24-01-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே - நீங்கள் ஒரு
பாபாவின் அறிவுரை படி நடந்து கொண்டிருந்தீர்கள் என்றால் பாபா
உங்களுக்கு பொறுப்பாவார், பாபாவின் அறிவுரை என்னவென்றால்,
நடக்கும்போதும் சுற்றும்போதும் என்னை நினைவு செய்யுங்கள்
என்பதாகும்
கேள்வி:
யார் நல்ல குணமுடைய குழந்தைகளோ,
அவர்களுடைய முக்கிய அடையாளங்கள் என்னவாக இருக்கும்?
பதில்:
அவர்கள் முட்களை மலர்களாக்கும்
சேவையை நன்றாகச் செய்வார்கள். யாரையும் முள்ளாக குத்த
மாட்டார்கள், ஒருபோதும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ள
மாட்டார்கள். யாருக்கும் துக்கம் கொடுக்க மாட்டார்கள். துக்கம்
கொடுப்பது கூட முள்ளாக குத்துவதாகும்.
பாடல்:
இந்த காலம் கடந்து
கொண்டிருக்கிறது.................
ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான செல்லக் குழந்தைகள் வரிசைக்கிரமமான
முயற்சியின் படி இந்த பாட்டின் அர்த்தத்தைப் புரிந்து
கொண்டீர்கள். வரிசைக்கிரமம் என்று ஏன் சொல்லப் படுகிறது என்றால்
சிலர் முதல் தரமாகப் புரிந்து கொள்கிறார்கள், சிலர் இரண்டாம்
தரமாகப் புரிந்து கொள்கிறார்கள், சிலரோ மூன்றாம் தரத்தில்
புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்வது கூட
ஒவ்வொருவருடையதும் அவரவருடைய தன்மை. நிச்சயபுத்தியும் கூட
ஒவ்வொருவருடையதும் தனிப்பட்டதாகும். எப்போதும் சிவபாபா இவரின்
மூலம் அறிவுரை கொடுக்கின்றார் என்றே புரிந்து கொள்ளுங்கள் இதை
பாபா புரிய வைத்துக் கொண்டே இருக்கின்றார். நீங்கள் அரைக்
கல்பமாக அசுர வழிப்படி நடந்து வந்தீர்கள், நாம் இப்போது
ஈஸ்வரிய வழிப்படி நடந்தால் துக்கம் போய்விடும் என்று இப்போது
நம்பிக்கை கொள்ளுங்கள். ஒருவேளை ஈஸ்வரிய வழியென்று அல்லாமல்
மனிதனுடைய வழி என்று புரிந்து கொண்டீர்கள் என்றால் குழம்பி
விடுவீர்கள். என்னுடைய வழிப்படி நடந்தீர்கள் என்றால் நான்
பொறுப்பா கின்றேன் அல்லவா, என்று பாபா கூறுகின்றார். இவரின் (பிரம்மா)
மூலம் என்னவெல்லாம் நடக்கிறதோ, அவருடைய நடவடிக் கைக்கு நான்
தான் பொறுப்பு, அதை நான் சரி செய்வேன். நீங்கள் என்னுடைய
வழிப்படி மட்டும் செல்லுங்கள். யார் நல்ல விதத்தில் நினைவு
செய்வார்களோ, அவர்கள் தான் கட்டளை படி நடப்பார்கள். ஒவ்வொரு
அடியிலும் ஈஸ்வரிய வழி என்று புரிந்து நடந்தீர்கள் என்றால் ஒரு
போதும் நஷ்டம் ஏற்படாது. நம்பிக்கையில் தான் வெற்றி இருக்கிறது.
நிறைய குழந்தைகள் இந்த விஷயத்தைப் புரிந்து கொள்வதில்லை.
கொஞ்சம் ஞானம் வந்தவுடன் தேக- அபிமானம் வந்து விடுகிறது. யோகம்
மிகவும் குறைவாகவே இருக்கிறது. ஞானம் என்பது வரலாறு-புவியியலை
தெரிந்துக் கொள்வது, இது சகஜமானதாகும். இங்கேயும் கூட மனிதர்கள்
எவ்வளவு அறிவியல் போன்றவைகளைப் படிக்கிறார்கள். இந்த படிப்பு
சுலபமானதாகும், மற்றபடி யோகத்தில் (நினை வில்) தான் உழைப்பு
இருக்கிறது.
பாபா நாங்கள் மிகவும் யோக நிலையின் போதையில் இருக்கின்றோம்
என்று சொன்னால், பாபா ஏற்றுக் கொள்ள மாட்டார். பாபா
ஒவ்வொருவருடைய நடத்தையையும் பார்க்கின்றார். பாபாவை நினைவு
செய்பவர்கள் மிகவும் அன்பானவர்களாக இருப்பார்கள். நினைவு
செய்வதில்லை ஆகையினால் தான் தலைகீழான காரியம் நடக்கிறது.
இரவு-பகலுக்குண்டான வித்தியாசம் அதிகம் இருக்கிறது. இப்போது
நீங்கள் இந்த ஏணிப்படியின் சித்திரத்தை வைத்துக் கூட நல்ல
விதத்தில் புரிய வைக்க முடியும். இந்த சமயத்தில் இருப்பது
முட்கள் நிறைந்த காடாகும். இது தோட்டம் அல்ல. பாரதம் மலர்கள்
நிறைந்த தோட்டமாக இருந்தது என்பதை தெளிவாகப் புரிய வைக்க
வேண்டும். மலர் தோட்டத்தில் எங்காவது காட்டு விலங்குகள்
இருக்கிறதா என்ன? அங்கே தேவி-தேவதைகள் இருக்கிறார்கள். பாபா
தான் உயர்ந்த அதிகாரமுடையவர் பிறகு இந்த பிரஜாபிதா பிரம்மாவும்
உயர்ந்த அதிகார முடையவரே ஆவார். இந்த தாதா அனைத்திலும் அதிக
அதிகார முடையவர். சிவன் மற்றும் பிரஜாபிதா பிரம்மா. ஆத்மாக்கள்
சிவ தந்தையின் குழந்தைகள் பிறகு சாகாரத்தில் (சரீரத்தால்) நாம்
சகோதர-சகோதரிகள் அனைவரும் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகளாவோம்.
இவர் அனைவருடைய எள்ளு-கொள்ளு தாத்தா ஆவார். அப்படிப்பட்ட
உயர்ந்த அதிகாரமுள்ளவருக்காக நமக்கு கட்டடம் வேண்டும். இப்படி
நீங்கள் எழுதுங்கள் பிறகு புத்தியில் ஏதாவது வருகிறதா பாருங்கள்.
சிவபாபா மற்றும் பிரஜாபிதா பிரம்மா, ஆத்மாக்களின் தந்தை மற்றும்
மனிதர்கள் அனைவருக்கு மான தந்தை. இது புரிய வைப்பதற்கு மிகவும்
நல்ல பாயிண்டாகும். ஆனால் குழந்தைகள் முழுமையான விதத்தில்
புரிய வைப்ப தில்லை, மறந்து விடுகிறார்கள், ஞானத்தின் கர்வம்
ஏறிவிடு கிறது. பாப்தாதாவையே வென்று விடுவதைப் போல் இருக்கிறது.
என்னுடைய வார்த்தைகளை வேண்டுமானால் கேட்காமல் இருங்கள், ஆனால்
எப்போதும் சிவபாபா புரிய வைக்கின்றார் என்று புரிந்து
கொள்ளுங்கள், அவருடைய வழிப்படி செல்லுங்கள் என்று இந்த தாதா
கூறுகின்றார். நேரடியாக ஈஸ்வரன் இப்படி-இப்படி செய்யுங்கள்,
அதற்கு நான் பொறுப்பேற்கின்றேன் என்று வழி சொல்கின்றார்.
ஈஸ்வரிய வழிப்படி செல்லுங்கள். இவர் ஈஸ்வரன் அல்ல, நீங்கள்
ஈஸ்வரனிடம் படிக்க வேண்டும். இந்த வழியை ஈஸ்வரன் சொல்கிறார்
என்று எப்போதும் புரிந்து கொள்ளுங்கள். இந்த லஷ்மி - நாராயணன்
கூட பாரதத்தின் மனிதர்களாகவே இருந்தார்கள். இவர்கள் அனைவரும்
கூட மனிதர்களே. ஆனால் இவர்கள் சிவாலயத்தில் இருக்கக்
கூடியவர்கள் ஆகையினால் அனைவரும் வணங்குகிறார்கள். ஆனால்
குழந்தைகள் முழுமையாகப் புரிய வைப்பதில்லை, தங்களுடைய போதை ஏறி
விடுகிறது. குறை நிறைய பேரிடத்தில் இருக்கிறது அல்லவா. முழுமை
யாக யோகம் இருக்கும்போது தான் விகர்மம் வினாசம் ஆகும்.
உலகத்திற்கு எஜமானனாக ஆவது ஒன்றும் சுலபமான காரியம் அல்ல(சித்தி
வீடு போல் அல்ல). மாயை ஒரேயடியாக மூக்கைப் பிடித்து சேற்றில்
விழ வைப்பதை பாபா பார்க்கின்றார். பாபாவின் நினைவில் மிகுந்த
குஷியில் மலர்ந்து இருக்க வேண்டும். முன்னால் குறிக்கோள்
இருக்கிறது, நாம் இந்த லஷ்மி -நாராயணனைப் போல் ஆகிக்
கொண்டிருக்கிறோம். மறந்து விடுவதினால் குஷியின் அளவு அதிகரிப்
பதில்லை. எங்களை நிஷ்டையில் அமர்த்துங்கள், எங்களால் வெளியில்
நினைவு செய்ய முடியாது என்று கூறுகிறார்கள். நினைவில்
இருப்பதில்லை ஆகையினால் தான் பாபாவும் கூட சில நேரங்களில்
நிகழ்ச்சி நிரலை அனுப்பி வைக்கின்றார் ஆனால் நினைவில்
அமருகிறார்களா என்ன, புத்தி இங்கே-அங்கே ஓடிக்கொண்டே இருக்கிறது.
பாபா நாராயணனுடைய தீவிர பக்தராக இருந்தார், இங்கே-அங்கே எங்கு
சென்றாலும் கூடவே நாராயணனுடைய சித்திரம் இருந்தது. பிறகு பூஜை
நேரத்தில் புத்தி இங்கே-அங்கே ஓடியது என்று பாபா தன்னுடைய
உதாரணத்தைக் கூறுகின்றார். இதிலும் கூட அப்படி நடக்கிறது.
நடக்கும்போதும்-சுற்றும்போதும் நினைவு செய்யுங் கள் என்று பாபா
கூறுகின்றார் ஆனால் நிறைய பேர் சகோதரி எங்களுக்கு நிஷ்டை (தியானம்)
செய்விக்கட்டும் என்று கூறுகிறார்கள். நிஷ்டை என்பதற்கு எந்த
அர்த்தமுமே இல்லை. பாபா எப்போதும் நினைவில் இருங்கள் என்று தான்
கூறுகின்றார், நிறைய குழந்தைகள் நிஷ்டையில் அமர்ந்து-அமர்ந்து
தியானத்தில்(டிரான்ஸ்) சென்று விடுகிறார்கள். ஞானமும்
இருப்பதில்லை, நினைவும் இருப்பதில்லை. இல்லையென்றால் தூங்கி
விழ ஆரம்பித்து விடுகிறார்கள், நிறைய பேருக்கு இது பழக்கமாகி
விட்டது. இது அல்பகால அமைதியாகி விட்டது. மீதமுள்ள நாள்
முழுவதும் அமைதியற்று இருக்கிறார்கள். நடக்கும்போதும்-
சுற்றும்போதும் பாபாவின் நினைவு செய்ய வில்லை என்றால்
பாவங்களின் சுமை எப்படி இறங்கும்? அரைக் கல்பத்தின் சுமையாக
இருக்கிறது. இதில் தான் அதிக உழைப்பு இருக்கிறது. தங்களை ஆத்மா
என்று புரிந்து கொள்ளுங் கள் மற்றும் பாபாவை நினைவு செய்யுங்கள்.
நாங்கள் இவ்வளவு நேரம் நினைவில் இருந்தோம் என்று நிறைய
குழந்தைகள் எழுதி அனுப்புகிறார்கள் ஆனால் நினைவு இருப்பதில்லை.
சார்ட்டை புரிந்து கொள்வதே இல்லை. பாபா எல்லையற்ற தந்தையாக
இருக்கின்றார். தூய்மையற்றவர் களை தூய்மையாக்குபவராக
இருக்கின்றார் எனும்போது குஷியில் இருக்க வேண்டும். நாம்
சிவபாபாவினுடையவர்கள் அல்லவா என்பது கிடையாது. நாம் தான்
பாபாவினுடையவர்களாக ஆகி விட்டோமே என்று புரிந்து கொள்கிறார்கள்
ஆனால் முற்றிலும் நினைவு செய்வதே இல்லை, இப்படியும் நிறைய பேர்
இருக்கிறார்கள். நினைவு செய்கிறார்கள் என்றால் முதல் நம்பரில்
செல்ல வேண்டும் அல்லவா. யாருக்கும் புரிய வைப்பதற்கு கூட
மிகவும் நல்ல புத்தி வேண்டும். நாம் பாரதத்தை மகிமை செய்கிறோம்.
புதிய உலகத்தில் ஆதி சனாதன தேவி-தேவதைகளின் இராஜ்யம் இருந்தது.
இப்போது பழைய உலகம் கலியுகமாகும். அது சுகதாமம், இது
துக்கதாமமாகும். பாரதம் சத்யுகமாக (கோல்டன் ஏஜ்) இருந்தபோது
இந்த தேவதைகளுடைய இராஜ்யம் இருந்தது. இவர் களுடைய இராஜ்யம்
இருந்தது என்று நாங்கள் எப்படி புரிந்து கொள்வது என்று
கேட்கிறார்கள்? இந்த ஞானம் மிகவும் அதிசயமானதாகும். யாருடைய
அதிர்ஷ்டத்தில் என்ன இருக்கிறது, யார் எந்தளவிற்கு முயற்சி
செய்கிறார்கள் என்பது பார்ப்பதற்குத் தெரிகிறது. கலியுகத்தில்
இருப்பவர்களும் மனிதர்கள் தான், சத்யுகத்தில் இருப்பவர்களும்
மனிதர்கள் தான், நடத்தையின் மூலம் நீங்கள் தெரிந்துள்ளீர்கள்.
பிறகு ஏன் அவர்களுக்கு முன் சென்று தலை வணங்குகிறீர்கள்?
இவர்களை சொர்க்கத்திற்கு எஜமானர்கள் என்று சொல்கிறீர்கள் அல்லவா.
யாராவது இறந்து விட்டார்கள் என்றால் இன்னார் சொர்க்க பதவி
அடைந்து விட்டார் என்று சொல்கிறார்கள் ஆனால் இதைக் கூட புரிந்து
கொள்வதில்லை. இந்த சமயத்தில் அனைவரும் நரகவாசிகளாவர். கண்டிப்
பாக மறுபிறவியும் இங்கு தான் எடுப்பார்கள். பாபா ஒவ்வொருவருடைய
நடத்தையையும் பார்த்துக் கொண்டிருக்கின்றார். பாபா எவ்வளவு
சாதாரண விதத்தில் யார்-யாரிடமெல்லாம் பேச வேண்டியிருக்கிறது.
பராமரிக்க வேண்டியுள்ளது. பாபா எவ்வளவு தெளிவாகப் புரிய வைக்
கின்றார். விசயம் மிகச்சரியாக இருக்கிறது என்று புரிந்தும்
கொள்கிறார்கள். இருந்தாலும் ஏன் பெரிய-பெரிய முட்களாக ஆகி
விடுகிறார்கள். ஒருவர்-மற்றவருக்கு துக்கம் கொடுப்பதினால்
முட்களாக ஆகி விடுகிறார்கள். பழக்கத்தை விடுவதே இல்லை. இப்போது
தோட்டக்காரர் பாபா மலர்களின் தோட்டத்தை உருவாக்குகின்றார்.
முட்களை மலர்களாக மாற்றிக் கொண்டிருக் கின்றார். அவருடைய வேலையே
இது தான் ஆகும். யார் தாங்களே முள்ளாக இருக்கிறார்களோ, அவர்கள்
எப்படி மலர்களை உருவாக்குவார்கள்? கண்காட்சியில் கூட யாரையும்
எச்சரிக்கையோடு அனுப்ப வேண்டியிருக்கிறது.
யார் முட்களை மலர்களாக்கும் நல்ல சேவை செய்கிறார்களோ அவர்கள்
தான் நல்ல குணங்கள் மிக்க குழந்தைகளாவர். யாரையும் முள்ளாகி
குத்துவதில்லை அதாவது யாருக்கும் துக்கம் கொடுப்பதில்லை.
ஒருபோதும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதில்லையோ அவர்கள்
தான் குணவான்கள் ஆவர். குழந்தைகளாகிய நீங்கள் மிகவும்
துல்லியமாக (தெளிவாகப்) புரிய வைக் கின்றீர்கள். இதில் யாரையும்
அவமதிக்கும் விசயமே இல்லை. இப்போது சிவஜெயந்தியும் வருகிறது.
நீங்கள் அதிகம் கண்காட்சி வைக்கின்றீர்கள். ஒரு வினாடியில்
சொர்க்க வாசியாகுங்கள் அல்லது தூய்மையற்ற கீழான நிலையிலிருந்து
தூய்மையான உயர்ந்தவர்களாக ஆகுங்கள். ஒரு வினாடியில்
ஜீவன்முக்தியை அடையுங்கள், என்று நீங்கள் சிறிய அளவிலான
கண்காட்சியில் கூட புரிய வைக்கலாம். ஜீவன்முக்தியின்
அர்த்தத்தைக் கூட புரிந்து கொள்வதில்லை. நீங்களும் கூட இப்போது
தான் புரிந்து கொள்கிறீர்கள். பாபாவின் மூலம் அனைவருக்கும்
முக்தி- ஜீவன்முக்தி கிடைக்கிறது. ஆனால் நாடகத்தையும் தெரிந்து
கொள்ள வேண்டும். அனைத்து தர்மங்களும் சொர்க்கத்திற்கு
வருவதில்லை. அவர்கள் தங்கள்-தங்கள் பிரிவுகளுக்குச் சென்று
விடுவார்கள். பிறகு அவரவர்களுடைய சமயத்தில் வந்து ஸ்தாபனை
செய்வார்கள். மரத்தில் எவ்வளவு தெளிவாக இருக்கிறது. சத்கதியை
வழங்கும் வள்ளலாக ஒரு சத்குருவை தவிர வேறு யாரும் இருக்க
முடியாது. மற்றபடி பக்தியை கற்றுக் கொடுக்கக் கூடியவர்கள்
நிறைய குருமார்கள் இருக் கிறார்கள். சத்கதியை அடையச் செய்ய
மனித குருமார்களால் முடியாது. ஆனால் புரிய வைப்பதற்கும் கூட
புத்தி வேண்டும், இதில் புத்தியின் மூலம் காரியம் செய்ய
வேண்டியுள்ளது. நாடகத்தின் விளையாட்டைப் பாருங்கள் எவ்வளவு
அதிசயமானதாக இருக்கிறது. உங்களில் கூட மிகக்குறைவானவர்களே இந்த
போதையில் இருக்கிறார்கள். நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு
நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்காரம்.
இரவு வகுப்பு 18.03.1968
நீங்கள் உண்மையில் சாஸ்திரங்களைப் பற்றிய வாத விவாதம்
செய்வதற்கான அவசியம் இல்லை. மூல விசயமே நினைவு மற்றும்
சிருஷ்டியின் ஆதி, மத்திமம், அந்திமத்தைப் புரிந்து கொள்வது
ஆகும். சக்கரவர்த்தி இராஜா ஆகவேண்டும். இந்தச் சக்கரத்தை
மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். இதன் மகிமையே ஒரு நொடியில்
ஜீவன்முக்தி என்று பாடப்படுகிறது. அரைக் கல்பம் பக்தி
நடைபெறுகிறது, ஞானம் சிறிதளவு கூட கிடையாது என்பதைக்
கேட்கும்பொழுது குழந்தை களாகிய உங்களுக்கு ஆச்சரியம் ஏற்படும்.
ஞானம் இருப்பதே தந்தையிடம். தந்தை மூலமே அறிந்து கொள்ள வேண்டும்.
இந்தத் தந்தை எவ்வளவு அசாதாரண மானவர். ஆகையால், கோடி யில்
ஒருவர் குழந்தை ஆகின்றார். அந்த ஆசிரியர்கள் இவ்வாறு
கூறமாட்டார்கள். இவரோ, நானே தந்தை, ஆசிரியர், குரு ஆவேன் என்று
கூறுகின்றார். இதை மனிதர்கள் கேட்டு ஆச்சரியப் படுகின்றனர்.
பாரதத்தைத் தாய்நாடு என்று கூறுகின்றனர். ஏனெனில், அம்மனின்
பெயர் மிகவும் புகழ் வாய்ந்தது. அம்மன் திருவிழாவும் அதிகமாக
நடைபெறுகின்றன, அம்மா என்ற வார்த்தை இனிமையானது. சிறு
குழந்தைகள் கூட தாய் மீது அன்பு செலுத்துகின்றனர் அல்லவா.
ஏனெனில், தாய் உணவு ஊட்டுவார், பருகக் கொடுப்பார், பராமரிப்பார்.
இப்பொழுது தாய்க்கு பாபாவும் தேவை அல்லவா. இந்தக் குழந்தை
தத்தெடுக் ககப்பட்ட குழந்தை. கணவன் கிடையாது. இது புதிய விசயம்
அல்லவா. பிரஜாபிதா பிரம்மா அவசியம் தத்தெடுத்திருப்பார். இந்த
அனைத்து விசயங்களையும் தந்தை வந்து குழந்தைகளாகிய உங்களுக்குப்
புரிய வைக்கின்றார். அம்மனுக்கு எவ்வளவு திருவிழா நடைபெறுகிறது,
பூஜை நடக்கிறது. ஏனெனில், குழந்தை (மம்மா) அதிக சேவை
செய்துள்ளது. மம்மா எத்தனை பேருக்கு கற்பித்திருப்பாரோ, அந்தளவு
வேறு எவரும் கற்பிக்க முடியாது. மம்மாவிற்குப் புகழ் அதிகம்,
திருவிழாக்களும் மிகப் பெரிய திருவிழாக்கள் நடைபெறுகின்றன.
தந்தை தான் வந்து படைப்பின் ஆதி, மத்திமம், அந்திமத்தின் முழு
இரகசியத்தைக் குழந்தைகளாகிய உங்களுக்குப் புரிய
வைத்திருக்கின்றார் என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள்
அறிந்துள்ளீர்கள். நீங்கள் தந்தையின் வீட்டைப் பற்றியும்
அறிந்து கொண்டீர்கள். தந்தை மீதும் அன்பு உள்ளது, வீட்டின்
மீதும் அன்பு உள்ளது. இந்த ஞானம் உங்களுக்கு இப்பொழுது
கிடைத்துள்ளது. இந்தப் படிப்பின் மூலம் எவ்வளவு வருமானம்
கிடைக்கிறது. எனவே, குஷி இருக்க வேண்டும் அல்லவா. மேலும்,
நீங்களோ முற்றிலும் சாதாரண மானவர்கள். உலகிற்குத் தெரியாது,
தந்தை வந்து இந்த ஞானம் அளிக்கின்றார். தந்தையே வந்து அனைத்து
புதுப் புது விசயங்களை குழந்தைகளுக்குக் கூறுகின்றார்.
எல்லையற்ற படிப்பின் மூலம் புதிய உலகம் உருவாகிறது. பழைய உலகின்
மீது வைராக்கியம் வருகிறது. குழந்தைகளாகிய உங்களுக்குள்
ஞானத்தின் குஷி உள்ளது. தந்தை மற்றும் வீட்டை நினைவு செய்ய
வேண்டும். அனைவரும் வீட்டிற்குச் செல்லத்தான் வேண்டும்.
குழந்தைகளே, நான் உங்களுக்கு முக்தி ஜீவன்முக்தியின் ஆஸ்தி
கொடுப்பதற்காக வந்திருக்கின்றேன், பிறகு ஏன்
மறந்துவிடுகிறீர்கள்? நான் உங்களுடைய எல்லையற்ற தந்தை ஆவேன்.
இராஜயோகம் கற்பிப்பதற்காக வந்துள்ளேன். எனில், நீங்கள்
ஸ்ரீமத்படி நடக்கமாட்டீர்களா என்ன? பிறகு, மிகுந்த நஷ்டம்
ஏற்பட்டுவிடும். இது எல்லையற்ற நஷ்டம் ஆகும். தந்தையின் கரத்தை
விட்டுவிட்டால் வருமானத்தில் நஷ்டம் ஏற்பட்டுவிடும் என்று தந்தை
அனைவருக்கும் கூறுவார் அல்லவா. நல்லது. குட்நைட். ஓம்சாந்தி.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) ஒரு பாபாவின் நினைவின் மூலம் மிகவும் அன்பானவர்களாக ஆக
வேண்டும். நடக்கும்போதும் சுற்றும்போதும் கர்மம் செய்து கொண்டே
நினைவில் இருப்பதற்கான பயிற்சி செய்ய வேண்டும். பாபாவின் நினைவு
மற்றும் குஷியில் முகம் மலர்ந்திருக்க வேண்டும்.
2) ஒவ்வொரு அடியிலும் ஈஸ்வரிய வழிப்படி நடந்து ஒவ்வொரு
காரியத்தையும் செய்ய வேண்டும். தங்களுடைய கர்வத்தை(தேக
அபிமானத்தின் போதையை) காட்டக் கூடாது. எந்தவொரு தலைகீழான
காரியத்தையும் செய்யக் கூடாது. குழப்பமடையக் கூடாது.
வரதானம்:
சாதாரண செயல்கள் செய்தாலும் உயர்ந்த ஸ்திதியில் நிலைத்திருக்கக்
கூடிய சதா டபுள் லைட் ஆகுக.
பாபா சாதாரண உடலில் வருகின்றார், நீங்கள் பேசுவது போன்று தான்
பேசுகிறார், அப்படியே தான் நடந்து கொள்கிறார், செயல்களும்
சாதாரணமாக இருக்கிறது. ஆனால் ஸ்திதி உயர்வாக இருக்கிறது. அதே
போன்று குழந்தைகளின் ஸ்திதியும் சதா உயர்வாக இருக்க வேண்டும்.
டபுள் லைட் ஆகி உயர்ந்த ஸ்திதியில் நிலைத்திருந்து எந்த ஒரு
சாதாரண காரியமும் செய்யுங்கள். சதா இந்த நினைவு இருக்க வேண்டும்
- சிரேஷ்ட செயல் செய்வதற்காக வந்திருக்கிறேன்,
அவதரித்திருக்கிறேன், அவதாரம் எடுத்திருக்கிறேன். அப்போது
சாதாரண செயல் அலௌகீக செயலாக மாறிவிடும்.
சுலோகன்:
ஆன்மீக திருஷ்டி-விருத்திக்கான பயிற்சி செய்பவர்கள் தூய்மையை
எளிதாக தாரணை செய்ய முடியும்.
தனது சக்திசாலியான மனதின் மூலம் சக்தி கொடுக்கும் சேவை
செய்யுங்கள்:
எந்த அளவிற்கு தன்னை மன சேவையில் பிசியாக வைத்துக் கொள்வீர்களோ,
அந்த அளவிற்கு மாயாஜீத் ஆகிவிடுவீர்கள். தன்னை உணர்ச்சி
மிக்கவராக ஆக்கிக் கொள்ளாதீர்கள். ஆனால் மற்றவர்களுக்கும் சுப
பாவனை மற்றும் சுப விருப்பத்தின் மூலம் மாற்றக் கூடிய சேவை
செய்யுங்கள். பாவனை மற்றும் ஞானம், அன்பு மற்றும் யோகா இரண்டும்
சமநிலையில்இருக்க வேண்டும். நன்மை செய்பவர்களாக
ஆகியிருக்கிறீர்கள், இப்பொழுது உலகிற்கு நன்மை செய்பவர்களாக (விஷ்வ
கல்யாணகாரி) ஆகுங்கள்.