24-07-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! தந்தையிடத்தில் மொத்த வியாபாரம் செய்யக் கற்றுக் கொள்ளுங்கள். மொத்த வியாபாரம் என்பது மன்மனா பவ ஆகும். அல்லாவை நினைவு செய்ய வேண்டும் மற்றும் செய்விக்க வேண்டும். மற்ற அனைத்தும் சில்லரை வியாபாரம் ஆகும்.

கேள்வி:
தந்தை தனது வீட்டிற்கு எந்த குழந்தைகளை வரவேற்பார்?

பதில்:
எந்த குழந்தைகள் மிக நல்ல முறையில் தந்தையின் வழிப்படி நடக்கின்றார்களோ, வேறு யாரையும் நினைவு செய்யாமல் இருக்கின்றார்களோ, தேகம், தேகத்தின் அனைத்து சம்மந்தங்களிலிருந்து புத்தியை நீக்கி ஒரு தந்தையை நினைவு செய்கின்றார்களோ, அப்படிப்பட்ட குழந்தைகளை தந்தை தனது வீட்டிற்கு வரவேற்பார். இப்பொழுது தந்தை தனது குழந்தைகளை மலர்களாக ஆக்குகின்றார். பிறகு மலரான குழந்தைகளை தந்தை தனது வீட்டிற்கு வரவேற்கின்றார்.

ஓம் சாந்தி.
குழந்தைகள் தங்களது தந்தை மற்றும் சாந்திதாமம், சுகதாமத்தின் நினைவில் அமர வேண்டும். ஆத்மாவானது தந்தையை மட்டுமே நினைவு செய்ய வேண்டும். இந்த துக்கதாமத்தை மறந்து விட வேண்டும். தந்தை மற்றும் குழந்தைகளின் இந்த சம்மந்தமானது இனிமையான தாகும். இப்படிப்பட்ட இனிய சம்மந்தம் வேறு எந்த தந்தைக்கும் ஏற்படாது. சம்மந்தமானது முதலில் தந்தையிடம், பிறகு ஆசிரியரிடம், பிறகு குருவிடம் ஏற்படுகின்றது. இப்பொழுது இங்கு இந்த மூவரும் ஒருவராக இருக்கின்றார். இதுவும் புத்தியில் நினைவிருந்தால், குஷிக்கான விசய மல்லவா! ஒரே ஒரு தந்தை கிடைத்திருக்கின்றார், அவர் மிக எளிய வழியைக் கூறுகின்றார். தந்தையை, சாந்திதாமத்தை மற்றும் சுகதாமத்தை நினைவு செய்யுங்கள். இந்த துக்கதாமத்தை மறந்து விடுங்கள். ஊர் சுற்றினாலும் புத்தியில் இது மட்டுமே நினைவு இருக்க வேண்டும். இங்கு தொழில் போன்ற காரியங்கள் வேறு எதுவும் கிடையாது. வீட்டில் அமர்ந்திருக்கின்றீர்கள். 3 வார்த்தைகளை நினைவு செய்ய தந்தை கூறுகின்றார். உண்மையில் இருப்பது ஒரு வார்த்தை தான் - தந்தையை நினைவு செய்யுங்கள். தந்தையை நினைவு செய்வதன் மூலம் சுகதாமம் மற்றும் சாந்திதாமம் இரண்டு ஆஸ்தியின் நினைவு வந்து விடுகின்றது. கொடுக்கக்கூடியவர் தந்தை மட்டுமே. நினைவு செய்வதன் மூலம் குஷியின் அளவு அதிகரிக்கின்றது. குழந்தைகளாகிய உங்களது குஷியானது மிகவும் பிரபலமானது. பாபா நம்மை வீட்டிற்கு வரவேற்பார் என்பது குழந்தைகளின் புத்தியில் இருக்கின்றது. ஆனால் யார் நல்ல முறையில் தந்தையின் வழிப்படி நடக்கின்றார்களோ, வேறு யாரையும் நினைவு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களை வரவேற்பார். தேகம், தேகத்தின் அனைத்து சம்மந்தங்களிலிருந்து புத்தியை நீக்கி என் ஒருவனை மட்டுமே நினைவு செய்யுங்கள். பக்திமார்க்கத்தில் நீங்கள் அதிக சேவைகளை செய்தீர்கள். ஆனால் செல்லக்கூடிய வழி கிடைக்கவே இல்லை. இப்பொழுது தந்தை மிகவும் எளிய வழியைக் கூறுகின்றார்! தந்தை, தந்தையாகவும் இருக்கின்றார், ஆசிரியராகவும் இருக்கின்றார், உலகின் முதல், இடை, கடையின் ஞானத்தைக் கூறுகின்றார், வேறு யாரும் புரிய வைக்க முடியாது என்பதை மட்டும் நினைவு செய்தால் போதும். இப்பொழுது வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று தந்தை கூறுகின்றார். பிறகு முதன் முதலாக சத்யுகத்திற்கு வருவீர்கள். இந்த (மோசமான) சிச்சீ! உலகிலிருந்து இப்பொழுது செல்ல வேண்டும். இங்கு அமர்ந்திருக்கலாம், ஆனால் இங்கிருந்து இப்பொழுது சென்று விட வேண்டும். தந்தையும் குஷியடை கின்றார். குழந்தைகளாகிய நீங்கள் அதிக காலமாக தந்தையை அழைத்தீர்கள். இப்பொழுது மீண்டும் தந்தையை வரவேற்கிறீர்கள். நான் உங்களை மலர்களாக ஆக்கி பிறகு சாந்திதாமத்தில் வரவேற்பேன் என்று தந்தை கூறுகின்றார். மீண்டும் நீங்கள் வரிசைப்படியாக சென்று விடுவீர்கள். எவ்வளவு எளிதாக இருக்கின்றது! இப்படிப் பட்ட தந்தையை மறந்து விடக் கூடாது. தந்தை மிகவும் இனிமையானவராக மற்றும் வெளிப்படையானவராக இருக்கின்றார். ஒரு தந்தையை மட்டுமே நினைவு செய்யுங்கள். விரிவாக புரிய வைத்தாலும் கடைசியில் அல்லாவை நினைவு செய்யுங்கள், வேறு யாரையும் நினைக்காதீர்கள் என்று கூறுகின்றார். நீங்கள் பல பிறப்புகளில் ஒரு நாயகனுக்கு நாயகிகளாக இருக்கின்றீர்கள். பாபா, நீங்கள் வந்து விட்டால் நாங்கள் உங்களுடைய வர்களாகவே இருப்போம் என்று நீங்கள் பாடி வந்தீர்கள். இப்பொழுது அவர் வந்திருக் கின்றார் எனில் ஒருவருடையவராகவே ஆக வேண்டும் அல்லவா! நிச்சயபுத்தியுள்ளவர்கள் வெற்றி யடைகின்றனர். இராவணனின் மீது வெற்றி அடைவீர்கள். பிறகு இராம இராஜ்யத்திற்கு வர வேண்டும். கல்ப கல்பமாக நீங்கள் இராவணனின் மீது வெற்றி அடைகின்றீர்கள். பிராமணனாக ஆகின்றீர்கள், மேலும் இராவணனின் மீது வெற்றி அடைகின்றீர்கள். இராம இராஜ்யத்தின் மீது உங்களுக்கு உரிமை இருக்கின்றது. தந்தையை அறிந்து கொள்கின்றீர்கள், இராம இராஜ்யத்தின் உரிமை கிடைத்து விடுகின்றது. மற்றபடி உயர்ந்த பதவி அடைவதற்கு முயற்சி செய்ய வேண்டும். வெற்றி மாலையில் வர வேண்டும். வெற்றி மாலை பெரிதாக இருக்கின்றது. இராஜா ஆகின்ற பொழுது அனைத்தும் கிடைக்கும். தாச, தாசிகள் அனைவரும் வரிசைக்கிரமமாக உருவாகின்றனர். அனைவரும் ஒரே மாதிரியாக இருப்பது கிடையாது. சிலர் மிக நெருக்கத்தில் இருப்பர். இராஜா ராணி எதைச் சாப்பிடுகின்றார்களோ, பண்டாராவில் எது சமைக்கப்படுகின்றதோ அவை அனைத்தும் தாச, தாசிகளுக்கு கிடைக்கும். அதனையே 36 வகையான உணவு என்று கூறப்படு கின்றது. இராஜாக்களை பதம்பதி என்றும் கூறப்படுகின்றனர். பிரஜைகளை பதம்பதி என்று கூறுவது கிடையாது. அங்கு செல்வத்தில் எந்த குறையும் இருக்காது. ஆனால் இந்த அடையாளம் தேவதைகளுக்கு இருக்கின்றன. எந்த அளவிற்கு நினைவு செய்கின்றீர்களோ அந்த அளவிற்கு சூரியவம்சத்திற்கு வருவீர்கள். புது உலகிற்கு வர வேண்டுமல்லவா! மகாராஜா, மகாராணிகளாக ஆக வேண்டும். நரனிலிருந்து நாராயணன் ஆவதற்கான ஞானத்தை தந்தை கொடுக்கின்றார். இதனையே இராஜயோகம் என்று கூறப்படுகின்றது. மற்றபடி பக்தி மார்க்கத்தின் சாஸ்திரங் களையும் அனைவரையும் விட அதிகமாக நீங்கள் தான் படித்திருக்கின்றீர்கள். அனைவரையும் விட அதிக பக்தி குழந்தைகளாகிய நீங்கள் செய்திருக்கின்றீர்கள். இப்பொழுது வந்து தந்தையை சந்திக்கின்றீர்கள். என் ஒருவனையே நினைவு செய்யுங்கள் என்று தந்தை மிக எளிய மற்றும் நேரான வழியைக் கூறுகின்றார். குழந்தைகளே, குழந்தைகளே என்று கூறி தந்தை புரிய வைக்கின்றார். குழந்தைகளிடத்தில் தந்தை பலியாகி விடுகின்றார். வாரிசாக இருக்கின்றார் எனில் பலியாக வேண்டியிருக்கின்றது. பாபா, நீங்கள் வந்தால் நாங்கள் பலியாகி விடுவோம் என்று நீங்களும் கூறியிருந்தீர்கள். உடல், மனம், பொருள் உட்பட பலியாகி விடுவோம். நீங்கள் ஒரே ஒருமுறை பலியாகின்றீர்கள், பாபா 21 முறை பலி ஆவார். குழந்தைகளுக்கு தந்தை நினைவும் ஏற்படுத்துகின்றார். புரிந்து கொள்ளவும் முடியும், அனைத்து குழந்தைகளும் வரிசைக் கிரமமான முயற்சியின் படி அவரவர்களது பாக்கியத்தை அடைவதற்காக வந்திருக்கின்றனர். தந்தை கூறுகின்றார் - இனிய குழந்தைகளே! உலக இராஜ்யம் என்பது எனது பரிசாகும். இப்பொழுது நீங்கள் எவ்வளவு முயற்சி செய்ய வேண்டுமோ செய்து கொள்ளுங்கள். எந்த அளவிற்கு முயற்சி செய்கின்றீர்களோ அந்த அளவிற்கு உயர்ந்த பதவி அடைவீர்கள். முதல் நம்பரிலிருந்தவரே கடைசி நம்பரில் இருக்கின்றார். மீண்டும் முதல் நம்பருக்கு கண்டிப்பாகச் செல்வார். அனை வற்றிற்கும் ஆதாரம் முயற்சியில் தான் இருக்கின்றது. குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக தந்தை வந்திருக்கின்றார். இப்பொழுது தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினைவு செய்தால் பாவங்கள் நீங்கிக் கொண்டே செல்லும். அது காம நெருப்பு, இது யோக நெருப்பாகும். காம நெருப்பில் நீங்கள் எரிந்து எரிந்து கருப்பாகி விட்டீர்கள். முற்றிலும் சாம்பல் ஆகி விட்டீர்கள். இப்பொழுது நான் வந்து உங்களை விழிப் படையச் செய்கின்றேன். தமோ பிரதானத்திலிருந்து சதோ பிரதானம் ஆவதற்கான யுக்தியை கூறுகின்றேன், மிகவும் எளிதாகும். நான் ஆத்மா, இவ்வளவு காலம் தேகாபிமானத்தில் இருந்த காரணத்தினால் நீங்கள் தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்தீர்கள். இப்பொழுது ஆத்ம அபிமானிகளாக ஆகி தந்தையை நினைவு செய்யுங்கள். வீட்டிற்குச் செல்ல வேண்டும், தந்தை அழைத்துச் செல்வதற்காக வந்திருக் கின்றார். நீங்கள் அழைப்பு கொடுத்தீர்கள், தந்தை வந்திருக்கின்றார். அனைத்து ஆத்மாக்களையும் தூய்மை இல்லாததிலிருந்து தூய்மையாக்கி வழிகாட்டியாக இருந்து அழைத்துச் செல்வார். ஆத்மாக்கள் தான் யாத்திரை செல்ல வேண்டும்.

நீங்கள் பாண்டவ சம்பிரதாயத்தைச் சார்ந்தவர்களாக இருக்கின்றீர்கள். பாண்டவர்களுக்கு இராஜ்யம் கிடையாது. கௌரவர்களின் இராஜ்யம் இருந்தது. இங்கு இப்பொழுது இராஜ்யமும் அழிந்து விட்டது. பாரதத்தின் நிலை மிகவும் மோசமானதாக ஆகிவிட்டது. நீங்கள் பூஜைக்குரிய உலகிற்கு எஜமானர்களாக இருந்தீர்கள். இப்பொழுது பூஜாரிகளாக ஆகியிருக்கின்றீர்கள். ஆக உலகிற்கு எஜமானர்களாக யாரும் கிடையாது. உலகிற்கு எஜமானர்களாக தேவி தேவதைகள் மட்டுமே ஆகின்றனர். உலகில் அமைதி ஏற்பட வேண்டும் என்று மனிதர்கள் கூறுகின்றனர். உலக அமைதி என்று நீங்கள் எதைக் குறிப்பிடு கின்றீர்கள்? என்று கேளுங்கள். உலகில் அமைதி எப்பொழுது நிலவியது. உலக சரித்திர பூகோளம் திரும்பவும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கும். உலகில் அமைதி எப்பொழுது நிலவியது? என்று கேளுங்கள். நீங்கள் எந்த அமைதியை விரும்பு கின்றீர்கள்? யாரும் கூற முடியாது. உலகம் சொர்க்கமாக இருந்த பொழுது அமைதியாக இருந்தது என்று தந்தை புரிய வைக்கின்றார். கிறிஸ்துவிற்கு முன்பு 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சொர்க்கம் இருந்ததாக கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர். அவர்களது புத்தி தங்கமாக மாறுவதும் கிடையாது, பிறகு கல்புத்தியாக ஆவதும் கிடையாது. பாரதவாசிகள் தான் தங்கப்புத்தி மற்றும் கல்புத்தியுடையவர்களாக ஆகின்றனர். புது உலகம் சொர்க்கம் என்று கூறப்படுகின்றது. பழையதை சொர்க்கம் என்று கூறுவது கிடையாது. குழந்தைகளுக்கு தந்தை நரகம் மற்றும் சொர்க்கத்தின் இரகசியங்களைப் புரிய வைத்திருக்கின்றார். இது சில்லரை வியாபாரமாகும். மொத்தத்தில் ஒரே ஒரு வார்த்தையை கூறுகின்றார் - என் ஒருவனை மட்டுமே நினைவு செய்யுங்கள். தந்தை யிடமிருந்து தான் எல்லையற்ற ஆஸ்தி கிடைக்கின்றது. இதுவும் பழைய விசயமாகும். ஐந்தாயிரம் ஆண்டிற்கு முன்பு பாரதம் சொர்க்கமாக இருந்தது. குழந்தை களுக்கு தந்தை உண்மையிலும் உண்மையான கதையைக் கூறுகின்றார். சத்திய நாராயணனின் கதை, மூன்றாவது கண்ணின் கதை, அமரக்கதை மிகவும் பிரபலமான வைகள் ஆகும். உங்களுக்கும் ஞானம் என்ற மூன்றாவது கண் கிடைக்கின்றது. அதனையே மூன்றாவது கண்ணின் கதை (தீஸ்ரியின்) கதை என்று கூறப்படுகின்றது. அவர்கள் பக்தியின் புத்தகங்களாக உருவாக்கி விட்டனர். இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு அனைத்து விசயங்களும் நல்ல முறையில் புரிய வைக்கப்படுகின்றது. சில்லரை மற்றும் மொத்த வியாபாரம் இருக்கும் அல்லவா! கடலை மையாக ஆக்கினாலும் எழுத முடியாத அளவிற்கு ஞானம் கூறுகின்றார், இது சில்லரை வியாபாரமாகும். மொத்தத்தில் மன்மனா பவ என்று மட்டுமே கூறுகின்றார். வார்த்தை ஒன்று தான், அதன் பொருளையும் நீங்கள் புரிந்திருக்கின்றீர்கள். வேறு யாரும் கூற முடியாது. தந்தை சமஸ்கிருத மொழியில் ஞானம் கொடுக்கவில்லை. அவர் ராஜாவைப் போன்று இருப்பதால் தனது பாஷையில் நடத்துகிறார். தனது மொழி ஒரே ஒரு ஹிந்தியாகத்தான் இருக்கும். பிறகு ஏன் சமஸ்கிருதத்தை கற்றுக் கொள்ள வேண்டும்? எவ்வளவு பணத்தை செலவு செய்கின்றனர்!

என்னை நினைவு செய்தால் சாந்திதாமம், சுகதாமத்திற்கான ஆஸ்தி கிடைக்கும் என்று தந்தை கூறுவதாக உங்களிடத்தில் யார் வந்தாலும் கூறுங்கள். இதனை புரிந்துக் கொள்ள விரும்பு கின்றீர்களெனில் அமருங்கள். மற்றபடி நம்மிடத்தில் வேறு எந்த விசயங்களும் கிடையாது. தந்தையாகிய அல்லா தான் புரிய வைக்கின்றார். அல்லாவிடமிருந்து தான் ஆஸ்தி கிடைக்கின்றது. தந்தையை நினைவு செய்தால் பாவம் விநாசம் ஆகும், பிறகு தூய்மையாகி சாந்தி தாமத்திற்குச் சென்று விடுவீர்கள். சாந்தி தேவனே என்றும் கூறுகின்றனர். தந்தை தான் சாந்திக் கடலாக இருக்கின்றார் எனில் அவரையே நினைவு செய்கின்றனர். சொர்க்கத்தை ஸ்தாபனை செய்யக் கூடிய தந்தை இங்கு தான் இருக்கின்றார். சூட்சும வதனத்தில் எதுவும் கிடையாது. இது சாட்சாத்காரத் திற்கான விசயமாகும். இவ்வாறு பரிஸ்தாவாக வேண்டும். ஆக வேண்டியது இங்கு தான். பரிஸ்தாவாக ஆகி பிறகு வீட்டிற்குச் சென்று விடுவோம். இராஜ்யத்திற்கான ஆஸ்தி தந்தையிடமிருந்து கிடைக்கின்றது. அமைதி மற்றும் சுகம் இரண்டு ஆஸ்திகளும் கிடைக்கின்றன. தந்தையைத் தவிர வேறு யாரையும் கடல் என்று கூற முடியாது. ஞானக்கடலான தந்தை ஒருவரே அனைவருக்கும் சத்கதி கொடுக்க முடியும். நான் உங்களது தந்தை, ஆசிரியர், குருவாக இருந்து உங்களுக்கு சத்கதியை கொடுக்கின்றேன், பிறகு உங்களை துர்கதியாக ஆக்குவது யார்? என்று தந்தை கேட்கின்றார். இராவணன். துர்கதி மற்றும் சத்கதிக்கான விளையாட்டு இது. யாராவது குழப்பமடைகின்றார்கள் எனில் கேட்கலாம். பக்தி மார்க்கத்தில் அநேக கேள்விகள் எழுகின்றன. ஞான மார்க்கத்தில் கேள்விக்கான விசயமே கிடையாது. சாஸ்திரங்களில் சிவபாபா முதல் தேவதைகள் வரைக்கும் எவ்வளவு நிந்தனை செய்து விட்டார்கள்? யாரையும் விட்டு வைக்கவில்லை. இவ்வாறும் நாடகம் உருவாக்கப் பட்டிருக்கின்றது, மீண்டும் செய்வார்கள். இந்த தேவி தேவதா தர்மம் அதிக சுகத்தைக் கொடுக்கக் கூடியது என்று தந்தை கூறுகின்றார். பிறகு இந்த துக்கம் இருக்காது. தந்தை உங்களை எவ்வளவு புத்திசாலிகளாக ஆக்குகின்றார்! இந்த லெட்சுமி நாராயணன் புத்திசாலிகளாக இருக்கின்றனர், அதனால் தான் உலகிற்கே எஜமானர் களாக உள்ளனர். புத்தியற்றவர்கள் உலகிற்கு எஜமானர்களாக ஆக முடியாது. முதலில் நீங்கள் முட்களாக இருந்தீர்கள். இப்பொழுது மலர்களாக ஆகிக் கொண்டிருக்கின்றீர்கள், அதனால் தான் பாபாவும் ரோஜா மலரை கொண்டு வருகின்றார் - இவ்வாறு மலர்களாக ஆக வேண்டும். தான் வந்து மலர்கள் நிறைந்த தோட்டதை உருவாக்குகின்றார். பிறகு இராவணன் முட்கள் நிறைந்த காடாக ஆக்குவதற்காக வருகிறான். எவ்வளவு தெளிவாக இருக்கின்றது! இவையனைத்தையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒருவரை நினைவு செய்வதன் மூலம் அனைத்தும் வந்து விடுகின்றது. தந்தையிடமிருந்து ஆஸ்தி கிடைக்கின்றது. இது மிக உயர்ந்த செல்வமாகும். அமைதிக்கான ஆஸ்தியும் கிடைக்கின்றது. ஏனெனில் அவர் சாந்திக் கடலாக இருக்கின்றார். லௌகீக தந்தைக்கு இப்படிப்பட்ட மகிமை ஒருபொழுதும் செய்யமாட்டீர்கள். ஸ்ரீ கிருஷ்ணர் அனைவருக்கும் பிடித்தமானவராக இருக்கின்றார். அவரது பிறப்பு தான் முதலில் ஏற்படுகின்றது. அதனால் தான் அனைவரும் அவர் மீது அதிக அன்பு செலுத்துகின்றனர். வீட்டின் முழு விசயங்களையும் தந்தை குழந்தைகளுக்கு கொடுக் கின்றார். தந்தையும் பக்கா வியாபாரியாக இருக்கின்றார். மிகச் சிலரே இப்படிப்பட்ட வியாபாரம் செய்ய முடியும். மொத்த வியாபாரிகளாக ஆவது மிகச் சிலரே. நீங்கள் மொத்த வியாபாரிகள் அல்லவா! தந்தையை நினைவு செய்து கொண்டே இருக்கின்றீர்கள். சிலர் சில்லரையாக வியாபாரம் செய்து பிறகு மறந்து விடுகின்றனர். நிரந்தர மாக நினைவு செய்து கொண்டே இருங்கள் என்று தந்தை கூறுகின்றார். ஆஸ்தி கிடைத்து விட்டால் பிறகு நினைவு செய்ய வேண்டிய அவசியமே இருக்காது. லௌகீக சம்மந்தங்களில் தந்தைக்கு வயதாகி விட்டால் சில குழந்தைகள் கடைசி வரைக்கும் உதவியாளர் களாக இருக்கின்றனர். சிலர் சொத்தை அடைந்து விட்டால், பிறகு அழித்து விடுகின்றனர். பாபா அனைத்து விசயங்களிலும் அனுபவியாக இருக்கின்றார். அதனால் தான் தந்தை இவரையும் தனது ரதமாக ஆக்கியிருக்கின்றார். ஏழை, செல்வந்தன் போன்ற அனைத்திலும் அனுபவியாக இருக்கின்றார். நாடகப்படி இவர் ஒருவர் மட்டுமே ரதமாகும். இதனை ஒருபொழுதும் மாற்ற முடியாது. நாடகம் உருவாக்கப் பட்டிருக்கின்றது. இதில் ஒருபொழுதும் மாற்றம் ஏற்பட முடியாது. அனைத்து விசயங்களையும் மொத்தம் மற்றும் சில்லரையாக புரிய வைத்து கடைசியில் மன்மனா பவ மற்றும் மத்யாஜி பவ என்று கூறி விடுங்கள். மன்மனா பவ என்பதில் அனைத்தும் வந்து விடுகின்றது. இது மிகப் பெரிய பொக்கிஷமாகும், இதன் மூலம் புத்தி என்ற பையை நிறைக்கின்றீர்கள். அழிவற்ற ஞான ரத்தினம் ஒவ்வொன்றும் லட்சம் ரூபாய் போன்றதாகும். நீங்கள் பத்மாபதம் (பலமடங்கு) பாக்கியசாலிகளாக ஆகின்றீர்கள். குஷி மற்றும் குஷியற்ற நிலை இரண்டிலிருந்தும் தந்தை விடுபட்டவராக இருக்கின்றார். சாட்சியாக நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கின்றார். நீங்கள் நடிப்பு நடித்துக் கொண்டிருக்கின்றீர்கள். நான் நடிப்பு நடித்தாலும் சாட்சியாக இருக்கின்றேன். பிறப்பு இறப்பில் வருவது கிடையாது. வேறு யாரும் இதிலிருந்து விடுபட முடியாது, மோட்சம் அடைய முடியாது. இது ஏற்கெனவே உருவாக்கப்பட்ட அழிவற்ற நாடகம் ஆகும். இதுவும் அதிசயமானது ஆகும். சிறிய ஆத்மாவில் முழு நடிப்பும் நிறைந்திருக்கின்றது. இந்த அழிவற்ற நாடகம் ஒருபொழுதும் விநாசம் ஆவது கிடையாது. நல்லது.

இனிமையிலும் இனிமையான செல்லக் குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் உயிருடன் கலந்த இதயத்தில் அன்பான, சேவாதாரி குழந்தைகளுக்கு வரிசைக்கிரமமாக முயற்சியின் படி அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீக குழந்தைகளுக்கு ஆன்மீக தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. குழந்தைகளிடத்தில் தந்தை பலியாகி விடுவது போன்று உடல், மனம், பொருள் மூலமாக ஒரு தந்தையிடத்தில் முழுமையாக பலியாகி 21 பிறவிகளுக்கான ஆஸ்தி அடைய வேண்டும்.

2. பாபா கொடுக்கின்ற அழிவற்ற, விலை மதிக்க முடியாத பொக்கிஷங்களால் தனது புத்தி என்ற பையில் சதா நிறைத்து வைத்திருக்க வேண்டும். நான் பலமடங்கு பாக்கியசாலியாக இருக்கின்றேன் என்ற குஷி மற்றும் போதையில் இருக்க வேண்டும்.

வரதானம்:
பிராமண வாழ்க்கையின் சொத்து மற்றும் ஆளுமை தன்மையை அனுபவம் செய்து மற்றும் செய்ய வைக்கும் விசேஷ ஆத்மா ஆவீர்களாக !

பிராமணன் ஆவதே மிகப் பெரிய பாக்கியம் என்பதை பாப்தாதா அனைத்து பிராமண குழந்தை களுக்கு நினைவூட்டுகின்றார். ஆனால் பிராமண வாழ்க்கையின் ஆஸ்தி, சொத்து திருப்தியாகும். மேலும் பிராமண வாழ்க்கையின் ஆளுமைத் தன்மை மகிழ்ச்சியாகும். இந்த அனுபவத்திலிருந்து ஒரு போதும் வஞ்சிக்கப்பட்டு இருக்க கூடாது. அதிகாரியாக இருங்கள். எப்பொழுது வள்ளல், வரதாதா (வரங்களைத் தருபவர்) திறந்த மனதுடன் பிராப்தியின் பொக்கிஷங்களை (கஜானா) தருகிறார். எனவே அதை அனுபவத்தில் கொண்டு வாருங்கள் மற்றும் மற்றவர்களையும் அனுபவி ஆக்குங்கள் அப்பொழுது தான் விசேஷ ஆத்மா என சொல்லப்படுவீர்கள்.

சுலோகன்:
கடைசி நேரத்தை யோசிப்பதற்கு பதிலாக கடைசி நிலையை (ஸ்திதியை) யோசனை செய்யுங்கள்.