24.06.26    காலை முரளி            ஓம் சாந்தி      பாப்தாதா,   மதுபன்


இந்தக் கர்ம சேத்திரத்தில் கர்மம் என்பது அநாதியான ஒரு பொருள்,
நீங்கள் கர்மத்தை விடக் கூடாது, ஆனால் கர்மயோகி ஆக வேண்டும்
(ஜெகதம்பா மம்மாவின் நினைவு நாளன்று படிப்பதற்காக,
அவரால் உச்சரிக்கப்பட்ட இனிய மகாவாக்கியங்கள்)

இந்த சிருஷ்டி கர்மத்திற்கான சேத்திரம். இங்கே ஒவ்வொரு மனித ஆத்மாவும் அவரவர் பார்ட்டை நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் பரமாத்மாவுக்கும் பார்ட் உள்ளது. ஆனால் அவர் ஆத்மாக் களைப் போல் பிறப்பு-இறப்பில் வருவதில்லை. ஆத்மாக்களைப் போல் அவருடைய கர்மங்களின் கணக்கு தலைகீழாக ஆவதில்லை. அவர் சொல்கிறார் --- நானோ ஆத்மாக்களாகிய உங்களை விடுவிப்பதற்காகவே வருகிறேன். எனவே என்னை லிபரேட்டர், பந்தனங்களில் இருந்து விடுவிப் பவர் கதி-சத்கதி அளிப்பவர் எனச் சொல்கிறார்கள்.

ஆத்மா மீது படிந்துள்ள மாயாவின் பந்தனத்தை அகற்றித் தூய்மையாக்குகிறார். இன்னும் சொல்கிறார்- எனது வேலை, ஆத்மாக்களை அனைத்து பந்தனங்களில் இருந்தும் விடுவித்து, திரும்ப அழைத்துச் செல்வதாகும். எனவே அநாதி நியமம் மற்றும் விதிமுறைகளை அவர் களுக்கும் புரிய வைக்க வேண்டும். பிறகு இந்த மனித சிருஷ்டியின் விருத்தி எவ்விதமாக ஏற்படு கிறது, பிறகு அது குறைவதற்கான நேரமும் வருகிறது. அதிகமானால் அதிகமாகிக் கொண்டே போகும் என்று அந்த மாதிரி கிடையாது. குறையவும் செய்கிறது. ஆக, சிருஷ்டியில் ஒவ்வொரு பொருளுக்கும் நியமம் உள்ளது. முதலில் குழந்தை, பிறகு பையன், பிறகு இளைஞன், பிறகு முதியவன். ஆக, முதுமையும் விரைவில் வருவதில்லை, முதியவர் ஆகி-ஆகியே இறுதி இற்றுப் போன (முதுமை) நிலை ஆகி விடுகிறது. ஆக, ஒவ்வொரு விஷயத்தின் வளர்ச்சி, பிறகு அதன் இறுதி வருவது என்பதும் நியமமாக உள்ளது. இதே போல் சிருஷ்டியின் தலைமுறைக்கும் கூட நியமம் உள்ளது. ஒரு வாழ்க்கையின் படிநிலையும் உள்ளதென்றால், பிறகு பிறவிகளுக்கும் படிநிலைகள் (ஸ்டேஜஸ்) உள்ளன. பிறகு சென்று விட்ட தலைமுறைகளுக்கும் படிநிலைகள் உள்ளன. இதே போல் அனைத்து தர்மங்களுக்கும் படிநிலைகள் உள்ளன. முதலில் வரும் தர்மம் மற்ற அனைத்தையும் விட சக்தி வாய்ந்ததாகும். பின்னால் மெது-மெதுவாக வரும் தர்மங்களின் சக்தி குறைந்து கொண்டே போகிறது. ஆக, தர்மங்களின் பிரிவு, தர்மங்களின் நடைமுறைகள், ஒவ்வொரு விஷயமும் நியமங்களின் படி செல்கின்றன. இந்த அனைத்து விஷயங்களையும் புரிந்து கொள்ள வேண்டும்.

இதே கணக்கின் படி பாபாவும் சொல்கிறார் - எனக்கும் இதில் பார்ட் உள்ளது. நானும் ஓர் ஆத்மா, நான் கடவுள், நான் வேறு எந்த ஒரு பொருளாகவும் இல்லை. நானும் கூட ஆத்மாவே தான், ஆனால் என் வேலை மிகப்பெரியது மற்றும் உயர்ந்தது. எனவே என்னைக் கடவுள் எனச் சொல் கின்றனர். எப்படி ஆத்மா நீங்கள் இருக்கிறீர்களோ, அது போல் தான் நானும் இருக்கிறேன். எப்படி உங்கள் குழந்தை இருக்கிறாரோ, அவரும் கூட மனிதர் தான். அதில் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை இல்லையா? ஆக, நானும் ஆத்மா தான். ஆத்மா மற்றும் இன்னோர் ஆத்மாவுக் கிடையில் எந்த வேறுபாடும் இல்லை. ஆனால் காரியத்தில் அதிக வேறுபாடு உள்ளது. அதனால் சொல்கிறார் - எனக்கு என்ன கடமை உள்ளதோ, அது அனைத்திலிருந்தும் வேறுபட்டதாகும். நான் ஒன்றும் எல்லைக்குட்பட்ட ஒரு தர்மத்தின் ஸ்தாபகர் கிடையாது. நானோ உலகைப் படைப்பவன். அவர்கள் தர்மத்தைப் படைப்பவர்கள். எப்படி அந்த ஆத்மாக்கள் தங்கள் காரியத்தைத் தங்கள் சமயத்தில் செய்கிறார்களோ, அது போல் நானும் கூட எனது சமயத்தில் வருகிறேன். எனது காரியம் விசாலமானது. எனது காரியம் உயர்ந்தது மற்றும் அனைத்திலிருந்தும் தனித்துவமானது. அவரை சர்வசக்திவான் என்றும் சொல்கிறார்கள். அனைத்திலும் சக்திசாலி காரியம், ஆத்மாக்களை மாயாவின் பந்தனத்திலிருந்து விடுவிப்பது மற்றும் புது உலகின் கன்றை நடுவதாகும். எனவே அவரை ஆங்கிலத்தில் ஹெவன்லி காட் ஃபாதர் எனச் சொல்கின்றனர். எப்படி கிறிஸ்துவை கிறிஸ்தவ மதத்தின் ஃபாதர் என்று சொல்கிறார்களோ, அவரை ஹெவன்லி காட் ஃபாதர் எனச் சொல்ல மாட்டார்கள். ஹெவன் ஸ்தாபனை செய்பவர் பரமாத்மா. ஆக, ஹெவன் உலகம் தான் இல்லையா? ஹெவன் ஒன்றும் ஒரு தர்மம் கிடையாது. ஆக அவர் உலகை ஸ்தாபனை செய்பவர் ஆகிறார். மற்றும் அந்த உலகத்தில் ஒரு தர்மம், ஒரு ராஜ்யம் இருக்கும். தத்துவங்கள் முதலானவை அனைத்தும் மாறி விடும். எனவே அவரை ஹெவன்லி காட் ஃபாதர் எனச் சொல்கின்றனர்.

இரண்டாவது, காட் இஸ் ட்ரூத் என்று சொல்கிறார்கள். உண்மை என்பது என்ன பொருள்? இதுவும் புரிந்து கொள்வதற்கான விஷயம். அநேகர் நினைக்கிறார்கள் - யார் உண்மை பேசுகிறாரோ, அவர் தாம் கடவுள். கடவுள் வேறெந்தப் பொருளும் இல்லை. உண்மை பேச வேண்டும். அவ்வளவு தான். ஆனால் அப்படி இல்லை. காட் இஸ் ட்ரூத் என்பதன் அர்த்தம் - கடவுள் தாம் வந்து அனைத்து விஷயங்களின் உண்மையைச் சொல்லியிருக்கிறார். காட் இஸ் ட்ரூத் என்றால், கடவுள் தாம் உண்மையைச் சொல்கிறார். அதில் தான் உண்மை உள்ளது. அதனால் தான் அவர் ஞானம் நிறைந்தவர் (நாலெட்ஜ்ஃபுல்) எனப் படுகிறார். ஞானத்தின் கடல், ஆனந்தத்தின் கடல், காட் நோஸ் (ஈஸ்வரன் அறிவார்).. ஆக, விசேஷமாக ஏதோ அறிந்து கொள்வதற்கான விஷயம் இருக்கிறது இல்லையா? அப்படியானால் அது எந்த மாதிரியான அறிதல்? இவர் திருடினார் என்றால் அது கடவுளுக்குத் தெரியும் என்று அப்படி இல்லை. அவருக்கு எல்லாம் தெரிந்திருக்கும். ஆனால் அவரது மகிமை உள்ளது இல்லையா, அது இதைப் பற்றியது தான் - கீழே விழுந்து விட்ட நமது உலகம் எப்படி உயர்வது - இந்தச் சக்கரத்தின் விஷயங்களை அறிந்திருக்கிறார். அதனால் காட் நோஸ் (கடவுள் அறிவார்) எனச் சொல்கிறார்கள். எனவே பரமாத்மாவின் மகிமை அந்த விதமாக வருகிறது - அது மனிதரில் இருந்து வேறுபட்டது. ஏனென்றால் அவரது அறிதல் என்பது அனைவரில் இருந்தும் வேறுபட்டதாகும். மனிதரின் அறிதல் எல்லைக்குட் பட்டதாகும். மனிதன் சொற்ப ஞானம் உள்ளவன் எனச் சொல்லவும் செய்கிறார்கள். மற்றும் பரமாத்மா பற்றிச் சொல் கின்றனர் - அவர் அனைத்தும் அறிந்தவர். அதை ஆங்கிலத்தில் நாலெட்ஜ்ஃபுல் எனச் சொல் கின்றனர். அதாவது அவர் அனைத்தும் அறிந்தவர். ஆக, யார் அனைத்தும் அறிவாரோ, அவர் தாம் உண்மையை அறிந்து கொள்ள முடியும். யதார்த்த விஷயங்களைப் பற்றிய ஞானம் யாரிடம் உள்ளதோ, அவர் அவசியம் அதை அனைவர்க்கும் தருவார் இல்லையா? தாம் அறிவார், மற்றவர் களுக்குத் தர மாட்டார் என்றால் அவரால் நமக்கு என்ன நன்மை? அறிந்து கொள்ள விடுங்கள். ஆனால் அப்படி இல்லை. அவர் அறிந்திருப்பதால் நமக்கு ஏதோ நன்மை கிடைத்துள்ளது என்றால் அப்போது நாம் அவருடைய தகுதிகளைப் பாடுகிறோம். எப்போதாவது ஏதாவது நடந்து விட்டால் சொல்கிறார்கள் - பகவானே! இப்போது நீ இதைச் செய், நன்மை செய், இரக்கம் கொள், எனது துக்கத்தைப் போக்கு. இது போல் நாம் வேண்டுகிறோம் இல்லையா? அவருடன் ஏதோ சம்பந்தம் உள்ளது இல்லையா, அதனால் அந்த மாதிரி நினைவு செய்கின்றனர் - எப்படி நமக்கு ஏதோ அவர் உதவி செய்திருப்பதைப் போல. ஒரு போதும் அவர் செய்ததில்லை என்றால் நாம் ஏன் அவரிடம் வேண்டுதல் வைக்கிறோம்? யாராவது கஷ்ட நேரத்தில் உதவி செய்கிறார்கள் என்றால் மனதில் எண்ணம் வருகிறது - இவர் நமக்கு மிகவும் கஷ்டமான நேரத்தில் உதவி செய்திருக்கிறார். சரியான சமயத்தில் என்னை இவர் காப்பாற்றி இருக்கிறார். எனவே அவருக்காக மனதில் அன்பு உள்ளது. ஆக, பரமாத்மாவுக்காகவும் அதே போல் அன்பு வருகிறது - அவர் நமக்கு சமயத்தில் உதவி செய்திருக்கிறார். ஆனால் எப்போதாவது யாருக்காவது நன்மை நடைபெற்று விட்டால் இதை பகவான் செய்தார் என்று அந்த மாதிரி கிடையாது. பகவான் இப்படித் தான் செய்கிறார் என்பதாக. ஆனால் அவருடையது பெரிய காரியம், உலகத்தின் காரியம். உலகத்தோடு தொடர்பு டைய விஷயம். மற்றப்படி யாருக்காவது ஏதோ கொஞ்சம் கிடைத்து விட்டது என்றால் இதை பகவான் தான் செய்தார் என்று அப்படிக் கிடையாது. நாமும் கூட நல்ல கர்மம் செய்கிறோம் என்றால் அந்தக் கர்மத்தின் பலன் கிடைக்கிறது. நல்ல, கெட்ட கர்மங்களின் கணக்கு நடைபெறு கின்றது. அதையும் நாம் அடைந்து கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் பரமாத்மா வந்து என்ன கர்மம் கற்பித்தாரோ, அதனுடைய பலன் வேறு. அல்பகால சுகமோ புத்தியின் ஆதாரத்திலும் கிடைக்கிறது. ஆனால் அவர் என்ன ஞானம் கொடுத்தாரோ, அதனால் நாம் சதா சுகம் பெறுகிறோம். ஆக, பரமாத்மாவின் காரியம் வேறாக உள்ளது இல்லையா? அதனால் சொல்கிறார் - நான தான் வந்து கர்மத்தைப் பற்றிய யதார்த்த ஞானத்தைக் கற்பிக்கிறேன். அது தான் கர்மயோகம் சிரேஷ்டமானது எனச் சொல்லப்படுகிறது. இதில் கர்மத்தையோ, வீடு-வாசலையோ விடுவதற்கான விஷயம் கிடையாது. உங்கள் கர்மங்களை எப்படிப் பவித்திரமாக்குவது என்பதை மட்டும் நான் கற்பிக்கிறேன். ஆக, கர்மத்தைப் பவித்திரமாக்க வேண்டும். கர்மம் செய்வதை விடக்கூடாது. கர்மமோ அநாதியான பொருள். இந்தக் கர்ம சேத்திரமும் அநாதியானது. மனிதர்கள் இருந்தால் கர்மமும் இருக்கும். ஆனால் அந்தக் கரமத்தை நீங்கள் எப்படி சிரேஷ்டமானதாக ஆக்குவது என்பதை நான் வந்து கற்பிக்கிறேன். இதன்மூலம் பிறகு உங்கள் கர்மத்தின் கணக்கு அகர்மமாக இருந்து விடுகிறது. அகர்மம் என்பதன் பொருள் - எதுவும் தீய கணக்காக ஆவதில்லை.

இப்படியே சொல்லிக் கொண்டிருப்பது கூடாது - அதாவது நான் இதைச் செய்வேன், அதைச் செய்வேன். உலகம் என்ன சொல்லும், அவர்கள் என்ன சொல்வார்கள். அட, உலகம் என்ன சொல்லும். இதை விட்டு விடுங்கள். இப்போது இந்த உலகமே சென்று விடப்போகிறது. இப்போதோ மரணம் முன்னாலேயே நின்று கொண்டுள்ளது. நீங்கள் இவ்வளவு நீள-அகலமாகத் தயார் செய்து கொண்டிருக்கிறீர்களே, அவை வீணானவையாகவே செய்து கொண்டிருக்கிறீர்கள். இப்போது பாபா சொல்கிறார் - அப்படி வீணாகப் போவதை நிறுத்திச் சேமியுங்கள். இந்த சரீர நிர்வாகத்திற்காக எவ்வளவு வேண்டுமோ, செய்யுங்கள். எவ்வளவு உங்களுக்கு படைப்புடன் கணக்கு-வழக்கு இருக்குமோ, அவ்வளவு செய்யுங்கள். நான் எங்கே பராமரிப்பேன்? இதை (உங்கள் படைப்பை) நீங்கள் தாம் பராமரிக்க வேண்டும். எது அவசியமோ, அதை நீங்கள் செய்யலாம். ஆனால் இப்போது என்ன அதிகப்படியாகப் படைத்துக் கொண்டிருக்கிறீர்களோ, அதை நான் தடை செய்கிறேன். ஏனென்றால் இப்போது அதெல்லாம் கீழே விழத்தான் போகின்றன. ஏன் உங்கள் நேரத்தைத் தவறான வழியில் வீணடிக்கிறீர்கள்? இந்தத் தவறானவற்றின் சச்சரவுகளால் தான் நீங்கள் துக்கமடைந்திருக்கிறீர்கள். அந்த சச்சரவுகளில் இருந்து நீஙகள் எப்படி விடுபடுவது என்பதைத் தான் உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். பிறகும் உட்கார்ந்து கொண்டு அநேக சாக்குப்போக்குகள் சொல்வது என்பது எங்கே உள்ள வழிமுறை? பிறகு பாபாவும் சொல்கிறார் - பாருங்கள், இப்போது எனக்கு நேரடியாக உங்கள் கைவிரலைக் கொடுக்கவில்லை என்றால், கை கொடுக்கவில்லை என்றால், நான் பிறகு மூக்கைப் பிடித்து அழைத்துச் செல்வேன். மூக்கைப் பிடித்தால் பிறகு மூச்சுத் திணரும். பிறகு துக்கம் ஏற்படும். தண்டனைகள் பெற வேண்டி இருக்கும் இல்லையா? எனவே சொல்கிறார் - இப்போது கையோடு கை சேர்த்துச் செல்வதற்கான நேரம் வந்து விட்டது. நேராகச் செல்லவில்லை என்றால் பிறகு என் கையில் உங்கள் மூக்கு வந்து விடும். பிறகு துக்கம் அடைவீர்கள். பிறகு பாருங்கள். பிறகு அந்த நேரம் எதுவும் செய்ய இயலாது. எனவே பாபா சொல்கிறார் - குழந்தைகளே, இப்போது நீங்கள் என்னுடையவர்களாகி, என்னிடம் வந்து, நான் சொல்வதைக் கேட்டு, பிறகும் கூட எதுவும் செய்யவில்லை என்றால் அதற்காக மிகக் கடுமையான தண்டனைகள் உள்ளன. எனவே எந்தப் பாவப்பட்டவர்களுக்குத் தெரியாதோ, அவர்களின் விஷயம் தனி. மற்றப்படி யாருக்குத் தெரியுமோ, யார் அமர்ந்து, நான் சொல்வதைக் கேட்டு, பிறகு இதே விஷயங்களில் தவறிழைத்தால் அவர்கள் மீது கருணை கிடையாது. எப்படி 10 மடங்கு நன்மை உள்ளதோ, அது போல் 10 மடங்கு நஷ்டமாகி விடும். அதனால் சொல்கிறேன், தனது நஷ்டத்தை, இழப்பை நல்லபடியாகப் புரிந்து கொள்ளுங்கள். நல்லபடியாக உங்கள் புத்தியைக் கொஞ்சம் திறந்து வையுங்கள். இப்போது பாபா மீது புத்தி யோகத்தை ஈடுபடுத்துவீர்களானால் சக்தி கிடைக்கும். ஆக, இந்த அனைத்து விஷயங் களையும் புரிந்து கொள்ளுங்கள். மறக்காதீர்கள்.

இப்போது நடந்து கொண்டிருக்கும் சமயத்தைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். புத்தியைத் திறந்து சமயத்தின் முழு நன்மையைப் பெறுங்கள். தனது முழு அதிர்ஷ்டத்தையும் திறந்து வையுங்கள். சொல்லவும் செய்கிறார்கள், எப்படி சேர்க்கையோ, அது போலவே நிறம் என்று. எனவே யாரிடம் இப்போது இந்த தாரணை முழுமையாக இல்லையோ, அப்போது மாயாவின் சேர்க்கையின் நிறம் படிந்து விடும். அதனால் தான் சொல்கிறார்கள் - தீயதைக் கேட்காதீர்கள், பார்க்காதீர்கள், பேசாதீர் கள்.. இது போல் அநேக தீமைகள் உள்ளன, இங்கேயும் அநேகரை விடுவதில்லை. பிறகு ஒருவர் மற்றவரின் சங்கதோஷத்தில் வந்து விடுகின்றனர். எனவே சொல்கிறார் - அத்தகைய சங்கதோஷத்திலிருந்து விலகிப் பாதுகாப்பாக இருங்கள். சங்கதோஷம் வெளியில் உள்ளது, இங்கே இல்லை என்று அந்த மாதிரி நினைக்காதீர்கள். இங்கேயும் அது சுற்றிக் கொண்டே இருக்கிறது. ஏனென்றால் இப்போது அதன் ராஜ்யம் இல்லையா? எனவே பாபா சொல்கிறார் - நல்லபடியாகக் கவசம் அணிந்து கொண்டு இருங்கள். ஒருவர் கவசம் அணிந்திருந்தால் அவரை குண்டு துளைக் காது. யோகம் தான் கவசம். ஞானம் என்பது வாள். இந்த அனைத்து அஸ்த்திர-சஸ்திரங்களைத் தன்னிடம் நல்லமுறையில் பாதுகாப்பாக வைத்திருங்கள்.

சொல்லவும் செய்கிறார்கள் - யார் செய்கிறார்களோ, அவர்கள் அடைகிறார்கள். இவையோ வருங்காலப் பிராலப்தத்தை உருவாக்குவதற்கான விஷயங்கள். இங்கோ பிராலப்தத்தை அனுபவிக்கக் கூடாது இல்லையா? இங்கோ யாரும் குரு ஆகி அமரக்கூடாது. இதில் யாரும் தவறுதலாகப் புரிந்து கொள்ளக் கூடாது. எனவே இவை அனைத்தும் புரிய வைக்கப் படுகிறது. ஆக, இந்த அனைத்து விஷயங்களையும் கவனத்தில் வைத்துத் தன்னைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். இங்கே எந்த ஒரு செலவின் விஷயமும் இருக்கக் கூடாது. இப்போது இந்த அனைத்து செலவுகளையும் மற்றவர்களின் நன்மைக்காகவே பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு பைசாவையும் கூட இதே காரியத்தில் ஈடுபடுத்த வேண்டும். நல்லது.

அப்படிப்பட்ட பாப்தாதா மற்றும் தாயின் இனிமையிலும் இனிமையான மிக நல்ல எச்சரிக்கையாக இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். நல்லது.

கேள்வி - மம்மா, நாம் நடமாடும் போதும் சுற்றி வரும் போதும் யோகத்தின் உயர்ந்த அவஸ்தாவில் எப்படி நிலைத்திருப்பது?

பதில் : உண்மையில் நம்முடைய இந்த வாழ்க்கை இயற்கையான யோகத்தினுடையதாக இருக்க வேண்டும். ஏனென்றால் யோகம் என்பது நிச்சயம். எனவே முற்றிலும் லட்சியத்தை நிலையாக வைத்து நடைமுறையில் அந்த சொரூபம் ஆகிவிட வேண்டும். நிச்சய ரூபம் ஆகி, கர்மேந்திரியங் களால் கர்மம் செய்யுங்கள். ஸ்தூல கர்மேந்திரியங்கள் எந்தக் காரியத்தைச் செய்து கொண்டிருந் தாலும் தன்னை அந்த சுக சொரூப அவஸ்தாவில் மூழ்கியவராக வைத்திருக்க வேண்டும். உங்கள் முகம் எப்போதும் சுக சொரூப ரமணீகரமாகக் காணப்பட வேண்டும். எந்த ஓர் அசுத்த சங்கல்ப-விகல்பமும் இருக்கக் கூடாது. ஈஸ்வரிய ஆனந்தத்தில் உள்ளார்ந்த மூழ்கிய அவஸ்தாவில் இருப்பீர்களானால் பிறகு எந்த ஓர் அசுத்த சங்கல்ப-விகல்பமும் உருவாகாது. சுத்தமான, தூய்மையான நிலத்தில் உருவாகும் சங்கல்பங்கள் உலக மக்களின் ஒற்றுமைக்காக அல்லது தனது சுய முன்னேற்றத்திற்காக இருக்கும். இது மிக இனிமையான அழகிய அவஸ்தா – சமயத் தில் உதவி செய்வதாக இருக்கும் அத்தகைய ஈஸ்வரிய அலௌகிக இனிய தூய்மையான வாழ்க்கையை உருவாக்குவதற்கான பொன்னான வாய்ப்பு இப்போது தான் உங்களுக்குக் கிடைத்துள்ளது. எனவே அத்தகைய அவஸ்தாவை உருவாக்குவதற்காகக் கொஞ்சம் முயற்சி செய்யுங்கள். எப்போது நாம் யோகத்தில் அமர்கிறோமோ, அப்போது உள்ளுக்குள் மந்திரம், பூஜை ஜபம் முதலிய எதுவும் செய்வதில்லை. எப்படி பக்தி மார்க்கத்தில் சிலர் உள்ளுக்குள்ளேயே பிரார்த்தனை செய்கிறார்கள், மாலை ஜெபிக்கிறார்கள், மூர்த்தியை முன்னால் வைத்து மலர்களை அர்ச்சிக்கிறார்கள், அவர்கள் அனைத்தையும் மனதின் உள்ளுக்குள்ளேயே செய்கிறார்கள் அதை மனசா பூஜை எனச் சொல்கிறார்கள். ஆனால் நமது யோகத்தில் நாம் நமது சுய சொரூபத்தில் நிலைத்திருந்து சுக சொரூபம் ஆகி விடுகிறோம். தனது மனதுடன் கூடவே அனைத்துக் கர்மேந்திரியங்களையும் கட்டுப்படுத்தி ஒருமுகப்பட்டவராகி ஈஸ்வரிய சுக சொரூபம் ஆகி விடுகிறோம். இதற்காக யோகத்தின் சமயம் தனக்காக நிர்ணயிக்கப் படுகிறது. அங்கே ஒரே சமயத்தில் அமர்ந்து அப்பியாசம் செய்கிறோம். உலகாயத விஷயங்களில் இருந்து தொடர்பைத் துண்டித்து அவ்யக்த சம்பந்தத்தில் மட்டும் தொடர்பை இணைத்து வைக்க வேண்டும். அப்போது நினைவு செய்வது எளிதாகி விடும். நல்லது. ஓம் சாந்தி.

ஆசீர்வாதம்:
பாப்தாதாவின் துணை மூலம் மாயாவை தூரத்திலிருந்தே
மூர்ச்சையடையச் செய்யக்கூடிய மாயாஜீத், ஜெகத்ஜீத் ஆகுக.

எப்படி பாபாவுக்கு சிநேகி ஆகியிருக்கிறீர்களோ அது போல் பாபாவைத் துணையாக ஆக்கிக் கொள்வீர் களானால் மாயா தூரத்திலிருந்தே மூர்ச்சையாகி விடும். முதலில் செய்த உறுதிமொழி - உங்களுடனே உணபேன், உங்களுடனே அமர்வேன், உங்களுடனே ஆன்மாவை மகிழ்விப்பேன். இந்த உறுதி மொழியின் படி முழு நாளின் தினச்சரியாவில் ஒவ்வொரு காரியத்தையும் பாப்தாதாவின் துணையுடன் செய்வீர்களானால் மாயா தொந்தரவு செய்ய இயலாது. அது அழிந்து விடும். ஆக, துணைவரை சதா துணையில் வைத்துக் கொள்ளுங்கள். துணையின் சக்தி மூலம் அல்லது சந்திப்பில் மூழ்கி இருப்பதன் மூலம் மாயாவை வென்றவராக, உலகை வென்றவராக ஆகி விடுவீர்கள்.

சுலோகன்:
தனது உயர்ந்த உள்ளுணர்வு மூலம் உலகியல்
வாழ்வின் சூழ்நிலைகளை (பரிஸ்திதிகளை) மாற்றி விடுங்கள்.


அவ்யக்த சமிக்ஞை: சதா மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் தங்களது சுபாவத்தை சரளமானதாக ஆக்கிக் கொள்ளுங்கள், சகிப்புத்தன்மை உடையவர் ஆகுங்கள்.

அவ்யக்த ஸ்திதி ரூப கண்ணாடியைத் தூய்மையாகவும் தெளிவானதாகவும் ஆக்குவதற்கு சரளத் தன்மை, சிரேஷ்டதா மற்றும் பொறுமை இந்த மூன்று விஷயங்கள் மீது கவனம் கொடுங்கள். மூன்றில் ஒரு விஷயத்தில் குறை இருந்தாலும் கண்ணாடி மீதும் குறைவின் கறை காணப்படும். எனவே எந்த ஒரு காரியம் செய்தாலும் அதில் சாதாரணத் தன்மை காணப்படக் கூடாது. சாதாரணத் தன்மையை உயர்ந்ததாக மாற்றி விடுங்கள். ஒவ்வொரு காரியத்திலும் பொறுமை மற்றும் வார்த்தையில் சரளத்தன்மையை தாரணை செய்யுங்கள் அப்போது சேவையில் வெற்றி காணப்படும்.