24-03-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே - இந்த ஞானம் உங்களை
குளிர்விக்கிறது, இந்த ஞானத்தின் மூலம் காமம்-கோபத்தின் தீ
அணைந்து விடுகிறது, பக்தியின் மூலம் அந்த தீ முடிவதில்லை
கேள்வி:
நினைவில் முக்கியமான முயற்சி
என்ன?
பதில்:
பாபாவின் நினைவில் அமரும்போது
தேகம் கூட நினைவில் வரக்கூடாது. ஆத்ம-அபிமானியாக ஆகி, பாபாவை
நினைவு செய்யுங்கள், இது தான் உழைப்பாகும். இதில் தான் தடை
ஏற்படுகிறது. ஏனென்றால், அரைக்கல்பம் தேக-அபிமானிகளாக
இருந்துள்ளீர்கள். பக்தி என்றால் தேகத்தின் நினைவாகும்.
ஓம் சாந்தி.
நினைவு செய்வதற்கு தனிமை அதிகம் தேவை என்பதை குழந்தைகளாகிய
நீங்கள் தெரிந்துள்ளீர்கள். எந்தளவிற்கு நீங்கள் தனிமையில்
அல்லது அமைதியில் பாபாவின் நினைவில் இருக்க முடிகிறதோ
அந்தளவிற்கு கூட்டத்தில் இருக்க முடியாது. பள்ளியில் கூட
குழந்தைகள் படிக்கிறார்கள் என்றால், தனிமையில் சென்று
படிக்கிறார்கள். இதில் கூட தனிமை வேண்டும். நடைப்பயிற்சி செய்ய
செல்கிறீர்கள் என்றால் கூட அதிலும் கூட நினைவு யாத்திரை
முக்கிய மாகும். படிப்பு முற்றிலும் சகஜமாகும். ஏனென்றால்
அரைக்கல்பம் மாயையின் இராஜ்யத்தில் இருந்ததினால் தான் நீங்கள்
தேக-அபிமானிகளாக ஆகிவிட்டீர்கள். முதன்-முதலான எதிரியே
தேக-அபிமானம் தான். பாபாவை நினைவு செய்வதற்குப் பதிலாக தேகத்தை
நினைவு செய்து விடுகிறீர்கள். இதனை தேகத்தின் அகங்காரம் என்று
சொல்லப்படுகிறது. இங்கே ஆத்ம-அபிமானி களாக ஆகுங்கள் என்று
குழந்தைகளாகிய உங்களுக்கு சொல்லப்படுகிறது, இதில் தான் உழைப்பு
தேவைப்படுகிறது. இப்போது பக்தி விலகி விட்டது. பக்தி சரீரத்தின்
மூலம் தான் நடக்கிறது. தீர்த்தங்கள் போன்றவற்றிற்கு சரீரத்தை
கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது. தரிசனம் செய்வது, இதை-அதை
செய்வது என்று செல்கிறது. சரீரம் செல்ல வேண்டியுள்ளது. இங்கே
நீங்கள், நான் ஆத்மா என்று சிந்தனை செய்ய வேண்டும், நாம்
பரமபிதா பரமாத்மாவை நினைவு செய்ய வேண்டும். அவ்வளவு தான்.
எந்தளவிற்கு நினைவு செய்வீர்களோ, அந்தளவிற்கு பாவம் அழிந்து
கொண்டே செல்லும். பக்தி மார்க்கத்தில் ஒருபோதும் பாவம்
அழிவதில்லை. யாராவது வயதான வர்கள் இருக்கிறார்கள் என்றால்,
அவர்களுக்குள், நாம் பக்தி செய்யவில்லை என்றால் நஷ்டம் ஏற்படும்,
நாஸ்திகர்களாகி விடுவோம் என்ற தவறான எண்ணம் இருக்கிறது. பக்தி
என்பது தீ பிடித்ததைப் போல் இருக்கிறது மற்றும் ஞானத்தில்
குளுமை இருக்கிறது. இதில் காமம் கோபத் தின் தீ அழிந்து
விடுகிறது. பக்தி மார்க்கத்தில் மனிதர்கள் எவ்வளவு பாவனை
வைக்கிறார் கள், உழைக்கிறார்கள். பத்ரிநாத்திற்குச்
செல்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம், மூர்த்தியின் (சிலை)
காட்சியைப் பார்த்தார்கள் பிறகு என்ன! உடனே பாவனை உருவாகி
விடுகிறது, பிறகு பத்ரிநாத்தைத் தவிர வேறு யாருடைய நினைவும்
புத்தியில் இருப்பதில்லை. முன்பெல்லாம் நடந்தே செல்வார்கள்.
நான் அல்ப காலத்திற்கு மன ஆசைகளைப் பூர்த்தி செய்து
விடுகின்றேன், காட்சிகளை ஏற்படுத்துகின்றேன், என்று பாபா
கூறுகின்றார். மற்றபடி நான் இவைகளின் மூலம் கிடைப்பதில்லை. நான்
இல்லாமல் ஆஸ்தி கிடைக்குமா என்ன? உங்களுக்கு ஆஸ்தி என்னிட
மிருந்து தான் கிடைக்கும் அல்லவா? இவர்கள் அனைவரும்
தேகதாரிகளாவார்கள். ஆஸ்தி ஒரு பாபாவிடமிருந்து தான் கிடைக்கிறது,
மற்றபடி இருக்கின்ற ஜடம் அல்லது உயிருள்ள அனைத்தும்
படைப்புகளாகும். படைப்பிடமிருந்து ஒருபோதும் ஆஸ்தி கிடைக்க
முடியாது. தூய்மையற்றவர் களை தூய்மையாக்கக் கூடியவர் ஒரு பாபாவே
ஆவார். குமாரிகள் சங்கதோஷத்திலிருந்து அதிகம் பாதுகாத்துக்
கொள்ள வேண்டும். இந்த தூய்மையற்ற தன்மையினால் நீங்கள்
முதல்-இடை-கடைசியில் துக்கம் அனுபவிக்கின்றீர்கள் என்று பாபா
கூறுகின்றார். இப்போது அனைவரும் தூய்மையற்றவர்களாக
இருக்கிறார்கள். நீங்கள் இப்போது தூய்மையாக ஆக வேண்டும்.
நிராகார மான பாபா தான் வந்து உங்களுக்கு கற்பிக்கின்றார்.
ஒருபோதும் பிரம்மா படிப்பிக்கின்றார் என்று புரிந்து
கொள்ளாதீர்கள். அனைவருடைய புத்தியும் சிவபாபாவின் பக்கம்
இருக்க வேண்டும். சிவபாபா இவர் மூலமாக கற்பிக்கின்றார்.
தாதிகளாகிய உங்களுக்கும் கற்பிக்கக் கூடியவர் சிவபாபா ஆவார்.
அவருக்கு என்ன மதிப்பளிப்பீர்கள்! நீங்கள் சிவபாபாவிற்காக
திராட்சை, மாம்பழம் கொண்டு வருகிறீர்கள், நான் எதையும்
சாப்பிடுவதில்லை என்று சிவபாபா கூறுகின்றார். அனைத்தும்
குழந்தைகளாகிய உங்களுக்கே ஆகும். பக்தர்கள் படையல்
போடுகிறார்கள் என்றால், பிறகு பங்கு வைத்து சாப்பிடுகிறார்கள்.
நான் சாப்பிடுகிறேனா என்ன. நான் குழந்தைகளாகிய உங்களுக்கு
கற்பித்து தூய்மையாக்குவதற்குத் தான் வருகின்றேன் என்று பாபா
கூறுகின்றார். தூய்மையாக ஆகி நீங்கள் இந்த லஷ்மி- நாராயணன்
அளவிற்கு உயர்ந்த பதவி அடைவீர்கள். என்னுடைய தொழிலே இது தான்.
சிவபகவானுடைய மகாவாக்கியம் என்று தான் சொல்கிறார்கள். பிரம்மா
பகவானுடைய மகாவாக்கியம் என்று சொல்வதில்லை. பிரம்மாவின்
வாக்கியம் என்றும் சொல்வதில்லை. இவரும் முரளி சொல்கின்றார்,
ஆனால் எப்போதும் சிவபாபா தான் சொல் கின்றார் என்றே புரிந்து
கொள்ளுங்கள். எந்த குழந்தைக்காவது நன்றாக அம்பு தைக்க வேண்டும்
என்றால், நானே பிரவேசமாகி விடுவேன். ஞானத்தின் அம்பு வேகமானது
என்று பாடப்படுகிறது அல்லவா? அறிவியலில் கூட எவ்வளவு சக்தி
இருக்கிறது. அணுகுண்டுகள் போன்றவற்றினால் எவ்வளவு வெடிச்சத்தம்
ஏற்படுகிறது. நீங்கள் எவ்வளவு அமைதியில் இருக்கிறீர்கள்.
அறிவியலின் மீது அமைதி வெற்றி அடைகிறது. நீங்கள் இந்த உலகத்தைத்
தூய்மையாக்கு கின்றீர்கள். முதலில் தங்களை தூய்மையாக்கிக்
கொள்ள வேண்டும். நாடகத்தின்படி தூய்மையாக ஆகத்தான் வேண்டும்,
ஆகையினால் தான் வினாசமும் நாடகத்தில் அடங்கியுள்ளது. நாடகத்தைப்
புரிந்து கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இப்போது
நாம் சாந்திதாமத்திற்குச் செல்ல வேண்டும். அது உங்களுடைய வீடு
என்று பாபா கூறுகின்றார். வீட்டிற்கு குஷியோடு செல்ல வேண்டும்.
இதற்காக ஆத்ம-அபிமானியாக ஆவதற்கு மிகவும் உழைக்க வேண்டும்.
இந்த நினைவு யாத்திரையில் தான் பாபா அதிக அழுத்தம் (முக்கியத்துவம்)
கொடுக்கின்றார், இதில் தான் உழைப்பு இருக்கிறது. நடக்கும்போதும்
இங்கங்கு போகும் போதும் வரும் போதும் நினைவு செய்வது சகஜமாக
இருக்கிறதா அல்லது ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு நினைவு செய்வது
சகஜமாக இருக்கிறதா? பக்தி மார்க்கத்தில் கூட எவ்வளவு மாலை
உருட்டுகிறார்கள், ராமா- ராமா என்று ஜபித்துக் கொண்டே
இருக்கிறார்கள். ஒரு பலனும் இல்லை. பாபா குழந்தைகளாகிய
உங்களுக்கு முற்றிலும் சகஜமான யுக்தியைக் கூறுகின்றார் - உணவு
சமையுங்கள், எதை வேண்டு மானாலும் செய்யுங்கள், பாபாவை நினைவு
செய்யுங்கள். பக்தி மார்க்கத்தில் ஸ்ரீநாத் வாயிலில் போக்
சமைக்கிறார்கள், வாயில் துணி கட்டிக் கொள்கிறார்கள். கொஞ்சம்
கூட சப்தம் இருக்கக் கூடாது. அது பக்தி மார்க்கமாகும். நீங்கள்
பாபாவை நினைவு செய்ய வேண்டும். அவர்கள் இவ்வளவு போக்
வைக்கிறார்கள் பிறகு அவர்கள் சாப்பிடுகிறார்களா என்ன?
வழிகாட்டிகளின் குடும்பம் இருக்கிறது, அவர்கள்
சாப்பிடுகிறார்கள். இங்கே சிவபாபா நமக்கு கற்பிக்கின்றார்
என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். நமக்கு சிவபாபா
படிப்பிக்கின்றார் என்பதை பக்தியில் புரிந்துள்ளார்களா என்ன?
சிவபுராணம் எழுதியுள்ளார்கள், ஆனால் அதில் சிவன் - பார்வதி,
சிவன் - சங்கர் அனைத்தையும் ஒன்றாக்கி விட்டார்கள், அதை
படிப்பதின் மூலம் ஒரு பலனும் இல்லை. ஒவ்வொருவரும் அவரவருடைய
சாஸ்திரத்தைப் படிக்க வேண்டும். பாரதவாசிகளுக்கு ஒரு கீதையாகும்.
கிறிஸ்தவர்களுக்கு பைபிள் இருக்கிறது. தேவி-தேவதைகளுடைய தர்ம
சாஸ்திரம் ஒரு கீதையாகும். அதில் தான் ஞானம் இருக்கிறது. ஞானம்
தான் படிக்கப்படுகிறது. நீங்கள் ஞானத்தைப் படிக்க வேண்டும்.
சண்டை போன்ற விசயங்கள் எந்த புத்தகங்களில் இருக்கிறதோ, அவற்றோடு
உங்களுக்கு எந்த வேலையும் இல்லை. நாம் யோகபலமுடையவர்கள் பிறகு
உடல் பலம் உடையவர்களின் கதைகளை ஏன் கேட்க வேண்டும். உண்மையில்
உங்களுடையது சண்டை அல்ல. நீங்கள் யோகபலத்தின் மூலம் 5
விகாரங்களின் மீது வெற்றி அடைகிறீர்கள். உங்களுடைய சண்டை 5
விகாரங்களோடு ஆகும். அவர்கள் மனிதர்கள் மனிதர்களோடு சண்டை
யிடுகிறார்கள். நீங்கள் தங்களிடமுள்ள விகாரங்களோடு
சண்டையிடுகிறீர்கள். இந்த விசயங் களை சன்னியாசி கள் போன்றவர்கள்
புரிய வைக்க முடியாது. உங்களுக்கு எந்த பயிற்சி போன்ற வைகளும்
கற்றுக் கொடுக்கப்படுவதில்லை. உங்களுடைய பயிற்சி ஒன்றே ஆகும்.
உங்களுடையது யோகபலமே ஆகும். நினைவு பலத்தின் மூலம் 5
விகாரங்களின் மீது வெற்றி அடைகிறீர்கள். இந்த 5 விகாரங்கள்
எதிரிகளாகும். அதிலும் கூட தேக-அபிமானம் முதலாவ தாகும். பாபா
கூறுகின்றார், நீங்கள் ஆத்மாக்கள் அல்லவா? ஆத்மாக்களாகிய
நீங்கள் வருகிறீர்கள், வந்து கர்ப்பத்தில் பிரவேசிக் கிறீர்கள்.
நான் இந்த சரீரத்தில் அமர்ந்திருக்கின்றேன். நான் கர்ப்பத்தில்
செல்கின்றேனா என்ன. சத்யுகத்தில் நீங்கள் கர்ப மாளிகையில்
இருக்கின்றீர்கள். பிறகு இராவண இராஜ்யத்தில் கர்ப்ப சிறையில்
செல்கின்றீர்கள். நான் பிரவேசிக்கின்றேன். இதை தெய்வீக பிறப்பு
என்று சொல்லப் படுகிறது. நாடகத்தின்படி நான் இதில் வர
வேண்டியிருக்கிறது. இவருடைய பெயரை பிரம்மா என்று வைக்கின்றேன்.
ஏனென்றால், என்னுடையவராக ஆகியுள்ளார் அல்லவா? தத்தெடுக்கப்
படுகிறார்கள் என்றால் எவ்வளவு நல்ல-நல்ல பெயர்களை வைக்கிறார்கள்.
உங்களுக்குக் கூட மிகவும் நல்ல - நல்ல பெயர் வைத்திருக்கிறேன்.
சந்தேசியின் மூலம் மிகவும் அதிசயமான பெயர் பட்டியல் வந்தது.
பாபாவிற்கு அனைத்து பெயர்களுமா நினைவிருக்கிறது. பெயரோடு எந்த
வேலையும் இல்லை. சரீரத்திற்குப் பெயர் வைக்கப்படுகிறது அல்லவா?
இப்போது பாபா கூறு கின்றார், தங்களை ஆத்மா என்று புரிந்து
கொள்ளுங்கள், பாபாவை நினைவு செய்யுங்கள். அவ்வளவு தான். நாம்
பூஜிக்கத்தக்க தேவதைகளாக ஆகின்றோம் பிறகு இராஜ்யம் செய்வோம்
என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். பிறகு பக்தி மார்க்கத்தில்
நம்முடைய சித்திரங்களைத் தான் உருவாக்குவார்கள். தேவிகளுடைய
நிறைய சித்திரங்களை உருவாக்குகிறார்கள். ஆத்மாக் களுக்கும் பூஜை
நடக்கிறது. மண்ணினால் சாலிகிராமங்களை உருவாக்குகிறார்கள். பிறகு
இரவு உடைத்து விடுகிறார்கள். தேவிகளையும் அலங்கரித்து, பூஜை
செய்து பிறகு சமுத்திரத்தில் கொண்டு போய் போட்டு விடுகிறார்கள்.
என்னுடைய ரூபத்தையும் உருவாக்கி, படைத்து பிறகு என்னை
கல்லிலும்-முல்லிலும் இருப்பதாகக் கூறி விடுகிறார்கள் என்று
பாபா கூறுகின்றார். அனைத்திலும் அதிகமாக என்னைத் தான் நிந்தனை
செய்கிறார்கள். நீங்கள் எவ்வளவு ஏழைகளாகி விட்டீர்கள். ஏழைகள்
தான் பிறகு உயர்ந்த பதவியை அடைகிறார்கள். செல்வந்தர்கள்
கஷ்டப்பட்டு தான் அடைகிறார்கள். பாபாவும் கூட
செல்வந்தர்களிடமிருந்து இவ்வளவைப் (இவ்வளவு செல்வங் களை) பெற்று
என்ன செய்வார்! இங்கே குழந்தைகளுடைய ஒவ்வொரு துளியின் (பைசா)
மூலம் கட்டிடங்கள் போன்றவை உருவாகின்றன. பாபா எங்களுடைய ஒரு
செங்கல்லையும் பயன்படுத் துங்கள் என்று சொல்கிறார்கள். பதிலாக
நமக்கு தங்கம்-வெள்ளியினால் உருவாக் கப்பட்ட மாளிகை கிடைக்கும்
என்று புரிந்து கொள்கிறார்கள். அங்கே தங்கம் அதிகம் இருக்கிறது.
தங்கத் தினால் ஆன செங்கற்கள் இருக்கும் அவற்றால் தான் கட்டிடம்
உருவாகும் அல்லவா? எனவே பாபா மிகவும் அன்போடு கூறுகின்றார் -
இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, இப்போது என்னை நினைவு
செய்யுங்கள், இப்போது நாடகம் முடிகிறது.
பாபா ஏழை குழந்தைகளுக்கு செல்வந்தர்களாக ஆவதற்கான யுக்தியைக்
கூறுகின்றார் - இனிமையான குழந்தைகளே, உங்களிடம் என்னவெல்லாம்
இருக்கிறதோ அதை மாற்றி விடுங்கள். இங்கே எதுவுமே
இருக்கப்போவதில்லை. இங்கே எதை மாற்றுவீர்களோ அது புதிய
உலகத்தில் உங்களுக்கு நூறு மடங்காகி கிடைக்கும். பாபா எதையும்
கேட்பதில்லை. அவர் வள்ளலாக இருக்கின்றார், இந்த யுக்தி
சொல்லப்படுகிறது. இங்கே அனைத்தும் மண்ணோடு மண்ணாகப் போகிறது.
எதையாவது பயனுள்ளதாக மாற்றிக் கொண்டீர்கள் என்றால் உங்களுக்கு
புதிய உலகத் தில் கிடைக்கும். இந்த பழைய உலகம் வினாசம்
ஆவதற்கான நேரமாகும். இது எதுவும் காரியத் திற்கு உதவாது.
ஆகையினால் பாபா கூறுகின்றார், ஒவ்வொரு வீட்டிலும்
பல்கலைக்கழகத்தோடு சேர்ந்த மருத்துவமனையை திறவுங்கள், அதன்மூலம்
ஆரோக்கியம் மற்றும் செல்வம் கிடைக்கும். இது தான் முக்கியமாகும்.
நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு
நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்காரம்.
இரவு வகுப்பு 12/03/1968
இந்த சமயத்தில் சாதாரண ஏழை தாய்மார்கள் முயற்சி செய்து உயர்ந்த
பதவியை அடைந்து விடுகிறீர்கள். யக்ஞத்தில் உதவி, ஒத்துழைப்பை
அதிகம் தாய்மார்கள் செய்கிறார்கள், ஆண்கள் குறைவானவர்களே
உதவியாளர்களாக ஆகிறார்கள். தாய்மார்களுக்கு வாரிசாகும் போதை
அதிகம் இருப்பதில்லை. அவர்கள் விதை விதைத்துக் கொண்டே
இருக்கிறார்கள், தங்களுடைய வாழ்க்கையை உருவாக்கிக் கொண்டே
இருக்கிறார்கள். உங்களுடைய ஞானம் மிகச் சரியான தாகும், மற்றவை
பக்தியாகும். ஆன்மீகத் தந்தை தான் வந்து ஞானத்தைக்
கொடுக்கின்றார். பாபாவைப் புரிந்து கொண்டால் கண்டிப்பாக
பாபாவிடமிருந்து ஆஸ்தியை எடுப்பார்கள். பாபா உங்களை முயற்சி
செய்ய வைத்துக் கொண்டே இருக்கின்றார், புரிய வைத்துக் கொண்டே
இருக்கின்றார். நேரத்தை வீணாக்காதீர்கள். சிலர் நல்ல
முயற்சியாளர்களாக இருக்கிறார்கள் சிலர் மத்திமமாக, சிலர்
மூன்றாம் நிலையில் இருக்கிறார்கள் என்பதை பாபா தெரிந்துள்ளார்.
பாபா விடம் கேட்டீர்கள் என்றால் பாபா உடனே நீங்கள் முதலாவதா
இரண்டாவதா அல்லது மூன்றாம் நிலை முயற்சியாளர்களா என்று கூறி
விடுவார். யாருக்கும் ஞானம் கொடுக்க வில்லை யென்றால் மூன்றாம்
நிலையானவர்களே ஆவீர்கள். நிரூபிக்காவிட்டால் கண்டிப்பாக பாபா
அப்படி சொல்வார் அல்லவா? பகவான் வந்து எந்த ஞானத்தை கற்றுக்
கொடுக்கின்றாரோ அது பிறகு மறைந்து விடுகிறது. இது யாருக்குமே
தெரியாது. நாடகத்தின் திட்டப்படி இது பக்தி மார்க்கமாகும், இதன்
மூலம் யாரும் என்னை அடைய முடியாது. யாரும் சத்யுகத்திற்குச்
செல்ல முடியாது. இப்போது குழந்தைகளாகிய நீங்கள் முயற்சி செய்து
கொண்டிருக்கிறீர்கள். கல்பத்திற்கு முன் போலவே யார் எவ்வளவு
முயற்சி செய்தார்களோ, அவ்வளவு முயற்சி செய்து கொண்டிருக்
கிறார்கள். யார் தங்களுக்கு நன்மை செய்து கொண்டி ருக்கிறார்கள்
என்று பாபா புரிந்து கொள்ள முடியும். தினமும் இந்த லஷ்மி -
நாராயணனுடைய சித்திரத்திற்கு முன் வந்து அமருங்கள் என்று பாபா
சொல்வார். பாபா தங்களுடைய ஸ்ரீமத்தின் படி நாங்கள் இந்த ஆஸ்தியை
கண்டிப்பாக அடைவோம். தங்களுக்குச் சமமாக மாற்றும் சேவையை
கண்டிப்பாக செய்ய வேண்டும். செண்டரில் இருப்பவர்களுக்கும்
எழுதுகின்றேன், இத்தனை ஆண்டுகள் படிக்கின்றீர்கள் எனும் போது
யாருக்கும் படிப்பிக்க முடியவில்லை என்றால் என்ன தான்
படித்தீர்கள்? குழந்தை களின் முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும்
அல்லவா? முழு நாளும் சேவையின் சிந்தனை புத்தியில் செல்ல
வேண்டும்.
நீங்கள் வானப்பிரஸ்திகள் அல்லவா. வானப்பிரஸ்திகளின் (முதியோர்)
ஆசிரமும் இருக்கிறது. வானப்பிரஸ்திகளிடம் சென்று, இறப்பதற்கு
முன்னால் இலட்சியத்தை சொல்லி விடுங்கள். உங்களுடைய ஆத்மா
சப்தத்தைக் கடந்து எப்படி செல்லும் என்பதை சொல்லுங்கள். தூய்மை
யற்ற ஆத்மா செல்ல முடியாது. பகவானுடைய மகாவாக்கியம் - என்னை
மட்டும் நினைவு செய்தீர்கள் என்றால், நீங்கள் வானப்பிரஸ்தத்தில்
சென்று விடுவீர்கள். பனாரஸில் கூட நிறைய சேவை இருக்கிறது.
நிறைய சாதுக்கள் காசி வாசத்திற்காக அங்கே இருக்கிறார்கள், முழு
நாளும் சிவகாசிநாத் கங்கா என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.
உங்களுக்குள் எப்போதும் குஷியின் கைதட்டல் ஒலித்துக் கொண்டே
இருக்க வேண்டும். மாணவர்கள் அல்லவா? சேவையும் செய்கிறீர்கள்,
படிக்கவும் செய்கிறீர்கள். பாபாவை நினைவு செய்ய வேண்டும்,
ஆஸ்தியை அடைய வேண்டும். நாம் இப்போது சிவபாபாவிடம் செல்கிறோம்.
இது மன்மனாபவ ஆகும். ஆனால் நிறைய பேருக்கு நினைவிருப்பதில்லை.
மற்றவர்களைப் பற்றி பேசிக் கொண்டே இருக்கிறார்கள். முக்கியமான
விசயம் நினைவாகும்.நினைவு தான் நம்மை குஷியில் கொண்டு வரும்.
அனைவரும் உலகத்தில் அமைதி வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
உலகத்தில் அமைதி இப்போது ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது என்று
அவர்களுக்குப் புரிய வைக்குமாறு பாபாவும் கூறுகின்றார்,
ஆகையினால் தான் பாபா லஷ்மி - நாராயணனுடைய சித்திரத்திற்கு அதிக
மகத்துவம் அளிக்கின்றார். எங்கே சுகம்-அமைதி, தூய்மை அனைத்தும்
இருந்ததோ அந்த உலகம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது என்று
சொல்லுங்கள். அனைவரும் உலகத்தில் அமைதி ஏற்பட வேண்டும் என்று
சொல்கிறார்கள். நிறைய பேருக்கு பரிசும் கிடைத்துக்
கொண்டிருக்கிறது. உலகத்தில் அமைதியை ஸ்தாபனை செய்யக்கூடியவர்
எஜமானனாகத் தான் இருப்பார் அல்லவா? இவர்களுடைய இராஜ்யத்தில்
உலகத்தில் அமைதி இருந்தது. ஒரு மொழி, ஒரு இராஜ்யம், ஒரு தர்மம்
இருந்தது. மற்ற ஆத்மாக்கள் அனைவரும் நிராகார உலகத்தில்
இருந்தனர். அப்படிப்பட்ட உலகத்தை ஸ்தாபனை செய்தது யார்? அமைதியை
ஸ்தாபனை செய்தது யார்? வெளி நாட்டினரும் இவர்களுடைய இராஜ்யம்
இருந்தபோது இது சொர்க்கமாக இருந்தது என்று புரிந்து கொள்வார்கள்.
உலகத்தில் அமைதி இப்போது ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. காலை
நடை பயிற்சியில் கூட இந்த லஷ்மி - நாராயணனுடைய சித்திரத்தை
கொண்டு செல்லுங்கள் என்று பாபா புரிய வைத்திருந்தார். அதன்மூலம்
அனைவருடைய காதுகளிலும் இந்த இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக்
கொண்டிருக்கிறது என்பது விழட்டும். நரகத்தின் வினாசம் எதிரிலேயே
உள்ளது. நாடகத்தின்படி கொஞ்சம் நேரம் தான் இருக்கிறது என்பதைத்
தெரிந்துள்ளீர்கள். மிகப் பெரியவர்களின் அதிர்ஷ்டத் தில்
இப்போது இல்லை. இருந்தாலும் பாபா முயற்சி செய்ய வைத்துக் கொண்டே
இருக்கின்றார். நாடகத்தின் படி சேவை நடந்து கொண்டிருக்கிறது.
நல்லது. இரவு வணக்கம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) சங்கதோஷத்திலிருந்து தங்களை மிகவும் பாதுகாத்துக் கொள்ள
வேண்டும். ஒருபோதும் தூய்மையற்றவர்களின் சேர்க்கையில்
வரக்கூடாது. அமைதி பலத்தின் மூலம் இந்த உலகத்தை தூய்மையாக்கும்
சேவை செய்ய வேண்டும்.
2) நாடகத்தை நல்ல விதத்தில் புரிந்து கொண்டு மகிழ்ச்சியாக
இருக்க வேண்டும். தங்களுடைய அனைத்தையும் புதிய உலகத்திற்காக
மாற்றி விட வேண்டும்.
வரதானம்:
தந்தை மூலமாக வெற்றியெனும் திலகம் பெற்று சதா நம்பிக்கைக்
குரியவராகி, உள்ளமெனும், ஆசனத்தில் அமர்பவராகுக !
பாக்ய வள்ளல் தந்தை தினமும் அமிர்தவேளையில் தனது நம்பிக்கைக்
குரிய குழந்தைகளுக்கு வெற்றித் திலகமிடுகின்றார்
நம்பிக்கைக்குரிய பிராமண குழந்தைகள் ஒருபோதும் கடினம், உழைப்பு
எனும் வார்த்தைகள் வாயில் மட்டுமல்ல எண்ணத்திலும் கொண்டு
வரமுடியாது. அவர்கள் சகஜயோகியாவார்கள். எனவே ஒருபோதும்
மனமுடையாதீர்கள் சதா உள்ளமெனும் ஆசனத்தில் அமர்ந்தவராக
இரக்கமனமுள்ளவராகுங்கள். பெருமை, சிறுமை அழியுங்கள்,
சுலோகன்:
உலக மாற்றத்திற்கான தேதியைப் பற்றி யோசிக்காமல் தன்னை
மாற்றுவதற்கான நேரத்தை .குறியுங்கள்.
அவ்யக்த சமிக்ஞை: சத்யமும், நாகரீகமும் தனது பண்பாக்குங்கள்
தூய்மையெனும் ஆளுமையுடன் நிரம்பிய ராயல் ஆத்மாக்களை பண்பின்
தேவியென்பார்கள். அவர்களிடம் கோபமெனும் விகாரத்தின்
தூய்மையின்மை இருக்க முடியாது. கோபத்தின் சூட்சும மான பொறாமை,
வெறுப்பு, சந்தேகம் யாவும் உள்ளிருந்தால் உள்ளிருந்தே எரிக்கும்
நெருப்பாகும். வெளியில் முகம் சிவக்காது, வெளுக்காது ஆனால்
கருப்பாகும். ஆகவே இப்போது கருமையிணை அழித்து விட்டு
உண்மையாகுங்கள்.