படும் சொர்க்கம் இருந்து சென்றுள்ளது. பிறகு வருங்காலத்தில் மறுபடியும் இருக்கும். சக்கரம் சுற்றுகிறது இல்லையா? இந்த ஞானம் இப்போது தான் குழந்தைகளாகிய உங்களுக்குக் கிடைக்கின்றது. இதை தாரணை செய்து மற்றவர்களையும் செய்ய வைக்க வேண்டும். ஒவ்வொருவரும் ஆசிரியர் ஆக வேண்டும். ஆசிரியராக ஆவதால் இலட்சுமி-நாராயணராக ஆகி விடுவார்கள் என்பதும் இல்லை. ஆசிரியர் ஆவதால் நீங்கள் பிரஜைகளை உருவாக்குவீர்கள். எவ்வளவு அநேகருக்கு நன்மை செய்கிறீர்களோ, அவ்வளவு உயர்ந்த பதவி பெறுவீர்கள். நினைவு இருக்கும். பாபா சொல்கிறார், இரயிலில் வருகிறீர்கள் என்றால் பேட்ஜை வைத்துப் புரிய வையுங்கள். பாபா பதீத பாவனராக, துன்பத்திலிருந்து விடுவிப்பவராக உள்ளார். பாவனமாக்குபவர் அவர். அநேகரை நினைவு செய்ய வேண்டியுள்ளது. மிருகங்கள், யானைகள், குதிரைகள் முதலியன, ஆமை, மீனையும் கூட அவதாரம் எனச் சொல்லி விடுகின்றனர். அவற்றையும் பூஜித்துக் கொண்டே இருக்கின்றனர். பகவான் சர்வவியாபி, அதாவது அனைத்திலும் அவர் இருக்கிறார் என நினைக் கின்றனர். அனைத்துக்கும் உணவளியுங்கள். நல்லது, அணு, அணுவிலும் கூட பகவான் இருப்பதாகச் சொல்கின்றனர். பிறகு அவைகளுக்கு எப்படி உணவளிப்பார்கள்? முற்றிலும் அறிவு இல்லாதவர்களாக ஆகி விடுகின்றனர். இலட்சுமி-நாராயணர் போன்ற தேவி-தேவதைகள் ஒருபோதும் இந்தக் காரியத்தைச் செய்ய மாட்டார்கள் அதாவது எறும்புகளுக்கு உணவு கொடுப்பார்களா? இன்ன பிறவற்றுக்கும் கொடுப்பார்களா? ஆக, பாபா புரிய வைக்கிறார், நீங்கள் தர்மம் மற்றும் அரசியல் சார்ந்தவர்கள். நீங்கள் அறிவீர்கள், நாம் தர்ம ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம். இராஜ்ய ஸ்தாபனை செய்வதற்காக இராணுவம் உள்ளது. ஆனால் நீங்கள் குப்தமாக (மறைமுகமாக) இருக்கிறீர்கள். உங்களுடையது ஆன்மீகப் பல்கலைக்கழகம். முழு உலகத்தின் அனைத்து மனிதர்களும் இந்த தர்மங்களில் இருந்து வெளியேறி தங்களின் வீட்டுக்குச் செல்வார்கள். ஆத்மாக்கள் சென்று விடுவார்கள். அது ஆத்மாக்கள் வசிக்கின்ற வீடு. இப்போது நீங்கள் சங்கமயுகத்தில் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். பிறகு சத்யுகத்தில் வந்து இராஜ்யம் செய்வீர்கள். மற்ற எந்த ஒரு தர்மமும் இருக்காது. பாடலும் உள்ளது இல்லையா - பாபா, நீங்கள் தருவதை வேறு யாராலும் தர இயலாது என்று? முழு வானமும் முழு பூமியுமே உங்களுடையதாக இருக்கும். முழு உலகத்தின் எஜமானர்களாக நீங்கள் ஆகி விடுவீர்கள். இதையும் இப்போது நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். புது உலகத்தில் இந்த அனைத்து விஷயங்களும் மறந்து போகும். இது ஆன்மீக ஞானம் எனச் சொல்லப்படும். குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளது, நாம் ஒவ்வொரு 5000 ஆண்டுகளுக்குப் பிறகும் இராஜ்யத்தைப் பெறுகிறோம், பிறகு இழக்கிறோம். இந்த 84 பிறவிச் சக்கரம் சுற்றிக் கொண்டே உள்ளது. ஆக, படிப்பைப் படித்தாக வேண்டும். அப்போது தான் செல்ல முடியும் இல்லையா? படிக்கவில்லை என்றால் புது உலகிற்குச் செல்ல முடியாது. அங்கோ அளவான எண்ணிக்கையிலேயே இருப்பார்கள். நம்பர்வார் புருஷôர்த்தத்தின் அனுசாரம் அங்கே சென்று பதவி பெறுவார்கள். இவ்வளவு பேருமே படிக்க மாட்டார்கள். அனைவருமே படிப்பார்களானால் அடுத்த பிறவியில் இராஜ்யத்தையும் பெறுவார்கள். படிக்கிறவர்களின் எண்ணிக்கை அளவோடு இருக்கும். சத்யுக-திரேதாவில் வரக்கூடியவர்கள் தான் படிப்பார்கள். உங்களுக்குப் பிரஜைகள் அநேகர் உருவாகிக் கொண்டே உள்ளனர். தாமதமாக வருபவர்கள் பாவங்களையோ பஸ்பம் (சாம்பல்) செய்ய முடியாது. பாவாத்மாக்கள் இருப்பார்களானால் பிறகு தண்டனைகள் பெற்று மிகக் குறைவான பதவி பெற்றுக் கொள்வார்கள். கௌரவக் குறைவாகி விடும். யார் இப்போது மாயாவின் கௌரவத்தில் அதிகமாக இருக்கிறார்களோ, அவர்கள் கௌரவக் குறைவானவர்களாக ஆகி விடுவார்கள். இது ஈஸ்வரியப் பெருமை. அது அசுரப் பெருமை. ஈஸ்வரிய அல்லது தெய்வீகப் பெருமை மற்றும் அசுரப் பெருமைக்கிடையில் இரவு-பகலுக்குள்ள வேறுபாடு உள்ளது. நாம் அசுர கௌரவம் உள்ளவர்களாக இருந்தோம். இப்போது பிறகு தெய்வீக கௌரவம் உள்ளவர் களாக ஆகின்றோம். அசுர கௌரவத்திலிருந்து முற்றிலும் ஒன்றுமில்லாதவர்களாக ஆகி விடுகிறீர்கள். இது முட்களின் உலகம் எனும்போது கௌரவமற்றதாக ஆகிறது இல்லையா? பிறகு எவ்வளவு கௌரவமிக்கவர்களாக ஆகிறீர்கள்! இராஜா-ராணி எப்படியோ, அப்படியே பிரஜைகளும்! எல்லையற்ற தந்தை உங்களுடைய கௌரவத்தை மிக உயர்ந்ததாக ஆக்குகிறார் என்றால் அந்த அளவுக்கு முயற்சியும் செய்ய வேண்டும். அனைவரும் சொல்கின்றனர், நாம் நம்முடைய கௌரவத்தை அதுபோல் ஆக்கிக் கொள்ள வேண்டும், அதாவது நரனில் இருந்து நாராயணனாக ஆக வேண்டும், நாரியிலிருந்து இலட்சுமி ஆகிவிட வேண்டும். இதைவிட உயர்ந்த கௌரவம் வேறு யாருக்கும் கிடையாது. கதையும் நரனிலிருந்து நாராயணன் ஆவதற்காகவே கேட்கின்றனர். அமரகதை, தீஸ்ரியின் கதை இந்த ஒன்று தான். இந்தக் கதையை இப்போது தான் நீங்கள் (மூன்றாம் கண்) கேட்கிறீர்கள்.

குழந்தைகள் நீங்கள் உலகத்தின் அதிபதிகளாக இருந்தீர்கள். பிறகு 84 பிறவிகள் எடுத்துக் கீழே இறங்கியே வந்திருக்கிறீர்கள். பிறகு முதல் நம்பர் பிறவி வரும். முதல் நம்பர் பிறவியில் நீங்கள் மிக உயந்த பதவி பெறுகிறீர்கள். இராமர் கௌரவம் உள்ளவர்களாக ஆக்குகிறார். இராவணன் கௌரவமற்றவர்களாக ஆக்குகிறான். இந்த ஞானத்தின் மூலம் தான் நீங்கள் முக்தி-ஜீவன் முக்தி அடைகிறீர்கள். அரைக்கல்பத்திற்கு இராவணனின் பெயர் இருக்காது. இந்த விஷயங்கள் இப்போது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் வருகின்றது. அதுவும் நம்பர்வார். கல்ப-கல்பமாக இவ்வாறே நீங்கள் நம்பர்வார் புருஷôர்த்தத்தின் அனுசாரம் புத்திசாலிகள் ஆகிறீர்கள். மாயா தவறு செய்ய வைத்து விடுகின்றது. எல்லையற்ற தந்தையை நினைவு செய்வதற்கே மறந்து விடுகின்றனர். பகவான் படிப்பு சொல்லித்தருகிறார். அவர் நம்முடைய ஆசிரியராக ஆகியிருக்கிறார். பிறகும் கூட (முரளி வகுப்புக்கு) வராமல் இருந்து விடுகின்றனர். படிப்பதில்லை. ஒவ்வோரிடமாகப் போய்க் கஷ்டப் பட்டு அலைகின்ற பழக்கம் ஆகி விடுகின்றது. படிப்பின் மீது யாருக்கு கவனம் இல்லாதிருக்கிறதோ, அவர்களைப் பிறகு வேலைக்காரர்களாக ஆக்க வேண்டியுள்ளது. சலவை செய்தல் போன்ற வேலைகளைச் செய்கின்றனர். அதில் படிப்பிற்கான தேவை என்ன இருக்கிறது? வியாபாரத்தில் மனிதர்கள் பல கோடிக்கதிபதியாக ஆகி விடுகின்றனர். வேலைக் காரர்களாக இருப்பவர்கள் அதுபோல் ஆவதில்லை. அதிலோ தீர்மானிக்கப் பட்ட சம்பளம் கிடைக்கும். இப்போது உங்களுடைய படிப்பு உலகத்தின் இராஜ்ய பதவி பெறுவதற்கானது. நாங்கள் பாரதவாசிகள் என்று இங்கே சொல்கின்றனர் இல்லையா? பின்னால் பிறகு உங்களை உலகத்தின் எஜமானர்கள் எனச் சொல்வார்கள். அங்கே தேவி-தேவதா தர்மத்தைத் தவிர வேறு எந்த ஒரு தர்மமும் இருக்காது. பாபா உங்களை உலகத்தின் எஜமான் ஆக்குகிறார் என்றால் அவருடைய வழிப்படி நடக்க வேண்டும். எந்த ஒரு விகாரத்தின் பூதமும் இருக்கக் கூடாது. இந்த பூதங்கள் மிகவும் தீயவை. காமத்தால் ஆரோக்கியம் கெட்டுக் கொண்டே இருக்கும். சக்தி குறைந்து விடுகின்றது. இந்தக் காம விகாரமானது உங்கள் சக்தியை முற்றிலும் இல்லாமல் செய்து விட்டுள்ளது. அதன் விளைவாக ஆயுள் குறைந்து கொண்டே சென்றுள்ளது. போகியாகவே ஆகி விட்டிருக்கிறீர்கள். காமி, (காம விகாரிகள்) போகி, ரோகியாக (நோயாளி) அனைவரும் ஆகி விடுகின்றனர். அங்கே விகாரம் இருப்பதில்லை. ஆக, யோகி சதா ஆரோக்கியமானவராக இருப்பதுடன் ஆயுளும் 150 ஆண்டுகள் இருக்கும். அங்கே காலன் வருவதில்லை இதைப் பற்றி ஒரு கதையும் சொல் கின்றனர். சிலரிடம் கேட்கப் பட்டது - முதலில் சுகம் வேண்டுமா, அல்லது முதலில் துக்கம் வேண்டுமா? அதற்கு யாரோ சமிக்ஞை தந்தனர் - முதலில் சுகம் வேண்டும் எனச் சொல்லுங்கள் என்று. ஏனென்றால் சுகத்தில் சென்று விட்டால் அங்கே காலன் போன்ற யாரும் வர மாட்டார்கள். உள்ளே நுழையவே முடியாது. ஒரு கதை இதுபோல் உருவாக்கி விட்டுள்ளனர். பாபா புரிய வைக்கிறார், நீங்கள் சுகதாமத்தில் இருக்கிறீர்கள் என்றால் அங்கே எந்தக் காலனும் இருக்க மாட்டான். இராவண இராஜ்யமே இருக்காது. பிறகு எப்போது விகாரி ஆகிறீர்களோ, அப்போது காலன் வருகிறான். கதைகள் எத்தனை உருவாக்கி விட்டுள்ளனர்! காலன் அழைத்துச் சென்றான் அதன் பிறகு இதுபோல் நடந்தது என்று. காலனைப் பார்க்கவும் முடியாது. ஆத்மாவைப் பார்க்கவும் முடியாது. இவை கட்டுக் கதைகள் எனச் சொல்லப்படும். காதுக்கு இனிமை தரும் கதைகள் அநேகம் உள்ளன. இப்போது பாபா புரிய வைக்கிறார், அங்கே அகால மரணம் ஒருபோதும் ஏற்படுவதில்லை. ஆயுள் நீண்டதாக இருக்கும், மேலும் பவித்திரமாக இருப்பார்கள். 16 கலைகளாக இருந்தது குறைந்து-குறைந்து முற்றிலும் கலை எதுவும் இல்லாத தாக ஆகி விடுகின்றது. குணமற்ற என்னிடம் எந்த ஒரு குணமும் இல்லை. குணமற்ற அமைப்பு என்ற ஒன்று உள்ளது குழந்தைகளுடையது. எங்களிடம் எந்த ஒரு குணமும் கிடையாது எனச் சொல்கின்றனர். எங்களை குணவான்களாக ஆக்குங்கள். சர்வகுண சம்பன்னமாக ஆக்குங்கள். இப்போது பாபா சொல்கிறார், பவித்திரமாக ஆக வேண்டும். அனைவரும் இறக்க வேண்டும். இவ்வளவு ஏராளமான மனிதர்கள் சத்யுகத்தில் இருக்க மாட்டார்கள். இப்போதோ எவ்வளவு ஏராளமான பேர் உள்ளனர்! அங்கே குழந்தையும் யோக பலத்தின் மூலம் பிறக்கும். இங்கோ பாருங்கள், எவ்வளவு குழந்தைகளை உருவாக்கிக் கொண்டே செல்கின்றனர்! பாபா மீண்டும் சொல்கிறார்-தந்தையை நினைவு செய்யுங்கள். அந்தத் தந்தை தான் படிப்பு சொல்லித் தருகிறார். சொல்லித் தரும் ஆசிரியர் நினைவு வருகின்றது. நீங்கள் அறிவீர்கள், சிவபாபா நமக்குப் படிப்பு சொல்லித் தந்து கொண்டிருக்கிறார். என்ன சொல்லித் தருகிறார் என்பதும் உங்களுக்குத் தெரியும். ஆக, தந்தை மற்றும் ஆசிரியரிடம் யோகம் வைக்க வேண்டும். இந்த ஞானம் மிகவும் உயர்ந்தது. இப்போது உங்கள் அனைவருக்கும் மாணவ வாழ்க்கை. குழந்தைகள், முதியவர்கள், இளைஞர்கள் அனைவரும் ஒன்றாகப் படிக்கிறீர்கள் இத்தகைய பல்கலைக்கழகத்தை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? மேலும் ஒரே பள்ளிக்கூடம், படிப்பு சொல்லித் தருபவர் ஒரே ஆசிரியர், அதிலும் பிரம்மா தாமே கூடப் படிக்கின்றார். அதிசயம் இல்லையா? சிவபாபா உங்களுக்குப் படிப்பு சொல்லித் தருகிறார். இந்த பிரம்மாவும் அதைக் கேட்கிறார். குழந்தை அல்லது முதியவர், யார் வேண்டுமானாலும் படிக்கலாம். இந்த ஞானத்தை நீங்களும் கூடப் படிக்கிறீர்கள் இல்லையா? இப்போது சொல்லித் தருவது ஆரம்பமாகியுள்ளது. நாளுக்கு நாள் சமயம் குறைந்து கொண்டே செல்கின்றது. இப்போது நீங்கள் எல்லையற்றதில் சென்று விட்டிருக்கிறீர்கள். இந்த 5000 ஆண்டுகளின் சக்கரம் எப்படிக் கடந்துள்ளது என்று நீங்கள் அறிவீர்கள், முதலில் ஒரு தர்மம் இருந்தது. இப்போது எவ்வளவு ஏராளமான தர்மங்கள்! இப்போது முழு ஆட்சி உரிமை எனச் சொல்ல மாட்டார்கள். இது பிரஜைகளின் மீது பிரஜை களின் ஆட்சி என்று சொல்லப்படுகின்றது. முதல்-முதலில் மிக சக்தி வாய்ந்த தர்மம் இருந்தது. முழு உலகத்தின் எஜமானராக இருந்தனர். இப்போது அதர்மவாதிகளாக ஆகி விட்டுள்ளனர். எந்த ஒரு தர்மமும் இல்லை. அனைவருக்குள்ளும் 5 விகாரங்கள் உள்ளன. எல்லையற்ற தந்தை சொல்கிறார், குழந்தைகளே, இப்போது பொறுமையாக இருங்கள். இன்னும் கொஞ்ச காலமே நீங்கள் இந்த இராவண இராஜ்யத்தில் இருப்பீர்கள். நல்லபடியாகப் படித்தால் பிறகு சுகதாமத்திற்குச் சென்று விடுவீர்கள். இது துக்கதாமம். நீங்கள் உங்களுடைய சாந்திதாமம் மற்றும் சுகதாமத்தை நினைவு செய்யுங்கள். இந்த துக்கதாமத்தை மறந்து கொண்டே செல்லுங் கள். ஆத்மாக்களின் தந்தை கட்டளையிடுகிறார் - ஹே ஆன்மீகக் குழந்தைகளே! ஆன்மீகக் குழந்தைகள் இந்த உறுப்புகள் மூலமாகக் கேட்டீர்கள். ஆத்மாக்கள் நீங்கள் சத்யுகத்தில் சதோபிரதானமாக இருந்த போது உங்களின் சரீரமும் கூட முதல் தரமான சதோபிரதானமாக இருந்தது. நீங்கள் பெரிய செல்வந்தர்களாக இருந்தீர்கள். பிறகு புனர்ஜென்மம் எடுத்து-எடுத்து என்னவாக ஆகி விட்டிருக்கிறீர்கள்! இரவு-பகலுக்குள்ள வேறுபாடு. பகலில் நாம் சொர்க்கத்தில் இருந்தோம். இரவில் நாம் நரகத்தில் உள்ளோம். இது பிரம்மா மற்றும் பிராமணர்களின் பகல் மற்றும் இரவு எனச் சொல்லப் படுகின்றது. 63 பிறவிகளாக அடி வாங்கிக் கொண்டே வந்துள்ளனர். இருள் நிறைந்த இரவு இல்லையா? அலைந்து கொண்டே உள்ளனர். பகவான் யாருக்கும் கிடைப்பதில்லை. இது பூல்புலையா (மறதியின்) விளையாட்டு எனச் சொல்லப் படுகின்றது. ஆக, பாபா குழந்தைகள் உங்களுக்கு முழு சிருஷ்டியின் முதல்-இடை-கடை பற்றிய தகவலைச் சொல்கின்றார். நல்லது.

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

தாரணைக்கான முக்கிய சாரம்:
1) ஒவ்வொரு வாசலாக அலைந்து கஷ்டப்படும் (ஏமாற்றமடையும்) பழக்கத்தை விட்டு பகவானின் படிப்பை கவனத்துடன் படிக்க வேண்டும். ஒருபோதும் ஆப்ஸென்ட் ஆகக் கூடாது. பாபாவுக்கு சமமாக ஆசிரியராகவும் ஆக வேண்டும். படித்து மற்றவர்களுக்கும் சொல்லித்தர வேண்டும்.

2) சத்யநாராயணனின் உண்மையான கதை கேட்டு நரனில் இருந்து நாராயணன் ஆகும் அளவிற்கு அப்படி கௌரவம் உள்ளவர்களாக தன்னைத் தான் ஆக்கிக் கொள்ள வேண்டும். ஒருபோதும் பூதங்களின் வசமாகி கௌரவத்தை இழந்துவிடக் கூடாது.

வரதானம்:
சம்பந்தம் மற்றும் பிராப்திகளின் நினைவு மூலம் குஷியில் இருக்கக்கூடிய சகஜயோகி ஆகுக.

சகஜயோகத்தின் ஆதாரம் -- சம்பந்தம் மற்றும் பிராப்தி. சம்பந்தத்தின் ஆதாரத்தில் அன்பு உருவாகிறது. எங்கே பிராப்திகள் உள்ளனவோ, அங்கே மனம்-புத்தி சகஜமாகவே சென்று விடும். எனவே சம்பந்தத்தில் என்னுடையவர் என்ற அதிகாரத்துடன் நினைவு செய்யுங்கள். மனதார மேரா பாபா என்று சொல்லுங்கள். பாபாவிடமிருந்து கிடைத்துள்ள சக்திகள், ஞானம், குணங்கள், சுகம்-சாந்தி, ஆனந்தம், அன்பு இவற்றின் கஜானாக்களை நினைவில் வெளிப்படுத்துங்கள். இதன் மூலம் அளவற்ற குஷி இருக்கும் மற்றும் சகஜயோகி ஆகி விடுவீர்கள்.

சுலோகன்:
தேக உணர்விலிருந்து விடுபடுவீர்களானால் மற்ற அனைத்து பந்தனங்களும் தாமாகவே முடிந்து போகும்.