24.05.26    காலை முரளி            ஓம் சாந்தி 28.02.2010      பாப்தாதா,   மதுபன்


தேக உணர்வினுடைய 'நான்- நான்' என்ற ஹோலியை (பழையதை) எரித்து, பரமாத்மாவுடனான தொடர்பின் (நிறங்களுடைய) ஹோலியைக் கொண்டாடுங்கள்

இன்று ஹோலியஸ்ட் (மிக புனிதமான) தந்தை தன்னுடைய ஹோலி (புனிதமான) குழந்தை களுடன் ஹோலி (பண்டிகையை) கொண்டாட வந்துள்ளார். நாலா புறங்களிலும் மிகவும் தொலை வில் இருக்கக்கூடிய குழந்தைகள் அன்பால் (பாப்தாதாவின்) இதயத்தில் நிறைந்து கொண்டு இருக்கின்றார்கள். பாப்தாதா நாலா புறங்களிலும் உள்ள குழந்தைகளின் நெற்றியில் – பாக்கியத் தின் நட்சத்திரம் பிரகாசிப்பதைக் பார்த்துக் கொண்டு இருக்கின்றார். இத்தனை பெரிய பாக்கியம் முழு கல்பத்திலும் வேறு எவருக்கும் கிடைப்பதில்லை. இந்த சங்கமயுகத்தின் பிராப்தியின் (செயல் வெற்றியின்) ஆதாரத்தில் குழந்தைகளாகிய நீங்கள் தான் இத்தனை சிரேஷ்ட பவித்ரமாக ஆகுகின்றீர்கள் அதாவது எதிர்காலத்தில் நீங்கள் இரட்டை பவித்ரதாரியாக ஆகுகின்றீர்கள். ஆத்மாவும் பவித்ரம், சரீரமும் பவித்ரம். முழு கல்பமும் சுற்றி வந்து பார்த்தாலும், எந்த ஒரு தர்ம ஆத்மாவும் கூட இவ்வாறு இரட்டைப் பவித்ரதாரியாக ஆகவில்லை. குழந்தைகளாகிய நீங்கள் இரட்டைப் பவித்ரதாரியாகவும் ஆகுகின்றீர்கள் மேலும் இரட்டை பவித்ரதாவின் அடையாளமாக இரட்டை கிரீடதாரியாகவும் ஆகுகின்றீர்கள்.

இன்று அனைவரும் ஹோலி கொண்டாடுகிறார்கள், ஆனால் இந்த நேரத்தில் நீங்கள் இரட்டை ஹோலி, அதாவது பவித்ரமாக ஆகுகின்றீர்கள்; அதன் நினைவார்த்தமாக, உற்சவ ரூபத்தில் ஹோலி கொண்டாடுகின்றார்கள். உங்களின் ஒவ்வொரு அடியினுடைய (அதாவது ஸ்ரீமத்படி செய்யும் ஒவ்வொரு செயலினுடைய) மற்றும் வாழ்க்கையினுடைய மகத்துவத்தைத் தான் ஒரு உற்சவ ரூபத்தில் கொண்டாடுகின்றார்கள். நீங்கள் இந்த சங்கமத்தில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு அடியிலும் - ஊக்கம் மற்றும் உற்சாகத்தில் இருக்கின்றீர்கள்; எனவே உங்களது ஊக்கம், உற்சாகத்தின் நினைவார்த்தம் - ஒரு உற்சவ (ஹோலி பண்டிகை) ரூபத்தில் கொண்டாடு கின்றார்கள். ஏன் இந்த ஊக்கமும் உற்சாகமும் இருக்கின்றது? ஏனெனில் நீங்கள் பரமாத்மாவின் சங்கத்தின் (தொடர்பினுடைய நிறத்திலாலான) ஹோலி கொண்டாடுகிறீர்கள். எனவே உங்களுடைய ஒவ்வொரு அடியையும் உற்சவ ரூபத்தில் கொண்டாடுகின்றார்கள். தற்போது ஹோலியில் முதலில் எரிக்கிறார்கள், பிறகு கொண்டாடுகின்றார்கள். நீங்களும் கூட சங்கமத்தில் உங்களுடைய பழைய சமஸ்காரங்களையும், சுபாவங்களையும் யோக அக்னியில் எரிக்கின்றீர்கள். ஏனெனில் உங்களுடைய பழைய சமஸ்காரங்களை எரிக்காமல் பரமாத்மாவுடைய சங்கத்தின் (தொடர்பின்) நிறம் ஒட்ட முடியாது, பரமாத்மாவுடன் சந்திப்பு என்பது ஏற்பட முடியாது. எனவே நீங்கள் யோக அக்னியில் சமஸ்காரங்களை எரித்துவிட்டு, பிறகு பரமாத்மாவுடைய சங்கத்தின் (தொடர்பின்) நிறத்தினால் நிறத்தினைப் பெறுகின்றீர்கள். எனவே இன்றைய கால கட்டத்தில் எரிக்கவும் செய்கின்றார்கள் மேலும் நிறங்களைப் பூசுவும் செய்கின்றார்கள், ஆனால் உங்களுடைய ஆன்மீக நிலைக்கு அவர்கள் ஸ்தூல உருவம் கொடுத்து விட்டார்கள். அவர்கள் ஸ்தூல நெருப் பினால் எரிக்கின்றார்கள், ஸ்தூல நிறங்களைப் பூசு கின்றார்கள், ஏனெனில் தற்போது அவர்கள் தேக உணர்வின் உள்ளுணர்வில் இருக்கின்றார்கள்.

நீங்கள் 'ஹோலி'யாக (பவித்ரமாக) ஆகுகின்றீர்கள், அவர்கள் ஹோலியை (பண்டிகையாக) கொண்டாடு கின்றார்கள். முழு கல்பத்திலும் யாரும் ஆன்மீக ஹோலி கொண்டாடி இரட்டைப் பவித்திரதாரியாக ஆகவில்லை. எனவே நீங்கள் எங்கிருந்து வந்திருந்தாலும் பரமாத்மாவின் சங்கத்தின் ஹோலி-யில் வந்துள்ளீர்கள். பரமாத்மாவின் சங்கத்தின் ஹோலியை கொண்டாட வந்துள்ளீர்கள். 'ஹோலி' என்பதற்கு 'நடந்தது நடந்துவிட்டது' (முடிந்துவிட்டது) என்றும் ஒரு பொருளை நீங்கள் சொல்கின்றீர்கள். எனவே நாடகத்தின் படி எது நடந்துவிட்டதோ அதை 'ஹோ-லி' (கடந்த காலம்) என்கின்றோம். அதாவது முடிந்தது முடிந்ததாக இருக்கட்டும். எந்தவொரு வீணான விஷயங்களையும் சிந்தனையில் கொண்டு வராதீர்கள்; முடிந்தததை முடிந்தததாக எண்ணி கொண்டாடப் படும் ஹோலியைத் தானே கொண்டாடிக்கொண்டு இருக்கின்றீர்கள்? நீங்கள் அனைவரும் 'ஹோலி', அதாவது பவித்ரமாக ஆகுவதற்கான முழு புருஷார்த்தம் செய்து பவித்ரதாவை தாரணை செய்துள்ளீர்கள்; அதனால்தான் எதிர்காலத்தில் உங்களின் இரட்டைப் பவித்ரதாவின் அடையாளமாக இரட்டை கிரீடத்தை காட்டுகின்றார்கள்.

இன்று குழந்தைகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் எதை எரித்து விட்டு செல்வீர்கள்? பாப்தாதா ஜென்மதினத்தன்று (சிவஜெயந்தியன்று) வீட்டுப்பாடம் கொடுத்திருந்தார் அதாவது பிறந்தநாள் அன்று கோபத்தை பிறந்தநாள் பரிசாக கொடுத்து விடுங்கள் என்று - அதற்கான முடிவுகள் (ரிசல்ட்) சில குழந்தைகளிடமிருந்து பாப்தாதாவிற்கு வந்து சேர்ந்திருக்கின்றது. அந்த முடிவுகளை பாப்தாதா பார்த்தார். குழந்தைகள் எங்கெல்லாம் கவனம் செலுத்தி இருக்கின்றார்கள் என்பதை பாப்தாதா பார்த்தார். நீங்களும் கூட உங்களது முடிவுகளை பார்த்திருப்பீர்கள்; யாரெல்லாம் இங்கே அமர்ந்துள்ளீர்களோ அவர்கள் தங்களது முடிவுகளை எடுத்திருப்பீர்கள்; யார் தங்களுடைய ரிசல்ட்-ல் (கோபத்தை) கட்டுப்படுத்தி வெற்றியை அனுபவம் செய்துள்ளீர்களோ அவர்கள் கைகளை உயர்த்துங்கள். வெற்றியை அடைந்தீர்களா! நன்றாக கைகளை உயர்த்துங்கள். ஆசிரியர்கள் கைகளை உயர்த்துங்கள், வெளிநாட்டு குழந்தைகள் கைகளை உயர்த்துங்கள். (அனைவரும் உயர்த்தினர்) நல்லது, வாழ்த்துக்கள். இந்த விஷயத்தில் (அதாவது கோபத்தை வெற்றி கொள்வதில்) நீங்கள் அனைவரும் தங்கள் மீது தைரியம் வைத்து, தைரியத்தின் பலனாக வெற்றியை அடைய முடியும் என்பதை அனுபவம் செய்துள்ளீர்கள். இந்த அனுபவத்தை (அதாவது தைரியம் வைத்து கோபத்தை வென்ற அனுபவத்தை) இனி வரும் காலத்திலும். லட்சியம் வைத்து அடிக்கடி சோதனை செய்து மேலும் முன்னேற விரும்புகின்றீர்கள் என்றால் அதை நடத்திக் காட்ட முடியும் (அதாவது நிறந்தரமாக கோபத்தின் மீது சதா வெற்றி பெற முடியும்) என்று நினைக் கின்றீர்களா? நடத்திக் காட்ட முடியுமா? இனி வரும் காலத்தில் முடியுமா? கைகளை உயர்த்துங்கள். நல்லது. முடியுமா? ஆசிரியர்களால் முடியுமா? பாண்டவர்களால் முடியுமா? நல்லது. நடத்திக் காட்ட முடியுமா என்பதல்ல, நடந்தே தீர வேண்டும்; இதற்கு கைதட்டுங்கள். நல்லது. அதிக நாட்கள் ஆகவில்லை (கோபத்தை வென்று), ஆனால் இன்று முதல் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் கவனமாக இருந்து கோபத்தின் அழுத்தத்தை உங்களால் முடிக்க முடியுமா? முடியுமா? முடியும் என்பவர்கள் கைகளை உயர்த்துங்கள். நல்லது. இந்த நற்செய்தி (பாப்தாதாவிற்கு) மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது. ஏன்? கோபத்திற்கான காரணம் என்னவாக இருக்கின்றது? கோபத்தின் விதையாக இருப்பது எது? நீங்கள் சதா உங்களுடைய எதிர்கால சொரூபத்தை உங்கள் முன்னே வையுங்கள். உங்கள் எதிர்கால சொரூபம் எவ்வளவு அலங்கரிக்கப்பட்ட மகிழ்ச்சியான முகம் என்பதைப் பாருங்கள். மேலும் பாப்தாதாவை பாருங்கள், அதிலும் கூட பிரம்மா பாபாவை முன்னால் கொண்டு வாருங்கள். ஏன்?

சிவ தந்தையோ நிராகாரமாக (உடலற்றவராக) இருக்கின்றார், ஆனால் பிரம்மா பாபா உங்களைப் போன்றே சாகாரமானவர் (உடலை உடையவர்), உங்களைப் போன்றே பொறுப்புகளின் கிரீடம் அணிந்தவர் இருப்பினும் எப்போதும் புன்னகையுடன் கூடிய மகிழ்ச்சியான முகம் கொண்டவர். ஏனெனில் இந்த விகாரங்களின் மீது வெற்றி கொண்டு, சரீரம் இருந்தாலும், காரியங்களைச் செய்து கொண்டே உங்கள் முன்னால் உதாரணமாக இருந்தார். பிரம்மா பாபாவை விட உங்களுக்கு அதிக பொறுப்பு இருக்கின்றதா? பிரம்மா பாபாவின் பொறுப்புக்கு முன்னால் உங்கள் பொறுப்பு என்பது ஒன்றுமே இல்லை. கடைசி வரை பார்த்தால், கர்மாதீத் அதிர்வலைகளின் மூலம் அவர் 'அவ்யக்த பரிஸ்தாவாக' ஆகினார். எனவே, இப்போது பாப்தாதாவிற்கு கொடுத்த பரிசை (கோபத்தை) மீண்டும் எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் தானே! காரிய விவகாரங்களில் வரும் போது, ஆங்காங்கே சூழ்நிலை அவ்வாறு உருவாகுகின்றது (அதாவது கோபப்படும்படியான சூழ்நிலை) என்பதை பாப்தாதா புரிந்துள்ளார்; அநேகர் தங்களுடைய ரிசல்ட்-ல் எழுதியிருந்தனர் அதாவது குரலை உயர்த்த வேண்டியதாக ஆகிவிடுகின்றது என்று. மனோநிலையில் சற்று வேகம் வந்து விடுகின்றது. ஆனால் எப்பொழுது அப்படிப்பட்ட விஷயங்கள் உங்கள் முன்னால் வருகின்றதோ, அப்பொழுது தான் நீங்கள் வெற்றியாளர் ஆகுவதற்கான வாய்ப்பு என்பது இருக்கின்றது . விஷயங்களுடைய வேலை வருவது ஆனால் விஷயங்களை கடந்து, வெற்றியாளர் ஆகவேண்டும் என்பது உங்களுடைய ஞானம். எனவே இது உங்களுக்குப் பிடித்திருக்கின்றதா? கோபத்திற்கு விடை கொடுங்கள்- சதா காலத்திற்காகவா அல்லது மூன்று மாதங்களுக்காகவா? எவ்வளவு காலத்திற்கான தைரியம் உங்களிடத்தில் இருக்கின்றது? கோபத்தை சதா காலத்திற்காக வெல்வது என்பது கடினம் அல்ல, அது நடந்தே தீர வேண்டும் என்று கருதுபவர்கள் கைகளை உயர்த்துங்கள். இது நடந்தே தீர வேண்டும். நல்லது. பாப்தாதா மகிழ்ச்சியாக இருக்கின்றார். ஏன்? உங்களுடைய இறுதிப் பிறவியிலும் கூட உங்கள் மகிமை என்னவென்று பாடப்படுகிறது? உங்களுடைய தேவதை ரூபத்திற்கு முன்னே உங்களுடைய மகிமையை சர்வகுண சம்பன்ன, சம்பூர்ண நிர்விகாரி எனப் பாடுகின்றார்கள். நீங்கள் அப்படிப்பட்ட பாத்திரமாக (மகிமைக்குரிய தேவதை) ஆகுவது தற்போதைய சங்கமயுகத்திற்கான மகிமை ஆகும். பாப்தாதாவின் இதயத்தில் ஒரு விசேஷமான ஆசை இருக்கின்றது, அதைச் சொல்லட்டுமா? தலையை அசையுங்கள்- சொல்லட்டுமா? பாப்தாதா இப்பொழுதிலிருந்து, இப்பொழுதிலிருந்து ஒவ்வொரு குழந்தையையும் எப்போதும் மலர்ந்த ரோஜா மலராகப் பார்க்க விரும்புகின்றார். அதிர்ஷ்டசாலிகளாகவும், மகிழ்ச்சியானவர்களாகவும் இருங்கள். விஷயங்களின் வேலை வருவது, இதையும் புரிந்து கொள்ளுங்கள். விஷயங்கள் வரும், ஆனால் தன்னுடைய லட்சியத்தை, லட்சணத்தில் (நடத்தையில்) கொண்டு வாருங்கள். பயப்படாதீர்கள்.

பிரம்மா குமாரிகள் தூய்மையை பற்றி அதிகம் கற்பிக்கின்றார்கள் என்று இப்பொழுது சொல்வது போல, பிரம்மா குமாரிகள் கோபத்திலிருந்து விடுபட வைக்கின்றார்கள் என்பது பிரபலமாக ஆக வேண்டும், ஏனெனில் அனைவரும் கோபத்திலிருந்து விடுபட விரும்புகின்றார்கள். மன அழுத்தம் ஏற்படுகின்றது அல்லவா! மன அழுத்தம் உருவாகுவதால் அனைவரும் (கோபத்திலிருந்து விடுதலை) விரும்புகின்றார்கள், ஆனால் அதற்கான வழி அவர்களுக்குத் தெரியவில்லை. முன்பு தூய்மையாவது சாத்தியமற்றது என்று நினைத்தார்கள், ஆனால் இப்போது உங்கள் அனை வருடைய அனுபவத்தின் அடிப்படையில் அது சாத்தியம் என்று புரிந்து கொள்கின்றார்கள். அதே போல், இந்த ஆண்டு கோபத்தை வெல்ல முடியும், அது கடினம் அல்ல என்ற அலையைப் பரப்புங் கள். இத்தகைய அனுபவத்தின் உதாரணங்களை நடைமுறை வாழ்க்கையில் கொண்டு வாருங்கள். பாப்தாதா பார்த்தார், அநேக குழந்தைகள் காரியங்களைச் செய்து கொண்டே, கோபத்தின் மீது வெற்றி பெற்றவர்களாக ஆகியிருக்கின்றார்கள். அப்படிப்பட்ட உதாரணங்கள் உங்கள் குடும்பத் திலும், பிராமண குடும்பத்திலும் உருவாகியுள்ளன. எனவே இந்த வருடத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்? ஹோலி கொண்டாட வந்திருக்கின்றீர்கள் தானே! அப்படியெனில் ஹோலியில் என்ன செய்வார்கள்? எதையாவது எரிப்பார்கள் அல்லவா! எனவே இன்றைய ஹோலியில் நீங்கள் எதை எரிப்பீர்கள்? கோபம் என்பதை முடிவு செய்தாகி விட்டது, அதை (அந்த சங்கல்பத்தை) இன்னும் வலுப்படுத்துங்கள்! ஆனால் பாப்தாதா பார்த்தார் - மன அழுத்தத்திற்கு முக்கிய காரணம் தேக அபிமானத்தினுடைய "நான்" என்ற சப்தம். தேக உணர்வினுடைய நான், ஒன்று -நான் ஆத்மா என்பது, இதிலும் நான் என்பது வருகின்றது; ஆனல் தேக உணர்வினுடைய நான் என்ற சப்தம் - அகங்காரம் உடையதாகவும் இருக்கின்றது, அவமானத்திற்கானதாகவும் இருக்கின்றது. மனச்சோர் வுடன் கூடிய - நான், நான் என்பது கூட உங்களை வீழ்ச்சியடையச் செய்கின்றது. எனவே இன்று கோபத்தை வெல்வதில், முன்னேறிச் செல்வதற்காக தேக உணர்வினுடைய 'நான்' என்பதை யோக அக்னியில் எரித்து விடுங்கள். அனேக விதமான 'நான்' - 'நான்' என்பதை எரித்து விடுங்கள் மேலும் நான் ஆத்மாக இருக்கின்றேன், இந்த 'நான்' என்ற சப்தத்தை உறுதி செய்யுங்கள் மேலும் மற்ற 'நான்' என்பதை யோக அக்னியில் எரித்து விட்டுச் செல்லுங்கள். அனேக விதமான 'நான்' என்பது இருக்கின்றது தானே. எனவே இன்று எரிக்கக்கூடிய ஹோலியைக் கொண்டாடுங்கள்! ஏனெனில் கோபத்திற்கான முக்கிய காரணம் மன அழுத்தமாக இருக்கின்றது. எனவே இந்த "நான்" என்பதை முடிவுக்குக் கொண்டுவர இன்று உங்களுக்குள் ஒரு சங்கல்பம் (உறுதிமொழி) செய்யுங்கள். இதை எரிக்க வேண்டும், ஏனெனில் இதுவும் கூட ஒரு சுமை தானே. எனவே நீங்கள் ரயிலில் சென்றாலும் சரி, விமானத்தில் சென்றாலும் சரி, இந்தச் சுமையை இங்கேயே எரித்துவிட்டுச் செல்லுங்கள். எரிக்க முடியுமா? குழந்தைகள் தைரியம் வைத்தால், தந்தையின் உதவி இருக்கவே இருக்கின்றது எனவே வெற்றியும் கூடவே இருக்கின்றது என்று யார் புரிந்துள்ளீர்களோ, நான் வெற்றியாளராக ஆகியே தீர வேண்டும் என்று யார் யோசிக்கின்றீர்களோ, அவர்கள் கைகளை உயர்த்துங்கள். ஆகித்தான் தீர வேண்டும், நல்லது. இன்று வி.ஐ.பி-க்கள்(முக்கியஸ்தர்கள்) வந்துள்ளார்கள், அவர்கள் கைகளை உயர்த்திக் கொண்டு இருக்கின்றார்கள். வி.ஐ.பி-க்களாக யார் வந்துள்ளீர்களோ, அவர்கள் எழுந்து நில்லுங்கள். கைகளை உயர்த்திக் கொண்டு இருக் கின்றார்கள். கைகளைத் தட்டுங்கள். வெற்றியாளர் ஆகுவீர்களா? பாருங்கள். யாரெல்லாம் வெற்றியாளர் ஆவீர்களோ அவர்கள் ஒவ்வொருவருக்கும் மாலை அணிவிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. வாழ்த்துகள், வாழ்த்துகள். நல்லது. இப்போது வந்துள்ள வி.ஐ.பி-க்கள் அனைவரும் தைரியமான வர்கள், அதனால்தான் பாப்தாதா வரதானம் கொடுத்துக் கொண்டு இருக்கின்றார். இந்த நேரத்தில் நீங்கள் ஒரு பிறவிக்காக ஏதோ ஒரு பணியில் வி.ஐ.பி-க்களாக இருக்கலாம், ஆனால் தைரியமான குழந்தைகளாகிய உங்களை பாப்தாதா இப்போது வி.ஐ.பி என்று அழைக்க மாட்டார், 'குழந்தைகள்' என்றுதான் அழைப்பார். நீங்கள் அனைவரும் 21 பிறவிகளுக்கு வி.ஐ.பி-க்களாக ஆகுவீர்கள் என்று பாப்தாதா வரதானமும், உத்தரவாதமும் கொடுக்கின்றார். இதில் தேர்தல் (எலக்ஷ்ன்), தேர்வு (செலக்ஷ்ன்) என்பது எடுபடாது. எனவே அனைவரும் ஒன்றை மட்டும் விட்டு விடாதீர்கள், எப்படி இப்போது சம்மந்தம்- தொடர்பில் வந்துள்ளீர்களோ அப்படி இந்த பிராமண பரிவாரத்தினுடைய தொடர்பை (கணக்ஷ்னை) விட்டு விடாதீர்கள். நீங்கள் எவ்வளவு கணக்ஷ்னில் (தொடர்பில்) இருக் கின்றீர்களோ, அவ்வளவு ரிலேஷன் (உறவு) வலுப்படும் மேலும் தந்தையின் வரதானத்தை பெறத் தான் செய்வீர்கள். இது உங்களுக்குச் சம்மதமா? தொடர்பில் இருக்கச் சம்மதமா? கைகளை உயர்த்துங்கள். நல்லது. (பாப்தாதா ஒரு மலர்மாலையை உயர்த்தி முன்னோக்கி நகர்த்தினார்) இந்த மாலையை நீங்கள் அனைவரும் அணிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் அனைவரும் புதிய குழந்தைகள் மேலும் உண்மையான தங்கக் குழந்தைகள், எப்போதும் தந்தைக்குக் கீழ்ப்படிந்து நடக்கக்கூடியவர்கள் தானே! எனவே இன்று இந்த "நான்" (அகந்தை) என்பதை எரித்துவிட்டுத்தான் செல்ல வேண்டும். யார் முதல் முறையாக வந்திருக்கின்றீர்களோ, அவர்கள் எழுந்து நில்லுங்கள். நல்லது. முதல் முறையாக வந்திருக்கும் குழந்தைகளுக்கு, முதல் முறையாக வந்ததற்கான - பலமடங்கு வாழ்த்துகளை பாப்தாதா கொடுத்துக் கொண்டு இருக்கின்றார். ஆனால் எப்படி இப்போது முதல் முறையாக வந்தீர்களோ, அப்படி முதல் நம்பரிலும், முதல் பிரிவிலும் வர வேண்டும்; முதல் நம்பர் மட்டும் தான் ஏற்கெனவே நிச்சயிக்கப் பட்டுள்ளது ஆனால் முதல் பிரிவில் வாருங்கள், இதற்கான தைரியம் இருக்கின்றதா? யாருக்கு தைரியம் இருக்கின்றதோ அவர்கள் கைகளை உயர்த்துங்கள். கவனித்து, யோசித்து உயர்த்துங்கள். நல்லது. நாம் கடைசியாக(லாஸ்ட்-ஆக) வந்திருக்கலாம், ஆனால் வேகமாக(பாஸ்ட்-ஆக) முன்னேறி முதலிடம் பிடிப்போம் என்ற லட்சியத்தை வையுங்கள், ஏனெனில் நேரத்தை நம்ப முடியாது. இப்போது என்ன செய்ய வேண்டுமோ, அதைத் தீவிர புருஷார்த்தியாளர் (முயற்சியாளர்) ஆகிச் செய்துவிடுங்கள். ஏனெனில் நீண்ட காலம் செய்திருக்க வேண்டிய புருஷார்தத்தை நீங்கள் அனைவரும் குறைந்த காலத்தில் செய்து முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றீர்கள். எனவே தைரியம் இருக்கின்றதா? தைரியம் இருக்கின்றதா? கைகளை உயர்த்துங்கள். பாருங்கள், உங்களுடைய புகைப்படம் எடுக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. அப்படிப்பட்ட தைரியம் உடைய குழந்தைகளுக்கு பாப்தாதா வாழ்த்துக்களைக் கொடுக்கின்றார் அதாவது தைரியம் உங்களுடையது, உதவி தந்தையினுடையது. ஆனால் தைரியத்தை இழந்து விடாதீர்கள். உங்களுடைய பாக்கியத் தின் நட்சத்திரம் சதா பிரகாசிக்கக்கூடியதாக இருக்க வேண்டும், ஏனெனில் இந்தப் பிறவி யினுடைய தீவிர புருஷார்த்தம்; புருஷார்த்தம் அல்ல, தீவிர புருஷார்த்தம் என்பது - பல பிறவி களுக்கான பாக்கியத்தை உருவாக்கும், எனவே தைரியத்தை ஒருபோதும் விட்டு விடாதீர்கள். விஷயங்கள் வரும் ஆனால் விஷயங்கள் மகாவீர் கிடையாது, நீங்கள் சர்வசக்திவானுடைய குழந்தைகள், உங்களுக்கு முன்னால் அந்த விஷயங்கள் எம்மாத்திரம்! விஷயங்கள் வரும் ஆனால் சென்று விடும். உங்களை விட்டு சென்று விடக்கூடிய விஷயங்களுக்கு பின்னால் சென்று உங்களுடைய அதிர்ஷ்டத்தை இழந்துவிடாதீர்கள். நல்லது, அமருங்கள். எனவே பாப்தாதா அன்பாக வாழ்த்துக்களை கொடுத்துக் கொண்டு இருக்கின்றார், எந்த விஷயத்திற்காக? தைரியம் வைத்துள்ளீர்கள் மேலும் பாப்தாதா ஒவ்வொரு குழந்தையினுடைய தைரியத்திற்கான சங்கல்பத் திற்காக மகிழ்ச்சி அடைகின்றார். எனவே ஹோலி கொண்டாடிவிட்டீர்களா? எரிக்கக்கூடிய ஹோலி யையும் கொண்டாடினீர்கள், பரமாத்மா சங்கத்தின் (தொடர்பின்) வண்ண ஹோலியையும் கொண்டாடினீர்கள். எரிப்பதையும் கொண்டாடினீர்கள், வண்ணத்தில் நனைவதையும் கொண்டாடி னீர்கள்.

இப்போது பாப்தாதா அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு டிரில் (பயிற்சி) செய்விக்க விரும்பு கின்றார், ஏனென்றால் நாலாபுறமும் சூழ்நிலைகள் இருக்கின்றன, எங்கே பார்த்தாலும் ஏதோ ஒரு சூழ்நிலை இருக்கின்றது, இப்படி நாலா புறங்களிலும் இருக்கக்கூடிய சூழ்நிலைகளுக்கு இடையே இருந்து கொண்டு உங்களால் ஒரு நொடியில் ஒருநிலைப்பட்ட மனோ நிலையில் (ஏகாக்கிரதா) இருக்க முடியுமா? நடைமுறையில் தங்களிடத்தில் அப்படிப்பட்ட அனுபவத்தை செய்கின்றீர்களா? அல்லது ஏதோ ஒரு காரணத்திற்காகவோ அல்லது காரண மின்றியோ - விஷயத்தைப் பற்றிய வீணான எண்ணங்களின் புயல் வரும்போது, அந்தச் சமயத்தில் உங்கள் மனதையும் புத்தியையும் ஒருநிலைப்படுத்த முடிகின்றதா? இந்த ஒருநிலைப்பாட்டினுடைய சக்தியின் டிரில்லைச் சரியான நேரத்தில் செய்து பார்த்திருக்கின்றீர்களா?

ஒருவேளை இத்தகைய நேரத்தில் ஒரு நொடியில் ஒருநிலைப்பாட்டின் சக்தி காரியத்தில் வரவில்லை என்றால், வரும் காலத்தில் இத்தகைய சூழ்நிலைகள் மீண்டும் மீண்டும் வரும். எனவே இன்று பாப்தாதா ஒரு நொடியில் ஃபுல்ஸ்டாப் (முற்றுப்புள்ளி) அதாவது ஒருநிலைப் பாட்டினுடைய நிலையின் பயிற்சியில் உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறார், ஏனென்றால் இயற்கை தனது பலவிதமான நிறங்களைக் காட்டத் தொடங்கி விட்டது. நாலாபுறமும் என்னென்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பது உங்கள் அனைவருக்கும் அதிகமாகவே தெரியும். எனவே மனதையும் புத்தியையும் அலைபாயச் செய்ய வைக்கும்படியான விஷயங்கள் வரத்தான் செய்யும், எனவே இப்போதே இந்த பயிற்சியைச் செய்யுங்கள், அதாவது மனதையும் புத்தியையும் உங்களால் ஒரு நொடியில் பரந்தாமத்தில் நிலைநிறுத்த முடிகின்றதா! இப்போது உங்களை பரிஸ்தா ரூபத்தில் நிலைநிறுத்துங்கள். (அடுத்து) இப்போது உங்களை நான் பிராமண், மாஸ்டர் சர்வசக்திவானாக இருக்கின்றேன், இந்த மாஸ்டர் சர்வ சக்திவான் என்ற நிலையில் நிலைநிறுத் குங்கள். (பாப்தாதா டிரில் செய்விக்கின்றார்) இத்தகைய பயிற்சியை நாள் முழுவதும் எப்போது நேரம் கிடைத்தாலும், மீண்டும் மீண்டும் மனதை ஒருநிலைப்படுத்தி செய்து பாருங்கள். நீங்கள் எதை விரும்புகிறீர்களோ, எங்கே விரும்புகிறீர்களோ அங்கே மனம் ஒருநிலைப்படட்டும். புருஷார்த்தம் செய்யும் போது ஒரு நிமிடம்(60 நொடிகள்) ஆகலாம், ஒரு நொடியில் ஃபுல்ஸ்டாப் (என்ற நிலை வர வேண்டும்), ஏனென்றால் அத்தகைய கிளர்ச்சிக்கான (அதாவது கடும் தொல்லை களுடைய பெரும் மாற்றத்திற்க்கான) நேரம் இப்போது தயாராகிக் கொண்டு இருக்கின்றது. எனவே மனக்கட்டுப்பாடு என்பது வேண்டும் - மனம் என்னுடையது, நான் மனம் அல்ல, என்னுடைய மனம் எனவே எனதின் மீது (என்னுடைய மனதின் மீது) எனது கட்டுப்பாடு இருக்கின்றதா?இந்த டிரில் மிகவும் அவசியம்.

இங்கே யாரெல்லாம் வந்திருக்கின்றீர்களோ, அந்த ஒவ்வொரு குழந்தையும் பாப்தாதாவிற்கு பிரியமானவர். ஏன்? எப்படிப்பட்டவராக கூட இருக்கலாம் ஆனால் பாப்தாதா ஒவ்வொரு குழந்தை யையும் கோடியில் ஒரு ஆத்மாவாகப் பார்க்கின்றார். புருஷார்த்தத்தில் பலவீனமாக கூட இருக்கலாம் ஆனால் தந்தைக்குப் பிரியமானவராக ஆகி இருக்கின்றார்(ஒவ்வொரு குழந்தையும்). மனதார 'எனது பாபா' என்று சொல்கின்றார்கள், அதனால் தந்தைக்கும் கூட அவர்கள் மிகவும் பிரியமானவர்கள். ஒரு விஷயத்தை மட்டும் பாப்தாதா மீண்டும் நியாபகப் படுத்துகின்றார், அதாவது உங்கள் முகம் எப்போதும் மகிழ்ச்சியாகவும், குஷியில் ஜொலிப்பதாகவும் இருக்கட்டும். விஷயங்கள் வந்து போகும் ஆனால் மகிழ்ச்சி போகக்கூடாது. சங்கமயுகத்தின் குஷி என்பது பரமாத்மாவின் பரிசு (கிஃப்ட்). எனவே ஹோலியினுடைய அர்த்தம் - அப்படிப்பட்ட விஷயங்கள் வரும் போது நான் ஹோலி கொண்டாடிவிட்டு வந்துள்ளேன் என்பது நினைவுக்கு வர வேண்டும், அதாவது ஹோ-லி - எது நடந்து முடிந்ததோ அந்த விஷயம் முடிந்து விட்டது, விஷயங்கள் போகட்டும், குஷி போய்விடக் கூடாது. குஷி என்பது பரமாத்மா கொடுத்த பரிசு, பொக்கிஷம். பாப்தாதா எப்போதும் சொல்வதுண்டு அதாவது - குஷியாக இருங்கள் மேலும் குஷியை பகிருங்கள் என்ற ஸ்லோகன் சதா நினைவில் இருக்கட்டும். எவ்வளவு பகிர்கின்றீர்களோ அவ்வளவு அதிகரிக்கும் மேலும் உங்களின் மகிழ்ச்சி நிறைந்த முகமானது நடந்தாலும், சுற்றினாலும் தானாகவே சேவை செய்து கொண்டு இருக்கும். யார் பார்த்தாலும், இவர்களுக்கு என்ன கிடைத்துள்ளது என்று யோசிப்பார்கள். எனவே இன்று ஹோலியின் மனதிற்குப் பிடித்த மிட்டாய்(இனிப்பு) என்பது குஷி. அனைவரும் சாப்பிட்டீர்களா? எப்போதும் சாப்பிட்டுக் கொண்டே இருங்கள். இதில் எந்த நோயும் வராது. நல்லது. பாப்தாதா மீண்டும் ஒரு சமிக்கை (குறிப்பு) கொடுத்துக் கொண்டு இருக்கின்றார், அதாவது சுய புருஷார்தம்; சுய புருஷார்த்தத்தின் மூலம் சுய முன்னேற்றம் மற்றும் சேவையில் முன்னேற்றம் - ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்திக் கொண்டே இருங்கள், முன்னேறிச் சென்று கொண்டே இருங்கள் மேலும் சதா பறந்து கொண்டே இருங்கள், மற்றவர்களையும் பறக்கச் செய்யுங்கள். நல்லது.

நாலாபுறமும் பாப்தாதாவின் அன்பில் மூழ்கியிருக்கக்கூடிய, நினைவு மற்றும் சேவையில் மென்மேலும் முன்னேறிச் செல்லக்கூடிய மற்றும் முன்னேற்றக்கூடிய, அமிர்தவேளையை மிகச் சிறந்த, சக்திவாய்ந்ததாக ஆக்கக்கூடிய மேலும் மனதின் சேவையின் மூலமாக இரக்க உள்ளம், அன்பு, கருணை உடையவர்களாக ஆகி ஆத்மாக்களுக்கு ஏதேனும் ஒரு பலனை கொடுக்கக் கூடியவர்கள் - தங்களின் இந்த விதியை (முறையை) மென்மேலும் முன்னேற்றிச் செல்லுங்கள். ஒவ்வொரு குழந்தையும் உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் இருப்பதை பாப்தாதா பார்க் கின்றார், ஆனால் இப்போது எதைச் சேர்க்க வேண்டும்? 'சதா' (எப்போதும்) என்ற வார்த்தையை சேர்த்துக் கொள்ளுங்கள். 'சில நேரங்களில்' என்ற வார்த்தையை அகராதியிலிருந்து நீக்கி விடுங்கள். எனவே நாலாபுறமும் உள்ள குழந்தைகள் ஹோலி கொண்டாடினீர்கள், பழையதை எரித்தீர்கள் மேலும் பரமாத்மாவினுடைய தொடர்பின் வண்ணத்தையும் பூசிக்கொண்டீர்கள், முடிந்து போனது முடிந்ததாக இருக்கட்டும் என்ற ஹோலியையும் கொண்டாடினீர்கள், அதனால் தான் பாப்தாதா நாலாபுறமும் உள்ள குழந்தைகளைத் தனது இதயத்தில் கொண்டு வந்து நேரடியாக பார்த்துக் கொண்டு இருக்கின்றார். பாப்தாதாவின் பல கோடி மடங்கு அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

ஆசீர்வாதம்:
எப்போதும் கட்டளை எனும் திலகமிட்டுக் கொண்டு
முதற்பரிசை பெறக்கூடிய கட்டளைக்கு கீழ்படிந்தவர் ஆகுக.

எந்தக் குழந்தைகளின் நெற்றியில் கீழ்ப்படிதல் எனும் நினைவின் திலகம் இடப்பட்டிருக்கின்றதோ, அவர்கள் ஒரு சங்கல்பத்தைக்கூடத் தந்தையின் கட்டளையின்றி எழச் செய்யமாட்டார்கள், அவர்களுக்கு முதற்பரிசு கிடைக்கின்றது. சீதைக்கு லட்சுமணக் கோட்டிற்குள் அமர வேண்டும் என்று கட்டளை இருந்தது போல, ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும், ஒவ்வொரு சங்கல்பத்தைச் செய்யும் போதும் தந்தையின் கட்டளை எனும் கோட்டிற்குள் இருங்கள் அப்பொழுது சதா பாதுகாப்பாக இருப்பீர்கள். எந்த வகையான ராவண சமஸ்காரங்களும் உங்களுடன் யுத்தம் செய்யாது மேலும் நேரமும் வீணாகாது.

சுலோகன்:
யாரிடமாவது பற்றுதல் இருந்தால், அந்தப் பற்றுதல் புருஷார்த்தத்தில் (முயற்சியில்) நிச்சயமாகச் சோம்பலை உருவாக்கும்.


அவ்யக்த சமிக்கை: சதா ஆடாத-அசையாத (உறுதியான),

ஒரே சீரான மனோநிலையை அனுபவம் செய்யுங்கள்.

எப்போதும் ஒருவரின் நினைவில் இருந்து, ஏகரஸ் நிலையை உருவாக்கினால், 1-1-1 ல் (முதல் பிரிவில், முதல் வம்சத்தில், முதல் ரேங்கில் (தரவரிசையில்) - சத்யுகத்தில் பிறக்கக் கூடிய வர்களாக) வந்து விடுவீர்கள். வெளியே இருந்தாலும் கூட "தந்தையைப் பார்த்தல், தந்தையைப் பின்பற்றுதல்" என்ற பாடத்தை உறுதிப் படுத்துங்கள், அப்போது எந்தச் சூழ்நிலையிலும் தடுமாற மாட்டீர்கள். பிரம்மா பாபாவிற்கு முன்னால் எத்தனையோ விஷயங்கள் வந்தன, ஆனால் அவர் அந்த விஷயங்களைப் பார்க்காமல் ஒரு தந்தையை மட்டுமே பார்த்தார், அதனால் அவர் முதலிடத்தை பிடித்தார். எனவே தந்தையைப் பின்பற்றுங்கள்