23-12-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே ! நீங்கள் பாபாவிடம்
புத்துணர்வு பெற வருகின்றீர்கள், பாபாவை சந்திப்பதின் மூலம்
பக்தி மார்க்கத்தின் களைப்பு அனைத்தும் விலகி விடுகிறது.
கேள்வி:
பாபா குழந்தைகளாகிய உங்களை எந்த
விதியின் மூலம் புத்துணர்வு பெறச் செய்கின்றார்?
பதில்:
1. பாபா ஞானத்தைச் சொல்லி-சொல்லி
உங்களை புத்துணர்வு அடையச் செய்கின்றார். 2. நினைவின் மூலமும்
கூட குழந்தைகளாகிய நீங்கள் புத்துணர்வு அடைந்து விடுகிறீர்கள்.
உண்மை யில் சத்யுகம் தான் உண்மையான ஓய்வு பெறும் உலகம். அங்கு
கிடைக்காத பொருளே இல்லை, எந்தப் பொருளையும் அடைய கஷ்டப்பட
வேண்டியிருக்காது. 3. சிவபாபாவின் மடியில் வந்த உடனேயே
குழந்தைகளாகிய உங்களுக்கு ஓய்வு கிடைத்து விடுகிறது. களைப்பு
அனைத்தும் விலகி விடுகிறது.
ஓம் சாந்தி.
பாபா வந்து புரிய வைக்கின்றார், கூடவே இந்த தாதாவும் புரிந்து
கொள்கிறார் ஏனென்றால் பாபா இந்த தாதாவின் மூலம் வந்து புரிய
வைக்கின்றார். எப்படி நீங்கள் புரிந்து கொள்கிறீர்களோ, அதுபோல்
இந்த தாதாவும் புரிந்து கொள்கிறார். தாதாவை பகவான் என்று
சொல்லப்படுவதில்லை, இது பகவானுடைய மகாவாக்கியமாகும். பாபா என்ன
புரிய வைக்கின்றார்? ஆத்ம-அபிமானியாகுக. ஏனென்றால் தங்களை ஆத்மா
என்று புரிந்து கொள்ளாமல் பரமபிதா பரமாத்மாவை நினைவு செய்ய
முடியாது. இந்த சமயத்தில் ஆத்மாக்கள் அனைத்தும் தூய்மை யற்றதாக
இருக்கின்றன. தூய்மையற்றவர்களுக்குத் தான் மனிதர்கள் என்று
சொல்லப் படுகிறது, தூய்மையானவர்களை தேவதைகள் என்று
சொல்லப்படுகிறது. இது மிகவும் சகஜமாக புரிந்து கொள்ள வேண்டிய
மற்றும் புரிய வைப்பதற்கான விஷயங்களாகும். ஹே! தூய்மையற்றவர்களை
தூய்மையாக்குபவரே வாருங்கள் என்று மனிதர்கள் தான்
அழைக்கிறார்கள். தேவி-தேவதைகள் ஒருபோதும் இப்படி சொல்ல
மாட்டார்கள். தூய்மையற்றவர்களை தூய்மையாக்கும் பாபா, தூய்மை
யற்றவர்கள் அழைப்பதினால் வருகின்றார். ஆத்மாக்களை தூய்மையாக்கி
பிறகு தூய்மையான உலகத்தையும் ஸ்தாபனை செய்கின்றார். ஆத்மா தான்
பாபாவை அழைக்கிறது. சரீரம் அழைக்காது அல்லவா? எப்போதும்
தூய்மையாக இருக்கக் கூடிய பரலௌகீக தந்தையைத் தான் அனைவரும்
நினைவு செய்கிறார்கள். இது பழைய உலகமாகும். பாபா புதிய
தூய்மையான உலகத்தை உருவாக்கு கின்றார். எங்களுக்கு இங்கேயே
அளவற்ற சுகம் இருக்கிறது என்று சொல்பவர்களும் நிறைய பேர்
இருக்கிறார்கள். பொருட்கள், செல்வம் நிறைய இருக்கிறது. நமக்கு
இது தான் சொர்க்கம் என்று அவர்கள் புரிந்து கொள்கிறார்கள்.
அவர்கள் உங்களுடைய பேச்சை எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? கலியுக
உலகத்தை சொர்க்கம் என்று புரிந்து கொள்வது கூட முட்டாள்
தனமானதாகும். எவ்வளவு உளுத்துப்போன நிலையாகி விட்டது.
இருந்தாலும் கூட நாங்கள் சொர்க்கத்தில் அமர்ந்திருக்கிறோம்
என்று மனிதர்கள் கூறுகிறார்கள். குழந்தைகள் புரிய வைக்கவில்லை
என்றால், நீங்கள் என்ன கல் புத்திக்காரர்களா மற்றவர்களுக்கு
புரிய வைக்க முடியாதா? என்று பாபா கேட்பாரல்லவா? தாங்கள் தங்க
புத்தியுடையவர்களாக ஆகினால் தானே மற்றவர்களையும் மாற்ற முடியும்.
நன்றாக முயற்சி செய்ய வேண்டும். இதில் வெட்கப்படுவதற்கான விஷயம்
இல்லை. ஆனால் மனிதர்களுடைய புத்தியில் நிரம்பியிருக்கும் அரைக்
கல்பத்தின் தலைகீழான வழிகள் ஒன்றும் விரைவாக மறந்து விடுவதில்லை.
பாபாவை யதார்த்தமாக புரிந்து கொள்ளாத வரை அந்த சக்தி வர
முடியாது. இந்த வேத சாஸ்திரங்கள் போன்றவற்றின் மூலம் மனிதர்கள்
கொஞ்சமும் மாறுவதில்லை. நாளுக்கு நாள் இன்னும் தான் கெட்டு
வந்துள்ளார்கள். சதோபிரதானத்திலிருந்து தமோபிரதானமாகத் தான்
ஆகியுள்ளார்கள். நாம் தான் சதோபிரதான தேவி-தேவதைகளாக இருந்தோம்,
எப்படி கீழே விழுந்து விட்டோம் என்பது யாருடைய புத்தியிலும்
இல்லை. யாருக்கும் கொஞ்சம் கூடத் தெரியவில்லை, மேலும் 84
பிறவிகளுக்குப் பதிலாக 84 இலட்சம் பிறவிகள் என்று சொல்லி
விட்டார்கள் என்றால் பிறகு எப்படித் தெரியும்? பாபாவைத் தவிர
ஞான ஒளியை கொடுக்கக் கூடியவர்கள் யாரும் இல்லை. அனைவரும் ஒருவர்
மற்றொருவருக்குப் பின்னால் வாசல்- வாசலாக ஏமாற்றம் அடைந்து
கொண்டே இருக்கிறார்கள். கீழே விழுந்து-விழுந்து குப்புறப்
படுத்துவிட்டனர், சக்தி அனைத்தும் முடிந்து விட்டது. பாபாவை
யதார்த்தமாக தெரிந்து கொள்வதற்கு புத்தியில் கூட சக்தி இல்லை.
பாபா தான் வந்து அனைவரது புத்தியின் பூட்டையும் திறக்கின்றார்.
எனவே எவ்வளவு புத்துணர்வு பெறுகின்றார்கள்! குழந்தைகள்
தந்தையிடம் புத்துணர்வு பெற வருகிறார்கள். வீட்டில் ஓய்வு
கிடைக்கிறது அல்லவா! பாபா கிடைத்தவுடன் பக்தி மார்க்கத்தின்
களைப்பு அனைத்தும் விலகி விடுகிறது. சத்யுகத்தையும் கூட
ஓய்வுக்கான உலகம் என்று சொல்லப்படுகிறது. உங்களுக்கு அங்கே
எவ்வளவு ஓய்வு கிடைக்கிறது! அங்கு கிடைக்காத பொருளே இல்லை.
எந்தப் பொருளை அடையவும் முயற்சிக்க வேண்டாம். இங்கே பாபாவும்
புத்துணர்வளிக்கின்றார் என்றால் இந்த தாதாவும் அளிக்கின்றார்.
சிவபாபாவின் மடியில் வரும்போது எவ்வளவு ஓய்வு கிடைக்கிறது!
ஓய்வு என்றாலே அமைதியாகும். மனிதர்களும் களைப்படைந்து அமைதியாகி
விடுகிறார்கள். ஓய்விற்காக சிலர் ஆங்காங்கே செல்கிறார்கள்
அல்லவா! ஆனால் அந்த ஓய்வில் புத்துணர்வு இல்லை. இங்கே
உங்களுக்கு எவ்வளவு ஞானத்தைக் கொடுத்து புத்துணர்வு
பெறச்செய்கின்றார். பாபாவின் நினைவின் மூலம் கூட எவ்வளவு
புத்துணர்வு பெறுகிறார்கள் மேலும் தமோபிரதானத்திலிருந்தும் கூட
சதோபிர தானமாக ஆகிக் கொண்டே செல்கிறீர்கள். சதோபிரதானமாக
ஆவதற்காக இங்கே பாபாவிடம் வருகின்றீர்கள். பாபா கூறுகின்றார்,
இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, பாபாவை நினைவு செய்யுங்கள்.
முழு சிருஷ்டி சக்கரமும் எவ்வாறு சுற்றுகிறது, அனைத்து
ஆத்மாக்களுக்கும் எவ்வாறு மற்றும் எப்படி இளைப்பாறுதல்
கிடைக்கிறது என்பதை பாபா புரிய வைத்திருக்கிறார். அனை வருக்கும்
பாபாவின் செய்தியை கொடுப்பது குழந்தைகளாகிய உங்களுடைய
கடமையாகும். என்னை நினைவு செய்தீர்கள் என்றால் இந்த ஆஸ்திக்கு
நீங்கள் எஜமானர்களாக ஆகி விடுவீர்கள். பாபா இந்த சங்கமயுகத்தில்
புதிய சொர்க்கம் என்ற உலகத்தைப் படைக்கின்றார். நீங்கள் அங்கே
சென்று எஜமானர்களாக ஆகின்றீர்கள். பிறகு துவாபர யுகத்தில் மாயை
இராவணனின் மூலம் உங்களுக்கு சாபம் கிடைக்கிறது, அப்போது தூய்மை,
சுகம், அமைதி, செல்வம் போன்ற அனைத்தும் முடிந்து விடுகிறது.
எப்படி மெது-மெதுவாக முடிந்து விடுகிறது என்பதையும் பாபா புரிய
வைத்திருக் கிறார். துக்கதாமத்தில் ஏதும் அமைதி இருக்கிறதா
என்ன? சுகதாமத்தில் அமைதியே அமைதியாகும். பக்தி மனிதர்களை
எவ்வளவு களைப்படைய வைக்கிறது! பக்தியின் மூலம் பிறவி-பிறவிகளாக
எவ்வளவு களைப்படைந்து விடுகிறார்கள்! ஒரேயடியாக எவ்வளவு
ஏழைகளாக ஆகி விட்டீர்கள்! இந்த இரகசியங்கள் அனைத்தையும் பாபா
வந்து புரிய வைக்கின்றார். புதியவர்கள் வருகிறார்கள் என்றால்
எவ்வளவு புரிய வைக்க வேண்டியிருக்கிறது! ஒவ்வொரு விஷயத்திலும்
எவ்வளவு யோசிக்கிறார்கள்! மந்திரம் ஏதும் போட்டு விடக்கூடாது
என்று எண்ணுகிறார்கள். அட! நீங்கள் தான் பகவான் மந்திரவாதி
என்று சொல்கிறீர்கள். எனவே பாபா கூறுகின்றார், ஆமாம் உண்மையில்
நான் மந்திரவாதி தான். ஆனால் மந்திரத்தின் மூலம் மனிதர்களை
செம்மறி ஆடாக மாற்றிவிடக் கூடிய அந்த மந்திரம் இல்லை. இது
புத்தியின் மூலம் புரிந்து கொள்ளப்படுகிறது, தேக அபிமானமுள்ள
எருதுக்கு தெய்வீக இசை புரியாது என்ற பாடல் கூட உள்ளது. இந்த
சமயத்தில் மனிதர்கள் அனைவரும் செம்மறி ஆடு ஆவர். இந்த விஷயங்கள்
அனைத்தும் இங்கே உள்ளவைகளாகும். இந்த சமயத்தைப் பற்றி
பாடப்பட்டவைகளாகும். கல்பத்தின் இறுதியைக் கூட மனிதர்கள்
புரிந்து கொள்ள முடியாது. சண்டிகாதேவிக்கு எவ்வளவு பெரிய
திருவிழா கூட்டம் கூடுகிறது! அவர் யார்? அவர் ஒரு தேவியாக
இருந்தார் என்று சொல் கிறார்கள். அப்படிப்பட்ட பெயர் எதுவும்
சத்யுகத்தில் இல்லவே இல்லை. சத்யுகத்தில் எவ்வளவு அழகான
பெயர்கள் இருக்கின்றன! சத்யுக சம்பிரதாயங்களை உயர்ந்தவைகள்
என்று சொல்லப்படுகிறது. கலியுக சம்பிரதாயங்களுக்கு எவ்வளவு
மோசமான பெயர்களை கொடுக்கிறார்கள். இப்போதைய மனிதர்களை
உயர்ந்தவர்கள் என்று சொல்ல முடியாது. தேவதைகளுக்கு
உயர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. மனிதர்களை தேவதை
களாக்கினீர்கள் என்று புகழ் பாடப்படுகிறது. மனிதனிலிருந்து
தேவதையாகவும், தேவதையிலிருந்து மனிதனாகவும் எப்படி ஆகிறார்கள்
என்ற இரகசியத்தை பாபா உங்களுக்குப் புரிய வைத்துள்ளார். அதனை
தேவதை உலகம் என்றும், இதனை மனித உலகம் என்றும் சொல்லப்படுகிறது.
பகலை வெளிச்சம் என்றும், இரவை இருள் என்றும் சொல்லப்படுகிறது.
ஞானம் என்பது ஒளி, பக்தி என்பது இருள் ஆகும். அஞ்ஞானத்திற்கு
உறக்கம் என்று சொல்லப்படுகிறது அல்லவா. முன்னால் நாம் எதையும்
தெரிந்திருக்கவில்லை என்றபோது தெரியாது- தெரியாது என்று
சொன்னோம் அதாவது நாம் தெரிந்திருக்கவில்லை என்று நீங்களும்
புரிந்து கொள்கிறீர்கள். நாமும் முன்பு நாஸ்திகர்களாக இருந்தோம்
என்பதை இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். எல்லையற்ற
தந்தையையே தெரிந்திருக்கவில்லை. அவர் உண்மையான அழிவற்ற
தந்தையாவார். அவரை அனைத்து ஆத்மாக் களுக்கும் தந்தை என்று
சொல்லப்படுகிறது. இப்போது நாம் அந்த எல்லையற்ற தந்தை
யினுடையவர்களாக ஆகியிருக்கிறோம் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள்
தெரிந்துள்ளீர்கள். பாபா குழந்தை களுக்கு மறைமுகமான ஞானத்தை
கொடுக்கின்றார். இந்த ஞானம் மனிதர்களிடம் எங்கேயும் கிடைக்க
முடியாது. ஆத்மாவும் மறை முகமானதாக இருக்கிறது, மறைமுகமான
ஞானத்தை ஆத்மா தாரணை செய்கிறது. ஆத்மா தான் வாயின் மூலம்
ஞானத்தைக் கொடுக்கிறது. ஆத்மா தான் மறைமுகமான தந்தையை
மறைமுகமாக நினைவு செய்கிறது.
குழந்தைகளே தேக-அபிமானிகளாக ஆகாதீர்கள் என்று பாபா கூறுகின்றார்.
தேக-அபிமானத்தின் மூலம் ஆத்மாவின் சக்தி முடிந்து விடுகிறது.
ஆத்ம-அபிமானிகளாக ஆவதின் மூலம் ஆத்மாவில் சக்தி சேமிப்பாகிறது.
நாடகத்தின் இரகசியத்தை நல்ல விதத்தில் புரிந்து கொண்டு நடக்க
வேண்டும் என்று பாபா கூறுகின்றார். இந்த அழிவற்ற நாடகத்தின்
இரகசியத்தை யார் சரியான விதத்தில் தெரிந்துள்ளார்களோ, அவர்கள்
எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இந்த சமயத்தில்
மனிதர்கள் மேலே செல்வதற்கு எவ்வளவு முயற்சி செய்கிறார்கள்! மேலே
உலகம் இருக்கிறது என்று புரிந்து கொள்கிறார்கள். சாஸ்திரங்களில்
மேலே உலகம் இருக்கிறது என்று சொல்லிக் கேட்டுள்ளனர், எனவே அங்கு
சென்று பார்க்கலாம். அந்த உலகத்தில் குடியேற முயற்சி செய்
கிறார்கள். உலகம் முழுவதிலும் குடியேறிவிட்டார்கள் அல்லவா!
பாரதத்தில் ஒரே ஒரு ஆதி சனாதன தேவி-தேவதா தர்மம் தான் இருந்தது
வேறு எந்த கண்டம் போன்றவைகள் இல்லை. பிறகு எவ்வளவு
குடியேறிவிட்டார்கள்! பாரதத்தில் எவ்வளவு சிறிய பகுதியில்
தேவதைகள் இருக்கிறார்கள் என்று சிந்தனை செய்து பாருங்கள். யமுனை
நதிக்கரையில் தான் பரிஸ்தானம் (தேவதைகள் வாழும் இடம்) இருந்தது
அங்கே இலஷ்மி- நாராயணன் இராஜ்ஜியம் செய்தார்கள். எவ்வளவு அழகான,
சதோபிரதான உலகமாக இருந்தது! இயற்கை அழகு இருந்தது. ஆத்மாவில்
அனைத்து திறமைகளும் இருந்தது. ஸ்ரீ கிருஷ்ணருடைய பிறவி எவ்வாறு
நடக்கிறது என்பது குழந்தைகளுக்குப் காட்டப்பட்டது. அறை
முழுவதும் வெளிச்சமாகி விட்டதைப் போல் இருக்கிறது. எனவே பாபா
வந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார், இப்போது நீங்கள்
பரிஸ்தானத்திற்கு செல்வதற்காக முயற்சி செய்து
கொண்டிருக்கிறீர்கள். மற்றபடி குளத்தில் மூழ்குவதின் மூலம்
தேவதைகளாக ஆகி விடுவார்கள் என்பது கிடையாது. இவையனைத்தும்
பொய்யான பெயர்களை வைத்து விட்டார்கள். இலட்சக்கணக்கான ஆண்டுகள்
என்று சொல்லி விடுவதின் மூலம் தான் அனைத்தையும் மறந்து
விட்டார்கள். இப்போது நீங்கள் வரிசைகிரமமான முயற்சியின்படி
தவறற்ற வர்களாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். இவ்வளவு சிறிய ஆத்மா
சரீரத்தின் மூலம் எவ்வளவு பெரிய நடிப்பை நடிக்கிறது! பிறகு
சரீரத்திலிருந்து ஆத்மா வெளியேறிவிடுகிறது என்றால் சரீரத்தின்
நிலையைப் பாருங்கள் என்னவாகி விடுகிறது! ஆத்மா தான் நடிப்பை
நடிக்கிறது. எவ்வளவு பெரிய சிந்தனை செய்ய வேண்டிய விஷயமாக
இருக்கிறது. முழு உலகத்தின் ஆத்மாக்களும் தங்களுடைய நடிப்பின்
படி தான் நடிப்பை நடிக்கிறது. கொஞ்சம் கூட வித்தியாசப் பட
முடியாது. அப்படி முழு நடிப்பும் மீண்டும் நடந்து
கொண்டிருக்கிறது. இதில் சந்தேகப்பட முடியாது. ஒவ்வொருவருடைய
புத்தியிலும் வித்தியாசப்படலாம். ஏனென்றால் ஆத்மா
மனம்-புத்தியோடு இருக்கிறது அல்லவா! நாம் உதவித்தொகை (ஸ்காலர்ஷிப்)
வாங்குகிறோம் என்றால் மனதிற்குள் மகிழ்ச்சி ஏற்படுகிறது என்பதை
குழந்தைகள் தெரிந்திருக்கிறார்கள். இங்கேயும் கூட உள்ளுக்குள்
வந்தவுடனேயே குறிக்கோளை முன்னால் பார்க்கிறார்கள் எனும்போது
கண்டிப்பாக குஷி ஏற்படும். நாம் தேவி- தேவதைகளாக ஆவதற்காக இங்கே
படிக்கின்றோம் என்பதை இப்போது நீங்கள் தெரிந்துள்ளீர்கள்.
அடுத்த பிறவியின் குறிக்கோளை காணக்கூடிய பள்ளி எதுவும் இல்லை.
நாம் இலஷ்மி- நாராயணனை போல் ஆகிக் கொண்டிருக்கிறோம் என்பதை
நீங்கள் பார்க்கின்றீர்கள். இப்போது நாம் சங்கமயுகத்தில் இருக்
கிறோம் பிறகு எதிர்காலத்தில் இந்த இலஷ்மி - நாராயணனைப் போல்
ஆவதற்கான படிப்பை படித்துக் கொண்டிருக்கிறோம். எவ்வளவு
மறைமுகமான படிப்பாக இருக்கிறது! குறிக்கோளைப் எண்ணிப்பார்த்து
எவ்வளவு மகிழ்ச்சி இருக்க வேண்டும்! குஷிக்கு அளவே இல்லை.
பள்ளியோ அல்லது பாடசாலையோ இருந்தால் இப்படி இருக்க வேண்டும்.
எவ்வளவு மறைமுகமாக இருக் கிறது, ஆனால் மிகப்பெரிய பாடசாலையாகும்.
எவ்வளவு பெரிய படிப்போ அவ்வளவு வசதிகள் இருக் கிறது. ஆனால்
இங்கே நீங்கள் தரையில் அமர்ந்து படிக்கின்றீர்கள். ஆத்மா
படிக்க வேண்டியிருக் கிறது, தரையில் அமர்ந்தாலும் சரி அல்லது
சிம்மாசனத்தில் அமர்ந்தாலும் சரி. இந்தப் படிப்பில் தேர்ச்சி
பெற்ற பிறகு சென்று இலஷ்மி நாராயணனாக ஆவோம் என்ற குஷியில்
நடனமாடுங்கள். இப்போது நான் இவருக்குள் பிரவேசித்து
குழந்தைகளாகிய உங்களுக்கு படிப்பிக்கின்றேன் என்று பாபா
தன்னுடைய அறிமுகத்தைக் கொடுக்கின்றார். பாபா தேவதைகளுக்குக்
கற்பிக்க மாட்டார். தேவதைகளுக்கு இந்த ஞானம் எங்கே இருக்கிறது?
தேவதைகளிடத்தில் ஞானம் இல்லையா என்று மனிதர்கள்
குழம்புகிறார்கள். தேவதைகள் தான் இந்த ஞானத்தின் மூலம்
தேவதைகளாக ஆகிறார்கள். தேவதைகளாக ஆன பிறகு ஞானத்திற்கு என்ன
அவசியம் இருக்கிறது? லௌகீக படிப்பின் மூலம் வக்கீலாக ஆகி
விட்டார்கள், சம்பாதிக்க ஆரம்பித்து விட்டார்கள் பிறகு
வக்கீலுக்கு படிப்பார்களா என்ன? நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு
நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) அழிவற்ற நாடகத்தின் இரகசியத்தை யதார்த்தமாகப் புரிந்து
கொண்டு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இந்த நாடகத்தில் ஒவ்வொரு
நடிகருடைய நடிப்பும் அவரவருடையதாகும், அதை மிகச் சரியாக
நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
2) குறிக்கோளை முன் வைத்து குஷியின் நடனமாட வேண்டும். நாம்
இந்தப் படிப்பின் மூலம் இப்படி இலஷ்மி - நாராயணனாக ஆவோம் என்பது
புத்தியில் இருக்க வேண்டும்.
வரதானம்:
நினைவு மற்றும் சேவையின் சக்திசா- ஆதாரத்தின் மூலமாக தீவிர
வேகத்தில் முன்னேறும் மாயையினை வென்றவராகுக
பிராமண வாழ்வின் ஆதாரமே நினைவும் சேவையுமாகும். இவ்விரு
ஆதாரமும் சதா சக்திசாலியாக இருந்தால் தீவிர வேகத்தில்
முன்னேறிக் கொண்டேயிருப்பீர்கள். மாறாக சேவை அதிகம் நினைவு
குறைவு என்றாலும், நினைவு அதிகம் சேவை குறைவு என்றாலும் தீவிர
முன்னேற்றம் இருக்காது. நினைவு சேவை இரண்டிலும் தீவிரம்
வேண்டும். நினைவும் தன்னலமில்லா சேவையும் உடனிருந்தால் சலபமாக
மாயாவை வெல்லலாம். ஒவ்வொரு செய-லும் செயலின் முடிவிற்கு முன்பே
சதா வெற்றி தென்படும்.
சுலோகன்:
இவ்வுலகினை ஆன்மிக விளையாட்டுக் களம் என்றும் இன்னல்களை ஆன்மிக
கைப்பொம்மை எனவும் புரிந்து கொள்ளுங்கள்.