24-01-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! பாபா உங்களுக்கு
என்ன பாடம் படிக்க வைக்கின்றாரோ அதை புத்தியில் வைத்து
அனைவரையும் படிக்க வைக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் பாபா
மற்றும் சிருஷ்டி சக்கரத்தின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும்.
கேள்வி:
ஆத்மா சத்யுகத்திலும் நடிக்கிறது,
கலியுகத்திலும் நடிக்கிறது; ஆனால் வித்தியாசம் என்ன?
பதில்:
சத்யுகத்தில் நடிக்கும் போது
எந்த ஒரு பாவ கர்மமும் இல்லை. ஒவ்வொரு செயலும் அங்கே நடுநிலை
கர்மமாக இருக்கிறது. ஏனென்றால் இராவணன் இல்லை. பிறகு
கலியுகத்தில் நடிக்கும் போது ஒவ்வொரு செயலும் விகர்மம் அல்லது
பாவம் ஆகிவிடுகிறது. ஏனென்றால் இங்கே விகாரங்கள் இருக்கிறது.
இப்போது நீங்கள் சங்கமயுத்தில் இருக்கிறீர்கள். உங்களுக்கு
அனைத்து ஞானமும் இருக்கிறது.
ஓம் சாந்தி.
நாம் பாபா முன்பு அமர்ந்திருக்கிறோம் என்பது குழந்தைகளுக்குத்
தெரியும். குழந்தைகள் என் முன்பு இருக்கின்றனர் என பாபாவும்
அறிகின்றார். பாபா நமக்குக் கற்றுத்தரு கிறார். அதை பிறருக்குக்
கொடுக்க வேண்டும் என நீங்கள் அறிகிறீர்கள். முதன் முதலில்
பாபாவின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். ஏனென்றால் அனைவரும்
பாபாவையும் பாபா வின் போதனைகளையும் மறந்திருக்கிறார்கள்.
இப்போது பாபா என்ன படிக்க வைக்கிறாரோ இந்த படிப்பு 5000
வருடங்களுக்குப் பிறகு கிடைக்கும். இந்த ஞானம் வேறு யாருக்கும்
இல்லை. முக்கியமானது பாபாவின் அறிமுகமாகும். பிறகு நாம்
அனைவரும் சகோதரர்கள் என்பதைப் புரிய வைக்க வேண்டும். முழு
உலகத்தில் இருக்கும் அனைத்து ஆத்மாக்களும் தங்களுக்குள் சகோதரர்
களே! அனைவரும் தங்களுக்குக் கிடைத்த நடிப்பை இந்த சரீரத்தின்
மூலம் நடிக்கிறார்கள். இப்போது பாபா வந்திருக்கிறார், புதிய
உலகத்திற்கு அழைத்து செல்வதற்காக. அதற்கு சொர்க்கம் என்று பெயர்.
ஆனால் நாம் அனைத்து சகோதரர்களும் பதீதமாக இருக்கின்றோம்.
ஒருவரும் தூய்மையாக இல்லை. அனைத்து பதீதமானவர்களையும்
தூய்மையாக மாற்றக்கூடியவர் ஒரு தந்தை தான். இதுவே பதீத, விகார,
கீழான இராவணனின் உலகம் ஆகும். இராவணன் என்பதன் பொருள்
பெண்களுக்குள்ளும் 5 விகாரங்கள் இருக்கின்றன. ஆண்களுக்குள்ளும்
5 விகாரங்கள் இருக்கின்றன என்பதாகும். பாபா மிகவும் எளிதாகப்
புரிய வைக்கின்றார். நீங்களும் இவ்வாறு புரிய வைக்கலாம். எனவே
முதன் முதலில் ஆத்மாக்களாகிய நமது தந்தை அவர் என புரிய
வையுங்கள். நாம் அனைவரும் சகோதரர்கள் என எழுதுங்கள். நம்முடைய
தந்தை ஒருவரே. இது சரியா? என கேளுங்கள். நம் அனைத்து
ஆத்மாக்களுக்கும் அவர் பரமாத்மா, அவருக்கு தந்தை என்று பெயர்.
இதை நன்கு புத்தியில் பதிய வைத்தால் சர்வவியாபி என்பது முதலில்
நீங்கிவிடும். முதலில் தந்தையைப் பற்றி கல்வி புகட்ட வேண்டும்.
இதை நன்கு எழுதுங்கள் என்று சொல்லுங்கள். முன்பு சர்வவியாபி
என்றேன், இப்போது சர்வவியாபி இல்லை என புரிந்துக் கொண்டேன்.
நாம் அனைவரும் சகோதரர்கள்! அனைத்து ஆத்மாக்களும் இறை தந்தையே
பரமதந்தை என கூறுகிறார்கள். முதலில் நாம் ஆத்மா, பரமாத்மா இல்லை
என்ற நிச்சயம் இருக்க வேண்டும். நமக்குள் பரமாத்மா இல்லை.
அனைவருக்குள்ளும் ஆத்மா தான் இருக்கிறது. ஆத்மா உடலின்
ஆதாரத்தில் நடிக்கிறது. இதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். சரி,
அந்த தந்தை சிருஷ்டியின் முதல், இடை, கடை ஞானத்தைக்
கூறுகின்றார். வேறு யாரும் இந்த சிருஷ்டியின் ஆயுள் எவ்வளவு
என்று அறியவில்லை. பாபா தான் ஆசிரியர் ரூபத்தில் அமர்ந்து
கற்பிக்க வைக்கிறார். லட்சக்கணக்கான வருடங்கள் என்பது கிடையாது.
இந்த சக்கரம் அனாதி, துல்லியமாக நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.
இதை அறிந்துக் கொள்ள வேண்டும். சத்யுகம் திரேதாயுகம்
முடிந்துவிட்டது. குறித்துக் கொள்ளுங்கள். அதற்குத் தான்
சொர்க்கம் மற்றும் பாதி சொர்க்கம் என்று பெயர். அங்கே தேவி
தேவதைகளின் இராஜ்யம் நடக்கிறது. அங்கு 16 கலை, அங்கே 14 கலை.
மெல்ல மெல்ல கலைகள் குறைந்துக் கொண்டே போகிறது. உலகம்
நிச்சயமாக பழைய தாகும் அல்லவா? சத்யுகத்தின் பிரபாவம் மிகவும்
பெரியது, உயர்ந்தது. பெயரே சொர்க்கம், ஹெவன், புது உலகம்......
அதனுடைய மகிமையைத் தான் சொல்ல வேண்டும். புது உலகத்தில் ஒரேயொரு
ஆதிசனாதன தேவி தேவதா தர்மம் இருக்கிறது. முதலில் பாபாவின்
அறிமுகம் பிறகு சத்யுகத்தின் அறிமுகம் கொடுக்கப்படுகிறது.
நிச்சயத்தை ஏற்படுத்துவதற்கான படங்கள் கூட உங்களிடத்தில்
இருக்கிறது. இந்த சிருஷ்டி சக்கரம் சுழன்றுக் கொண்டிருக்கிறது.
சத்யுகத்தில் லஷ்மி நாராயணனின் இராஜ்யம், திரேதாவில் இராமர்
சீதையின் இராஜ்யம் இருந்தது. இது அரைக் கல்பம் ஆயிற்று. இரண்டு
யுகம் கடந்துவிட்டது. பிறகு துவாபர கலியுகம் வருகிறது. துவாபர
யுகத்தில் இராவணனின் இராஜ்யம். தேவதைகள் வாம மார்க்கத்தில்
செல்கிறார்கள் என்றால், விகாரத்தின் முறைகள் உருவாகிறது.
சத்யுகம் திரேதாவில் அனைவரும் நிர்விகாரிகளாக இருக்கிறார்கள்.
ஒரேயொரு ஆதிசனாதன தேவி தேவதா தர்மம் இருக்கிறது. படங்களையும்
காண்பிக்க வேண்டும், வாய் மூலமாகவும் புரிய வைக்க வேண்டும்.
பாபா நமக்கு ஆசிரியராக இருந்து இவ்வாறு படிக்க வைக்கிறார். பாபா
அவருடைய அறிமுகத்தை அவரே வந்து கொடுக்கிறார். பதீதர்களை
பாவனமாக்குவதற்காக நான் வருகிறேன் என்றால் நிச்சயம் எனக்கு உடல்
வேண்டும் என அவரே கூறுகிறார். இல்லை என்றால் எப்படி பேச
முடியும்? நான் சைத்தன்ய மானவன், சத்தியமானவன், மேலும் மரணம்
அற்றவன். ஆத்மா சதோ, ரஜோ, தமோவில் வருகிறது. ஆத்மா தான்
பாவனமாகவும், பதீதாகவும் மாறுகிறது. இதற்கு பதீத ஆத்மா, பாவன
ஆத்மா என்று பெயர். ஆத்மாவில் தான் அனைத்து சம்ஸ்காரங்களும்
இருக்கிறது. கடந்த கால கர்மம் அல்லது விகர்மத்தின் சம்ஸ்காரத்தை
ஆத்மா எடுத்து செல்கிறது. சத்யுகத்தில் விகர்மம் நடப்பதில்லை
கர்மம் செய்கிறார்கள். நடிப்பை நடிக்கிறார்கள். ஆனால் அந்த
கர்மம் அகர்மம் (நடுநிலையான கர்மம்) ஆகிவிடுகிறது. கீதையில்
கூட வார்த்தைகள் இருக்கின்றது. இப்போது நீங்கள் நடை முறையில்
புரிந்துக் கொள்கிறீர்கள். பழைய உலகத்தை புதிய உலகமாக
மாற்றுவதற்கு பாபா வந்திருக்கிறார். எங்கே செயல்கள் நடுநிலையான
செயல்களாக விளங்குமோ அதுவே சத்யுகம் ஆகும். பிறகு எங்கே அனைத்து
கர்மங்களும் விகர்மமாக இருக்கின்றதோ அதற்கு கலியுகம் என்று
பெயர். இப்போது நீங்கள் சங்கமயுத்தில் இருக்கின்றீர்கள்.
இருபுறத்தின் விஷயங்களையும் புரிய வைக்கிறார். சத்யுகம்,
திரேதாயுகம் பவித்திரமான யுகம் ஆகும். அங்கே எந்த பாவ கர்மமும்
நடப்ப தில்லை. இராவண இராஜ்யம் ஆரம்பம் ஆகும்போது தான் பாவங்கள்
நடைபெறுகின்றன. அங்கே விகாரங்களின் பெயர் கிடையாது. இராம
இராஜ்யம் மற்றும் இராவண இராஜ்யத்தின் படங்கள் எதிரில்
இருக்கிறது. இது ஆன்மிக கல்வி என்று பாபா புரிய வைக்கிறார்.
பாபாவைத் தவிர வேறு யாருக்கும் தெரியவில்லை. இந்த கல்வியை
உங்கள் புத்தியில் வைத்துக் கொள்ள வேண்டும். பாபாவும்
நினைவிற்கு வருகிறார். சக்கரமும் புத்தியில் நினைவிற்கு
வருகிறது. ஒரு நொடியில் அனைத்து நினைவுகளும் வருகிறது. வர்ணனை
செய்வது தாமதம் ஆகிறது. இவற்றின் மூன்று ஃபவுண்டேன் இருக்கிறது.
விதை மற்றும் மரம் நினைவில் வரும் படியாக மரம் இருக்கிறது.
இந்த விதை இந்த மரத்தினுடையது. இதிலிருந்து இந்த பழம்
கிடைக்கிறது. இந்த எல்லையற்ற மனித சிருஷ்டி என்ற மரம் எப்படி
இருக்கிறது என்கிற ரகசியத்தை நீங்கள் புரிய வைக்கிறீர்கள்.
அரைக் கல்பத்திற்கு இராஜ்யம் எப்படி நடக்கும், இராவண இராஜ்யம்
வரும் போது சத்யுக திரேதா யுகத்தினரே துவாபர யுகத்தினராக
மாறுகின்றார்கள் என்பது அனைத்தும் குழநதைகளுக்கு புரிய
வைக்கப்பட்டிருக்கிறது. மரம் வளர்ச்சி அடைந்துக் கொண்டே
இருக்கிறது. அரைக் கல்பத்திற்குப் பிறகு இராவண இராஜ்யம்
உருவாகிறது. விகாரி ஆகிவிடுகிறார்கள். பாபாவிடமிருந்து கிடைத்த
சொத்து அரை கல்பத்திற்கு செல்கிறது. ஞானத்தைக் கூறி சொத்து
கொடுத்தார். அந்த பலனை அனுபவித்தனர். அதாவது சத்யுகம்
திரேதாவில் சுகம் பெற்றனர். அதற்கு சுகதாமம் சத்யுகம் என்று
பெயர். அங்கே துக்கம் ஏற்படவில்லை. எவ்வளவு எளிதாகப் புரிய
வைக்கிறார்கள். ஒருவருக்குப் புரிய வைத்தாலும் அல்லது
பலருக்குப் புரிய வைத்தாலும் புரிந்துக் கொள்கிறாரா, ஆம், ஆம்
என்கிறாரா என்று கவனம் கொடுக்க வேண்டும். குறித்துக்
கொள்ளுங்கள், ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள் என்று
சொல்லுங்கள். எந்த விஷயம் யாருக்குத் தெரியவில்லையோ அதை நாம்
புரிய வைக்கின்றோம். நீங்கள் எதையும் புரிந்துக் கொள்ளவில்லை
என்றால் பிறகு என்ன கேட்டீர்கள்?
பாபா இந்த எல்லையற்ற மரத்தின் ரகசியத்தைப் புரிய வைக்கிறார்.
இந்த ஞானம் இப்போது நீங்கள் புரிந்துக் கொள்கிறீர்கள். நீங்கள்
84 பிறவிகளின் சக்கரத்தில் எப்படி வருகிறீர்கள் என பாபா புரிய
வைக்கிறார். இதை நன்கு குறித்துக் கொண்டு இதைப் பற்றி
சிந்தியுங்கள். டீச்சர் எப்படி கட்டுரை கொடுக்கிறார்கள் என்றால்
வீட்டில் சென்று ரிவைஸ் செய்து வருவார்கள் அல்லவா? நீங்களும்
இந்த ஞானத்தைக் கொடுக்கிறீர்கள், பிறகு என்ன நடக்கிறது என
பாருங்கள். கேட்டுக் கொண்டே இருங்கள். ஒவ்வொரு விஷயத்தையும்
நன்கு புரிய வையுங்கள். அப்பா, டீச்சரின் கடமையைப் புரிய வைத்து
பிறகு குருவைப் பற்றி புரிய வையுங்கள். பதீதர்களாகிய எங்களை
பாவன மாக்குங்கள் என்று அவரை அழைத்தீர்கள். ஆத்மா தூய்மையாகிறது
என்றால் சரீரமும் தூய்மையாகக் கிடைக்கிறது. தங்கத்தைப் போன்று
நகை உருவாகிறது. 24 கேரட் தங்கம் எடுப்பார்கள். கலப்படம்
செய்யவில்லை என்றால் நகையும் சதோபிரதானமாக இருக்கும். கலப் படம்
செய்வதால் தமோபிரதானமாக ஆகியிருக்கிறது. முதன் முதலில் பாரதம்
24 கேரட் சுத்த தங்கப் பறவையாக இருந்தது. அதாவது மிக தூய்மையான
புது உலகமாக இருந்தது. பிறகு அழுக்காகிவிட்டது. அந்த தந்தை தான்
புரிய வைக்கின்றார். மேலும் வேறு எந்த மனித குருக் களும்
அறியவில்லை. வந்து எங்களை தூய்மையாக்குங்கள் என அழைக்கிறார்கள்.
குருவின் வேலையாகும். வயோதிக நிலையை அடையும்போது மனிதர்கள்
குருவை ஏற்றுக் கொள்கிறார் கள். சப்தத்திலிருந்து விடுபட்ட
இடத்திற்கு நிராகார உலகம் என்று பெயர். அங்கே ஆத்மாக்கள்
நிலையாக இருக்கின்றன. இது ஸ்தூல உலகம் ஆகும். இரண்டினுடைய
சந்திப்பாகும். அங்கே சரீரம் இல்லை. அங்கே எந்த செயலும்
நடப்பதில்லை. பாபாவிற்குள் அனைத்து ஞானமும் இருக்கிறது
நாடகத்தின் படி அவருக்கு ‘நாலெட்ஜ்ஃபுல்’ (ஞானம் நிறைந்தவர்)
என்று பெயர். அவர் சைத்தன்ய ஆனந்த சொரூபமாக இருக்கும்
காரணத்தால் அவருக்கு நாலெட்ஜ்ஃபுல் என்று கூறப்படுகிறது. பதீத
பாவனர், நாலெட்ஜ்ஃபுல் சிவபாபா என்று அழைக்கிறார்கள். அவருடைய
பெயர் எப்போதும் சிவன் தான். மற்ற ஆத்மாக்கள் அனைவரும்
நடிப்பதற்காக வருகிறார்கள். வெவ்வேறு பெயரை தாரணை செய்கிறார்கள்.
தந்தையை அழைக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு எதுவும்
புரியவதில்லை. நிச்சயமாக பாக்கியசாலி ரதம் இருக்கும்.
அவருக்குள் பாபா பிரவேசம் ஆகி உங்களை பாவன உலகத்திற்கு
அழைத்துச் செல்ல போகிறார். இனிமையிலும் இனிமையான குழந்தைகளே!
யார் பல பிறவிகளை எடுத்து கடைசியில் உள்ளாரோ, முழுமையாக 84
பிறவிகளை எடுத்திருக்கிறாரோ நான் அவருடைய உடலில் வருகிறேன் என
பாபா புரிய வைக்கிறார். முதல் நம்பரில் ஸ்ரீகிருஷ்ணர் வருகிறார்.
அவரே புது உலகத்திற்கு அதிபதி. அவரே கீழே இறங்குகிறார்.
தங்கத்திலிருந்து வெள்ளி, செம்பு, இரும்பு யுகத்திற்கு
வந்துவிடுகிறார். இப்போது மீண்டும் நீங்கள் இரும்பிலிருந்து
தங்கமாக மாறிக் கொண்டிருக்கிறீர்கள். என்னை மட்டும் தந்தையை
மட்டும் நினையுங்கள் என்று பாபா கூறுகிறார். யாருக்குள்
பிரவேசம் ஆகிறாரோ அவருடைய ஆத்மாவில் சிறிதும் ஞானம் கிடையாது.
இவருக்குள் நான் பிரவேசம் ஆகிறேன். ஆகவே இவருக்கு பாக்கியசாலி
ரதம் என்று கூறப்படுகிறது. இல்லை என்றால் அனைவரையும் விட
உயர்ந்தவர் இந்த இலஷ்மி நாராயணன். இவருக்குள் பிரவேசம் ஆக
வேண்டும். ஆனால் அவர்களுக்குள் பரமாத்மா பிரவேசம் ஆவதில்லை.
ஆகவே, அவர்களை பாக்கியசாலி ரதம் என்று கூற முடியாது. ரதத்தில்
வந்து பதீதமானவர்களை பாவனமாக மாற்ற வேண்டும். எனவே நிச்சயம்
கலியுகம் தமோபிரதானமாக இருக்கும் அல்லவா? நான் பல பிறவிகளின்
கடைசியில் வருகிறேன் என்று அவரே கூறுகிறார். கீதையில் கூட இந்த
வார்த்தைகள் துல்லியமாக உள்ளது. கீதைதான் அனைத்து
சாஸ்திரங்களின் தாய் என கூறப்படுகிறது. இந்த சங்கமயுகத்தில்
தான் தந்தை வந்து பிராமண மற்றும் தேவதா குலத்தை ஸ்தாபனை
செய்கிறார். பல பிறவிகளின் கடைசியில் அதாவது சங்கமயுகத்தில்
தான் வருகிறார். நான் விதை வடிவமாக இருக்கிறேன் என பாபா
கூறுகிறார். கிருஷ்ணரோ சத்யுகத்தின் வாசியாவார். அவரை வேறு
எங்கும் பார்க்க முடியாது. மறுபிறவி எடுக்கும் போது பெயர்,
உருவம், தேசம், காலம் அனைத்தும் மாறிவிடுகிறது. தோற்றமே
மாறிவிடுகிறது. முதலில் சிறிய குழந்தை அழகாக இருக்கிறது. பிறகு
பெரியதாகிறது. பிறகு அது சரீரத்தை விட்டு இன்னொரு சிறிய உடலை
எடுக்கிறது. இது ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட விளையாட்டு.
நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இன்னொரு சரீரத்தை
எடுத்த பிறகு அவரை கிருஷ்ணர் என்று கூற முடியாது. வேறு உடலின்
பெயர் போன்றவை வேறாக இருக்கும். நேரம், தோற்றம், நாள், தேதி
அனைத்தும் மாறி விடுகிறது. உலகத்தின் வரலாறு, புவியியல்
அப்படியே ரிபீட் ஆகும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த நாடகம்
ரிபீட் ஆகிக் கொண்டிருக்கிறது. சதோ, ரஜோ, தமோவில் வர வேண்டும்.
சிருஷ்டியின் பெயர், யுகத்தின் பெயர் அனைத்தும் மாறிக்
கொண்டேயிருக்கிறது. இப்போது இது சங்கமயுகம் ஆகும். நான்
சங்கமத்தில் தான் வருகிறேன். நான் உங்களுக்கு முழு உலகின்
வரலாறு புவியிலின் உண்மையைக் கூறுகிறேன். ஆரம்பத்திலிருந்து
கடைசி வரை வேறு எதையும் அறியவில்லை. சத்யுகத்தின் ஆயுள் எவ்வளவு
என்பது தெரியாத காரணத்தால் லட்சக்கணக்கான வருடங்கள் என
கூறுகிறார்கள். இப்போது உங்களுடைய புத்தியில் அனைத்து
விஷயங்களும் இருக்கிறது. தந்தை தந்தையாகவும், ஆசிரியராகவும்,
சத்குருவாகவும் இருக்கிறார் என்பதை நீங்கள் உள்ளுக்குள்
உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அவர் மீண்டும் சதோபிரதானம்
ஆவதற்கான நல்ல வழிமுறைகளைக் கூறுகிறார். தேகம் உட்பட தேகத்தின்
அனைத்து தர்மங்களையும் விட்டு விட்டு தன்னை ஆத்மா என உணருங்கள்
என கீதையில் கூட இருக்கிறது. திரும்ப தன்னுடைய வீட்டிற்கு
நிச்சயம் போக வேண்டும். பக்தி மார்க்கத்தில் பகவானிடம்
செல்வதற்காக எவ்வளவோ உழைக்கிறார்கள். அது முக்திதாமம்.
கர்மத்திலிருந்து விடுபட்ட இடமாகும். நாம் நிராகார
உலகத்திற்குச் சென்று அமர் கின்றோம். நடிப்பவர்கள் வீட்டிற்குச்
சென்று விட்டால் நடிப்பிலிருந்து விடுபட்டு விட்டனர். அனைவரும்
நாம் முக்தியைப் பெற வேண்டும் என விரும்புகிறார்கள். மோட்சம்
யாருக்கும் கிடைக்காது. இந்த நாடகம் அனாதி அழிவற்றதாகும். சிலர்
இந்த நடிப்பில் வருதல், போதல் எங்களுக்குப் பிடிக்கவில்லை என்று
கூறலாம். ஆனால் இதில் ஒன்றும் செய்ய முடியாது. இந்த அனாதி
நாடகம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஒருவரும் மோட்சத்தை அடைய
முடியாது. அது அனைத்தும் பலவிதமான மனித வழிகள் ஆகும். இது
சிரேஷ்டமாவதற்கான ஸ்ரீமத் ஆகும். கிருஷ்ண தேவதா வைகுண்டத்தின்
இளவரசன் ஆவார். அவர் இங்கே எப்படி வருவார்? அவர் கீதையைக்
கூறவில்லை. சிவனுக்கு முன்பு சென்று எங்களுக்கு முக்தி
அளியுங்கள் என்று கூறுகிறார்கள். அவர் ஒருபோதும் ஜீவன்
முக்தியிலோ, ஜீவன் பந்தனத்திலோ வருவதில்லை. ஆகையால் தான் முக்தி
அளியுங்கள் என அவரை அழைக்கிறார்கள். ஜீவன் முக்தியும் அவரே
கொடுக்கிறார். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு
நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. நாம் அனைவரும் ஆத்மாக்கள் என்ற ரூபத்தில் சகோதரர்கள், இந்த
பாடத்தை உறுதி படுத்திக் கொள்ள வேண்டும். உறுதிப்படுத்தவும்
வேண்டும். தனது சம்ஸ்காரங்களை நினை வினால் சம்பூரண தூய்மையாக்க
வேண்டும்.
2. 24 கேரட் உண்மையான தங்கமாக (சதோபிரதானம்) மாறுவதற்கு
கர்மம்-அகர்மம்- விகர்மத்தின் ஆழமான விளைவுகளை புத்தியில்
வைத்து எந்த ஒரு விகர்மமும் இப்போது செய்யக் கூடாது.
வரதானம்:
பயத்தின் நடனத்தை விடுத்து சதா குஷியின் நடனம் ஆடக்கூடிய
மாஸ்டர் ஞானம் நிறைந்தவர் ஆகுக.
எந்த குழந்தைகள் மாஸ்டர் ஞானம் நிறைந்தவர்களாக இருக்கின்றார்களோ,
அவர்கள் ஒரு போதும் பயத்தின் நடனம் ஆடமுடியாது. ஏணிப்படியில்
நொடியில் கீழே இறங்குவது, நொடியில் மேலே ஏறுவது என்ற இந்த
சமஸ்காரத்தை இப்பொழுது மாற்றிக் கொண்டீர்கள் என்றால் மிகவும்
வேகமாகச் செல்வீர்கள். கிடைத்திருக்கின்ற அதிகாரத்தை, ஞானத்தை,
பரிவாரத்தின் சகயோகத்தை மட்டும் பயன்படுத்துங்கள், தந்தையின்
கையோடு கை கோர்த்து நடந்து சென்றீர்கள் என்றால் குஷியின் நடனம்
ஆடிக்கொண்டே இருப்பீர்கள், பயத்தின் நடனம் ஆடமுடியாது. ஆனால்,
எப்பொழுது மாயாவின் கையைப் பிடிக்கின்றீர்களோ, அப்பொழுது அந்த
நடனம் ஆடுகின்றீர்கள்.
சுலோகன்:
யாருடைய சங்கல்பம் மற்றும் கர்மம் மகானாக இருக்கின்றதோ, அவர்களே
மாஸ்டர் சர்வசக்திவான் ஆவார்கள்.
அவ்யக்த இசாரே: இந்த அவ்யக்த மாதத்தில் பந்தனத்திலிருந்து
விடுபட்டு ஜீவன்முக்தி ஸ்திதியின் அனுபவம் செய்யுங்கள்
மாஸ்டர் திரிகாலதரிசி ஆகி, ஒவ்வொரு கர்மம், ஒவ்வொரு சங்கல்பம்
செய்யுங்கள் மற்றும் வார்த்தை பேசுங்கள், அப்பொழுது எந்தவொரு
கர்மமும் வீணானதாக மற்றும் அர்த்தமற்றதாக ஆகமுடியாது.
திரிகாலதரிசி அதாவது சாட்சி நிலையில் நிலைத்திருந்து, இந்த
கர்மேந்திரியங்கள் மூலம் கர்மம் செய்தீர்கள் என்றால்
கர்மத்திற்கு வசமாகமாட்டீர்கள். சதா கர்மம் மற்றும் கர்மத்தின்
பந்தனத்தில் இருந்து விடுபட்டவராகி தன்னுடைய உயர்ந்த நிலையை
அடைவீர்கள்.